Wednesday 12 December 2012

Friday 23 November 2012

பொய்யே பிழைப்பாய் கொண்ட குமுதம் ரிப்போர்ட்டர்...


லண்டனில் நடைபெற்ற பிரிட்டானிய தமிழர் மாநாடு தொடர்பாய் குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் 2 பக்க  செய்தியை 11-11-2012 தேதியிட்ட இதழில்,அதன் நிருபர் இரா.முருகேசன் பதிவு செய்திருந்தார்.மாநாடு குறித்து கோபி சிவந்தன் கூறிய கருத்து என்று ஒரு கருத்தினையும் அதில் பதிவு செய்திருந்தார். அது புகைப்படத்தில் வட்டம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.ஆனால் இதழ் வெளிவந்து ஒரு சில நாட்களில்,
கருத்துக் கூறியதாகச் சொல்லப்பட்ட‌ கோபி சிவந்தன் தான் அப்படி ஒரு செய்தியைக் கூறவில்லை என்றும் தம்மை ரிப்போர்ட்டர் இதழில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள‌வில்லை என்றும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

அது இதுதான்

லண்டன் மாநகரில் இம்மாதம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த உலகத்தமிழர்; மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் முழுச்செலவுகளையும் பிரித்தானிய தமிழர் பேரவையே ஏற்றுக்கொண்டதாகவும் அந்நிதி அவர்களுக்கு இந்திய உளவு அமைப்பான 'ரோ' மூலமே கிடைத்திருக்கவேண்டும் எனவும் இலங்கைத் தமிழன் கோபி சிவந்தன் குறிப்பிட்டதாக உண்மைக்கு முற்றிலும்
புறம்பான செய்தி ஒன்றை குமுதம் பிரசுரித்துள்ளமை அதிர்ச்சியையும் மிகுந்த வேதனையையும் அளிப்பதாக அமைந்துள்ளது.

குமுதம் இதழின் செய்தித் தொடர்பாளர் எவருக்கும் நான் பேட்டி எதுவும் அளிக்காத நிலையில் என்னுடன் எதுவித தொடர்பும் கொள்ளாமல் இப்பிரசுரத்தில்; குறிப்பிடப்பட்ட விடயங்களையும் கோபி சிவந்தனான என்னையும் தொடர்புபடுத்தி;; இச்செய்தியை வெளியிட்டதற்காக குமுதம் வார இதழை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது போன்ற பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலம் தமிழ் உணர்வாளர்களின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் ஊடகங்களை இனம் கண்டு அவர்களைப் புறந்தள்ளவேண்டும் என்று தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஊடக சுதந்திரம் என்பது மக்களிடம் எதுவித தடைகளுமில்லாமல் உலகில் நடப்பவற்றை நடந்தவாறே எடுத்துச் செல்வதற்கு உதவுவது. உண்மைக்கு முற்றிலும் மாறான விடயங்களை எழுதுவதன் மூலம் மக்களிடையே குழப்பங்களை உருவாக்குவதற்குரிய சுதந்திரம் எந்த ஊடகத்திற்கும் கிடையாது. மாறாக அது தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு குற்றமாகவே அமைகின்றது.
- கோபி சிவந்தன் 


முகநூலில் வெளிவந்த மறுப்பு


நம்முன் ஏற்பட்ட கேள்விகள் இது தான்.

 கோபி சிவந்தன்  கருத்தினையே சொல்லாத பட்சத்தில் அப்படி ஒரு கூற்று வெளியிட வேண்டிய அவசியம் ரிப்போர்ட்டருக்கு என்ன அவசியம்..?

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று திரைமறைவில் பேசுவதற்குத் 'தரமுடைய‌' கிசுகிசுவை ஒரு குறித்த நபரின் பெயரில் பகிரங்கமாய் ஏன் ரிப்போர்ட்டர் வெளியிட்டது.

சரி இது தான் போகட்டும்.இதழ் வெளிவந்த பின்னர்,கோபி சிவந்தன் பகிரங்கமாய் மறுப்பு வெளியிட்டும் ரிப்போர்ட்டர் தனது தரப்பில் எதும் விளக்கம் அளிக்கவில்லையே.அது ஏன்..? 

அவர் சொன்ன கருத்தைத் தான் வெளியிட்டிருக்கிறோம்,ஆதாரம் உள்ளது என்றோ,அவர் பொய் சொல்கிறார் என்றோ அல்லது தவறான முறையில் வெளியிட்டு விட்டோம் என்று மறுப்போ விளக்கமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டில் வாழ்கிறவர்களின் புகைப்படம் ஒன்று கிடைத்தால் போதும், அதை வைத்துக்கொண்டு என்னவேண்டுமானாலும் கதை கட்டிவிடலாம் என்று நினைக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் உள்ளுரிலுள்ள  அரசியல் கட்சியின் தலைவர்கள் குறித்து இப்படி எழுதிவிட்டு மன்னிப்பு கேட்காமல் இருந்து விடமுடியுமா? 

காசு கொடுத்து வாங்கியவனை மடையன் என்று நினைப்பதைத் தாண்டி,என் கையில் ஊடகம் இருக்கிறது நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதைத் தாண்டி,பக்கங்களை நிரப்ப எதையும் செய்வேன் என்னும் பொறுப்பற்ற தனம் இதில் வெளிப்படுகிறது.

இதுதான் எங்கள் யோக்கியதை என்று வெட்ட வெளிச்சமாய் அம்பலப்பட்டு நிற்கும் குமுதத்திடம் கேட்பதற்கு எந்த நாகரீகமான கேள்வி இருக்கிறது என்று  இதை வாசிக்கிற வாசகர்களே முடிவு செய்துகொள்ளட்டும்.


Thursday 8 November 2012

அம்பலப்பட்டு அசிங்கப்பட்டும் கம்பீரமாய் கித்தாப்புக் காட்டும் விகடன்..!னந்த விகடனின் சென்ற இதழில் வெளிவந்த “நேற்று போராளி இன்று பாலியல் தொழிலாளி” என்னும் நேர்காணலை நாம் வரிக்கு வரி ஆதாரங்களுடன் விமர்சித்து அது ஒரு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நேர்காணல் என அம்பலப்படுத்தினோம். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்வினைகள் வந்திருந்தது.ஆனந்த விகடனின் நேர்காணல் உண்மை என்று சொன்னவர்கள் கூடநாம் சொன்ன வாதங்களை மறுக்ககாமல்  மவுனத்துடன் கடந்து சென்றனர்.

ஆனால் ஆனந்த விகடனோ தான் செய்த தவறை சாதுர்யமான வார்த்தை ஜாலத்தின் மூலம் மூடி மறைக்க முயன்றுள்ளது விளக்கம் என்ற பெயரால் இரண்டு பக்கங்கள் வெளிவந்திருக்கும் அந்த எழுத்து சாதுர்யத்தையும் நாம் போஸ்ட்மார்ட்டம் செய்தாக வேண்டியுள்ளது.

(அது போக நாம் சொன்னது போல தனது தவறை மறைக்க விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த பழைய பதிவு ஒன்றினை வலிய இந்த நேரத்திற்குத் தொடர்பற்று மீள்பிரசுரம் செய்துள்ளது.)
இனி அந்த விளக்கத்தை ஒவ்வொரு பகுதியாக நாம் சரிபார்ப்போம்.கருணாநிதி எதுவும் மிகப்பெரிய தவறு செய்து விமர்சிக்கப்பட்டால், நானும் தம்பி முரசொலி மாறனும் திருவாரூர் வீதிகளில்,அந்தக் காலத்தில்  10 வயது இருக்கும் பொழுதே கறுப்புக் கொடி ஏந்திப் போராடினோம்.என்னைப் போய்ச் சந்தேகப்படுகின்றீர்களேஎன்று புலம்பலும் பச்சாதமும் வார்த்தையில் வடித்து நீண்ட அறிக்கை விடுவார்.  தான் செய்த தவறை மறைக்க அதுகுறித்து எதுவும் சொல்லாமல்  பழைய வரலாற்றை எடுத்துப் போடுவார்.

அப்படித்தான் வழவழ கொழகொழ என வழிகிறது மேற்சொன்ன ஆனந்த விகடன் விளக்கமும்.
***


இதற்கு 2 விதமாகப் பதில் சொல்லலாம்.

ஒரு பார்வையில் பார்த்தால்..

இதுகாறும் விகடன் செய்ததற்காய் நன்றி சொல்கிறோம்.அதனால் தான் தினமலர் போன்ற கழிசடைப் பத்திரிகைகளை வாங்காமல் காசு கொடுத்து ஆ.விகடனை வாங்குகிறோம்.

அதற்காய் விகடன் செய்த எல்லாவற்றையும் நாம் ஆதரிக்க முடியாது.அது எப்படி இருக்கும் என்றால்,ஓட்டலில் நீண்டநாளாய் காசு கொடுத்து சாப்பிடுபவனிடம் இவ்வளவு நாள் நாவுக்கு ருசியாக சோறு போட்டேன்இன்னைக்கு கொஞ்சம் மலம் வைக்கிறேன்சாப்பிடு என்று சொன்னால் சாப்பிடவா முடியும்.முடியாதல்லவா.?

அதைப்போல விகடனில் சரியானவற்றைப்  பாராட்டும் அதே சமயம் அயோக்கியத்தனத்தைப் பாராட்ட முடியாது.

இன்னொரு பார்வையில் இதனைப் பார்த்தால்,

விகடன் வெளியிட்ட ஒவ்வொரு செய்திக்குப் பின்னும் விற்பனை நோக்கம் தான் இருக்கிறது. அதன் குழும இதழ்களில் வெளியாகும் அனைத்துச் செய்திகள்,கட்டுரைகள்,தொடர்கள்போன்றவற்றில் எந்த பகுதிகள் வாசகர் ஆதரவு அதிகம் இருக்கிறதுஎது அதிகம் வாசிக்கப்படுகிறது.என்பது போன்ற அனைத்தையும் ஆய்வு செய்வதற்கும்அதனைக் கண்காணிக்கவும் GRM உள்ளிட்ட பல்வேறு மார்க்கெட்டிங் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அலசி ஆராய்ந்து வருகிறது. 

அது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கும் அறிக்கையைப் பொறுத்துத் தான் எந்த வகைச் செய்திகளை அதிகப்படுத்தலாம்,எதனை நிறுத்தலாம் என்று நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் முடிவெடுக்கும்.சில தொடர்கள் உடனே நிறுத்தப்படுவதும், சில விஷயங்கள் ஜவ்வாய் இழுக்கப்படுவதும் அதனடிப்படையில் தான்.

ஈழப்பிரச்சனை தொடர்பாக எழுதிய பொழுதெல்லாம் விகடன் குழும இதழ்களின் விற்பனை அதிகரித்த காரணத்தால்தான் அச்செய்திகள் தொடர்ந்து முக்கியத்துவத்துடன் இடம் பிடித்து வந்தன.  ஈழச்சிக்கலை எழுதியதால் பத்தாயிரம் காப்பி விற்பனை குறைந்திருந்தால் பக்கம் பக்கமாய் வந்த பல செய்திகளும்,கட்டுரைகளும் இன்பாக்சின் பெட்டிச் செய்தியாகச் சுருங்கியிருக்கும்.

இப்போதுகூட இரண்டு பக்கத்திற்கு விளக்கம் எழுதியிருப்பதன் காரணம், கடந்த இதழில் வந்த இட்டுக்கட்டப்பட்ட பேட்டியை ஒட்டி புலம் பெயர் தமிழர்களிடமிருந்து வரும் விகடனின் இணைய வாசிப்பு வருமானம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதால்தான்

ஆகவே நான் குரல் கொடுத்தேன்,பதிவு செய்தேன் என்று சொல்லிப் போராளி இமேஜ் கொடுக்க வேண்டாம்.

***


                                      

//அவருடைய  அடையாளம் சொல்வது பாதுகாப்பானது அல்ல என்ற நிலையில் அவருடைய அடையாளத்தை மறைத்தே வெளியிட முடிவு செய்தோம்.//

இது மிகப்பெரிய அயோக்கியத்தனம். ஏனென்றால் ஆ.விகடன் பேட்டியில் சொல்லப்பட்டிருப்பது  மிகப்பெரிய குற்றச்சாட்டுசமூகத்தில் நடக்கும் அவலத்தின் உச்சத்தை வெளிக்கொணர்ந்ததாகச் சொல்கிறது. சிங்கள அமைச்சர் கற்பழித்தார் என்ற குற்றச்சாட்டு போர்க்குற்ற ஆவணம். சிங்கள அரசுக்கு எதிராக இன்று அது முக்கியமான துருப்புச்சீட்டு.அதைப்போல இயக்கத்தில் இருந்த போராளிகள் பாலியல் தொழிலாளிகளாக மாறிவிட்டனர் என்பது மிகப்பெரிய அவலம்.

அந்த அலுவலகத்தில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கினான்இந்த நடிகருக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு என்பது போன்ற டைம்பாஸ் கிசுகிசுக்களல்ல அது.

அதை உரிய முறையில் நிரூபிக்க வேண்டும். இதற்கு முன் மாதிரியும் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலத்தை ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சியைச் சேர்ந்த பிரியம்வதா என்னும் முதன்மை நிருபர்  ஈழப்பகுதிகளுக்கு தனி ஆளாகப் பயணம் செய்து அனைத்தையும் பதிவு செய்து சமீபத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.இதற்காக 2012 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான செய்தித் தொலைக்காட்சி (சிறந்த புலனாய்வு செய்தி) விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்ட வீடியோவில் சில பகுதிகள் பேட்டி கொடுத்தவர்களின் பாதுகாப்பு கருதி முகம் மறைத்தும் வெளியிட்டுள்ளது.அது புலனாய்வு.

ஆ.விகடனின் அந்த பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள ’பெண்போராளி’ பற்றி எப்போது இயக்கத்தில் இணைந்தார் எப்போது யாரை திருமணம் முடித்தார். எப்போது பிடிபட்டார், விடுவிக்கப்பட்டார். இப்போது எங்கே தங்கியிருக்கிறார் என்று ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்லிவிட்டு அவருடைய பெயரை மாற்றிவிட்டோம் படத்தை வெளியிடவில்லை பாதுகாப்பாக இருப்பார் என்று விகடன் சொல்கிறது என்றால் யார் நம்புவார்கள். இதில் உண்மையாகவே விகடன் பாதுகாக்க முயற்சித்திருப்பது தனது இட்டுக்கட்டப்பட்ட பேட்டியை மட்டுமே.
***
//அந்தப்பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்து விட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.//

இது கலகக்குரலின் மீதான குற்றச்சாட்டு.

நாம் எழுதியது அப்பட்டமான ஆதாரங்களுடன் கூடிய மறுப்பு. அதில் ஒன்றிற்கு கூட நேர்மையாய் நேரடியாய் பதில் சொல்லத் திராணியற்ற நிலையில்தான் ஆ.விகடன் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் வார்த்தைகளுக்குள் கபடி ஆடியுள்ளது.

உண்மையில் வார்த்தைகளுக்குள் கபடி ஆடுவது எது என்றால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாறன் சகோதரர்கள் தொடர்பை எழுதும் பொழுது விகடன் குழும இதழ்கள் வார்த்தைகளை நிரப்புகின்றனவே, அது தான். நாம் எழுதியுள்ளதல்ல.
***


//அத்தனை உரிமைகளும் அந்த சகோதரிக்கு உண்டு.//
ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட சகோதரி யாரையும் ஆ.விகடன் பேட்டி காணவில்லை என்பதைத் தான் நாம் நிருபித்திருக்கிறோம்.

//குன்றின் மீது நின்று யானைப் போர் பார்ப்பதற்கும் யானையின் காலடியில்கிடந்து துடிப்பவர்களுக்குமான வித்தியாசத்தை சகோதரி சுட்டிக்காட்டினார்.//
புலம்பெயர் தமிழர்களுக்கு புத்தி சொல்வது மட்டுமல்ல குற்றச்சாட்டும் வைக்கிறதுஆனால் இது விகடனுக்குத் தான் பொருந்தும். ஈழப்போராட்டம், அது கடந்து வந்த துயரங்கள், வலிகள் அத்தனையையும் பதிவு செய்கிறோம் என்பதைத்தாண்டிபத்திரிக்கை விற்பனை என்ற நோக்கிலிருந்த பார்த்து வந்த விகடன், இப்போது வீரம் துயரம் அவலம் என்ற நிலைகளில் பயணிக்கும் கதை போல ஒரு பேட்டியைத் தயார் செய்திருக்கிறது.
***
//எதிரும் புதிருமாகக் கிளம்பும் எல்லாக் கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் இதயசுத்தியோடு விகடன் என்றும் பகிரும்.//

ஆ.விகடன்  தன் மீதான குற்றச்சாட்டைலாவகமாக மடை மாற்றுகிறது. யாரும் எதிர்க்கருத்துக்களைப் பத்திரிகைகளில் பகிரக் கூடாது என்று சொல்லவே இல்லை.அது பத்திரிகைகளின் கடமை.ஆனால் அது உண்மையானதாக இருக்க வேண்டும்.

அந்தோணிசாமி.மார்க்ஸ்போன்றவர்களின் பயணக்கட்டுரையை ஆ.விகடன் சமீபத்தில்வெளியிட்டது. அதை யாரும் எதிர்க்கவில்லை.அதில் உள்ள அபத்தங்களையும் புரட்டுகளையும் மட்டுமே எதிர்த்தார்கள்.

உண்மையாக யாரேனும் பாதிக்கப்பட்டிருந்திருந்தால் அதை அசைக்க முடியாத ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தால் யாரும் ஆ.விகடனைக் குற்றம் சாட்டப் போவதில்லை.அதை விடுத்து போகிறபோக்கில் அவதூறுகளை அள்ளித் தெரித்து எழுதியதை யாரும் ஏற்க முடியாது.

//இன்றும் எம்மைச் சூழ்ந்து நிற்கும் கோடானுகோடி வாசகர்களே//

சோனியாகாந்தி,நிதின்கட்காரி,கருணாநிதி,ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகள்  ஊழல்களில் அம்பலப்பட்டாலும்  தங்களின் நேர்மைக்கு தங்கள் பின்னால்  இருக்கும் கோடானுகோடி தொண்டர்கள் தான் சாட்சி என்று சொல்வது போல் இருக்கிறது. விகடனின் கோடிக்கணக்கான வாசகர்களே சாட்சி என்கிற வாதம்.

அதைப்போல விகடன் அதிகம் விற்பனை ஆகிறது என்பதற்காய் அதனை ஆதரவு என்று கருத முடியாது. டாஸ்மாக்கில் கூடத்தான் சாராயம் அதிகம் விற்கிறது.அதனை எப்படி நல்லது என்று கருத முடியும்? அப்படித்தான் விகடன் அதிகம் விற்பனையாகிறது என்பதால் மட்டுமே அது சொல்வது அனைத்தையும் ஆராயாமல் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது.

//விடு தம்பி//


இந்தப் பகுதியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல இருக்கிறது. இதில் நமக்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன.

இலங்கை அரசினை எதிர்த்து பல்வேறு போர்களில் பங்கெடுத்த போராளிசிம்ம சொப்பனமாய் இருந்த போராளி.விகடன் கூற்றுப்படி எளிதாக முகாமில் இருந்து வெளியே வந்து விட்டார் என்பதை ஒரு வாதத்துக்காய்,உண்மை என வைத்துக் கொண்டாலும் கூட,அவர் எளிதாய் கண்காணிப்பு வளையத்தில் இருந்து தப்ப முடியாது.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார். அவருடைய பேட்டிக்கு எதிர்வினைகள் வந்த உனே அவருடன் எளிதாய் எப்படி விகடன் சார்பில் பேசியிருக்க முடியும்..?அவருக்கு சிக்கல் வராதா..? ( எல்லாம் ஆசிரியர் குழுவிற்குள்ளேயே இன்டர்காமில் பேசிக்கொள்வது தானே என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது.)

அது மட்டுமல்ல. இந்தப் பதில் முழுவதும் தூய ஈழத்தமிழர் பேச்சு வழக்கில் இருக்கிறதுஇதுவே சென்ற இதழ் நேர்காணல் முழுக்க பொய்யானது என்பதை உணர வைக்கும்.

சென்ற இதழ் பேட்டியைப் பாருங்கள்.

ஈழத் தமிழ் வாடை மருந்துக்கும் இல்லை.அங்கங்கே சில சொற்கள் மட்டும் இருக்கிறது. அது தவிர வேறு சொற்பிரயோகம் இல்லை.  மேற்கண்ட. இப்போதைய பெட்டிப் பேட்டியில் முழுக்க முழுக்க ஈழச்சொல்லாடலே பிரயோகிக்கப்பட்டுள்ளது. (இதை எழுத ஆசியர் குழுவினர் எந்த ஈழத்தமிழரிடம் எவ்வளவு நேரம் செலவழித்தனரோ? விகடன் ஆசிரிய குழுவினரின் கடும் ’உழைப்பைப்’ பாராட்டித்தான் ஆகவேண்டும்)

இன்னொன்று

மேலும் புதிதாக எழுதப்பட்டுள்ள விடு தம்பி யில் அந்த பெண்போராளி பேட்டி கொடுக்க மறுத்தும் வலியுறுத்தி வாங்கப்பட்டதான அங்கலாய்ப்பும், இந்த எதிர்வினைகளை அவர் முன்னே எதிர்பார்த்ததாகவும், வெளிப்படுத்தப்பட்டு நான் விபச்சாரியாகவே இருந்துவிட்டுப் போறேன் என்ற கழிவிரக்கத்தோடு முடிக்கப்பட்டுள்ளது.

இங்கே நமக்கு எழுகிற கேள்வி என்னவென்றால். முன்பே அவரைப் பற்றி அனைத்தையும் உறுதிசெய்து விட்டு பேட்டி எடுத்துள்ள நிலையில், எந்த நேரமும் சிங்கள அரசிடமிருந்து ஆபத்தை எதிர்நோக்கி பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பேட்டி வெளிவந்தவுடன் இருப்பவரிடம் பேசுவதற்கான தேவை விகடனுக்கு என்ன வந்தது?

இது வாசகனை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டம். ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய்யை உருவாக்குவது.

இப்படிப்பட்ட சினிமா பாணியிலான முயற்சிகளால் வாசகர்களை ஏமாற்ற முயற்சித்தால் அதை எப்படி எளிதில் விட்டுவிட முடியும் தம்பி.

நாம் இறுதியாகவும் உறுதியாகவும் சொல்வது இதுதான்.

ஆனந்த விகடனின் சென்ற இதழ் 6 பக்க நேர்காணல், நாம் ஏற்கனவே பல்வேறு தரவுகளுடன் சொன்னது போல் பொய்யாகத் திட்டமிட்டுக் கற்பனை செய்யப்பட்ட பேட்டி.நாம் எவ்வளவு தான் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிருபித்தாலும் ஆனந்த விகடன் அதை மறுத்து 2 பக்கத்தில் விளக்கம் சொல்லியுள்ளது.

ஆனந்த விகடனின் சென்ற இதழ் நேர்காணல் விகடனின் நம்பகத்தன்மை மீது ஏற்பட்ட கறை. 

அதனை 2 பக்கங்கள் இல்லை,மழையளவு சொற்கள் கொண்டு பொழிந்தாலும் அழிக்க முடியாது.

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2012/11/blog-post_4.html
http://www.youtube.com/watch?v=L336faBgWwc.

Sunday 4 November 2012

த்தூ.....ஆனந்த விகடன்..!


ஒரு போராளீயின் கண்ணீர் வாக்குமூலம்,நேற்று நான் போராளி இன்று பாலியல் தொழிலாளி
தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு 
போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும்  போஸ்ட்மார்ட்டம் பகுதிக்கு  நாம் இந்த வாரம் (07-11-2012) தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் பாலியல் தொழிலாளி ஒரு பெண் போராளியின் வாக்குமூலம் என்ற தலைப்பில் மாணவ நிருபர் ம.அருளினியன் செய்ததாக வெளிவந்திருக்கும் ’நேர்காணலை’ எடுத்துக் கொள்வோம்.

அது இது தான்.


ஆனந்த விகடன்,அருளினியன்,ஜூனியர் விகடன்,சிங்கள இனவாதம்,
பெண் போராளி,விடுதலைப்புலிகள்,தலைமை நிருபர்


30 ஆண்டுகாலம் ஈழத்தில் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டம் குறித்தும்,தற்பொழுது அது எதிர்நோக்கியுள்ள நிலை குறித்தும் அதில் பங்கு பெற்ற ஒரு 'போராளி' இப்பொழுது அனுபவிக்கும் துயரத்தையும் பகிர்வதாகச் சொல்லும் இந்த நேர்காணல் 6 பக்கங்களில் விரிவாக அதி முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நேர்காணல் அளித்தவர் ஒரு முன்னாள் ’பெண் போராளி’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.ஆனால் பாதுகாப்புக் கருதி அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் தொலைபேசி வாயிலாகப் பெறப்பட்டதா..? அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டதா..?அவ்வாறு தொலைபேசி அல்லது  ின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது எனில் அதன் நம்பகத்தன்மை என்ன..? இல்லை நேரடியாக யாழ்ப்பாணம்  சென்று எடுக்கப்பட்டதா..? அவ்வாறு நேரடியாகச் சென்று எடுக்கப்படதாயின் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பங்கு பெற்றமைக்கு சான்றுகள் எதும் தந்தாரா போன்ற ஆதாரங்கள் இல்லை.அது போக இந்த 'அதிமுக்கியத்துவம்' வாய்ந்த, நேர்காணல் ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதா..?

இப்படி எண்ணற்ற கேள்விகள் எஞ்சி இருக்கின்றன.ஆனால் விடை  தெரியாத வினாக்கள். அப்படியாயின் நேர்காணலுக்கு என்ன ஆதாரம்..?

ஆகவே இந்த நேர்காணலை முதற்கண் சந்தேக நோக்கிலேயே அணுக வேண்டியுள்ளது.இப்படி ஒரு நேர்காணல் உண்மையிலேயே விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியால் கொடுக்கப்பட்டதா? அல்லது தங்கள் சொந்த வன்மத்துக்காகவோ நிருபராலோ அல்லது அதிகார வர்க்கத்தின் மறைமுகத் திட்டங்களுக்காக சிலரால் திட்டமிட்டு வலிந்து உருவாக்கப்பட்டதா? என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இனி அதன் சில பகுதிகளை ஆராய்வோம். முதல் 2 பத்தி அறிமுகத்தில் கழிந்து விடுகிறது.ஆகவே அதை விட்டு விடுவோம்.
முதலாவது கேள்வி இது.


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து மிக உயர்வாக சொல்லியிருக்கிறார். உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகள் யாரும் பிரபாகரன் என்று அழைப்பதில்லை. அண்ணன் என்றோ தலைவர் என்றோ தான் அழைப்பார்கள்.அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லை.அவர்கள் தங்களில் ஒருவராகத் தான் அவரைக் கருதினார்கள். அதுவும் இவர் மூத்த போராளி.அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தக் கேள்வியும் பதிலும் உண்மையான நேர்காணல் தானா என்னும் சந்தேகத் தொனியை எழுப்புகிறது.
அடுத்ததாக 2 ஆவது கேள்வி இது.

இலங்கை,சிங்களம்,இனப் போராட்டம்,

இந்தக் கேள்வியே செயற்கையாகத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.முந்தைய கேள்வியிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து உயர்வாகவும் பெருமிதமாகவும் சொல்கிறார்.அதே போன்ற கேள்வி தான் இதுவும்.பதிலும் ஏறக்குறைய அதுதான். ஆனால் கூடுதலாக இடம் பெற்ற தகவல் என்னவென்றால் பிரபாகரன் இறந்து விட்டார், ஈழப் போர் முடிந்து விட்டது.இனி ஈழம் சாத்தியமில்லை.

ஆக மொத்தத்தில் இந்தக் கேள்வியில் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை போராளி  வார்த்தையாக வலியச் சொல்கிறது.அல்லது திணிக்கிறது.
இத்தனைக்கும் வழக்கமாக ஊடகவியலாளர் எவர் ஒருவரும் முன்னாள் போராளிகளைச் சந்தித்தால் கேட்கும் முதல் கேள்வி கடைசி நேரத்தில் என்ன தான் நடந்துச்சுங்க..? பிரபாகரன் இப்ப எங்க இருக்கிறார் என்பது தான்.ஆனால் இதில் அப்படி ஒரு கேள்வியை நிருபர் கேட்கவே இல்லை.சுற்றி வளைத்துக் கேட்பது போன்ற தொனியை கேள்வியாக்கி உள்ளார்.
ஏனென்றால் அது படிப்பவர்களுக்கு நிருபரின் எண்ணத்தை பளிச்சென்று காட்டிக் கொடுத்து விடும் என்ற முன் எச்சரிக்கையாம்.

இதற்கு அடுத்து வந்த கேள்விகள் மிக நீண்ட தூரம் தூரப்போய் பயணிக்கிறது.

இந்த இடத்தில் சில விஷயங்களை நினைவு கூறுதல் அவசியம்.

முள்ளிவாய்க்கால் கொடூரம்


பேட்டி அளித்தவராகச் ’சொல்லப்படுபவர்’ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஈழத்தின் பெரும் போர்களில் பங்கெடுத்தவர்,பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைப் பலி கொண்ட முள்ளிவாய்க்கால் போரில் இறுதி வரை களத்தில் இருந்தவர் என்பதையும்,உலகையே அதிர வைத்த முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் அரங்கேறிய கொடூரம் இன்னும் முழுமையாக வெளிப்படாமல் எவ்வளவோ அந்தக் கடலில் புதைந்து இருக்கிறது என்பதையும் நேர்காணல் வெளிவருவது தமிழின் முன்னணி இதழில் என்பதையும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பெரும்பாலான நேரத்தில்(வணிக நோக்கம் என்றாலும்) எழுதிய இதழ் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையான நேர்காணல் என்றாலோ,சமூகப் பொறுப்புடைய பத்திரிகையாளர் என்றாலோ அடுத்த கேள்விகள் எப்படி நிருபரிடம் இருந்து வந்திருக்க வேண்டும்..?

முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் என்ன தான் நடந்தது..? மக்கள் இறுதி நாட்களில் என்னென்ன துயரத்தை எதிர்கொண்டார்கள்..?மக்கள் மீது என்ன வகை குண்டுகளை வீசினார்கள்.?பிரபாகரன் இறந்ததாகச் சொல்கின்றீர்களே எப்படி நிகழ்ந்தது என்று துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களைப் போல ஒன்றன்பின் ஒன்றாக சரமாரியாக வெளிப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா..?

ஆனால் எந்தக் கேள்விகளும் இல்லை.அப்படியே கடந்து செல்கின்றார்.ஒரு பத்திரிகையாளனாக நமக்கு மிக மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.யோசிக்க வைக்கிறது.அதே சமயம் நேர்காணலின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் வலுக்கிறது.

சரி அடுத்த பகுதியைப் பார்ப்போம்.


இந்தக் கேள்வியையும் அதன் பதிலையும் பார்க்கும் பொழுது நமக்கும் சில கேள்விகள் எழுகிறது.சிங்கள அமைச்சர்கள்,உயர் அதிகாரிகள் எங்களைக் கற்பழித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வருகிறது.அவர்கள் பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம்.ஒரு காமுகனை பெயர் சொல்வதில் என்ன பின் வாங்கல்?.பேட்டி கொடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.இத்தனைக்கும் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் சிங்கள அமைச்சர்கள்.இதழ் அச்சாவது இந்திய நாட்டில்.வெளிவருவது உண்மையை உரக்கச் சொல்வதாகச் சொல்லும் விகடன் குழும இதழில்.சர்வதேச விசாரணை அமைப்புக்களுக்கு அளிக்க வேண்டிய விஷயத்தை ஏன் விகடன் அமைதியாக கையாளுகின்றது.?பெண்ணின் குரலை மட்டுமாவது வெளிக்காட்டலாமே?
உண்மை எனில் அதை உரக்கச் சொல்வதில் என்ன தயக்கம்.?ஆனால் வெளியிடப்படவில்லை.

இந்தக் கேள்விகளையும் பதில்களையும் பார்க்கையில் அதே சந்தேகம் மறுபடியும் எழுகிறது.முன்னாள் போராளி எனத் தெரிந்தும் ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தலைவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை என்று சொல்கிறார். யார் யாரைச் சந்தித்தேன்,யார் உதவ மறுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

நான் பாலியல் தொழிலாளியாக மாறி விட்டேன் என்று தைரியமாகச் சொல்லும் ’போராளி’யால் எந்த தலைவர்கள் தனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்வதற்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. தைரியமாகச் சொல்லலாம்.
ஆனாலும் சொல்லவில்லை. அவர் சொல்லவில்லையெனில் அதைக் கேட்பது பத்திரிகையாளனின் கடமையல்லவா.? அயோக்கியர்களை அம்பலப்படுத்தில் என்ன தவறு?

ஆனால் பத்திரிகையாளர் எதுவும் கேட்கவில்லை.(போராளி என்று ஒருவரை நேர்காணல் செய்திருந்தால் தானே கேள்விகள் கேட்பதற்கு என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது)

செங்கொடி,முத்துக்குமார்,அப்துல்கலாம்,பேரறிவாளன்

//சிறிது காலத்தில் அவர்களாகவே என்னை விடுவித்தனர்.//
1995 இல் இருந்து இயக்கத்தில் இருக்கும் ஒரு மூத்த பெண் போராளியை,சிங்கள ராணுவத்துடன் பல்வேறு போர்களில் பங்கெடுத்த ஒரு போராளியை உலகின் மிக மோசமான  ராணுவம் அவ்வளவு விரைவாக விடுவித்து விடுமா என்ன.? இயக்கத்தில் இருந்த பல போராளிகள் இப்பொழுது புனர்வாழ்வு முகாமில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

மேலும் 1995 இல் இயக்கத்தில் சேருகிறார்.சக போராளி ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்கிறார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுறுகிறது.அதன்பின் அகதிகள் முகாமில் சிறிது காலம் இருந்திருக்கிறார்.அந்தக் காலம் ஒரு 6 மாதம் என வைத்துக் கொள்வோம்.
இரண்டு குழந்தைகள் இருப்பதாய்ச் சொல்கிறார்.

இந்த சமயத்தில் அவரது குழந்தைகள் கண்டிப்பாய் பெரியவர்களாக இருந்திருப்பார்கள்.ஆனால் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பாலுக்காய் அழுவதாகவும் எழுதியிருக்கிறார்.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து வளரவே இல்லையா..?கட்டுக்கதைகளில் தான் இது சாத்தியம்.
என்னங்கடா உங்க லாஜிக்..?

இது அடுத்த கேள்வி.இதிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன.

உள்ளூர் அரசியல் கட்சிகள் தனக்கு உதவி மறுத்ததைக் கூட வெறுப்புடன் மட்டும் சொல்பவர், தமிழ்நாட்டுக் கட்சிகளைக் குறித்துக் கேட்டவுடன் வெறுப்புடன் கூடுதலாக அனலாய்க் கோபமும் கொள்வது ஏன்..?//அடுத்த வேளை உணவு இல்லாமல்//

இதற்கு முந்தைய கேள்வியில் பாலுக்காய் கஷ்டப்படும் குழந்தைகள் இப்பொழுது எப்படி உணவுக்காய் ஏங்குவார்கள்.இப்பொழுதும் பாலுக்காகத் தானே ஏங்க வேண்டும்..? திரைப்படத்தில் ஒரே பாட்டில் பணக்காரனாவது போல் ஆ.விகடன் நேர்காணலில் ஒரே கேள்வியில் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா..?
எழுதும் திரைக்கதையை சரியா எழுதுங்க.!

//விளக்குமாறால் அடிப்பேன்.//

ஈழத்தவர் யாரும் விளக்குமாறு என்று சொல்வதில்லை.

தம்புதடியால் அடிப்பேன் என்று தான் சொல்வார்கள்.


இதை விட இந்த நேர்காணல் உருவாக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கிய ஆதாரம்.


//ஈழத் தமிழர்கள் நாங்கள் தோற்றுவிட்டோம் என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.//

இந்த வார்த்தை போராளியின் வார்த்தையாக வெளிவந்திருக்கிறது.ஆனால்
இந்த வார்த்தைகள் ஆனந்த விகடன் மாணவ நிருபர் அருளினியன் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்னத்தச்சொல்ல என்னும் தலைப்பில் எழுதிய பதிவில் இருக்கிறது.

//நாம் ஈழ தமிழர் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்ற NAKED TRUTH புரியாத வரை என்னத்த சொல்ல.//

ஆக இது மூத்த பெண் போராளி என்று சொல்லப் படுபவரின் வார்த்தையா அல்லது நிருபர் அருளினியனின் கற்பனையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்த கேள்வியையும் அதற்கான பதிலையும் குறித்து நாம் இறுதியில் பார்ப்போம்.

இந்த நேர்காணலில் பொதுவான விஷயங்களாக நாம் அறிவது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை பொதுவாகப் புகழ்வது போல் தோன்றினாலும் ஈழப் போராட்டத்தின் தோல்வியை மிக மோசமான ஒப்பீடுகளுடன் விமர்சிக்கிறது.வன்மம் தோய்ந்த வார்த்தைகளால் அவதூறு செய்கிறது.

இதைவிட இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால்,சிங்கள இனவாதம் குறித்தும் இறுதிக் கட்டப் போரில் அது பயன்படுத்திய மனித நாகரீக நெறிமுறையற்ற போர்முறைகள் குறித்தும் இன்றும் அங்கு நிலவும் கொடுமைகள் குறித்தும் மறந்தும் பேச மறுக்கிறது.(சிங்கள அமைச்சர்கள் குறித்து மட்டும் ஒருவரி விமர்சனம் இருக்கிறது.)

தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறித்தும் ஈழத்தில் உள்ள தமிழ் தலைவர்கள் குறித்தும் விமர்சன எல்லையைத் தாண்டி மிக இழிவான வார்த்தைகளில் விமர்சனம் செய்கிறது.ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது இல்லை.அதைப் போல இனி அங்கு போருக்கு சாத்தியம் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறது.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் பொதுவாக யாருடைய வார்த்தைகள் என்றால் சிங்கள இனவாதம் மற்றும் அதற்கு இந்தியா மற்றும் இலங்கையில் துணை போகும்,அதற்கு சாமரம் வீசும் நபர்களுடையவை.

சரி இனி இதை பிறிதொரு கோணத்தில் பார்ப்போம்.

விடுதலைப்புலிகளையும் அவர்களின் அரசியலையும்,தமிழ்நாட்டில் அதனை முன்வைத்துச் செயல்படும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அவர்களின் தவறுககளையும் யாரும் விமர்சிக்க கூடாதா என்ற கேள்வி எழலாம்.விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.கண்டிப்பாய் விமர்சிக்கலாம்.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் இருவகை.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டிலும் ஏன் புலம்பெயர் தமிழர்களிலும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர்.விடுதலைப்புலிகளின் அரசியலை விமர்சிக்கும் அதே சமயம், சிங்கள இனவாதத்தையும்,அதற்குத் துணை போகும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியத்தையும் மிகத் தீவிரமாய் எதிர்க்கின்றனர்.

                வைகோ,நெடுமாறன்,திருமாவளவன்,சீமான், மணியரசன்,போன்றோர்களின் செயற்பாட்டை விமர்சிப்பது தவறு என்று ஒருக்காலும் சொல்லி விட முடியாது. கண்டிப்பாய் விமர்சிக்க வேண்டும்.ஆகவே தவறல்ல.விமர்சனத்திற்கு உட்படாத மனிதர்,அரசியல் என்று யாரும் கிடையாது.அதுவும் இவர்கள் அரசியல்வாதிகள்.கண்டிப்பாய் விமர்சனம் செய்யத் தான் வேண்டும்.ஆனால் விமர்சன நோக்கம் உண்மையாய் இருக்க வேண்டும்.

ஆனால் சிலர் இருக்கின்றனர்.விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை மட்டும் விமர்சிப்பர்.அதே சமயம் சிங்கள அரசின் இனவாதத்தை கமுக்கமாக கண்டுகொள்ளாமல் சென்று விடுவர்.இந்திய அரசின் செயற்பாட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.இவர்கள் நோக்கம் விடுதலைப்புலிகளை விமர்சித்துப் பிழைப்பு நடத்துவது.அதற்கு விடுதலைப்புலிகளின் பின்னடைவைப் பயன்படுத்திக் கொள்வது.வெளித்தோற்றத்தில் மக்கள் மீது அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்வது.

டக்ளஸ் வகையறாக்கள் இதில் முதலிடம் பிடிப்பர்.தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்றொழித்த இலங்கை அரசின் ஊது குழலாய்ச் செயல்படும் இவர்களின் நோக்கம் பிழைப்புவாத அரசியல்.தங்களின் சுயநலனுக்காய் சிங்கள அரசையும் அதற்குத் துணை போகிறவர்களையும் நத்திப் பிழைப்பது.இதனை கண்டிப்பாய் மாற்றுக்கருத்து என்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது டக்ளஸ் வகையறாக்களின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது.
மலத்தில் தோய்த்த இவர்களது வார்த்தைகள்,பொதுவாய் சமூகத்தில் பெரிய எதிர் வினையை உண்டாக்குவது இல்லை.

ஆனால் இதுவரை ஈழ விஷயத்தில் நடுநிலைச் செய்திகளை மற்ற இதழ்களைக் காட்டிலும் ஓரளவுக்கு  வெளியிட்டு வந்த ஆனந்த விகடன் போன்ற தமிழின் முக்கிய இதழில் அதி முக்கியத்துவத்துடன் வந்திருப்பதால் பரபரப்பையும் திகைப்பையும் ஒருசேர உண்டாக்கியுள்ளன.
*
இவரது நேர்காணல் உண்மைத்தன்மை சிறிதும் இல்லாமல் இருப்பதால் அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் நாம் அறிய வேண்டியுள்ளது.
நேர்காணலைச் செய்தவர்பெயர் ம.அருளினியன்.விகடன் மாணவ நிருபர். 22 வயது தான் ஆகிறது.பத்திரிகைத் துறையிலும்  அரசியல் துறையிலும்  எந்த அனுபவமும் இல்லாத பின்னணியும் இல்லாத ஒருவர் தான் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்.ஈழத்தைச் சேர்ந்தவர்.

அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் அறிவதற்கு முன்னர் அவரது எழுத்துக்களை நாம் அறிவோம்.

யாழ் இந்துக் கல்லூரி,சிவ.மகாலிங்கம்.


விகடன் மாணவ நிருபர் ம.அருளினியன் 

இவர் ’அருளினியன் பதிவுகள்’ என்றொரு பெயரில் பிளாக்கில் எழுதுகிறார்.(அதை அவர் எந்தக்கட்டத்திலும் அழிக்க வாய்ப்பு இருக்கிறது.)
2010 ஆம் ஆண்டில் இருந்து தனது கருத்துக்களை அதில் எழுதுகிறார் .அதனை படித்துப் பார்த்தால் நமக்கு அவரைப் பற்றி ஒரு சித்திரம் வருகிறது.

ஆனந்த விகடன் நேர்காணலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது தான் அவரது கருத்து.அவரது பதிவுகளைப் படித்தால் அவை அனைத்தும் நேர்காணலில் போராளியின் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது என எண்ண முடிகிறது.

Add caption

ஒன்று மட்டும் வித்தியாசம் இருக்கிறது.தனது பதிவுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நேர்காணலில் வெளிப்படையாய் விமர்சிக்கவில்லை.
புகழ்வது போல் இகழ்வதும்,நடுநிலையாய்ப் பேசுவது போ நடித்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதும் கைக்கூலிகளுக்கு கைவந்த கலை.

அவர் பதிவுகளின் சுருக்கமாக நாம் அறிவது இதுதான்.

சிங்கள இனவாதத்தை வார்த்தைகளால் கூட எதிர்க்காதவர்.விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்.தமிழ்நாட்டுத் தலைவர்களை மிக மிகக் கடுமையாக விமர்சிப்பவர். இந்தியாவில் விதிக்கப்படும் மரண தண்டனை முறையை எதிர்க்கிறார்.ஆனால் பேரறிவாளன் குற்றமற்றவரா என்று எனக்குத் தெரியாது என்கிறார்.

//பேரறிவாளன் உட்பட மூவரும் அப்பாவிகளா எனக் கூறும் அளவிற்கு எனக்கு அரசியலும் தெரியாது,இந்தியாவின் நீதித்துறையின் நம்பகத்தன்மையின் அளவும் தெரியாது//

அதே சமயம் அப்துல் கலாம் மிகப்பெரிய அறிவாளி என்று கண்டுபிடித்து துதிபாடுகிறார்.அவர் தான் ஈழ மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.
(அதென்ன பாஸ்? பேரறிவாளன் தனக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என்று எத்தனையோ ஆதாரங்கள் கொண்டு அவரே புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.அதைப் படித்தும் அவர் குறித்து உங்களுக்கு ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.ஆனால் அப்துல் கலாம் உலக மகா அறிவாளின்னும் அவர் தான் எங்கட மக்களுக்கு அறிவு கொடுக்க வரணும்னு எதை வைத்து கண்டுபிடித்தீங்க..?

அதே சமயம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை) ஆங்கிலம் வடிவாத் தெரியாததால் யாழ்ப்பாணத்தில் பெண்டுபிள்ளைகளை கரெக்ட் செய்ய முடியவில்லை என்றும் அங்கலாய்க்கிறார்.முகநூலில் மட்டும் தோராயமாக  தனது 1000 புகைப்படங்களைப் பதிந்துள்ளார்.

http://www.facebook.com/aruliniyan.mahalingam?fref=ts

ஈழத்தவர் அனுபவிக்கும் கொடுமை குறித்த புகைப்படங்கள் அதில் நம் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.சுருக்கமாகச் சொன்னால் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு.எந்த அரசியல் அனுபவமும் தெளிவும் புரிதலும் அற்ற 22 வயது.அவரது எழுத்துக்களும் இப்பொழுது தான் எழுதப் பழகுகிறார், ஆரம்பித்துள்ளார் என்பதை அறிவிக்கிறது.
குப்பிழான்,வலிகாமம்,யாழ்ப்பாணம்,யாழ் இந்துக் கல்லூரி,
Add caption

மொத்தத்தில் ஒரு போக்கிரித்தனமான கேரக்டர் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவரைப் பற்றி அறிய இவரது குடும்பப் பின்னணியையும் அறிய வேண்டும்.இவரது குடும்பம் போர்கள் பல கண்டு மாவீரர் ஆன குடும்பம் அல்ல.
இவரது சொந்த ஊர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் அருகேயுள்ள குப்பிழான் கிராமம்.இவர் ஆரம்பப் பள்ளிக் கல்வி பயின்றது விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்.உயர் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.படித்து முடித்த பின் இங்கு பெங்களூர் வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.விகடன் நிறுவனத்தில் மாணவ நிருபராய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

யாழ் இந்துக் கல்லூரியில் படித்தது.

இவருடன் உடன் பிறந்தவர்கள 3 பேர்.ஒரு தங்கை ஒரு தம்பி,ஒரு அண்ணன்.இவர்களில் தம்பியைத் தவிர இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.தங்கை ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்துக் கொண்டிருக்கிறார்.இவரது தந்தை சிவ.மகாலிங்கம் சைவசமய பேச்சாளர்.ஆன்மீக கட்டுரைகள் எழுதுபவர்.பலாலி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்.அதன்பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரியின் விரிவுரையாளர். இப்பொழுது ஓய்வு பெற்ற பின்  வயதான காலத்தில் சொந்த ஊரான குப்பிழான் பாடசாலை அபிவிருத்தி மன்றம் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்க உதவித் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.ஓய்வு நேரத்தில் இதுவரை ஞான விளக்கு,சிவஜோதி,முருக மந்திரம் என 3நூல்கள் எழுதியுள்ளார்.இவர் 2009 ஆம் ஆண்டு எழுதிய ஞானதீபம் என்ற நூல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்ததில் சிறந்த நூல் என்று யாழ் இலக்கிய வட்டம் தேர்ந்தெடுத்து இலங்கை இலக்கிய விருதினை வழங்கியுள்ளது. விருதினைப் பெற்றுள்ளது. 12-06-2011 அன்று நல்லை ஞானசம்பந்தர் ஆதின மடத்தில் இதனை அவர் பெற்றுக் கொண்டார்.

இலங்கை இலக்கியப் பேரவை விருது வாங்கிய பொழுது

சுருக்கமாக இப்படிப் பார்க்கலாம்.


2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற  இனப்படுகொலையை உலகமே மனம் பதைபதைத்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது தமிழ்நாட்டில் அதற்கு எதிர்வினையாய் 15 பேர் மாண்ட பொழுது,கூப்பிடு தூரத்தில் உள்ள குழப்பானில் இருந்து கொண்டு சிவ.மகாலிங்கம் ஒய்வை அனுபவித்துக் கொண்டும்,சைவ சமய நூல் எழுதுவதிலும் ,விருதுகள் வாங்குவதிலும் பட்டிமன்றங்களுக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்புவதிலும் மூழ்கியிருந்தார்.
படைப்பு மனம் எவ்வளவு கொடூரமாய் இருந்திருக்கிறது பாருங்கள்.அவர் மகனும் இப்பொழுதைய விகடன் மாணவ நிருபருமான ம.அருளினியன் கொழும்பு சார்ஜா மைதானத்தில் இங்கிலீசு வடிவாத் தெரியாததனால் பொம்பளப் பிள்ளைகளைக் கரெக்ட் பண்ண முடியலைன்னு வருத்தத்தில் அரற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்.

அங்க தமிழன் கொத்துக் கொத்தாய்ச் செத்துக் கிட்டிருந்தான்.

எல்லாம் முடிந்த பின் தமிழ்ச்சமூகத்திற்கு அறம் போதிக்கவும் அரசியல் சொல்லிக் கொடுக்கவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.அவரை விகடன் வாரி அணைத்துக் கொண்டது.

சரி இவரது குடும்ப அரசியல் பின்னணி என்ன..?

பொதுவாக இவரது குடும்பம் டக்ளஸ் தேவானந்தாவின் மீது அன்பு உள்ளவர் என்று சொல்கிறார்கள்.இவர்களது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.
2 விஷயங்களை குறிப்பாகச் சொல்லலாம்.
விகடன் நிருபர் ம.அருளினியனின் தந்தை சிவ.மகாலிங்கம் கல்லூரி விரிவுரையாளர் பதவியில் இருக்கும் பொழுதே அதை விடக் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காய் அதைப் பாதியில் விட்டு விட்டு இந்து சமய கலாச்சார தினைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பதவியைப் பெற்றுள்ளார். இந்தப்பதவியை அவருக்குப் பெற்றுத் தந்தது டக்ளஸ்  தேவானந்தா என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில டக்ளஸ் தேவானந்தா 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அமைச்சர்பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் கீழ் உதவிப் பணிப்பாளராய் சிவ.மகாலிங்கம் பணியாற்றியுள்ளார்.

இவர் உதவிப் பணிப்பாளராய் 2005 ஆம் ஆண்டில் இருக்கும் பொழுது அவரே முன்னிட்டு பொறுப்பெடுத்து தெய்வச் சேக்கிழார்-ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலரை தயாரித்துள்ளார்.அதற்கு இந்து சமய அலுவல்கள் அமைச்சும் நிதி உதவியும் வழங்கியுள்ளது. இவரது பரிந்துரையை ஏற்று அதன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கு நிதி உதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் வாழ்த்துச் செய்தியும் தந்துள்ளார்.
அதில் சிவ.மகாலிங்கம் ஆன்மீகம் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார்.


அதைப் போல யாழ் தமிழ்ச்சங்கத்தில் இவர் செல்வாக்காய் இருக்கும் பொழுது இந்தியாவில் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய,இன்றும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ் தமிழ்ச்சங்க கட்டிடத்திற்கு 2009 ஆம் ஆண்டு வரவழைத்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா யாழ் தமிழ்ச்சங்கம் வருகை தந்த பொழுது 

ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் இவரையும் இவரது குடும்பத்தையும் சுற்றி சந்தேகத்தின் நிழல் நன்கு படிந்துள்ளது.

விகடன் நிருபரின் அப்பா சிவ.மகாலிங்கம் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணியிலும் அது முடிந்த பின் சைவம் தழைத்தோங்குவதற்கும் அல்லும் பகலும் உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அவரது அருமைப் புதல்வர் ம.அருளினியன் பெங்களூரு வந்து வாழ்க்கையை அனுபவிக்கிறார்.இவர் எடுத்ததாகச் சொல்லும் நேர்காணலை நாம் இந்தப் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஆகவே அதன் உண்மைத் தன்மை குறித்தும் நடுநிலை குறித்தும் அவரது எழுத்துக்கள்,குடும்பப் பின்னணி நமக்கு உணர்த்துகிறது.
இத்தனை சொன்ன பின்னும் உங்கள் மனதில் ஒரு சிறிய எண்ணம் இருக்கலாம்.இந்த நேர்காணல் உண்மையானது தான்.ஆனந்த விகடனும் அதன் நிருபரும் உண்மையைத் தான் வெளிக் கொணர்ந்துள்ளார்கள் என்று துளியாவது எண்ணலாம்.
உங்களுக்கு ஒரு கூடுதல் ஆதாரம் தர வேண்டியுள்ளது.நேர்காணலின் இறுதிக் கேள்வியும் பதிலும் இது தான்.வலிய இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருகிறது என்பதை உணர முடியும்.


நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.//
இதே வார்த்தையை அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய தனது பதிவில் எழுதியுள்ளார்.


//ஈழத் தமிழரை வைத்து அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விட பெங்களூரில் எம்.ஜி.ரோட்டில் விபச்சாரம் செய்யும் பெண் எவ்வளவோ மேல்.அவள் உடலைத் தான் விற்கிறாள்.ஆன்மாவை அல்ல.//

இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.தனது வன்மத்தில் தோய்த்த வார்த்தைகளை மூத்த பெண் போராளியின் பெயரில் நேர்காணல் என்று வெளியிட்டமைக்கு வேறு என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும்.?

ஆக இது ஒரு வன்மம் நிறைந்த திட்டமிட்ட டேபிள் ஒர்க் என்று நாம் நிருபணம் செய்துள்ளோம்.இது எப்படி நிகழ்ந்தது?

மாணவ நிருபரின் திட்டமிட்ட கைக்கூலித் தனத்திற்கு வக்கிரத்திற்கு ஆனந்த விகடன் ஆசிரியர் குழு அறியாமையினால் துணை போயிற்றா..?
இந்த அறியாமைக்கு பின்னணியில் எந்தெந்த நிருபர்கள் அலுவலகத்தில் இருக்கிறார்கள்?
அல்லது யாருடைய ’நிர்ப்பந்தங்களாலோ’ நிர்வாகம் அறிந்து இச்செயலில் ஈடுபட்டதா..?
’அறியாமை’யினால் இந்த நேர்காணல் வந்தது என்றால் சில கேள்விகள் எழுகின்றன..?

இதற்கு சில வாரங்களுக்கு முன் நிருபர் ம.அருளினியன்,யோ.கர்ணன் என்பவரை இறுதிக் கட்டம் வரை முள்ளிவாய்க்கால் போரில் பங்கெடுத்த போராளி என்று தவறாகவும் இட்டுக் கட்டியும் குறிப்பிட்டார் அவர் பல காலம் முன்பே இயக்கத்தில் இருந்து விலகி விட்டதாக அவரே சொல்லியிருக்கிறார்.விகடன் முன்னாள் நிருபர் அருள் எழிலன் இது குறித்து பேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலும் இட்டிருக்கிறார்.அப்பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்.இவர் குறித்து எச்சரிக்கையுடன் அணுகி இருக்க வேண்டும்.


மேலும் பரந்துபட்ட மக்கள் திரள் கொண்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திய இயக்கத்தை விமர்சிக்கிறோம் என்ற பெயரில்  எந்தவித அரசியல் அறிவும் இல்லாத ஒரு லும்பன், தற்குறி,கைக்கூலியான நிருபர் போகிற போக்கில் எழுதுவதை எப்படி நிர்வாகம் அனுமதித்தது..?

கழிசடையான திரைப்படங்களைக்கண்டு ஒரு பக்கம் விமர்சனம் எழுதுவதற்கே மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் தலைமை,மூத்த நிருபர்களை மட்டும் அனுமதிக்கும் நிர்வாகத்திற்கு இது ஏன் தெரியவில்லை.? 
தங்கள் இனத்துக்காக உயிரைத் துச்சமெனத் துறக்கத் துணிந்த பெண் போராளிகளைப் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று எழுதுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
இது சமூகத்தில் எவ்வளவு பெரிய விளைவுகளையும் உளவியல் ரீதியாக அவர்களிடத்திலும் எவ்விதப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அறியவில்லையா..?
உள்ளூரில் உள்ள நபர்களே விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் இணைய முடியாமல் சிரமப்படும் பொழுது எங்கோ யாழ்ப்பாணம் அருகில் இருப்பவருக்கு எப்படி இடம் கிடைத்தது..?அவர் பின்னணி அறியாமல் உண்மையில் இடம் கிடைத்ததா..? அல்லது அறிந்ததனால் கிடைத்ததா..?அல்லது யாராகிலும் திட்டமிட்டு நுழைத்தனரா..?

ஆனால் எது ஒன்றானாலும் விகடன் தன் தவற்றிற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்பதுடன் நிருபரை வேலையை விட்டு வெளியேற்றுவது தான் சரி.

அதை விடுத்து அடுத்த வாரம் வைகோ பேட்டியையோ,சீமான் பேட்டியையோ வெளியிட்டோ உங்கள் நடுநிலையை நிருபிக்கலாம் என்றோ, எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று நினைத்தால் அது அயோக்கியத்தனம்.அதை விட செட்டப் செய்யப்பட்ட எதும் ஒலி நாடாவை வெளியிட்டீர்கள் என்றால் இன்னும் அம்பலப்படுத்தப் படுவீர்கள்.

இதுவரை விகடன் குழும இதழ்கள் ஈழ ஆதரவைக் காட்டியும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் போஸ்டர்களை பல வண்ணத்தில் அடித்தும் எத்தனையோ லட்சம் பிரதிகள் கூடுதலாக விற்பனை செய்தது.இதற்கும் மேலாக விகடன் பிரசுரம் மூலம் ஈழப் போரின் கொடூர உண்மைகளை,அவர்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காசாக்கி கொண்டது.

இன்றோ நம்பகத்தன்மை சிறிதும் இல்லாமல்,மூன்றாந்தர பத்திரிகைகளுக்குப் போட்டியாக மலினமாய் நடந்து கொண்டுள்ளது.

சாதாரண கட்சியின் வட்டச் செயலாளருக்கு எதிரான செய்தி என்றாலே ஒன்றுக்கு பலமுறை யோசித்து,வக்கீல் நோட்டீஸ் வருமோ என்று பயந்து நடுங்கும் விகடன்,எந்தவித நிருபணமும் இல்லாமல் அதிகார்பூர்வமாய் பதில் சொல்வதற்கு பொறுப்பான யாருமில்லாத இயக்கத்தைப் பற்றி எந்தவிதப் பொறுப்பற்ற தனமாய் போக்கிலித் தனமாக வெளியிட்டுள்ளது.
உங்களுக்கும் டாஸ்மாக்கில் ஓசி சாராயம் குடித்து விட்டு ஆள் இல்லாத தெருவில் நாக் கூசும் வார்த்தைகளால் வாய்க்கு வந்த படி பேசுபவனுக்கும் என்ன வித்தியாசம்.?

அல்ல. இந்த நேர்காணல் நிர்வாகம் திட்டமிட்டு வெளியிட்டது எனில் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை.நீங்கள் பகிரங்க மன்னிப்புக் கோராத பட்சத்தில்,நிருபரையும் அலுவலகத்தில் இதற்கு பின்னணியாகச் செயல்பட்டவர்களையும் நீக்கம் செய்யாத பட்சத்தில், நாம் அப்படியே முடிவுக்கு வர வேண்டியதிருக்கும்.அப்பொழுது விகடன் குறித்து வாங்கும் வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பதில் சொல்லுமா விகடன்.? 


தொடர்புடைய இணைப்புக்கள்

http://kuppilan.net/?p=1659