Tuesday 26 June 2012

குமுதம்-”தான் திருடி பிறரை நம்ப மாட்டாள்”குமுதம் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்குமுதம் தொடர்பான செய்திகள் எழுதி ரொம்ப நாளாச்சு.ஆகவே சில செய்திகள் இந்தப்பதிவில்.

வெளியேற்றப்படும் நிருபர்கள்


குமுதம் குழுமத்தில் இப்பொழுது ஒவ்வொரு நிருபர்களாக கட்டம் கட்டி வருகிறார்கள்.ஜீன் 16ம் தேதி அன்று திடீரென்று மதுரை சீனியர் நிருபர் ப.திருமலையை உடனே புறப்பட்டு தலைமையகத்திற்கு வாங்க. இனிமேல் இங்குதான் வேலைஎன்று அழைத்திருக்கிறார் கோசல்ராம். அந்த உத்தரவை ஏற்று 18ம் தேதி திங்கள் காலை அலுவலகம் வந்திருக்கிறார். இருப்பதிலேயே சீனியர் அவர்தான். வயதிலும்கூட.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக உழைத்து வந்தவர். 
வயதான பெற்றோர் மற்றும் பெரிய குடும்பத்தை திடீரென்று விட்டுவிட்டு சென்னையில் தங்கி வேலை செய்ய முடியாது என்பதை விக்கியிருக்கிறார். உடனே கோசல்ராமோ நிர்வாகம் முடிவெடுத்திருக்கு. முடியலைன்னா லெட்டர் கொடுத்துட்டு போங்கஎன்று தெனாவட்டாகக் கூறியிருக்கிறார். அவரும் ருகிற ஒன்றாம் தேதிவரை காலக்கெடு வைத்து லெட்டர் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அவரிடமிருந்து செல்போன் சிம்கார்டு உட்பட அனைத்தையும் வாங்கிவிட்டு அனுப்பியிருக்கிறார்கள்.திருமலையைப் போன்று ஏழெட்டு பெயர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் வெளியே துத்தியாக வேண்டும் என்னும் முடிவில் இருக்கிறார்களாம்.

து போக குமுதத்தின் புகைப்பட கலைஞர்களான சித்திரம் மத்தியாஸ், கோபால் ஆகியோரைச் சம்பந்தமே இல்லாமல் சேலத்திற்கு ஒருவரும், ராமநாதபுரத்திற்கு ஒருவருமாக மாற்றினார்கள். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம் என்று இந்த ஒரு மாதம் டைம் கேட்டு கடிதம் கொடுத்தும் அதெல்லாம் முடியாது பத்து நாள்தான் டைம். உத்தவை ஏத்துக்கிடுங்க. இல்லாட்டி லெட்டர் கொடுத்துட்டு போங்க. எம்.டி. முடிவு பண்ணிட்டாருன்னு கோசல் சொல்லியிருக்கார்.இப்போ அந்த ரெண்டு பேரும் வெளியில போயிட்டேயிருக்காங்க.

குமுதத்தின் அசோசியட் எடிட்டராக பத்து வருடங்களாக இருந்தவர் ரஞ்சன். திறமைசாலி. அவரைச். சம்பந்தமேயில்லாமல் டம்மியான பப்ளிகேசனுக்கு மாற்றினார். பிறகு வெளியூர் சென்று சர்வே எடுத்து வா என்றார் வரதராசன். அதன்பின் முதுகுவலி காரணமாய் வீட்டில் ஓய்வில் இருந்துவிட்டு மருத்துவ சான்றிதழோடு வந்தவரை கேவலப்படுத்தும் விதமாக சான்றிதழ் மீது நம்பிக்கை இல்லை. நீங்கள் பர்சனல் வேலையாக வெளியில் நடமாடினீர்கள். அதனால் ஒரு கமிட்டியை போட்டு விசாரித்த பிறகுதான் ஒப்புகொள்ள முடியும்என கடிதம் கொடுத்து டார்ச்சர் கொடுத்தார்கள். அலுவலகத்தின் உள்ளே நுழையும் போதும், வெளியே போகும் போதும் செக்யூரிட்டிகளை விட்டு சட்டை பேண்ட் பாக்கெட்டெல்லாம் தடவி பார்த்துசெக்கப் செய்துஅசிங்கப் படுத்தினார். (தான் திருடி பிறரை நம்பமாட்டான்) கடைசியில் அவர் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு போனார்.
அடுத்து யாரோ..?

தொடரும் பனிப்போர்

 

ஜான் வில்கின்ஸூக்கும் கோசலுக்கும் இப்பொழுது பனிப்போர் உச்சத்தில் இருக்கிறதாம்.கோசலுக்கு ஆதரவாய் வரது இருப்பதால் ஜான் வில்கின்ஸ் ஏறத்தாழ ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருக்கிறாராம்.

எவ்வளவு அடியாளு வேலை பார்த்தேன். அன்னைக்கு நான் மட்டும் இல்லைன்னா ஓனர் செட்டியாரு ஆபீசுக்குள்ள வந்திருப்பாரு. எம்.டி. வெளிய இருந்திருப்பாரு. நன்றிகெட்ட பசங்க என்று கோர்ட்டு வட்டாரத்து நண்பர்களிடம் புலம்புகிறாராம்.தலைவர்’ வரது இவரை எந்த மீட்டிங்கிற்கும் கூப்டறதில்லை.இது இவரை விரக்தியின் விளிம்பில் நிறுத்தி விட்டதாம். சமீபகாலமாக ஜான் மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களாக இருக்கும் லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டுகள்,புகைப்படக்காரர்கள் உட்பட அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவிட வேண்டும் என்ற திட்டமும் நடைமுறைக்கு வந்திருந்தது. அவர்களுக்கு மாற்று நபர்களை கோசலும், கங்காணிணாவும் கொஞ்சம் கொஞ்சம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்தக் கோபத்தில் தான் இளையராஜா எழுதிய நூல் வெளியீட்டு விழாவைப் புறக்கணித்தாராம்.மேலும் அலுவலகத்தில் அவருக்கு மேலே விகடனில் இருந்து வந்த வெங்கட்டைப் போட்டிருக்கிறார்களாம்.
இதுவும் வில்கின்ஸுக்கு கடுப்பாம்.அவர் வெளியேறுவாரா இல்லை வெளியேற்றப்படுவாரா என்று தெரியாத நிலையில்கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்புதான்வரதாவுக்கு ஏதோ திடீர் சிக்கல். கோர்ட் வட்டாரத்திலும், வெளியிலும் சில வேலைகளை செய்ய வில்கின்ஸை மீண்டும் கூப்பிட்டிருக்கிறார்கள்.அதனால் டப்பாச்சோறு ஜான் வில்கின்ஸ் மீண்டும் சிலிர்த்துகிட்டு நிற்கிறார்.(காரியம் முடிந்ததும் கழட்டிவிடப்படுவார் என்றும் சொல்கிறார்கள்)

இது எத்தனை நாளைக்கோ..?

ஊர் உலகம் நம்புவதற்கு ஒரு நிகழ்ச்சி


நிர்வாக இயக்குனர் தான் தான் என்று சொன்னால் ஊர் உலகத்தில் யாரும் நம்ப மறுக்கிறார்களே என்பதனால் அதை நிலை நிறுத்த என்ன செய்வது என்னும் நினைப்பில் உதித்தது தான் இளையராஜாவையும்,கமல்ஹாசனையும் வைத்து நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்ச்சி.வரதுவைப் பற்றித் தெரிந்ததாலோ என்னவோ அரங்கில் மின்சாரம் பலமுறை போய்ப் போய் வந்ததாம்.
இதில் பேசிய கோசல்ராம்,பாவலர் வரதராஜனையும் குமுதம் வரதராஜனையும் ஒப்பிட்டுப் பேசியதைக் கேட்ட அரங்கில் இருந்தவர்களே சிரிப்பாய்ச் சிரித்தார்களாம்.
ஏண்டா...புரட்சியே வாழ்க்கை. பொதுநலனே பாதை என்று கடைசிவரை சொத்து சேர்க்காமலேயே மக்களுக்காக ஊர்தோறும் பாட்டுப் பாடித் திரிந்த பாவலர் வரதராஜன் எங்கே...!
பிழைக்கிறதுக்கு இடமும் கொடுத்து, போனால்போகிறதென்று கொஞ்சம் பங்குகளையும் இனாமாகக் கொடுத்து அழகு பார்த்த செட்டியார் குடும்பத்துக்கே துரோகம் செய்து, சொத்துக்களையே அடித்து சுருட்டும் இந்தவரதராஜன் எங்கே என அனைவரும் காறித்துப்பினர்.
கேட்கும் நிலையில் வரது இருந்தால் தானே..!
*

நடராஜன்,சோ வரிசையில் இப்பொழுது நட்ராஜ்


குமுதம் பஞ்சாயத்தில் இப்பொழுது பழனியப்பன் சிதம்பரம் ஏதோ வகையில் இடைஞ்சலாக இருக்கிறாராம்.ஆகையால் தொடர்ந்து இப்பொழுது அவரைக் குறிவைத்து எழுதித் தள்ளிவருகிறார்களாம். 
20.5.2012 தேதியிட்ட ரிப்போர்ட்டர் இதழில் ஒரே துறை...ஓஹோ ஊழல். சிக்கும் முன்றாவது அமைச்சர்என்ற தலைப்பிட்டு அட்டைப்படக் கட்டுரையாக ப.சிதம்பரத்தை காய்ச்சியிருந்தார்கள். அடுத்து 27.5.2012 தேதியிட்ட ரிப்போர்ட்டரின் வம்பானந்தா பகுதியில் போட்டு தாளித்திருந்தார்கள். கடந்த ரிப்போர்ட்டர் இதழில், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி பேட்டியை வைத்து சிதம்பரம் தப்பவே முடியாதுஎன வெளீயிட்டுச் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து எதிராக எழுதி வருகிறார்களாம்.
இதே பழனியப்பன் சிதம்பரத்தின் மகன் கார்த்தியை இரண்டு வருடங்களுக்கு முன்பு காத்திருந்து காத்திருந்து கெஞ்சியதையும் அவருக்கு ஆதரவாய் எழுதித் தள்ளியதையும் இப்பொழுது சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்களாம்.மாறன்களை ஏனோ இப்பொழுது கண்டுகொள்வது இல்லையாம்.திரைமறைவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
*
எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையில் இருக்கும் வரதராஜன் இப்பொழுது தமிழ்நாடு பப்ளீக் சர்வீஸ் கமிஷன் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நட்ராஜ் பற்றிய செய்தி அனைத்தையும் வரிந்து கட்டி வெளியிட்டு வருகிறாராம்.எதற்குத் தெரியுமா..?ஆளுங்கட்சியின் அனுசரணைக்குத் தான்.இது நட்ராஜூக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
கன்னித் தீவு கதை போல் குமுதம் பிரச்சனை நடைபெற்றுவருகிறது,என்று தான் விடிவுகாலமோ என்று அனைவரும் அலுத்துக் கொள்கிறார்கள்.

Thursday 21 June 2012

புதிய தலைமுறை-பிரேம் சங்கர் & அல்லக்கைகள் நடமாடும் ஏரியா..! திறமையாளர்களே ஜாக்கிரதை...!
புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் பிரேம் சங்கர் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு கொட்டம் அடிப்பது குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தோம்.இப்பொழுது முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்துடன் இயங்கி வருகிறார்.
கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் மட்டும் சாம்பிள்.


பொன்.மகாலிங்கம் என்பவர்  புதிய தலைமுறையில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணிபுரிகிறார்.இவர் இதற்கு முன் இந்தியா டுடே இதழிலும் அதன் பின் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் பணிபுரிந்தவர்.அங்கு பணியாற்றும் பொழுது சக ஊழியர்களின் ஒத்துழைப்புடனும் துணையுடனும் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொண்டவர்.இந்தியா டுடே இதழில் அவர் எழுதிய செய்திகள் அனைத்திலும் அவருடன் பணியாற்றி இப்பொழுது ZEE தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரியும் நிருபர் கோவில்பட்டி சரவணனின் சாயல் நன்கு தெரியும் என்று அவருடன் பணியாற்றியவர்கள் சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதி முகாம்கள் குறித்து அனைத்து பத்திரிகைகளும் எழுதிய பின்பு அந்த சமயத்தில் மகாலிங்கம் இந்தியா டுடேவில் எழுதினார். கருணாநிதி ஏதாவது பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால்,அதற்கு அறிக்கை விடும் பொழுது தி ஹிந்து,இந்தியா டுடே போன்றவற்றைப் பிரதானப்படுத்தி மேற்கோள் காட்டுவது வழக்கம்.கருணாநிதியிடம் இருக்கும் ஆரியப் பாசம் அது.
கருணாநிதி தன் இயல்புக்கு இணங்க ஒரு அறிக்கையில் இந்தியா டுடே வில் வெளியான மகாலிங்கம் எழுதிய அகதி முகாம் கட்டுரையை மேற்கோள் காட்டிவிட நான் எழுதிய பின்பு தான் இந்தப்பிரச்சனையில் கருணாநிதி அக்கறை செலுத்தினார் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்ஆனால் உண்மை அதுவல்ல என்பது துறையை நன்கு கவனிப்பவர்களுக்குத் தெரியும்.
 
இவ்வாறு பத்திரிகைத்துறையைக் கடந்து வந்த மகாலிங்கம் இப்பொழுது புதிய தலைமுறையில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார்.ஆல் இன் ஆல் பிரேம் சங்கர் கோஷ்டியைச் சேர்ந்தவர்.

***
முரளிதரன். நிறையப் படிப்பவர்.வாசிப்பவர்.இவர் இந்தியா டுடே,என்.டி.டிவி.ஹிந்து ஆகியவற்றில் பணிபுரிந்தவர்.இவரும் புதிய தலைமுறையில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார்.தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர்.

கடந்த வாரம் சென்னைக்கு அருகே உள்ள பள்ளிக்கரணையில் குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிந்ததல்லவா..?இதனைப் புதிய தலைமுறை தொடர்ந்து பலமுறை இடைவிடாமல்  பல்வேறு கோணங்களில்ஒளிபரப்பியது.குடியிருப்புவாசிகள்,தீயணைப்புத்துறை,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,சென்னை மாநகராட்சி ஆணையாளர் எனப் பலரது கருத்துக்களையும் செய்தியாக்கித் தொடர்ந்து அப்டேட் செய்தது.வாசகர்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு.
இதில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்புடையவற்றை ஆராய்ந்து எதும்  பின்னணித் தகவல்கள் இருப்பின் அறிந்து அதனைப் பரபரப்புச் செய்தியாக்குமாறு புதிய தலைமுறையின் சீப் எடிட்டர் (பொலிட்டிகல்) குணசேகரன் செய்தியாளர் முரளிதரனைக் கேட்டுக் கொள்கிறார்.அதன் படி முரளிதரன் அன்று காலையில் இருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் இது தொடர்புடையவர்களிடமும் அலைந்து திரிந்து தனது பணியை முடித்து விடுகிறார்.நேரம் மாலை மணி 6.30.

தொலைக்காட்சி நிலையங்களில் நிருபர்கள் தாங்கள் சேகரித்த தகவல்களைக் கணிப்பொறியில் தட்டச்சு செய்து அதன் ஒரு பிரதியைச் செய்திப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.செய்தி வாசிப்பாளர் அதில் ஒரு பகுதியை வாசிப்பார்.பின்னணியில் சம்பந்தப்பட்ட செய்திக்குத் தொடர்புடைய நிகழ்வுகள் காட்டப்படும். சேகரித்த செய்திகளில் இன்னொரு பகுதியை கேமரா முன் நின்று சொல்லி விட்டு (P.to Camara) புதிய தலைமுறைக்காக செய்தியாளர் என்று நிருபரின் பெயர் சொன்னால் பணி முடிந்தது.இதுதான் முறை.

தான் சேகரித்தவற்றை இரவு 8 மணிச் செய்தியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முரளிதரன் அலுவலகத்திற்கு பரபரப்புடன் கிளம்புகிறார்.ஏனென்றால் புதிய தலைமுறை பள்ளிக்கரணை பிரச்சனையை பெரிய அளவில் கொண்டு சென்றது.அலுவலகம் செல்லும் வழியில், அலுவலகத்தில் இருந்து சக ஊழியரான மகாலிங்கத்திடம் இருந்து போன் வருகிறது.
முரளி,நீங்க வருவதற்கு லேட்டாகி விடும்.8 மணிச் செய்திக்கு ரிஸ்க்.அதனால என்கிட்ட தொலைபேசியில் டீடெயில்ஸ் சொல்லிடுங்க.நான் டைப் பண்ணி வச்சுடறேன்.நீங்க வந்தவுடன் கேமரா முன் நின்னு கொஞ்சம் பேசிடுங்க.சரியா இருக்கும்.வேலை ஈசியா முடிஞ்சுடும் எனச் சொல்கிறார்.முரளிக்கும் இது சரியாகத் தெரியவே சேகரித்த தகவல்கள் அனைத்தையும் தொலைபேசியில் சொல்லுகிறார்.

மகாலிங்கம்

சொல்லி முடித்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி 7.30 மணிக்குச் செல்கிறார்.8 மணிச் செய்திக்கு சரியாய் இருக்கும் என நினைத்து உள்ளே நுழைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஏனென்றால் இவரது செய்தி இரவு 7 மணிச் செய்தியிலேயே ஒளிபரப்பாகி விட்டது.இவர் சேகரித்த செய்திகளைத் தன்னுடையதாக்கி தனது பெயரிலேயே கேமரா முன்பு நின்று சொல்லியிருக்கிறார் சக நிருபர்.அது ஒளிபரப்பாகியும் விட்டது.(பிரிண்ட் மீடியாவில் உள்ளவர்களுக்காக சிம்பிளாகச் சொன்னால் அவர் செய்த ஸ்டோரி இன்னொரு நிருபர் பெயரில் வெளிவந்துவிட்டது.)

அவர் வேறு யாரு..?சாட்சாத் மகாலிங்கம்.முரளிக்கு கடும் அதிர்ச்சி.தான் நாள் முழுவதும் வெயிலில் அலைந்து திரிந்து சேகரித்த செய்தி இன்னொருவர் பெயரில் ஒளிபரப்பாகி விட்டது.இது உழைப்புத் திருட்டு.அதுவும் யார் தன்னிடம் அக்கறையாய் விசாரித்தாரோ அவரே இந்த மோசடியைச் செய்ததைக் கண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.மகாலிங்கத்தைத் தேடுகிறார்.ஆள் எஸ்கேப். தொலைபேசியையும் எடுக்கவில்லை.
அதன்பின் தன்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்ன சீப் எடிட்டர் (பொலிட்டிகல்) குணசேகரனிடம் போய்ப் புகார் செய்கிறார். நோ ஆக்‌ஷன்.
அதன் பின் சேனலின் ஆல் இன் ஆல் பிரேம் சங்கரின் மேஜைக்கு புகார் போகிறது.அமைதி காக்கப்படுகிறது.நடவடிக்கை எடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டு நாள் கழித்து இன்ப அதிர்ச்சி.யாருக்கு..?
மகாலிங்கத்துக்கு.அவர் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் நிலையில் இருந்து பதவி உயர்த்தப்பட்டு சிட்டி பீரோ சீப் ஆக நியமிக்கப்படுகிறார்.இது தாண்டா பிரேம் சங்கர் என்று சொல்லாமல் சேட்டன் செய்து விடுகிறார்.
பாருங்கள்.யாரொருவர் செய்தியைத் திருடித் தன் பெயரில் ஒளிபரப்பி விட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறதோ அவர் பெயரில் துளி விசாரணை இல்லை.கண் துடைப்பு நடவடிக்கையோ,எச்சரிக்கையோ இல்லை.பதவி உயர்வும் சம்பள உயர்வும் அளிக்கப்படுகிறது.ஏனென்றால் அவர் சேனலில் சகல அதிகாரமும் பொருந்திய மகாகனம் பிரேம் சங்கர் கும்பலைச் சேர்ந்தவர்.பிரேமோ அவர் மனைவி சந்தியாவோ நினைத்தால் யாரையும் எதுவும் செய்யலாம்.உண்மையாயும் நேர்மையாயும் செயல்படுபவர்களை ஓரங்கட்டலாம்.ஊறுகாயாகப் பயன்படுத்தலாம்.

திருட்டு,களவு,ஏமாற்று
பிரேம்சங்கர்
ஆனால் தனது கும்பலைச் சேர்ந்தவர்க்ள்&எடுபிடியாய் இருப்பவர்கள் செய்தியைத் திருடினாலும்,தகுதி இல்லையென்றாலும் அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கலாம்.நிறையப் பதவி உயர்வுகள் இப்படித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய தலைமுறை முதலாளி வேண்டுமானால் திருவாளர் பச்சைமுத்து மகன் கோவிந்தராஜனாய் இருக்கலாம்.ஆனால் கடிவாளம் என்னவோ பிரேம்சங்கர் சேட்டனிடமும் அவரது அடிப்பொடிகளிடமும் தான்.
சில வீடுகளுக்கு வெளியே நாய்கள் ஜாக்கிரதை என எழுதி எச்சரிப்பதைப்போல நாம் உள்ளே இருப்பவர்களுக்குச் சொல்வது இது.
பிரேம் சங்கர்&அல்லக்கைகள் நடமாடும் இடம்.திறமையாளர்களும் சுயமரியாதை மிக்கவர்களும் எச்சரிக்கையாய் இருங்கள்.இல்லை என்றால் இன்று உழைப்பைத் திருடித் தப்பித்ததைப் போல நாளை யார் கையில் உள்ள வாட்சையோ,அல்லது கழுத்தில் இருக்கும் செயினையோ திருடிவிட்டு யாரேனும் தப்பித்து விடலாம் சேட்டனின் நிழலில் இருந்து கொண்டு,ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்.

வேறு என்ன சொல்வது..?

Saturday 16 June 2012

மாறன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ”ஜூனியர் விகடன்”(துப்பறியும் இதழ்)
செய்தியும் கோணமும்-புதிய பகுதி


பத்திரிகைகள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று ஒரு காலத்தில் சொல்லப்பட்டது இன்றல்ல என்றோ கேலிக் கூத்தாகி விட்டது.அச்சிட்ட காகிதமாக இருப்பதாலேயே  அதில் எழுதியது எல்லாம் உண்மை என்று இன்றும் சிலர் நம்புகின்றனர்.ஆனால் ஒவ்வொரு ஊடகமும் தனக்கென ஒரு அஜெண்டா வைத்திருக்கிறது.தன் வர்த்தக நலன்களுக்கும் தான் வகுத்துக் கொண்ட கொள்கைகளுக்கும் எதிரான எதையும் அது மறந்தும் வெளியிடுவதில்லை.சில நேரங்களில் வேண்டுமானால் காலச் சூழலுக்கு ஏற்பச் சற்று வளைந்து கொடுக்கின்றனர்.

நித்தியானந்தா மீது பாய்ந்து பிடுங்கும் தினமலர் காஞ்சி சங்கராச்சாரியைப் பாதுகாக்கும்.இப்பொழுது ஜெயலலிதாவின் அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிடும் தினத்தந்தி ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவியாக இருக்கும் பொழுது அவர் வெளியிட்ட அறிக்கையைச் சில நாள் வெளியிடாமலேயே இருந்திருக்கிறது. 

ஜெயலலிதாவின் ஆட்சியில் எதிர்க்கட்சியாய் செயல்படும் நக்கீரன் தி.மு.க.ஆட்சியில் முரசொலியின் வாரமிருமுறை இதழாகச் செயல்படும்.இவ்வாறு அனைத்து பத்திரிகைகள் குறித்தும் அடுக்கிக்கொண்டே போகலாம்.ஒவ்வொன்றின் பின்னும் நிறுவனத்தின் நலன்கள் ஒளிந்திருக்கிறது.
எழுதும் செய்தியில் வார்த்தைக்கு வார்த்தையில் இருந்து படங்களுக்கு புட்நோட் எழுதுவது வரை அனைத்திலும் தங்கள் எண்ணத்தைச் செயல்படுத்துவர்.

அங்கு வேலைக்குச் சேரும் நிருபர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் கருத்தையே நிறுவனத்தின் நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள்.அது இயல்பாகவே நடந்தேறி விடுகிறது.மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் இடத்தை மாற்றிக் கொள்ள வெண்டும்.
(இது தவிர ஆசிரியர்,நிருபர் போன்றோரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செய்தி வெளியிடுவதும் புறக்கணிக்கப்படுவதும் தனி.ஆனால் இவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் தங்கள் ஆவர்த்தனத்தை நடத்தி விட முடியாது.ஏதாவது ஒரு பக்கத்தில் இருந்து முட்டுக்கட்டை விழுந்து விடும்.)
----
தங்களுக்கு வேண்டாத நபர்கள் என்றால் ஒரு நிறுவனம் எப்படிச் செய்தி வெளியிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி அதே செய்தியைத் அப்படியே தங்களுக்கு அனுகூலமான நபர் சம்பந்தப்பட்டது என்றால் எப்படி வெளியிடப்படும் என்பதை சுட்டிக்காட்டுவது தான் செய்தியும் கோணமும் பகுதியின் நோக்கம்.

இந்தப் பதிவில் நாம் எடுத்துக் கொண்டது 17-06-2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் வெளியான ஆ.ராசா பற்றிய செய்தி.ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தபின்பு தமிழ்நாட்டிற்கு முதல்முறையாய் வந்தபொழுது ஒரு செய்திப்பதிவை ஜூனியர் விகடன் பதிவு செய்துள்ளது.அது இதுதான்.

வழக்கம் போல் மாறன் சகோதரர்களின் நிழலில் இருந்து கொண்டு ஆ.ராசாவை இதிலும் ஜூ.வி.காய்ச்சி எடுத்துள்ளது.தலைப்பில் இருந்து ஒவ்வொரு வார்த்தையிலும் இதனைக் காணலாம்.
இதே சம்பவம் அப்படியே தயாநிதி மாறனுக்கு நடந்திருந்தால் ஜூ.வி.எப்படிச் செய்தி வெளியிட்டிருக்கும் என்னும் உண்மையைக் கற்பனையாகப் பார்ப்போம்.(கற்பனை-லூஸூப்பையன் அல்ல..)
அதாவது தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்டு(நமது ஆசை நிறைவேறும் நாள் எந்நாளோ...) நீண்ட காலம் கழித்து ஜாமீனில் சென்னைக்கு முதன்முதலாய் வருகிறார் என வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது ராசா வந்த பொழுது நடைபெற்ற சம்பவங்கள் அப்படியே அப்பொழுதும் நடக்கிறது என வைத்துக் கொள்வோம்.அப்பொழுது ராசாவுக்கு எதிராகச் செய்தி எழுதிய ஜூ.வி.இதனையே எப்படி வேறு வகையாகத் துரும்பைத் தூணாக மாற்றி மாறன் சகோதரர்களுக்கு ஏற்ற மாதிரி செய்தி வெளியிட்டிருக்கும் என்பதைப் பார்ப்போம்.

சம்பவம் ஒன்று காட்சிகள் இரண்டு.
இனி எதிராக வெளியிடப்பட்ட ஒவ்வொரு செய்தியாகப் பார்ப்போம்.

தயாநிதி என்றால்
தடைகளைத் தகர்த்த கழகமே, மனசாட்சியின் மகனே,கலைஞரின் நிதியே என்ற பேனர்கள் ஏர்போர்ட்டைச் சுற்றிலும் இருக்க காதைப் பிளக்கும் மேள தாளங்களுடன் வரவேற்பு அமர்க்களப்பட்டது. 
வரவேற்பதற்கு கருணாநிதி உட்பட அனைவரும் தயாரானதாகவும் ஆனால் முக்கிய தலைகள் யாரும் வந்தால் அதைச் சுட்டிக் காட்டி ஜாமீனை ரத்துச் செய்ய சிலர் மனு போடத் திட்டமிட்டிருந்ததாகவும் அதனை தயாநிதியே கருணாநிதியிடம் தொலைபேசியில் பேசியதாகச் சொல்லப்பட்டது.அதனால் தான் எல்லோரும் ஆப்செண்ட் என கிசுகிசுக்கப்பட்டது.

அதையும் மீறி முன்னாள் அமைச்சர்கள் திருச்சி செல்வராஜ்,தா.மோ.அன்பரசன் ஆகியோரும் துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் ஆகியோரும் வந்திருந்தனர்.அன்பரசனைப் பார்த்த தயாநிதி அவர் அப்பா இறந்ததற்கு துக்கம் விசாரித்தார்.அதைப் போல சற்குண பாண்டியனின் வயதான நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் காத்திருந்ததை அவரிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டார்.
அவர் உடல் நலத்தையும் தயாநிதி விசாரித்தார்.அதைப்போல சிறையில் இருக்கும் பொழுதே தங்கள் மேற்படிப்புக்கு உதவிய தங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனைப் பார்க்க 2 கல்லூரி மாணவிகள் வந்திருந்தனர்.ஆனால் பார்க்க முடியாமல் கூட்டத்தில் தத்தளித்தனர்.இதனைக் கண்டுகொண்ட தயாநிதி அவர்களை அத்தனை கூட்டத்திலும் அழைத்து படிப்பு குறித்து விசாரித்தார்.அவர்கள் முகத்தில் அத்தனை பரவசம்.

நகர் முழுவதும் வரவேற்பு பலகைகள் இருக்கும் என ஒளிபரப்பும் நோக்கத்துடன் ஆர்வமாக வந்திருந்த ஆங்கில ஊடகங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதைப் பார்க்க முடிந்தது.
******

ஏர்போர்ட்டில் கொடுக்க இயலாத வரவேற்பை அறிவாலயத்தில் கொடுக்க முடிவு செய்யப் பட்டதாம். தயாநிதியை வரவேற்க பேராசிரியர் அன்பழகனே போர்டிகோவில் முதல் ஆளாக வந்து காத்திருந்தார்.கனிமொழி சிறையில் இருந்து வந்த பொழுது வராத பேராசிரியர் அன்று காத்திருந்ததைப் பார்த்து அறிவாலயத்தில் இருந்தவர்களே ஆச்சரியப்பட்டார்களாம்.
*******

 

தயாநிதியின் கார் இரவு 7.25 மணிக்கு அறிவாலயத்துக்குள் அவுட்கேட் வழியாக நுழைந்தது.கருணாநிதியின் காரே இதுவரை அந்த வழியில் வராத நிலையில் தயாநிதிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் யாருக்கோ எதையோ உணர்த்தியதற்காய்ச் செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டது.

தயாநிதியின் கார் வருவதற்கு முன்பாகவே அறிவாலயத்தில் பெருந்திரளாக கூட்டம் திரண்டிருந்தது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகனுக்கு இதற்காக ஸ்பெஷல் உத்தரவே போடப்பட்டதாம். இதனால் அறிவாலயமே திமிலோகப்பட்டது.தயாநிதியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நிறையப் பேர் குவிந்திருந்தனர். 
*******

 

சந்தித்ததும் தன் காலில் விழப்போனவரை கருணாநிதி பாதியில் தடுத்து சால்வையை வாங்கிக் கொண்டார்.இதனை ஸ்டாலின் புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.பதிலுக்கு தயாநிதிக்கு காஸ்ட்லியான சால்வையை கருணாநிதி அணிவித்தார்.
******

பிரஸ் மீட் முடிந்ததும் கருணாநிதி சி.ஐ.டி.காலனிக்குக் கிளம்பினார்.அந்தக் காரில் தயாநிதியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.கூடவே காரில் ஏறப்போன துரைமுருகனும்,டி.ஆர்.பாலுவும் தலைவரின் குறிப்பறிந்து  தத்தமது காரில் ஏறிக் கொண்டனர். 

சி.ஐ.டி.காலனி வீட்டில் யாரும் எதிர்பாரா வண்ணம் கனிமொழி வாசலில் நின்று தயாநிதியை வரவேற்றாராம்.அதன்பின் தயாநிதிக்கு சிறப்பான விருந்து அளிக்கப்பட்டதாம்.வழக்கமாக இரவில் ஒரு இட்லி மற்றும் கேழ்வரகு கஞ்சி சாப்பிடும் கருணாநிதி அன்று ஸ்பெஷலாக வீட்டில் செய்யப்பட்ட லட்டு ஒன்றைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாராம்.ராஜாத்தி அம்மாள் தடுத்தும் கேட்கவில்லையாம்.அதன் பின் மாறன் சகோதரர்கள் மற்றும் சி.ஐ.டி.காலனி குடும்பத்தினருடன் தனி ஆலோசனை நடத்தப்பட்டதாம்.செல்வியும் இதில் கலந்து கொண்டாராம்.அந்தச் சந்திப்பில் சில பரிவர்த்தனைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகவும் சில வருத்தங்கள் களையப்பட்டதாகவும் விவரமறிந்த சிலர் சொல்கிறார்கள்.சந்திப்பின் முடிவில் அனைவரின் முகமும் பிரகாசமாக இருந்தது.
*****

 தயாநிதி என்றால் இதற்கு புட் நோட்-தடைகளைத் தகர்த்த கழகமே...! என்று இருக்கும்.
*****

அதன்பின் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் சென்ற தயாநிதிக்கு வரவேற்பு பிரம்மாண்ணமாக இருந்தது.தன் முகத்தைக் காட்ட தயாநிதி வண்டியில் ஏறிய பொழுது அவருடன் போஸ் கொடுக்க பலரும் போட்டி போட்டனர்.எதற்கு வம்பு என்று அவர் மட்டும் தனியாக ஏறி நின்று விட்டாராம்.அதனால் மற்ற பிரபலங்கள் ஏகத்துக்கும் அப்செட்.
*****


ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறக்கூடாது என்ற எச்சரிக்கையையும் காண முடிந்தது.
 
இனி இறுதிப்பகுதி...


அறிவாலயம்,தொகுதி என சென்ற இடமெல்லாம் திரண்டிருந்த கூட்டம் தயாநிதி  ஆதரவாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்திருக்கிறது.கருணாநிதியும் அன்பழகனும் நடந்து கொண்ட விதமும் ஸ்டாலினின் புன்முறுவலும் விரைவில் கட்சியிலும் மத்தியிலும் புதிய அங்கீகாரம் தயாநிதிக்கு கிடைக்கும் என்பதையும் உணர்த்தியது.
என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்..!

அவ்வளவு தான்.இது தான் ஜூ.வி.

இந்தச் செய்திப் பதிவை எழுதியவர்கள் எம்.பரக்கத் அலி,ஷக்தி,ஜோ.ஸ்டாலின் போன்றோர்.இவர்களைக் குற்றம் சொல்ல எதுவும் இல்லை.நிறுவனத்தின் அஜெண்டாவிற்கு எதிராய் இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம்..

மாறன் சகோதரர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழ் செய்திகளை வாசகனுக்குத் தருகிறது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொலை தொடர்பு மந்திரியாக ஆ.ராசா மீது மட்டுமல்ல,தயாநிதிமாறன் மீதும் தான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.ஆனால் தயாநிதிமாறனைப் பாதுகாத்து விட்டு ஆ.ராசாவை மட்டும் ஒவ்வொரு இதழிலும் வன்மத்துடன் விமர்சிக்கிறது.

வி.பி.சிங் மறைந்து விட்டாலும் அவர் மீதான வன்மத்தை எப்படித் துக்ளக் இதழ் அடிக்கடி கேள்வி-பதில் பகுதியின் மூலம் தீர்த்துக் கொள்கிறதோ அதைப் போல ஜூ.வி.கழுகாரும் அவ்வப்பொழுது செட்டப் கேள்விகளை வெளியிட்டு,தனது பதில்களில் ராசா மீதான வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறார்.
இது மாறன் சகோதரர்களால் பேணப்படும் வர்த்தக நலன்களுக்கு செய்நன்றி அல்லாமல் வேறென்ன…!செய்தியும் கோணமும் பதிவு முடிந்தது.
 ****
இல்லை ஜூ.வி.யின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது,அது நடுநிலையுடன் செயல்படுகிறது என்று இன்னும் யாராவது ஒரு ஏமாளி வாசகர் சொன்னால் அவருக்கு மட்டும் கீழ்க்கண்ட பகுதி.
***********
கடந்த செப்டம்பர் 11,2011 ஞாயிறு அன்று மறைந்த இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தேவேந்திர குல வேளாளர்கள் 7 பேர் காவல்துறையுடன் நடைபெற்ற மோதல் சம்பவத்தில் தமிழகக் காவல்துறையால் பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.தமிழகத்தையே பரபரக்கச் செய்த சம்பவம் இது.

சம்பவம் நடந்தது செப்டம்பர் 11,2011 ஞாயிறு நண்பகலில்.
இதழ் முடிக்கப்பட்டதோ மறுநாள் செப்டம்பர் 12,2011 திங்கள் கிழமை இரவு 8 மணிக்கு.
 நாடு முழுவதையும் கொந்தளிக்க வைத்த சம்பவம்,மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்ட சம்பவம்,7 உயிர்களைக் காவு வாங்கிய சம்பவம் ஜூ.வி.யின் கவர் ஸ்டோரிக்கும்,அட்டைப்படத்திற்கும்  தேர்வு செய்யப்படவில்லை. போனால் போகிறது என்று அட்டையில் ஓரத்தில் ஒரு சிறு செய்தியாக மட்டும் பதியப்படுகிறது. 
இதற்கு மாறாக அட்டைப்படத்திற்கும் கவர் ஸ்டோரிக்கும் எது தேர்வு செய்யப்படுகிறது தெரியுமா..?
மாறன் சகோதரர்களுக்கு சினிமா வாங்கிக் கொடுக்கும் புரோக்கரும் மேனேஜரும் கோடிக்கணக்கான ரூபாய் மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொழுது காவல்துறை நடத்தியதாகச் சொல்லப்படும் ஒரு சித்திரவதைச் சம்பவம். 

என்கவுண்டர் எச்சரிக்கைக்கு கவர் ஸ்டோரி.
7 பேர் செத்ததுக்கு அட்டையில் ஒரு ஓரத்தில் இடம்.
எதற்கு ஜூ.வி.முக்கியத்துவம் கொடுக்கிறது பாருங்கள்...!

பரமக்குடியில் 7 பேர் காவல்துறையால் குண்டடி பட்டுச் செத்துப் போனது ஜூ.வி.க்கு வலிக்கவில்லை.அதைச் சீந்துவாரில்லை.
ஆனால்  பல கோடி மோசடிக்குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்ற இரண்டு சினிமா புரோக்கர்கள் காவல்துறையிடம் 4 அடி வாங்கியதாகச் சொல்லப்பட்டது ஜூ.விக்கு வலிக்கிறது.அட்டையில் கவர் ஸ்டோரியாக வருகிறது.
ஏன் என்றால் அவர்களின் மாறன்களின் வேலையாட்கள்..!அதனால் அவர்களின் ரத்தத்திற்கு அவ்வளவு வலிமை..!”அம்புட்டு உசத்தி..”

இப்பொழுது புரிகிறதா..மாறன்களுடனான தங்கள் வர்த்தகத்திற்காகவும் அதில் கிடைக்கும் பொருளாதார நலன்களுக்காகவும் எதையும் செய்யும் ஜூ.வி.நிறுவனம் என்று.

 நடுநிலை இதழ் என்று காசு கொடுத்து வாங்கும் வாசகனுக்குச் செய்யும் துரோகம் இது. 
காசு வாசகர்களிடம்,விசுவாசம் மாறன் தரப்பிடமா..?ஜூ.வி.தனது விசுவாசத்தை நமது காசில் காட்டக்கூடாது.அதற்கு வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

அல்லது தனது இதழின் முகப்பில் தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்பதற்குப் பதிலாக மாறன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவருகிறது என்று வைத்து விடுங்கள்.

நாங்களும் நேர்மையை உங்களிடம் எதிர்பார்க்க மாட்டோம்.உங்களையும் குற்றம் சொல்ல மாட்டோம்.

செய்யுமா ஜூ.வி.?


Wednesday 13 June 2012

தமிழக அரசியல்-”யோக்கியன் வர்றான்:சொம்பெடுத்து உள்ள வை”...!மேலே காணப்பட்டுள்ள கட்டுரை 13-06-2012 தேதியிட்ட தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளிவந்துள்ளது.கார்க்கோடன் என்பவர் எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு இதழிலும் கார்க்கோடன் இது போன்ற  கட்டுரைகளை கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வருகிறார் என்பது உபரிச் செய்தி.

இனி செய்திக்கு வருவோம்.

இது சிறப்பான கட்டுரை என்பதில் சந்தேகம் இல்லை.

நாட்டின் அதிகாரவர்க்கம்,அரசியல்வாதிகள் போன்றோர் செய்யும் முறைகேடுகளையும்,லஞ்சலாவண்யத்தையும்,அயோக்கியத்தனங்களையும் சாடியிருக்கிறது.சனநாயகத்தின் நான்காவது தூண் என்ற முறையில் தனது கடமையைச் சரியாகச் செய்ததற்காக தமிழக அரசியல் இதழைப் பாராட்டலாம்.

*இந்தக் கட்டுரையில் உள்ள அவதூறு என்று பார்த்தால் ஒன்று மட்டும் தான்.அது வட்டமிட்டுக் காண்பிக்கப் பட்டுள்ளது.

மதுகோடா ஜார்க்கண்ட் முதல்வராய் இருந்த பொழுது தான் கொள்ளையடித்த பணத்தில், தனக்குத் தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக மாவோயிஸ்டுகளுக்கு 30 சதவீதம் லஞ்சம் கொடுத்து விடுவாராம். இதுவரை மாவோயிஸ்டுகள் மீது யாருமே சொல்லாத குற்றச்சாட்டு இது.மதுகோடாவிற்கு பணம் வந்து சேர்த்த வழியே நாட்டைத் தாரை வார்த்ததினால் தானே..!

மதுகோடா கொள்ளையடித்ததில் மாவோயிஸ்டுகள் பங்கு வாங்கினார்கள் என்று கார்க்கோடன் சொல்வது உண்மை என்றால் டாடா,ஜிண்டால்,எஸ்ஸார் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமும் கமிஷன் வாங்கி விட்டு அவர்கள் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு சம்மதித்து விடுவார்களே..!எதற்குத் தேவையில்லாமல் காட்டில் இருந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..?

இது ஒன்றே கட்டுரை எழுதியவரின் அரசியல் அறிவையும் அவர் யார் என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.அது சரி இம்புட்டு நேர்மையும் நாட்டின் மீதும் அக்கறையும் உள்ள உத்தமபுத்திரன் கார்க்கோடன் யார் என்று கேட்கின்றீர்களா..?

அவர் வேறு யாருமில்லை.தமிழக அரசியலின் பதிப்பாளரும் அச்சிடுபவருமான திருவாளர் சுந்தர்ராமன் தான். அவர் தான் கார்க்கோடன் என்னும் புனைப்பெயரில் எழுதிக்குவித்து வருகிறார்.அதெல்லாம் இருக்கட்டும்.ஆள் எப்படி என்கின்றீர்களா..?

சுந்தர்ராமன் என்கிற கார்க்கோடன்
 கார்க்கோடன் என்கிற திரிசக்தி சுந்தர்ராமன் மீது மோசடியாக ஆவணங்களைக் கொடுத்து வங்கிப் பணத்தை மோசடி செய்தார் என்று ஒரு வழக்கு சென்னை மாநகரக் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் ஏற்கனவே நிலுவையில் இருக்கிறது. 
அவர் மீது 10-11-2011 அன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 406,419,420,465,468,471 r/w,மற்றும் 120 (B)ஆகிய பிரிவுகளின் கீழ் வங்கி மோசடிகளை விசாரிக்கும் மத்தியக் குற்றப்புலனாய்வு டீம் 12  வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது.

பிணையில் தான் அவர் வெளியில் நடமாடுகிறார்.அவரது குற்ற எண். 499/2011
 
இவரைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள நமது முந்தைய பதிவைப் படியுங்கள்.அப்புறம்..! வேற என்ன..!

தலைப்பை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.

Wednesday 6 June 2012

குமுதம் ரிப்போர்ட்டர்- பொய்..! புரட்டு..! ஏமாற்று..!!
இந்த இதழ் குறித்தும் அதன் தரம் குறித்தும் அதில் வரும் செய்திகள் குறித்தும் நாம் நிறைய எழுதியுள்ளோம்.ஆகவே புதிதாய் மீண்டும் எழுதி அனைவரின் நேரத்தையும் வீணடிக்க விரும்ப வில்லை.

சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த இதழில் செய்தி வெளிவந்தாலும் அதற்கு காசு,வெளிவராமல் மறைத்தாலும் காசு என்பது தான் இதன் பெரும்பகுதி தாரக மந்திரம்.அது தவிர்த்து வாசகனை முட்டாளாகக் கருதி எதை வேண்டுமானாலும் எழுதி அதனை அச்சிட்ட பக்கங்களில் நிரப்பி விற்பனை செய்வது மிச்சப் பகுதி.

இனி போஸ்ட் மார்ட்டம் பகுதிக்கு வருவோம்.இன்று நாம் எடுத்துக் கொண்டது 10-06-2012 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரின்  கவர் ஸ்டோரி.இதனை எழுதியவர் குமுதம் ரிப்போர்ட்டர் நிருபர் ப.ரஜினிகாந்த் என்பவர்.

வாசகனை வழக்கம் போல அடி முட்டாளாகக் கருதி இதனை குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளியிட்டுக் காசு பார்த்துள்ளது.

புலனாய்வு புடலங்காய் ஆய்வு இதழ்கள் செய்ய வேண்டிய பணிகள் நாட்டில் எவ்வளவோ இருக்கின்றன.ஆனால் தமிழ்நாட்டு புடலங்காய் இதழ்களோ அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு எதையாவது கிறுக்கி பக்கங்களை நிரப்பித் தங்கள் வேலையை முடித்து விடுகின்றன.இதற்காக அவர்கள் கொஞ்சம் கூடக் கூச்சமே அடைவதில்லை.அந்த வரிசையில் சேர்ந்தது தான் இந்த வாரக் குமுதம் ரிப்போர்ட்டர் கவர் ஸ்டோரி.இந்த ஸ்டோரியை கூச்ச நாச்சமில்லாமல் அட்டையில் வைத்தது மட்டுமல்லாமல் இதனை ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டிக் காசு பார்த்துள்ளது.இதனைப் படியுங்கள்..


---

1)இந்தச் செய்தி கவர் ஸ்டோரிக்கான தகுதி எதையாவது சிறிதளவாவது கொண்டுள்ளதா..?சரி விடுங்கள்.செய்தியை ஆராயுங்கள்.

2)தி.மு.க.முக்கியப் புள்ளி ஒருவர் பேசியதாக இந்தச் செய்தி வருகிறது. 
திமுக முக்கியப் புள்ளி சொல்லியதாகச் சொல்லி விட்டு எழுதியது முழுக்க முழுக்க புரசைவாக்கம் குமுதம் ரிப்போர்ட்டர் அலுவலகத்தில் அமர்ந்து நிருபர் ரஜினிகாந்த் எழுதியது தான்.ஆனால் பழியோ ஒரு தி.மு.க.புள்ளி மீது.

தி.மு.க.காங்கிரஸ் உறவு மிகவும் சிக்கலாகியுள்ள நிலையில் அடி மட்டத் தி.மு.க.தொண்டன் கூட இப்படி யதார்த்தம் இல்லாமல் பேச மாட்டான் என்பது அனைவருக்கும் தெரியும்.திமுக தொண்டன் சிந்திக்கத் தெரிந்தவன் என்பதை யாரும் ஒத்துக் கொள்வார்கள்.(தலைவருக்கு எதிராய் மட்டும் சிந்திக்க மாட்டான் என்பது தான் தனி)
நிருபரின் அரசியல் அறிவை(!) இச்செய்திப் பதிவை வாசித்தால் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

3)பிறந்த நாள் தூபம் என்று உப தலைப்பு இருக்கிறது-இது பிறந்த நாளுக்கு முன்பே யாராலோ கொளுத்திப் போடப்பட்டு அது வதந்தி என்று தி.மு.க. தலைமைக் கழகம் மறுத்து அறிக்கையே வெளியிட்டுள்ளது.இது முடிந்து போன விஷயம்.ஆனால் நிருபரோ தாமதமாய் சுதாரித்து செய்தியாக்கி உள்ளார்.
---
4)


சரத்பவார்,லாலு போன்றவர்களிடம் பேசி இந்தக் கூட்டணியை வலுவாக்கியதும் கலைஞர் தான்.இது உண்மையா என்ற உண்மைத்தன்மையை ஆராயமல் விட்டுவிடுவோம்.

இதனால் தமிழகம்,புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றது தி.மு.க.கூட்டணி.//
சரத்பவாரிடம்,லாலுவிடம் பேசி கூட்டணியை உருவாக்கியதற்கும் அதனால் 40 இடங்களில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் தி.மு.க.வெற்றி பெற்றதற்கும் என்னய்யா சம்பந்தம்..?தமிழ்நாட்டில் சரத் பவாருக்கும் லாலுவுக்கும் அம்புட்டு செல்வாக்கா..?
ஒழுங்காக 4 வார்த்தைகள் கோர்வையாக எழுதத் தெரியவில்லை..!
என்னய்யா நிருபர்..?
5)

நம்ம தமிழ்நாட்டுக் காம்ரேடுகளே கருணாநிதி சொன்னால் முரண்டு பிடிப்பார்கள்.அப்படி இருக்கையில் சுர்ஜித் போன்ற பழம் தின்று கொட்டை போட்ட டெல்லி காம்ரேடுகள் கருணாநிதி பேச்சைக் கேட்டு சோனியாவை ஆதரித்தார்களா..?இதைப் படித்தால் தமிழ்நாட்டு காம்ரேடுகள் விழுந்து விழுந்து சிரிக்கப் போறாங்க.
6)

எங்கே சொன்னார்..?எல்லாக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி சொன்னது போல் கருணாநிதிக்கும் நன்றி  சொன்னார்.என்னமோ கருணாநிதி தான் ஜனாதிபதியாக்கியது போல் பிரதீபா பாட்டீல் நன்றி சொன்னாராம்.முடியலை..
7)
 

அணுசக்தி ஒப்பந்தத்தின் பொழுது பணம் வாங்கிக் கொண்டு தான் அனைத்துக் கட்சியினரும்,ஆட்சியைக் காப்பாற்ற ஓட்டுப் போட்டார்கள் என்று தான் பரபரப்பாகப் பேசப்பட்டது. நம்மூரில் போட்டி மதிமுக என்று கொடிபிடித்த எல்.ஜி.,செஞ்சி போன்றவர்களே நன்கு கல்லா கட்டினர் என்று பேசப்பட்டது.அதுவும் சிபுசோரன் பத்தாண்டுகளுக்கு முந்தைய நரசிம்மராவ் ஆட்சியைக் காப்பாற்றவே பணம் கோடிகோடியாக வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டார் என்பது ஊரறிந்து வழக்காகி உள்ளது.இந்த லட்சணத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை கருணாநிதி சொல் கேட்டு சிபுசோரன் ஆதரித்தாராம்.சிபு சோரன் என்ன கழக உடன்பிறப்பா..?

சிபு சோரன் போன்றவர்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது,அதிலும் கழிசடையான குமுதம் ரிப்போர்ட்டரைப் படிக்க மாட்டார்கள் என்பது எவ்வளவு வசதியாகிப் போனது இவர்களுக்கு..?
8)

எங்கே நெருக்கடி கொடுக்கவில்லை..?எல்லாவித நெருக்கடி கொடுத்தும்,கதறி அழுதும், காலில் விழுந்தும் சோனியா கண்டு கொள்ளவில்லை என்பது தான் உண்மை..!
9)


முன்னாள் தமிழக அமைச்சரும்,மத்திய அமைச்சர் ஒருவரும் பேசினார்களாம்.//அவர்கள் பெயரைச் சொல்வதில் என்ன வந்து விடப் போகிறது..?பொய் சொல்வது என்று முடிவான பின்பு யார் பெயரையாவது கிசுகிசுவாகச் சொல்ல சொல்ல வேண்டியது தானே..?
10)நீங்கள் ஜனாதிபதி வேட்பாளர் என்றால் சோனியாவும் ஒப்புக் கொள்வார்../எழுதிய நிருபருக்கு கட்சிகள் குறித்த அரசியல் அறிவும் இப்பொழுதைய நாட்டு நடப்பும் சுத்தமாக இல்லை என்பதும் சொக்கத்தங்கம் சோனியா கருணாநிதி நல்லுறவு முடிந்து விட்டது என்பதும் துளியும் தெரியவில்லை என்பது மறுபடியும் நிருபிக்கப்பட்டுள்ளது.
11)கரகரத்த குரலில் கருணாநிதி பேசுவார் என்பது உலகத்திற்கே தெரிந்தது.இதை புதிதாக நிருபர் துப்பறிந்து எழுதி விட்ட தொனி தான் இருக்கிறது.என்னத்தச் சொல்றது...?
12)இறுதிப் பத்தி இது தான்.

இதைப் படித்தால் நீங்கள் வாயால் சிரிக்க மாட்டீர்கள்.ஏதோ ஆயிரம் விளக்குப் பகுதி தி.மு.க.இளைஞரணிச் செயலாளர் பதவிக்கு தனக்கு வேண்டிய கட்சிக்காரர் ஒருவரை மு.க.ஸ்டாலின் நியமிப்பது போல நினைத்து ஜனாதிபதி பதவியை எழுதியுள்ளார் நிருபர்.
இவ்வளவு கேவலமாக அரசியல் அறிவு சிறிதளவும் இல்லாமல்,நாட்டு நடப்பு தெரியாமல்,யதார்த்தம் தெரியாமல் ஒரு நிருபரால் இப்படி ஒரு செய்திப் பதிவை எழுதியுள்ளதை நினைத்தால் ஆச்சரியத்தை விட அதிர்ச்சியாக இருக்கிறது.குமுதம் ரிப்போர்ட்டரில் நிருபர் பதவியில் சேருவதற்கு என்னய்யா தகுதி..?
செய்திக்கே தகுதியாக இல்லாத இது எப்படி கவர் ஸ்டோரியாக மாறியது..?
ஆளுங்கட்சியை நாம் விமர்சிக்க முடியாது.விமர்சித்தால் பெண்டிங்கில் இருக்கும் வழக்கு உயிர் பெற்று விடும்.ஆகவே இருக்கவே இருக்கிறார் கருணாநிதி அவரை வைத்து ஒரு செய்தி பண்ணலாம் என்று ரிப்போர்ட்டர் முடிவு செய்திருக்கலாம்.யார் கேட்கப் போகிறார்கள்..?
சரி இந்த இஷ்யூவில் வேறு எந்தச் செய்தியும் கவர் ஸ்டோரியாக வைக்க சரிவரவில்லை.இந்தச் செய்தியை வைக்கலாம்,அதனால் விற்பனையும் கூடும் என்று ஆசிரியர் இலாகா அல்லது குழும ஆசிரியர் முடிவு செய்தார்கள் என்று வாதத்திற்காய் வைத்துக் கொண்டால் கூட நிருபரின் அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை,தவறுகளைஅப்படியே உலகம் முழுவதும் தெரியும் படியாக வெளியிடுவார்கள்..?
இதில் உள்ள அபத்தங்களையும் செய்தித் தவறுகளையும் வார்த்தை அமைப்புப் பிழைகளையும் சரி செய்திருக்கலாம். ஜூனியர் விகடன் இதழ் இல்லாத ஒன்றை ஜிம்மிக்ஸ் செய்து புதிதாய்க் கண்டுபிடித்தது போல வெளியிடுமே,அதைப் போல கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம்.
கருணாநிதி ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவார் என்று வதந்தி உருவானது குறித்து சென்ற வாரம் தி.மு.க. தலைமை மறுப்பு அறிக்கை வெளியிட்டதை புதுக் காரணம் சொல்லி இணைத்திருக்கலாம்.ஏதாவது ஒரு தி.மு.க.பிரபல்யத்திடம் கருத்துக் கேட்டு அதனையும் சேர்த்திருக்கலாம்.சக நிருபர் இரா.முருகேசனிடம் சொல்லியிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கருத்துக் கேட்டு வாங்கித் தந்திருப்பார்.கனிமொழியும் எதையாவது ”ஆக்கபூர்வமான” கருத்தைச் சொல்லியிருப்பார்.நமக்கு அது போதாதா என்ன..?கனிமொழி படத்தைப் போட்டு பக்கத்தை வலுவாக்கியிருக்கலாம்.ஒரு பத்து நிமிடங்கள் யாராவது சின்னதாய் கஷ்டப்பட்டிருந்தால் கட்டுரையின் தொனி மாறியிருக்கும்.பெயரளவுக்கான செய்திப் பதிவாகவாவது உருவாகியிருக்கும்.
நிருபருக்கு மேல் உதவிப் பொறுப்பாசிரியர்,பொறுப்பாசிரியர்,செய்தி ஆசிரியர்,இணை ஆசிரியர்,குழும ஆசிரியர் என எத்தனையோ பேர் செட்டியார் சொத்தில் சம்பளம் வாங்கியும் தண்டமாக எதையுமே செய்யாமல் அரைகுறையாய் பத்திரிகை உலகமே சிரிப்பாய்ச் சிரிக்கும் படி ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டிருக்கிறார்கள்.
அதுவும் இணை ஆசிரியராய் விகடன் குழுமத்திலிருந்து வெங்கட் வந்த பின்பு ரிப்போர்ட்டர் எங்கேயோ போயிடுச்சு என்று சொன்னார்களே..!அது இந்த லட்சணம் தானா..?
வாசகன் என்ன நினைப்பான் என்பதை விடுங்கள்.அவன் முட்டாள் என்று நினைத்துத் தானே எழுதுகின்றீர்கள்.சக பத்திரிகைகளில்,ஊடகங்களில் பணிபுரிபவர்கள் படிப்பார்களே.அவர்கள் நம் ”திறமை” குறித்து என்ன நினைப்பார்கள் என்றாவது சிந்தித்து இதனைச் சரி செய்திருக்கலாம்.

தி.மு.க.முக்கிய புள்ளி சொன்னதாய் புளுகிவிட்டுத் தனக்குத் தெரிந்த அரசியலை நிருபர் அலுவலகத்தில் அமர்ந்து எழுதியிருக்கிறார்.அது ஊரே சிரிக்கும் படி இருக்கிறது.
குமுதம் ரிப்போர்ட்டரின் செய்திப் பதிவு பார்த்தவுடன் மறைந்த ஒருவர் சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.
மருத்துவர்கள் தாங்கள் செய்த தவறுகளைப் புதைக்கிறார்கள்,வழக்கறிஞர்கள் தாங்கள் செய்த தவறுகளைத் தூக்கிலிடுகிறார்கள்.பத்திரிகையாளர்கள் தாங்கள் செய்த தவறுகளை முதல் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.ஒரு செய்தியை 4 பேரு படிக்கிற மாதிரி எழுதத் தெரியவில்லை.நிகழ் காலத்தின் குரல் ன்னு பேர் வேற..

நிருபர் ஒருவர் அரைவேக்காட்டுத் தனமாய் இருக்கலாம்.ஆனால் ஒட்டுமொத்தமாய் ஒரு பத்திரிகை அலுவலகமே இப்படி செயலற்று இருப்பதை என்ன சொல்வது..? 
குமுதம் ரிப்போர்ட்டரின் லோகோ வில் துணிவு தெளிவு நேர்மை அப்படின்னு இருக்கு.இதற்குப் பதிலாகப் பொய் புரட்டு ஏமாற்று என்று தலைப்பு வைத்தால் மிக பொருத்தமாக இருக்கும்.

இன்னும் நல்லா வருவீங்க....