முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் உண்மைக்கும்,இதழியல் அறத்துக்கும் புறம்பாக சென்னையில் உள்ள மலையாளப் பத்திரிகையாளர்கள் குறிப்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் உள்ள மலையாளிகள் இன வெறியர்களாகச் செயல்படுவது குறித்து பத்திரிக்கையாளர் ராதிகா கிரி ’தி வீக் எண்ட் லீடர்’ என்னும் இணையப் பத்திரிக்கையில் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
இந்தக் கட்டுரைக்காக ரூ.100 கோடி மான நஷ்ட கேட்டு டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இங்கே நம்மிடம் பிழைப்பு நடத்திவிட்டு ,நமக்கு எதிராகவும்,உண்மைக்குப் புறம்பாகவும் எழுதிவிட்டு அதனைச் சுட்டிக்காட்டினால் ரூ.100 கோடி கேட்கிறது.இதனை வன்மையாகக் கண்டித்து நாம் அனைவரும் குரல் எழுப்புவோம்.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக புதிதாக வெடித்துள்ள விவகாரத்தில்,ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிடும் விதத்தைக் கூர்ந்து கவனித்தால் எனக்கு அது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது.கேரளப் பத்திரிக்கையாளர்களின் தொழில் சார்ந்த அறம்குறித்த ஐயப்பாடுகளை அது எழுப்புகிறது.
மலையாளச் செய்தித் தாள்களில் பணிபுரியும் மலையாளி இதழாளர்கள்,முல்லைப்பெரியாறு விவகாரத்தில்,உண்மையைப் பற்றித் துளியும் கவலைப்படாமல்,அந்த மாநில அரசின் கருத்தையும்,கேரள மக்களின் உணர்வுகளையுமே பிரதிபலிக்கிறார்கள்.
போகட்டும் அதைக்கூட விட்டுவிடலாம்.
ஆனால் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றும் மலையாளி பத்திரிக்கையாளர்கள் கூட இப்படிச் செய்கிறார்கள் என்னும் பொழுது அது நம்மை வருந்தச் செய்கிறது.
முல்லைப்பெரியாறா?
முல்லப் பெரியாறா?
இதை நீங்கள் எப்படி எழுதுகின்றீர்கள் என்பதை வைத்தே நீங்கள் எந்தப் பக்க ஆதரவாளர் என்பதைச் சொல்லி விடலாம்.
அண்மையில் கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி ,அணை தொடர்பாக ஓர் அறிக்கையை கேரள நீதிமன்றத்தில் அளித்திருந்தார்.முல்லைப்பெரியாறு அணை ஒருவேளை உடைந்தாலும் கூட அதன் நீர் இடுக்கி அணையில் சேகரமாகி விடுமென்று அவர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
அட்வகேட் ஜெனரலின் அந்த அறிக்கையை வெளியிடும் விஷயத்தில் பத்திரிக்கை தர்மம்,இதழ் அறம் தவறிவிட்டது,தகர்ந்து விட்டது.
இத அறிக்கை வெளியான மறுநாள் சென்னையில் உள்ள எந்த ஓர் ஆங்கில நாளிதழும் அதைச் செய்தியாக வெளியிடவில்லை.
ஆனால் அட்வகேட் ஜெனரலின் அந்த அறிக்கை,அறிவுக்கு முற்றிலும் முரணாண ஒன்று என்று கூறி மலையாளிகள் போர்க்கொடி தூக்கிய பொழுது அதை மட்டும் உடனே ஆங்கில எடுகள் செய்தியாக்கின.அதுவும் கூட அந்த அறிக்கை கிளர்த்திவிட்ட முரண்பாடுகளைத் தான் அவை செய்தியாக்கிப் பிரசுரம் செய்தன.
நான் அதில் கண்டு பிடித்த விஷயம் இதுதான்.
அட்வகேட் ஜெனரலின் அந்த அறிக்கைஅயை பிரசுரிக்கத் தகுந்தது என்று எந்த ஒரு கேரள நிருபரும் ஏன் நினைகவில்லை?
அந்த அறிக்கை சரியா தவறா?அதை அவர்கள் ஏற்கிறார்களா,இல்லையா என்பது இதில் வேறு விஷயம்.இதிலிருந்து ஒரு விஷயம் நமக்குப் புலனாகிறது.
மலையாளப் பத்திரிக்கையாளர்கள் முதலில் மலையாளிகளாக நடந்து கொள்கிறார்கள்.அதற்கு அடுத்த படியாகத் தான் தங்களைப் பத்திரிக்கையாளர்களாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னைப்பதிப்பு நவம்பர் 24 ஆம்தேதி வெளியிட்ட டைம்ஸ் வியூ பகுதி தான்,கடந்த இரண்டு வாரங்களாக முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை அணூக்கமாக கூர்ந்து நோக்கும் ஆவலை எனக்குள் உண்டாக்கியது.
டாம் 999 சினிமா விஷயத்தில் தமிழக தியேட்டர்கள் ஆர்ப்பாட்டங்களூக்கு அடி பணிந்து விட்டன என்ற தலைப்பிலான அந்தச் செய்தியின் கீழ் ஒரு கருத்துக் கணிப்பு,ஆரம்பத்தில் அமைதியாகத்தான் தொடங்குகிறது.கருத்துச் சுதந்திரத்தை ஏதோ கட்டிக் காக்கப் போராடுவது போலத் தான் அது ஆரம்பிக்கிறது.
முல்லைப்பெரியாறு அணையைப் பொறுத்தவரை (இதைக்கேரளத்தவர்கள் முல்லப்பெரியாறு என்றே உச்சரிப்பது வழக்கம்.சென்னையில் பிரசுரமாகும் டைம்ஸ் ஆப் இந்தியாவும் இந்த பாணியைத் தான் பின்பற்றுகிறது)அது கேரளத்தவர்களூக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சினை .ஆனால் தமிழ்நாட்டுக்கு அப்படி இல்லை.
இந்த நிலையில் கேரள அரசும் பத்திரிக்கையாளர்களும் மக்களும் தாங்கள் திட்டமிட்டுப் பரப்பும் பொய்ப் புரளிகளை தமிழகத்திலும் பரப்பி முல்லைப்பெரியாறு பிரச்சனையை தமிழகத்திலும் ஓர் உணர்ச்சிபூர்வமான பிரச்சனையாக்க முயல்கிறார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.
ஆக இப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் பார்வை மலையாளிகளின் பார்வை என்று சந்தேகத்திற்கு இடமின்றி யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம்.(அந்த மலையாளி பத்திரிக்கையாளர்கள் சென்னையில் வசித்து இங்குள்ள ஊடகங்களில் பணிபுரிபவர்களாக இருந்தாலும் அவர்களது பார்வை மலையாளிப் பார்வையாகத்தான் இருக்கிறது)
சென்னையில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி அறையின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் மலையாளிகள் தான்.அதாவது நாயர் அல்லது மேனன்.இது பத்திரிக்கைத் துறையைப் பற்றித் தெரிந்த எல்லோருக்கும் தெரியும்.
அங்கே ரெசிடெண்ட் எடிட்டர்,பொலிட்டிகல் எடிட்டர்,மெட்ரோ எடிட்டர்,எல்லோருமே மலையாளிகள் தான்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் இதற்கு முன் பணிபுரிந்த ஒருவர் சொன்னது.
அந்தப் பத்திரிக்கையின் செய்தி அறை முழுக்க மலையாளிகள் தான்.முழுக்க மலையாளத்திலேயே தான் பேசிக் கொள்வார்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியாவின் இன்னொரு முன்னாள் ஊழியர் கூறியது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் தமிழர்கள் எல்லோரும் மிக மிகச் சிறுபான்மையினர்.தமிழ்நாடு தொடர்பான பல விஷயங்கள் அங்கே புறக்கணிக்கப்படும் போதும் ஒதுக்கித் தள்ளப்படும் போதும்,அதைத் தட்டிக்கேட்டு நானும் எனது நண்பரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.
அது மட்டுமல்ல ஓணம் பண்டிகையின் பொழுது சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் அலங்கரிக்கப்பட்டது.ஆனால் பொங்கல் பண்டிகையின் பொழுது அவ்வாறு அலங்கரிக்க மறுத்து விட்டார்கள்.நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஒன்றும் நடகக்வில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியாவைப் படிப்பதைத் தவிர அதோடு வேறு எந்தத் தொடர்பும் இல்லாத மூததப் பத்திரிக்கையாளர் சென்னையில் ஆங்கில மீடியாக்கள் செயல்படும் விதத்தைப் பற்றிக் கூறும் பொழுது இப்படிக் கூறினார்.
“ஆங்கில மீடியாக்களில் மேல்மட்டங்களில் உயர்வகுப்பினர் தான் இருக்கிறார்கள்.இதன் காரணமாக தமிழர்களின் கலாச்சாரத்தை அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.தமிழ் மற்றும் ஆங்கில மீடியாக்களின் கவரேஜ்கள் இதனால் வேறுவேறாக இரண்டு மாதிரியாக இருக்கின்றன.
சாதாரண பின்புலத்தில் இருந்து வருபவர்கள் எப்படியோ தட்டுத்தடுமாறி ஆங்கில் செய்தித்தாள்களின் செய்தி அறைக்குள் நுழைந்து விட்டாலும் கூட அவர்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடிவதில்லை.அவர்களது குரல்கள் அடக்கப்படுகின்றன.
தமிழ்க்கண்ணோட்டம் என்பது அங்கே ”உயர் ஜாதி”யினரின் கண்ணோட்டமாகத் தான் இருக்கிறது. இதனால் தமிழகம் பற்றி இந்தியாவின் பிற பகுதிகளில் தவறுதலான புரிதல்கள் தான் இருக்கின்றன.
உதாரணத்துக்கு டெல்லி,மும்பை,கலகத்தா போன்ற இடங்களில் உள்ளவர்கள் இட்லி,தோசை,சாம்பார் போன்றவற்றை தமிழக சமையல் கலையுடன் தொடர்புபடுத்தி தமிழர்களில் பெரும்பாலோனொர் சைவ சாப்பாட்டுக்காரர்கள் என நினைத்துக் கொள்கிறார்கள்.தமிழர்களில் பெரும்பாலோர் இறைச்சி சாப்பிடும் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
அது போல தமிழ்நாட்டின் கலைகள் என்றால் அது கர்நாடக சங்கீதமும்,பரத நாட்டியமும் தான் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டின் வெறும் 10 சதவீதத்தினரின் கலைகள் தான் இவை.அப்படியானால் மீதம் உள்ள 90 சதவீதத்தினரின் கலை என்ன?பாரம்பரியம் என்ன?
இந்த இசை,கலை பாரம்பரியங்கள் ஆங்கில மீடியாக்களில் வெளிப்படுவதேயில்லை.அங்கு வேலை பார்ப்பவர்கள் அதைத் தெரிந்து கொள்ள அலட்டிக் கொள்வதேயில்லை.காரணம் அவர்கள் ”உயர்ஜாதி”யினர்.அல்லது வேறு மாநிலங்களில் இருந்து வந்த பத்திரிக்கையாளர்கள்.
குறிப்பாக எடிட்டோரியலில் இருப்பவர்கள் உயர் வ்குப்பினரோடு மட்டுமே ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் உண்மையான தமிழகம் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை.
பி.சி.வினோஜ்குமாருக்கு நன்றி கலந்த வணக்கம்.
ராதிகா கிரிக்கு நன்றி கலந்த வணக்கம்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு அணையின் பாதுகாப்பு குறித்த பொய்ப் பிரச்சாரத்தை மலையாளப் பத்த்ரிக்கைகளின் ஆதரவுடன் தான் ஆரம்பித்தது.கேரள அரசின் தலையாய நோக்கம் என்னவென்றால் இடுக்கி அணைக்கு நீரைப்பெறுவது.முல்லைப்பெரியாறு அணையை உடைத்தால் மட்டுமே அது சாத்தியம்.
இதே வழியில் கேரளப் பத்திரிக்கைகளூம் கேரள அரசின் பொய்ப்பரப்புரைக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன.முல்லைப் பெரியாறை அவை ஓர் உணர்ச்சிபூர்வமான பிரச்சினையாக்கின.இதன்முலம் கேரளத்தில் உள்ள ஒவ்வொரு மலையாளியையும் முல்லைப்பெரியாறு அணை என்பது தண்ணீர் வடிவத்தில் இருக்கும் ஒரு குண்டு என்று அவை நம்பவித்தன.
இந்தக்கூற்றில் அரசியல் ரீதியான உண்மை இல்லாவிட்டாலும் அணை எப்பொழுது வேண்டுமானாலும் உடையலாம் என கேரள மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள்.
பீதியைக்கிளப்பும் இந்த உணர்வு பூர்வமான விஷயத்தில் கேரளப் பத்த்ரிக்கையாளர்கள் அனைவரும் ஒத்த கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள்.
இப்போது மலையாளிகளின் பிடியில் உள்ள ஆங்கில மீடியாக்களும் இந்த விஷயத்தில் கேரளத்தின் பார்வையையே பிரதிபலிக்கின்றன.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கும் வேலை எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த பொழுது நடந்தது.எம்ஜிஆர் பிறப்பால் மலையாளி.அப்பொழுது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்தவரும் மலையாளி தான்.
தமிழகத்தில் இருந்த படி செயல்படும் டைம்ஸ் ஆப் இந்தியா முல்லைப்பெரியாறு அணையை முல்லப்பெரியாறு என்றே குறிப்பிட்டு மலையாள உணர்வைக்காட்டுகிறது.சென்னையில் உள்ள இந்து நாளிதழும் இதே உச்சரிப்பைத் தான் பயன்படுத்துகிறது.
கேரள அரசின் இப்பொழுதைய ஒரே நோக்கம் அணையை உடைத்து நொறுக்குவது தான்.அந்த நோக்கத்தை,கருத்தை மலையாளப் பத்த்ரிக்கையாளர்கள் எதிரொலிக்கிறார்கள்.
முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகி விட்டது,அது எந்த நேரத்திலும் உடையலாம் என்ற வதந்தி இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே உள்ளது.
இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் இப்படிக்கூறினார்.
1978 ஆம் ஆண்டு வாக்கில் அப்போது பட்ரோஸ் சும்மார் என்பவர் மலையாள மனோரமாவின் திருவனந்தபுரம் சீப்பாக இருந்தார்.மலையாளப் பத்திரிகையாளர்களால் பெரிதும் மதிகப்பட்டவர் அவர்.கேரள அரசுக்கே யோசனை சொல்லக் கூடியவர்.
அந்த காலகட்டத்தில் கேரள அரசு இடுக்கி அணையைக் கட்டி 1976 இல் அதைத் திறந்திருந்தது.ஆனால் நான்கு பருவமழைகள் பொய்த்துப் போனதால் இடுக்கி அணைக்குத் தேவையான நீர் சேகரம் ஆக வில்லை.
முல்லைப்பெரியாறு அணை,இடுக்கி அனைக்கு நீர் வரும் பாதையின் மேலே உச்சத்தில் இருந்தது.கேரளப்பகுதியில் அந்த அணை இருந்தாலும் தமிழக அரசுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு,அந்த அணை மீது ஒரு சட்டபப்டியான கட்டுப்பாட்டை கேரளா வைத்திருந்தது.
இந்த நேரத்தில் பரமேஸ்வரன் நாயர் என்பவர் காங்கிரஸ் தலைவரிடம் நகைச்சுவையாக இப்படிக் கூறினார்.
நம்முடே சேட்டண்டிடத்து பரஞ்சு அவ்விடே ஸ்டோரேஜ் கொறைக்க பறையாமில்ல”
(அண்ணன் எம்ஜிஆரிடம் பேசி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கச் சொல்லலாம் அல்லவா?)
நாயர் கிண்டலாகச் சொன்னதை பரமேஸ்வரன் நாயர் சீரியசாக எடுத்துக் கொண்டார்.”பேடி கிரியேட் செஞ்சுட்டு,சேட்டனிடத்துப் போயால”என்றார் அவர்.
(முதலில் பயத்தை ஏற்படுத்தி விட்டு பிறகு அண்ணனிடம் போகலாம்.)
இந்தப் பயத்தை முதலில் ஏற்படுத்தியது மலையாள மனோரமா இதழ் தான்.பிறகு அதனை மற்ற இதழ்கள் பொறுக்கிக் கொண்டன.
இந்த நீண்ட கால கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2006 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு உத்தரவை வழங்கியது.அணை பலவீனமாக இல்லை.தமிழ்நாடு அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு அது.
தற்பொழுது ஒவ்வொரு மலையாளப் பத்த்ரிக்கையாளரும் ஒரு பட்ரோஸ் சும்மார் ஆக இருக்கிறார்கள்.இவர்கள் இதழியத்தைக் காக்க எழுதவில்லை.உண்மையைக் காக்க எழுதவில்லை.இந்தியாவின் பன்முகத்தன்மையை இவர்களது இந்தச்செயல் கிழித்துப்போடும் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளாமல் இப்படிச் செய்கிறார்கள்.
கொஞ்சம் தண்ணீருக்காகவும்,திருவிதாங்கூர் மகாராஜாவிடம் சட்டப்படி வாங்கிய ஒரு துண்டு நிலத்துக்காகவும் மலையாளப் பத்திரிகிக்கையாளர்கள் இவ்வாறு பத்திரிக்கை அறம் மீறிச் செய்யலாமா?.
இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவம்.