Thursday, 21 June 2012

புதிய தலைமுறை-பிரேம் சங்கர் & அல்லக்கைகள் நடமாடும் ஏரியா..! திறமையாளர்களே ஜாக்கிரதை...!




புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் பிரேம் சங்கர் தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு கொட்டம் அடிப்பது குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருந்தோம்.இப்பொழுது முன்னைக் காட்டிலும் கூடுதல் வேகத்துடன் இயங்கி வருகிறார்.
கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் மட்டும் சாம்பிள்.


பொன்.மகாலிங்கம் என்பவர்  புதிய தலைமுறையில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணிபுரிகிறார்.இவர் இதற்கு முன் இந்தியா டுடே இதழிலும் அதன் பின் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் பணிபுரிந்தவர்.அங்கு பணியாற்றும் பொழுது சக ஊழியர்களின் ஒத்துழைப்புடனும் துணையுடனும் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொண்டவர்.இந்தியா டுடே இதழில் அவர் எழுதிய செய்திகள் அனைத்திலும் அவருடன் பணியாற்றி இப்பொழுது ZEE தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரியும் நிருபர் கோவில்பட்டி சரவணனின் சாயல் நன்கு தெரியும் என்று அவருடன் பணியாற்றியவர்கள் சொல்வார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதி முகாம்கள் குறித்து அனைத்து பத்திரிகைகளும் எழுதிய பின்பு அந்த சமயத்தில் மகாலிங்கம் இந்தியா டுடேவில் எழுதினார். கருணாநிதி ஏதாவது பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால்,அதற்கு அறிக்கை விடும் பொழுது தி ஹிந்து,இந்தியா டுடே போன்றவற்றைப் பிரதானப்படுத்தி மேற்கோள் காட்டுவது வழக்கம்.கருணாநிதியிடம் இருக்கும் ஆரியப் பாசம் அது.
கருணாநிதி தன் இயல்புக்கு இணங்க ஒரு அறிக்கையில் இந்தியா டுடே வில் வெளியான மகாலிங்கம் எழுதிய அகதி முகாம் கட்டுரையை மேற்கோள் காட்டிவிட நான் எழுதிய பின்பு தான் இந்தப்பிரச்சனையில் கருணாநிதி அக்கறை செலுத்தினார் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்ஆனால் உண்மை அதுவல்ல என்பது துறையை நன்கு கவனிப்பவர்களுக்குத் தெரியும்.
 
இவ்வாறு பத்திரிகைத்துறையைக் கடந்து வந்த மகாலிங்கம் இப்பொழுது புதிய தலைமுறையில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார்.ஆல் இன் ஆல் பிரேம் சங்கர் கோஷ்டியைச் சேர்ந்தவர்.

***
முரளிதரன். நிறையப் படிப்பவர்.வாசிப்பவர்.இவர் இந்தியா டுடே,என்.டி.டிவி.ஹிந்து ஆகியவற்றில் பணிபுரிந்தவர்.இவரும் புதிய தலைமுறையில் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் ஆகப் பணிபுரிந்து வருகிறார்.தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர்.

கடந்த வாரம் சென்னைக்கு அருகே உள்ள பள்ளிக்கரணையில் குப்பைக்கிடங்கு தீப்பிடித்து எரிந்ததல்லவா..?இதனைப் புதிய தலைமுறை தொடர்ந்து பலமுறை இடைவிடாமல்  பல்வேறு கோணங்களில்ஒளிபரப்பியது.குடியிருப்புவாசிகள்,தீயணைப்புத்துறை,மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,சென்னை மாநகராட்சி ஆணையாளர் எனப் பலரது கருத்துக்களையும் செய்தியாக்கித் தொடர்ந்து அப்டேட் செய்தது.வாசகர்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு.
இதில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்புடையவற்றை ஆராய்ந்து எதும்  பின்னணித் தகவல்கள் இருப்பின் அறிந்து அதனைப் பரபரப்புச் செய்தியாக்குமாறு புதிய தலைமுறையின் சீப் எடிட்டர் (பொலிட்டிகல்) குணசேகரன் செய்தியாளர் முரளிதரனைக் கேட்டுக் கொள்கிறார்.அதன் படி முரளிதரன் அன்று காலையில் இருந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலும் இது தொடர்புடையவர்களிடமும் அலைந்து திரிந்து தனது பணியை முடித்து விடுகிறார்.நேரம் மாலை மணி 6.30.

தொலைக்காட்சி நிலையங்களில் நிருபர்கள் தாங்கள் சேகரித்த தகவல்களைக் கணிப்பொறியில் தட்டச்சு செய்து அதன் ஒரு பிரதியைச் செய்திப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.செய்தி வாசிப்பாளர் அதில் ஒரு பகுதியை வாசிப்பார்.பின்னணியில் சம்பந்தப்பட்ட செய்திக்குத் தொடர்புடைய நிகழ்வுகள் காட்டப்படும். சேகரித்த செய்திகளில் இன்னொரு பகுதியை கேமரா முன் நின்று சொல்லி விட்டு (P.to Camara) புதிய தலைமுறைக்காக செய்தியாளர் என்று நிருபரின் பெயர் சொன்னால் பணி முடிந்தது.இதுதான் முறை.

தான் சேகரித்தவற்றை இரவு 8 மணிச் செய்தியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முரளிதரன் அலுவலகத்திற்கு பரபரப்புடன் கிளம்புகிறார்.ஏனென்றால் புதிய தலைமுறை பள்ளிக்கரணை பிரச்சனையை பெரிய அளவில் கொண்டு சென்றது.அலுவலகம் செல்லும் வழியில், அலுவலகத்தில் இருந்து சக ஊழியரான மகாலிங்கத்திடம் இருந்து போன் வருகிறது.
முரளி,நீங்க வருவதற்கு லேட்டாகி விடும்.8 மணிச் செய்திக்கு ரிஸ்க்.அதனால என்கிட்ட தொலைபேசியில் டீடெயில்ஸ் சொல்லிடுங்க.நான் டைப் பண்ணி வச்சுடறேன்.நீங்க வந்தவுடன் கேமரா முன் நின்னு கொஞ்சம் பேசிடுங்க.சரியா இருக்கும்.வேலை ஈசியா முடிஞ்சுடும் எனச் சொல்கிறார்.முரளிக்கும் இது சரியாகத் தெரியவே சேகரித்த தகவல்கள் அனைத்தையும் தொலைபேசியில் சொல்லுகிறார்.

மகாலிங்கம்

சொல்லி முடித்து விட்டு அலுவலகத்திற்கு கிளம்பி 7.30 மணிக்குச் செல்கிறார்.8 மணிச் செய்திக்கு சரியாய் இருக்கும் என நினைத்து உள்ளே நுழைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஏனென்றால் இவரது செய்தி இரவு 7 மணிச் செய்தியிலேயே ஒளிபரப்பாகி விட்டது.இவர் சேகரித்த செய்திகளைத் தன்னுடையதாக்கி தனது பெயரிலேயே கேமரா முன்பு நின்று சொல்லியிருக்கிறார் சக நிருபர்.அது ஒளிபரப்பாகியும் விட்டது.(பிரிண்ட் மீடியாவில் உள்ளவர்களுக்காக சிம்பிளாகச் சொன்னால் அவர் செய்த ஸ்டோரி இன்னொரு நிருபர் பெயரில் வெளிவந்துவிட்டது.)

அவர் வேறு யாரு..?சாட்சாத் மகாலிங்கம்.முரளிக்கு கடும் அதிர்ச்சி.தான் நாள் முழுவதும் வெயிலில் அலைந்து திரிந்து சேகரித்த செய்தி இன்னொருவர் பெயரில் ஒளிபரப்பாகி விட்டது.இது உழைப்புத் திருட்டு.அதுவும் யார் தன்னிடம் அக்கறையாய் விசாரித்தாரோ அவரே இந்த மோசடியைச் செய்ததைக் கண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை.மகாலிங்கத்தைத் தேடுகிறார்.ஆள் எஸ்கேப். தொலைபேசியையும் எடுக்கவில்லை.
அதன்பின் தன்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்ன சீப் எடிட்டர் (பொலிட்டிகல்) குணசேகரனிடம் போய்ப் புகார் செய்கிறார். நோ ஆக்‌ஷன்.
அதன் பின் சேனலின் ஆல் இன் ஆல் பிரேம் சங்கரின் மேஜைக்கு புகார் போகிறது.அமைதி காக்கப்படுகிறது.நடவடிக்கை எடுக்கப்படும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டு நாள் கழித்து இன்ப அதிர்ச்சி.யாருக்கு..?
மகாலிங்கத்துக்கு.அவர் ஸ்பெஷல் கரஸ்பாண்டெண்ட் நிலையில் இருந்து பதவி உயர்த்தப்பட்டு சிட்டி பீரோ சீப் ஆக நியமிக்கப்படுகிறார்.இது தாண்டா பிரேம் சங்கர் என்று சொல்லாமல் சேட்டன் செய்து விடுகிறார்.
பாருங்கள்.யாரொருவர் செய்தியைத் திருடித் தன் பெயரில் ஒளிபரப்பி விட்டார் என்று குற்றம் சாட்டப்படுகிறதோ அவர் பெயரில் துளி விசாரணை இல்லை.கண் துடைப்பு நடவடிக்கையோ,எச்சரிக்கையோ இல்லை.பதவி உயர்வும் சம்பள உயர்வும் அளிக்கப்படுகிறது.ஏனென்றால் அவர் சேனலில் சகல அதிகாரமும் பொருந்திய மகாகனம் பிரேம் சங்கர் கும்பலைச் சேர்ந்தவர்.பிரேமோ அவர் மனைவி சந்தியாவோ நினைத்தால் யாரையும் எதுவும் செய்யலாம்.உண்மையாயும் நேர்மையாயும் செயல்படுபவர்களை ஓரங்கட்டலாம்.ஊறுகாயாகப் பயன்படுத்தலாம்.

திருட்டு,களவு,ஏமாற்று
பிரேம்சங்கர்
ஆனால் தனது கும்பலைச் சேர்ந்தவர்க்ள்&எடுபிடியாய் இருப்பவர்கள் செய்தியைத் திருடினாலும்,தகுதி இல்லையென்றாலும் அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கலாம்.நிறையப் பதவி உயர்வுகள் இப்படித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

புதிய தலைமுறை முதலாளி வேண்டுமானால் திருவாளர் பச்சைமுத்து மகன் கோவிந்தராஜனாய் இருக்கலாம்.ஆனால் கடிவாளம் என்னவோ பிரேம்சங்கர் சேட்டனிடமும் அவரது அடிப்பொடிகளிடமும் தான்.
சில வீடுகளுக்கு வெளியே நாய்கள் ஜாக்கிரதை என எழுதி எச்சரிப்பதைப்போல நாம் உள்ளே இருப்பவர்களுக்குச் சொல்வது இது.
பிரேம் சங்கர்&அல்லக்கைகள் நடமாடும் இடம்.திறமையாளர்களும் சுயமரியாதை மிக்கவர்களும் எச்சரிக்கையாய் இருங்கள்.இல்லை என்றால் இன்று உழைப்பைத் திருடித் தப்பித்ததைப் போல நாளை யார் கையில் உள்ள வாட்சையோ,அல்லது கழுத்தில் இருக்கும் செயினையோ திருடிவிட்டு யாரேனும் தப்பித்து விடலாம் சேட்டனின் நிழலில் இருந்து கொண்டு,ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்.

வேறு என்ன சொல்வது..?

11 comments:

Anonymous said...

பிரேம்சங்கர் புகைப்படம் அருமை.எங்கே பிடித்தீர்கள்..?குணசேகரன் புகைப்படம் வெளியிடப்படாதது ஏன்..?அது வருத்தமளிக்கிறது.

Anonymous said...

முரளி கிட்டேயே தன் கைவரிசை காட்டிட்டானா மகாலிங்கம்.முரளி ஒரு ஜாலியான ஆள்,டென்ஷன் பார்ட்டி பட் நல்ல ம்னுஷன்.

Anonymous said...

மகாலிங்கம் ஜெயா தொலைக்காட்சியில் முதலில் வேலைக்கு சேர்ந்தான். அங்கே இருந்த மலையாளி சுனிலுக்கு வேண்டப்பட்டவன். அவனை ஏமாற்றி இந்தியாடுடேவுக்கு ரெகம்மெண்டேஷனில் போயிட்டான். திறமை இல்லாத ஜன்மங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாது.

Anonymous said...

பத்தாயிரம் ரூவாய்க்கு சிங்கியடிச்சிட்டிருந்த மகாவுக்கு எண்பதாயிரம் சம்பளம் கொடுத்தா இதுவும் செய்வான் இதுக்கு மேலயும் செய்வான்

அருள் said...

புதிய தலைமுறையின் முட்டாள் படைப்பாளிகள்!

http://arulgreen.blogspot.com/2012/06/blog-post_19.html

Anonymous said...

தியாகச் செம்மல்க்கும் பீர் முகம்மதுவுக்கும் ஆபிசுல ஒரே சண்டை.அதைப் பத்தி எழுதுங்க சார்.செம்மலுக்கு நிறைய பட்டாம் பூச்சி பட்டாளம் உண்டு.அதையும் விசாரியுங்க...

Anonymous said...

போன வாரம் பிரேம் சங்கர் மனைவி சந்தியா செக்ரேட்டரியேட் வந்தப்ப பீர் முகம்மது பண்ணிய சேவகம், பணிவு,அடக்கம் சூப்பர்ப்.நிச்சயம் அவருக்கு பிரமோஷன் கிடைக்கும் சாரே...டொட்டடய்ங்க்...

B Swaminathan said...

In my point of view, Mahalingam is a very nice guy. He helps budding journalists get into a right job :)

Anonymous said...

மகாலிங்கத்தின் தகுதி...திறமை..யோக்கியதை
நான் புதிய தலைமுறையைத் தொடர்ந்து பார்ப்பவன்.இரண்டு நாட்களுக்கு முன் திங்கட்கிழமை 25-6-2012 அன்று மாலை 6 மணிச் செய்தியில் இந்தக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மகாலிங்கம் எங்கள் ஊர் பற்றி ஒரு திடுக்கிடும் செய்தியைச் சொன்னார்.
அதாவது ராமநாதபுரத்தில் நக்சல் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும்,அவர்களைக் காவல்துறை பிடித்து விசாரிப்பதாகவும் சொல்லியவர்,அடுத்ததாக நாடு முழுவதும் நக்சல்கள் எங்கெல்லாம் கிளை பரப்பியிருக்கின்றார்கள்,அவர்கள் மக்களை எப்படி மூளைச் சலவை செய்கிறார்கள் என்று விரிவாகச் சொல்லிக் கொண்டே சென்றார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏனென்றால் அப்படி ஒரு சம்பவம் எங்கள் ஊரில் நடக்கவில்லை.
மறுநாள் தினமலர் செய்தி பார்த்ததும் முழு உண்மையும் வெளிப்பட்டது.26-6-2012 மதுரைப்பதிப்பு தினமலரில்,ராமநாதபுரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய தேகப்பயிற்சியில் 30 பேர் கலந்து கொண்டனர் என்றும் சந்தேகபப்ட்டு அவர்களைக் காவல்துறை விசாரித்து பின்பு விடுவித்து விட்டதாகவும் பெரிய அளவில் செய்தி வெளியாகியிருந்தது.(இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் கருதும் தினமலரிலேயே இது தான் சொல்லப்பட்டிருந்தது)ஆனால் நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் புதிய தலைமுறை நக்சல் நடமாட்டம் என அவதூறுச் செய்தியை பிரைம் டைமில் தொடர்ந்து வெளியிட்டது.இதனைச் சென்னை அலுவலகத்தில் இருந்து செய்தவர் மகாலிங்கம்.
ராமநாதபுரத்தில் நிருபர் இருக்கையில் இவர் சென்னையில் இருந்து அரைவேக்காட்டுத்தனமாய் பொய்யும் புளுகுமாய் எதற்குச் செய்தி சொல்கிறார்..?மறுநாள் ஊரறிய உண்மை வெளியான பின்பு மறுப்புக் கூட வெளியிடவில்லை.
இவர் தான் செய்தியைத் திருடியவரா..இவருக்குத் தான் பதவி உயர்வா?நல்லாத் தான் இருக்கு....
போங்கடா நீங்களும் உங்க ஜர்னலிசமும்..

Anonymous said...

மகாலிங்கம் (ஜந்து) ஜாக்கிரதை

புதிய தலைமுறையில் நேற்று முளைத்த விஷ காளான்கள்தான் பிழைக்கின்றன. அதில் இந்த மகாலிங்கமும் ஒன்று. அதுக்கு அடுத்தவர் செய்தியை திருடுவது ஒன்றும் புதிதல்ல. விழுப்புரம் மாவட்டத்தில் 3 கொலைகள் செய்யப்பட்ட சம்பவத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சிதான் உலகிற்கு தெரியவைத்தது. ஆனால் மகாலிங்கமே முதலில் தெரியப்படுத்தியதைப் போன்று ஜோடனை செய்தனர் பிரேம் அன்ட் அல்லக்கைஸ். அலெக்ஸ் பால் மேனன் விடுதலை செய்தியை சேகரிப்பதற்காக செலவு செய்து மகாலிங்கத்தை சட்டீஸ்கர் அனுப்பி வைத்தனர். ஆனால் அலெக்ஸ் விடுவிக்கப்பட்ட போது அந்த இடத்திலேயே இல்லாத மகாலிங்கம் தப்பும் தவறுமாக கலெக்டர் ஆபீசிலிருந்து உளறி கொட்டியதை ஊரே அறியும். இவன்தான் ஸ்பெஷல் கரஸ்பாண்டண்டாண்டாம்...

Anonymous said...

Mahalingam....ithellam oru pozhapppaaa karmam...karmam