Sunday 22 July 2012

பொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..!

வீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும்   SRM  வேந்தருமான பச்சமுத்து..! 
நாம்SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்களில்( 22-7-2012) SRM நிறுவனம் சார்பில் அதன் பதிவாளர் சேதுராமன் என்பவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்க்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல,அவர்களது படிப்புக்கு உதவி செய்கிறோம்,தமிழ் வளர்ச்சிக்கு உதவி செய்கிறோம் என்று சொல்லிச் செல்கிறது அந்த அறிக்கை.


ஈழத்தமிழர்க்கு உதவி செய்த பட்டியல் என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுவாரே!அதைப்போல SRM நிறுவனம் அறிக்கையும் உயிரற்று உள்ளது.

இலங்கை சென்று வந்த SRM துணைவேந்தர் பொன்னவைக்கோவும்,அதனை பொய் பூசி முழுகி அறிக்கை வெளியிட்ட   SRM   பதிவாளர் சேதுராமனும் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்


நாம் புகைப்பட ஆதாரங்களுடன் விலாவாரியாக எழுதிய பின்னும் இன்னமும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை SRM நிறுவனம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை.

இதோ இன்னும் ஆதாரங்கள்....இதற்கு என்ன பதில் அறிக்கை வெளியிடும்...?

கொழும்பில் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளும் SRM குளோபல் மேலாண்மை இயக்குனர் சுப்ரமணியனும் (வலது) SRM லங்கா சேர்மன் சிவகுமார் சின்னராஜாவும்..


இலங்கையில் வெளியிட்ட விளம்பரம்

SRM  லங்கா லோகோ


அட்மிஷனில் சிங்கள யுவதிகள் SRM லங்கா அதிகாரபூர்வ இணையம் தினமலர் உட்பட பத்திரிகைகளில்  வெளிவந்த செய்தி.
சிங்கள வணிகர் வர்த்தகத்துறை அமைச்சரை வரவேற்கும் பொன்னவைக்கோ

SRM அங்கு தொழில் துவங்கிய பின்னணி குறித்து ஊடக வட்டாரத்தில் பேசப்படும் தகவலைப் பார்ப்போம்.

கொழும்பில் ராஜபக்சேவின் அதிகார வட்டத்தின் துணையுடன் கல்வி வணிகம் துவங்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டது திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் நல்லுசாமி.இவர் எம்.ஜி.ஆர்.காலத்து மந்திரி.ஆர்.எம்.வீரப்பன் சிபாரிசால் அமைச்சர் ஆனவர்.அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு திருச்சி பேரூர் அருகே காவேரி காலேஜ் ஆப் இஞ்சினியரிங் என்னும் பெயரில் ஒரு கல்லூரி துவங்கினார்,

பிரம்மாண்ட வளர்ச்சி.இவர் தான் கொழும்பில் தனது கிளையைத் துவக்க முயற்சித்தார்.அதற்கு புத்தபிக்குகள் உதவியை நாடினார்.அவர்களின் ஆலோசனைப்படி தனது திருச்சி பொறியியல் கல்லூரியில் புத்தர் சிலையை நிறுவினார்.ஆனால் இங்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாய் சிலை திறக்கும் திட்டம் கைவிடப்பட்டது.அதன் பின் அவரது தொடர்ச்சியான முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை.நாமல் ராஜபக்க்ஷே தரப்புக்கும் இவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் விகிதாச்சார முரண்பாட்டால் நின்று போனது என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

அதற்குப் பின் இலங்கை அதிகார வர்க்கம் மிகப்பெரிய வல்லமை மிக்க ஒருவரை வளைத்துப் போடத் திட்டமிடுகிறது.அதற்கு உடன்பட்டவர் தான் ஊடக மற்றும் கல்வி வியாபாரி பச்சமுத்து.மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யம்கொழும்பில் துவங்கும் இந்த சாம்ராஜ்ய திட்டமிடலில் முதலில் ஈடுபட்டவர்கள் எம்.ஜி.எம். குரூப்பைச் சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு அங்கு மிகப்பெரிய சாராயத் தொழிற்சாலை உண்டு.ஆனால் அவர்களின் வழி தொடர்பு ஏனோ அது சரிப்பட்டு வரவில்லை.ஆகவே அது கைவிடப்பட்டது.
.அதன்பின் இதில் நுழைந்தவர்கள்  டி.ஆர்.பாலு தரப்பினர்.டி.ஆர்.பாலுவுக்கு நீண்ட காலமாய் தனது தொழில் நிமித்தம் மட்டுமல்ல,அதிகாரத் தரகு வேலை நிமித்தமும் இலங்கை உயர் மட்டத்தினருடன் நல்ல தொடர்பு உண்டு.அவர் இதில் தலையிட்டு வெற்றிகரமாய் பரிவர்த்தனைகளை முடித்துக் கொடுக்கிறார்.தனக்கு வேண்டியதைச் சரியாகப் பெற்றுக் கொள்கிறார்.இப்படி உருவானது தான் SRM லங்காபல்கலைக்கழகம்.இன்று வெற்றிகரமாய் தமிழர்களின் முகத்தில் கரியைப் பூசி துவக்கப்பட்டுள்ள‌து.

சர்வதேச போர்க்குற்றவாளி என்று உலகத் தமிழர்கள் ராஜபக்சேவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கையில் அதே இனத்தைச் சேர்ந்த தொப்புள் கொடி உறவான பச்சமுத்து கல்வி உறவு கள்ள‌த்தனமாக ஏற்படுத்தியுள்ளார்.நான் தமிழனுக்கு எதிரி அல்ல என்று சர்வதேசத்திற்கு காட்ட ஒரு முகம் இப்பொழுது ராஜபக்சேஷேவுக்கு கிடைத்துள்ளது.இது புதிய தலைமுறையின் சக குழுமமான  SRM லங்கா காலூன்றிய வரலாறு.

இனியாவது தனது அறியபப்ட்ட துரோகத்தை ஒப்புக் கொள்ளூமா..அல்லது இன்னும் ஆதாரங்கள் கேட்குமா...?7 comments:

வவ்வால் said...

இந்த சமாச்சாரம் முன்னரே தெரியும் ,ஆனால் இந்த அளவு ஆதாரங்கள் ,புகைப்படங்கள் என எதுவும் இல்லை , உங்களுக்கு உள்ளுக்குள்ளே ஒரு சோர்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன்.

இருப்பதிலே பதிவர்கள் தான் எல்லாம் லேட்டா தெரிஞ்சுக்கிறாங்க, அந்த பத்திரிக்கை, சேனல் பச்சமுத்துவுடையதுனு முன்னர் சொன்னப்போ அதை கூட மக்கள் நம்பலைனா பார்த்துக்கோங்க.

முழுமையான வியாபாரி அவருக்கிட்டே எல்லாம் தார்மீக ரீதியான கொள்கை இருக்குமா?

பல்கலை வளாகத்தில் இருக்கும் புறம்போக்கு இடம்,குட்டையை அவங்களுக்கு கொடுக்க போன ஆட்சியில் பெரும் தொகை வாங்கிக்கொண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டாங்க(விஐடி-வேலூர்கும்)

மஞ்ச துண்டு பொண்னுக்கும் பல்கலையில் ஒரு பங்கு இருக்குன்னு பேச்சு .

எந்த கட்சி வந்தாலும் இவங்க வியாபாரம் ஓஹோன்னு ஓடும் :-))

Doha Talkies said...

நீங்கள் சொன்னது மிகவும் உண்மை,
உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.
தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்.
சமயம் கிடைக்கும் போது இந்த தம்பியின் ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க அண்ணா...
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

வலிப்போக்கன் said...

அதிகார திருடர்களுக்கு என்னைக்குதான் ஒத்துக்கொள்ளும் பக்குவம் இருந்திருக்கு?????????????

Anand said...

நல்ல பதிவு.

இரா.ச.இமலாதித்தன் said...

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஈழம் சம்பந்தபட்ட அனைத்து நிகழ்வுகளையும் வெளிக்கொண்டு வருகிறார்களே யென்று பெருமை பட்டுக்கொன்டிருந்தேன். அது எவ்ளோ பெரிய ஏமாற்று வேளை என்பதை இப்போது உணர்ந்து கொள்கிறேன். எவனும் உணர்வாளனாக இல்லை; வியாபாரியாக தான் இருக்கின்றான்.

Anonymous said...

தமிழருக்கு நன்மை செய்வதாயின் இதை யாழ்ப்பாணத்திலோ அல்லது கிளிநொச்சியிலோ தொடங்கியிருக்கலாமே?

குறைந்த செலவு அல்லது புலமைப்பரிசில்கள் மூலம் போரால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு உதவலாமே!

கொழும்பில் தொடங்குவது எதற்கு?? முற்றிலும் வியாபாரம்.

Pras said...

நன்றி. ஆதாரத்துடன் பதிவு செய்து தெளிவுபெற செய்ததற்க்கு.