Friday 30 September 2011

குமுதத்தில் இயக்குனர்கள் கூட்டம்.வெளியே தள்ளப்பட்ட இயக்குனர்
இங்கே பத்திரிக்கையை ஆக்கிரமிப்பு கும்பல் அபகரிப்பு செய்த பின்னும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் அமெரிக்காவில் மருத்துவமனையில் உட்கார்ந்து கல்லா கட்டிக் கொண்டிருந்த குமுதம் முதலாளி,இங்கிருந்து ஆச்சி போன் பண்ணி நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டவுடன் அடுத்த பிளைட் பிடித்து இந்த வார ஆரம்பத்தில் சென்னை வந்து சேர்ந்தார்.முதலில் குடும்ப உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டிய டாக்டர்,அதன்பின் வழக்குரைஞர்களின் ஆலோசனையைப் பெற்றார்.

அதற்குப் பின் பத்திரிக்கை நிறுவனத்தின் இயக்குனர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆக்கிரமிப்புக் கும்பல் தலைவனை நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி விட்டார்களாம்.இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளாராம் கும்பல் தலைவன்.

 இனி அடுத்த கட்ட நடவடிக்கையை டாக்டர் எப்படி எடுக்கப் போகிறார் என்பதை வைத்துத் தான் குமுதம் என்னவாகும் என்பது தெரிய வரும்.

டாக்டருக்கு ஒரு அட்வைஸ்.நல்ல நண்பர்களை எப்பொழுதும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.அல்லது துணிந்து செயல்படும் சரியான நபர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.வெற்றி உங்க பக்கம் தான்.

காலையில் ஆசிரியர் நீக்கம்-மாலையில் நோட்டீஸ்


சென்ற வாரம் நாம் எழுதியிருந்தது போல புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் பத்திரிக்கை நடத்தும் ஆக்கிரமிப்பு கும்பல் தனக்குப் பிடிக்காதவர்களைப் பட்டியல் போட்டு வேலையில் இருந்து தொடர்ச்சியாக நீக்கி வருகிறது.

இந்தவாரம் தனது புலனாய்வு பத்திரிக்கையில் (ஒரு மண்ணாங்கட்டி ஆய்வும் கிடையாது.பிடிக்காதவர்களைத் திட்டி எழுதுவது,காசு கேட்டு பிளாக் மெயில் செய்து படியாவிட்டால் எழுதுவது,நிறையப் பொய்,கொஞ்சம் உண்மை கலந்து எழுதுவது.இது தான் புலனாஆஆஆஆஆய்வு) இதுவரை ஆசிரியராகப் பணியாற்றி வந்த இளங்கோவனை கேட்பார் யாரும் இன்றி கேள்விகள் எதுவும் இன்றி வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கி விட்டார்களாம்.மிகவும் இழிவாக வாசலில் வைத்தே இந்த உத்தரவை வழங்கினார்களாம்.ஆனால் இது குறித்துக் கவலைப்படாமல் அன்று மாலையே வக்கீல் மூலம் இதனை எதிர்த்து நோட்டீஸ் அனுப்பி விட்டாராம்.அதே போல ஆக்கிரமிப்புத் தலைவனுக்கு விசுவாசமாக இருந்த கோசலையின் ராமனுக்கு குழும ஆசிரியர் என்று ஒரு பதவியை உருவாக்கி கொடுத்திருக்கின்றார்களாம்.


கோசலையின் ராமனுக்கு அளிக்கப்பட்ட குழும ஆசிரியர் என்னும் புதுப் பதவியைப் பார்த்து பத்திரிக்கை உலகமே சிரிப்பாய்ச் சிரிக்கிறதாம்.

Tuesday 27 September 2011

பத்திரிக்கை அதிபர்கள் முகமூடியில் ஜேப்படி திருடர்கள்

 கானாடுகாத்தான் பகுதிகளில் செட்டிநாட்டு வீடுகள் மிகவும் பழமை வாய்ந்தவை, அரண்மனையைப் போல பிரம்மாண்டமானவை.கலை நுணுக்கம் வாய்ந்தவை.இதன் உள்ளே விலை மதிப்புமிக்க பொருட்கள் நிறைய இருக்கும்.இந்த வீடுகளின் உரிமையாளர்கள் பெரும்பாலும் வெளியூர்களிலோ அல்லது வெளிநாடுகளிலோ இருப்பர்.வருட்த்திற்கு ஒருமுறையோ அல்லது பல வருடங்களுக்கு ஒரு முறையோ வந்து விட்டு ஓரிரு நாளில் சென்று விடுவர்.வீடுகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் இங்கு யாராவது ஒருவரை நியமித்து விட்டுச் செல்வர்.
ஆனால் இவ்வாறு நியமிக்கப்படும் காவலாளிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு தவறு செய்யத் துணிவர்.இதனை அறிந்து கொண்ட திருடர்கள் காவலாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு நள்ளிரவில் வீடுகளின் உள்ளே நுழைந்து இவ்வளவு ஏன்,சில நேரங்களில் பட்டப் பகலில் கூட உள்ளே நுழைந்து நீண்ட காலம் தங்கி,உண்டு உறங்கி சாப்பிட்டு(கொள்ளையடிப்பதற்கு அவ்வளவு பொருட்கள் இருக்கும்)வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள்,நகைகள்,தேக்கினால் செய்யப்பட்ட கதவு, நிலை,ஜன்னல்,பாத்திரங்கள்,நிலைக்கண்ணாடி,உட்பட எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் திருடிச் சென்று விடுவர்.ஒத்துழைத்த வீட்டின் காவலாளிக்கு உரிய பங்கு கிடைக்கும்.காவல்துறையும் இதனைப் பெரிதாக்க் கண்டு கொள்ளாது.சில காலம் கழித்துப் பார்த்தால் அரண்மனை மொத்தமும் மொட்டையடிக்கப் பட்டிருக்கும்.திருடர்கள் இப்படி என்றால் வீட்டைக்காவல் காக்க நியமிக்கப்படும் சில வகை காவலாளிகள் மிகவும் நயவஞ்சகர்கள்.குயுக்தியானவர்கள்.உடம்பு முழுவதும் திருட்டு புத்தி தான் இருக்கும்.இவர்கள் மற்ற யாரையும் கூட்டுச் சேர்க்காமல் அவர்களே திருடர்களாக மாறிவிடுவர்.அனைத்துப் பொருட்களையும் அவர்களே திருடி விடுவர்.எதற்கு யாருக்கும் பங்கு கொடுக்க வேண்டும்?முழுவதையும் நாமே ஆட்டையைப் போட்டுருவோம் என்ற நல்ல எண்ணம்.இவர்களே திருடர்களாக மாறி விடுவதால் ஊர் உலகத்திற்கு எளிதாய் வெளியில் தெரியாது.முதலாளியே வந்து கண்டுபிடித்தால் தான் உண்டு.அவர் தான் வர மாட்டாரே!வந்தாலும் அவரால் நம்மை என்ன செய்ய முடியும் என்பது தான்.இந்த திருட்டுக் கும்பல்.
திருடியதில் திருப்தி அடையாமல் சில சமயத்தில் முதலாளியின் வீக்னெஸ்ஸைப் பயன்படுத்தி வீட்டின் உரிமையைத் தனது பெயருக்கு மாற்றி எழுதிக் கொள்ளும் அயோக்கியர்களும் உண்டு.இவர்கள் இதனைத் திருட்டு என்ற சொல்ல மாட்டார்கள்.வீட்டின் பத்திரத்தையே தனது பெயருக்கு அடாவடியாக மாற்றிவிட்டு வீடே என்னுடையது தான் என்று தைரியமாகச் சொல்வார்கள். நீண்ட நாள் கழித்து வரும் உரிமையாளருக்கு இது தெரிய வரும்.ஆனாலும் ஒரு சிலரைத் தவிர இது குறித்து யாரும் அதிகம் அலட்டிக் கொள்வது இல்லை.கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்.ஏனென்றால் அவருக்கு உள்ளூர்ச் சொத்தின் மீது அவ்வளவாக அக்கறை இருக்காது,அதற்கு 2 காரணங்கள் உண்டு.

முதலாவது அவர் தற்பொழுது இருக்கும் நாட்டில்,இங்கு உள்ள வீட்டின் மதிப்பை விட பலப்பல மடங்குகள் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் குவிந்திருக்கும்.அங்கேயே செட்டில் ஆகியிருப்பார்.அதனால் பூர்வீகச் சொத்தின் மீது அதிக அக்கறை இருக்காது.இரண்டாவது,இங்கு ஆட்டையைப் போட்டிருக்கும் திருடர்கள் கீழ்த்தரமானவர்கள்.பொறுக்கிகள்.எதற்கு அவர்களுடன் சண்டை போட்டு நாம் அசிங்கப் பட வேண்டும் என்ற எண்ணம் தான்.இப்படிப்பட்ட நபர்கள் யார் வீடு என்றாலும் அச்சப்பட மாட்டார்கள்.துணிந்து கைவைத்து விடுவார்கள்.

அது உள்துறை அமைச்சர் வீடு என்றாலும் சரி,குமுதம் முதலாளி வீடு என்றாலும் சரி.ஆறு மாதங்களுக்கு முன் இப்படித்தான் குமுதம் முதலாளி வீட்டில் நீண்ட காலம் வேலை பார்த்த வரதன் கை வைத்து விட்டான்.பிரச்சனை காவல் நிலையம் வந்தது.நள்ளிரவு வரதனைக் கைது செய்து விட்டார்கள்.ஆனால் குமுதம் முதலாளி பெரிய அளவில்  நடவடிக்கை வேண்டாம்.எச்சரித்து விட்டு விடுங்கள் என்று சொன்னபின் வரதன் எச்சரித்து அனுப்பப்பட்டான். 


இப்பொழுது புதிதாகக் கிடைத்த அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கானாடுகாத்தான் பகுதியில் கொள்ளை அடிக்கும் திருடர்கள்,தங்கள் நடை உடை பாவனைகள் முழுவதையும் மாற்றி சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலைக்குத் தங்கள் ஜாகையை மாற்றி விட்டதாகவும் தகவல்ஆனால் கானாடுகாத்தான் பகுதியிலாவது காவலாளி திருடனாக மாறி விட்டான்.இங்கோ நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் அயோக்கியத்தனங்களையும் உலக்குக்கு எடுத்துரைக்கும் இடத்திலும் அதனைத் தட்டிக் கேட்பதாகவும் கூறிக் கொண்டிருப்பவர்கள் இப்பொழுது ஆட்டையைப் போட்டு உரிமையாளனாக மாறி விட்டார்கள்.

நாடு போகும் போக்கினை நினைத்தால் பயமாக இருக்கிறது.எதற்கும் எச்சரிக்கையாக அந்தப் பக்கம் செல்லுங்கள்.உங்கள் பாக்கெட்டில் இருக்கும் கொஞ்சநஞ்ச பணத்தைத் திருடினாலும் திருடி விடும் இந்தக்கும்பல்.
எச்சரிக்கை!
.


Sunday 25 September 2011

குமுதத்தில் குள்ளநரிகள் அட்டகாசம்.


குமுதம் குழுமத்தை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிவிட்ட குள்ளநரிக் கும்பல் தற்பொழுது தனக்கு வேண்டாதவர்களையும்,இதுவரை தங்களது ஊழலுக்கு இடைஞ்சலாய் இருந்தவர்களையும்,உண்மையான முதலாளிக்கு விசுவாசமாய் இருந்தவர்களையும் வேலை நீக்கம்,இடைக்கால பணி நீக்கம்,அவமதிப்பு எனப் பல வழிகளில் தொந்தரவு செய்கின்றதாம்.இன்னும் பலரைப் பட்டியல் போட்டுப் பழி வாங்கக் காத்திருக்கிறதாம்.

பணி செய்பவர்கள் அலுவலகத்தில் உள்ளே நுழைகையில் திருடர்களைப்போல பரிசோதித்து அனுப்புகின்றதாம்.மேலும் அலுவலகத்தில் செல்பேசியும் வேலை செய்வது இல்லையாம்.அனைவரும் திருடர்களைப் போல் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனராம்.

சென்ற வாரம் அபகரிப்பு குள்ளநரிக் கும்பலின் தொந்தரவுக்கு உள்ளாகி பணி நீக்கம்,இடை நீக்கத்திற்கு உள்ளானவர்கள் மூன்று பணியாளர்களாம்.

தேசிகன்
இவர் நிறுவனத்தின் சர்க்குலேஷன் பிரிவின் வைஸ் பிரசிடெண்ட் பொறுப்பில் நீண்ட காலம் பணியாற்றி வந்தவர்.
ஆனால் இவர் எப்பொழுதும் அபகரிப்பு கும்பலை மதிக்காமல் பணியாற்றியதாலும்,முதலாளிக்கு விசுவாசமாய்ப் பணியாற்றியதாலும்,இவரைப் பழிவாங்கக் காத்திருந்த அபகரிப்பு கும்பல் இப்பொழுது அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டதாம்.

ஜெயராமன்
இவர் விற்பனைப்பிரிவின் மேலாளர்

இவரும் அபகரிப்பு கும்பலுக்கு இடைஞ்சலாகப் பணியாற்றியதால் வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளாராம்.

சாய்

இவர் தலைமை வடிவமைப்பு நிர்வாகி.

இவர் செய்த ஒரே தவறு.அபகரிப்பு கும்பல் தலைவர் படத்தை தனது கணிப்பொறியில் வைத்திருந்தது தான்.(இது என்னடா மகாக் கொடுமை!)அலுவலகத்தில் வெளியிட்ட ஒரு மலருக்காக அவர் படத்தை வைத்திருந்தாராம்.ஆனால் இதைக் காரணம் காட்டி அவரை வாய்மொழி உத்தரவுடன் வீட்டுக்கு அனுப்பி விட்டதாம்.
இவ்வாறு நாளுக்கு நாள் குள்ளநரிக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.பழி வாங்கப்பட்ட பணியாளர்கள் நீதிமன்றம் செல்லத் தயாராகி வருகின்றார்களாம்.

அபகரித்து உலகத்தையே கைப்பற்றிய ஆனானப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே மண்ணாகிப் போய் விட்டது.இந்த லும்பன் கும்பலின் கொட்டம் அடங்காமலா போய் விடும்?

Thursday 22 September 2011

குமுதம் குழுமத்தை ஆட்டையப் போட்டுட்டாய்ங்க....

.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரிய விரட்டுன கதையா,சொம்பு தூக்கிட்டு  குமுதம் குழுமத்திற்கு வந்த வரதராசப் பிடாரி அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் ஊர்ப்பிடாரியை விரட்டிடுச்சாம்.குமுதம் குழுமம் மொத்தத்தையும் ஆட்டையைப் போட்டுடுச்சாம்.இது தெரிந்து அங்கு வேலை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.இரண்டு நாட்களாக அலுவலகமே மயான அமைதியில் இருக்குதாம்.

பொய்ச் செய்தியை எப்பொழுதும் அதிகமாகச் சொல்லும் வம்பானந்தா இந்த உண்மைச் செய்தியைச் சொல்லுப்பா.

குமுதம் ஊழியர்களோ ஊர்ப்பிடாரி அமெரிக்காவில் இருந்து வந்து தங்களை மீட்பார் என்று நம்புகின்றார்கள்.
வருவாரா?மீட்பாரா?

நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 3கோட்டை நிருபர்கள் அறையில் அடிதடி

பெயர்.முத்துக் கிருஷ்ணன் என்கின்ற மாமா முத்துக் கிருஷ்ணன்.வயது சுமார் 55.

இவரை அதிர்ஷ்டம் முத்துக்கிருஷ்ணன் என்றால் தான் பொதுவாக அடையாளம் தெரியும்.இவர் பத்திரிக்கைத் துறையில் பல நிறுவனங்களில் தலைமை நிருபராகத் தலைமைச் செயலகத்திலேயே பல ஆண்டுகளாக வலம் வருபவர்.இன்று வரை இவருக்கு ஒரு செய்தியையும் உருப்படியாகக் கொடுக்கத் தெரியாது.ஆனால் இவருக்கு எல்லா அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நன்றாகவே தெரியும்.பர்மா பஜாரில் வரும் புதிய பொருட்களை வாங்கிக் கொடுத்தே பல அதிகாரிகளைத் தன் கைக்குள் வைத்திருப்பவர்.

மதுரையில் இருந்து வெளிவரும் ஒரு நாளிதழின் தலைமைச் செயலக நிருபராகப் பணியாற்றி வருபவர் சீனிவாசன்.இவர் தானுண்டு தன் வேலையுண்டு என்று யார் வம்புக்கும் போகாமல் தனது வேலையைச் செய்து கொண்டிருப்பவர்.இவர் பணியாற்றும் பத்திரிக்கையின் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணனுக்கு நெருக்கமாம்.இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி சீனிவாசனுக்குப் போட்டியாக அதே பத்திரிக்கையின் தலைமைச் செயலக நிருபராக அடையாள அட்டை பெற்றுக் கொண்டாராம்.இதனால் கோபம் அடைந்த சீனிவாசன் முத்துக்கிருஷ்ணனிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டுள்ளார்.வாக்குவாதம் முற்றிய நிலையில் கோட்டைப் பத்திரிக்கையாளர் அறையில் வைத்தே பளார் பளார் என 4 அறை கொடுத்தாராம் சீனிவாசன்.

சீனிவாசன் கொடுத்த அடியில் நியாயம் அருகிலிருந்த நிருபர்கள் முத்துக்கிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.பாலிமர் தொலைக்காட்சியின் தலைமை நிருபர் என்று சொல்லும் நீ இன்னொரு பத்திரிக்கையின் தலைமை நிருபர் என்று எதற்கு கார்டு வாங்கினாய்?என்று அடி வாங்கிய முத்துக்கிருஷ்ணனிடமே அருகிலிருந்த நிருபர்கள் ஆளாளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்தானாம் முத்துக்கிருஷ்ணன்.
அறுக்க மாட்டாதவனுக்கு எதுக்கு 58 அறுவான்னு சொல்வாங்க அது போல எழுதப்படிக்கத் தெரியாத இந்த முத்துக்கிருஷ்ணனுக்கு எதுக்கு 2 பத்திரிக்கையில் தலைமை நிருபர் என்ற அடையாள அட்டை?

முத்துக்கிருஷ்ணனுக்குத் தலைமை நிருபர்ன்னு அடையாள அட்டை கொடுத்த இந்த இரண்டு நிறுவன முதலாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இத்ற்குத் தீர்வு கிடைக்கும்.

நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 2


இவர் பெயர் செல்வராஜ் என்கின்ற ஆப்டர் நூன் செல்வராஜ்.வயது சுமார் 55

இவர் நியூஸ் ஆனந்தனின் கவர் கூட்டாளி.இவரும் தன்னை பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொண்டு அடையாள அட்டை வைத்திருப்பவர்.குறிப்பிட்டுச் சொல்லும் படி எந்தப் பிரபல பத்திரிக்கையிலும் பணியாற்றியது இல்லை.எல்லாமே நாம்கேவாஸ் பத்திரிக்கை தான்.(அர்த்தம் தெரியாதவர்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)இவர் எங்கு வேலை பார்த்தாலும் சம்பளம் முக்கியம் இல்லை.அந்தப் பத்திரிக்கையின் அடையாள அட்டையும்,அந்தப் பத்திரிக்கை சார்பாக வழங்கப்படும் அங்கீகார அடையாள அட்டையும் மட்டும் போதுமானது.

இவருக்கான அடையாளமே சபாரி டிரஸ் தான்.இவர் அணிந்துள்ள எந்த டிரஸ்ஸூமே பணம் கொடுத்து வாங்கியதில்லை.ஏதாவது ஒரு அரசியல் வாதியிடமோ,பணம் வைத்திருப்பவர்களிடமோ அல்லது ரோட்டரி கிளப்,லயன்ஸ் கிளப் நபர்களிடமோ காம்ப்ளிமெண்டா வாங்கியதாக இருக்கும்.அந்த டிரஸ் கொடுத்த நபரிடமே நாலு தடவை அலைந்து திரிந்து தைக்க கூலியும் வாங்கிடுவார்.

பொதுவாக பத்திரிக்கைத் துறையில் சபாரி டிரஸ் போட்ட நபர் என்றாலே கவர்,காம்ப்ளிமெண்ட்டுக்காக அலைபவர் என்பதும் நான்கெழுத்து கோர்வையாக எழுதவோ  படிக்கவோ தெரியாத நபர் என்பதும் தான் அர்த்தம்.

இப்படிப்பட்ட நபர்கள் ஓசியில் பிரியாணி பொட்டலம் கிடைக்கிறது என்றால் பத்து கிலோ மீட்டர் என்றாலும் பஸ்ஸில் பயணம் செய்து சாப்பிட்டு விட்டு திரும்பி வருவார்கள்.பஸ்ஸூக்கு பத்து ரூபாய்,ஆனால் பிரியாணி 50 ருபாய் என்று அதற்கொரு வியாக்கியானம் சொல்வார்கள்.

இவர் நியூஸ் ஆனந்தனுடன் சேர்ந்து கவர் கலெக்‌ஷனுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்.இப்படித்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது நியூஸ் ஆனந்தனுடன் திண்டுக்கலுக்கு சென்று கம்பி எண்ணி விட்டு வந்தவர்.இவர்கள் இருவரும் கம்பி எண்ணிய செய்தி தினத்தந்தி நாளிதழில் புகைப்படத்துடன் அனைத்துப் பதிப்புக்களிலும் தமிழகம் முழுவதும் வெளியாகியது.இப்படிப்பட்ட சிறப்புக்களைக் கொண்ட இவர்கள் இப்பொழுதும் சென்னை கோட்டையில் அமைச்சர்களின் அறைகள் முதல் அதிகாரி அறைகள் வரை வலம் வந்து,வசூல் செய்து  கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நபர்களுக்கும் செய்தித்துறை அடையாள அங்கீகார அட்டை கொடுத்து முதல்வர் பேட்டியில் முன் வரிசையில் அனுமதிக்கின்றனர்.இவரை இன்னும் வேலையில் வைத்திருக்கும் அந்த முதலாளியையும் இவனுக்கு அரசு அடையாள அங்கீகார அட்டை இவர்களை ஊக்குவிக்கும்  செய்தித்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் தான் இவர்கள் திருந்துவார்கள்.நெஞ்சு பொறுக்குதில்லையே! அத்தியாயம் 1


இவரது பெயர் ஆனந்தன் என்கின்ற நியூஸ் ஆனந்தன்.வயது சுமார் 60.
இவர் ஒரு காலத்தில் ஓரிரு பத்திரிக்கை நிறுவன்ங்களில் வேலை பார்த்தார்.இப்பொழுது எந்த பத்திரிக்கை நிறுவனத்திலும் வேலை பார்க்கவில்லை.இருந்தாலும் தன்னை பத்திரிக்கை நிருபர் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை மிரட்டியும் ஏமாற்றியும் பணம் பறிப்பதையே தனது தொழிலாக்க் கொண்டிருக்கிறார்.
இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். எவ்வளவோ செய்திகளை இவர் எழுதியிருக்கலாம்.ஆனால் இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறையச் செய்திகள் இருக்கிறது.

முதலில் ஒன்றைப் பார்ப்போம்.

சென்னை அருகில் உள்ள மாங்காடு கோயில் நிகழ்ச்சிக்குச் இவர் சென்ற பொழுது அதன் அறங்காவலரிடம்(மணலியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்) பத்திரிக்கைக்காரங்க வந்துருக்கோம்ல,கோயிலுக்கு இவ்வளவு செலவு பண்றீங்கள்ல,எங்களுக்கு ஒரு சவரன் தங்கம் கொடுத்தீங்கன்னா கோயிலைப் பத்தி இன்னும் சிறப்பா எழுதுவோம்ல என்று அவரிடம் உரத்த குரலில் கேட்டுள்ளார்.இதைச் சற்றும் எதிர்பார்க்காத அறங்காவலர் அதிர்ச்சிக்குள்ளானார்.
இது தான் ஆனந்தன்.இதுக்கே நீங்கள் முகத்தைச் சுழித்தால் எப்படி?முழுவதையும் படியுங்கள்!
இந்த ஆனந்தன் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அந்த நிகழ்ச்சிக்குத் தொடர்புடைய முக்கிய நிர்வாகியிடம் உரத்த குரலில் அதிகார தோரணையில் பணமாகவோ பொருளாகவோ கேட்டுப் பெறுவதை வழக்கமாகக் கொண்டவர். இவரது செயலால் சக பத்திரிக்கையாளர்கள் பலமுறை அவமானப்பட்டுள்ளனர்.அதனால் இவரைக் கண்டாலே நேர்மையான பத்திரிக்கையாளர்கள் காத தூரம்       ஓடுவதுண்டு.இவர் எந்தக் கூச்ச நாச்சமும் இன்றி யாரிடம் வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் இப்படிக் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டவர்.
அரசியல் கட்சித்தலைவர்கள்,முதல்வர்,அமைச்சர்கள் நட்த்தும் பத்திரிக்கையாளர் சந்திப்புக்களில் முதல் வரிசையில் அமர்ந்து கொள்வார்.எதில் இருப்பவர் மிகவும் நெருக்கமானவர் என்பதைப்போல் காட்டிக் கொண்டு உரத்த குரலில் கேள்விகளைக் கேட்பார்.சந்திப்பு முடிந்த பின் காதைச் சொறிந்து கொண்டு கவர் கிடைக்கும் வரை.பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த இட்த்திலேயே நின்று கொண்டிருப்பார்.
கடந்த கால இவரது திருவிளையாடல்களை எழுதினால் பல புத்தகங்கள் போடலாம்.சில குறிப்பிடப்பட்டவற்றை மட்டும் பார்ப்போம்.

நான்கைந்து வருடங்களுக்கு முன்பு.ஒரு அநாதரவான பெண்மணியிடம்,அனைத்து மந்திரிகளும் என் சட்டைப் பாக்கெட்டில்,நான் உனக்கு நான் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி 4 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றி விட்டார்.வட்டிக்கு வாங்கி இவருக்கு பணம் கொடுத்த அந்தப் பெண்மணியோ இவரிடம் பல தடவை கேட்டும் பணத்தையும் வாங்க முடிய வில்லை,வேலையையும் வாங்க முடியவில்லை.ஆகவே வேறு வழியின்றி இவரது வீட்டின் அருகில் மண்ணெண்னெய் ஊற்றித் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டு விட்டார்.ஆனால் இவருகுத் தெரிந்த சில காவல்துறையினர் உதவியுடன் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். 

இது போக நாடு விட்டு நாடும் இவரது லீலைகள் நடைபெற்றது.சிறிது காலம் இவர் மலேசியாவில் ஒரு பத்திரிக்கையில் வேலை பார்த்தார்.அங்கு வேலை பார்க்கும் பொழுது இவர் செய்த பகீரத மோசடியால் மலேசிய பத்திரிக்கை நிறுவனம் இவர் மீது அங்கு காவல்துறையில் புகார் கொடுத்தது.ஆனால் இதனை முன் கூட்டியே மோப்பம் பிடித்த இவர் அங்கிருந்து எப்படியோ தப்பித்து ஓடி வந்து விட்டார்.இன்றும் இவர் மலேசியா செல்ல முடியாது.வழக்கு காத்திருக்கிறது.

அதன் பின் இவரது இன்னொரு மோசடி மிகப் பிரபலம்.

இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் பொன்னையன் நிதி அமைச்சராக இருந்தார்.அப்பொழுது பொன்னையன் நான் சொன்னால் எந்த வேலையையும் உடனே முடித்துக் கொடுப்பார் என்று சொல்லி பலரிடம் பணத்தைக் கறந்து விட்டார்.ஆனால் ஒரு மோசடியில் வசமாகச் சிக்கி விட்டார். இவரும் ஆனந்த முரசு என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த கணபதி என்பவரும்,செய்தித் துறை அதிகாரி ஒருவரும் கூட்டாகச் சேர்ந்து ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு பொன்னையனிடம் சொல்லி அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி 40 லட்ச ருபாயை மோசடி செய்து விட்டனர்.பணம் கொடுத்தவர் இந்த மூவர் கும்பலிடம் பல முறை கேட்டும் அனுமதியும் கிடைக்க வில்லை,பணமும் திரும்பக் கிடைக்க வில்லை.

தொடர்ந்து இவர்களை நெருக்கவே, இவர் தான் அமைச்சர் பொன்னையனிடம் பணத்தைக் கொடுத்து விட்டேன் என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தார்.ஆனால் எப்படியோ அமைச்சர் தரப்புக்கு இந்தத் தகவல் சென்று விடுகிறது. அமைச்சர் பொன்னையனோ தான் யாரிடமும் பணம் வாங்க வில்லை என்று மறுத்ததோடு, பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் வாங்கி இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடுகிறார்.விளைவு,அமைச்சரின் நடவடிக்கையால் இவரும்,ஆனந்த முரசு கணபதியும் கைதாகின்றனர்.இவர்களின் இன்னொரு கூட்டாளியான செய்தித் துறை அதிகாரியோ முன் ஜாமீன் பெற்றுத் தப்பித்து விட்டார்.

ஆனால் ஜெயிலுக்குச் சென்ற பின்னும் இவரது கொட்டம் அடங்கவில்லை.அமைச்சர்கள் அறை,சட்டமனற உறுப்பினர்கள் அறை,தொழிலதிபர்கள் அலுவலகம்,கவுன்சிலர்கள் என எங்கு சென்றால்,யாரைச் சந்தித்தால் பணம் கிடைக்கும் என பட்டியலிட்டுக் கொண்டு இவரைப் போன்ற செயல்பாடு கொண்ட மற்ற சில பத்திரிக்கையாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு வாடகைக் காரில் வசூல் வேட்டைக்குக் கிளம்புவார்.அந்த முக்கியப் பிரமுகர்களிடம் இவர்கள் சொல்லும் காரணங்கள்,ஏதோ ஒரு பிரபல பத்திரிக்கையின் பெயரைச் சொல்லி,அதில் பணியாற்றும் நிருபர் ஒருவர் விபத்துக்கு உள்ளாகி உயிருக்குப் போராடி மருத்துவமனையில் இருக்கிறார்.மருத்துவச் செலவுக்கு பணம் தேவை என்பது தான்.அவர்களும் இவர் சொல்வதை உண்மை என்று நம்பி பணத்தைக் கொடுப்பார்கள்.குறைந்த பட்சம் சில ஆயிரங்களாவது கிடைக்கும்.  

இப்படி பலவிதமான காரணங்களைச் சொல்லி அவவப்பொழுது வசூலுக்குச் சென்று விடுவார்கள்.வசூலாகும் பணத்தில் கார் வாடகை போக மீதம் உள்ள தொகையை உடன் இருப்பவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்துக் கொள்வார்கள்.

அதிலும் தேர்தல் அறிவிப்பு வந்து விட்டால் இவருக்கும் இவரது கூட்டாளிகளுக்கும் இன்னும் கொண்டாட்டம் தான்.வழக்கம் போல் தன்னுடன் இருவரை அழைத்துக் கொண்டு வாடகைக்கார் பிடித்து சென்னை மட்டுமல்ல,தமிழகம் முழுவதும் பயணம் செய்து களத்தில் நிற்கும் வேட்பாளர்களைச் சந்தித்து,பத்திரிக்கையில் உங்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிட்டு வெற்றியடையச் செய்கிறோம் என்று சொல்லி இவர்களின் வசூல் வேட்டை கொடி கட்டிப் பறக்கும்.ஆனால் இவர்களின் கெட்ட நேரம்.சென்ற சட்டமன்றத் தேர்தலின் பொழுது வசமாக மாட்டிக் கொண்டார்கள்.
சென்ற சட்டமன்றத் தேர்தலின் பொழுது இவரும்,இவருடன் இவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டு, தென் மாவட்டங்களில் வேட்பாளர்களிடம் கதை விட்டு வசூலை முடித்துக் கொண்டு,அதன்பின் திண்டுக்கல்லில் இவர்களின் பித்தலாட்டத்தைத் தொடங்கினார்கள்.
திண்டுக்கல்லில் தேமுதிக கட்சியின் வேட்பாளரிடம் நாங்கள் தினமும் மலரும் நாளிதழில்  இருந்து வருகிறோம்.உங்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிட்டு வெற்றிபெறச் செய்கிறோம் என்று வழக்கமான கதையை எடுத்து விட்டுள்ளார்கள்.இவர்களது பேச்சாலும் நடவடிக்கையாலும் சந்தேகம் அடைந்த  அவரோ, உஷாராகி, உள்ளுர் நிருபர்களிடம் விசாரித்ததில் இந்தக் கும்பல் பணம் பறிக்கும் கும்பல் என்று கண்டுபிடித்து விட்டார்.அதன் பின் காவல்துறையிடம் புகார் அளிக்கவே,இவரும் இவர் உடன் சென்ற இன்னொரு போலி நிருபரும் கைதாகி ஜெயிலுக்குச் சென்றனர்.தாடி வைத்திருந்த இன்னொரு போலி நிருபர் தப்பித்து விட்டார்.
ஆனாலும் இந்தக்கும்பலின் கொட்டம் இன்னும் அடங்கவில்லை.வழக்கம் போல கண்ணில் படும் அனைவரிடமும்,எல்லா மந்திரியும் என் சட்டைப் பையில்,எதும் காரியம் இருந்தாச் சொல்லுங்க முடிச்சுடலாம்,என்று வலம் வருகிறது. 

இவரின் இப்படிப்பட்ட செயலால் மற்ற பத்திரிக்கையாளர்கள் மனம் வருந்துவதோடு இவனையெல்லாம் எப்படி இதற்கு முன் இவன் வெலை செய்த நிர்வாகங்கள் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தனர்? இப்படிப்பட்ட ஜென்மங்கள் பத்திரிக்கைத் துறைக்கே அவமானச் சின்னங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.இப்படிப்பட்ட ஆட்களை வேலைக்கு வச்சுருந்தான் பார்,அந்த முதலாளியை சொல்லணும, இவனுங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலை கொடுக்குற முதலாளி தான் இதுக்குப் பதில் சொல்லனும்.இவனுங்க மேல நடவடிக்கை எடுத்தாத் தான் இவனுங்க திருந்துவானுங்க..

இதனைப் படிக்கும் முதலாளிகளின் காதில் அவர்களின் வசவு கேட்கட்டும்.


Friday 16 September 2011

அப்பாடா..நிம்மதிப் பெருமூச்சு விடும் பி.ஆர்.ஓ.க்கள்.மானியக் கோரிக்கை முடிந்த பின்பு தான் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றார்கள் பி.ஆர்.ஓ.க்கள் மற்றும் உதவிப் பி.ஆர்.ஓ.க்கள்.இதற்குக் காரணம்.செய்தி சேகரிக்க வரும் பத்திரிக்கையாளர்களை விட பிரியாணிக்கும்,கவருக்கும்,காம்ப்ளிமெண்ட்டுக்கும் வரும் நபர்களின் தொல்லை தான் அதிகமாக இருக்கிறதாம்.கடைக்கு வராத பத்திரிகையில் இருந்து செய்தி சேகரிக்க வருவதாகச் சொல்லி தலைமைச் செயலக செய்தியாளர் அறையில் கடை விரிப்பவர்கள் தொல்லை அதிகமாம்.இவர்களால் உன்மையிலேயே செய்தி கொடுக்கும் செய்தியாளர்களுக்கும்,செய்தித் துறை அதிகாரிகளுக்கும் பெரும் மண்டையிடியாம்.

இதனைத் தடுக்க வேண்டிய செய்திப் பிரிவோ விழி பிதுங்கி நிற்குது.செய்தி சேகரிக்க வரும் நிரூபர்களின் நிலையும் இது தான்.உச்சக் கட்டமா சாப்பாட்டு பொட்டலத்துக்க்காக 200 பேருக்கு மேல காத்திருக்காங்கன்னு செய்தித் துறை கொடுக்குற பட்டியலால அமைச்சர்களின் அறையே அதிர்ந்து போனதாம்.

இப்பத் தான் அவங்க நிம்மதி பெருமூச்சு விடுகின்றார்களாம்

சம்பளத்துக்குப் பதில் மேட்டராமே?அரசியல் பத்திரிக்கையில் ஆசிரியர் பொறுப்புகளில்(உதவி,செய்தி,இதர..துக்கடா.....) இருப்பவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாகச் சம்பளம் போடலியாம்.இதைப் பத்தி உரிமையாளரிடம் அலுவலகத்தில் ஒருத்தர் மெதுவாக நினைவூட்டவே அவர் அடித்த கமெண்ட் அலுவலத்தில் இப்பொழுது பிரபல்யம்.

இரண்டு மாசம் என்ன இரண்டு வருஷம் சம்பளம் கொடுக்கலைன்னாலும் இவங்களுக்கு பிரச்சனை கிடையாது.ஏற்கனவே வேலை பார்த்த பத்திரிக்கையில இவர்கள் அடித்த கொள்ளையே பல தலைமுறைக்கு வரும்.இதெல்லாம் தெரிஞ்சு தான் நான் வேலைக்கு வச்சுருக்கேன்.
நான் கொடுக்குற சம்பளம் எல்லாம் ஒரு மேட்டரா?இந்தப் பத்திரிக்கையிலும் இவங்க பல மேட்டர் பண்ணிக்கிட்ருக்காங்க.இவங்களைப் பத்தின செய்தி கோட்டையிலேயே கொடி கட்டிப் பறக்குது.விடுங்க சார்...

Monday 5 September 2011

இவரா உத்தமர்?


டி.எஸ்.ரவீந்திரதாஸ்.
இவரைப்பற்றி ஒரு உங்களுக்குக் கூட  தெரியாத சிறு அறிமுகம்.

இவர் ஆரம்பத்தில் சென்னைப் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார்.அந்த சங்கத்தில் நிர்வாகியாக இருந்து கொண்டே எடிட்டர் கில்டு என்ற ஒரு அமைப்பை தனியாக ஏற்படுத்தி அதன் தலைவராக சக பத்திரிக்கையாளர்களிடம் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார்.இதனால் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இவருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் நடந்த தேர்தலில் இவர் தோற்கடிக்கப் பட்டார்.தன் தோல்வியை இவர் அரசியலாக்கினார்.

அதன் பின் சங்கத்தை விட்டு வெளியேறி அதன் பின் ஆரம்பிக்கப் பட்டு ஓராண்டே நிறைவடைந்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(TUJ) என்னும் சங்கத்தில் ஐக்கியமாகிறார்.ஐக்கியமான ஓரிரண்டு ஆண்டுகளில் அந்த அமைப்பைக் கைப்பற்றி அதன் தலைவராகிறார்.அன்றிலிருந்து இன்று வரை இவரே இதன் நிரந்தரத் தலைவர்.இவர் தலைவரான பிறகு இந்த சங்கத்தை அரசியல் கட்சி போல் நடத்துகிறார். தனக்குத் தலையாட்டும் நபர்களுக்கு எல்லாம் அலுவலகச் செயலாளர்,தலைமை நிலையச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புக்களை அரசியல் கட்சி போல் வாரி வழங்குகிறார்.இதன் பிறகு இவரின் முழு நேரப்பணி சங்கத் தொழில் ஆகி விடுகிறது.அரசியல் கட்சிகளைப் போல் நாலு மாதத்திற்கு ஒரு முறை,ஆறு மாதத்திற்கு ஒருமுறை,வருடத்திற்கு ஒரு முறை என மாவட்ட,மாநில மாநாடுகளை நடத்தி வசூல் வேட்டையில் இறங்கினார். 

மாநாடு நடத்திய பொழுது இவரது வசூல் வேட்டைக்கு உதவியாக இருந்தவர்கள் எல்லாம் ருசி கண்ட பூனையாய் ஆளுக்கு ஒரு சங்கம் அமைத்து அவர்களே வசூலிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது தனிக்கதை.
இவர் தலைமையின் கீழ் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(TUJ) செயல்படத் தொடங்கிய பிறகு இவர் தமிழ்நாடு முழுவதும் சென்று சங்க அடையாள் அட்டையை பணம் கொடுக்கும் எல்லோருக்கும் வாரி வழங்குகிறார்.இன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் போலி பத்திரிக்கைகள்,போலி பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் உருவாக இவரே அஸ்திவாரமிட்டார். தமிழ்நாடு முழுவதும்  போலி பத்திரிக்கையாளர்கள் அங்கீகாரம் பெற இவர் வழங்கிய அட்டைகளே காரணமாக அமைந்தது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சங்கத்தின் பெயரால் அவர்களை அண்டிப்பிழைப்பதும்,காரியம் சாதித்துக் கொள்வதும் இவருக்கு வாடிக்கையான ஒன்று.கடந்த திமுக ஆட்சியின் பொழுது இவர் மீது சென்னை மாநகர மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் குமார் ஸ்ரீனிவாஸ் என்பவர் மோசடிப்புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.இது தொடர்பாக இவர் மீது பதியப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

படப்பை அருகில் வீட்டுமனை வழங்குவதாகக் கூறி 200 க்கும் மேற்பட்ட  பத்திரிக்கையாளர்களிடமே இவர் பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.அந்தப் புகாரும் இன்னும் நிலுவையில் உள்ளது.
என் மீது கை வைத்தால் அரசுக்கு எதிராய் பத்திரிக்கையாளர்கள் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் என்று கூறியே காவல்துறை அதிகாரிகளை இதுவரை மிரட்டி வந்தார்.இப்பொழுது ஆட்சி மாறியதால் புழலுக்குச் செல்லும் சூழ்நிலை இருப்பதால் புதிய ஆட்சியைப் மாநாடு நடத்திப் பாராட்டி மகிழ்விக்க வசூல் வேட்டையில் இறங்கியுள்ளாராம்.


வரைப்பற்றி மக்கள் தூதன் என்ற பத்திரிக்கையின் ஆகஸ்டு மாத இதழில் தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்(TUJ)சங்கத்தைப் பற்றி ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.


அதில் இவரது  மோசடிகளைப் பற்றி விளக்கமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ளது.இதை பத்திரிகை துறை சார்ந்த அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதால் இந்தச் செய்தியை கலகக்குரல் நன்றியுடன் எடுத்து வெளியிடுகிறது.மேலும் இவரின் மோசடி பற்றி நமக்குக் கிடைத்த செய்திகளையும் உறுதிப்படுத்தி வெளியிடுகிறோம்.


ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் அரசியல் முதலாளி

அந்த தமிழக‌ பத்திரிக்கை முதலாளி ஊர் முழுவதும் நன்கொடை கொடுக்கிறாராம்.ஆனால் வேலை பார்த்தவங்களுக்கு ஒன்றாம் தேதி சம்பளம் கொடுக்க மனது வர மாட்டிக்காம்.மாதக் கடைசி தான் மாதச் சம்பளம் வருதாம்.வேலை செய்யுறவங்க புலம்பித் தள்றாங்க...ஊர்ச் செய்தியை எல்லாம் எங்களுக்குச் சொல்ற அலெக்ஸ்-பாண்டியா இதை அரசியல் முதலாளி கிட்டச் சொல்லுப்பா...