குமுதத்தில் நீண்ட காலம்
பணியாற்றியவரும் தற்பொழுது அங்கு தலைமை நிருபராக இருப்பவருமான வி.சந்திரசேகரன் குமுதத்திலிருந்து
ராஜினாமா செய்துள்ளார். முன்பு பா.வரதராஜன் வட்டாரத்தில் இருந்தாலும் சமீப காலமாக
இருவருக்கும் ஒத்துப் போகவில்லை.அதன் காரணமாக இவரை மும்பைக்கு இடமாற்றம்
செய்து தொந்தரவு செய்தார்கள்.ஆனால் அங்கு பணியில் சேராமல் விடுப்பில் சென்றிருந்தார்.
வழக்கமாக டிசம்பர் மாதக்
கச்சேரிகளை இவர் தான் கவர் செய்வார். ஆகையால் அதற்குள் எப்படியாவது மீண்டும்
சென்னையில் உள்ள குமுதம் அலுவலகத்தில் பணியில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஆனால் சென்னையில் குமுதம் அலுவலகத்தில் உள்ள இவரது அறை நாணயம் விகடனில் இருந்து
புதிதாய் வேலைக்குச் சேர்ந்த வெங்கட்டுக்கு ஒதுக்கப்படவே இனி வாய்ப்பில்லை என்று கருதி வேறு வழியின்றி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார் என்று குமுதம்
வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.
No comments:
Post a Comment