விகடன் பிரசுரத்தில், கடைசியாக வெளியான ‘அருமையான’ இயர்புக் வரைக்கும் (ஏக பாராட்டுகளாம்.இதைப் படிச்சு 4 விஷயம் தெரிஞ்சுக்கணும்னு வாங்கினவன் தொலைஞ்சான்.) ஆசிரியராய் இருந்த இரா.சரவணனுக்கு, இப்பொழுது இறங்கு முகம்! அவர் பதவி டம்மியாக்கப்பட்டிருக்கிறது.
இரா.சரவணன் |
அவருக்கு மேல்
ஜூனியர் விகடன் பாண்டிச்சேரி நிருபர்(தான்
என்றாலும், உதவிப் பொறுப்பாசிரியராக ஆக்கப்பட்ட) கலைச்செல்வன், நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழருவி மணியனை ஒட்டி பின்னால் கை கட்டி நின்று கொண்டிருப்பவர் தான் கலைச்செல்வன். |
விகடன் பிரசுரம் தொடர்பாக, இனி இரா.சரவணன், தன்னிச்சையாக எந்த முடிவும்
எடுக்க முடியாது. கலைச்செல்வனிடம் கேட்டுவிட்டுத்தான் அவர் செயல்பட முடியும். அவர்
ஒப்புதலை மீறி எதுவும் செய்துவிட முடியாது.
கலைச்செல்வன் இந்தப்பதவிக்கு வந்தது
எதிர்பாராத நிகழ்வு என்று சொல்கிறார்கள்.கடலூர் தானே புயல் நிவாரண நிதியைத்
திரட்டிய விகடன், அது தொடர்பான பணிகளை
கவனிப்பதற்காக, கலைச்செல்வனை நியமித்தது. அது முதல் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்ட
கலைச்செல்வன் முதலாளி சீனிவாசனிடமும் நெருங்கி விட்டார்.
ஆனால்
அலுவலகம் கூட வர வேண்டிய அவசியம் கூட இல்லை என்று விதிகளைத் தளர்த்தி
உள்ளார்கள்.மின்னஞ்சல் மூலம் பணிகளைச் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
பாவம், மதுரை பக்கம்
ஒழுங்காக வேலைபார்த்துக்கொண்டு இருந்த குள.சண்முகசுந்தரத்தை, குடும்பத்தைவிட்டு சென்னைக்கு வரச்சொல்லி, உட்கார வைத்தவர்கள், புதுவையில் இருந்து வேலையைச் செய்யச் சொல்லி கலைச்செல்வனுக்கு சலுகை
அளித்துள்ளார்கள்.(ஆளுக்குத் தகுந்த மாதிரி சலுகை என்பது இது தான்.)
இதுவரை, சுயேச்சையாய்
செயல்பட்டுவந்த இரா.சரவணனுக்கு இதன் மூலம் ஒரு செக் வைக்கப்பட்டிருக்கிறது.
(விகடன் பப்ளிகேஷன்ஸ் வெளியிடுற புக் எல்லாம் கொள்ளை விலை சார்..யார் சார் விலையை நிர்ணையிக்கிற 'மவராசன்'..?உலக வங்கிக்கு வேலைக்குப் போகலாம் பாஸூ.!)
******
No comments:
Post a Comment