Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Sunday, 14 June 2015

ஈயடிச்சான் காப்பி அடிக்கும் ’தி இந்து’


சென்னை ஜி.என்.செட்டி சாலை பெனின்சுலா ஓட்டல் முன்புறம் அமைந்துள்ள தேநீர்க்கடை. ஊடகவியலாளர்கள் அன்பரசு, பார்த்தசாரதி, ரவிக்குமார், அன்வர் ஆகியோர் சந்திப்பு.

ஆளுக்கொரு தேநீர் சொல்லி விட்டு உரையாடலைத் தொடங்கினர்.

” மீடியாவில் என்னப்பா நடக்குது?”  ஆரம்பித்து வைத்தார் அன்பரசு.

” நம்ம அடையாளம்’ புதுசா வந்திருக்குதாமே? “ஆர்வத்துடன் கேட்டார் ரவிக்குமார்.

” ஆமா. தேர்தல் வருதுல்லே. திருவிழாக் கடை போல புதுசு புதுசா பத்திரிகைகள் வரத்தான் செய்யும். பத்திரிகை தேர்தலுக்குப் பிறகும் வருமாங்கிறதுதான் கேள்வி“ சாரதி ஊடக  நடப்பை உரித்து வைத்தார்.

”கோசல்ராம் தொழிலாளியாஇருந்து ’எப்படியோ’ முதலாளியா ஆகிட்டார். அல்லது இதன் ’பின்னணி’ யார் என்றும் தெரியலை. பின்னணி யாரா இருந்தாலும் ’நோக்கம்’ ஒன்னு தான். அவர் ஊழியரா வேலை பார்த்த ’குமுதம் ரிப்போர்ட்டரி’லேயே இதுக்கு விளம்பரம் வந்தது. ”

” அது சரி. பத்திரிகை எப்படி இருக்கு? அதைச் சொல்லுங்க. ” ரவிக்குமார் ரிசல்டுக்கு காத்திருந்தார்.

”கதிர்வேல் தான் முதன்மை ஆசிரியர்.  செய்திகளிலும் சரி பக்க அளவுகளிலும் சரி ’கனம்’ இல்லை.





இதில் கூட அட்டையைப் பாருங்க. யார் பேட்டின்னு சொல்லாமல் அவர் போட்டாவை மட்டும் வைத்திருக்காங்க. தமிழிசை சவுந்தர்ராஜன் முகம் நம்மூர்ல எத்தனை பேருக்குத் தெரியும்? அடித்துச் சொல்கிறார் தமிழிசை ன்னு உள்ளே சொல்லியதை வெளியேவும் வைத்திருக்கலாம்.

அதே சமயம் ’டார்க் ரூம்’ என்னும் உரையாடல் பகுதி வருது. அதில் பங்கேற்கும் சூனா கானா இருவரும் டேய், வாடா,போடா என தரக்குறைவாகவே பேசுறாங்க. திரைப்பட காமெடி, டீக்கடை உரையாடலுக்கு வேண்டுமானால் இது சரியா இருக்கலாம். ஆனால் பத்திரிகைக்கு இப்படிப்பட்ட தரக்குறைவான உரையாடல்  வடிவம் சரிவராது. சரி. நாம் என்ன செய்யுறது? 

ஏன் இப்படிப்பட்டதை அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை. புதிய பத்திரிகையை இதுக்கும் மேல இப்ப விமர்சனம் செய்வதை விட  கொஞ்ச காலம் கழித்து விமர்சனம் செய்வது தான் சரியானதா இருக்கும். ” 

பார்த்தசாரதி தனது விமர்சனத்தைப் பதிவு செய்தார்.





” புது முதலாளியைப் பத்தி பேசினோம். ரெண்டு பழைய பெரு முதலாளிகள் இப்ப ஒன்னு கூடிட்டாங்க தெரியுமா? “ அன்பரசு புதுச் சங்கதியை எடுத்து விட்டார்.

” அப்படியா முதலாளிகள் எல்லாம் எப்ப அடிச்சுக்குவாங்க? எதுக்கு அடிச்சுக்குவாங்க? எப்ப கூடிப்பாங்கன்னு யாருக்குத் தெரியும்? அது வழக்கமா நடக்கிறது தானே, யார் அவங்க? “

” வேற யாரு? மாறன் கம்பெனியும் ராமசுப்பைய்யர் கம்பெனியும் தான்.”

” ஆரியமும், திராவிடமும் கைகோர்த்துச்சா? ” அன்பரசு அரசியலைக் கொண்டு வந்தார்.

” ஆமாம். பிழைப்புக்கு ஏது கொள்கை மாறுபாடு? முதல் பக்கத்தில் நாய்ச் சண்டை போட்டவங்க இப்ப கூடிக்கும்மாளம் போடுறாங்க. ’தொல்காப்பியர்’ விருதை ’தினமலர்’ ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி வாங்கியதை ’தினகரன்’ வெளியிட்டுச்சு. 

அதே சமயம் மாறன்கள் வழக்கு விஷயத்தை ’தினமலர்’ கூடிய மட்டும் அடக்கி வாசிக்குது. என்ன மாயமோ தெரியலை.

"அதே போல 'நக்கீரனும்' இப்ப 'சன்' குழுமம் கூட நெருக்கமாக முடிவு பண்ணிட்டாங்க‌  போல..? 

முன்பு கோபால்- தயாநிதிமாறன் ரெண்டு பேருக்கும் ஒரு பஞ்சாயத்து இருந்தது. அதே போல ஆ.ராசாவை ஸ்பெக்ட்ரம் ஊழலில் காட்டிக் கொடுத்த கோபம் கூட்டாளி காமராஜூக்கு இருந்தது. அதனால் சன் குழுமத்துக்கு எதிரா 'தினமலர்', 'தினமணி'யை விட அதிக எதிர்ப்பா 'நக்கீரன்' இருந்தது. இப்ப என்னாச்சோ தெரியலை. தொடர்ச்சியா ஆதரவு செய்திகள் வருது.





சன் குழுமம் கைமாறுதுன்னு செய்தி வந்தப்ப அப்படி இல்லைன்னு ஒரு மறுப்பு பதிவு நக்கீரனில் வந்துச்சு. சன் தொலைக்காட்சி அலைவரிசை இப்ப நெருக்கடியில் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு ஆதரவுச் செய்திப் பதிவு. 'நமது நிருபர்' பெயரில்."
தேர்தல் வரும் நேரத்தில் கூட்டாளிகள் எல்லோரும் கரம் கோர்க்க நினைச்சுருப்பாருங்க. 


பூவுலகின் நண்பர்கள்,என்.ஜி.ஓ.


அதே மாதிரி ’புதிய தலைமுறை’ தொலைக்காட்சியும் மாறனும் கேபிள் விஷயத்தில் ராசியாய்ட்டாங்கன்னு முகநூலில் சரவணன் எழுதியிருக்கார் பார்த்தீங்களா? “ பார்த்தசாரதி

”ஆமாம். அதுக்கும் பின்னணி தெரியலை. குழாயடி சண்டையில் தான் அயோக்கியத்தனம்  கொஞ்சமாச்சும் வெளிச்சத்துக்கு வரும். ஒன்னு சேர்ந்துட்டா எப்படி வெளிவரும்? இது நமக்கு நல்லதுக்கில்ல என்பது  மட்டும் கண்டிப்பா சொல்லலாம். ” சிரித்துக் கொண்டே பார்த்தசாரதி சொன்னார்.


” ஆமாம். சிவந்தி ஆதித்தன் நினைவு நாளுக்கு முன்னாடி சமரசமாயிட்டாங்க. அதையொட்டி ரெண்டு பேரும் கொடுத்த நினைவஞ்சலிஅறிக்கையும் தந்தியில் பெரிய அளவில் வந்தது.”

”அதானே வைகோ யாரை வேண்டுமானாலும் பகைப்பார்; தனக்கு அறிக்கை மூலம் அரசியல் வாழ்வளிக்கும் பத்திரிகை முதலாளிகளை ஒருபோதும் பகைச்சுக்க மாட்டார். எப்படியாச்சும் சமரசமாகிடுவார். ”

” சரி விடுப்பா, பல பிரச்னைகளுக்கு வெற்று அறிக்கை விடவாவது ஒரு தலைவர் இருக்காருன்னு நினைச்சுக்குவோம். ”





 “தினகரன்’ நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனமா ? காயலாங்கடையான்னு தெரியலையே? “ கடுப்பைக் காட்டினார் பார்த்தசாரதி.

என்னாச்சு?

” ஒரு ரிப்போர்ட்டர் அங்க இங்க அலைஞ்சு, பலபேரோட போனில் பேசினாத்தான் நல்லபடியா செய்தி சேகரிக்க முடியும். இருந்த இடத்தில் டெஸ்க் ஒர்க் பண்ணா நல்லா இருக்காது. தினகரன் நிர்வாகத்தில் உயர் மட்டத்தில் இருப்பவங்களுக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லை. ரிப்போர்ட்டர்களின் பெட்ரோல் அலவன்ஸ், செல்போன் பில் அலவன்ஸ் ரெண்டையும் கட் பண்ணிட்டாங்களாம். இதனால் எல்லா ரிப்போர்ட்டர்களும் எரிச்சல் ஆகியிருக்காங்க. கைக்காசு போட்டா மாறன் கம்பெனிக்கு செய்தி சேகரிக்க முடியும்? “

” ஓ. அலுவலகத்தில் இருந்து செய்தி சேகரித்தால் போதுமா..? அவங்க சீப் ரிப்போர்ட்டர் அந்தமாதிரி உட்கார்ந்த இடத்தில் இருந்து கொடுத்த செய்தியை வாங்கி வெளியிடுவதால் எல்லோரும் அப்படின்னு நினைச்சுட்டார் போலருக்கு. கம்பெனி உருப்பட்ட மாதிரிதான்.  ”

” அதுசரி ’தினகரன்’ நிறுவனத்தில் மஜிதியா கமிட்டி பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அமலுக்கு வந்துடுச்சா ? “ அன்வர்

” இல்லை. ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்குது, ஆனால் மஜிதியா சம்பள கமிட்டி பரிந்துரைகள்  முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. யாரும் இதை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. ” 

பார்த்தசாரதி அப்டேட் சொன்னார்.






’கல்கி’யில் அருள்வாக்கு என்னும் பகுதி ஒவ்வொரு இதழிலும் வெளிவருது. இதில் எப்பவும் சங்கராச்சாரி வாக்கு மட்டுமே வெளிவருது. இந்த இதழைக் காசு கொடுத்து எல்லா மதத்தினரும் தான் வாங்கிப் படிக்கிறாங்க. எல்லா மதத் தலைவர்கள் வாக்கும் வெளியிடுவது தானே சரி? அதிலும் இந்து மதத்திலும் எத்தனையோ பிரிவுகள் இருக்குது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்கணும். அதை விட்டு செத்துப்போன சங்கராச்சாரிக்கு மட்டும் வாய்ப்பளிப்பது ஒருதலைபட்சமானது மட்டுமல்ல சாதிப்பாசமும் கூட? திருத்திக்குவாங்களா..? “

“நடக்கிற கதையைப் பேசுங்க. “

 “ தொலைக்காட்சி செய்திகள் எதுவும் இருக்குதா? “ அன்பரசு காட்சி ஊடகம் பக்கம் பேச்சைத் திருப்பினார்.

” இல்லாமலா? ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் இப்ப மறுபடியும் சிலரைக் காலி பண்ணிட்டாங்களாம். சிலருக்கு கல்தாவாம். அடுத்து யார் தலைக்கு கத்தின்னு அங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரும் பயந்து போய் இருக்காங்களாம்.”




’தின இதழ்’ முதலாளியை கைது செய்த மாதிரி  ’புதிய தலைமுறை’ ஊடக குழுமமுதலாளி பச்சமுத்துவையும் கைது செய்ய வேண்டும் என்று ஒரு அமைப்பு போர்க்குரல் எழுப்பியிருக்குதே? பார்த்தீங்களா..?

” ஆமாம். போலியான ஆவணங்கள் மூலம் தனது கல்லூரிக்கு அனுமதி வாங்கிட்டாருன்னு குற்றச்சாட்டு எழுப்பியிருக்காங்க. நிறைய செய்தியாளர்களுக்கும் இது தொடர்பா மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க. “

” ஏரியை ஆக்கிரமிச்சார். அதற்கு மேல் போலியான ஆவணங்கள் மூலம் இவர்களே அனுமதியா? இதை எதிர்த்து டிவியில் தோன்றும் அரசியல் விமர்சகர்கள் ஒருத்தரும் பேச மாட்டாங்க என்பது தான் நிஜம். ” அன்பரசு


பகவான் சிங்
”சரி விடுங்க. நியூஸ் 7 தொலைக்காட்சியிலிருந்து ராஜேஷ் சுந்தரம் விலகிட்டார். அதே சமயம் செய்தி ஆசிரியரா பகவான் சிங் பொறுப்பேற்று விட்டார் போல. ”

”அது புதிய செய்தி இல்லை. அது பழைய செய்தி.அவர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தது அடுத்த செய்தி.அதையும் பார்த்தேன். ”



இதுவும் கொஞ்சம் பழைய செய்தி தான். சன்டிவியின் அவதூறுச் செய்திக்கு எதிரா வழக்குத் தொட‌ர்ந்து நடிகை சுகன்யா வெற்றி பெற்றிருக்கார் பார்த்தீர்களா?

ஆமாம். எல்லோரும் அமைதியாய் சகித்துக்கொண்டு இருக்கும் பொழுது போராடி வெற்றிபெற்ற சுகன்யாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திடுவோம். 








**


”தந்தி டிவி க்காரங்க தங்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும் மக்களை மடையர்களாக நினைப்பது இன்னும் நின்ன பாடில்லை. அம்பேத்கர்- பெரியார் மாணவர் வட்டத்திற்கான அங்கீகாரம் ரத்துன்னு சொல்றதுக்குப் பதிலா, மாணவர் வட்ட அங்கீகாரம் ரத்துன்னுதான் சொல்றாங்களாம்.  அதைப் போல ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குன்னு இவங்க வாயில ஒரு போதும் வரமாட்டேங்குது. சொத்து வழக்குன்னு தான் சொல்றாங்க. தந்தி செய்தித்தாளில் வருவதற்கு மாறுபட்டு தந்தி டிவியில் வருது. ” பார்த்தசாரதி




” இது முதலாளிக்கு தெரிஞ்சு நடக்குதா? அல்லது பாண்டேவின் தனிப்பட்ட கைவரிசையான்னு தெரியலை. தந்தி டிவி பார்க்குற கொஞ்ச நஞ்ச பேரையும் வேற சேனல் பக்கம் ரிமோட்டை மாற்ற வைக்க சாதிவெறி பாண்டே கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பார்க்குறார் போல. ” அன்வர்




”இன்னொரு செய்தி சொல்லணும். ’தினமணி’ வைத்தியநாதன் பற்றிய நம் பதிவில் இன்னொரு விவரத்தையும் சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ” ஞாபக அடுக்கிலிருந்து செய்தியை ரவிக்குமார் எடுத்து வைத்தார்.

”எதைப்பத்தி? ” பார்த்தசாரதி

அதாவது வைத்தியநாதன் ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி கருணாநிதிக்கும் ஜால்ரா போடுறவர். இது யாருக்கும் தெரியலை.

அப்படியா? பார்த்தசாரதி

ஆமாம். கருணாநிதி ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடந்தது இல்லையா? அப்ப கருணாநிதி இவரை வெளிநாடுகளில் இருந்து வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் கமிட்டியில் ஒரு உறுப்பினராக நியமிக்கிறார்.

நியமனம் எப்படி நடந்தது தெரியுமா? கருணாநிதி இவரை நியமனம் செய்யுறார். அதை மறுப்பது போல வைத்தியநாதன் போங்கு ஆடுகிறார். திரும்ப கருணாநிதி வலியுறுத்த டக்கென்று அதனை ஏற்றுக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு இவர் நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் கருணாநிதியே கூச்சப்படும் அளவுக்கு புகழ்கிறார். 
(இது குறித்த கருணாநிதியின் அறிக்கை நவம்பர் 22, 2009 தேதியிட்ட முரசொலியில் இருக்கிறது)

” இந்த நியமனத்தால் வைத்திக்கு என்ன பலன்?”

உடனடி பலன் இல்லை தான். ஆனால் அங்கிருந்து  மாநாட்டுக்கு வருபவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு காலம்காலமாக அதைப் பேணிக்காத்து ஏதாவது ஒருவழியில் பயனடையவும் செய்யலாம் என்பது அறிந்தவர்களுக்குத் தெரியும்.

ம்ம். அலங்காரப் பதவி எப்ப காரியம் சாதிக்கும் பதவியாக மாறுமோ? யாருக்குத் தெரியும். அதற்கே மயிர்க்கூச்செறியும் வாழ்த்துப்பாவா?”

 சரி ’தி இந்து’ தமிழ் நாளிதழ் படிக்கிறீங்களா? ”அன்பரசு

”படிக்காமல் எப்படி? விற்பனை மிகவும் குறைவு ஆகிட்டதுன்னு தகவல். ’தினமணி’ தனது வாசகர்களை சற்று இழந்தாலும் விற்பனையைத் தக்க வைத்து விட்டது. ’தினமலர்’ மாநிலத்தில் ஆளுங்கட்சி எதிர்ப்பு நிலை எடுத்து விட்டதால் தன்னுடைய பெரும்பகுதியான நடுத்தட்டு, உயர்தட்டு நடுத்தர வாசகர்களைத் தக்க வைத்து விட்டது. அதனால் அவர்களுடனும் போட்டி போட முடியவில்லை.

அதுபோக  ’தி இந்து’ நாளிதழுக்கு விளம்பரங்களும் போதிய அளவில் இல்லை. அதனால் வேறுவழியில்லாமல் அரசு விளம்பரங்களைத் தான் வழக்கம் போல் எதிர்பார்க்கும் நிலை. ஆகவே ஆளுங்கட்சி புகழ்ச் செய்தி போடுவதில் ’தினத்தந்தி’க்கு போட்டி போடுறாங்க. “ அன்வர் முடித்தார்.

”வருமானக் கணக்கெல்லாம் சரி தான். ஆனால் ஜால்ராவைக்கூட ஒழுங்கா போடலையே? “

”அதுக்கு கஷ்டப்படணும் சார்.” அன்வர் தொடர்ந்தார்.







தொடரும் 4 ஆண்டு சாதனைப் பயணம்னு பக்கம் பக்கமா எழுதுறாங்க. அதை எத்தனையோ வடிவங்களில் வித்தியாசமா எழுதி படிப்பவர்களிடம் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் தமிழக அரசு பத்திரிகையான ’தமிழரசு’ பத்திரிகையில் வந்ததை அப்படியே தொகுத்து வெளியிடுறாங்க. சினிமா தியேட்டரில் ஒளிபரப்பப் படும் அரசின் சாதனை விளம்பரம் பார்த்த மாதிரி இருக்குது. இதைச் செய்றதுக்கு டைப்பிஸ்டும், லே அவுட் ஆர்ட்டிஸ்டும் போதுமே? எடிட்டோரியலில் இருப்பவர்களுக்கு சொந்த மூளை இல்லையா?  குறைந்த பட்சம் யாரிடமாவது கருத்து வாங்கிப் போட்டாவது பக்கங்களை நிரப்பியிருக்கலாம்.



பத்திரிகையில் வெளிவந்த இந்த செய்திக் கட்டுரைகளை(!) ’தி இந்து’ இணையத்தில் இருந்து திடீரென்று நீக்கிட்டாங்க. இதைப் படிச்சுட்டு அச்சடிச்சு வெளிவராத பேப்பர்காரன்கூட சிரிப்பான்னு நினைச்சுட்டாங்க போல.



அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 10.40 லட்சம் பேருக்கு சிகிச்சை


4 ஆண்டுகளில் 4572 புதிய பேருந்துகள் இயக்கம்

2165789 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

உண்மையாய், நேர்மையாய், நடுநிலையாய்  செய்தி வெளியிடுவார்கள் என நம்பிக் காசு கொடுத்துப் படிக்கும் வாசகனை பத்திரிகை நிறுவனம் ஏமாத்துது. தனிப்பட்ட லாபங்களுக்காக ஆட்சியில் இருப்பவர்களுக்கு கூஜா தூக்குறாங்க. அதைப்போல நிறுவனத்திடம் வேலை பார்க்கும் ’அறிவிற்சிறந்த’ பத்திரிகையாளர்களோ பல்லாயிரக்கணக்கில் சம்பளத்தை முதலாளியிடம் வாங்கிட்டு, மூளைக்கு சிறிதும் வேலை கொடுக்காமல் ’தமிழரசு’ வைப் பார்த்து ’ஈயடிச்சான் காப்பி’ அடிக்குறாங்க. சம்பளம் கொடுக்கும் முதலாளியையும், காசு கொடுத்துப்படிக்கும் வாசகனையும் ஒட்டுமொத்தமா முட்டாளாக்குறாங்க.

ஆனா ஒன்னு ’தி இந்து’ வருவதால் யாருக்கு உபயோகமோ இல்லையோ, நடுப்பக்க கட்டுரையாளர்கள் சிலருக்கும், குறிப்பிட்ட சில பதிப்பக முதலாளிகளுக்கும் நல்ல உபயோகமா இருக்குதுங்கிறதையும் சொல்லணும்.

”சபை கலையும்முன் எல்லோருக்கும் தெரிந்த பழைய சுவாரஸ்யமான செய்தி ஒன்னு சொல்றேன். ட்டு இடத்தைக் காலி பண்ணுவோம்” ரவிக்குமார் பீடிகையுடன் ஆரம்பித்தார்.

ஆறு வருடங்களுக்கு முன் இருக்கும். கல்லூரி சாலையில் இருக்கும் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் துறை தொடர்புடைய ஓரிரு முன்னணி தமிழ் நாளிதழ் நிருபர்கள் குழுமியிருந்தார்கள். துறை தொடர்புடைய முக்கிய அறிவிப்பு சிறிது நேரத்துக்கு முன்பு வெளியாகியிருந்தது. அது பற்றிய விளக்கங்களைப் பெற அமைச்சருக்கு எந்த நிருபர் போனில் அழைத்தாலும் அவர் எடுக்கவில்லை.   அமைச்சர் யாரென்றால் தந்தை இறந்த காரணத்தால் அரசியலுக்கு வந்தவர். அமைச்சரவைக்கு புதிய முகம் என்றாலும் தனது திறமையின் காரணமாய் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு சிறிது காலத்திலேயே  தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார். நிருபர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர் என்றாலும் சில நேரங்களில் இப்படிச் செய்வார்.

அப்பொழுது ‘தினமணி’ தவிர அனைத்து நாளிதழ்களும் அரசு ஆதரவு நிலையில் தான் இருந்தன. நிருபர்களுக்கு சற்று எரிச்சல். உடனே தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.  அண்ணா சாலை பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபர் அதே வளாகத்தில் இன்னொரு பகுதியில் இருந்தார்.  அவரிடம் சென்று அரசின் அறிவிப்பு குறித்து எதுவும் தெரியுமா ? என்று கேட்டார்கள். தெரியாது என்று சொன்னவர், மினிஸ்டர்கிட்ட கேட்டுடுவோமே என சிரித்த முகத்துடன் தொலைபேசியில் அழைத்தார்.

பெண் என்றால் அமைச்சர் இரங்க மாட்டாரா என்ன?

அமைச்சர் தொலைபேசியை உடனடியாக அட்டண்ட் செய்தார். ஆண் நிருபர்கள் முகம் இருட்டுக்குச் சென்றது. 

நிருபரின் புன்சிரிப்புடன் கூடிய கேள்விக்கு உரிய விளக்கத்தை கூடுதல் நேரம் செல்வழித்துச் சொன்னார். சிரிப்புடன் போனை வைத்த நிருபர், அனைவருடனும்  கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டு கிளம்பினார்.

காரியம் கைகூடினாலும் நிருபர்களுக்கு கொஞ்சம் எரிச்சல்தான். கோடிக்கணக்கான மக்களிடம் செய்தியைச் சேர்க்கும் தமிழ்ப் பத்திரிகைகளின் மதிப்பு இவ்வளவுதானா என்னும் எண்ணமும், ஆண் நிருபர்களின் செல்வாக்கு லட்சணம் தெரிந்ததாலும் கோபம் அவர்களின் முகத்தில் தெரிந்தது.

ஓரிரு நிமிடங்கள் கழிந்த நிலையில் தந்தி நிருபர் அமைச்சரைப் போனில் திரும்பவும் அழைத்தார். அமைச்சருக்கு ஏதோ பொறி தட்டியதோ என்னவோ அல்லது என்ன காரணமோ தெரியவில்லை, இந்த முறை தொலைபேசியை அட்டண்ட் செய்தார். எடுத்தவுடன் தந்தி நிருபர் விஷயத்துக்கு வந்தார்.

“ என்ன சார் கொமரிப் பிள்ளைக போன் பண்ணா எடுத்து அக்கறையாப் பதில் சொல்றீங்க. நாங்க போன் பண்ணா கண்டுக்க மாட்டிக்கிறீங்க. இப்படி நீங்க பண்ணினா நாங்க எப்படி பொழப்ப  பாக்குறது? நாங்களும் கஞ்சி குடிக்கணுமில்ல. வயித்துப்பாட்டுக்கு ஊர்ல போயி வெள்ளாமையா பாக்க முடியும்? கொஞ்சம் கருணை காட்டுங்க சார்…! என எள்ளலும் சற்று எரிச்சலுடனும் பேசினார். 

அமைச்சர் அவர் டிரேட் மார்க் சிரிப்புடன் சமாளித்தார். விளக்கங்களை திரும்பவும் அளித்து உரையாடலை இயல்பாக மாற்றி சிநேகத்துடன் முடிவுக்கு கொண்டுவந்தார்.  

சபை கலைந்தது


Thursday, 12 February 2015

புதிய தலைமுறை- வீதியில் வீசப்பட்ட ஊழியர்கள்...!



சென்னை பீட்டர்ஸ் சாலை,சரவண பவன் ரெஸ்டாரண்ட் முதல் மாடி.

ஊடகவியலாளர்கள் பார்த்தசாரதி,பெஞ்சமின்,அன்பரசு சந்திப்பு.

"ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறோம். என்ன நடக்குது பத்திரிகை உலகத்துல ? "

"ஆமாம்.நிறைய பேசணும்." பெஞ்சமின்

இங்க அண்ணாச்சி நம்ம பர்சைக் காலி பண்ணிடுவாரே..? அடுத்த பில்டிங் செல்ப் சர்வீஸ் போயிருக்கலாம். அன்பரசு பர்ஸ் கனம் குறித்துக் கவலைப்பட்டார்.

"காசு கொஞ்சம் அதிகம் தான். ஒரு காபி குடிச்சுட்டு  ஒரு மணி நேரம் ஏ.சி.யில உட்கார இதை விட்டா வேறு இடம் கிடையாது. அங்க நின்னுக்கிட்டே இருக்கணும்."

"விகடன் எம்.டி. பாலசுப்ரமணியம் இறந்ததுக்கு போனீங்களா..? " பெஞ்சமின் ஆரம்பித்து வைத்தார்.

அஞ்சலி...


"ஆமாம். பெரும்பாலும் ஊடக நெறிகளின் படியும் பணி புரியும் தொழிலாளர்களின் மீது கரிசனத்துட‌னும் வாழ்ந்த சில முதலாளிகளில் அவரும் ஒருவர். அவருக்கு நம்ம அஞ்சலியை செலுத்திடுவோம். அவர் குறித்து விகடன் ஊழியர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் அனைவரும் நிறைய பதிவு செய்துட்டாங்க. இணையம் உட்பட எல்லா ஊடகங்க‌ளிலும் வந்திருக்குது."

"ஆமாம்.அந்திமழையில் ஜி.கவுதம் ஒரு இரங்கற்பா எழுதியிருந்ததையும் படிச்சேன்."

"விகடன் முதலாளி மறைவை ஒட்டி 'தமிழ் இந்து'நாளிதழ் வெளியிட்ட ஒரு கட்டுரை சர்ச்சை ஏற்படுத்தியதுன்னு சொன்னாங்களே..? "அன்பரசு.

"ஆமாம். சமஸ் சில வாரங்களுக்கு முன் செய்த அவரது நேர்காணல் ஒன்றை விகடன் பாலசுப்ரமணியம் இறந்த மறுநாள் வெளியிட்டு 'எனக்குப் பிடித்த பத்திரிகை குமுதம்-விகடன் பாலசுப்ரமணியம் கடைசிப் பேட்டி அப்படின்னு தலைப்பு வைத்திருந்தாங்க."

"இது கண்டிக்கப்ப‌ட வேண்டிய குசும்பு தான். ஒருத்தர் மறைவுக்குப் பின் வரும் அவரது பேட்டியில் வெற்றுப் பரபரப்பை உண்டாக்கும் கோக்குமாக்கான தலைப்பைத் தவிர்த்திருக்கலாம். "

"நிச்சயமா. தமிழ் இந்து ஆசிரியர் அசோகனும்  நடுப்பக்க பொறுப்பாளர் சமசும் இதன்னால விகடன் மேல்மட்ட ஆட்கள் எல்லோர் கிட்டயும் கடுமையா திட்டு வாங்குனாங்க."

"இதன் காரணமா சமஸ் துக்க வீட்டிலும் ஒரு ஓரமா அமைதியா, கவுண்டமணியிடம் திட்டு வாங்கின நடிகர் செந்தில் மாதிரி ஒருவித பாவமான‌ முகத்துடன் இருந்தார். இதை விட இன்னொரு முக்கியமான விஷயம் விகடனின் நீண்ட நாள் ஊழியர்,ஆ.வி.ஜு.வி.போன்றவற்றின் முன்னாள் ஆசிரியர் அசோகன் கடைசி வரைக்கும் இறப்பு வீட்டுக்கு வரலைன்னு சொல்றாங்க.

"உண்மை தானா..? நம்பவே முடியலை..எதுக்கும் சரி பார்த்துக்கங்க..எதிரிகளானாலும்  இறப்புக்கு வந்து அஞ்சலி செலுத்துவது தானே நம்ம மரபு. இங்கோ வேலை கொடுத்த முதலாளி கூட...!"

"அது நம்மைப் போன்றவர்களுக்கு. இன்னொரு முக்கிய விஷயம்.இன்னைக்கு 'தி இந்து' ஆசிரியர் பொறுப்பு அசோகனுக்கு கிடைத்ததற்கும் மறைந்த பாலசுப்ரமணியம் தான் காரணம்."

"அப்படியா..? "

தனது ஊழியர்களுடன் விகடன் எம்.டி.மறைந்த பாலசுப்ரமணியம்


"ஊழல் காரணமாக விகடனில் அசோகனுக்கும் சீனிவாசனுக்கும் பிரச்சனை வந்த பின்னால் அசோகனை மொத்தமா வெளியே தள்ள இப்ப இருக்கும் முதலாளி சீனிவாசன் முடிவு செய்யுறார்.அப்ப பாலசுப்ரமணியம் தான் அவரைக் காப்பாற்றி பதிப்பாளரா இருந்துட்டு போகட்டுமுன்னு சீனிவாசன் கிட்ட சொல்லி காப்பாத்துறார்.

அதுக்கு பிறகு சில காலத்தில் 'தி இந்து' தமிழ் ஆரம்பிக்கும் பொழுது தன்னை ஆசிரியர் பொறுப்புக்கு ப‌ரிந்துரைக்க பாலசுப்ரமணியத்திடம் அசோகன் சொல்றார். அவரும் என்.ராமிடம் தனக்கு இருக்கும் நட்பை பயன்படுத்தி இவரைப் பரிந்துரை செய்யுறார்.அதனால் தான் இவரை விட திறமையானவர்கள் நிறையப் பேர் பரிசீலனையில் இருந்தாலும் இவருக்கு லக் அடிக்குது. அதற்குப்பிறகு விகடன் பதிப்பாளரை விட்டு வெளியேறுறார். இன்றைக்கோ தனது இந்த நிலைக்கு காரணமானவர் மறைவுக்கு கூட போகலை. "

" நீங்க சொல்றதை நம்பவே முடியலை. எதுக்கும் சரி பார்த்துடுங்க.என்னடா உலகம் இது.நன்றி கெட்ட மனிதர்கள்." பார்த்தசாரதி சலித்துக் கொண்டார்.

ஆளுக்கொரு காபியை ஆர்டர் செய்து விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார்கள்.



"எந்த தொலைக்காட்சியைப் பார்த்தாலும் இமான் அண்ணாச்சி வர்ற‌ விளம்பரத்துக்கு போட்டியா 'ஜன்னல்- சமூகத்தின் சாளரம்' அப்படின்னு புதிய பத்திரிகை விளம்பரம் வருதே ? அது யாருங்க..புதுசா கிளம்பியிருக்காங்க.? " அன்பரசு அலுத்துக் கொண்டார்.

"யோக்கிய சிகாமணிகளா இங்க வரப்போறானுங்க.புதிய தலைமுறை,மாறன் குடும்பம்,ஜி டிவி,நியூஸ் 7 மாதிரியான கும்பல்கள் மாதிரி தான் இருக்கும். தாங்கள் செய்யும் அயோக்கியத்தனத்தில் இருந்து தங்க‌ளைப் பாதுகாக்க ஆரம்பித்திருப்பாங்க."

அதானே..?

"'ஜன்னல்' பத்திரிகை முதலாளிகள் இதுக்கு முன்னாடி ரியல் எஸ்டேட்,சீட்டு,எம்.எல்.எம். மாதிரி வணிகம் செய்துக்கிட்டிருந்தவங்க.அது தான் இவர்கள் பிழைப்பு.

அதில் கணக்கு வழக்கு இல்லாத பணம். மதுரையில் விசாலட்சுமி மில் ரொம்பப் பழமையானது.அதை நூற்றுக்கணக்கான கோடி கொடுத்து வாங்கியிருக்காங்க.அது மட்டுமல்லாமல் ராமநாதபுரம் மன்ன‌ருக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலம் குற்றால மலையை ஒட்டி இருக்குது.அதையும் வாங்கியிருக்காங்க. நான் சொன்னது ஒரு சில பரிமாற்ற‌ங்கள் தான்.

இவ்வளவு கறுப்பு பணமும் சொத்தும் குறுக்கு வழியில் பத்து வருடஙக்ளுக்குள் வந்தது தான்.அதுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா என்ன..? அதனால் தான் இப்ப முதலில் வார பத்திரிகை ஆரம்பித்திருக்காங்க.அடுத்து நாளிதழ்,தொலைக்காட்சி,அரசியல் பத்திரிகை என தொடர்ச்சியா ஆரம்பிக்குற திட்டம் இருக்காம்."

" நாட்டைத் குட்டிச்சுவரா ஆக்காமல் விட மாட்டாங்கன்னு சொல்லுங்க. " அன்பரசு

"சரி இவங்க கதை இருக்கட்டும். இதைப் போல புதியதாக இரண்டு நாளிதழ்கள் வரப்போறதா சொல்றாங்களே..?"

ஆமாம்.திருமாவளவன் மற்றும் வைகோ சார்பா ஆளுக்கொரு  தினசரி கொண்டு வராங்க.

"திருமா ஆதரவு நாளிதழுக்கு எஸ்.சரவண‌குமார் ஆசிரியர் ஆகப்போறாருன்னு சொல்றாங்க. ஆனால் கொஞ்சம் தாமதமாகலாம். வைகோ சார்பு நாளிதழை அவர் கட்சியைச் சேர்ந்த இமயம் தொலைக்காட்சி உரிமையாளர் ஜெயராஜ் ஆரம்பிக்கப் போறார்."

"வைகோ செய்தியை தந்தி உட்பட எல்லா முதலாளியும் வரிந்து கட்டித்தானே வெளியிடுவாங்க. அப்புறம் எதுக்கு தனி நாளிதழ்.?" பார்த்தசாரதி.

"அவருக்கும் தந்திக்கும் இப்ப பஞ்சாயத்து இருக்கு.தந்தியின் ராஜபக்க்ஷே ஆதரவு பேட்டியை எதிர்த்து ஆர்ப்ப்பாட்டம் செய்தார்."

நாய் நிகழ்ச்சி நடத்திய‌ ஹரிஹரன்


"ஆமா. தந்தி தொலைக்காட்சி எடுத்த நேர்காண‌லில் இனப்படுகொலை பற்றி ஒரு கேள்வியும் ராஜபக்க்ஷேவிடம் கேட்கலையே..ஏன்..? அவன் சொன்னதை அப்படியே வெளியிட அவனுக்கு பி.ஆர்.ஓ.இருக்காங்க. அதுக்கு எதுக்கு தந்தி டிவியும் ஹரிஹரனும்..?" பெஞ்சமின் கொந்தளித்தார்.

"ஹரிஹரன் நாய், நிகழ்ச்சி நடத்த தான் லாயக்குன்னு தெரியுது. அப்புறம் ஆர்ப்பாட்டம் பண்ணாமல் என்ன செய்வாங்க.?"

"இதுக்கு எதிரா ஆர்ப்பாட்டம் அறிவித்த வைகோ வழக்கமான சடங்கா அது நடக்குமுன்னு எதிர்பார்த்தார். ஆனால் யாரும் எதிர்பாராமல் தினத்தந்தி வளாகத்தில் செருப்பு வீசப்பட்டது. இதனால் தந்தி நிர்வாகத்துக்கு கடும் கோபம்."

"யார் வீசுனாங்க..? "

தந்தி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில்


"வைகோ,வேல்முருகன் கட்சி ஆட்களை கை காட்டித் தப்பிக்கப் பார்த்தார்.வேல்முருகன் எங்களுக்குத் தெரியலைன்னு பதில் சொன்னார். மொத்தத்தில் இப்ப ரெண்டு பேர் செய்தியும் தந்திக்காரன் போடுவதில்லை."

"இதனால் வைகோ ரொம்ப அப்செட். அதனால் இதர பெரிய ஊடகங்கள் மீது அதிக அக்கறை காட்டுறார்."

"அதனால் தான் தொலைபேசி இணைப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட மாறன் கூட்டாளிகளை பத்திரிகை ஊழியர்கள் கைதுன்னு திரித்து சொல்லிக் கூச்சமில்லாமல் கண்டனம் தெரிவித்தாரோ..? "

அரசியல்வாதிகளிடம் உண்மையை மட்டும் எதிர்பார்ப்பது மடைமை. அது மட்டுமல்லாமல் கே.டி.க்கள் பயன்படுத்திட்டுத் தூக்கி எறியும் இயல்பு உள்ள‌வர்கள்.அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது எதுக்கும் பயனளிக்காது.
 இதனால் தான் தனக்குன்னு புது நாளிதழ் வருவதிலும் அதிக அக்கறை செலுத்துறார்.

தந்தி ஆர்ப்பாட்டத்தில் நடந்த கல் வீச்சுக்கு வேல்முருகனைக் குற்றம் சாட்டினாலும் அவர் கூடத் தொடர்பில் தான் இன்னும் இருக்கார். 'இம‌யம்' தொலைக்காட்சிக்காக வைகோ நேர்காணலையும் வேல்முருகன் செய்திருக்கார்.

வைகோ வை நேர்காணல் செய்யும் வேல்முருகன்.
பக்கா அரசியல்வாதிகள் முன்பு அடக்க ஒடுக்கமாக வியப்புடன், சூழல் 'போராளி' கோ.சுந்தர் ராஜன்.


" ம்ம்ம்.அரசியல் வாதிகள் யாரும் யாருடனும் சேர்ந்துக்கிடலாம். ஆனால் 'பூவுலகின் நண்பர்கள்' என்.ஜி.ஓ.நடத்துற‌வங்க, பாழாய்ப்போன அரசியல்வாதிகள் பின்னாடி எதுக்குப் போறாங்க..?

என்.ஜி.ஓ.ஆரம்பிக்கும் பொழுது தங்களை வித்தியாசமா காட்டிக்கிட வேண்டியது. அப்புறம் ஊடகங்களின் துணையுடன் ஒரு அடையாளம் கிடைத்தவுடன், எதற்கும் விலை போகத் தயாராய் இருக்கும்,மக்கள் பிரச்சனைகளின் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் அரசியல் வாதிகளுடன் தனிப்பட்ட உறவைப் பேணுவது என திட்டமிட்டு நடந்து கொள்கிறார்கள். இதுக்கு முன்னாடி வைகுண்டராஜன் டிவி அலுவலகம் சென்று வந்தார் என நாம் ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படியே போனால் அதிகார வர்க்கத் தொடர்பு அடுத்து எளிதில் கிடைக்கும்.

"நல்லாத் தான் இருக்கு சூழலைக் காக்கும் நிகழ்ச்சி நிரல்."

வழக்கம் போல் தாமதமாய் வந்த காபியை எடுத்துப் பருகிக் கொண்டே பெஞ்சமின் ஆரம்பித்தார்.

 "தினமலர் நாளிதழ் மாற்றத்தைக் கவனிச்சிங்களா..?"

"ஆமாம். 'தினமலர்' தனது வாசகர்களை 'தமிழ் இந்து' கவர்ந்து விடக்கூடும் எனும் எண்ணத்தில் தினமும் ஒரு துறை குறித்த செய்திகளை ஒரு பக்க இணைப்பா வழங்குது. மகளிர்,சினிமா,கல்வி,பெண்கள்,அறிவியல் பகுதி என பலதுறைகள் குறித்தும் எளிய நடையில் மிக அருமையா இருக்குது. தொடர்ந்து படிக்கிறேன்."

"அப்படியா ? நானும் பார்க்குறேன். "

அவர்களும் புதியதாய் சில பத்திரிகைகள் ஆரம்பிக்கப்போறாங்கன்னு சொல்றாங்களே..?

ஆமாம். 'அலப்ஸ்' அப்படின்னு பேராம்.இன்னொரு பத்திரிகை 'புதிய அலை' என்றும் சொல்றாங்க.

அதுக்காய் கவுதம சித்தார்த்தனைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. சிறு பத்திரிகை நடத்தி வந்த அவர் 'குமுதம் தீராநதி'யில் பணியாற்றினார். இப்ப 'தினமலரில்' இணைந்திருக்கிறார்.

"அலப்ஸ் பேரப்பாரு.'தினமலர்' காரன் வைக்குற தலைப்பு மாதிரி கேவலமா இருக்கு."

ம்.அவங்க பங்குக்கு அவங்க ஆரம்பிக்கட்டும்.

'தி இந்து'  தமிழ் நாளிதழ் செய்தி எதுவும் உண்டா..?

"வெள்ளி,சனி,ஞாயிறு அன்று விலை 6 ரூ.ஆக்கிட்டாங்க. விற்பனையில் முதல் நிலையில் இருக்கும் தினத்தந்தி,தினகரனே விலை குறைவு தான். இவங்க கொடுக்கும் பக்கங்களை விட அதிகம் தர்றாங்க. ஆனா தினமணியுடன் போட்டி போடும் 'தி இந்து'  விலையை உயர்த்தியிருக்குது. இந்த நிலையிலேயே இப்படின்னா விற்பனை இன்னும் அதிகமாச்சுன்னா இவங்க வச்சது தான் விலைன்னு ஆகிடும். "

"விளம்பரம் அதிகம் வராததினால் தான் இந்த நிலை என நினைக்கிறேன். அதுக்கு நம்ம பாக்கெட்ல எதுக்கு கை வைக்கணும்.?"

காபி காலியானது .




'விகடன் விருதுகள்' பார்த்தீர்களா..?

ஆமாம். பார்த்தேன். எது நடந்தாலும் எவ்வளவு திட்டினாலும் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அவங்க கம்பெனி சீரியலுக்கு அவங்களே அவார்டு கொடுக்கும் கேவலம் மட்டும் நிக்கவே இல்ல. இந்த முறையும் அவங்க நிறுவன தெய்வமகள் சீரியலுக்குத் தான் விருது.

அதுவும் இல்லாமல் 'விஜய் டிவி' திவ்யதர்ஷினிக்கு தொடர்ந்து நான்கு வருசமா சிறந்த தொகுப்பாளினி விருது கொடுத்துக்கிட்டிருக்காங்க. விகடன் ஒட்டுமொத்த டீமும் இதுல  பாரபட்சம் இல்லாமல் சொக்கிப்போய்க் கிடக்காங்க போல தெரியுது. கொஞ்சம் தெளிந்து மற்ற தொகுப்பாளினிகள் நடத்துற நிகழ்ச்சியையும் பார்க்கணும்.

அதுவும் இல்லாமல் 'சிறந்த தொலைக்காட்சி சேனல்' அப்படின்னு 'சன் மியூசிக்' சேனலுக்கு அவார்டு கொடுத்திருக்காங்க. 'சிறந்த பொழுதுபோக்கு சேனல்' அப்படின்னு கொடுத்திருந்தா சரியா இருந்திருக்கும்.

10 க்கும் மேற்பட்ட செய்தி தொலைக்காட்சிகள் இருக்கும் பொழுது 'சன் மியூசிக்' சிறந்த சேனலாத் தேர்ந்தெடுத்திருப்பது அபத்தமா இருக்கு. பொழுதுபோக்கும் சேனலை விட பிற துறைகள் குறித்த சேனலுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.



"நக்கீரன் படிச்சீங்களா..வர வர ஆபாச மேட்டர் தான் கவர் ஸ்டோரியா வருது."

"ஆமாம் நடிகை விந்தியா காதல் தோல்வி, நடிகை ஸ்ரீ திவ்யா செல்பி அப்படின்னு."

"அதிலும் நடிகை ஸ்ரீ திவ்யா அரை குறை ஆடை செல்பி மேட்டர் எழுதி நாட்டுக்கு கொணர்ந்த‌து யாரு தெரியுமா..?"

" யாரு..? "

நிருபர் மனோ சவுந்தர்.



ஆமாம். அவர் குறித்துக் கேள்விப்பட்டிருக்கேன். அந்தாளுக்கு எதுக்கு இந்த ஆபாச வேலை. இதுக்கு வேற வேலைக்கு போகலாமே..?

"அவரை விட புதிய தலைமுறை இதழில் நிருபராய் பணியாற்றும் அவர் மனைவி வினி ஷர்ப்னா பெரிய புர்ர்ரட்சியாளர் தெரியுமா..? "

ஓ.

ஆமாம். முகநூலில் எழுதுவார். படிச்சா புல்லரிக்கும்.சுகிதா ராஜினாமா தொடர்பா கலகக்குரலில் எழுதிய  ஒரு செய்திக்காய் இவனுங்களுக்கெல்லாம் புத்தி வராதுன்னு நம்மைக் கடுமையா எழுதினார்.

 தான் காதலித்து மணம் செய்து கொண்ட‌ கணவர், இன்னொரு பெண்ணின் அந்தரங்கம் குறித்து புகைப்படத்தோடு கேவலமா எழுதிய‌துக்கு எதிரா எப்படி பொங்குவாரு..? 'நக்கீரன்  கோபால்' தலைமையில் தான் மனோவை இவர் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் அந்தரங்கத்தை வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தியதுக்காய் ஒன்னு கண‌வரைச் சாத்தணும் அல்லது இப்படிப்பட்ட ஆளைத் திருமணம் செய்துக்கிட்டதுக்காய் தன்னைத் தானே சாத்திக்கணும்.
மனோ சவுந்தர்

எல்லாம் சரிதான்.
நடிகையின் அந்தரங்கத்தை எழுதி வெளியிட்டதற்கு என்ன தண்டனை..?
ரெண்டு பேரும் பேசி முடிவுக்கு வாங்க.



// ஸ்ரீதிவ்யா இது தொட‌ர்பாய் புகார் கொடுத்தால் கண்டிப்பாய் காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அதிகாரி கருத்து தெரிவித்தார் என மனோ எழுதியிருக்கார்.//

" நடிகை ஸ்ரீ திவ்யா புகார் கொடுத்தால் கண்டிப்பாய் எழுதிய மனோவையும் வெளியிட்ட‌ கோபாலையும் தான் காவல்துறையினர் அரஸ்ட் பண்ணி லாடம் கட்டுவாங்க. ஆனால் நடிகை ஸ்ரீ திவ்யா கொடுக்க மாட்டாங்க அப்படிங்குற கொழுப்பில் தான் இப்படிப்பட்ட செய்திகள் வருது. "பெஞ்சமின் கடுப்பைக் காட்டினார்.



" குமுதம் இதழில் குஷ்பூ,பாக்யராஜ்,வைரமுத்து,அனிருத்,ராஜேஷ்குமார் என பிரபலங்கள் அணிவகுப்பு அதிகமா இருக்குதே..? கவனித்தீங்களா..?"  பார்த்தசாரதி

"ஆமாம். தனது வாசகர்களை தக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் புதிய வாசகர்களையும் குமுதம் அதிகரிச்சுக்கிட்டே இருக்குது.  விகடன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தான் இருக்குது. ஆனால் ஆ.விகடன் மீட்டிங்ல  தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக சொல்லிக்கிட்டே இருக்காங்க. விகடன் எடிட்டோரியலில் இருப்பவர்களும் அதை அப்பாவியா நம்பிக்கிட்டு  இருக்காங்க."



புதிது புதிதா ஆரம்பிக்குற பத்திரிகைகள் பத்திரிகைகள் பத்தி பேசினோம். 25 வருடமா வந்துக்கிட்டிருந்த 'இந்தியா டுடே' தமிழ் பதிப்பு நிறுத்தப்படுதுன்னு சொல்றாங்களே..?

"ஆமாம்.நீண்ட நாளா சொல்லிக்கிட்டிருந்தாங்களாம். இப்ப முடிவு கட்டி மூட்டை கட்டப்போறாங்களாம்."

ம். அங்கே வேலை செய்யும் பத்திரிகையாளர்களுக்கு என்ன நிவாரணம் கொடுத்தாங்கன்னு தெரிய‌லை. தமிழ்,மலையாளம்,தெலுங்கு உட்பட எல்லா பதிப்பும் சேர்த்து பல்வேறு பிரிவுகளிலும் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதனால் நிர்க்கதியாய் இருக்காங்க..

அசோசியேட் எடிட்டர் கவிதா முரளிதரனை வேலைக்கு எடுத்து 3 மாதம் கூட ஆகலை. பூட்டப்போற கம்பெனிக்கு ஆசிரியர் பொறுப்புக்கு எதுக்கு ஆள் எடுக்கணும் ? அவங்க வேலையையும் பாழாக்கிட்டாங்க.

இனி பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் என்ன செய்யப்போறாங்கன்னு தெரியலை. தொழிற்சங்க நிர்வாகங்கள் இதற்கு எதுவும் நடவடிக்கை எடுக்கப் போறாங்களான்னு தெரியலை."

ஒரு பத்திரிகை மூடிட்டது பத்திக் கவலைப்படுறோம். அதைப்போல நிகழ்ச்சி ஒன்னு நிறுத்தப்பட்டு பணி செய்த ஊடகவியலாளர்கள் வெளியே எறியப்பட்டது குறித்து யாருக்கும் கவலை இல்லை.இன்னும் சொல்லப்போனால் செய்தியே வெளியே வரலை.

என்னாச்சு..?



'புதிய தலைமுறை' தொலைக்காட்சியில் 'ரவுத்திரம் பழகு' அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.

" பெயரே ரொம்ப டெரரா இருக்கே..? "

"ஆமாம்."

திடீருன்னு அந்த நிகழ்ச்சியை ஊத்தி மூடிட்டாங்க. அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சியில் பணி புரிந்த 30 க்கு மேற்பட்டவர்களை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

என்னய்யா அநியாயமா இருக்குது..? அந்த நிகழ்ச்சியை நிறுத்திட்டா என்ன..? அவங்க தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுது. கைவசம் 3 சேனல் இருக்குது. எத்தனையோ வேலைகள் இருக்குது. அதில் இவர்களைச் சேர்த்துக்கிடலாமே..? இவ்வளவு நாள் வேலை பார்த்தவங்க இப்ப நடுத்தெருவில் நிற்பாங்களே..?

"அதான்.பிற‌ ஊடகங்களில் நிம்மதியா வேலை பார்த்துக்கிட்டிருந்தவங்களை அதிகச் சம்பளம் பேசி ஆசை காட்டி அழைத்துட்டு வந்துட வேண்டியது. ,புதிய இடத்தில் கிடைத்த அதிக சம்பளத்தில் தங்கள் வாழ்க்கை முறையை சொகுசா மாற்றிக்கிட்ட கொஞ்ச காலத்தில், அவர்களை தூக்கி எறிந்துட வேண்டியது. நிம்மதியாய் செய்துக்கிட்டிருந்த வேலையும் போய் நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்குறாங்க."

"ஐ.டி.ஊழியர்கள் மட்டுமில்ல.ஊடகத்துறையிலும் இது தான் நிலை. அதிலும் புது ஊடகக் காரர்களான புதிய தலைமுறை போன்ற மன்னராங் கம்பெனிகள் வந்த பின்பு இது அதிகமாய் காணப்படுகிறது.

டி.சி.எஸ்.போன்ற நிறுவனங்களில் காணப்படும் ஆட்குறைப்பு பற்றி ஊடகங்களில் நிபுணர்கள் நரம்பு புடைக்க விவாதிக்கிறார்கள். ஆனால் ஊடகங்களில் நடக்கும் இது போன்ற அநியாயங்களை விவாதிக்க நாதி இல்லை. புதிய தலைமுறை வேலை பறிப்பு நடந்து 2 மாதங்கள் ஆகப்போகுது.ஒரு சத்தமும் இல்லை."

அதானே ? அதிலும் 'புதிய தலைமுறை'யில் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயரைப் பாருங்கள்.'ரவுத்திரம் பழகு','நேர்பட பேசு','புதுப்புது அர்த்தங்கள்'.
ஆனால் நடப்பதோ நேர் எதிர்.

'ரவுத்திரம் பழகு' நிகழ்ச்சியில் வேலை பார்த்தவங்க உண்மையில் ரவுத்திரமா நடநதிருந்தா ஒரு முடிவு தெரிந்திருக்கும்.

காபிக்கு பணமும் டிப்சும் கொடுத்து சபை கலைந்தது.

Sunday, 8 February 2015

தினமலர் முதலாளி மருமகனின் மோசடி.. !

(2012 டிசம்பர் பதிவு. எழுத்துப்பிழை சரிசெய்யப்போய் தவறுதலாய் மறுபிரசுரம் ஆகி விட்டது.)


ஊர் உலகத்திற்கெல்லாம் நேர்மை,நியாயம்,அறம் இன்னபிற  போதிக்கும் தினமலர் பத்திரிகையின் முதலாளி மருமகன் மீது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் மீதும் அவரது சகாக்கள் மீதும்  கடையநல்லூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் நிறுவனர் ராமசுப்பையருக்கு  வேங்கடபதி,லட்சுமிபிபதி,ராக‌வன்,கிருஷ்ணமூர்த்தி,சத்தியமூர்த்தி என ஐந்து ஆண் வாரிசுகள் இருக்கின்ற‌னர்.தினமலரின் பத்து பதிப்புக்களும் இவர்களுக்குள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் இரண்டு பதிப்புக்கள் இருக்கின்றன.
மூத்தவரான வேங்கடபதியின் கட்டுப்பாட்டிலும் உரிமையிலும் திருநெல்வேலி,நாகர்கோவில் தினமலர் பதிப்புகள் உள்ளன.அவருக்கு இரண்டு மகள்கள்.அவரின் மூத்த மருமகன் மீது தான் இப்பொழுது மோசடிக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமசுப்பைய்யர் தபால்தலை வெளியிட வருகை தரும் கருணாநிதியை வரவேற்க காத்திருக்கும் தினமலர் முதலாளிகள் 


நில மோசடி,பிளாக்மெயில்


புகார் மனு


முதல் தகவல் அறிக்கை

தினகரன் செய்தி


இந்தச் செய்தியை நாம் நினைத்தது போல் பொய்மையின் உரைகல்லான  தினமலர் வெளியிடவில்லை.

யாரையும் குறை சொல்லவும் குற்றம் காணவும் விமர்சிக்கவும் குறைந்தபட்ச யோக்கியதையும் அருகதையும் தகுதியும் தினமலர் நாளிதழுக்கு இருக்கிறதா என்ன..?