Monday 28 November 2011

குமுதம் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்கா பயணம்
குமுதம் குழுமத்தை பி.வரதராஜன்(வயது 50) அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னையில் தங்கி அது தொடர்பான வழக்கு விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் கடந்த வாரம் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு மீண்டும் திரும்பினார்.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்கா செல்வதை வரதராஜன் அனுப்பியிருந்த உளவு ஆட்கள் விமான நிலையத்தில் இருந்து உறுதிப்படுத்திய பின்பு  இதனை வரதராஜனின் வலது கை,இடது கை மற்றும் அனைத்துமாக இருக்கும் உமாசேகர் என்பவருக்கு தொலைபேசியில் சொன்னார்களாம்.இதை உமாசேகர் வரதராஜனிடம் சொன்னவுடன் வரதுவின் முகம் பிரகாசமாக மாறிவிட்டதாம்.அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாராம்.ம்ம்.எதெதுக்கு எல்லாம் சந்தோஷப் படுகிறார்கள் நாட்டில்?

நாம் இப்பொழுது வரதுவுக்கும் அவரது அடிப்பொடிகளுக்கும் தெரியாத செய்தியைச் சொல்கிறோம். டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மீண்டும் அமெரிக்காவில் இருந்து வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு வருகிறாராம்.

அதிகார போதையில் வரதராஜன்-பந்தாடப்படும் பத்திரிகையாளர்கள்                                                             ரவிஷங்கர்
                                                                    சுதீர்
                                                              
                                                                  வேட்டைபெருமாள்


னக்கு எதிராய் இருப்பார்கள் என்று சந்தேகிப்பவர்களையும்,என்னிடம் அதிகாரம் இருக்கிறது.இதை வைத்து உன்னை என்ன செய்கிறேன் பார் என்ற தலைக்கனத்திலும் திமிருடனும் தான் தோன்றித்தனமாகவும் பல முடிவுகளை பி.வரதராசன் எடுத்து வருகிறார்.இதனால் தான் திறமை இருப்பவர்களும் சுயமரியாதைக்காரர்களும் அங்கு வேலையில் நிம்மதியாக இருக்க முடிவது இல்லை.

ஆகவே தான் இலக்கியமா?கிலோ என்ன விலை?எந்தக் கடையில் கிடைக்கும்?என்று கேட்பவர்கள் எல்லாம் குழும ஆசிரியர் என்ற கோதாவில் குமுதம் குழுமத்தில் இருந்து வெளிவரும் இலக்கியப் பத்திரிக்கைக்கு ஆலோசனையும்,அறிவுரையும் சொல்கிற கொடுமை எல்லாம் நடக்கிறது.

இப்படித் தொடர்ச்சியாக அழிச்சாட்டியம் நடக்கும் இடத்தில் சென்ற வாரம் நடந்த அட்டூழியங்கள்  இது.

குமுதம் வார இதழின் இணை ஆசிரியராகவும், 3 இதழ்களுக்கு ஒரு முறை குமுதம் இதழின் பொறுப்பாசிரியராக இருந்து குமுதத்தைத் தயாரிக்கும் பொறுப்பில் இருந்தவருமான திரு.ரஞ்சன் அவர்கள் தனக்கு எதிராக இருப்பதாக கருதிய பி.வரதராசனும் அவரை அண்டிப்பிழைக்கும் கும்பலும் ரஞ்சன் அவர்களை பழிவாங்கும் நோக்கத்துடனும் வன்மத்துடனும் திடீரென்று வேலை இல்லாத பப்ளிகேஷனுக்கு மாற்றியுள்ளார்கள்.

ரிப்போர்ட்டரில் பணியாற்றி வந்த வேட்டைபெருமாள் என்பவரை பப்ளிகேஷனுக்கு மாற்றியுள்ளார்கள்.ஆள் இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவதைப் போல வேலையில்லாத இவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளனர்.

 தைப் போல சுதீர் ,ரவிஷங்கர் ராமனாதன் இவர்கள் இருவரும் குமுதம் பத்திரிக்கையில் சீனியர் கரஸ்பாண்டண்ட்களாக நீண்டகாலம் பணியாற்றுபவர்கள்.குமுதம் இதழ் தயாரிக்கும் இடத்தில் இருப்பவர்கள். இதில் சுதீர் நாயர் பி.வரதராஜன்,டாக்டர் ஜவஹர் பழனியப்பன் இருவருக்கும் பொதுவானவராகத் தன்னைக் காட்டிக் கொள்பவர்.

இவர்கள் இருவரையும் கடந்த வாரம் திடீரென்று அழைத்த பி.வரதராஜன் நீங்கள் இருவரும் இனிமேல் குமுதம் ரிப்போர்ட்டரில் பணியாற்றுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.இதன் பின் அவர்கள் கடந்த சனியன்று உலகமகா அறிவாளியும் குழும ஆசிரியருமான(முடியல)கோசல்ராமைச் சந்தித்துள்ளனர்.சந்தித்து விட்டு வெளிவந்தபின் நம்ம நேரம்,ஒன்ணாம் தேதி சம்பளம் வாங்குற கொடுமைக்கு இவன மாதிரி அறிவாளிகள் கிட்ட எல்லாம் வேலை பார்க்க வேண்டியதிருக்கு என்று தலையில் அடித்துக் கொண்டார்களாம்.

தைப்போல திரு.வி.சந்திரசேகரனை மும்பை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார்களாம்.இத்தனைக்கும் அங்கு அலுவலகமே இல்லையாம்.
(சிறிது காலம் முன்பு வரை இவர் வரதராஜனின் அதி தீவிர விசுவாசி.இப்பொழுது என்ன பஞ்சாயத்து என்று தெரியவில்லை)

இவனுங்க திருந்தவே மாட்டாய்ங்க போல !!

Friday 25 November 2011

ஜூனியர் விகடனில் ஒரு மக்கள் விரோதி?செய்திக்குள் செல்லும் முன் சிறு முன்னோட்டம்.

மக்களின் மிகப்பெரிய போராட்டங்கள் அரசினை எதிர்த்தோ அல்லது மிகப்பெரிய நிறுவனங்களை எதிர்த்தோ நடைபெறும் பொழுது அதை ஒடுக்க,முடக்க, செயலிழக்கச்செய்ய,நீர்த்துப் போகச் செய்ய ஆட்சியில் இருப்பவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும்,இதனால் பாதிக்கப்படும் குறிப்பிட்ட நிறுவனம் சார்ந்தவர்களும் பல்வகை உத்திகளையும் செயல்களையும் செய்வது வாடிக்கை.எதிர்ப்பை என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராவர்.

அப்பொழுது அவர்கள் செய்யும் முதல் வேலை ஊடக நிறுவனங்களை வளைப்பது.ஊடகமுதலாளிகளுக்கு விளம்பரங்களைக் கொட்டிக் கொடுப்பது,வர்த்தக ரீதியாகவோ அல்லது பொருளாதார நலன் சார்ந்தோ,தனிப்பட்ட நலன் சார்ந்த விஷயங்களையோ செய்து கொடுப்பதும் இதில் அடங்கும்.ஜாதி,அரசியல் கட்சிகளின் தொடர்பு,தரகு வேலை பார்ப்பவர்களின் பங்கு,அதிகாரத்தில் இருப்பவர்களின் தயவு இதில் கணிசமாக இருக்கும்.அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் பெரும்பாலும் பிரச்சனை இல்லை.அனைத்தும் இலகுவாக முடிந்து விடும்.தினமலர் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ”கொள்கை” அளவில் எப்பொழுதும் எதிர்ப்பது தனிக்கதை.

பத்திரிக்கை நிறுவனம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது என்று கொள்கை அளவில் முடிவெடுத்து விட்டால் இவர்களின் அடுத்த கட்டம் அங்கு வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களை தங்களது வலையில் விழ வைப்பது தான்.நேர்மையான பத்திரிக்கையாளர்கள் இதற்கு பலியாவது இல்லை.அவர்களை அணுகுவதும் இல்லை.ஊசலாட்டத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள்,ஊழல் பேர்வழிகள் தங்கள் வலையில் விழுந்தவுடன் அவர்களை நன்கு கவனிக்கத் தவறுவதும் இல்லை.

இவ்வாறு வலையில் விழும் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் கிம்பளப் பட்டியலில் வந்து விடுவர்.
அவர்களின் விருப்பமும் தேவையும்,பரிந்துரைகளும் சிறிதும் தாமதமின்றி நடந்துவிடும்.மேலும் அதன்பின் அவர்கள் கேட்கும் தகவல்கள் உடனுக்குடன் கிடைத்து விடும்.

அடுத்து வரும் காலங்களில் மற்றவர்களுக்குத் தெரியாத அதிகாரத்தில் உள்ளவர்களின் செய்திகள் இவர்களுக்கு முதலில் தெரிந்து விடும்.இந்தத் தகவலை  பத்திரிக்கைத் தொழிலில் தங்களைப் பலப்படுத்த பயன்படுத்திக் கொள்வர்.

நீ எனக்கு அட்ஜஸ்ட் பண்ணு நான் உனக்கு அட்ஜஸ்ட் பண்றேன் என்பது தான் இந்த பாலிசி.

பத்திரிக்கை நிர்வாகம் என்ன முடிவு  எடுத்தாலும் இவர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் மாற்றுக் கருத்தைப் பதிவு செய்கிறேன் என்ற பெயரிலும் எழுத ஆரம்பிப்பர். இவர்களின் பதிவுகள் சில சமயங்களில் முழுக்க எதிர்நிலையாகவும்,சில நேரங்களில் மக்களைக் குழப்பும் விதமாக ரெண்டுங்கெட்டானாகவும்,அல்லது போராடும் மக்களிடையே நிலவும் சிறு சிறு பிரச்சனைகளை ஊதிப் பெரிதுபடுத்துவதாகவும் அல்லது அவர்கள் மீது அவதூறு செய்வதாகவும் அல்லது கருத்தியல் ரீதியாக எதிர்ப்பாகவும் இருக்கும்.

இவர்களின் செய்திகள் சில நேரங்களில் விளம்பரம் போல பளிச்சென்று அனைவருக்கும் தெரியும் வண்ணம் இருக்கும்.ஆனால் சிறிதும் கூச்சநாச்சமின்றி இதனைச் செய்வர்.சில நேரங்களில் போராட்டம் கொழுந்து விட்டு எரியும் பொழுது அதனைப் பதிவு செய்யாமல் அதனை நீர்த்துப் போகச் செய்வதும் உண்டு.அல்லது பிரச்சனையத் திசை திருப்ப வேறு பிரச்சனையில் கவனத்தைத் திருப்புவர்.

ஈழப்பிரச்சினையில் இது தான் நடந்தது.நிருபரில் இருந்து ஆசிரியர்,பதிப்பாளர் வரை அனைவரும் இதில் அடக்கம்.(தனது அலுவலகம் முழுவதற்கும் பயன்படுத்த ஒரு பத்திரிக்கை அதிபர் 30கணிப்பொறிகளை புதிதாக வாங்கினார்.கொழும்பு உல்லாசச் சுற்றுலாவில் இருந்து திருவான்மியூரில் பிளாட் வாங்கியது வரை,ஒரு இறக்குமதி ரம் பாட்டில் வரை,செம்மொழி மாநாட்டு காண்ட்ராக்ட் எடுத்தது வரைக்கும், கலைஞர் டிவியில் புரோகிராம் நடத்தியது வரைக்கும்)பல்வேறு ஊடகங்களில் இதற்கு விலை போனவர்கள் பல ரகம்.

மூன்று தமிழர்களுக்கு தூக்கு பிரச்சனையிலும் இது தான் நடந்தது.சமீபத்தில் கூடங்குளம் பிரச்சனையிலும் இவ்வாறு நிறைய ரிப்போர்ட்டர்கள் இப்பொழுது இவ்வாறு விலை  போக ஆரம்பித்துள்ளனர்.இவர்களின் பதிவுகள் இவர்களின் நோக்கத்தைப் பளிச்சென்று காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த மாதிரி ஆட்களை காசுக்கு பீயைத் திங்கிறான் என்று கிராமத்துப் பக்கம் சொல்வார்கள்.

இனி மேட்டருக்கு வருவோம்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் கடந்த மூன்று மாதங்களில் மக்கள் அனைவரும் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்டு கட்சி பாராது,சாதி பாராது,மதம் பாராது  போராடிய விஷயங்கள் உண்டென்றால் அது இரண்டு விஷயங்கள் தான்.

1)மூவருக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து நடைபெற்ற நாடு தழுவிய போராட்டம்.

2)கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு உலையை எதிர்த்து நெல்லை மாவட்ட மக்கள் நடத்திய போராட்டம்.இந்தப் போராட்டம் அனைத்துப் பகுதிக்கும் பரவவில்லை என்றாலும் அனைத்து மட்டத்தினரின் ஆதரவும் இதற்கு இருக்கிறது.

மக்கள் நலனுக்கு விரோதமாகச் சிந்திக்காத யாரும் மேற்கண்ட இரண்டு விஷயங்களிலும் எதிர்நிலை எடுக்கவில்லை.இந்த இரண்டு விஷயங்களிலும் விகடன் குழும இதழ்கள் மற்ற நிறுவன இதழ்களைக் காட்டிலும் உண்மையாகவும் நேர்மையாகவும்,(வணிக நோக்கம் இருந்தாலும்)செயல்பட்டன என்றால் அது மிகையில்லை.

அதற்கு முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால் மேற்கண்ட இரண்டு விஷயங்களிலும் மக்கள் விரோதமாக எதற்கோ ஆசைப்பட்டு,அல்லது யாருக்கோ வழக்கம் போல அடிமையாகி ஜூனியர் விகடனில் எதிர்க்கருத்தைப் பதிவு செய்தவர் என்ற சந்தேக வட்டத்தில் இருப்பவர் தான் பாலகிஷன்.நாம் கடந்த சில வருடங்களாக இவரது பதிவைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.

யார் இந்த பாலகிஷன்?
(இவரது புகைப்படம் கிடைக்கவில்லை.வைத்திருப்பவர்கள் கலகக்குரல் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்)

இவரது ஒரிஜினல் பெயர் பாலகிருஷ்ணன் என்ற பாலகிஷன். பாலகிஷன்,சூர்யா,ஆர்.பி.,கனிஷ்கா என்று பல்வேறு பெயரில் இவர் தனது செய்தியைப் பதிவு செய்கிறார் என்பது நமது புலனாய்வில் தெரியவந்தது.

இவர் ஜூனியர் விகடனின் சிறப்புச் செய்தியாளர்.இவரும் எஸ்.சரவணகுமார் என்பவரும் தான் சில காலங்களுக்கு முன்வரை  ஜூ.வி.யில் உச்சத்தில் கோலோச்சியவர்கள்.

இதில் பாலகிஷனுக்கு அதிகார மட்டத் தொடர்புகள் அதிகம்.அதனைப்பயன்படுத்தி எந்தச் செய்தியையும் உட்கார்ந்த இடத்தில் இருந்து தனது விருப்பத்திற்கு ஏற்ப தயாரித்து பத்திரிக்கைக்கு அளித்து விடுவார்.இவர் தான் சிறப்புச் செய்தியாளராயிற்றே!இவரது எழுத்துக்கள் அனைத்தும் இவர் எதிர்பார்க்கும் படி வெளிவந்து விடும்.

சரவணகுமார்,பாலகிஷன் என்ற இந்த இருவருமே மிகப்பெரிய விடாக்கண்டர்கள் கொடாக் கொண்டர்கள்.நீண்ட காலம் ஜூ.வி.பத்திரிக்கையில்கோலோச்சிய இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் நிர்வாகத்திடமே தங்கள் தில்லாலங்கடி வேலையைக் காட்ட முதலில் எஸ்.சரவணகுமாருக்கு கல்தா கொடுத்த நிர்வாகம் அதன் பின் பாலகிஷனுக்கு கல்தா கொடுக்க முடிவு செய்தது.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ பத்திரிக்கையில் பாலகிஷனின் அதிகாரத்தை மட்டும் பிடுங்கி விட்டு வேலையில் மட்டும் தொடர்ந்து நீடிக்க அனுமதித்தது. பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மாறினாலும் பாலகிஷன் அவ்வப்பொழுது தனது வேலையைக் காட்டத் தவறுவது இல்லை.

க்கள் தன்னெழுச்சியுடன் போராடிய மூவருக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து போராட்டம்,கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆகிய விஷயங்களில் இவரது கைவரிசையைப் பார்ப்போம்.

நாடு முழுவதிலும் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டம் வெடித்துக் கொண்டிருந்தது.ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழ் அவர்களின் குரலை முழுமையாக வெளிக் கொணர்ந்தது.

ஜூ.வி.,21-8-2011 தேதியிட்ட இதழில் மூன்று தமிழர் தூக்குத் தண்டனைக்கு எதிராக  6 செய்திகள் இடம் பெற்றுள்ளன.

ஜூ.வி நிருபர் ந.வினோத்குமார் எடுத்துள்ள அ,ஞா.பேரறிவாளன் தாயாரின் நேர்காணல், ஜூ.வி செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் எடுத்துள்ள வைகோ நேர்காணல், ஜூ.வி நிருபர் தி.கோபிவிஜய் எடுத்துள்ள,ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் சி.பி.ஐ.இன்ஸ்பெக்டரின் நேர்காணல்,சட்டப்படி தூக்கில் இருந்து தப்பிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி பற்றிய நிருபர் தமிழ்க்கனலின் பதிவு,மேலும் கழுகார் பதில்களில் தூக்குத் தண்டனைக்கு எதிராய் 2  பதில்கள் ஆகியவையும் அந்த இதழில் இடம் பெற்றுள்ளன.

பாலகிஷனோ அவர்களைத் தூக்கில் இட வேண்டும் என்று ஓய்வு பெற்ற சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமனின் நேர்காணலைப் பதிவு செய்துள்ளார்.அதுதான் இது.
ஜூ.வி. செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன் உட்பட நிருபர்கள் மூவரும் தனது பெயரில் செய்திகளைப் பதிவு செய்துள்ளனர்.ஆனால் சிறப்புச் செய்தியாளர் பாலகிஷனோ ஆர்.பி.,என்ற தனது இனிஷியலில் செய்தியினை மறைமுகமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்த நேர்காணலை வணிகப் பத்திரிக்கையில் மாற்றுக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் என்ற அளவில் தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம்.

டுத்த விஷயத்தைப் பார்ப்போம்.

ரகோத்தமன் நேர்காணல் வந்த அடுத்த 2 வாரத்தில் அதாவது,செப்டம்பர் 4,2011
தேதியிட்ட ஜூ.வி.இதழில் தலைமை நிருபர் டி.எல்.சஞ்சீவிகுமார் என்பவர் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிராய்,பெங்களூரு ரங்கநாத் என்பவரின் நேர்காணலைப் பதிவு செய்துள்ளார்.அதில் ரங்கநாத்,ரகோத்தமன் பற்றிக் குற்றம் சாட்டியுள்ளார்.இது தான் அந்த நேர்காணல்.
அதே இதழில் அவரது குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும் விதமாக ரகோத்தமனின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.இங்கு தான் நமக்குப் பல கேள்விகள் ஏற்படுகின்றன.

1)பொதுவாக ஒரு செய்தியில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால்,யார் மீது குற்றம் சுமத்தப்பட்டதோ அவரது கருத்தினையும் 4 வரியில் அதிகபட்சம் 10 வரியில் தாங்கித் தான் எந்த இதழும் வரும்.அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் அவர் கருத்துக் கூறினால் வெளியிடத் தயாராய் இருக்கிறோம் என்ற செய்தியுடன் இதழ் வரும்.செய்திப் பதிவு என்றால் தான் இந்த முறை.

2)ஆனால் டி.எல்.சஞ்சீவிகுமார் எடுத்துள்ளதோ பெங்களூரு ரங்கநாத் நேர்காணல்.அதில் அவர் சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் மீது குற்றம் சுமத்தியுள்ளார். நேர்காணலில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் வாங்கிப் போட வேண்டிய அவசியம் இல்லை.

அப்படி அவசியம் என்றால்,இதுவரை எத்தனையோ தலைவர்கள்,எழுத்தாளர்கள்,ஆளுமைகள் நேர்காணல் ஜூ.வி.இதழில் வந்துள்ளது.அத்தகைய நேர்காணல்களில்  எல்லாம் அவர்கள் எத்தனையோ நபர்களைக் குற்றம் சாட்டியுள்ளனர்.அதற்கெல்லாம் இது வரை பதில் சொல்லும் விதமாக பதிலுக்கு எத்தனை நேர்காணல்கள் அதே இதழில் இடம் பெற்றுள்ளன?ஒரு நேர்காணலும் இதுவரை இல்லை.மறுப்பு அல்லது விளக்கம், அதிகபட்சம் ஓரிரு வாரம் கழித்து பதில் சொல்லும் விதம் வேறொரு நேர்காணல் வரும்.

3) பொதுவாக இதழ் வந்த பின்பு தான் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வெளியில் தெரியவரும்.அதன்பின் அவரது எதிர்க்கருத்து வெளியே வரும்ஆனால் பாலகிஷன் தான் சிறப்புச் செய்தியாளராயிற்றே! ஆசிரியருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறாரே!அவருக்கு ரகோத்தமன் மீது குற்றம் சாட்டப்பட்ட டி.எல்.சஞ்சீவிகுமாரின் நேர்காணலை முன்கூட்டியே படிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

இந்த இதழ் வெளிவந்தால் நாலு பேர் ரகோத்தமனைத் தப்பாக நினைப்பார்களே,இதழ் வந்தபின் அவர் பதில் விளக்கம் அளித்து அது வெளிவர 4 நாட்கள் ஆகிவிடுமே?அதுவரை சமூகத்தில் அவருக்கு கெட்டபெயர் ஏற்படுமே என்று உள்ளம் பதைபதைத்து உடனே அதற்கு பதில் சொல்லும் விதமாக ரகோத்தமனின் நேர்காணலை அதே இதழில் பதிவு செய்திருக்கிறார்.

அதனால் தான் ரகோத்தமன் நேர்காணல் வந்த அடுத்த 2 வாரமே ஆகியிருந்த நிலையிலும்  ரகோத்தமனின் நேர்காணலை மீண்டும் பதிவு செய்துள்ளார்.அதுவும் சூர்யா என்ற புனைப்பெயரில்.

4)ஆகஸ்ட் 21 ஆம் தேதியிட்ட சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் நேர்காணலை ஆர்.பி.என்ற பெயரில் பதிவு செய்துள்ள அவர்,இரண்டு வாரம் கழித்து செப்டம்பர் 4 ஆம் தேதி எடுத்த அதே சி.பி.ஐ.யின் விசாரணை அதிகாரியான ரகோத்தமன் நேர்காணலை சூர்யா என்ற பெயரில் ஒளிந்து கொண்டு பதிவு செய்துள்ளார்.

ஏன் இந்தக் திருட்டுத்தனம்?இதற்கு என்ன தேவை?

5)ஒரு வாதத்திற்காக மாற்றுக் கருத்து என்ற அளவில் நேர்காணலை ஏற்றுக் கொண்டாலும் 2 வாரத்தில் அதுவும் இரண்டு நேர்காணல் வருமளவுக்கு ரகோத்தமனுக்கு என்ன முக்கியத்துவம்?

இதுவரை ஜூ.வி.யில் யாருக்கும் இப்படி ஒரு பொன்னான வாய்ப்புக் கிட்டவில்லையே?

இதற்கு விளம்பரக் கட்டணம் என்ன?யாருக்குச் செலுத்தப்பட்டது?கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியதிருக்கிறது.
டுத்து சென்ற இதழ் ஜூனியர் விகடனில் கூடங்குளம் பற்றிய இவரது செய்தியைப் பார்ப்போம்.
கூடங்குளம் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்ற பெயரில் 27-11-2011 தேதியிட்ட இதழில் வெளிவந்த 3 பக்க பதிவு.

வணிகப் பத்திரிக்கை,அதனால் கொள்கை மட்டும் பேச முடியாது,அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் அதனால் மாற்றுக் கருத்தினை அனுமதிக்க வேண்டும் என்ற கோணத்தில் இதனைத் தாராளமாக அனுமதிக்கலாம்.

ஆனால் பதிவின் கடைசி வரியைப் பார்த்தால் முழுப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் நாளுக்கு நாள் போராட்ட வேகம் குறைவதும்,அணு மின் உலைக்கு ஆதரவுப் போராட்டங்கள் நடக்க ஆரம்பிப்பதும் இந்த ஏரியாவுக்குப் புதுசு

என்று முடித்துள்ளார்.

கருத்தியல் ரீதியில் விஞ்ஞானிகள் எனப்படுவோர் சொல்வதை அப்படியே 3 பக்கங்கள் எழுதி விட்டு நடைபெறும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு போராட்டங்கள் பற்றி ஒரு வரி கூட  செய்தியில் தெரிவிக்காமல்,அலசி ஆராயாமல், எழுத்தில் அதற்குச் சிறிதும் தொடர்பு இல்லாமல்,ஆனால் அணு உலைக்கு ஆதரவுப் போராட்டங்கள் அதிகரித்துள்ளன என்று சம்பந்தம் இல்லாமல் செய்தியை முடித்துள்ளார்.

இதன் மூலம் போராட்டத்தை முடக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் இருப்போரின் விருப்பத்தை புராஜக்டாக மாற்றி இதழில் பதிவு செய்துள்ள இவரின் ஆர்வம் நமக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.இதன் மூலம் நாடெங்கிலும் உள்ள மக்களின் மனதில் போராட்டம் தோல்வியை நோக்கிச் செல்கிறது என்பது போன்ற பிரமையை ஏற்படுத்துவது தான் இவரது நோக்கம்.

இதனை அணு உலை தயாரிக்கும் நிறுவனத்தின் விளம்பரம் என்று சொல்லலாம்.விளம்பரக் கட்டணம் நிர்வாகத்துக்குச் செல்லாமல் செய்தியாக வெளிவந்திருக்கிறது.இதற்கு அணு உலை தயாரிக்கும் நிறுவனம் கொடுத்த விலை என்னவென்று நமக்குத் தெரியவில்லை.

னி இறுதிப் பகுதிக்கு வருவோம்.

கூடங்குளமாகட்டும்,மூவர் தூக்குத் தண்டனையாகட்டும் எப்பொழுதும் மக்கள் கருத்துக்கு எதிரான மாற்றுக் கருத்தினையே பதிவு செய்கிறாரே பாலகிஷன்.இதற்கு என்ன காரணம்?எதிர்க்கருத்து உள்ளோர் எல்லாம் இவரிடம் மட்டுமே நேர்காணல் அளிக்கின்றனரே?அது ஏன்?

இவர் சிந்தனையே மக்கள் நலனுக்கு எதிராய் இருக்கிறதா?அல்லது இவரை யாரும் பயன்படுத்திக் கொள்கிறார்களா?அல்லது தனது சிந்தனையை மற்றவர்கள் நல்ல விலைக்குப் பயன்படுத்த அனுமதிக்கிறாரா?அதற்கு ஜூ.வி.இதழைப் பயன்படுத்திக் கொள்கிறாரா?தெரியவில்லை.

சிறப்புச் செய்தியாளர் என்று சொல்லிக் கொள்ளும் இதுவரை இவர் எத்தனை மக்கள் பிரச்சனையில் தனது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்?

இவர் மீதான நமது மேற்கண்ட குற்றச்சாட்டிற்கு நிருபிக்கத்தக்க வலுவான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால் இவரது எழுத்தே இவர் மீதான ஐயப்பாட்டையும் இவரது நடத்தையையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆகவே தான் நிராகரிக்க முடியாத நமது சந்தேகங்களை இங்கு கேள்விகளாக எழுப்பியுள்ளோம்.

நாம் பத்திரிக்கையை காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறோம்.ஆகவே கேள்வி எழுப்புவது நமது உரிமை.
அதுவும் சமீப காலமாக கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைக்கு ஆதரவாய் அனைத்து ஊடகங்களிலும் செய்தி இடம் பெறச் செய்வதற்காக மிகப்பெரிய சக்தியுடன் ஒரு குழு களம் இறங்கியுள்ளது.

அவர்களின் நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் ஓரளவுக்கு நிறைவேறியுள்ளது.இனி வரும் வாரங்களில் ஊடகங்களில் ஆதரவாய் அதிகச் செய்திகள் வெளிவர வாய்ப்புள்ளது.

ஆகவே தற்பொழுது நடைபெறும் கூடங்குளம் பிரச்சனையாகட்டும்,கல்பாக்கம் பிரச்சனையாகட்டும் யார் என்ன செய்தி எழுதினாலும் அதனை சந்தேகக் கண் கொண்டு பாருங்கள்.

குறிப்பாக சூர்யா,கனிஷ்கா,ஆர்.பி.,பாலகிஷன்.கிஷன்,என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு இவர் எப்பொழுது  எந்தப் பிரச்சினை  குறித்து எழுதினாலும் பகுத்தறிவு கொண்டு வாசியுங்கள்.

இறுதியாக வள்ளுவப் பெருந்தகையின் குறளுடன் முடிக்கிறோம்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு


Wednesday 23 November 2011

ஆஹா எப்.எம்.இல் இருந்து ரோஹிணி நீக்கம்-அச்சத்தில் டீ குடிக்க மறுக்கும் ஊழியர்கள்


 பி.வரதராஜன்,தனக்கு குமுதம் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட்டில் வானளாவிய அதிகாரம் இருக்கிறது,நான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்பதை சும்மனாச்சும் ஊருக்கு நிலைநிறுத்துவதற்காக தான்தோன்றித்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பல தடாலடி முடிவுகளை எடுக்கிறார் என்பதை ஏற்கனவே எழுதியிருந்தோம்.


                                                                               ரோகிணிஅதன் படி இந்த வாரம் குமுதம் ஆஹா எப்.எம்.மில் இருந்து ரோகிணி என்பவரை நீக்கியுள்ளனர்.இவர் செய்த மாபெரும் தவறு என்ன தெரியுமா?

சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள குமுதம் அலுவலகத்திற்கு குமுதம் நிறுவனரின் மனைவியும் தற்பொழுதைய மேலாண் இயக்குனருமான கோதை ஆச்சியும் அவரது மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பனும் வந்தனர்.

இவர்கள் வருகையை முன் கூட்டியே அறிந்த பி.வரதராஜன்(சன் ஆப் பார்த்தசாரதி) லிப்டை இயங்காமல் நிறுத்தி வைத்து விட்டார்.ஆட்களை ஏற்பாடு செய்து ஏணிப்படி முழுவதும் தண்ணீரையும் கொட்டி வைத்து விட்டார்.டாக்டர் முன் கூட்டியே வந்ததால் அவர் நடந்தே மாடிக்குச் சென்று விட்டார்.

நடக்கவே சிரமப்படும் 85 வயதான கோதை ஆச்சி தாமதமாக வந்ததால் ஏறுவதற்கு தடுமாறி தயங்கியபடி ஏறாமல் நின்று விட்டார்.அந்த சமயத்தில் ஆஹா எப்.எம்.மின் ஊழியர்கள் ரோகிணி அங்கு தற்செயலாக வந்துள்ளார்.அவரிடம் கோதை ஆச்சி,”லிப்ட் வேலை செய்யலை.ஏணிப்படி முழுவதும் தண்ணீராக வேறு இருக்கிறது,அதனால் என்னால் மேலே ஏற முடியவில்லை.படி ஏறுவதற்கு கொஞ்சம் உதவி செய்ய முடியுமா?என்று தயக்கத்துடன் கேட்டுள்ளார்.

ரோகிணியோ  நாம் பணியாற்றும்  நிறுவனத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவரின் மனைவி கோதை ஆச்சி,நாம் இப்பொழுது நின்று கொண்டிருக்கும் கட்டிடத்தைக் கட்டியவரின் மனைவி.அதோடு மட்டுமல்லாது மிகவும் வயதான 85 வயது முதியவர்.இவருக்கு உதவி செய்வதில் என்ன தப்பு என்ற நல்லெண்ணத்தில் அவரைக் கைத்தாங்கலாக மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அதுதான் அவரின் வேலைக்கு உலை வைக்கப் போகிறது என்பது தெரியாமல்.

இவர் கோதை ஆச்சியை மாடிக்கு அழைத்துச் செல்வதை கேமரா மூலம் மாடியில் உள்ள தனது அறையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பி.வரதராஜன் ஆத்திரத்தில் கெட்ட வார்த்தையை உதிர்த்தபடியே கடுப்பானாராம்.அதன்பின் தனது எச்.ஆர்.ஐ அழைத்தாராம்.உடனே பறந்து வந்தார் பிரியங்கா.(நீங்கள் நினைக்கும் அதே,அதே பிரியங்கா தான்)

சிறிது நேரத்தில் ரோகிணிக்கு வேலை நீக்க உத்தரவு டைப் செய்யப்பட்டு கையில் கொடுக்கப் பட்டதாம்.அதைப் படித்த ,மனிதநேயமற்ற இங்கே வேலை பார்க்குறதுக்குப் பதிலா வீட்டில் சும்மா இருக்கலாம் என்று சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டாராம்.
ரோகிணி

ரோகிணிக்கு ஒரு சல்யூட்

பொதுவாக வரதராஜன் எப்பொழுதுமே  மனிதாபிமானமற்றவராகவும் தொழிலாளர் விரோதியாகவுமே இருந்துள்ளார்.அதனால் தான் வயதான மூதாட்டிக்குச் செய்த சிறு உதவியைக்கூட அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.அதனால் தான் இந்த வேலை நீக்க உத்தரவை வழங்கியுள்ளார்.

ந்த சம்பவத்துக்குப் பின் கோதை ஆச்சி கடந்த இரண்டு நாட்களாக அலுவலகம் வந்த பொழுது காக்கை குருவியைத் தவிர ஏணிப்படி பக்கம் ஒருவர் கூட ஒரு மணி நேரத்திற்கு எட்டிப் பார்க்க வில்லையாம்.

தினசரி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறையிலிருந்து அடிக்கடி டீ குடிக்க வெளியே செல்பவர்கள்,சிகரெட் பிடிக்க வெளியே செல்பவர்கள் உட்பட யாரும் ஒரு மணி நேரம் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்கையை விட்டு எழுவதில்லையாம்.

நாம் வெளியே வந்தால் கோதை ஆச்சிக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும்,அல்லது அவருக்கு உதவி செய்ய வேண்டும்,இதனை கேமராவில் பார்க்கும் வரதராஜன் உடனே நம்மை வேலையில் இருந்து நீக்கி விடுவார் என்ற அதிகபட்ச பயம் தான் காரணமாம்.இதில் விதிவிலக்கான பத்திரிக்கையாளர்கள் யாரும் அங்கு இல்லை.

நாட்டில் நடக்கும் ஊழல்,முறைகேடு,அதிகார துஷ்பிரயோகம்,அத்துமீறல்,அநியாயம் என்பவற்றை எல்லாம் தட்டிக் கேட்கும் கதாநாயகர்கள் என்பது போன்ற  பிம்பத்துடன் பொதுவெளியில் வலம் வரும் பத்திரிக்கையாளர்கள் நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள்.

குமுதம் ஊழியர்களின் செயலுக்காக அவர்களைத் திட்டுவதா அல்லது அவர்கள் நிலையை நினைத்து வருத்தப் படுவதா தெரியவில்லை.
.

ஜூனியர் விகடன்-ஊருக்குத்தாண்டி உபதேசம்ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் மற்றும் என்.அண்ணாமலை ஆகிய இருவரையும் பதவி உயர்வு என்கின்ற பெயரில் முறையே கோவைக்கும் மதுரைக்கும் நிர்வாகம் இடமாற்றம் செய்து பழி வாங்கியது. ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் அசோகன் இதன் பின்னணியில் இருப்பதாக இருவரும் தன்க்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்து இருந்தனர்.

இடமாற்றத்தினை அண்ணாமலை அமைதியாக ஏற்றுக்கொண்டு மதுரைக்குப் பணிக்குச் சென்றார்.ஆனால் பி.பி.சிவசுப்ரமணியன் என்கின்ற சிவன் சென்னையில் தொழிலாளர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்.இவரது வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இடமாற்றத்துக்கு தடை விதித்துள்ளது.

ஆனாலும் ஜுனியர் விகடன் நிர்வாகம் அலுவலகத்தில் இன்னும் அவரைப் பணியில் சேர்க்க மறுக்கிறது.இந்த விஷயத்தை ஜூனியர் விகடன் வெளியீட்டாளர் அசோகன் தனக்கு எதிரான விஷயமாகப் பார்க்கிறாராம்.அதனால் தான் இந்த இழுபறியாம்.


ஜெயலலிதா நீதிமன்றத்தை மதிக்க வேண்டும்,நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் ஜுனியர் விகடன் நீதிமன்ற உத்தரவை மதிக்குமா?

ஊருக்குத்தாண்டி உபதேசம் !

Sunday 20 November 2011

பிதாவே இந்தப் பாவிகளை மன்னியாதேயும்தற்பொழுது புரசைவாக்கம் பத்திரிக்கை நிறுவனத்தை ஆக்கிரமித்துள்ள வரதாபாய் அடாவடித்தனம்,கட்டப் பஞ்சாயத்து,பிளாக்மெயில் இவற்றுக்கெல்லாம் தலைவனாகத் திகழ்பவர்.இவருக்குக் கீழே இவரைப் போன்றவர்கள் மட்டுமே பணியாற்ற முடியும். தன்னைப் போன்று கட்டப்பஞ்சாயத்து,பிளாக்மெயில் ஆசாமிகளையே முக்கியப் பொறுப்புகளில் வரதாபாய் நியமித்துள்ளார்.இந்த வரதாபாய் தொடங்கியது தான்  ரிப்போர்ட்டர்.

இதைத் துவங்கியதன் நோக்கமே அரசியல்வாதிகளையும் உயர் அதிகாரிகள்,பெரும் தொழில் அதிபர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பதற்காகவே.இவரது மிரட்டலுக்கு ஆளான தென்னக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் ரயில்வே நிலைங்களை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தும் ஒரு காண்ட்ராக்டை வழங்கினாராம்.இந்தக் காண்ட்ராக்ட்டைப் பெற  ரிப்போர்ட்டரில் அவரைப்பற்றி அவதூறுச் செய்திகள் அடிக்கடி வெளியிடப்பட்டதாம்.காண்ட்ராக்ட் கிடைத்த பிறகு அந்த அதிகாரியை ஓகோவென்று புகழ்ந்து எழுதினார்களாம்.

பத்திரிக்கைத் தொழிலை மட்டுமே தெரிந்த பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிக்கும் நேர்மையாளர்கள் இங்கு பணியாற்றுவது என்பது மிகவும் அரிதான விஷயம் தான்.தாங்கள் உண்டு,தங்கள் வேலையுண்டு என்று வேலை பார்க்கும் நேர்மையாளர்கள் ஓரிருவர் மட்டுமே அங்கு உள்னர்.  

வரதாபாய் குமுதம் நிறுவனத்தில் செய்த ஊழலைப்பற்றியும் குமுதத்தின் பெயரைப் பயன்படுத்தி இவர் நடத்திய அஜால் குஜால் வேலைகள் பற்றியும் எழுத  ரிப்போர்ட்டரைப் போன்று ஒரு தனி பத்திரிக்கையே நடத்தலாமாம்.

ஊர் உலகத்திற்கெல்லாம் நேர்மை,நீதி,நியாயம் என்று போதிக்கும் அந்தப் பத்திரிக்கை பெரும்பாலும் ஏமாற்று,மோசடி,பித்தலாட்டக்காரக் கும்பலால் நிரம்பி வழிகிறது.செய்தி வெளியிட்டாலும் காசு,வெளிவராமல் தடுத்தாலும் காசு பார்ப்பது அந்தப் பத்திரிக்கையில் வழக்கமான ஒன்று.

அதில் சாண் வில்ஸ்,முழம் வில்ஸ் என்ற ஜான் வில்கின்ஸ் என்ற புஷ்கின் ராஜ்குமார் என்பவர் செய்தி ஆசிரியராகப் பணியாற்றுகின்றாராம்.(அலுவலகத்தில் உள்ளவர்கள் இவருக்கு வைத்துள்ள பெயர்-டப்பாச்சோறு.சாப்பாடு கொண்டு வரும் டப்பாவில் பல்வகை பதார்த்தங்களும் உணவு வகைகளும் இடம்பெறுவதைப் போல,இவர் லஞ்சமாக பணமோ பொருளோ யார்   என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதால் இந்தப்பெயராம்)அவரைப் பற்றிக் கேவலமான பல உண்மைச் செய்திகள் நம் காதுகளில் மட்டுமல்ல ஊர் உலகம் அனைத்தின் காதுகளிலும் நாரசாரமாய் விழுகின்றது.அதனைக் குற்றச்சாட்டாக இங்கு பதிவு செய்கின்றோம்.


1) செய்தி ஆசிரியரான தாங்கள் அடிக்கடித் தங்கள் மகனை அழைத்து வந்து தங்கள் இருக்கையில் அமரவைத்து நிருபர்கள் கூட்டத்தை நடத்துகின்றீர்களாமே? உங்கள் மகன் நிருபர்களைப் பார்த்து,இவர்கள் எல்லாம் ஒழுங்காக பீல்டுக்குப் போவார்களா அப்பா என்று ஏளனமாகக் கேட்பானாமே?இதைக் கண்டு நிருபர்கள் அவமானத்தில் வெட்கித் தலை குனிவார்களாமே?இது உண்மையா?

2) உங்கள் பெயரில் எப்பொழுதும் கட்டுரை,நேர்காணல்,துக்கடாச் செய்தி கூட  எழுதாமல் புஷ்கின் ராஜ்குமார் என்னும் உங்கள் மகன் பெயரில் தான் எழுதுவீர்களாமே?வசூல் வேட்டை,பிளாக்மெயில் போன்றவற்றிற்காக இப்படிச் செய்கின்றீர்களாமே?வெளியிடப்படும் செய்தியால் பாதிக்கப்படும் யாராவது புஷ்கின் என்பவர் யார்,ஏன் இப்படி எழுதுகிறார் என்று கேட்டால் நம்ம சக ஊழியர் தான்,கொஞ்சம் அமவுண்ட் செலவாகும்,கொடுத்தா எழுதுவதை நிப்பாட்டிடலாம் என்று வசூல் செய்வீர்களாமே?

அதிமுக அவைத்தலைவர் ஆதிராஜாராம் அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியான உடன், புஷ்கின் யார் என்று உங்களிடம் கேட்டதற்கு,அலுவலகத்தில் எனது சக ஊழியர் தான். காந்தி தாத்தா ஜாஸ்தியா கொடுங்க.சரிக்கட்டிடலாம் என்று இளித்துக் கொண்டே சொன்னீர்களாமே?உண்மையா?

3) உங்கள் மகனின் பிறந்த நாளின்பொழுது நாட்டுக்கே பட்ஜெட் போடும் பதவியில் இருப்பவரின் வாரிசு கார்த்தி ஒன்றே கால் லட்ச ருபாயில் எல்சிடி டிவி உங்களுக்கு வாங்கிக் கொடுத்தாராமே?உண்மையா?
மேலும் அதிமுக தென்சென்னை எம்.பி.சிட்லபாக்கம் ராஜேந்திரன் 5 பவுன் தங்க நகை வாங்கிக் கொடுத்தாராமே?உண்மையா?

மேலும் தி.நகர்.அதிமுக எம்.எல்.ஏ.கலைராஜன் விலை மதிப்புள்ள பரிசினை உங்களுக்கு  வாங்கிக் கொடுத்தாராமே? உண்மையா?

4) நீங்கள் எப்பொழுதும் வாரம் ஒருமுறை உங்கள் காருக்கு மொத்தமாக தண்டையார்பேட்டையில் திமுக பிரமுகருக்குச் சொந்தமான பல்க்கில் ஓசியில் பெட்ரோல் நிரப்பிக் கொள்வீர்களாமே?உண்மையா?

5) உங்கள் பத்திரிக்கையின் ஆலோசனைக் கூட்டத்தில் நிருபர்கள் அரசியல்வாதிகள் பற்றிச் சொல்லும் ஊழல் செய்திகளை உடனே சம்பந்தப்பட்டவருக்கு பாஸ் செய்து பேரம் பேசி அவர்களைப் பற்றிச் செய்தி வராமல் தடுப்பதற்காக பல்க் அமவுண்ட் கறந்து விடுகின்றீர்களாமே?உண்மையா?

6) முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதியின் பல கோடி ஊழல் பற்றிய செய்திக் கட்டுரை லேஅவுட் வரை வந்து கடைசியில் நிறுத்தப் பட்டதாமே? உண்மையா? கைமாறிய தொகை எவ்வளவு?

7) அதைப்போலவே அப்பொழுதைய திமுக அமைச்சர் தா.மோ.அன்பரசன் பற்றிய செய்தியின் பாலோ அப் ஒன்றும் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதாமே?உண்மையா?கைமாறிய தொகை எவ்வளவு?

8) முன்னாள் ஆளுநர் பர்னாலா மகனின் நண்பரான நஜிமுதினிடம் தாங்கள் பெருந்தொகை பேரம் பேசியதாகவும் அது முடியாமல் போகவும் உடனே தாங்கள் எழுதிய,சொல்வதெல்லாம் உண்மை பகுதியில் அவரைப் பற்றி சில விஷயங்களில் மிகவும் கேவலமாக,உண்மைக்குப் புறம்பாகவும் எழுதியதாகச் சொல்கிறார்களே?அது உண்மையா?

9) கொடைக்கானலுக்கு உல்லாசச் சுற்றுலா சென்ற பொழுது ஏற்பட்ட தகராறில் ஒருவரைக் கார் ஏற்றிக் கொலை செய்ததாகவும்,குறிப்பிட்ட அந்த வழக்கில் இருந்து குறுக்கு வழியில் தப்பி விட்டதாகவும் சொல்கிறார்களே?அது உண்மையா?

10) மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கும் உங்களுக்கு தற்பொழுது பல கோடி ரூபாய் சொத்து மதிப்பு உள்ளது என்று சொல்லிக் கொள்கின்றார்களே?உண்மையா?
11) பில்லி சூனியம்,ஏவல் போன்றவற்றில் நீங்கள் எக்ஸ்பர்ட் என்று சொல்லி சிலரிடம் பணம் பறிப்பதும்,உச்சகட்டமாக உங்க கும்பல் பாஸ்  வரதராஜனிடமே கறந்ததாகவும் சொல்கிறார்களே?உண்மையா?

இது போன்று இன்னும் பல நுறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் இப்பொழுதைக்கு மேற்கண்ட 11 குற்றச்சாட்டுக்களை மட்டும் இங்கு பொதுவெளியில் பதிகிறோம்.
.

இந்த உண்மைகள் எல்லாம் வாரம் தவறாமல் செவ்வாய்க்கிழமை தோறும் தாங்கள் முழங்காலிட்டு,மண்டியிட்டு பாவமன்னிப்பு கோரும் சென்னை பூக்கடை ஆலயத்தில் உள்ள அன்னை புனித அந்தோணியாருக்கே தெரியும்.

ஆகவே நாம் கோருகிறோம்.

பிதாவே இந்தப் பாவிகள் தாம் என்ன செய்கிறோம் என்று அறிந்தே செய்கிறார்கள்.இந்தப் பாவிகளை மன்னியாதேயும்.

Friday 18 November 2011

உயர்நீதிமன்ற உத்தரவுக்குப்பின் குமுதம் அலுவலகத்தில் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்பணிகளைத் தொடங்கினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு குமுதம் அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று காலை முதல் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் தனது பணிகளைத் தொடங்கினார்.அவருடன் அவரது தாயார் கோதை ஆச்சியும் வந்திருந்தார்.

முன்னதாக இவரது வருகையின் பொழுது பி.வரதராசன்(சன் ஆப் பார்த்தசாரதி) இவரைச் சந்திக்க முதலில் மறுத்ததாகவும் அறைக்கதவைப்பூட்டிவிட்டு வேறு ஒரு இடத்தில் சென்று அமர்ந்து விட்டதாகவும்,அதன் பின் நீண்ட நேரம் கழித்து சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.குமுதம் ரிப்போர்ட்டரைச் சேர்ந்த கோசல்ராம் மற்றும்
ஜான் வில்கின்ஸ் ஆகியோர் டாக்டரைச் சந்திக்கவில்லை.

முன்னதாக டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மற்றும் நடப்பதற்கே சிரமப்படும் அவரது 80 வயதான தாயார் கோதை ஆச்சியின் வருகையின் பொழுது அவர்கள் கஷ்டப்பட வேண்டும் என்று திட்டமிட்டே லிப்டை இயக்காமல் நிறுத்தி விட்டார்களாம்.மேலும் நடக்கும் வளாகம் முழுவதும் இரண்டு நாட்களாக தண்ணீரைக் கொட்டி வைத்திருந்தார்களாம்.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அலுவலகத்திற்கு வந்ததால் சிலர் முகம் இருண்டும் பலர் முகம் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கவுண்ட் டவுண் ஸ்டார்ட்.இனி என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.