Sunday 14 June 2015

ஈயடிச்சான் காப்பி அடிக்கும் ’தி இந்து’


சென்னை ஜி.என்.செட்டி சாலை பெனின்சுலா ஓட்டல் முன்புறம் அமைந்துள்ள தேநீர்க்கடை. ஊடகவியலாளர்கள் அன்பரசு, பார்த்தசாரதி, ரவிக்குமார், அன்வர் ஆகியோர் சந்திப்பு.

ஆளுக்கொரு தேநீர் சொல்லி விட்டு உரையாடலைத் தொடங்கினர்.

” மீடியாவில் என்னப்பா நடக்குது?”  ஆரம்பித்து வைத்தார் அன்பரசு.

நம்ம அடையாளம்’ புதுசா வந்திருக்குதாமே? “ஆர்வத்துடன் கேட்டார் ரவிக்குமார்.

” ஆமா. தேர்தல் வருதுல்லே. திருவிழாக் கடை போல புதுசு புதுசா பத்திரிகைகள் வரத்தான் செய்யும். பத்திரிகை தேர்தலுக்குப் பிறகும் வருமாங்கிறதுதான் கேள்வி“ சாரதி ஊடக  நடப்பை உரித்து வைத்தார்.

கோசல்ராம் தொழிலாளியாஇருந்து ’எப்படியோ’ முதலாளியா ஆகிட்டார். அல்லது இதன் ’பின்னணி’ யார் என்றும் தெரியலை. பின்னணி யாரா இருந்தாலும் ’நோக்கம்’ ஒன்னு தான். அவர் ஊழியரா வேலை பார்த்த ’குமுதம் ரிப்போர்ட்டரி’லேயே இதுக்கு விளம்பரம் வந்தது. ”

” அது சரி. பத்திரிகை எப்படி இருக்கு? அதைச் சொல்லுங்க. ” ரவிக்குமார் ரிசல்டுக்கு காத்திருந்தார்.

”கதிர்வேல் தான் முதன்மை ஆசிரியர்.  செய்திகளிலும் சரி பக்க அளவுகளிலும் சரி ’கனம்’ இல்லை.





இதில் கூட அட்டையைப் பாருங்க. யார் பேட்டின்னு சொல்லாமல் அவர் போட்டாவை மட்டும் வைத்திருக்காங்க. தமிழிசை சவுந்தர்ராஜன் முகம் நம்மூர்ல எத்தனை பேருக்குத் தெரியும்? அடித்துச் சொல்கிறார் தமிழிசை ன்னு உள்ளே சொல்லியதை வெளியேவும் வைத்திருக்கலாம்.

அதே சமயம் ’டார்க் ரூம்’ என்னும் உரையாடல் பகுதி வருது. அதில் பங்கேற்கும் சூனா கானா இருவரும் டேய், வாடா,போடா என தரக்குறைவாகவே பேசுறாங்க. திரைப்பட காமெடி, டீக்கடை உரையாடலுக்கு வேண்டுமானால் இது சரியா இருக்கலாம். ஆனால் பத்திரிகைக்கு இப்படிப்பட்ட தரக்குறைவான உரையாடல்  வடிவம் சரிவராது. சரி. நாம் என்ன செய்யுறது? 

ஏன் இப்படிப்பட்டதை அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை. புதிய பத்திரிகையை இதுக்கும் மேல இப்ப விமர்சனம் செய்வதை விட  கொஞ்ச காலம் கழித்து விமர்சனம் செய்வது தான் சரியானதா இருக்கும். ” 

பார்த்தசாரதி தனது விமர்சனத்தைப் பதிவு செய்தார்.





புது முதலாளியைப் பத்தி பேசினோம். ரெண்டு பழைய பெரு முதலாளிகள் இப்ப ஒன்னு கூடிட்டாங்க தெரியுமா? “ அன்பரசு புதுச் சங்கதியை எடுத்து விட்டார்.

” அப்படியா முதலாளிகள் எல்லாம் எப்ப அடிச்சுக்குவாங்க? எதுக்கு அடிச்சுக்குவாங்க? எப்ப கூடிப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்? அது வழக்கமா நடக்கிறது தானே, யார் அவங்க? “

” வேற யாரு? மாறன் கம்பெனியும் ராமசுப்பைய்யர் கம்பெனியும் தான்.”

” ஆரியமும், திராவிடமும் கைகோர்த்துச்சா? ” அன்பரசு அரசியலைக் கொண்டு வந்தார்.

” ஆமாம். பிழைப்புக்கு ஏது கொள்கை மாறுபாடு? முதல் பக்கத்தில் நாய்ச் சண்டை போட்டவங்க இப்ப கூடிக்கும்மாளம் போடுறாங்க. ’தொல்காப்பியர்’ விருதை ’தினமலர்’ ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி வாங்கியதை ’தினகரன்’ வெளியிட்டுச்சு. 

அதே சமயம் மாறன்கள் வழக்கு விஷயத்தை ’தினமலர்’ கூடிய மட்டும் அடக்கி வாசிக்குது. என்ன மாயமோ தெரியலை.

"அதே போல 'நக்கீரனும்' இப்ப 'சன்' குழுமம் கூட நெருக்கமாக முடிவு பண்ணிட்டாங்க‌  போல..? 

முன்பு கோபால்- தயாநிதிமாறன் ரெண்டு பேருக்கும் ஒரு பஞ்சாயத்து இருந்தது. அதே போல ஆ.ராசாவை ஸ்பெக்ட்ரம் ஊழலில் காட்டிக் கொடுத்த கோபம் கூட்டாளி காமராஜூக்கு இருந்தது. அதனால் சன் குழுமத்துக்கு எதிரா 'தினமலர்', 'தினமணி'யை விட அதிக எதிர்ப்பா 'நக்கீரன்' இருந்தது. இப்ப என்னாச்சோ தெரியலை. தொடர்ச்சியா ஆதரவு செய்திகள் வருது.





சன் குழுமம் கைமாறுதுன்னு செய்தி வந்தப்ப அப்படி இல்லைன்னு ஒரு மறுப்பு பதிவு நக்கீரனில் வந்துச்சு. சன் தொலைக்காட்சி அலைவரிசை இப்ப நெருக்கடியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு ஆதரவுச் செய்திப் பதிவு. 'நமது நிருபர்' பெயரில்."
தேர்தல் வரும் நேரத்தில் கூட்டாளிகள் எல்லோரும் கரம் கோர்க்க நினைச்சுருப்பாருங்க. 


பூவுலகின் நண்பர்கள்,என்.ஜி.ஓ.


தே மாதிரி ’புதிய தலைமுறை’ தொலைக்காட்சியும் மாறனும் கேபிள் விஷயத்தில் ராசியாய்ட்டாங்கன்னு முகநூலில் சரவணன் எழுதியிருக்கார் பார்த்தீங்களா? “ பார்த்தசாரதி

”ஆமாம். அதுக்கும் பின்னணி தெரியலை. குழாயடி சண்டையில் தான் அயோக்கியத்தனம்  கொஞ்சமாச்சும் வெளிச்சத்துக்கு வரும். ஒன்னு சேர்ந்துட்டா எப்படி வெளிவரும்? இது நமக்கு நல்லதுக்கில்ல என்பது  மட்டும் கண்டிப்பா சொல்லலாம். ” சிரித்துக் கொண்டே பார்த்தசாரதி சொன்னார்.


” ஆமாம். சிவந்தி ஆதித்தன் நினைவு நாளுக்கு முன்னாடி சமரசமாயிட்டாங்க. அதையொட்டி ரெண்டு பேரும் கொடுத்த நினைவஞ்சலிஅறிக்கையும் தந்தியில் பெரிய அளவில் வந்தது.”

”அதானே வைகோ யாரை வேண்டுமானாலும் பகைப்பார்; தனக்கு அறிக்கை மூலம் அரசியல் வாழ்வளிக்கும் பத்திரிகை முதலாளிகளை ஒருபோதும் பகைச்சுக்க மாட்டார். எப்படியாச்சும் சமரசமாகிடுவார். ”

சரி விடுப்பா, பல பிரச்னைகளுக்கு வெற்று அறிக்கை விடவாவது ஒரு தலைவர் இருக்காருன்னு நினைச்சுக்குவோம். ”





 “தினகரன்’ நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனமா ? காயலாங்கடையான்னு தெரியலையே? “ கடுப்பைக் காட்டினார் பார்த்தசாரதி.

என்னாச்சு?

” ஒரு ரிப்போர்ட்டர் அங்க இங்க அலைஞ்சு, பலபேரோட போனில் பேசினாத்தான் நல்லபடியா செய்தி சேகரிக்க முடியும். இருந்த இடத்தில் டெஸ்க் ஒர்க் பண்ணா நல்லா இருக்காது. தினகரன் நிர்வாகத்தில் உயர் மட்டத்தில் இருப்பவங்களுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லை. ரிப்போர்ட்டர்களின் பெட்ரோல் அலவன்ஸ், செல்போன் பில் அலவன்ஸ் ரெண்டையும் கட் பண்ணிட்டாங்களாம். இதனால் எல்லா ரிப்போர்ட்டர்களும் எரிச்சல் ஆகியிருக்காங்க. கைக்காசு போட்டா மாறன் கம்பெனிக்கு செய்தி சேகரிக்க முடியும்? “

” ஓ. அலுவலகத்தில் இருந்து செய்தி சேகரித்தால் போதுமா..? அவங்க சீப் ரிப்போர்ட்டர் அந்தமாதிரி உட்கார்ந்த இடத்தில் இருந்து கொடுத்த செய்தியை வாங்கி வெளியிடுவதால் எல்லோரும் அப்படின்னு நினைச்சுட்டார் போலருக்கு. கம்பெனி உருப்பட்ட மாதிரிதான்.  ”

” அதுசரி ’தினகரன்’ நிறுவனத்தில் மஜிதியா கமிட்டி பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அமலுக்கு வந்துடுச்சா ? “ அன்வர்

” இல்லை. ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்குது, ஆனால் மஜிதியா சம்பள கமிட்டி பரிந்துரைகள்  முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. யாரும் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ” 

பார்த்தசாரதி அப்டேட் சொன்னார்.






ல்கி’யில் அருள்வாக்கு என்னும் பகுதி ஒவ்வொரு இதழிலும் வெளிவருது. இதில் எப்பவும் சங்கராச்சாரி வாக்கு மட்டுமே வெளிவருது. இந்த இதழைக் காசு கொடுத்து எல்லா மதத்தினரும் தான் வாங்கிப் படிக்கிறாங்க. எல்லா மதத் தலைவர்கள் வாக்கும் வெளியிடுவது தானே சரி? அதிலும் இந்து மதத்திலும் எத்தனையோ பிரிவுகள் இருக்குது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்கணும். அதை விட்டு செத்துப்போன சங்கராச்சாரிக்கு மட்டும் வாய்ப்பளிப்பது ஒருதலைபட்சமானது மட்டுமல்ல சாதிப்பாசமும் கூட? திருத்திக்குவாங்களா..? “

“நடக்கிற கதையைப் பேசுங்க. “

 “ தொலைக்காட்சி செய்திகள் எதுவும் இருக்குதா? “ அன்பரசு காட்சி ஊடகம் பக்கம் பேச்சைத் திருப்பினார்.

” இல்லாமலா? ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் இப்ப மறுபடியும் சிலரைக் காலி பண்ணிட்டாங்களாம். சிலருக்கு கல்தாவாம். அடுத்து யார் தலைக்கு கத்தின்னு அங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரும் பயந்து போய் இருக்காங்களாம்.”




தின இதழ்’ முதலாளியை கைது செய்த மாதிரி  ’புதிய தலைமுறை’ ஊடக குழுமமுதலாளி பச்சமுத்துவையும் கைது செய்ய வேண்டும் என்று ஒரு அமைப்பு போர்க்குரல் எழுப்பியிருக்குதே? பார்த்தீங்களா..?

” ஆமாம். போலியான ஆவணங்கள் மூலம் தனது கல்லூரிக்கு அனுமதி வாங்கிட்டாருன்னு குற்றச்சாட்டு எழுப்பியிருக்காங்க. நிறைய செய்தியாளர்களுக்கும் இது தொடர்பா மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க. “

” ஏரியை ஆக்கிரமிச்சார். அதற்கு மேல் போலியான ஆவணங்கள் மூலம் இவர்களே அனுமதியா? இதை எதிர்த்து டிவியில் தோன்றும் அரசியல் விமர்சகர்கள் ஒருத்தரும் பேச மாட்டாங்க என்பது தான் நிஜம். ” அன்பரசு


பகவான் சிங்
ரி விடுங்க. நியூஸ் 7 தொலைக்காட்சியிலிருந்து ராஜேஷ் சுந்தரம் விலகிட்டார். அதே சமயம் செய்தி ஆசிரியரா பகவான் சிங் பொறுப்பேற்று விட்டார் போல.

”அது புதிய செய்தி இல்லை. அது பழைய செய்தி.அவர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தது அடுத்த செய்தி.அதையும் பார்த்தேன். ”



துவும் கொஞ்சம் பழைய செய்தி தான். சன்டிவியின் அவதூறுச் செய்திக்கு எதிரா வழக்குத் தொட‌ர்ந்து நடிகை சுகன்யா வெற்றி பெற்றிருக்கார் பார்த்தீர்களா?

ஆமாம். எல்லோரும் அமைதியாய் சகித்துக்கொண்டு இருக்கும் பொழுது போராடி வெற்றிபெற்ற சுகன்யாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திடுவோம். 








**


ந்தி டிவி க்காரங்க தங்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும் மக்களை மடையர்களாக நினைப்பது இன்னும் நின்ன பாடில்லை. அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்திற்கான அங்கீகாரம் ரத்துன்னு சொல்றதுக்குப் பதிலா, மாணவர் வட்ட அங்கீகாரம் ரத்துன்னுதான் சொல்றாங்களாம்.  அதைப் போல ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குன்னு இவங்க வாயில ஒரு போதும் வரமாட்டேங்குது. சொத்து வழக்குன்னு தான் சொல்றாங்க. தந்தி செய்தித்தாளில் வருவதற்கு மாறுபட்டு தந்தி டிவியில் வருது. ” பார்த்தசாரதி




” இது முதலாளிக்கு தெரிஞ்சு நடக்குதா? அல்லது பாண்டேவின் தனிப்பட்ட கைவரிசையான்னு தெரியலை. தந்தி டிவி பார்க்குற கொஞ்ச நஞ்ச பேரையும் வேற சேனல் பக்கம் ரிமோட்டை மாற்ற வைக்க சாதிவெறி பாண்டே கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பார்க்குறார் போல. ” அன்வர்




ன்னொரு செய்தி சொல்லணும். ’தினமணி’ வைத்தியநாதன் பற்றிய நம் பதிவில் இன்னொரு விவரத்தையும் சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ” ஞாபக அடுக்கிலிருந்து செய்தியை ரவிக்குமார் எடுத்து வைத்தார்.

”எதைப்பத்தி? ” பார்த்தசாரதி

அதாவது வைத்தியநாதன் ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி கருணாநிதிக்கும் ஜால்ரா போடுறவர். இது யாருக்கும் தெரியலை.

அப்படியா? பார்த்தசாரதி

ஆமாம். கருணாநிதி ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடந்தது இல்லையா? அப்ப கருணாநிதி இவரை வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் கமிட்டியில் ஒரு உறுப்பினராக நியமிக்கிறார்.

நியமனம் எப்படி நடந்தது தெரியுமா? கருணாநிதி இவரை நியமனம் செய்யுறார். அதை மறுப்பது போல வைத்தியநாதன் போங்கு ஆடுகிறார். திரும்ப கருணாநிதி வலியுறுத்த டக்கென்று அதனை ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு இவர் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் கருணாநிதியே கூச்சப்படும் அளவுக்கு புகழ்கிறார். 
(இது குறித்த கருணாநிதியின் அறிக்கை நவம்பர் 22, 2009 தேதியிட்ட முரசொலியில் இருக்கிறது)

” இந்த நியமனத்தால் வைத்திக்கு என்ன பலன்?”

உடனடி பலன் இல்லை தான். ஆனால் அங்கிருந்து  மாநாட்டுக்கு வருபவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு காலம்காலமாக அதைப் பேணிக்காத்து ஏதாவது ஒருவழியில் பயனடையவும் செய்யலாம் என்பது அறிந்தவர்களுக்குத் தெரியும்.

ம்ம். அலங்காரப் பதவி எப்ப காரியம் சாதிக்கும் பதவியாக மாறுமோ? யாருக்குத் தெரியும். அதற்கே மயிர்க்கூச்செறியும் வாழ்த்துப்பாவா?”

 ரி ’தி இந்து’ தமிழ் நாளிதழ் படிக்கிறீங்களா? ”அன்பரசு

”படிக்காமல் எப்படி? விற்பனை மிகவும் குறைவு ஆகிட்டதுன்னு தகவல். ’தினமணி’ தனது வாசகர்களை சற்று இழந்தாலும் விற்பனையைத் தக்க வைத்து விட்டது. ’தினமலர்’ மாநிலத்தில் ஆளுங்கட்சி எதிர்ப்பு நிலை எடுத்து விட்டதால் தன்னுடைய பெரும்பகுதியான நடுத்தட்டு, உயர்தட்டு நடுத்தர வாசகர்களைத் தக்க வைத்து விட்டது. அதனால் அவர்களுடனும் போட்டி போட முடியவில்லை.

அதுபோக  ’தி இந்து’ நாளிதழுக்கு விளம்பரங்களும் போதிய அளவில் இல்லை. அதனால் வேறுவழியில்லாமல் அரசு விளம்பரங்களைத் தான் வழக்கம் போல் எதிர்பார்க்கும் நிலை. ஆகவே ஆளுங்கட்சி புகழ்ச் செய்தி போடுவதில் ’தினத்தந்தி’க்கு போட்டி போடுறாங்க. “ அன்வர் முடித்தார்.

”வருமானக் கணக்கெல்லாம் சரி தான். ஆனால் ஜால்ராவைக்கூட ஒழுங்கா போடலையே? “

”அதுக்கு கஷ்டப்படணும் சார்.” அன்வர் தொடர்ந்தார்.







தொடரும் 4 ஆண்டு சாதனைப் பயணம்னு பக்கம் பக்கமா எழுதுறாங்க. அதை எத்தனையோ வடிவங்களில் வித்தியாசமா எழுதி படிப்பவர்களிடம் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் தமிழக அரசு பத்திரிகையான ’தமிழரசு’ பத்திரிகையில் வந்ததை அப்படியே தொகுத்து வெளியிடுறாங்க. சினிமா தியேட்டரில் ஒளிபரப்பப் படும் அரசின் சாதனை விளம்பரம் பார்த்த மாதிரி இருக்குது. இதைச் செய்றதுக்கு டைப்பிஸ்டும், லே அவுட் ஆர்ட்டிஸ்டும் போதுமே? எடிட்டோரியலில் இருப்பவர்களுக்கு சொந்த மூளை இல்லையா?  குறைந்த பட்சம் யாரிடமாவது கருத்து வாங்கிப் போட்டாவது பக்கங்களை நிரப்பியிருக்கலாம்.



பத்திரிகையில் வெளிவந்த இந்த செய்திக் கட்டுரைகளை(!) ’தி இந்து’ இணையத்தில் இருந்து திடீரென்று நீக்கிட்டாங்க. இதைப் படிச்சுட்டு அச்சடிச்சு வெளிவராத பேப்பர்காரன்கூட சிரிப்பான்னு நினைச்சுட்டாங்க போல.



அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 10.40 லட்சம் பேருக்கு சிகிச்சை


4 ஆண்டுகளில் 4572 புதிய பேருந்துகள் இயக்கம்

2165789 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

உண்மையாய், நேர்மையாய், நடுநிலையாய்  செய்தி வெளியிடுவார்கள் என நம்பிக் காசு கொடுத்துப் படிக்கும் வாசகனை பத்திரிகை நிறுவனம் ஏமாத்துது. தனிப்பட்ட லாபங்களுக்காக ஆட்சியில் இருப்பவர்களுக்கு கூஜா தூக்குறாங்க. அதைப்போல நிறுவனத்திடம் வேலை பார்க்கும் ’அறிவிற்சிறந்த’ பத்திரிகையாளர்களோ பல்லாயிரக்கணக்கில் சம்பளத்தை முதலாளியிடம் வாங்கிட்டு, மூளைக்கு சிறிதும் வேலை கொடுக்காமல் ’தமிழரசு’ வைப் பார்த்து ’ஈயடிச்சான் காப்பி’ அடிக்குறாங்க. சம்பளம் கொடுக்கும் முதலாளியையும், காசு கொடுத்துப்படிக்கும் வாசகனையும் ஒட்டுமொத்தமா முட்டாளாக்குறாங்க.

ஆனா ஒன்னு ’தி இந்து’ வருவதால் யாருக்கு உபயோகமோ இல்லையோ, நடுப்பக்க கட்டுரையாளர்கள் சிலருக்கும், குறிப்பிட்ட சில பதிப்பக முதலாளிகளுக்கும் நல்ல உபயோகமா இருக்குதுங்கிறதையும் சொல்லணும்.

சபை கலையும்முன் எல்லோருக்கும் தெரிந்த பழைய சுவாரஸ்யமான செய்தி ஒன்னு சொல்றேன். ட்டு இடத்தைக் காலி பண்ணுவோம்” ரவிக்குமார் பீடிகையுடன் ஆரம்பித்தார்.

று வருடங்களுக்கு முன் இருக்கும். கல்லூரி சாலையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் துறை தொடர்புடைய ஓரிரு முன்னணி தமிழ் நாளிதழ் நிருபர்கள் குழுமியிருந்தார்கள். துறை தொடர்புடைய முக்கிய அறிவிப்பு சிறிது நேரத்துக்கு முன்பு வெளியாகியிருந்தது. அது பற்றிய விளக்கங்களைப் பெற அமைச்சருக்கு எந்த நிருபர் போனில் அழைத்தாலும் அவர் எடுக்கவில்லை.   அமைச்சர் யாரென்றால் தந்தை இறந்த காரணத்தால் அரசியலுக்கு வந்தவர். அமைச்சரவைக்கு புதிய முகம் என்றாலும் தனது திறமையின் காரணமாய் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு சிறிது காலத்திலேயே  தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார். நிருபர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர் என்றாலும் சில நேரங்களில் இப்படிச் செய்வார்.

அப்பொழுது ‘தினமணி’ தவிர அனைத்து நாளிதழ்களும் அரசு ஆதரவு நிலையில் தான் இருந்தன. நிருபர்களுக்கு சற்று எரிச்சல். உடனே தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.  அண்ணா சாலை பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபர் அதே வளாகத்தில் இன்னொரு பகுதியில் இருந்தார்.  அவரிடம் சென்று அரசின் அறிவிப்பு குறித்து எதுவும் தெரியுமா ? என்று கேட்டார்கள். தெரியாது என்று சொன்னவர், மினிஸ்டர்கிட்ட கேட்டுடுவோமே என சிரித்த முகத்துடன் தொலைபேசியில் அழைத்தார்.

பெண் என்றால் அமைச்சர் இரங்க மாட்டாரா என்ன?

அமைச்சர் தொலைபேசியை உடனடியாக அட்டண்ட் செய்தார். ஆண் நிருபர்கள் முகம் இருட்டுக்குச் சென்றது. 

நிருபரின் புன்சிரிப்புடன் கூடிய கேள்விக்கு உரிய விளக்கத்தை கூடுதல் நேரம் செல்வழித்துச் சொன்னார். சிரிப்புடன் போனை வைத்த நிருபர், அனைவருடனும்  கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டு கிளம்பினார்.

காரியம் கைகூடினாலும் நிருபர்களுக்கு கொஞ்சம் எரிச்சல்தான். கோடிக்கணக்கான மக்களிடம் செய்தியைச் சேர்க்கும் தமிழ்ப் பத்திரிகைகளின் மதிப்பு இவ்வளவுதானா என்னும் எண்ணமும், ஆண் நிருபர்களின் செல்வாக்கு லட்சணம் தெரிந்ததாலும் கோபம் அவர்களின் முகத்தில் தெரிந்தது.

ஓரிரு நிமிடங்கள் கழிந்த நிலையில் தந்தி நிருபர் அமைச்சரைப் போனில் திரும்பவும் அழைத்தார். அமைச்சருக்கு ஏதோ பொறி தட்டியதோ என்னவோ அல்லது என்ன காரணமோ தெரியவில்லை, இந்த முறை தொலைபேசியை அட்டண்ட் செய்தார். எடுத்தவுடன் தந்தி நிருபர் விஷயத்துக்கு வந்தார்.

“ என்ன சார் கொமரிப் பிள்ளைக போன் பண்ணா எடுத்து அக்கறையாப் பதில் சொல்றீங்க. நாங்க போன் பண்ணா கண்டுக்க மாட்டிக்கிறீங்க. இப்படி நீங்க பண்ணினா நாங்க எப்படி பொழப்ப  பாக்குறது? நாங்களும் கஞ்சி குடிக்கணுமில்ல. வயித்துப்பாட்டுக்கு ஊர்ல போயி வெள்ளாமையா பாக்க முடியும்? கொஞ்சம் கருணை காட்டுங்க சார்…! என எள்ளலும் சற்று எரிச்சலுடனும் பேசினார். 

அமைச்சர் அவர் டிரேட் மார்க் சிரிப்புடன் சமாளித்தார். விளக்கங்களை திரும்பவும் அளித்து உரையாடலை இயல்பாக மாற்றி சிநேகத்துடன் முடிவுக்கு கொண்டுவந்தார்.  

சபை கலைந்தது