Showing posts with label வைத்தியநாதன். Show all posts
Showing posts with label வைத்தியநாதன். Show all posts

Tuesday, 19 May 2015

தினமணி- நிமிர்ந்த நன்னடையா ? சாஷ்டாங்கமான வணக்கமா?







ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுவித்ததை அடுத்து ’தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ஒரு தலையங்கம் எழுதியுள்ளார்.படிக்கப் படிக்க பரவசம். தினமணி தலையங்கமா ? இல்லை சித்ரகுப்தன் எழுதிய வாழ்த்துப்பாவா என மனம் ஒருகணம் குழம்பி விட்டது. நீங்களும் படித்து விடுங்கள்.

அதில் சில பகுதிகளை எடுத்து விமர்சனம் செய்துள்ளோம்.

 //நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது//

தீர்ப்பு அளித்தவர் சி.ஆர்.குமாரசாமி மட்டுமே. அவருக்கு கீழே வேறு நீதிபதிகள் கிடையாது. ஆனால் சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு இருக்கை தீர்ப்பளித்திருக்கிறது என்று வைத்தி எழுதியுள்ளார்.

//கடந்த 3 மாதங்கள், யாரையும் சந்திக்காமல் தனித்திருந்து பிரச்னையை எதிர்கொண்டு வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் மன உறுதிக்கும்//

மத்திய சட்ட அமைச்சர் அருண்ஜெட்லியை ஜெயலலிதா சந்தித்தாரே? இந்த சந்திப்பு இப்பொழுது வரைக்கும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளதே? அந்த சந்திப்பு குறித்த செய்தி கூட ’தினமணி’யில் வெளிவந்துள்ளதே? ஜெயலலிதாவின் ’மனஉறுதி’யைப் பாராட்டுவதற்கு வசதிவாய்ப்பாக அதனை வைத்தி மறந்து விட்டாரா?

//பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சரவைக்கு இருந்த எதிர்பார்ப்பெல்லாம் உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளிவந்து, ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்க வேண்டும் என்பது தான்//

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார் வைத்தி. இது அவர்களின் எதிர்பார்ப்பு மட்டுமா ? வைத்தியின் எதிர்பார்ப்புமா?

//அதனால் பல நல்வாழ்வுத் திட்டங்களில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாததை தவறு காண முடியாது//

மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அரசு, அவர்களின் நல் வாழ்வுக்காக செயல்பட வேண்டிய அரசு, அதன்பொருட்டு உறுதிமொழி ஏற்றுப் பதவி ஏற்ற அமைச்சரவை, செய்யத் தவறினால் அதனைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்ய வேண்டிய பத்திரிகையாளர்,கவனம் செலுத்த முடியவில்லை என்பதில் தவறு காண முடியாது என்று வக்காலத்து வாங்குகிறார். விந்தை தான்.

//சட்டத்தின் பார்வையில் அரசியல் லாபங்களுக்காக வழக்குத் தொடுப்பதை ஊக்குவிக்க கூடாது. என்கிற நீதிபதியின் கருத்து வருங்காலத்தில் அரசியல் காரணங்களுக்காகத் தொடுக்கப்படும் இதுபோன்ற வழக்குகளில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.//

இந்தக் கருத்தினை தயாநிதி மாறன் தொடர்புடைய ஏர்செல் மேக்சிஸ், தனியார் தொலைபேசி இணைப்பு மோசடி வழக்குகளிலும் சொல்வீர்களா வைத்தி?

//பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்த ஒவ்வோர் அம்சத்தையும் , உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது 919  பக்கத் தீர்ப்பில் மிகத் தெளிவாக மறுஆய்வு செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்திருக்கிறார்.//

நிதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு கர்நாடக உயர்நீதிமன்ற இணையத்தில் 11 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வெளியிடப்பட்டது. ’தினமணி’ தலையங்கம் அதிகபட்சம் இரவு 10 மணிக்குள் எழுதி முடிக்கப்பட்டு அச்சுக்குப் போயிருக்கும். இந்த இடைப்பட்ட 6 மணி நேரத்துக்குள்ளாக 919 பக்கங்களையும் டவுன்லோடு செய்து வரிக்கு வரி படித்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமியின் தீர்ப்பு ’மிகத் தெளிவான மறு ஆய்வு’ என்று வைத்தி எப்படி முடிவு செய்தார்?

இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்துடனும் சில ஆண்டுகள் செலவிட்ட கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூட மறுநாள் காலையில் தானே கருத்துச் சொன்னார்?

அவரை விட மிகப்பெரிய சட்ட மேதையா வைத்தியநாதன்? பேசாமல் படிக்காத வழக்கறிஞர் ஆகி விடுங்களேன். ’தினமணி’ வாசகர்களாவது பிழைத்துப் போகட்டும்.

 //நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு ஏனோதானோ என்று எழுதப்பட்ட தீர்ப்பு அல்ல. விரிவாக அலசப்பட்ட விவரங்களுடன் கூடிய தீர்ப்பு.//

//வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு மொத்த வருமானத்தில் வெறும் 8.12 % தான். இதன் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.//

நீதிபதியின் கணக்கிடுதலில் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12% அல்ல 76.76 % என்று இப்பொழுது விமர்சனங்கள் எழுந்துள்ளதே? ஆனால் வைத்தி மட்டும் எப்படி விரிவாக அலசப்பட்ட,  விவரங்களுடன் கூடிய தீர்ப்பு என்று சான்றிதழ் வழங்குகிறார்.

சான்றிதழ் தீர்ப்பை பார்த்து கொடுத்ததா? இல்லை சாதியைப் பார்த்துக் கொடுத்ததா?

சரி அவசரத்தில் உணர்ச்சிவசப்பட்டு தலையங்கம் எழுதிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் மதியத்தில் இருந்து கணக்கீட்டில் உள்ள குளறுபடி குறித்து தகவல்கள் வந்தனவே? அனைத்துக்கட்சிகளும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டனரே? எல்லா நாளிதழ்களிலும், இணையத்திலும் செய்திகளும் விமர்சனங்களும் வெளிவருகின்றனவே? அது வைத்தியின் கண்களையும்  காதுகளையும் எட்டவில்லையா?

நீதிபதி சி.ஆர்.குமாரசாமி எழுதிய தீர்ப்பை மாற்றுவது தான் கடினம். வைத்தி எழுதிய  தலையங்கத்தை மாற்றுவதுமா கடினம்? வருமானக் கணக்கீட்டுக் குளறுபடி குறித்தும், நீதித்துறை மீது எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்தும் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானதைக் கண்டித்தும் ஒரு தலையங்கம் எழுதுவதில் என்ன சிக்கல்? அவசர அவசரமாய் வரவேற்று தலையங்கம் எழுதிய தினமணி, நிதானமாக சிந்தித்து எழுத, விமர்சனம் எழுத 8 நாட்கள் கடந்த நிலையிலும் தயங்குவது என்?

வைத்தியை எது தடுக்கிறது?

இதைப்போன்ற புகழுரைகளைத் தாண்டி அத் தலையங்கத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறு எதுவும் இல்லை.

தீர்ப்பு வெளியானவுடன் அதிக உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் பரவசத்திலும் காணப்பட்ட ஒரு அதிமுக தொண்டனின் மனநிலையை இத் தலையங்கத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் காண முடிகிறது. ஒரு மூத்த பத்திரிகையாளனின் எழுத்தை எந்த இடத்திலும் காண முடியவில்லை. 

தினமணியின் முகப்பு வாசகமான 'நிமிர்ந்த நன்னடை'க்குப் பதில் கூனிக்குறுகிய சாஷ்டாங்கமான வணக்கத்தைத் தான் வைத்தி செலுத்தியிருக்கிறார்.




எங்கோ கல்கத்தாவில் இருந்து சென்னைக்கு பிழைக்க வந்து, வெளிநாட்டுத் துணி வணிகம் செய்த நிறுவனத்துக்கு விசுவாசமாய் துபாஷி வேலை பார்த்துக்கொண்டிருந்த அதேசமயம், தமிழ்நாட்டு சதானந்திடமிருந்த ’The Indian Express’ பத்திரிகையை தனதாக்கி அதையே துருப்புச் சீட்டாய் வைத்துக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதிரடியாய் உள் நுழைந்து அப்பொழுதிருந்த பழம்தின்று கொட்டை போட்ட பார்ப்பனர்களை எல்லாம் தாண்டி தேர்தலில் போட்டியிட சீட்டும் வாங்கி முக்கிய அரசியல் ஆளுமை ஆனவர், உங்கள் முதலாளி செத்துப்போன ராம்நாத் கோயங்கா. அதற்குப்பின் அவரது அரசியல், பத்திரிகை, பொருளாதார வளர்ச்சி அமோகமாய் ஆனது.

அவரது லாவகமும் குயுக்தியும் லாபியும் உங்களிடமும் இருக்கிறது, கூடுதலாக கூழைக்கும்பிடு போடும் குணமும் இருக்கிறது. நீங்கள் ஏன் அதிமுகவில் சேரக்கூடாது ? 

உங்களுக்கு நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.


Sunday, 8 February 2015

தினமலர் முதலாளி மருமகனின் மோசடி.. !

(2012 டிசம்பர் பதிவு. எழுத்துப்பிழை சரிசெய்யப்போய் தவறுதலாய் மறுபிரசுரம் ஆகி விட்டது.)


ஊர் உலகத்திற்கெல்லாம் நேர்மை,நியாயம்,அறம் இன்னபிற  போதிக்கும் தினமலர் பத்திரிகையின் முதலாளி மருமகன் மீது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள  மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் மீதும் அவரது சகாக்கள் மீதும்  கடையநல்லூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் நிறுவனர் ராமசுப்பையருக்கு  வேங்கடபதி,லட்சுமிபிபதி,ராக‌வன்,கிருஷ்ணமூர்த்தி,சத்தியமூர்த்தி என ஐந்து ஆண் வாரிசுகள் இருக்கின்ற‌னர்.தினமலரின் பத்து பதிப்புக்களும் இவர்களுக்குள் பிரிக்கப்பட்டிருக்கின்றன.ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலும் இரண்டு பதிப்புக்கள் இருக்கின்றன.
மூத்தவரான வேங்கடபதியின் கட்டுப்பாட்டிலும் உரிமையிலும் திருநெல்வேலி,நாகர்கோவில் தினமலர் பதிப்புகள் உள்ளன.அவருக்கு இரண்டு மகள்கள்.அவரின் மூத்த மருமகன் மீது தான் இப்பொழுது மோசடிக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமசுப்பைய்யர் தபால்தலை வெளியிட வருகை தரும் கருணாநிதியை வரவேற்க காத்திருக்கும் தினமலர் முதலாளிகள் 


நில மோசடி,பிளாக்மெயில்


புகார் மனு


முதல் தகவல் அறிக்கை

தினகரன் செய்தி


இந்தச் செய்தியை நாம் நினைத்தது போல் பொய்மையின் உரைகல்லான  தினமலர் வெளியிடவில்லை.

யாரையும் குறை சொல்லவும் குற்றம் காணவும் விமர்சிக்கவும் குறைந்தபட்ச யோக்கியதையும் அருகதையும் தகுதியும் தினமலர் நாளிதழுக்கு இருக்கிறதா என்ன..?

Tuesday, 14 August 2012

தினமணி-மெய்யாலுமா சார்..?



தினமணியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மெய்யாலுமா என்னும் பகுதி வருகிறது.அரசியல்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்புடைய திரைமறைவு செய்திகள் கிசுகிசுக்களாக இதில் பரிமாறப்படுகிறது.

மற்ற கிசுகிசுக்களைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதாக இது இருக்காது.



எழுதுபவர் இலக்கியப் புலமை,பழந்தமிழ் மன்னர்கள் பற்றிய ஞானம், மற்றும் ஆன்மீகத்தில்  ஈடுபாடு உடையவர் என்பதால் ஒவ்வொரு தகவலும்,மேற்கண்டவை தொடர்புடைய குறிப்புகளின் ஊடாகப் பரிமாறப்படும்.

இந்தப் பகுதிக்குச் செய்திகளை நாடு முழுவதுமிலிருந்து அளிப்பவர்கள் அதன் நிருபர்கள்.

அதனை கிசுகிசுவாக மாற்றி எழுதுபவர் அதன் ஆசிரியர் என்று சொல்கிறார்கள்.




அந்தப் பகுதியின் இணைப்பு இது.



நிறைய வாசகர்கள் கொண்ட பகுதி இது.நிற்க..

இனி மேலே சொன்னவற்றிற்கு தொடர்பற்ற நம் செய்திப் பதிவுக்கு வருவோம்.

நிமிர்ந்த நடையுடன் யார்க்கும் அஞ்சாத பார்வையுடன் தினசரி ஒலிக்கும் இதழைப் பற்றிய செய்தி இது.அதன் ஆசிரியராய்  சீர்காழி அருகே எழுந்தருளியிருக்கும் வைத்தீஸ்வரர் ஆலயத்தின் மூலவர் பெயர் கொண்டவர் இருக்கிறாராம்.இவர் நடுநிலை பிறழாதவரைப் போல் காட்டிக் கொள்வதில் வல்லவராம்.ஆனால் நிஜத்திலோ..?

எடுத்துக் காட்டாய் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறார்கள்.

அந்த நாளிதழில் வாரம்வாரம் அரசியல் புரணி பகுதி ஒன்று வெளிவருகிறதாம்.அதற்கு அதன் நிருபர்கள் கஷ்டப்பட்டு அனுப்பும் செய்தியை இவர் கொஞ்சம் உருமாற்றி எழுதுகிறாராம்.

இந்தப் பகுதிக்கு அலுவலகத்தில் வாரம் 10 ஆயிரம் ரூபாய் கணக்கெழுதி வாங்கப்படுகிறதாம்.ஆனால் அது செய்தி கொடுத்த சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு கொடுக்காமல் இடையில் வேறொருவருக்கு மடை மாற்றப்படுகிறதாம்.

சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு ”புளியோதரை” மட்டும் தான் கொடுக்கப்படுகிறதாம்.

ஊரெல்லாம் துப்பு துலக்கி அம்பலப்படுத்தும் பகுதியிலேயே ஊழலா என்று அங்குள்ளவர்கள் முனங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

மெய்யாலுமா..? 

எல்லாம் அந்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதனுக்கே வெளிச்சம்...!

Sunday, 20 May 2012

சசிரேகா சம்பளம் தினமணியில் திருட்டு..?



நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை:நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று சொல்லிக் கொண்டு வெளிவரும் தினமணி நாளிதழ் அலுவலகத்திலேயே திருட்டு நடைபெற்று உள்ளது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா..?

பறிகொடுத்த பத்திரிகையாளரின் பெயர். சசிரேகா.சம்பவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அந்தப்பெண்ணின் பின்னணி கொஞ்சம் உங்களுக்கு.

சசிரேகா தஞ்சை மண்ணைப் பூர்வீகமாய்க் கொண்டவர்.பத்திரிகைத் துறையின் மீது உள்ள ஆர்வத்தால் துறைக்குள் வந்தார்.முதலில் தஞ்சையில் நக்கீரன் செய்தியாளராய்ப் பணியைத் தொடங்கினார்.அதன்பின் சென்னையில் தினமலர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.அங்கிருந்து தினகரன் நாளிதழில் பணியில் சேருகிறார்.

அவர் பணியில் இருந்த பொழுது தான்  தினகரன் ஊழியர்கள் மதுரையில் 3 பேர் பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.மதுரையில் உள்ள கட்டப்பஞ்சாயத்து,ரவுடிக்கும்பல் தலைவர் இதன் பின்னணியில் இருப்பதாக பத்திரிகையாளர்கள் எண்ணினர்.அந்த சம்பவத்தைக் கண்டித்தும் கும்பல் தலைவனைக் கைது செய்யக்கோரியும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் சசிரேகா முதல் ஆளாகக் கலந்து கொண்டு நடுரோட்டில் அமர்ந்து துணிச்சலாக கொலை செய்த ரவுடிக்கும்பலுக்கு எதிராய் முழக்கங்களை எழுப்பினார். .(அந்த புகைப்படம் தான் மேலே நீங்கள் கண்டது)அதனைக் கண்ட பிற பத்திரிகையாளர்களே ஆச்சரியப்பட்டனர்.

அவர் பணியில் இருக்கும் பொழுது தீனதயாள் இஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெற்ற முறைகேட்டினை எதிர்த்து ஒரு செய்தியை எழுதினார்.அதனைக் கண்ட அக்கல்லூரி உரிமையாளர் டி.டி.நாயுடு தொலைபேசியில் சசிரேகாவை அழைத்துப் பேசினார்.(இந்த டி.டி.நாயுடு தான் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் சங்கத் தலைவர்.நாடு உருப்படுமா..?)அப்பொழுதும் துணிச்சலாக தனது நிலையை விவரித்தார்.தவறு என்றால் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.மறுப்புச் செய்தி வெளியிடுகிறோம் என்று தெரிவித்தார். 500 க்கும் ஆயிரத்துக்கும் பல்லிளிக்கும் ஊடகவியலாளர் மத்தியில் கல்லூரி முதலாளி அழைத்துப் பேசிய பின்பும் சசிரேகா தைரியமாக தான் எழுதிய செய்தியின் பக்கம் நின்றார்.
--
டி.டி.நாயுடு


அந்த சம்பவத்துக்குப் பின் சில நாட்கள் கழித்து தீனதயாள் பொறியியல் கல்லூரி சார்பில் ஒரு பிரஸ் மீட் நடைபெற்றது.அதில் தினகரன் நாளிதழ் சார்பில் சசிரேகா கலந்து கொண்டார்.அங்கு சென்று பல கேள்விகளை எழுப்பினார்.

“உங்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாய் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதே?”

” அரசு நிர்ணயித்த அளவை விட  அதிகம்கட்டணம்வசூல் செய்கின்றீர்களாமே..”?

போன்ற கேள்விகளைக் கேட்டார்.இது கல்லூரி முதலாளி டி.டி.நாயுடுவுக்கு எரிச்சலை ஊட்டியது.பிரஸ்மீட் முடிந்த அடுத்த நிமிடம் தினகரன் நாளிதழ் C.E.O.ஆர்.எம்.ஆர்.ரமேஷூக்கு போன் போட்டார்.”உங்க ரிப்போர்ட்டர் கவர் கேட்டாரு.கொடுக்கலைன்ன உடனேயே கண்டமேனிக்கு கேள்வி கேட்குறாரு” என்று புலம்பினார்.(ஆனால் உண்மை ரமேஷூக்குத் தெரியாதா என்ன?)

உடனே ரமேஷ்,”அந்த ரிப்போர்ட்டர் வந்தவுடன் என்னை வந்து மீட் பண்ணச் சொல்லுங்க” என்று .ரிஷப்ஷனில் சொல்லி விட்டார்.

அலுவலகத்தில் நுழைந்தவுடன் சசிரேகா நேரே ஆர்.எம்.ஆர்.ரமேஷைச் சந்திக்கச் சென்றார்.

”என்னங்க கவர் கொடுக்கலைன்னா உடனே எடக்கு மடக்கா கேள்வி கேட்குறீங்களாமே” என்றார்.கடுமையான கோபம் வந்தது சசிரேகாவுக்கு.

யார் சொன்னா உங்ககிட்ட.சொன்னவனை என் முன்னாடி நிறுத்துங்க.அவனை நானே கேள்வி கேட்கிறேன்.என்று கோபப்பட்டார்.ஆனால் ரமேஷ் மிகவும் அமைதியாகி,சரி சரி போங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

கீழே வந்தவுடன் தனது தொலைபேசியில் இருந்து சுயநிதிக் கல்லூரி வியாபாரி நாயுடுவுக்கு போன் அடித்தார், சசிரேகா. ஆனால் எதிர்முனை எடுக்கப்படவில்லை.உடனே அருகில் இருந்த ரிப்போர்ட்டரிடம் இருந்து போனை வாங்கி மறுபடியும் நாயுடுவுக்கு பேசினார். எடுத்தவுடன் ஏக வசனத்தில் அர்ச்சனை. நாயுடுவுக்கு காது முழுவதும் இரண்டு நாளுக்கு வலித்தது.


ஆர்.எம்.ஆர்.ரமேஷ்


அரண்டு போன நாயுடு திரும்பவும் ரமேஷூக்கு போன் செய்து புகார் பத்திரம் வாசித்தார்.திரும்பவும் ரமேஷ் அழைத்து இப்படி தொடர்ந்து பண்ணினால் உன்னை வேலையை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவேன் என்று எச்சரித்தார்.(அது சரி எதுக்கு ரமேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் நாயுடுவுக்கு வக்காலத்து வாங்குறார் என்று நீங்கள் யோசிக்கக்கூடும்?ரெண்டு பேரும் ஒரு ஊர்க்காரர்கள்.அதோடு மட்டுமல்ல மணவாடுக்கு மணவாடு.இதுக்கு மேல என்ன வேணும்.பாதிக்கப்பட்ட பத்திரிகைகாரன் பக்கம் எவன் இருப்பான்?)

உடனே கோபமான சசிரேகா நீங்க என்ன டிஸ்மிஸ் பண்றது,இப்படி பிராடுகளுக்கு வக்காலத்து வாங்குற இந்த நிறுவனத்தில் வேலை பார்க்குறதை விட வீட்ல சும்மா இருக்குறது பெட்டர் என்ற படி ராஜினாமா கடிதத்தை நீட்டினார்.

இவர் தான் சசிரேகா.

அதன்பின் கொஞ்சநாளில் தினமணியில் செய்தியாளர் வேலைக்குச் சேர்ந்தார்.இப்படிப்பட்ட துணிச்சலும் நேர்மையும் கொண்ட சசிரேகாவிடமே ஒரு பேர்வழி தினமணி அலுவலகத்திலேயே கைவரிசை காட்டி திருடி விட்டான் என்றால் அந்த பலே திருடனை என்ன செய்வது..?.


இவ்வளவு நாள் தினமணியில் வேலை பார்த்த பின்பு தனது சொந்தக் காரணங்களுக்காய் கடந்த மாதம் ராஜினாமா செய்துள்ளார்.அதனை முறைப்படி ஒரு மாதம் முன்பே அளித்துள்ளார்.(இவர் செய்த பிழை என்னவென்றால் ராஜினாமா கடிதத்தில் தேதியைக் குறிப்பிட மறந்தது தான்) அது அலுவலகத்தில் சிலருக்கு வசதியாகிப் போனது.அவரது ராஜினாமா கடிதத்தை உடனே வாங்கிக் கொண்ட நிர்வாகம் மாதக் கடைசி நாள் வரைக்கும் அவரது உழைப்பை வாங்கிக்கொண்டது. ஆனால் அவருக்குத் தரப்படவேண்டிய அந்த மாதச் சம்பளத்தை இன்றுவரை கொடுக்கவில்லை.பலமுறை கேட்டும் அவரது கணக்கில் வந்து சேரவில்லை.

சம்பளத்தை யார் திருடியது என்று இன்றுவரை தெரியவில்லை.தினமணி நிர்வாகத்திற்கு இது தெரியுமா இல்லை.நிர்வாகமே அதற்கு உடந்தையா என்றும் தெரியவில்லை.


சசிரேகா
வைத்தியநாதன்


ஸ்பெக்டரம்,போபர்ஸ் ஊழலை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாய் அலசி ஆராய்ந்த அலுவலகத்திலேயே இப்படி ஒரு திருட்டா? என்று அங்கு பணியாற்றுவோர் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.


சமயமும் அறமும் தேசியமும் தழைத்தோங்கும் இடத்தில் நடைபெற்ற திருட்டு  தினமணி பக்தர்களையும் சினத்துக்குள்ளாக்கியுள்ளது.

திருட்டு விரைவில் அம்பலத்திற்கு வருமா..?ஆசிரியர் வைத்தியநாதன் தான் தக்க பரிகாரம் காண வேண்டும்.செய்வாரா..?




Wednesday, 28 December 2011

இரண்டு விபச்சாரிகளின்(பத்திரிக்கைளின்)குழாயடிச் சண்டை


                  நன்றி-தினமணி கார்ட்டூன் 27-12-2011


                                       


                          நன்றி-தமிழ் முரசு-28-12-2011



   புரியாதவர்கட்கு உதவி செய்ய சில குறிப்புகள்.

1)பப்ளிசிட்டி வாத்தியார்-வைத்தியநாதன்
2)மனோகரா-மனோஜ்குமார்
3)கண்ணழகி-உங்க அறிவுக்கு எட்டிய வரை யோசியுங்க.நமக்கு அந்தளவுக்கு ஞானம் பத்தாதுங்க.கண்ணழகி கால் அழகி,தொடையழகி,தொப்புள் அழகி இப்படியெல்லாம் எழுதுறவனைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?
4)மதிகெட்டான் –கார்ட்டூன் மதி


இந்த சண்டையைப் பத்தி கேட்டுக்கிட்டு இருந்த நரிக்குறவர் ஒருத்தர் நைசா நம்மகிட்ட வந்தார்.அவர் பாட்டுக்குப் பேச ஆரம்பிச்சார்.


சாமியோவ் நீங்க படிச்சுக்கிட்டு இருந்ததை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தேனுங்க.எங்க சனங்க சரியாக் குளிக்காததால நாத்தம் அடிக்கும் சாமியோவ்.

ஆனா பத்திரிக்கை முதலாளிங்க சாமிங்க,பத்திரிகையில வேலை பார்க்குற சில ஆசாமிங்க,இவங்க எல்லாம் நீட்டா வெள்ளையும் சொள்ளையுமா இருக்காங்க.அவங்க செய்யுற வேலைங்களக் கேட்டா இந்த நாத்தம் அடிக்குதுங்க சாமியோவ்.

இப்ப படிச்ச கத மாதிரி இதுக்கு முன்னாடி நிறையக் கதை இருக்கு சாமியோவ்!ஒன்ணு சொல்றேன் சாமி!வீரப்பனப் பேட்டி கண்ட செய்தி படம் எல்லாம் நக்கீரனில் வந்தது சாமி.அதே செய்தி இந்தியா டுடே விலும் வந்தது சாமி.அந்தச் செய்தி ஜூனியர் விகடனுக்கு கிடைக்கலைன்னு ஆத்திரத்தில சாமி,”இது வரை செய்தி தான் வியாபாரம் ஆச்சு.இப்ப செய்தியாளர்களே வியாபாரம் ஆகிட்டாங்க” அப்படின்னு ஒரு செய்தி ஜு.வி.யில் போட்டாங்க சாமி.இதனால நக்கீரன் சாமிக்கு பெருத்த கோபம் வந்துச்சு சாமி.

உடனே சாமி, ஜு.வி.முதலாளியோட பையன்,அதான் சீனி சாமி ன்னு ஒருத்தர் இருக்காரே சாமி,அந்த சாமி தீபா வெங்கட் டுன்னு ஒரு நடிகை சாமியத் தள்ளிட்டுப் போச்சுன்னு நக்கீரனில் எழுதி பதிலுக்கு நாறடிச்சுட்டாங்க சாமி.

இன்னும் இது மாதிரி நிறையக் கத இருக்குது சாமி உங்க பத்திரிக்கை உலகத்துல.அதச் சொல்ல நிறய நேரம் வேணும் சாமி.எனக்கு இப்ப வேல இருக்கு சாமி.அப்பத் தான் நான் கா வயித்துக் கஞ்சியாவது இன்னிக்கு குடிக்க முடியும் சாமி!

எங்க மேல இருந்து வர்ற அழுக்கால வர்ற நாத்தம் பரவால்ல சாமி.இந்த மாதிரி ஒழுக்ககேடான விஷயம் எங்க சாதி சனத்துல கிடையாது சாமி.நாங்க மான மருவாத உள்ளவங்க சாமி.


இன்னொரு நாள் இந்தக் கருமத்தச் சொல்றேன் சாமி!வரட்டா சாமி!பாத்துப் போங்க சாமியோவ்.