Monday 31 October 2011

அண்டப்புளுகு அன்பழகன்

அன்பு என்கின்ற அன்பழகன் இவரது லீலைகளைப்பற்றி ஏற்கனவே எழுதியுள்ளோம். இவரை அண்டப்புளுகு அன்பழகன் என்றே சொல்லலாம்.இவரின் அண்டப்புளுகுக்கு இன்னொரு சமீபத்திய ஆதாரம்.


தமிழக முன்னாள் துணை முதல்வர்  மு.க.ஸ்டாலினைப் பற்றி இவர் சமீபத்தில் கைப்புள்ள ஸ்டாலின் என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தக முகப்பில் உங்களுடன் என்ற தலைப்பில் தன்னைப் பற்றி ஒரு அண்டப்புளுகைப் புளுகியுள்ளார்.
 

தான் பூவாளுர் பொன்னம்பலனாரின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும்,பொன்னம்பலனார் தந்தை பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவர்,விடுதலை இதழின் முதல் ஆசிரியர் எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.(பொன்னம்பலனார் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.இவர் பொன்னம்பலனார் குடும்பத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை அப்புறம் பார்ப்போம்.)


விடுதலை இதழின் முதல் ஆசிரியர் டி.ஏ.வி.நாதன் என்பது உண்மையான திராவிடப் பற்றாளர்களுக்கும் உண்மையைப் பேசுபவர்களுக்கும் நன்கு தெரியும்.


                               விடுதலை இதழின் முகப்பு
                                                     

உண்மை இவ்வாறு இருக்க இந்தப் புத்தகத்தின் தொடக்கத்திலேயே இவ்வாறு அண்டப்புளுகு புளுகியிருக்கும் அன்பு புத்தகத்தின் உள்ளே எவ்வாறு புளுகியிருப்பார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

பொன்னம்பலனார் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான் என்று அன்பழகன் முதல் பத்தியில் கூறியுள்ளார்.அடுத்த பத்தியில்  தியாகராய செட்டியாரின் மகன் வயிற்றுப்பேரன் நான் என்பதில் பெருமைப்படுவதாகச் சொல்லியிருக்கார்,இந்தத் தியாகராயச் செட்டியார் தன்னுடைய் வேலையை தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு விட்டுக் கொடுத்ததாக கூறியிருக்கும் இவர் செய்யும் காரியங்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.தியாகராய செட்டியார் பேரன் என்று இவர் சொல்வதைக் கேட்க நல்லவேளை தியாகராய செட்டியார் உயிருடன் இல்லை.

உண்மையில் இவர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவாரா என்பது இவர் செய்யும் செயல் சந்தேகத்தை எழுப்புகின்றது.இவர் நக்கீரனில் தனது பணியைத் தொடங்குவதற்கு முன்பே பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.சோ.அய்யர்.டாஸ்மாக் எம்.டி.யாக இருந்த பொழுது டாஸ்மாக் கடையில் வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியிருக்கிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கு உதவிப் பேராசிரியர் பணி வாங்கிக் கொடுப்பதாகக் கூறி சில லட்சம் மோசடி செய்துள்ளார்.பணி வாங்கிக் கொடுக்காததால் பணம் கொடுத்த அந்த நபர்,அண்டப்புளுகு ஆசாமி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அமர்ந்திருந்த பொழுது தகராறு செய்துள்ளார்.இதனைக்கண்டு அண்டப்புளுகு காலில் விழுந்து  கால அவகாசம் கேட்டுள்ளார்.அப்பொழுது இவரின் இந்த எமாற்று வேலைகள் பத்திரிக்கையாளர் மன்றம் வரும் அனைவரின் முன்னிலையிலும் நாறிப்போனதாம்.அன்புவின் அல்லக்கையான ரஜினிகாந்த் என்பவர் அப்பொழுது மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளார்.மேலும் பணம் கொடுத்து ஏமாந்த மற்றும் சில நபர்களையும் பக்குவமாகப் பேசி மன்ற வளாகத்தை விட்டு வெளியேற்றினார்.இந்த்த் தகவல் கோட்டை பிரஸ் ரூம் வரை சென்று அனைவரும் பேசிக் கொண்டதைத் தொடர்ந்து சிறிது காலம் அண்டப்புளுகு கோட்டை பிரஸ் ரூம் பக்கம் போகாமல் இருந்தாராம்.

வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி ஊரில் உள்ள அப்பாவிகளை ஏமாற்றும் இவருக்கும் தனது வேலையை விட்டுக் கொடுத்தவர் பேரன் என்று சொல்லிக்கொள்ள என்ன யோக்கியதை இருக்கிறது?

னால் இந்தப் புளுகன் சொல்லும் செய்திக்காக சில கழுகுகள் இவரை வட்டமிடுகிவதாகவும் சில வம்பானந்தாக்கள்,மாமி,மாமாக்கள், நாடோடிகள் அலெக்ஸ் பாண்டியனில் இருந்து அத்தனை பேரும் வாய்பிளந்து நிற்பதாகவும் சிலர் டீக்கடை பெஞ்சில காலை முதல் இரவு வரை காத்திருப்பதாகவும்,அவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து பக்கத்தை நிரப்புவதாகவும் இவரே சொல்லிக் கொண்டு திரிகிறார்.

மேலும் சில நேரங்களில் இவனுங்க வெட்டியா ஏசியில் உட்கார்ந்துக்கிட்டு 40 ஆயிரம்,50 ஆயிரம்,70 ஆயிரம் ன்னு சம்பளம் வாங்குறதுக்கு நாம வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படுறோம்,இவனுங்களுக்கு ஒரு நாளைக்கு இருக்கு கச்சேரி”(ரோஷமிருப்பவர்களுக்கு இது உறைக்கும்)என்று திட்டுகின்றாராம்.

இந்தப்புளுகன் கொடுக்கும் செய்தியை அப்படியே வாந்தி எடுத்துத் தான் மேற்கண்ட புலனாய்வு எலிகள் டெஸ்க்கில் அமர்ந்து கொண்டே வெளியிடுகிறார்கள்.இதைத்தான் நாமும் படித்து வருகிறோம்.

உண்மைச்சம்பவம் ஒரு சிலருக்குத் தான் தெரியும்.பொய் உற்பத்தி செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

Tuesday 25 October 2011

”உன் உயிர் என் மயிருக்குச் சமம்”-ரிப்போர்ட்டர் ஆசிரியருக்கு வரதராசன் கொலை மிரட்டல்

குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிர்வாக இயக்குனர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் பி.வரதராசன் என்பவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகக் கூறி குமுதம் ரிப்போர்ட்டரில் ஆசிரியராக வேலை பார்க்கும் இளங்கோவன் சென்னை செக்ரேட்டரியேட் காலனி காவல் நிலையத்தில் (G5) புகார் மனு அளித்துள்ளார்.புகார் அளித்ததற்கு உரிய ரசீதும் பெற்றுள்ளார்.அதன் நகல்கள் மற்றும் புகாரின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.ஏப்ரல் 24,2010 அன்று கைது செய்யப்பட்டு சென்னை காவல்துறை குற்றப்பிரிவு விசாரணைக்கு வரதராசன் அழைத்து வரப்பட்ட பொழுது எடுக்கப் பட்ட புகைப்படம்.அனுப்புனர்.

எஸ்.இளங்கோவன்,
த.பெ.ஆர்.செங்கோடன்,
எஸ்.எஸ்.கிருஷ்ணா பிளாட்ஸ்,
எண்.12,ராமகிருஷ்ணாபுரம் இரண்டாவது தெரு,
ஆதம்பாக்கம்,சென்னை-88.

பெறுநர்,

காவல்துறை ஆய்வாளர்,
ஜி.5,செக்ரட்டேரியட் காலனி காவல் நிலையம்,
செக்ரட்டேரியட் காலனி,
சென்னை.

பெருமதிப்புக்குரிய அய்யா,

நான் தற்பொழுது குமுதம் ரிப்போர்ட்டர் வாரம் இருமுறை இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.நான் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குமுதம் அலுவலகத்தில் இணை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன்.பின்னர் குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் ஆசிரியராகப் பணியில் சேர்க்கப் பட்டேன்.எனது நீண்ட நெடிய பணிக்காலத்தில் எனது பணியை நான் சிறப்பாகவும்,நேர்மையாகவும் உளப்பூர்வமாகவும் செய்து வந்திருக்கிறேன்.எனது பணியில் இதுவரை நான் எந்தத் தவறும் செய்தது இல்லை.என் மீது சிறிதளவேனும் குற்றச்சாட்டும் இல்லை.

குமுதம் வார இதழ் திரு.எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களால் நிறுவப்பட்டது.தற்பொழுது குமுதம் குழுமத்தின் தலைவராகவும்,உரிமையாளராகவும் உள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,திரு.எஸ்.ஏ.பி. அவர்களின் புதல்வர் ஆவார்.

குமுதம் குழுமத்தின் பெருவாரியான பங்குகள் தற்பொழுது டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களது குடும்பத்தினரின் வசமே உள்ளன.அதில் சில பங்குகள் பி.வரதராஜன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டன.

தற்பொழுது சென்னை-4,மைலாப்பூர்,லஸ் அவென்யூ,3 ஆம் எண்ணில் வசிப்பவரான திரு.பி.வரதராஜனுக்கு குமுதம் குழுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு டாக்டர் ஜவஹர் பழனியப்பன் குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு திரு.பி.வரதராஜன் குமுதம் குழுமத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ ரூ.25 கோடியை மோசடி செய்து விட்டதாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.கிரைம் எண்.196/2010.யு/எஸ் 406,420 ஐ.பி.சி.பிரிவுகளில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் திரு.பி.வரதராஜன் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் திரு.பி.வரதராஜனின் சட்டமீறலான சில நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நானும் என் போன்ற சில குமுதம் ஊழியர்களும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்கு அனுப்புவதாக திரு.பி.வரதராஜனுக்கு தவறான என்ணம் ஏற்பட்டது.

இதனால் என் மீதும் இன்னும் சிலர் மீதும் திரு.பி.வரதராஜன்  பகைமை பாராட்ட ஆரம்பித்தார்.எங்களைப் பழி தீர்க்கும் விதத்தில் சக அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் எங்களை மட்டம் தட்ட ஆரம்பித்தார்.எங்களுக்கு இருந்த அதிகாரங்கள் அவரால் குறைக்கப் பட்டன.இருப்பினும் எங்கள் கடமைகளை நாங்கள் வழக்கம் போல செம்மையாகவும் சிறப்பாகவும் செய்து வந்தோம்.

இந்தநிலையில் 27-09-2011 காலை 9.30.மணியளவில் நான் அலுவலகம் சென்ற பொழுது அலுவலக நுழைவாசலில் திரு.பி.வரதராஜனால் பணியமர்த்தப்பட்ட சில ரவுடிகள் போன்ற சிலர் என்னை வழிமறித்தார்கள்.என்னை அவர்கள் பலவந்தமாக திரு.பி.வரதராஜன் அறைக்கு கொண்டு சென்றார்கள்.

அங்கே குண்டர்கள் போலிருந்த பத்து பேர் என்னைச் சூழ்ந்து கொண்டு திரு.பி.வரதராஜன்  வரும் வரை என்னை அங்கே உட்கார்ந்திருக்கும் படி கட்டாயப் படுத்தினார்கள்.

நண்பகல் 12 மணியளவில் திரு.பி.வரதராஜன் அங்கே வந்தார்.என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்த அவர்,தன் மீதான கிரிமினல் வழக்கில் அவருக்கு எதிராக நான் ஏதேனும் ஆதாரம் அளித்தால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடப் போவதாக மிரட்டினார்.என் வாழ்க்கையைச் சீரழித்து விடப் போவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயார் என்று என்னை அவர் பயமுறுத்தினார்.

அந்த அறையிலேயே என் கதை முடிந்து போய்விடுமோ என்று நான் பயந்து போனேன்.அப்போது இனம்புரியாத நபர்கள் அங்கு வந்து வெற்றுத் தாள்களில் கையெழுத்திடுமாறு என்னை மிரட்டினார்கள்.கையெழுத்து போடாவிட்டால் அந்த அறையை விட்டுப் போக முடியாது என்று அவர்கள் பயமுறுத்தினார்கள்.என்னை அந்த அறைக்குள் பலவந்தமாக அடைத்து வைத்து போக விடாமல் தடுத்தனர்.

நான் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்ந்தேன்.வேறு வழியில்லாத நிலையில்,அந்த ரவுடிகளின் விருப்பப்படி வெற்றுக் காகிதங்களில் கையெழுத்திட்டுத் தந்தேன்.

என் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டதும் அவர்கள் எனக்கு தற்காலிக வேலை நீக்க உத்தரவைத் தந்து என்னை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டி அனுப்பினார்கள்.

தற்பொழுது குமுதம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள்,ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி,திரு.பி.வரதராஜனை குமுதம் குழுமத்தின் நிர்வாக மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளார்.தற்பொழுது டாக்டர்.ஜவஹர் பழனியப்பன் அவர்களே குமுதத்தின் நிர்வாக மேலாளராக உள்ளார்.இந்தநிலையில் எனக்கு வழங்கப்பட்ட தற்காலிக வேலை நீக்க உத்தரவையும் தற்போதைய நிர்வாக மேலாளர் என்ற அடிப்படையில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள் ரத்து செய்து விட்டார்.

இதன் அடிப்படையில் நான் குமுதம் அலுவலகத்தில் என் பணியைத் தொடர,கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காலை 9.45 மணி அளவில் சென்றேன்.அப்போது சில ரவுடிகள்,அலுவலக வாயிலில் என்னை வழிமறித்து உள்ளே செல்ல விடாமல் தடுத்து விட்டனர்.உள்ளே நுழைய முயன்றால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் என்னை மிரட்டினார்கள்.

இந்தநிலையில் தங்களது மேலான காவல்துறை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்குமாரும் தங்களைக்கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
தங்களின் உண்மையுள்ள,
எஸ்.இளங்கோவன்


இவரது புகாரின் பேரில் பி.வரதராஜனை காவல்துறை விரைவில் விசாரணைக்கு அழைக்கும் எனத் தெரிகிறது.

குமுதம் எச்.ஆர்.பிரியங்காவிடம் காவல்துறை விசாரணை.பிரியங்கா.

மேட்டருக்குள் செல்லும் முன் பிரியங்காவின் வரலாறு சுருக்கமாக.

குமுதத்தில் வள்ளிநாயகம் என்று ஒரு எச்.ஆர்.இருந்தார்.அவர் மிகத் திறமைசாலி.ஆனால் அவர் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு ஆஸ்திரேலியா சென்று விடவே அவர் வகித்த மிக உயரிய பதவிக்கு யாரைப்போடலாம் என்ற நிலை வந்த பொழுது பலரை பின் தள்ளி விட்டு எச்.ஆர்.பொறுப்பினை ஏற்றவர் தான் பிரியங்கா.

இவருக்கு கொழுத்த சம்பளம்.திறமையில்லாத இவர் குமுதத்தில் மிகப்பெரிய பதவிக்கு வந்ததை இவருடன் படித்தவர்கள்,இதற்கு முன் இவர் வேலை பார்த்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்.அம்மணியின் திறமை மீது எல்லோருக்கும் அம்புட்டு நம்பிக்கை.இவர் குமுதத்தில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிக்கு வந்தது குறித்து பல அத்தியாயங்கள் எழுதலாம் தான்.

ஆனால் எழுத எங்களுக்கோ,படிக்க உங்களுக்கோ நேரமில்லை.ஒரே வரியில் சொல்லப் போனால் குறுக்கு வழியில் முன்னுக்கு வந்தவர்.

இவர் குமுதத்தில் உயரிய நிலையை அடைந்தவுடன் தன்னை இந்தநிலைக்கு உயர்த்திய எஜமானருக்காக எதையும் செய்யும் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாய் மாறிப்போனார்.யாரையும் கேவலமாகப் பேசுவது,பணியாளர்களை அடிமையாய்க் கருதுவது என இயல்பே மாறிப்போனது.
இந்தநிலையில் தான் குமுதம் நிறுவனத்தில் பஞ்சாயத்து ஆனவுடன் இவரின் தலைக்கனம் அதிகமானது.தலைமை வடிவமைப்பு நிர்வாகி சாய்குமார் மீது குமுதம் அலுவலகத்தில் அனைவரும் அவரை சுற்றிநின்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு மிரட்டிய பொழுது எச்.ஆர்.பிரியங்கா வும் சூழ்ந்து நின்று கொண்டு சாய்குமாரை மிகவும் கேவலாமக்வும் தரக்குறைவாகவும் திட்டியுள்ளார்.
அதன்பின்பு சாய்குமார் செக்ரட்டரியேட் காவல் நிலையத்தில் வரதராஜன் உள்ளிட்டோர் மீது புகார் அளித்த பொழுது பிரியங்காவின் பெயரும் இடம் பெற்றது.இதனை நாம் ஏற்கனவே கடந்த பதிவில் சொல்லியிருந்தோம்.

இனி தலைப்புக்கு வருவோம்.

இந்த நிலையில் கடந்த வாரம் மகளிர் காவல்துறையினர் பிரியங்காவை அழைத்து நீண்ட நேரம் விசாரித்துள்ளனர்.இந்த விசாரணைக்குப் பின் பிரியங்கா முகம் வெளிறிப் போயுள்ளாராம்.யாரிடமும் சரியாகப் பேசுவது கூட இல்லையாம்.பதட்டத்துடன் காணப்படுகிறாராம்.தன்னைக் காவல்துறை கைது செய்துவிடுமோ என பயந்து நடுங்குகிறாராம்.இதுக்கு தான் சொல்றது வந்த வேலையை மட்டும் பார்க்கணூம்னு.ம்ம்.பார்ப்போம்.என்ன நடக்குதுன்னு.

இதில் சுவராசியமான ஒரு செய்தி என்னவென்றால் பிரியங்காவை வழக்கமாக மாலையில் அலுவலக வாசலில் பிக் அப் பண்ண வரும் நண்பர் தன்னையும் எங்கே காவல்துறை விசாரிக்குமோ என்ற பயத்தில் கடந்த சில நாட்களாக பிக் அப் பண்ண வரவில்லையாம்.இதைக்கண்டு தான் அதிகம் வருத்தத்தில் இருக்கிறாராம் பிரியங்கா.

Thursday 20 October 2011

போட்டுத் தள்ளிடுவேன்-கொலை மிரட்டல் விடுத்த வரதராசன் மீது காவல் நிலையத்தில் குமுதம் வடிவமைப்பு நிர்வாகி புகார்.குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் நிர்வாக இயக்குனர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் பி.வரதராசன் என்பவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகக் கூறி குமுதம் குழும பத்திரிக்கையில் தலைமை வடிவமைப்பு நிர்வாகியாக வேலை பார்க்கும் சாய் என்பவர் சென்னை செக்ரேட்டரியேட் காலனி காவல் நிலையத்தில் (G5) புகார் மனு அளித்துள்ளார்.புகார் அளித்ததற்கு உரிய ரசீதும் பெற்றுள்ளார்.அதன் நகல்கள் மற்றும் புகாரின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.


 ஏப்ரல் 24,2010 அன்று கைது செய்யப்பட்டு சென்னை காவல்துறை குற்றப்பிரிவு விசாரணைக்கு வரதராசன் அழைத்து வரப்பட்ட பொழுது எடுக்கப் பட்ட புகைப்படம்.அனுப்புனர்

பி.ஜி.சாய்குமார்,
த.பெ,ஞானவேல்,
டி/106,அப்பர் தெரு,
ஜாபர்கான் பேட்டை,
சென்னை-83
பெறுநர்,
காவல்துறை ஆய்வாளர்,
ஜி.5,செக்ரட்டேரியட் காலனி காவல் நிலையம்,
செக்ரட்டேரியட் காலனி,
சென்னை.
பெருமதிப்புக்குரிய அய்யா,
சாய்குமார் என்கின்ற நான்,1988 ஆம் ஆண்டு குமுதம் நிறுவனத்தில் பக்க வடிவமைப்பாளராக (லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டாக)வேலைக்குச் சேர்ந்தேன்.என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட பணியை இதுநாள் வரை நான் அப்பழுக்கின்றி செய்து வந்திருக்கிறேன்.என் மீது இதுவரை எந்தவிதக் குற்றம் குறையும் இல்லை.
குமுதம் வார இதழ் திரு.எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களால் நிறுவப்பட்டது.தற்பொழுது குமுதம் குழுமத்தின் தலைவராகவும்,உரிமையாளராகவும் உள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,திரு.எஸ்.ஏ.பி. அவர்களின் புதல்வர் ஆவார்.
குமுதம் குழுமத்தின் பெருவாரியான பங்குகள் தற்பொழுது டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்களது குடும்பத்தினரின் வசமே உள்ளன.அதில் சில பங்குகள் பி.வரதராஜன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டன.
தற்பொழுது சென்னை-4,மைலாப்பூர்,லஸ் அவென்யூ,3 ஆம் எண்ணில் வசிப்பவரான திரு.பி.வரதராஜனுக்கு குமுதம் குழுமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு டாக்டர் ஜவஹர் பழனியப்பன் குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு திரு.பி.வரதராஜன் குமுதம் குழுமத்துக்குச் சொந்தமான ஏறத்தாழ ரூ.25 கோடியை மோசடி செய்து விட்டதாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.கிரைம் எண்.196/2010.யு/எஸ் 406,420 ஐ.பி.சி.பிரிவுகளில் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் திரு.பி.வரதராஜன் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திரு.வரதராஜனின் அடாவடி நடவடிக்கைகள் தொடர்பான சில தகவல்களை நானும் என் போன்ற குமுதம் ஊழியர்கள் சிலரும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்குத் தருவதாக திரு.வரதராஜனுக்குத் தவறான சந்தேகம் ஏற்பட்டது.அதன் அடிப்படையில் அவர் எனக்கும் என் போன்ற சில ஊழியர்களுக்கும் பல விதங்களில் தொல்லை தர ஆரம்பித்தார்.
21-9-2011 அன்று நான் குமுதம் அலுவலகத்தின் லேஅவுட் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அலுவலகத்தின் கணிப்பொறி பிரிவைச் சேர்ந்த திரு.சண்முகநாதன் அதிரடியாக எனது பிரிவுக்கு வந்தார்.எனது கம்ப்யூட்டரை சோதனை செய்ய வேண்டும் என்றார்.
எனக்கு அது விநோதமாகப் பட்டது.என் கம்ப்யூட்டரை ஏன் சோதனை செய்ய வேண்டும்? என்று விளக்கம் கேட்டேன்.அப்போது திரு.பி.வரதராஜனின் செயலாளரான திருமதி.சுமதி,சட்ட ஆலோசகர் திரு.அந்தோணி,எச்.ஆர்.பிரிவைச் சேர்ந்த பிரியங்கா,குழும ஆசிரியர் கோசல்ராம் போன்றவர்கள் அங்கே ஒன்றாகத் திரண்டு வந்து காரணமில்லாமல் என்னைத் திட்டத் தொடங்கினார்கள்.மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என்று என்னை அவர்கள் மிரட்ட ஆரம்பித்தார்கள்.
அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக திரு.பி.வரதராஜனின் அறைக்கு இழுத்துச் சென்றார்கள்.அங்கே என்னை மிரட்டி வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கினார்கள்.
அப்போது திரு.பி.வரதராஜனின் தூண்டுதலின் பேரில்,ரவுடிகள் மாதிரியான சிலர் திடீரென என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என நான் பயந்து போனேன்.
அதன்பின் அவர்கள், அவர்கள்  விருப்பத்தின் படி என்னை ஒரு கடிதம் எழுத வைத்தனர்.அதில் பலவந்தமாக என்னைக் கையெழுத்திடவும் செய்தனர்.
அப்போது திரு.பி.வரதராஜன்,அவருக்கு எதிரான கிரிமினல் வழக்கில் நான் ஏதாவது சாட்சியம், ஆதாரம் அளித்தால் என்னை சும்மா விட மாட்டேன் என்று மிரட்டினார்.என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக நாசமாக்கி விடப் போவதாகவும் மிரட்டினார்.
அந்த வகையில் நான் அப்போது எழுதித்தந்த கடிதம் என் முழு விருப்பப் படி நான் எழுதிய கடிதம் அல்ல.அது மிரட்டலுக்குப் பயந்து நான் எழுதித்தந்த கடிதம்.நான் கையெழுத்திட்டுத் தந்த வெற்றுத் தாள்களால் நாளை என் எதிர்காலத்துக்கு ஆபத்து வருமோ என நான் அஞ்சுகிறேன்.
என்னைப் பலவந்தப்படுத்தி அவர்கள் விருப்பப்படி கடிதம் எழுதி வாங்கிக் கொண்ட அவர்கள்,அதன்பின் என்னை சற்று நேரம் தாமதிக்கச் செய்து எனது தற்காலிக வேலை நீக்கத்துக்கான உத்தரவை எனக்குத் தந்தார்கள்.கையெழுத்துப் போட்டு அதைப்பெற்றுக் கொள்ளும்படி என்னை நிர்ப்பந்தித்து அதையும் சாதித்துக் கொண்டார்கள்.பிறகு நான் அலுவலகத்தை விட்டுச் செல்ல அனுமதிக்கப் பட்டேன்.
எனக்குத் தரப்பட்ட தற்காலிக வேலை நீக்க உத்தரவு,அடிப்படை உறுதியற்ற நிலையில் எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.அந்த சம்பவத்துக்குப் பிறகும் நான் திரு.பி.வரதராஜனின் ஆட்களால் மறைமுகமாக மிரட்டப்பட்டேன்.என்னைத் தாக்கப் போவதாக அவர்கள் அச்சுறுத்தினார்கள்.
தற்பொழுது குமுதம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ள டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள்,ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி,திரு.பி.வரதராஜனை குமுதம் குழுமத்தின் நிர்வாக மேலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்.அது போல எனக்கு வழங்கப்பட்ட தற்காலிக வேலை நீக்க உத்தரவையும் தற்போதைய நிர்வாக மேலாளர் என்ற அடிப்படையில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அவர்கள் ரத்து செய்து விட்டார்.
இதையடுத்து நான் மீண்டும் எனது பணியைத் தொடர கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காலை 9.45 மணியளவில் குமுதம் அலுவலகத்துக்குச் சென்றேன்.
அப்போது ரவுடிகள் போல காட்சியளித்த சிலர் என்னை நுழைவாயிலில் வழிமறித்து என்னை உள்ளே போகவிடாமல் தடுத்தனர்.என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளே நுழைந்தால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டினர்.என்னால் உள்ளே செல்ல முடியவில்லை.
எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறையினர் எனக்கு உரிய பாதுகாப்பு அளித்து என்னை குமுதம் அலுவலகத்துக்குள் நுழைய விடுமாறும்,எனது பணியைத் தொடர உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் திரு.பி.வரதராஜனால் எனக்கும்,என் குடும்பத்துக்கும் ஆபத்து ஏற்படுமோ என்று அஞ்சுகிறேன்.அப்படி எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு திரு.பி.வரதராஜனே முழுப் பொறுப்பு ஆவார்.
திரு.பி.வரதராஜன் மற்றும் அவரது ஆட்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
தங்களின் உண்மையுள்ள,
பி.ஜி.சாய்குமார்.
 இவரது புகாரின் படி காவல்துறை பி.வரதராஜனை விரைவில் விசாரணைக்கு அழைக்கும் எனத் தெரிகிறது.

Wednesday 19 October 2011

தந்தையைத் தெரியாத மகன் யாரை வேண்டுமானாலும் தந்தை என்பான்


புதிதாக சிலர் சேர்ந்து போலியாக கலகக்குரல் என்னும் பெயரில் ஒரு பிளாக் நடத்துகிறார்கள்.இவர்கள் எந்தப்பெயரில் வேண்டுமானாலும் பிளாக் நடத்தட்டும், நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

கலகக்குரல் என்னும் பெயரில் பிளாக் நடத்துவது,நம் வடிவமைப்பு,குறிக்கோள்,புகைப்படம் என அனைத்தையும் அப்படியே ஈயடிச்சான் காப்பியாகப் பயன்படுத்தியிருப்பதும் நமக்கு மகிழ்ச்சியே. 

பொதுவாக அப்பா,பையன் இரண்டு பேரும் தெருவில் ஒன்றாக நடந்து செல்லும் பொழுது, தந்தையைத் தெரிந்தவர்கள் அவரிடம் சொல்வார்கள்,அச்சடித்த மாதிரி பையன் உன்னை அப்படியே உரிச்சு வச்சுருக்கான்பா அப்படின்னு.

இப்படித்தான் இந்த ஆண்மையற்ற சில நபர்கள் தொடங்கியுள்ள கலகக்குரலுக்கு நாம் தான் அப்பனாக இருக்கிறோம் என்பதில் நமக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

பொய்யை உற்பத்தி செய்யும் போலிகள் போலியாக கலகக்குரல் ஒன்றை உற்பத்தி செய்து,ஏதோ ஒன்றை எழுதி வருகிறார்கள்.அவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதட்டும்,யாரைப்பற்றி வேண்டுமானாலும் எழுதட்டும்.அது அவர்களின் உரிமை.ஆனால் அதனை அவர்களுக்கான ஒரு பெயரில் எழுதட்டும்.நமது பெயரில் எழுதுவது மகாக் கேவலமாகவும் அருவறுப்பாகவும் இருக்கிறது.

இது அடுத்தவரின் தந்தையை தனது தந்தை என்று சொல்லிக் கொள்வது போல இருக்கிறது.இவர்கள் இனிமேல் மாறி விடுவார்கள் என நம்புவோம்.

இல்லையென்றால் அவர்களது பெயருக்கு முன் போட்டுக் கொண்டுள்ள இனிசியல் உண்மையில் அவர்களுக்கு உரியது தானா?இல்லை அதுவும் அடுத்தவருக்கு உரியதாக இருக்குமோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

Thursday 6 October 2011

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிக்கீங்களே... வரதாபாய் எகத்தாளம்

வரதன் குமுதம் ஜவஹர் சொத்தை ஆட்டையப் போட்டுட்டாரு அந்த .....யை ஆட்டையப் போட்டுட்டாருன்னு எல்லோரும் புலம்பிக்கிட்டுருக்காங்க. வரதாபாய் ஊர்ச் சொத்தை ஆட்டையப் போட்டதை அப்புறம் பார்ப்போம்.ஆனா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? தன்னுடன் பிறந்த சகோதரியின் மிகப்பெரிய சொத்தையே ஆட்டையப் போட டிரை பண்ணியவரு அது முடியாத பட்சத்தில் அழித்தவரு அப்படிங்குற கதை.

வரதாபாய் அப்பாக்கு இரண்டு பையன்கள்.ஒரு பொண்ணு.அதாவது வரதாபாய்க்கு ஒரு சகோதரி.வரதாபாய் அப்பா பா.சாரதி இறக்கும் பொழுது தன்னுடைய பொண்ணுக்கு மைலாப்பூரில் ஒரு வீட்டை உயில் எழுதி வைத்தார்.அந்த சகோதரி அப்பொழுது அமெரிக்காவில் இருந்தார்.அதனால அந்த வீட்டை வாடகைக்கு விடுவது,வாடகை வசூல் செய்வது,பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைத் தன்னுடைய அண்ணனைப் பார்த்துக்கச் சொல்லிட்டு அமெரிக்கா சென்று விட்டார்.அங்கு சென்றவுடன் சில மாதமாகியும் வாடகை வரல்லை.உடனே அண்ணனுக்கு போன் போட்டார்.அண்ணே இன்னும் வீட்டு வாடகை வரல்லை அப்படின்னு.

அதுக்கு வரதாபாயோ பராமரிக்கிறது நானு,வாடகை உனக்கா?அப்படின்னு கொஞ்சம் நக்கல்,கொஞ்சம் வில்லத்தனம் கொஞ்சம் திமிருடன் பதில் சொன்னார். 

சகோதரியோ அண்ணே,குடியிருப்பவர்களிடம் இருந்து எனக்கு வாடகை வாங்கிக் கொடுக்குறதுக்கு ஏதாவது கமிஷன் கூட எடுத்துக்க.அது போக மீத வாடகையைக் கண்டிப்பா அனுப்புன்னு சொன்னார்.வரதாபாய் பதில் சொல்லாமல் பதிலுக்குச் சிரித்தார்.
மாதம் ஒன்னாம் தேதியானா அமெரிக்காவில் இருந்து சகோதரி வாடகை கேட்குறது பதிலுக்கு வரதாபாய் சிரிக்கிறது,ரொம்ப அழுத்திக் கேட்டா பேருக்கு கொஞ்சம் பணம் அனுப்புறது,அதுக்கும் மேல அழுத்திக் கேட்டா அந்த டாக்ஸ் கட்டினேன்,வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சேன்,வீட்டை ரிப்பேர் பார்த்தேன்,அது இதுன்னு காரணம் சொல்லிக்கிட்ருந்தார். இப்படியே 2 வருஷம்  முடிஞ்சுச்சு.

அதன்பின் சகோதரி அமெரிக்காவில் இருந்து ரிட்டன் ஆயிட்டார்.வந்தவுடன் வரதாபாய்கிட்ட போனார்.அண்ணே நான் இனிமேல் சென்னை வீட்டில் தான் குடியிருக்கப் போறேன்.எனக்கு என்னோட மைலாப்பூர் வீடு வேணும்.ஒப்படைச்சுடு அப்படின்னு கேட்டார்.

மைலாப்பூர் வீட்டை முழுவதும் சேதாரம் இல்லாம ஆட்டையப் போடுற திட்டத்துல இருந்த வரதாபாய் இதனால் அதிர்ந்து போயிட்டார்.ஆனால் அதனை  வெளிக்காட்டாமல்,எந்த வீடு?மைலாப்பூர் வீடா?இவ்வளவு நேரம் பாக்கெட்டில் இருந்துச்சு இப்பத்தான் காணோம்.அப்படின்னு நக்கல் பண்ணினார். 

நான் 2 வருஷம் உன் வீட்டைப் பராமரிச்சதுக்கு வீடு சரியாப் போச்சுன்னு பதில் சொல்லிட்டார்.தங்கை அழுது கேட்டதும் கூட்டிக் கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும்ன்னு சொல்லிட்டார். 
பொறுமை இழந்த தங்கை வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் சொத்தினை ஒப்படைக்கக் கோரி வழக்குத் தாக்கல் செய்தார்.தங்கை வழக்குத் தாக்கல் செய்வார் என்று வரதாபாய் எதிர்பார்க்கலை.பதிலுக்கு வழக்கு நடத்தினா எப்படியும் வழக்கு தோத்துடும் வீடு கிடைக்காதுன்னு நினைச்ச வரதாபாய் ஒரு குயுக்தியான குறுக்குப் புத்தியுடன் ஒரு காரியம் செய்தார்.அது நம் தமிழ்ப்படத்தில் கூட  எந்த வில்லன் நடிகரும் செய்யாதது.

அப்பா சகோதரிக்கு எழுதிய உயிலை எடுத்தார்.திரும்பத் திரும்ப படித்தார். அதில் பா.சாரதி தனது மகளுக்கு மைலாப்பூரில் உள்ள வீட்டுமனையை அவர் பங்குக்கு அளிக்கிறேன் என்று எழுதியிருந்தார். இதைப் படித்தவுடன் சரியான சட்டப் பாயிண்ட் கிடைத்து விட்டது என்று வரதாபாய் நம்பியார் சிரிப்புச் சிரித்தார்.

(அதாவது வீடு என்பதற்குப் பதிலாகத்,தவறாக வீட்டு மனை என்று எழுதி விட்டார்) உடனே சிறிதும் தாமதிக்காமல் புல்tOடோசரை வரவழைத்தார்.மைலாப்பூரில் இருந்த பல கோடி பெறுமானமுள்ள வீட்டை கொஞ்ச நேரத்தில் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.சூரியன் அஸ்தமிக்கும் முன் மாளிகை இருந்த இடத்தில் காலி மனை மட்டுமே இருந்தது.தங்கைக்கு போன் பண்ணினார்.


தங்கச்சி அப்பா உனக்கு உயில் எழுதிய படி வீட்டு மனையைக் கொடுத்துட்டேன்.வந்து வாங்கிக்க என்றார்.தங்கை வந்தவுடன் தந்தையின் உயில் படி இது தான் உன் மனை என்று காலி இடத்தைக் காட்டினார்.(இதனை எதிர்த்து சட்டப் படி எதும் செய்ய முடியாது.எனென்றால் உயிலில் வீட்டு மனை என்று தானே எழுதியிருக்கிறது.வீடு என்று எழுதலை!!)

தங்கை அன்று கண்ணீருடன் சாபம் இட்டார்.கதறி அழுதார்.வரதாபாயோ சத்யராஜ் சிரிப்புச் சிரித்துக் கொண்டே என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டீக்கீங்களே!என rsஎகத்தாளமாய் இடிஇடியாய்ச் சிரித்தார்.இது தான் வரதாபாய்.தனக்கு சொந்தம் இல்லாத ஒரு பொருள் மேல ஆசைப்பட்டா அடைஞ்சே தீருவாரு.இல்லைன்னா அழிச்சுடுவாரு.அசதுல்லா உசுரோட இருக்கானா?செத்துட்டானா?காறித்துப்பும் மனைவி


நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 4


.
பெயர்-அசு என்ற அசதுல்லா!-வயது சுமார் 50.
இவர் போலீஸ் செய்தி என்ற பத்திரிக்கையில் விழுப்புரம் நிருபராகப் பணியாற்றியவர்.இவர் தனது கையில் அதிமுக கொடியைப் பச்சை குத்தியவர்.இருப்பினும் அதிமுக,திமுக,என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர் கோட்டையில் கொடி கட்டிப் பறப்பார்.
திமுக ஆட்சியில் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி,ஐ.பெரியசாமி,எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,கே.என்.நேரு,எ.வ.வேலு போன்ற அமைச்சர்களை அண்டிப் பிழைத்தவர்.மேற்கண்ட அமைச்சர்களிடம் பேசும் பொழுது ஜெயலலிதாவை எவ்வளவு கேவலமாகத் திட்ட முடியுமோ அவ்வளவு கேவலமாகத் திட்டி அவர்களைச் சந்தோஷப் படுத்துவார்.நான் கையில் பச்சை குத்தியிருப்பது எம்.ஜி.ஆருக்காகத்தான் என்று அதற்கு விளக்கமும் அளிப்பார்.
அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இவரின் புகலிடம் ஒ.பன்னீர்செல்வம்,செங்கோட்டையன்,நத்தம் விஸ்வநாதன் என பல அமைச்சர்கள்.அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தன்னைக் கட்சிக்காரன் என்று சொல்லி பல்வேறு புரோக்கர் வேலையைச் சாதித்துக் கொள்வார்.இவரது முழு நேரப் பணி புரோக்கர் தொழில் மட்டுமே!
இவர் போலீஸ் செய்தி இதழில் சில காலம்,நெல்லை தினமலரில் ஓரிரு மாதம்,காலைக் கதிர் நிறுவனத்தில் ஓரு சில மாதங்கள் மட்டும் நிருபராகப் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு.பணியாற்றிய அந்தக் காலத்திலும் இவர் அந்தப் பத்திரிக்கையாளர் வேலையைத் தவிர அனைத்து வேலையையும் செய்வது தான் இவருக்குப் பழக்கம்.
மேலும் டிஜிபி தெரியும்,ஐஜி எனக்கு பிரண்டு என்று வரிசையாக அனைவரையும் தெரியும் என்று வரிசை விடுவார்.சில காவல் துறை அதிகாரிகள் பெயரைச் சொல்லி அவர் எனக்கு மாமு,இவர் எனக்கு மச்சி.நேரில் பார்க்கும் பொழுது அப்படித்தான் பேசுவேன்,சரக்கு அடிக்கும் பொழுது உரிமையாக் கூப்பிடுவேன் என லிட்டர் லிட்டராக அளந்து விடுவார்.
யாராவது காவல்துறையில் உதவி கேட்டு இவரைத் தேடி வரும் பொழுது,பிரச்சனையைக்க் கேட்டு விட்டு மிகவும் அலட்சியமாக இவர் தான் இதில் மூத்த அதிகாரி,காலையில் இருந்து என்னை இரண்டு முறை தொலைபேசியில் அழைத்து விட்டார்,பேச ஆரம்பிச்சா அரை மணி நேரம் பேசுவார்.போனை வைக்க முடியாது.கொஞ்சம் பிசியா இருந்ததால நான் தான் பேச முடியலை.இப்ப பேசிடுவோம் என்று சொல்லி விட்டு போனில் தொடர்பு கொள்வதைப் போல பாவ்லா காட்டுவார்.
திர்முனையில் ஆளே இல்லாவிட்டாலும் அவரிடம் பேசுவது போல நடிப்பார்.அதுவும் லேசுபாசாக அல்ல,என்ன மாமு எப்படி இருக்கீங்க?கொஞ்சம் பிசி.அதான் பேச முடியல,தப்பா எடுத்துக்காதீங்க.அப்புறம் நம்ம நண்பர் ஒருத்தர் வந்துருக்கார்,ஒரு சின்ன ஹெல்ப் வேணும் என ஆரம்பிப்பார்.கவுண்டமணி பாணியில்  எதிர்முனையில்  ஆள் இல்லை என்பது உதவி கேட்டு வந்தவருக்குத் தெரியவா போகிறது?
போனை வைத்து விட்டு மாமுட்ட  சொல்லிட்டேன்.இரண்டு நாளில் உன் பிரச்சினை முடிஞ்சிடும் எனச் சொல்லி அவரிடம் ஒரு அமவுண்ட் கறந்து விடுவார்.அதன்பின் காசு கொடுத்தவருக்கு பிரச்சினையும் தீராது,கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காது.அவருக்கு இருக்கும் பிரச்சனை போதாது என்று கொடுத்த காசை திரும்பவும் வாங்குவதில் இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்கும்.
இவரால் இப்படி ஏமாற்றப் பட்டவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார்கள். ஏதேனும் பத்திரிக்கையில் இவர் புகைப்படத்தை வைத்து இவரால் ஏமாற்றப் பட்டவர்கள் காவல்துறையில் புகார் செய்யலாம் என அறிவிப்புக் கொடுத்தால் பைனான்ஸ் கம்பெனியில் ஏமாந்தவர்களை விட அதிக நபர்கள் கியூவில் நிற்பார்கள் என்பது நிச்சயம்.இவரிடம் அப்பாவிகள் மட்டுமல்ல,எம்.எல்.ஏக்கள்,அரசு அதிகாரிகள்,டாக்டர்கள் என பல தரப்பட்டவர்களும் ஏமாந்திருக்கின்றனர்.எடுத்துக்காட்டாக முன்னாள் திமுக எம்.எல்.ஏ.தர்மபுரி மனோகரன் இவரிடம் ஏமாந்தது பிரசித்தம்.
ம்.எல்.ஏ.க்களுக்கே இந்தக்கதி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.பத்திரிக்கையாளன் என்ற ஒரே போர்வையை வைத்துக் கொண்டு அந்த எம்.எல்.ஏ.விடம் வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் மிரட்டி வந்தார் என்பது வேறு கதை.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கண்டமங்கலம் சுப்ரமணியத்தின் அமைச்சர் பதவியே அல்பாயுசில் போனதற்கு இவரின் தில்லு முல்லுகள் தான் காரணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.விழுப்புரத்தில் இவர் வசித்த பொழுது செய்த ஏமாற்று வேலைகளால் ஏமாந்தவர்கள் வீடு தேடி இவரை உதைக்கச் செல்ல தப்பித்தோம் பிழைத்தோம் என்று சென்னை வந்து சேர்ந்தார்.
அப்பொழுது இவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் இப்பொழுது தினகரனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பிராடுகள் வரம் கொடுத்தவரின் தலையில் கை வைப்பதைப் போல தனக்கு தங்க உதவியவர்  அறையில் இருந்து கொண்டே அவரது அறைக்கு வரும் நபரிடமே இவரின் கை வரிசையைக் காட்டி விட்டார்.இந்த உண்மை தெரிந்த பிறகு அடைக்கலம் கொடுத்த அந்த நபர் இவரது பெட்டி படுக்கைகளை அறைக்கு வெளியே தூக்கி எறிந்து விட்டார்.இதன் பிறகு வேறு ஒரு இடத்தில் தங்கி தனது ஏமாற்று வேலையைத் தொடர்ந்தார்.கொடி கட்டிப் பறந்தார்.
எந்தப் பத்திரிக்கையிலும் வேலை செய்யாத இவருக்கு சென்னையில் இரண்டு வீடுகள் மற்றும்  கார் இருக்கிறதாம்.இவரின் ஒரு நாள் செலவாக மற்றவர்க்ள் சொல்வது ஆயிரத்து ஐந்நூறு ரூபாயாம்.காலையில் வீட்டில் இருந்து புறப்படும் இவர் தலைமைச்செயலக பிரஸ் ரூமுக்கு வருவாராம்.அங்கு தனது புரோக்கர் வேலையை  முடித்து விட்டு மதியச் சாப்பாட்டிற்கு  பிரஸ் கிளப் வருவாராம்.அங்கு அவருக்கு நாயர் மெஸ்ஸில் இருந்து விதம் விதமான வகைகளுடன் சாப்பாடு வாங்கி வரப்படுமாம்.இது முடித்த பின்னர் இவரின் புரோக்கர் காரியங்களுக்காக இவர் வைத்துள்ள ஆட்கள் இவரைச் சந்திக்க பிரஸ் கிளப் வருவார்களாம்.
சில நேரங்களில் பணம் கொடுத்து இவரால் ஏமாந்தவர்களும் இவரை இங்கு உதைக்க வந்தது தனிக்கதை.மாலை 6 மணி ஆனதும் வெளிநாட்டு மதுபானம் ஆப் அடிப்பராம்.அதன் பின்பு பிரஸ் கிளப்பே தன்னுடைய நிர்வாகத்தால்  நட்த்தப்படுவதாகச் சிலரிடம் அதிகாரம் செலுத்தி வசமாக வாங்கிக் கொண்டு வாயடைத்துச் செல்வாராம்.
இவர் எந்த பத்திரிக்கை நிறுவனத்திலும் வேலை செய்யா விட்டாலும் பிடிப்பது 555 சிகரெட, குடிப்பது வெளிநாட்டு மது,உடுத்துவது உயர்ரக ஆடைகள்.அணிவது என்னவோ 5000 மதிப்புடைய ஷூ.செல்வது பல லட்சம் மதிப்புள்ள காரில்.இத்தனை பணமும் பலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிய பணத்தில் சம்பாதித்த பணமாம்.பலர் வயிறெரிய இவருக்கு மட்டும் ராஜபோக வாழ்க்கையாம்.இவரிடம் ஏமாந்தவர்கள் பட்டியல் போட்டால் நிதி அமைச்சர் ஓபிஎஸ் முதல் கடைக்கோடி குமரி மாவட்டம் வரை நீளூம்.
அரசியல்வாதிகள் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப் போடுகிறார்கள். வேலையும் இல்லை,கூலியுமில்லை.ஆனால் வீடு வந்தது எப்படி?கார் வந்த்து எப்படி?என்று இவரைப் போன்ற   ஏமாற்றுப் பேர்வழிகள் மீது விசாரணை நடத்தினால் நாட்டுக்கு நல்லது. 
இவர் ஒருமுறை விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தகவலை இவரது மனைவிக்கு ஒருவர் நேரில் சென்று தெரிவித்தாராம்.
உசுரோட இருக்கானா?இல்ல செத்துப் போனானா?இது அவரது மனைவியின் எதிர்வினை.இதைக்கேட்டு தகவல் சொல்லப் போனவர் அதிர்ந்து போனாராம்.மனைவியே இப்படிக் காறித்துப்புகிறார் என்றால் இவரிடம் ஏமாந்தவர்கள் இவரை என்ன செய்ய நினைப்பார்கள்? 

வரதாபாய் குடுமி சும்மாவா ஆடும்?
இதுவரையிலும் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வந்த வரதாபாய் இப்பொழுது திடீரென்று அவர்கள் மீது பாசமழை பொழிகிறாராம்.ஆயுத பூஜையை எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகவும் தடபுடலாகக் கொண்டாடினாராம்.ஊழியர்கள் அனைவருக்கும் அரைக் கிலோ இனிப்பு,பழங்கள்,பணம் ரூ.500 என அமர்க்களப்படுத்தினாராம்.அத்துடன் இல்லாமல் ஊழியர்கள் உடன் குரூப் புகைப்படம் எடுத்து அன்பு மழை பொழிந்தாராம்.இதுவரை ஊழியர்களை விரோதத்துடன் பார்ப்பவர்,இப்பொழுது பல ஊழியர்களைப் பெயர் சொல்லி அழைத்து நீண்டநாள் நண்பரைப் போல நலம் விசாரித்து,குடும்பம் பற்றியெல்லாம் வினவினாராம்.

இதுவரை குமுதம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் வரதாபாய் மரியாதையுடன் பேசிய‌து கூட இல்லையாம்.அயதிலும் குறிப்பாக பிரிண்டிங் செக்‌ஷனில் உள்ள ஊழியர்களிடம் பேசும் பொழுது மிக மோசமாக லும்பன்களைப் போல பேசுவாராம்.(உதாரணத்திற்கு,ஏய் ஒழுங்கா வேலையைப் பாருங்கடா!கொட்டையில் உதைச்சா இரண்டும் வாய் வழியா வெளியில் வந்துடும்)ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு உதாரணம்.

வரதபாய் பேச்சுக்கு இந்த ஒரு உதாரணம் போதும்.ஆண்களிடமே இப்படின்னா பெண்களிடம் எப்படிப் பேசுவார் என்று உங்கள் கற்பனைக்கே விட்டுடுறோம்.
வரதாபாய் ரிப்போர்ட்டர் ஆரம்பிச்ச பிறகு இதில் வேலைக்குச் சேர்ந்தவர்களில் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் வேலையை விட்டு துரத்தப் பட்டுள்ளார்களாம்.அதிலும் அமைதியாக இருப்பவர்களை கேவலமான வார்த்தைகளால் கூனிக்குறுகும் அளவுக்கு வறுத்தெடுப்பாராம்.(அதே சமயம் துணிச்சலுடன் எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களிடம் பல்லை இளிப்பாராம்,பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவரின் இடத்தைக் காலி பண்ணுவாராம்)
அப்படிப்பட்ட வரதாபாயா திடீரென்று நம் மீது பாசமழை பொழிவது? என்று ஊழியர்கள் திக்குமுக்காடி விட்டார்களாம்.

ஒவொருத்தரும் ரிப்போர்ட்டர் அலுவலகத்தில் தான் இருக்கின்றோமா?நடப்பது கனவா?நிஜமா?என்று தங்களைக் கிள்ளிப்பார்த்துக் கொண்டார்களாம்.விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்கில் விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்கும் திட்டத்தின் ஒரு பகுதி இந்த பம்மாத்து என்று கூறுகின்றார்கள் விபரம் அறிந்தவர்கள்.

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்?
Tuesday 4 October 2011

குமுதம் நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.பி.கோதை ஆச்சி பகிரங்க எச்சரிக்கை


                                   குமுதம் நிர்வாக இயக்குனர் எஸ்.ஏ.பி.கோதை ஆச்சி

ஆக்கிரமிப்பு கும்பலின் அட்டூழியம் தொடர்கிறது.
தொடர்ச்சியாகத் தங்களுக்கு இடைஞ்சலாக உள்ள‌பணியாளர்களை நீக்கிவரும் புரசை வாக்கம் பத்திரிக்கை ஆக்கிரம்பிப்பு கும்பல் நேற்று தனது பத்திரிக்கை குழுமத்தில் ஐடி சூப்பர்வைசராகப் பணியாற்றி வரும் சதீஷ் என்பவரைத் தற்காலிகமாக நீக்கி உள்ளது.ஐடி துறையில் பணியாற்றும் அவரை வேண்டுமென்றெ பிரிண்டிங் துறைக்கு மாற்றியதற்கு(நல்லவேளை வாட்ச்மேன் வேலைக்கு மாற்ற‌லை) அவர் எதிர்ப்புத் தெரிவிக்கவே தற்காலிக நீக்கமாம்.
போற போக்கைப் பார்த்தா தலைவனும் அண்டிப்பிழைப்பவர்களும் வாட்ச்மேனும்  மட்டும் தான் இருப்பார் போல...