Showing posts with label ஆனந்த விகடன். Show all posts
Showing posts with label ஆனந்த விகடன். Show all posts

Wednesday, 24 December 2014

விகடனில் ப்ரியா தம்பி - "இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு " ..!

ப்ரியா தம்பி

ஊடகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் சாதி,நட்பு தொடங்கி என்ன காரணம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாத வண்ணம் வரைக்குமாக  ஒவ்வொருவரும் ஒருவித வலைப்பின்னலில் கோர்த்துக்கொண்டு தங்களது தகுதிக்கும் திறமைக்கும் எட்டாத  உயரத்தைப் பிடித்து விடுகின்றனர். இது  எப்பொழுதும் நடப்பது தான் என்றாலும் இப்பொழுது மிக அதிகமாய் நடக்கிறது.

உயர் பொறுப்பில் இருப்பவரின் நட்பும், கூச்சமில்லாமல் சுயமரியாதையற்று லாபி செய்யும் குறுக்குப் புத்தியும் அறிந்தால்,எவ்விதத் தகுதியுமற்ற ஒருவர் உயரே ஏறி உச்சாணிக்கொம்புக்கு வர முடியும் என்பதை அம்பலப்படுத்தும் பதிவு இது.

"ப்ரியா தம்பி' என்பவர் விகடன் குழுமத்தில் இருந்து வெளியாகும் 'டாக்டர் விகடனுக்கு' பொறுப்பாசிரியராய் ஒரு மாதத்திற்கு முன்பு நியமிக்கப்ப‌ட்டுள்ளார்.

இது பற்றிய செய்திக்குச் செல்வதற்கு முன் பிறிதொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்ற வளாகம், எழும்பூர். முதல் மாடி.

சென்னை பெருநகரத்தில் வசிக்கும்,பத்திரிகை நடத்த விரும்பும் 'பண்பாளர்கள்' அனைவரும் இந்த நீதிமன்றத்தில் தான், புது டில்லி  RNI அலுவலகத்தினால் ஒப்புதல் அளிக்கப்ப‌ட்ட தங்களது பத்திரிகையின் பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.அதன் பின் தான் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட முடியும்.

பதிவிற்கென‌ சில நடைமுறைகள் உள்ளன‌.

அதில் முக்கியமானது,பத்திரிகை வெளியீட்டாளர் ஒரு படிவமும்,அச்சிடும் அச்சக உரிமையாள‌ர் ஒரு அறிவிக்கை படிவத்தையும்  நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

பத்திரிகை பெயர்,விலை, வெளியிடும் மொழி,முகவரி,ஆசிரியர் பெயர்,பதிப்பாளர் பெயர்,உரிமையாளர் பெயர்,காலம்,அச்சிடுபவர் பெயர் உட்பட அனைத்து விபரங்களையும் நிரப்பிய‌ படிவம் (FORM1 ) வெளியீட்டாளரால் அளிக்கப்படும்.

அச்சக உரிமையாள‌ர் கொடுக்கும் ஒப்புகைப் படிவத்தில், தான் குறிப்பிட்ட பத்திரிகையை அச்சிடுவதாக இருக்கும். இந்த அறிவிக்கையானது section 6,Press and registration of books act 1867 இன் படி உள்ள நடைமுறை. எந்த மொழி பத்திரிகை என்றாலும் இரண்டு படிவங்களும்  ஆங்கிலத்தில் இருக்கும்.

நிரப்பப் பட்ட இரண்டு படிவங்க‌ளையும் நீதிமன்ற‌த்தால் இதற்காக நியமிக்கப்ப‌ட்ட முதல் மாடியில் இருக்கும் அலுவலரிடம் கொடுத்த பின் அது பட்டியலில் இடப்படும். பெரும்பாலும் பதிவு செய்யும் நடைமுறை  வேலை நாட்களில் நீதிமன்றம் காலை 10.45 க்கு துவங்கியதும் முதல் அலுவலாக நடைபெறும் வழக்கம் இருக்கிறது.

பதிவுக்கு, ஒரு நாள் முன்பே இந்த படிவங்கள் அனைத்தும் நீதிமன்ற‌ அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டு தவறுகள் திருத்தப்படுவதால், சமர்ப்பிக்கப்படும் படிவத்தில் பெரும்பாலும் தவறுகள் இருக்க வாய்ப்பு இல்லை. நீதிமன்றத்தில், சம்பிரதாயமான கேள்விகள் மட்டும் கேட்கப்படுவதாலும் சிக்கல் இல்லை.

என்று நமது பதிவு நாள் பட்டியலில் இடப்படுகின்றதோ அன்று, மாஜிஸ்டிரேட் முன்பு கூண்டில் ஏறி நின்று வெளியீட்டாளரும்,அச்சக உரிமையாளரும் ஒருவர் பின் ஒருவராக‌ பத்திரிகை குறித்த தகவலைக் கூறிப் பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. சில நேரம், மாஜிஸ்திரேட் எழுப்பும் வினாக்களுக்கு உரிய பதிலை கூற வேண்டும். (அதில் அவருக்குத் திருப்தி இல்லையென்றால் பதிவு அன்று நிறுத்தப்படும்.)

பெரும்பாலும் பதிவு எளிது முடிந்து விடும்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

வழக்கம் போல் ஒரு அலுவல் நாள். சென்னை முதன்மை பெருநகர குற்றவியல் நீதிமன்றம்.எழும்பூர்.நீதீமன்ற அறை எண்.12.காலை நேரம்  10.45.

வழக்கமான நடைமுறையில் இல்லாமல், நீதிமன்ற அலுவல் துவங்க இருக்கும் சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு பத்திரிகையின் பதிவுக்கான ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொடுக்கப்ப‌டுகிறது. நீதிமன்ற அலுவலரும் பதட்டத்தில் அவசர அவசரமாய் எதனையும் சரிபார்க்காமல் அனுமதிக்கிறார்.

வழக்கறிஞர்களும் தங்கள் வழக்குக்காய் வந்தவர்களாலும்,அலுவலர்களாலும் நீதிமன்றம் நிரம்பி இருக்கிறது.

வழக்கம் போல் முதலில் பத்திரிகை பதிவு நடைபெற ஆரம்பிக்கிறது.

பதிவுக்கான பத்திரிகையின் விபரம் இது தான்.

Oli vilakku.  Rs.10. Hindi magazine. Monthly 

'ஒளி விளக்கு' என்னும் இந்தி மொழி மாத பத்திரிகை.விலை ரூ.10. முதலில் வெளியீட்டாளர் கூண்டில் ஏறி நிற்கிறார்.


(இந்த பத்திரிகையைப் பொறுத்த வரை  வெளியீட்டாளர் தான் எடிட்டர் பொறுப்பையும் வகிக்கிறார்.)

விண்ண‌ப்ப படிவ‌ம் தப்பும் தவறுமாய் இருக்கிறது.இதை ஆங்கிலத்தில் இப்ப‌டி எழுதி இருக்கிறார்கள்.

'ol vilakku விலைக்கு நேரே ரூ.1014 என்று இருக்கிறது.

மாஜிஸ்திரேட் படித்து விட்டு கோபமாகிறார்.

மாஜிஸ்திரேட்,பத்திரிகை பெயர் என்ன ? .

ஒளி விளக்கு.

"அப்படியா..? இங்கு அப்படி எழுத வில்லையே ?"

எதனால் இப்படிக் கேள்வி எழுகிறது என்பது தெரியாததால் இந்தக் கேள்விக்கு வெளியீட்டாளர் தடுமாறுகிறார்.

என்ன விலை ?

ரூ.10.

அங்கோ Rs..10/- என்பதற்குப் பதில் 1014 என்று இருக்கிற‌து. இந்தப் பதிலும் கடும் எரிச்சலை உண்டாக்குகிறது.

"நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ரெண்டு பக்கத்தையே தப்பில்லாமல் ஒழுங்கா எழுதத் தெரியலை.நீங்க எப்படி 50 பக்கம் பத்திரிகை தயாரிப்பீங்க.? " என்று சொல்லி விட்டு அடுத்ததாய் பத்திரிகை அச்சிடுபவரை அழைக்கச் சொல்கிறார்.

வெளியீட்டாளருக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து,அவர் என்றுமில்லாத பயத்துடன் கூண்டில் ஏறுகிறார்.

வழக்கமான கேள்வி எதுவும் இல்லாமல் அச்சிடுபவரிடம் மாஜிஸ்திரேட் கேட்ட முதல் கேள்வி.

"உங்களுக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரியுமா..?"

அச்சிடுபவர் தயங்கித் தயங்கி,"எனக்கு ஹிந்தி கொஞ்சம் புரியும். பேசினால் ஓரளவுக்குப் புரிந்து கொள்வேன்"

கேட்ட கேள்விக்குப் பதில்."ஹிந்தி எழுதப்படிக்கத் தெரியுமா..?"

"தெரியாது." பளிச்சென உண்மையை ஒப்புக் கொள்கிறார்.

"அப்படின்னா இந்த பத்திரிகையை எப்படி படித்துப் பார்த்து அச்சிடுவீங்க.?  என்ன எழுதுகிறார்கள் என்பதை தெரியாமல் எப்படி நீங்கள் அச்சிடலாம்..? இது தவறுக்கு வழி வகுக்கும். இது சட்டப்ப‌டி தவறு. முதலில் இந்தி நன்கு படித்து விட்டு வாருங்கள். அதன்பின் பத்திரிகையை நீங்கள் அச்சிடலாம்."

 அந்தப்பத்திரிகை அன்று பதிவு செய்யப்ப‌டவில்லை. நிராகரிக்கப்படுகிறது.

இனி நாம் கட்டுரைக்கு வருவோம்.

இதனை அப்படியே பொருத்திப்பாருங்கள்.

ஒரு பத்திரிகையில் அச்சிடுபவரை விட ஆசிரியருக்கு முதன்மைப்பொறுப்பு இருக்கிறது. பொறுப்பாசிரியர் நியமிக்கப்ப‌ட்டால் அனைத்துப் பொறுப்பும் அவரைச் சார்ந்து விடுகிறது.

பத்திரிகையில் எதைப் பிரசுரிக்கலாம் என முடிவு செய்வதும்,அதை யாரிடம் இருந்து பெறலாம் என முடிவு செய்வதும்,அதன்பின் பிரசுரத்துக்காய் வரும் படைப்புகளைச் சரி பார்ப்பதும்,அதில் இருக்கும் பிழைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டித் திருத்துவதும்,வந்துள்ள கட்டுரை போதுமான விவரங்கள், தகவல்களுடன் இல்லாத பட்சத்தில் கூடுதல் விபரங்களைக் கோரிப்பெறுவதும் தான் பொறுப்பாசிரியரின் பணி.

மேற்கண்டவற்றைச் செய்வதற்கு, இதழ் எந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதோ அத்துறை குறித்த ஞானம் கொண்டிருக்க வேண்டும். இதழுக்குப் பங்களிப்பவர்கள் எது குறித்து எழுதுகிறார்களோ அத்துறை குறித்த விஷயங்களைத் தெரிந்திருக்க வேண்டும்.அரசியல் பத்திரிகை என்றால் அரசியல் ஞானமும்,திரைத்துறை குறித்த பத்திரிகை என்றால் அத்துறை குறித்த விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டும்.

தினமணி ஆசிரியர் பொறுப்பு வகித்த‌ திரு.சம்பந்தமோ,தினகரன் ஆசிரியர் பொறுப்பு வகித்த‌ திரு.கதிர்வேலோ தாங்கள் வகித்த பொறுப்பை உணர்ந்தவர்கள்,அதற்கான தகுதியை உடையவர்கள்.இது போல‌ எத்தனையோ பேரை அடையாளம் காட்ட முடியும்.

இவ்வளவு ஏன்? விகடன் குழுமத்தின் அரசியல் பத்திரிகையான 'ஜூனியர் விகடன்' ஆசிரியராய் ப.திருமாவேலன் இருக்கிறார். இவருக்கு இதழில் ஒரு ரிப்போர்ட்டர் எழுதுவதை எடிட் செய்யும்,அதிலிருக்கும் தகவல்களைச் சரி பார்க்கும் திறனும்,தலைப்பு வைப்பதிலிருந்து அனைத்தையும்  செய்யும் வல்லமை  உண்டு. இதழ் முடிக்கும் கடைசி நேரத்தில் ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு நடக்கிறது என்றால் அது குறித்து அவரே எழுதி அந்தப்பக்கத்தை நிரப்பும் திறமையும் அவருக்கு உண்டு. தமிழ் நாட்டின் அரசியல் சூழல் அவருக்குத் தெரிந்ததனால் அவரால் இதைச் செய்ய முடிகிறது. இதே திருமாவேலனால் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியராய் நியமிக்கப்ப‌ட்டால் செயல்பட முடியாது என்பது வேறு விஷயம். அங்குள்ள அரசியல் அவருக்குப் பரிச்சயம் கிடையாது என்பது தான் காரணம்.

மேற்கண்டவர்களின் அரசியலில் நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் வகித்த பொறுப்புக்குத் தகுதியானவர்கள் தான்.

விகடன் மட்டுமல்ல, எந்த நிறுவனத்திலும் அனுபவம் இல்லாத கத்துக்குட்டிகளை, எடுத்தவுடன் தலைமைப் பொறுப்புக்கு நியமிப்ப‌தில்லை. தினமலர்,தினகரன்,தினத்தந்தி போன்ற நிறுவனங்கள் ஒருவரை தலைமைப்பொறுப்புக்கு நியமிக்கிறது என்றால் அவர் எதற்கு ஆசிரியராய் நியமிக்கப்ப‌டுகிறாரோ அது குறித்து அனைத்தும் தெரிந்தவராகத் தான் இருப்பார். இவ்வளவு ஏன் ஒரு நிருபரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது எத்தனை கேள்விகள் கேட்கின்றனர்.

இது தான் நடைமுறை.

'பிரியா தம்பி' என்பவர் 'டாக்டர் விகடன்' பத்திரிகையின் பொறுப்பாசிரியராய் நியமிக்கப்ப‌ட்டிருக்கிறார்.

டாக்டர் விகடன்,ரா.கண்ணன்,ப்ரியா தம்பி,குங்குமம் டாக்டர்

பொறுப்பாசிரியர் பணிக்குத் தகுதி உடையவரா 'பிரியா தம்பி'  ..?

'டாக்டர் விகடன்' பத்திரிகை முழுக்க முழுக்க மருத்துவம் சார்ந்தது. வயிற்றில் இருக்கும் கருவிலிருந்து மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் உயிர்கள் வரை எதிர்கொள்ளும் உடல் நல சிக்கல்கள் அனைத்தையும் அந்த இதழ் விவாதிக்கிறது. மனித உடல்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆலோசனையும்  தீர்வும் சொல்கிறது. இதில் பெரும்பாலானவற்றை மருத்துவத்துறையில் நிபுணத்துவம் மிக்க மருத்துவர்கள் மற்றும் இத்துறை சார்ந்தவர்கள் எழுதுகின்றனர். தங்களது ஆலோசனைகளைச் சொல்கின்றனர். இந்த இதழுக்குத்தான்  பொறுப்பாசிரியராய் 'பிரியா தம்பி' நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பத்திரிகையும் இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அவர்கள் எழுதும் கட்டுரையைச் சரி பார்ப்பதற்கும் அவர்கள் எழுதுவதில் தவறு இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டுவதற்கும், கட்டுரை அதிக பக்கங்கள் இருந்தால் அதனைச் சுருக்கவும், கட்டுரையில் சொல்லப்ப‌ட்டுள்ள‌வைகள் முழுமையாய் இல்லையென்றால் கூடுதலாய் தகவல்களைக் கோரவும் இத்துறையில் பரிச்சயம் இருக்க வேண்டும். இதுவும் போக மருத்துவ உலகில் சமீபத்திய அனைத்தும் அப்டேட்டாக இருக்க வேண்டும்.

நிபுணத்துவம் மிக்க மருத்துவர்களின் படைப்புகளைச் சரி பார்க்க அவர்கள் அளவுக்கு திற‌மையும் அறிவும் இல்லையென்றாலும்,குறைந்த பட்சம் அடிப்படை விஷயங்களாகவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் 'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரிய‌ருக்கோ மருத்துவம் குறித்து எதுவும் தெரியாது. இவர் இதற்கு முன் மருத்துவ இதழ்கள் எதிலும் வேலை பார்க்கவில்லை. அல்லது மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் எதையும் எழுதவில்லை.

ஆனால் இவர் ஏற்றிருக்கும் வேலையோ 'டாக்டர் விகடன்' என்னும் மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியர்.

இதில் இடம் பெற்றிருக்கும்  கட்டுரைகள் பெரும்பாலானவற்றை எழுதுபவர்கள் புகழ் பெற்ற மருத்துவர்கள். இது எப்ப‌டிச் சரியாகும்..?

 நம் உயிரையும் உடலையும் குறித்து எழுதும் மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியராய் மருத்துவம் குறித்து தெரியாத ஒருவர் நியமிக்கப்ப‌டுகிறார் என்றால் அதன் வாசகனின் உயிர் குறித்து 'விகடன் குழுமம்' மயிர் அளவுக்கும் கவலைப்ப‌டவில்லை எனத் தெரிந்து கொள்ள‌லாம். மற்ற துறை இதழ்களின் நிருபர்களின் தகுதியின்மை போல் இதனை எளிதாய் ஒதுக்கித் தள்ளி விட முடியாது. ஏனென்றால் இது படிப்பவனின் உயிரும் உடல்நலமும் சம்பந்தப்பட்ட விஷயம்.

தண்டு வடப்பிரச்சனை குறித்தோ, நரம்புச்சிதைவு நோய் குறித்தோ,இதய மாற்று அறுவைச் சிகிச்சை குறித்தோ,மார்பகப் புற்று நோய் குறித்தோ,ஸ்டெம்செல் குறித்தோ ஒரு மருத்து நிபுண‌ர் கட்டுரை எழுதுகிறார் என வைத்துக் கொள்வோம்.

அந்தக்கட்டுரையை வெளியிடுவதில் பொறுப்பாசிரியராய் இருக்கும் பிரியா தம்பியின் பங்கு என்ன..? இதைப்பற்றி எதுவுமே தெரியாத இவரால் என்ன செய்ய முடியும்..? எழுதப்பட்ட விஷயங்கள் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வார்..? தகவல்கள் போதுமானவையா இல்லையா என்பதை எப்படி முடிவு செய்வார்..? மூன்று பக்க கட்டுரைக்கு நான்கு  பக்க மேட்டர்  வந்தால், அதனை எப்படி கையாள்வார்..?

அவர் எதைச் செய்தாலும் அதும் படிக்கும் வாசகனின் தலையில் தானே வந்து இடியாய் இறங்கும்.எதுவுமே தெரியாத ஒருவர் பொறுப்பாசிரியராய் பணியாற்றுவது படிக்கும் வாசகனின் உயிரைப் பணயம் வைக்கும் ஒன்றுக்கு சமம் இல்லையா..?

இல்லை,இல்லை  பிரியா தம்பி மருத்துவர்கள் எழுதும் இது போன்ற‌ கட்டுரையில் திருத்தமோ,எடிட்டிங்கோ எதுவும் செய்வதில்லை,அதனால் வாசகன் இது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்று சொன்னால் அவர் வகிக்கும் பொறுப்பாசிரியர் பதவி என்பது அலுவலகத்தில் அமர்ந்து இருக்கும் அலங்காரப் பதவியா.? பதவிக்காக அவர் வாங்கும் நாற்பத்து சொச்சம் ஆயிரம் சம்பளம் என்பது தண்டமா..?

மலையாள சினிமா விமர்சனம் எழுதும் ஒருவரை,தொலைக்காட்சி சீரியலுக்கு வசனம்  எழுதிக்கொண்டிருந்த ஒருவரை டைம்பாஸ் இதழில் பணி செய்யச் சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை,அல்லது விகடன் நிருபராக பத்தோடு ஒன்றாக பதினொன்றாக‌ பணி செய்யச் சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் ஒட்டுமொத்த  டாக்டர் விகடனைத் தாம்பாளத்தில் வைத்து கொடுத்திருக்கிறது விகடன்.

 தெருவுக்குத் தெரு புற்றீசல் போல் முளைத்திருக்கும் மெடிக்கல் ஸ்டோரை நடத்துவதற்கே, குறைந்த பட்சம் பார்மசி படிப்பில்  டிப்ளமோ படித்திருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ரெண்டு பக்கம் ஒழுங்காய் எழுத தெரியவில்லை,உனக்கு வெளியீட்டாளர் கம் எடிட்டர் பதவி கேடா ? எனவும்,அச்சிடுவதை படிக்கத் தெரியாது எனவே நீ அச்சிடக் கூடாது என நீதிமன்றம் பதிவு செய்ய மறுக்கிறது. ஆனால் கட்டுரையாளர் எழுதுவதை படிக்கத் தெரிந்தாலும் அது பற்றி ஒன்றுமே தெரியாதவர் இங்கு பொறுப்பாசிரியர்.  நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய ஆசிரியர் நிலையில் இருப்பவர். மருத்துவம் குறித்து எதுவும் தெரியா விட்டாலும்,உள்ளடக்கம் பற்றி எதுவுமே தெரியா விட்டாலும் ஒருவரை பொறுப்பாசிரியராய் விகடன் குழுமமும் ஆசிரியர் ரா.கண்ணனும் நியமிக்கிறார்கள்.

உள்ளே ஒரு அறிவிப்பு இருக்கிறது.

மருத்துவர்களின் ஆலோசனையைப்பெற்றுத்தான் படிப்பவர்கள் செயல்பட வேண்டும் என்று. இதைப்படித்தால் 'புகை உள்ளத்துக்கும் உடலுக்கும் தீங்கானது' என்று அட்டையில் சிறியதாய் அச்சிட்டு விட்டு ஊரெங்கும் உள்ள‌வனின் உயிரைப்பறிக்கும் புகையிலை நிறுவனங்கள் தான் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

இது தான் 80 ஆண்டு பாரம்பரிய நிறுவனம் எனச் சொல்லிக்கொள்ளும் விகடனின் தரம்.

(விகடன் மட்டுமல்ல 'டாக்டர் விகடன்','குமுதம் ஹெல்த்','குங்குமம் டாக்டர்' என அனைத்து பத்திரிகைகளுக்கும் கட்டுரையின் இந்தப்பகுதி பொருந்தும்.அப்படியே பொருத்திக் கொள்ளலாம்.)

இதுவரை தகுதியற்ற ஒருவரின் நியமனம் குறித்து நாம் பார்த்தோம். இனி நாம் இந்த நியமனத்தால் பாதிக்கப்ப‌ட்ட விகடன் பத்திரிகையாளர்களைப் பார்ப்போம் .




எந்த  பத்திரிகையிலும் பொறுப்பாசிரியர் பதவிக்கு ஒருவர் வர வேண்டுமென்றால் அவர் நிருபர்,மூத்த நிருபர்,உதவி ஆசிரியர் போன்ற படிநிலைகளைக் கடந்து வர வேண்டும். அனைத்து கட்டங்களையும் கடந்து வந்தால் தான் அவர் தான் வகிக்கும் உயர் பொறுப்புகளில் மிளிர முடியும் என்பதற்காகத் தான் இந்த நடைமுறை. இல்லையென்றால் கத்துக்குட்டிகள் எல்லாம் தலைமைப்பொறுப்புகளுக்கு வந்து விடுவார்கள் அல்லவா..?

வேறு பத்திரிகையில் இருந்து ஒருவர்,இன்னுமொரு பத்திரிகைக்கு வந்தாலும், அவரது பழைய பொறுப்பையோ அல்லது அதற்கு அடுத்த படிநிலையையோ தான் அடைய முடியும்.

நிருபர் பதவி வகித்த ஒருவர் புதிதாய் இன்னொரு நிறுவனத்தில் சேரும் பொழுது அவருக்கு ஆசிரியர் பதவியையோ,பொறுப்பாசிரியர் பதவியையோ யாரும் தருவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதுவும் நாளிதழ்களில் கனவில் கூட நினைக்க முடியாது. பிளாக்மெயில் பேர்வழிகள் நடத்தும் பத்திரிகைகள்,கட்டப்பஞ்சாயத்து நபர்கள் நடத்தும் பத்திரிகைகள் வேண்டுமானால் இப்படிச் செய்யும்.

பாரம்பரிய குழுமம் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் விகடன் இப்பொழுது இதைச் செய்துள்ளது. இது வரை இப்படி அந்த நிறுவனம் செய்ததில்லை.

அந்த நிறுவனத்தின் ஆசிரியர் பதவி வகித்த அனைவரும் இதுவரை விகடனில் கடைநிலையில் இருந்து தான் முன்னேறி இருக்கின்றனர். இல்லையென்றால் அதற்கான அனுபவத்துடனும் தகுதியுடனும்  பிற பத்திரிகையில் இருந்து வந்திருக்கின்றனர்.

அசோகன்,ரா.கண்ணன்,திருமாவேலன் என அனைவரும் இதைக்கடந்து வந்தவர்கள் தான்.

இவ்வளவு ஏன் ? விகடனின் வெளியீடான டைம்பாஸ் விகடனுக்கு ஆசிரியராய் நியமிக்கப்பட்டுள்ள ரீ.சிவக்குமார் என்ற சுகுணா திவாகர் வரை நியமனம் இப்படித்தான் நடந்துள்ள‌து.

ஆபாசம்,வக்கிரம்,சினிமா,கிசுகிசு,துணுக்கு,ஜாலி உள்ளடங்கிய பத்திரிகைக்கே விகடன் நிறுவனம், அந்த நிறுவனத்தில் நிருபர்,மூத்த நிருபர்,முதன்மை நிருபர் என படிநிலைகளைக் கடந்த ஒருவருக்குத் தான் முறைப்படி பொறுப்பைக் கொடுக்கிற‌து.

இனி விஷயத்துக்கு வருவோம்.

'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரியர் பதவி காலியாய் சிறிது காலம் இருக்கிறது. இதனை நிரப்ப வேண்டும். அதற்கு 'டாக்டர் விகடன்' வெளியிடுபவரும் ஆசிரியரும், விகடன் நிர்வாகமும் என்ன செய்ய வேண்டும்?

தற்பொழுது டாக்டர் விகடனில் உதவிப் பொறுப்பாசிரியர் பொறுப்பு வகிப்பவர் அதற்கான தகுதியுடன் இருந்தால் அவரை நியமனம் செய்ய வேண்டும்,அல்லது விகடன் குழுமத்தில் இருக்கும் பிற பத்திரிகையாளர்கள் யார் அதற்குத் தகுதியாய் இருக்கிறார்களோ அவர்களை நியமிக்க வேண்டும்,அல்லது வெளியில் இருந்து உரிய தகுதியுடன் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால் இங்கோ விகடனின் அனுபவமிக்க பத்திரிகையாளர்கள் கண்டு கொள்ளப்படாமல் வெளியிலிருந்து 'ப்ரியா நாயர்' பொறுப்பேற்றுள்ளார்.

பத்திரிகையாளராக 'ப்ரியா தம்பி' அனுபவம் என்ன ? அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா..?

கேரள‌ கைரளி நிறுவனத்தில் ஐந்து மாதங்கள். அதன் பின் இடைவெளி,அதற்கடுத்து 'சுட்டி விகடனி'ல் ஒரு ஆறு  மாத காலம்,அதன் பின் 'தமிழ் முரசு' நாளிதழில் நிருபராய் ஒரு எட்டு மாத காலம் (பணி நீக்கம்), அதன் பின் 'கிழக்கு' பதிப்பகத்தில் மிகக் குறைந்த காலம்,அதன் பின் நீண்ட இடைவெளி, அதன் பின் 'குமுதம் ரிப்போர்ட்டரி'ல் சில காலம், அதன் பின் நீண்ட இடைவெளி.

இவ்வளவு தான் இவரது பத்திரிகையாளர் அனுபவம்.

எல்லாவற்றையும் கூட்டினால் துறை அனுபவம்  மூன்று வருட சொச்ச பணிக்காலம் கூட வராது. இவரைத் தான் தொடக்க நிலையிலேயே 'டாக்டர் விகடன்' பொறுப்பாசிரியராய் நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

இது எப்படிப்பட்ட முறைகேடு ?

 தகுதி,திறமை,படிநிலை பற்றி இம்மியளவு விட்டுக்கொடுக்காமல் பின்பற்றுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் விகடன் நிறுவனம் அப்படி என்ன யாரிடமும் இல்லாத தகுதியை ப்ரியா தம்பியிடம்  கண்டுவிட்டது..? தகுதிக்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது.? அதை வெளிப்படையாகக் கூட சொல்ல வேண்டாம். கிசுகிசு பாணியிலாவது செப்புமா..?

அவர் பத்திரிகை பணிக்கு வந்த காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ச்சியாக இத்துறையில் இருந்திருந்தால் வேண்டுமென்றால் ஒருவேளை அவருக்கு இப்பொறுப்பு கொடுத்திருப்பதில் ஒரு நியாயம் இருப்பதாய் வாதிட முடியும்..? அப்பொழுதும் வாதிடத்தான் முடியும். அது சரியென்று தீர்ப்பு சொல்லி விட முடியாது.

'ப்ரியா தம்பி'யின் நியமனத்தால் டாக்டர் விகடனில் பணியாற்றிய மூவர் பாதிக்கப்பட்டுள்ள‌னர். அதை முதலில் பார்ப்போம்.

பலி கொடுக்கப்பட்டவர்களுக்கு விருந்து-டாக்டர் விகடன் டீம்.

பிரேமா நாராயணன்.

இப்பொழுது உதவிப் பொறுப்பாசிரியராய் பதவி வகிக்கிறார்.டாக்டர் விகடன் ஆரம்பித்ததில் இருந்து அங்கு பணியாற்றி வருகிறார். இவர் தான் பொறுப்பாசிரியராய் நியமனம் ஆகி இருக்க வேண்டும். ஆனால் இவருக்கு நியமனம் மறுக்கப்பட்டுள்ளது. ப்ரியா தம்பியை விட துறை அனுபவம் மிக்கவர்.

எஸ்.ரேவதி.உதவி ஆசிரியர்.

இவர் பல வருடங்களாய் விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகிறார். அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்தவர். விகடனின் வள‌ர்ச்சிக்கு வியர்வையையும், விகடன் குழுமங்களின் தலைவர் மறைந்த‌ பாலசுப்ரமணியம் மனைவிக்கு தனது ரத்தத்தை தானமாகவும் அளித்தவர்.இவரும் ப்ரியா தம்பியை விட இத்துறையில் அனுபவம் மிக்கவர்.

இதற்கடுத்து பா.ப்ரவீண் குமார். 

பா.ப்ரவீண் குமார்

இவரும் 'டாக்டர் விகடன்' ஆரம்பித்ததில் இருந்து இங்கு பணியாற்றி வருகிறார்.பத்திரிகைத் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாய் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் 'தமிழ் முரசு' நாளிதழில் ப்ரியா தம்பி பணிக்கு வரும் முன்பே 'தினகரனில்' பணியில் இருந்தவர்.

மேற்கண்ட மூவரும் ப்ரியா தம்பியை விட இத்துறையில் அனுபவம் மிக்கவர்கள். இத்துறையை விட்டு வேறு எங்கும் செல்லாதவர்கள். மருத்துவத்துறை குறித்து அதிகமாய்த் தெரியா விட்டாலும் தொடர்ச்சியாய் டாக்டர் விகடன் முதல் இதழிலிருந்து பணிபுரிந்ததன் மூலம் யாரிடம் படைப்புகளை வாங்கலாம்,எந்தப் பிரச்சனைக்கு யார் கட்டுரை சிறப்பாய் இருக்கும் என்பது மட்டுமல்ல,போட்டி இதழ்களின் போக்கையும் அறிந்த அனுபவமிக்க‌வர்கள்.

ஆனால் இவர்கள் அனைவருக்கும் பணி உயர்வு மறுக்கப்ப‌ட்டு ப்ரியா தம்பியை ராஜபாட்டையில் அழைத்து வந்து பொறுப்பாசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவரது நியமனத்தால் டாக்டர் விகடனில் பாதிக்கப்ப‌ட்டவர்கள் இவர்கள். விகடன் குழுமத்தில் பாதிக்கப்பட்ட சில எடுத்துக்காட்டுகளைச் சொல்கிறோம்.

தமிழ் மகன்.




'தமிழ் மகன்' என்பவர் சென்னையைச் சேர்ந்தவர். 'தினமணி' இணைப்பிதழான கொண்டாட்டம் பொறுப்பாசிரியராய் (பொறுப்பாளராய் )இருந்தவர். ஆனால் அவரோ இப்பொழுது 'ஜூனியர் விகடன்' உதவிப் பொறுப்பாசிரியராய் இருக்கிறார். 'தினமணி'யில் இருந்து விலகி விகடன் குழுமத்தில் சேரும் பொழுதே இப் பொறுப்பிற்குத் தான் தெரிவு செய்யப்பட்டார்.




விகடனை விட பாரம்பரிய இதழான 'தினமணி'யின் இணைப்பிதழில் பொறுப்பாசிரியராய் பணியாற்றியவரையே, உதவிப் பொறுப்பாசிரியருக்குத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கடுமையான அளவுகோல் வைத்திருக்கும் விகடன்,சொற்ப காலம்  துறையில் நிருபராகப் பணியாற்றிக்கொண்டிருந்து விட்டுத் துறையை விட்டு நீண்ட காலம் விலகியிருந்த ஒருவ‌ரை பணிக்குச் சேர்க்கும் பொழுதே, பொறுப்பாசிரியராய் நியமிப்பதற்கு என்ன காரணம்..?
**

ஆனந்த விகடனில் மூத்த நிருபராய்  பணியாற்றும் டி.அருள் எழிலன் என்பவர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
அருள் எழிலன்


ஆ.வி.நிருபராய் சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பு வகித்தார். அதன் பின் அந்த நிறுவனத்தை விட்டு விலகினார். சில ஆண்டுகள் இடைவெளியில் அவர்  மீண்டும் ஆ. விகடனுக்கு வேலைக்கு வந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் குங்குமம் வார இதழிலும்,இன்னும் சில இதழ்களிலும் வேலையில் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் இத்துறையை விட்டு எங்கும் சென்று விடவில்லை,ஆனாலும் மீண்டும் விகடன் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது அவருக்கு 'மூத்த நிருபர்' பொறுப்பு தான் வழங்கப்பட்டது. இது அவர் ஏற்கனவே வகித்த நிருபருக்கு அடுத்த நிலை தான். இப்பொழுது ஓர் ஆண்டு பணிபுரிதலுக்குப்பிறகு அவருக்கு 'முதன்மை  நிருபர்' பொறுப்பு கிடைத்துள்ளது.



பாரதி தம்பி


பாரதி தம்பி என்பவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சில காலங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் மூத்த நிருபராய் பணி புரிந்தார். அதன் பின் விகடனை விட்டு விலகி 'சன் டிவி'யில் பணி புரிந்தார். அதன்பின்பு அங்கிருந்து விலகி மீண்டும் விகடனில் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு ஏற்கனவே வகித்த மூத்த நிருபருக்கு அடுத்த நிலையான 'முதன்மை  நிருபர்' பதவி தான் கொடுக்கப்பட்டது. அதன் பின் இப்பொழுது அவர் 'உதவிப் பொறுப்பாசிரியர்' ஆகி இருக்கிறார்.

இவர்கள் எல்லாம் பத்திரிகைத் துறையை விட்டு விலக வில்லை. இவர்கள் திறமைக்கும் குறைவில்லை. ஆனாலும் இவர்கள் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் இவர்கள் ஏற்கனவே வகித்த பொறுப்பிலோ,அல்லது அடுத்த நிலையிலோ தான் பணிபுரிய அழைக்கப்படுகின்றனர்.

ப்ரியா தம்பியை ஒப்பிடும் பொழுது மேலே சொல்லப்பட்டவர்கள், இத்துறையில் பல வருடங்கள் அதிக அனுபவம் உள்ளவர்கள். இவர்களின் பத்திரிகை அனுபவம் தமிழ் மகனுக்கு 20 வருடமும்,மீதமுள்ளவர்களுக்கு 15 வருடங்களை ஒட்டிய அனுபவமும் இருக்கும்..

நாம் மேலே சொன்ன தமிழ்மகன்,அருள் எழிலன்,பாரதி தம்பி ஆகியோர் நூல்களையும் எழுதியுள்ளனர்.

இவர்களைப் போல் கலீல் ராஜா,'டைம்பாஸ்' இதழின் பொறுப்பாசிரியர் சரண் உட்பட‌ விகடனில் இன்னும் அனுபவமிக்க,திறமைமிக்க  எத்தனையோ பத்திரிகையாளர்களைக் காட்ட முடியும். இவர்கள் எல்லாம் இன்னும் உதவி ஆசிரியர்,மூத்த,முதன்மை நிருபர்,உதவி பொறுப்பாசிரியர் பதவியைத் தாண்ட முடியாமல் இருக்கின்றனர்.

தனது எழுத்தின் மூலம் , நந்திக்கடலில் நாதியற்றுச் செத்துப்போன தமிழனுக்காக‌ படிப்பவர் மனதில் குற்ற உணர்வை  உருவாக்க டி.அருள் எழிலனால் முடியும், உழைப்புச் சுரண்டல் குறித்து பக்கம் பக்கமாய் எழுத பாரதி தம்பியால் முடியும்,கொரிய சினிமாவை ஏமாற்றி தமிழ் திரை உலகினர் படம் எடுக்கிறார்கள் என கலீல் ராஜாவால் அம்பலப்படுத்த  இயலும்.

ஆனால் இவர்களின் உரிமையோ, பணி உயர்வோ 'ப்ரியா தம்பி' போன்றோரால் கண் முன்னே சத்தமில்லாமல் பறிக்கப்படும் பொழுது அறிந்தும் அறியாமலும் கையறு நிலையில் தான் இவர்களால் இருக்க முடியும்.சகித்துக்கொண்டு கடந்து தான் செல்ல முடியும். இவர்கள் எல்லாம் பொறுப்பாசிரியர் ஆவதற்கு இன்னும் எத்தனை யுகம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

ஆனால் மொத்தமே மூன்று வருடத்து சொச்சம் அனுபவம் உள்ள ப்ரியா தம்பி, நீண்ட காலம் துறையில் இல்லாத சீரியல் வசனகர்த்தா ப்ரியாதம்பி   திரும்பவும் துறைக்குள் நுழையும் பொழுதே, பொறுப்பாசிரியராய் நியமிக்கப்ப‌டுகிறார்.  ப்ரியா தம்பிக்கு இவர்களை விட சில ஆயிரம் ஊதியமும் அதிகம்.

இதுவும் போக‌ பொறுப்பாசிரியர் பதவி என்பது மிகவும் கவுரமானது. இதில் அடிக்கடி ஆட்களை மாற்ற‌ முடியாது. ப்ரியா தம்பியோ ஆறு மாதத்திற்கு மேல் அதிகபட்சம் எட்டு மாதம் இதற்கு முன் எந்த நிறுவனத்திலும் தொடர்ச்சியாக‌ பணிபுரிந்ததில்லை.இவரை நம்பி எப்படி இந்தப் பொறுப்பை விகடன் நிர்வாகம் அளித்தது..?

அடுத்ததாக  முகநூலில் கவனிக்கத்தக்க லைக்கும் கமெண்டும் வாங்குபவர் என்று குஷியாகி வேலைக்கு எடுத்தார்கள் என்று வாதத்துக்காய் வைத்துக்கொண்டால் கூட இவரை விட பல மடங்கு திறமையான டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆக‌ அதுவும் இல்லை. மீண்டும் கேட்கிறோம். என்ன தான் உங்கள் அளவுகோல்..?

அவரிடம் அப்படி என்ன திறமையைக் கண்டனரோ விகடன் நிர்வாகிகளும் அதன் ஆசிரியரும்..? அதற்கு என்ன தேர்வு வைத்தனரோ..? தேர்வின் அளவுகோல் என்ன..? 

**



டாக்டர் விகடனுக்கு சந்தையில் போட்டி இதழ் தினகரன் நிறுவனம் நடத்தும் 'குங்குமம் டாக்டர்'

அங்கு 'வைதேகி' என்பவர் முதன்மை ஆசிரியராய் இருக்கிறார். இவரது ஆசிரியர் நியமனம் ஒரு வருடத்திற்குள்ளாகத்தான் நடந்துள்ளது.

 20 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் மிக்கவர். இவர் பழைய தினகரனில் இருந்து அங்கு பணியில் இருப்பவர். மிகத்திறமை வாய்ந்தவர்.இன்னும் சொல்லப்போனால் பழைய தினகரன் நடத்திய மருத்துவம் குறித்த 'ஆரோக்யா' இலவச இணைப்பில் பணியாற்றியவர். அதன்பின் குங்குமம் வார இதழின் தலைமை உதவி ஆசிரியர். அதற்குப்பின் 'குங்குமம் தோழி' பத்திரிகை பொறுப்பாசிரியர்.(இவரது தாய் ஒரு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது)

இன்று 'குங்குமம் டாக்டர்' முதன்மை ஆசிரியர்.

 'வைதேகி' 


ஆக ஒருவர் என்ன தான் திற‌மையானவராய் இருந்தாலும் ஒரே நிறுவனத்தில் தொடர்ச்சியாய் பணியாற்றியவராய் இருந்தாலும் 20 வருடங்கள் அனுபவமிக்கவராய் இருந்தாலும் அவர் 'முதன்மை ஆசிரியராய்' நியமிக்கப்ப‌ட இவ்வளவு பணிக்காலம் தேவைப்படுகிற‌து. குறுக்கு வழிக்கோ 3 ஆண்டு காலம் போதுமானதாய் இருக்கிறது.

ஒன்றுக்கு 3 வருட பதவி புரிந்தவர் பொறுப்பாசிரியர். அதன் போட்டி இதழுக்கு  20 வருடங்கள் அனுபவமிக்கவர் முதன்மை ஆசிரியர்.

எந்த பத்திரிகை தரத்துடனும்,சிறப்புடனும் வெளிவரும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.



ஆக எப்பத்திரிகை பொறுப்பாசிரியராய் பொறுப்பு ஏற்றுள்ளாரோ,அதன் உள்ளடக்கம் குறித்த ஞானமும் இல்லை. இன்னொரு புறம் துறை அனுபவமும் இல்லை.

மொத்தத்தில் ப்ரியா தம்பியை நியமித்தது எந்த வகையில் பார்த்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமும் குறுக்கு வழியில் லாபி செய்ததன் மூலமும் பதவியை அடைந்தது தெரிகிற‌து.


ஏற்கனவே விகடனில் நடைபெற்ற இதுபோன்ற துஷ்பிரயோகத்தை ஒரு பதிவாக எழுதியுள்ளோம். 

தங்களது நிறுவனத்தில் இப்படியான செயல்களை எவ்விதக்குற்ற உணர்வும் இன்றி செய்பவர்கள் தான் அரசியல்வாதிகளையும்,அதிகார மட்டத்தினரையும் கடுமையாய் விமர்சனம் செய்கின்றனர்.

இன்னொருபுறமோ,இப்படிக் குறுக்கு வழியில் அடுத்தவரின் வாய்ப்புக்களைத் தட்டிப்பறித்து தங்களுக்குத் தகுதி இல்லாத இடத்துக்கு தாவி வந்தவர்கள் தான்,பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொண்டு அனைவரையும் விமர்சனம் செய்கின்றனர்.

 தகுதியும் திறமையும்  இல்லாமல் குறுக்கு வழியில் பத்திரிகை தலைமையைப் பிடிக்கும் ப்ரியா தம்பி போன்ற இப்படிப்பட்ட 'பண்பாளர்கள்' தான் பொதுவெளியில் நியாயவான்களாக உருமாறுகிறார்கள். எத்துறை குறித்த விவாதம் என்றாலும் அது குறித்து துளியும் தெரியாவிட்டாலும்  கருத்துச் சொல்லவும்,மேடையில் இடம்பிடிக்கவும் முதல் ஆளாய் கிளம்பி விடுகிறார்கள்.ஊடகர் என்றால் பொது வெளியில் இருக்கும் மதிப்பும் ஒளி வட்டமும் இவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.அதுவும் ஊடகங்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ள கடந்த ஐந்தாண்டுகளில் இப்படி 'நியாயவான்களின்' எண்ணிக்கை பல்கிப் பெருகியிருக்கிறது.

சாதியச் சண்டையில் இருந்து திரைப்பட விமர்சனம் வரை, அரசியல்வாதிகள் முதல் அதிகார வர்க்கம் வரை அனைவரையும் நடுநிலைச் சொம்பெடுத்து முகநூல் முதல் தொலைக்காட்சிப் பெட்டி வரை கருத்து வாந்தியெடுக்கிறார்கள். சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறார்கள்.

இந்த நியமனம் அதன் ஆசிரியர் ரா.கண்ணன் பரிந்துரை மற்றும் விரைவுபடுத்தல் இல்லாமல் துளியும் சாத்தியமில்லை. ரா.கண்ணன் அவர்களே நீங்கள் கை நீட்டிக் காசு வாங்காதவராய் இருக்கலாம். ஆனால் நேர்மை என்பது பணத்துடன் மட்டும் தொடர்பு கொண்டது அல்ல. இப்படி முறையற்ற நியமனத்துக்கு துணை புரிந்ததன் மூலம் நீங்கள் மிகப்பெரிய தவறு இழைத்திருக்கின்றீர்கள்.

டாக்டர் விகடனுக்கு ப்ரியா தம்பியை நியமித்ததன் மூலம்,திறமையான எத்தனையோ விகடன் பத்திரிகையாளர்கள் பணி உயர்வு தடுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு புறமோ அறிவார்ந்த டாக்டர் விகடன் வாசகர்களை மூடர்களாக விகடன் குழுமம் கருதியிருக்கிறது,அதனால் அவர்களின் உயிரும் உடல் நலமும் பணயம் வைக்கப்பட்டிருக்கிறது.

தங்கள் நிறுவனத்தில் முறையற்ற நியமனத்தைச் செய்யும் விகடன் தான்,அலைக்கற்றை ஊழல் முதல் பல விஷயங்களில் முறைகேடு நடந்திருக்கிறது என கூப்பாடு போடுகிறது.போலி மருத்துவர்களையும்,அங்கீகாரம் இல்லாத மருத்துவக்கல்லூரி நடத்துபவர்களையும் சாடுகிறது. ஒரு வருட மூப்பு குறைவான ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.அதிகாரிக்கு பதவி உதவி வழங்கினால் அதை எதிர்த்து கவர் ஸ்டோரி எழுதுகிறது.

இதைச் செய்வதற்கான‌ தகுதி உங்களுக்கு இருக்கிறதா..? உங்கள் மனசாட்சியிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி. 


Monday, 6 October 2014

வன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....!




சுதேச‌மித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது.

திருநெல்வேலி மாவட்ட‌ எல்லையும் குமரி மாவட்ட‌ தொடக்கமுமான குமாரபுரம் அருகில் உள்ள ஒரு சிற்றூரில் 'குமரி மன்னன்' என்று ஒரு நண்பர் இருந்தார். உள்ளூரில் சொல்லத்தக்க அள‌வுக்கு நிலபுலன்கள் இருந்தாலும் வெளியூர் சென்று இன்னும் அதிகம் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது.அவரது ஊரில் வெளியூர் சென்று பொருளீட்டுபவர்கள் பெரும்பாலோனார் இருந்ததாலும் அவருக்கும் அந்த எண்ணம் ஏற்பட்டது.

1995 வாக்கில் அவர் கேரளாவுக்குச் சென்றார்.சிறிது காலம் கழித்து அவரிடம் இருந்து ஊருக்கு கடிதம் வந்தது. அனுப்புனர் பெயரில் குமரி மன்னன் என்ற பெயருக்குப் பதில்,'மன்னன் பிள்ளை' என்று இருந்தது.நண்பருக்கு ஆச்சரியம் உண்டானது. சிறிது காலம் கழித்து ஊருக்கு வந்த நண்பரிடம் இது குறித்து கேட்டதும் அவர் சொன்ன பதில்,

'குமரி மன்னன்' என்பதெல்லாம் இங்கு தான் கதைக்கு ஆகும்.அங்கு போனால் பிள்ளை பட்டம் தான் நம் பிழைப்புக்கு ஆகும்.அதனால் தான் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொண்டேன் என்பது.

கேரளாவின் சாதி வெறிக்கும் அங்கு இன்றும் சாதி அடுக்குமுறையின் படி தான் மனிதர்கள் மதிக்கப்ப‌டுகிறார்கள்,அவர்கள் பிழைப்பைத் தீர்மானிப்பதில் சாதிக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதற்கு நண்பர் சொன்ன இச்சம்பவம் எளிய எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டை விட மலையாளத்தில் ஆதிக்க சாதி வெறியர்கள் உச்சாணிக்கொம்பில் இருந்து அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தைச் சுவைக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

மலையாள நாட்டில் தான் இந்த‌ நிலை என்று இல்லை.ஆதிக்க சாதி மலையாளிகள் எங்கு சென்றாலும் தங்கள் சாதியை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூக்கிச் சுமக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.
*
தமிழ்நாட்டின் திரைத்துறையில் கவுதம் என்றொரு இயக்குனர் 'மின்னலே' என்றொரு திரைப்படத்தை இயக்கினார்.படத்திற்கு ஓரளவு வரவேற்பு.

ஓரளவு வரவேற்பு கிடைத்ததும்,அதன்பின் கால ஓட்டத்தில் தமிழகத்தின் முக்கிய திரை இயக்குனராய் அறியப்பட்ட பின்பு அவரது பெயர் 'கவுதம் வாசுதேவ் மேனன்' என்று உருமாறியது. மேனன் என்பது தம்பியைப் போல நாயர் சாதி.

அடுத்த வேளைச் சோத்துக்கு வழி இல்லாமல் கோடம்பாக்கத்தில் உதவி இயக்குனராய் அலைந்து திரிந்த பொழுது எட்டணா காசுக்குப் பிரயோஜனபப்டாத‌ சாதி, சிறிது சிறிது தன்னை நிலை நிறுத்த தொடங்கிய பின்பு ஒட்டிக் கொண்டு விட்டது. இது கேரளாவின் ஒடுக்கப்ப‌ட்ட புலையர்,ஈழவ மக்களிடம் இல்லை.அவர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் இருந்தாலும்,முன்பை விட அவர்கள் பொருளாதார,சமூக ரீதியாய் முன்னேறியிருந்தாலும் இன்னும்  தங்களை சாதியுடன் அழைத்து பெருமிதப்படும் அளவுக்கு எண்ணவில்லை.இது தான் யதார்த்தம்.

கவுதம் வாசுதேவ் மேனனின் வளர்ச்சியில் எந்தப்பங்கும் வகிக்காத அவர் சாதி,வளர்ந்த பின் அவர் பெயருக்குப் பின்னுட்டு வந்து விடுகிறது.இன்னும் சொல்லப்போனால் இத்துறையில் அவர் நீடிப்பதற்கும் இடத்தைத் தக்க வைப்பதற்கும் அவரது சாதி எந்தப்பங்கையும் வகிக்க முடியாது. ஆனால் சாதியைத் தூக்கிச் சுமப்பதை பெருமிதமாய்க் கருதுகிறார்கள்.

சாதி வெறிக்கு திரைத்துறை மட்டுமல்ல எழுத்துத் துறையும் விதிவிலக்கா என்ன..? அதிலும் சீரியலுக்கு வசனம் எழுதுவது திரைத்துறைக்கு அடுத்த படி தானே..?

அதே போன்ற எடுத்துக்காட்டைத் தான் நாம் சென்ற பதிவில் சொல்லியிருந்தோம்.

பிரியா என்றொரு பெண்மணி தனது பெயருக்குப் பின் தம்பி என்னும் நாயர் சாதிப்பிரிவைச் சேர்த்துக் கொண்டு நம்பர் ஒன் இதழ் என்று சொல்லிக் கொள்ளும் ஆ.விகடனில் "பேசாத பேச்செல்லாம்" தொடர் எழுதுவதையும் எழுதியிருந்தோம்.

 இணையத்தில் முற்போக்கு பேசுபவர்களின் போலித்தனத்தையும் த‌டித்தனத்தையும் நன்கு அறிந்ததாலேயே, பெண் போராளி என்பதாலும் மலையாளி என்பதாலும் இவரது சாதி வெறியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் அத்தொடரிலேயேஎழுதியிருந்தோம்.

நாம் நினைத்த படிதான் நடந்தது.

பிரியா தம்பி தொடர்அருமை என வியாழன் காலை முகநூலைத் திற‌ந்து பதிவிட்டு டேக் செய்பவரில் இருந்து யாரும் அதைக் கண்டுகொள்ள‌வில்லை. ஜேசுதாசின் ஜீன்ஸ் உடை குறித்த கருத்துக்கு பொங்குபவர்கள் இதனை வேண்டுமென்று திட்டமிட்டுக் கண்டுகொள்வது இல்லை.

இதையெல்லாம் நாம் எதிர்பார்த்து தானே இங்கு எழுதுகிறோம்.

இதோ இன்னொரு ஆதாரத்தை அளிக்கிறோம்.



இது பிரியாவின் திருமண சான்றிதழ் நகல்.

2006 ஆம் ஆண்டு சென்னை சாந்தோம் பதிவுத்துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் பதிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பதிவுத்துறை இணையப் பக்கத்தில் கூடக் கிடைக்கிறது.

இதில் பிரியா என்ற பெயரில் தான் சான்றிதழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் மேலாக அவரது தந்தை மற்றும் தாயாரின் பெயருக்குப் பின்னும் எந்த சாதிப்பட்டமும் இதர 'பெருமை'களும் இல்லை. பிரியாவின் தந்தைக்கு வயது கிட்டத்தட்ட 60 பிள‌ஸ் ஆக இருக்கும்.அந்தக்காலத்து ஆள். பழமையில் ஊறிய தந்தைக்கு இல்லாத சாதி வெறி,மூளை முழுவதும் 'புரட்சி'கர சிந்தனைகள்  நிரம்பி வழியும் பிரியாவுக்கு இருக்கிறது.இந்த லட்சண‌த்தில் ஊருக்கு 'உபதேசம்'.

அரசு பதிவு ஆவணங்களில் பதியப்படும் பெயர் நாம் அதற்காய் கொடுக்கும் ஆவணங்களை வைத்துத் தான் பதியப்படும். அப்படியானால் பிரியா சாந்தோம் அலுவலகத்தில் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களும் பிரியா என்ற பெயரில் தான் இருந்திருக்கிறது.அதனால் தான் அவர்கள் அளித்த ஆவணம் பிரியா என்று வந்திருக்கிறது.

நாம் கேட்பது இது தான்.

2006  இல் 'பிரியா' என்ற பெயரில் அரசு ஆவணங்களில் இருக்கும் அவரது பெயர் எப்ப‌டி 'பிரியா தம்பி' ஆனது.?

எந்த கல்லூரியில் தம்பி என்ற பட்டம் கொடுத்தார்கள். ஒருவேளை இந்தக்கல்லூரியில் கிடைத்ததா..?(!) இது அப்பட்டமான சாதி வெறி இல்லாமல் வேறென்ன.? இன்னும் அவரது சாதி வெறிக்கு என்ன ஆதாரம் வேண்டும்..? பிரியா நாயர் எழுத்தை வியக்கும் முற்போக்கு வெண்ணைகள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
***

சாதிப்பெயரைச் சுமப்பவர்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கருத்து இது;



"இந்த சாதிப் பெயர்களைத் தொடர்வதற்கு வேறொரு ஆட்சேபøணயும் இருக்கிறது. மனிதர்களையும் பொருட்களையும் பற்றி மக்களின் எண்ணத்திலும் உணர்விலும் மனப்பாங்கிலும் ஏற்படும் மாறுதலே சீர்திருத்தம் என்பது. சில குறிப்பிட்ட பெயர்கள் சில குறிப்பிட்ட கருத்துகளோடும் உணர்வுகளோடும் இணைந் தவையாக உள்ளன. இந்தக் கருத்துகளும் உணர்வுகளுமே மனிதர்களைப் பற்றியும் பொருள்களைப் பற்றியும் தனிமனிதனின் மனப்போக்கு என்ன என்பதையும் தீர்மானிக்கின்றன.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய பெயர்கள் ஒவ்வொன்றும் திட்ட வட்டமான, நிலையான ஒரு கருத்தை ஒவ்வொரு இந்துவின் மனதிலும் ஏற்படுத்தி இருக்கின்றன. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஏணிப்படி அமைப்பே அந்தக் கருத்து.

இந்தப் பெயர்கள் நீடிக்கின்ற வரை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகி÷யாரை பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவுகளாக ஏணிப்படி வரிசையில் எண்ணிப் பார்க்கிற போக்கும், அதற்கு ஏற்றபடி நடந்து கொள்கிற போக்கும் இந்துக்களிடம் தொடரத்தான் செய்யும்.

இந்துக்களின் சிந்தனை யில் இந்தப் போக்கு இல்லாமல் போவதற்குப் பயிற்றுவித்தாக வேண்டும். ஆனால், பழைய சாதி முத்திரைகள் தொடர்ந்து நீடித்து மனிதனின் மனதில் பழைய கருத்துகளையே நினைவுபடுத்திக் கொண்டிருக்கையில் இது எப்படிச் சாத்தியம்?

மக்களின் மனதில் புதிய கருத்துகள் பதிய வைக்கப்பட வேண்டுமென்றால், மக்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டியாக வேண்டும். பழைய சாதிப் பெயர்களையே தொடர்வது சீர்திருத்தத்தைப் பயனற்றது ஆக்கிவிடும்.

பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவினைகளான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற முடைநாற்றம் வீசுகிற பெயர்களால், தகுதியை அடிப்படையாகக் கொண்ட நான்கு வர்ணத்தை அழைப்பது சூழ்ச்சியே ஆகும்."

டாக்டர் அம்பேத்கர்,'ஜாதியை அழித்தொழிக்கும் வழி ' நூல்

-கருப்புப் பிரதிகள் வெளியீடு.

**

இப்படி யோசித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள சாதிப் பெயருடன் யாராவது எழுத வந்திருந்தால் இன்று கள்ள மவுனம் காக்கும் இணையத்தில் உலவும் இந்த முற்போக்கு முகரைகள் என்ன கொதி கொதித்திருப்பார்கள்.?

ஆனால் ஆதிக்க சாதி வெறியை சுமந்து கொண்டு தொடர் எழுதும் பிரியாவை கண்டிப்பதில்முற்போக்காளர்கள்,பெண்ணியவாதிகள்,எழுத்தாளர்கள்,கருத்தாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர்,அப்படி அழைப்பதையே வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் விரும்புபவர்கள் தடித்த தோலுடன் அமைதி காக்கின்றனர்.

இணையத்தில் நிலவும் 'முற்போக்கு' இதுதான்.

 பிரியா நாயரோ தன் சாதியைப் பெருமிதமாக வெறியாகச் சுமந்து வருகிறார்.அந்தச் சாதி காலம் காலமாக அனைவரையும் ஒடுக்குவதையே நிகழ்ச்சி நிரலாய்க் கொண்டுள்ளது. நாம் உரத்தும் தெளிவாகவும் சொன்னபின்னும் நாயர் சாதி வெறிக்கு விகடன் ஒளிவட்டம் சூட்டுகிறது . நாம் தம்பி என்பது சாதி என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் தொடர்ந்து சாதிப்பெயருடன் தொடரை வெளியிடுகிறது.

குமுதம் இதழிலோ,டைம்பாஸ் இதழிலோ சாதி வெறிக்கு பரிவட்டம் சூட்டியிருந்தால் நாம் கேள்வி கேட்கப்போவதில்லை.

ஏனென்றால் கேவலமான குமுதம் இதழின் இன்னும் சீரழிந்த வடிவம் தான் டைம்பாஸ். குமுதத்தின் விற்று முதலில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தி அதனை நம் நிறுவனத்துக்கு அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விகடன் குழுமத்தால் ஆரம்பிக்கப்பட்டது தான் டைம்பாஸ்.

ஆனால் ஆனந்த விகடன் அப்படியல்ல.குமுதத்தின் வணிகத்தன்மையில் ஒரு பாதியைக் கொண்டிருந்தாலும்,இன்னொரு பகுதியோ சிற்றிதழ்களின் உள்ளடக்கம், தீவிரத்தன்மையைத் தன்னகத்தே கொண்டு 'மாறுபட்ட' இதழாகத் தன்னைக் காட்டிக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிக்கிறது. அப்படியான வாசகர்களை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. அதனால் தான் அது தற்பொழுது தாங்கி வரும் சாதி வெறியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரு பக்கம் சாதி வெறி எதிர்ப்பு குறித்த கட்டுரை. இன்னொரு  பக்கம் சாதி வெறிக்கு மேள தாளத்துடன் மேடை.

சாதி வெறிக்கு மேடை போடும் இவர்கள், ராமதாசைச் 'சாதி வெறியர்' என்று சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது ? சாதி தாஸ் என என்ன தகுதி இருக்கிறது..? அதற்கான அருகதை இவர்களுக்கு துளியாவது இருக்கிறதா..?

வன்னியர்,தேவர்,நாயர்,பேசாத பேச்செல்லாம்

 சாதி வெறியுடன் செயல்படும் பிரியா சேச்சி தான் தமிழ்நாட்டில் சாதி வெறியுடன் செயல்படுபவர்களை விமர்சிக்கிறார்.முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பாரும்மா..!



சாதி வெறியை ஊக்குவித்தது என்னும் கரும்புள்ளி விகடனுக்கு வரலாற்றில் உண்டு.

சாதி வெறியர் பிரியா ஆ.விகடனில் புரட்சிகரத் தொடர் எழுதியது போதாது என்று ,இப்பொழுது 'டாக்டர் விகடனுக்கு' பொறுப்பாசிரியராய் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் . தகவல்கள் வருகின்றன.

ஆ.விகடனுக்கும் ,டாக்டர் விகடனுக்கும் ரா.கண்ணன் தான் ஆசிரியர்.அவரது ஒப்புதலும் விரைவுபடுத்தலும் இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. இன்னும் சிறிது காலத்தில் விகடன் பொறுப்பாசிரியராய்க் கூட வரலாம். யார் கண்டது..?

ஆனாலும் நாம்

தொடர்ந்து பேசுவோம்.

Monday, 15 September 2014

சாதி வெறிக்கு சாமரம் வீசுகிறதா விகடன்..?


தமிழ் பத்திரிகை உலகில் கடந்த சில ஆண்டுகளாக பத்தி,கட்டுரை எழுதும் எழுத்தாளர்கள் அருகிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான எழுத்தாளர்களுக்குப் பஞ்சமா? இல்லை, அதைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை எழுத வைப்பது இவர்களுக்கு சிரமமாய் இருக்கிறதா?

 தெரியவில்லை.

 அதனால்தான் தங்களுக்குத் தெரிந்தவர்களையும், நெருக்கமான வட்டங்களில் இருப்பவர்களையும், முகநூலில் நாலு வரி ஸ்டேட்டஸ் எழுதி கவனிக்கும் படியான லைக் வாங்குபவர்களையும்,பேஸ்புக்கில் ஆதரவாக கமெண்ட் போடுபவர்களையும் எழுத்தாளர்களாக்குகிறார்கள். இதனை நாம் ‘குமுதம்‘,‘ஆனந்த விகடன்‘ போன்ற இதழ்களில் இருந்து புதிதாய் வந்துள்ள ‘தி இந்து‘ வரை உணர முடியும்.

இங்கு நாம் விவாதிக்க இருப்பது அப்படி ஒரு தொடர் குறித்து அல்ல. அப்படி ஒரு தொடரை எழுதுபவர் குறித்து.

 தமிழ்நாடு கேரளாவை விட கல்வி கற்கும் விகிதாச்சாரம் உட்பட ஒரு சில விஷயங்களில் பின் தங்கி இருக்கலாம். பல விஷயங்களில் கண்டிப்பாய் முன்னேறித்தான் இருக்கிறது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
 அதில் ஒன்று சாதி.

 சாதியை ஒழிப்பதிலும், சாதி வெறியை மட்டுப்படுத்துவதிலும் இன்னும் தமிழகம் பயணிக்க வேண்டிய தூரங்கள் எவ்வளவோ இருக்கலாம். ஊடகங்கள் உட்பட எல்லாத் துறைகளிலும் சாதி இங்கும் அடிநாதமாய் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.கேரளாவை விட இந்த மண் பதப்பட்டும், மக்கள் பண்பட்டும் முற்போக்காய்த்தான் இருக்கிறார்கள். கேரளாவை விடத் தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமண‌ங்கள் அதிகம் நடைபெறுகிறது என்பது புள்ளி விவரங்கள் காட்டும் கணக்கு.

 அதனால்தான் இங்கு சாதிச் சங்கங்கள் ஆரம்பித்த பெரும்பாலான தலைவர்கள் கூடத் தங்கள் பெயருக்குப் பின் சாதிப்பெயரைப் போடுவதில்லை. ஊடகத்தில் இருப்பவர்களுக்கு உள் மனதில் சாதி வெறியும், பற்றும் இருந்தாலும் வெளிப்படையாய் தான் இன்ன சாதி என்று பெருமை பீற்றித் திரிவதில்லை.

 இந்த சூழல் இருப்பதால்தான், தமிழ்நாட்டில் நடிக்க வந்த பார்வதி மேனன் என்னும் மலையாள நாயர் சாதிப்பெண் கூட “எனக்கு மேனன் சாதி வேண்டாம்,பார்வதி மட்டும் போதும்“ எனச் சொல்லும் சூழல் இங்கே இருக்கிறது.

 இந்தச் ‘சாதி ஒழிப்பைப்‘ பாராட்டி ஒரு மாதத்திற்கு முன் ஆனந்த விகடனில் செய்தி  வந்தது.



 திரைப்பட  நடிகைகள் அழகாகவும், திற‌மையாகவும் இருக்கிறார்களா ? என்றுதான் இங்கு எதிர்பார்ப்பார்களே தவிர, முற்போக்காய் இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. ஆனாலும் நாட்டுக்கேற்ப நடிகை பார்வதி தனது சாதியைத் துறந்தார்.

 இது ஆனந்த விகடனுக்கு மட்டுமல்ல, சாதிச் சமயமற்ற சமூகம் எதிர்பார்க்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எல்லோரும் இவரைப் பின்பற்றி ஜாதிப்பெயரை மாற்றுங்கள் என்று ஆனந்த விகடன் வேண்டுகோள் விடுத்தது.

 ஆனால் திரைப்பட நடிகை பார்வதி துற‌ந்த மேனன் சாதிப் பெயரை,  தன்னை முற்போக்காய் காட்டிக்கொள்ளும் ஒரு பெண் எழுத்தாளினி அதே கேரளாவில் இருந்து ... அதே சாதியை ஏந்தி இங்கே வந்து,  சாதிச் சமயமற்ற சமூகத்தை எதிர்பார்க்கும் விகடனில் கடைபரப்பியிருப்பது நமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ள‌து.

 பார்வதியைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல்,மற்ற நடிகைகள் தங்கள் ஜாதியைத் துறக்க வேண்டும் என வலியுறுத்திய ‘ஆனந்த விகடன்‘ வார  இதழ் இந்தப் பெண்ணின் சாதி வெறிக்கு, சாதிப் பெருமிதத்துக்குத் தளம் அமைத்து கொடுத்திருப்பது நமக்கு கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது.

 பிரியா தம்பி என்பவர் “பேசாத பேச்செல்லாம்“ என்னும் தொடரை விகடனில் எழுதி வருகிறார். “பெண்கள் உடை,வாழ்க்கை,பாலியல் சுதந்திர‌ம்,ஆண்-பெண் சமத்துவம் என பெண்கள் வெளிப்படுத்த முடியாத,பேச வாய்ப்பற்றவர்களின் குரலாக பிரியா தம்பியின் குரல் ஒலிக்கிறது“ என்று அவரைப் பாராட்டுபவர்களும் அவரது சிந்தையை ஒட்டியவர்களும் சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கமோ அதன் எதிர்வினை கடுமையாய் இருக்கிறது.

முதலில் பிரியா தம்பி யாரென்றால் ?

இவர் சுதந்திரத்துக்கு முந்தைய திருவாங்கூர் சமஸ்தானத்திலிருந்து தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்ட தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அதாவது பூர்வீக மலையாளி.

‘தமிழ் முரசு‘ மாலை நாளிதழில் சிறிது காலம் வேலை பார்த்தவர். சிறிய இடைவெளிக்குப் பின் ‘குமுதம் ரிப்போர்ட்டர்‘ வாரமிருமுறை இதழில் மிகச் சிறிது காலம் பணி புரிந்திருக்கிறார். (இரண்டு ஊடகங்களிலும் சேர்ந்து மொத்தம் 2 வருடங்கள் இருக்கலாம்.)

 முகநூலில் இவரது நிலைச் செய்திகளைத் தொகுத்து ஒரு நூல் ‘கயல்கவின் பதிப்பகம்‘ சார்பில் 'மின்னுவும் அம்மாவும்' என்னும் நூல் வெளிவந்திருக்கிறது. இப்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘தாயுமானவன்‘ என்னும் சீரியலுக்கு வசனம் எழுதுகிறார் என்பதையும் அறிகிறோம்.

இதுதான் அவரது பின்னணி.இவரைத்தான்  2 லட்சத்து சொச்சம் விற்கும் ஆனந்த விகடன் வாரந்தோறும் அவர் நினைத்த‌தை எல்லாம் எழுதித் தள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது.

பிரியா நாயர் எழுதும் டைரிக்குறிப்புகள்


 இவர் எழுதும் தொடரின்  முதல் அத்தியாயத்தில் ஒரு பத்தியை இங்கு நினைவு படுத்துகிறோம்.

//கோயில்களுக்குப் போய் வந்த அண்ணன்கள், நமக்குப் பாசிமாலை வாங்கி வருவது, நம் மேல் உள்ள அன்பால் என எவ்வளவு காலங்கள் பொய்யாக நம்பித் திரிந்திருக்கிறோம். நம் கழுத்தில் போட்ட அந்த மாலையை அந்த அண்ணன் தடவிப்பார்க்கும்போது எவ்வளவு அப்பாவியாகச் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தோம்.//

 இது ‘பேசாத பேச்செல்லாம்‘ முதல் வாரம்.

(குஷ்புவின் கருத்துக்கு கொதித்த தமிழ், திராவிடக் கலாச்சாரக் காவலர்கள் இந்த அபத்தத்துக்கு எதிராய் ஏன் கொதிக்கவில்லை ?  எவரும் விகடனில் பிரியா நாயர் தொடரைப் படிப்பதில்லையா? தெரியவில்லை. )

நாம் இப்பொழுது பிரியா தம்பி (நாயர் ) கட்டுரை குறித்து இங்கே விவாதிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்தக்கதை, சோகக்கதை. (கற்பனை,தனி மனித விருப்பு வெறுப்பு கணிசமான அளவு உண்டு.) அவர் தனது நாட்குறிப்பில் கூட அதை எழுதியிருக்கலாம். ஆனால் விகடனுக்கு எழுத்தாளர் பஞ்சம் இருப்பதால் நாம் அதைப்படித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

நாம் இங்கே பேச வருவது அவர் தன் பெயருடன் ஏந்தி வரும் ‘தம்பி‘ என்னும் சாதி வெறி குறித்தே.

 பிரியா என்பது அவரது பெற்றோர் இட்ட பெயர். 'தம்பி' என்பது?

 “பாலு என்பது பெயர். தேவர் என்பது நீங்க வாங்கின பட்டமா?“ என பாரதிராஜாவின் ‘வேதம் புதிது‘ படத்துப் பொடியன் சத்யராஜைக் கேட்ட மாதிரி....  கேட்கிறோம்.

“பிரியா என்பது பெயர். தம்பி என்பது நீங்க வாங்கின பட்டமா?”

 கேள்வியோடு பதிலையும் நாமே சொல்லிவிடுகிறோம்.

தம்பி என்பதுஅவரது நாயர் சாதி.



நாயர்,மேனன்,நம்பியார்,தம்பி, பணிக்கர் என நாயர் சாதியினர் பலவாறாக அழைக்கப்பட்டாலும் அவர்கள் நாயர் தான். பிரியா தன் பெயருடன் இணைத்திருப்பது சாதி. அதையே பெருமிதத்துடன் சேர்த்து  இந்தப் பெரியார் மண்ணில் வலம் வருகிறார்.



வாசிப்பவர்கள் அனைவருக்கும் புரியும் படியாக இங்குள்ள தமிழ்நாட்டு  சூழலுக்கு ஏற்ப சொல்லுகிறோம்.

தேவர் ஜாதியில் கள்ளர்,மறவர்,அகமுடையர் என மூன்று பிரிவுகள் இருக்கின்றன. பிரமலைக் கள்ளர்களும்,கொண்டையங்கோட்டை மறவர்களும் தங்கள் பெயருக்குப் பின் தேவர் என வைத்துக் கொள்கின்றனர். மதுரை,ராமநாதபுரத்தைச் சேர்ந்த‌ அகமுடையார்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘சேர்வை‘ என இணைப்பதையே விரும்புகின்றனர். அவர்கள் சேர்வை என அழைத்துக் கொண்டாலும்  தேவர் ஜாதியின் கீழ்தான் அடங்குவர்.

இன்னொரு எடுத்துக்காட்டு.

நாஞ்சில் வேளாளர்,சைவ வேளாளர்,துளுவ வேளாளர் என பல பிரிவுகளாய் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே வேளாளர்கள் தான்.

அதைப்போலதான் நாயர் பிரிவில் பணிக்கர்,மேனன்,நாயர்,தம்பி என பல பிரிவுகள் இருக்கின்றனர்.சிலர் நாயர் எனவும், சிலர் மேனன் எனவும்,சிலர் தம்பி எனவும் ஜாதியை வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அனைவரும் நாயர் தான். அந்த மரபுப்படி ப்ரியா நாயர் தம்பியை இணைத்து ப்ரியா தம்பியாகக் காட்சியளிக்கிறார்.

 அந்தப் பெயரில்தான் ஆனந்த விகடனில் தொடர் எழுதுகிறார். இதனை விகடன் நிர்வாகம் அனுமதிக்கிறது. அவரது எழுத்தைப் பாராட்டும் பெண்ணியவாதிகள், பின்-முன் நவீனத்துவாதிகள்..... மேலும் ஏனைய முற்போக்காளர்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பெரும்பாலானோர் இந்தச் சாதி வெறியை அறியாமலும்,சிலர் தெரிந்தும் கண்டுகொள்ளாமலும் கடந்து செல்கின்றனர்.
 ---

பிரியா நாயர் (தம்பி)

பிரியா தம்பியின் இச்செயலை நாம் கடுமையாய்க் கண்டிக்கிறோம். அவரது இந்தச் சாதி வெறி சாதியைப் பொதுவெளியில் வெளிப்படுத்த தயங்கும்  தமிழ் மண்ணில் ஒரு புதிய தொடக்கத்தை  ஊடக உலகில் உருவாக்குமோ என அஞ்சுகிறோம்.

 இதைத்தாண்டி இந்த பெயர் விஷயத்தில் நாம் பிரியா நாயரிடம் கேட்பதற்கு வேறு எதுவும் இல்லை. அவர் பேசும் சாதி ஒழிப்பு உள்ளிட்ட இதர முற்போக்கான விஷயங்களில் அவர் நேர்மையாய் இருக்கிறாரா ? என்பதே எமக்குத் தேவை. அவரது நண்பர்கள்,இதர முற்போக்காளர்கள் இதைக் கேள்விக்குட்படுத்த மாட்டார்கள்தான். இவர் ஒரு பெண் 'போராளி' என்பதாலும், அந்தப் 'போராளி' மலையாளியாக இருப்பதாலும் அவர்களும் அமைதி காப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

 ஆனால் ‘விகடன்‘ நிர்வாகத்திடம் நாம் கேள்வி கேட்க முடியும். 

ஏனென்றால் சமீப காலங்களில், தர்மபுரி இளவரசன்- திவ்யா காதல் உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சனையில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானதாகத்  தன்னை அது சித்தரித்துள்ளது.

தர்மபுரி இளவரசன்- திவ்யாவின் காதல் பிரச்சனையில் பிற‌  இதழ்கள் ஒரு வாரம் இளவரசன் தரப்புக்கு ஆதரவான செய்தியையோ,நேர்காணலையோ வெளியிட்டால்.... அடுத்த வாரம் திவ்யா  குடும்பத் தரப்பு ஆதரவான செய்தியை வெளியிட்டு ‘சமன்‘ செய்து விடுவார்கள். ஆனால் ஆனந்த விகடனோ இந்தச் சாதி விஷயத்தில் (இதில் மட்டும்) நிலைப்பாடு ஒன்றினை நிலையாக எடுத்து தன்னை ஜாதி வெறிக்கு எதிரானதாய்க் காட்டி வந்திருக்கிறது. அதனால்தான் கேட்கிறோம்.

 //தர்மபுரியில், மூன்று கிராமங்களை எரித்து, பல்லாயிரம் மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலமாக்கிய சாதி வெறி, திவ்யா-இளவரசன் காதலையும் வன்முறையாகப் பிரித்திருக்கிறது.//

 /சாதி வெறி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை, தன் சொந்த‌ அனுபவத்தில் திவ்யா புரிந்துகொண்டிருப்பார். இப்போது அவர் பேச வேண்டும். தன் அன்புக் கணவனை, பாசத்துக்குரிய அப்பாவைப் பறிகொடுத்த அநியாயத்துக்கு நீதி கேட்க வேண்டும். அப்படி திவ்யா துணிவுடன் களமிறங்கினால், அவருக்குப் பின்னால் இளைஞர் கூட்டம் திரண்டு நிற்கும்./

 -இவையெல்லாம் 17 ஜூலை 2013 இதழில் விகடன் மூத்த நிருபர் அருள் எழிலன் என்பவர் சுழற்றிய சாட்டை.

 இது மட்டுமல்லாது, சாதி வெறியை கடுமையாய் விமர்சித்து, “சாதி உங்களுக்கு என்ன செய்தது?“ என்னும் கட்டுரையை அதன் உதவிப் பொறுப்பாசிரியர்  எழுதி வெளியிட்டுள்ளது. ‘குமுதம்‘ போன்ற இதழ்களில் இதை நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆகவேதான் நாம் விகடனிடம் வினா எழுப்புகிறோம்.

நீங்கள் எழுதிய கருத்துக்கு நீங்கள் உண்மையாக இருங்கள்.

 இந்த ‘நாயர்‘ என்போர் யார்?

நாயர் என்பது ஒடுக்கப்பட்ட சாதியோ, காலமெல்லாம் இழிவை ஏந்தி வந்த சாதியோ அல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்ட ஈழவர், புலையர்,சாணார் ஆகியோருக்கு  அது  ஓர் ஆதிக்க சாதி.

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நம்பூதிரிகளுக்கு வேட்டை நாய்களாக  விளங்கிய சாதி. நம்பூதிரிகள்-நாயர் பிணைப்புக்கு என்ன காரணம் என்னும் 'களங்க‌' வரலாற்றை நாம் விளக்கிச் சொல்ல விரும்பவில்லை.நீங்களே தேடிக் கன்டுபிடியுங்கள். இணையத்தில் கூடக் கிடைக்கிறது.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நம்பூதிரிகளுக்கு நாயர் குடும்பங்களின் மீது அதிக ‘செல்வாக்கு‘ உண்டு.

அந்தச் ‘செல்வாக்கு‘ பெற்றெடுத்த கள்ளக்குழந்தைகளே இந்த நாயர் வகையறாக்கள். கேரளத்தின் ஈழவர்கள்,புலையர்களுக்கு எதிராய் இவர்கள் நிகழ்த்திய கொடூரங்களை யாராலும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்க முடியாது. குறிப்பாக புலையர் பிரிவு மக்களுக்கு தங்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதையும்,கல்வி நிலையங்களில் கல்வி அளிப்பதையும் இவர்கள் அடியோடு எதிர்த்தனர். சாதி எதிர்ப்புப் போராளி அய்யன்காளி மற்றும் நாராயண குருவின் போராட்டங்கள் இவர்களுக்கு எதிரானதே.

 மலையாள சினிமாவின் தந்தையான‌ டேனியல் தனது முதல் படத்தில் ‘சரோஜினி‘ என்ற நாயர் பெண்ணாக ஒரு புலையர் சாதியைச் சேர்ந்த பெண்ணை நடிக்க வைக்கிறார்.

 “தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் உயர் சாதிக்காரியாக வேடம் கட்டுவதைக் கூட‌ச் சகித்துக்கொள்ள முடியாது'' என்று நாயர் சமூகம் சீறுகிறது. திரைப்படக் காட்சியை நிறுத்தியதோடு ரோசியாக மாறிய ரோசம்மாவைக் கொல்லவும் அந்த நாயர் கும்பல் விரட்டுகிறது. கடைசி வரை அவர் தன் முகத்தை திரையில் பார்க்கவே இல்லை.

 வைக்கத்தில் தீண்டாமையை அமல்படுத்தியது, பெரியாரின் போராட்டத்திற்கு எதிர்வினையாற்றியது இந்த நாய்ப் படை. கேரளம் மட்டுமல்ல. நம் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும் தன் சாதிய வெறியை,ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடைக்கோடி மாவட்டமான குமரி மாவட்டத்தில் நடந்த தோள்சீலைப்போராட்டம் குறித்து சிலருக்குத் தெரிந்திருக்கும்.பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.இன்னும் சிலரோ மறந்திருக்கலாம். அப்பொழுது குமரி மாவட்டம் சென்னை மாகாணத்தில் இல்லை.திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது.



 குமரி மாவட்டத்தில் வாழும் நாடார்கள்(சாணார்கள்),புலையர்,ஈழவர் உள்ளிட்ட‌ இன்னும் சில ஜாதியினர் நாயர்கள்,நம்பூதிரிகளைக் காண நேர்ந்தால் பதினெட்டு எட்டுக்களுக்கு அப்பால் தள்ளி நிற்க வேண்டும். இதைவிடக்கொடுமை என்னவென்றால் பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும்....எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயாராக, பாட்டியாக, இருந்தாலும் "மார்பகத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்.மேலாடை அணியக் கூடாது"

 மார்பகம் அளவுக்கு ஏற்ற மாதிரி வரி; பெரிய மார்பகமென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டன.  நாயர் சாதி வெறி பிடித்த ராணி பார்வதிபாய் , நாடார் பெண்டிருக்கு தோள் சீலை அணிவதற்கு எந்தவித உரிமையும் இல்லை என்று மனு நீதி வழங்கினார். கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில்  இந்த மனுநீதி கொடுரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. புதுக்கடை, நட்டாலம்,களியக்காவிளை பகுதிகளில் இதன் பாதிப்பு அதிகளவில் இருந்தது. இந்தக் கொடுமையை எதிர்த்து அம்மக்கள் பல காலம் போராட வேண்டியிருந்தது. தோள் சீலைப் போராட்டம் என்று கொடும் நிகழ்வாய் வரலாற்றில்  பதிந்துள்ள இந்தக் கொடுமைக்கு எதிராய் அம்மக்கள் நீண்ட நெடிய போராட்டம் நடத்திய பின்தான் அவர்களுக்கு விடிவு கிடைத்தது. உலகில் எங்கும் இத்தகைய கொடுமைகளை நாம் கண்டிருக்க முடியாது.

நாகர்கோவிலுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கொட்டாரம் என்ற ஊரைத் தாண்டினால் இடைப்படும் தாலியறுத்தான் சந்தை என்ற பகுதி இன்றும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நாயர்கள் நடத்திய  கொடூரங்களுக்கு நினைவுச் சின்னம்.

இத்தகைய கொடுமையைச் செய்தது திருவாங்கூர் சமஸ்தான மன்னர்கள். அந்த‌ மன்னர் குடும்பத்தில்  திருமண உறவு கொண்டவர்கள் தான் இந்த தம்பி வகையறா நாயர்கள். அங்கு தாய் வழி உறவு நடைபெறுவதால் இவர்களால் ஆட்சி அதிகாரத்துக்கு வர இயலவில்லை. ஆனால் இவர்கள் மன்னரின் ஆட்சி பரிபாலனம் நடக்கும் இடம் மட்டுமல்ல  எங்கும் சுதந்திரமாகச் சென்று வர முடியும்.

 திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பிரியா தம்பி,ஆனந்த விகடனில் தமிழ்ப் பெண்களின் பாலியல் சுதந்திர‌ம் குறித்து அங்கலாய்க்கிறார். எந்த உடை பெண்களின் சுதந்திரம் என்று அறிவுரை சொல்கிறார். அவர்களுக்கு விருப்பமான உணவினைச் சாப்பிட முடியவில்லை என்று  ஏக்கம் கொள்கிறார். மணம் முடித்த கணவனுடன் பிடித்த மாதிரி உறவு கொள்ள இயலவில்லை என்று இந்தச் சமூகத்தைச் சபிக்கிறார். பிடித்த ஆணுடன் எல்லோரும் அங்கீகரிக்கும் வண்ணம் வாழ இயலவில்லையே என ஏக்கம் கொள்கிறார்.

உங்கள் வரையில்  இவை எல்லாம் சரி.

நமது கேள்வி... இத்தகைய பெண் போராளி சில காலங்களுக்கு முன் வரை, திருவாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த சில குறிப்பிட்ட சாதி மக்கள் மார்பில் துணி இருப்பதைக்கூட பொறுக்காமல் நம்பூதிரி கட்டளையிட்டதை சிரமேற்கொண்டு  முலை வரி விதித்த அந்த நாயர் சாதியை,வரி கொடுக்க இயலாத பெண்களின் மார்பை அறுத்தெறிந்த நாயர் சாதியை, நாஞ்சில் நாடு- வேணாடு பகுதிகளில் ஆதிக்க சாதி வெறி பிடித்தலைந்த அந்தச் சாதியை,கேரளத்தின் புலையர் பெண்க‌ள் கழுத்தில் தங்க நகை அணியும் உரிமையை மறுத்து அவர்களைக் கல் மாலை அணியக் கட்டாயப்படுத்திய நாயர் சாதியை  தன் பெயருக்குப் பின் எவ்வித உறுத்தலுமின்றி பெருமிதத்துடன் ஏந்தி இருப்பது எப்படி?

 சாதியைப் பெயரின் பின்னால் சுமந்து திரிவதை பெருமிதமாகக் கருதும் ஒரு நபர்அந்தச் சாதி இழைத்த வன்முறைகளுக்கு மறைமுகமாக அல்ல, நேரடியான ஓர்அங்கீகாரத்தையே வழங்குகிறார் என்பதுதான் உண்மை .

உழைக்கும் தமிழர்கள் 42  பேரை வெண்மணியில் எரித்தவனின் ஊரிலிருந்து வரும் ஒருவன் தன்னை ஒரு ‘நாயுடு‘ என இன்றும் நம்மிடம் நெஞ்சை நிமிர்த்துவானென்றால்....  பொதுவெளியில் அதனைப் பெருமையாகவும் பெருமிதமாகவும் பீற்றித் திரிவானென்றால்
அவன் எவ்வளவுதான் முற்போக்கு பேசினாலும்.... பொறம்போக்குதான்.

அப்படியானால்....

பிரியா நாயரை எந்தக் கணக்கில் சேர்க்கலாம்?

விகடன்தான் பதில் சொல்லவேண்டும்.

கல்வி-கலவி,உடை-உணவு என அனைத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என அங்கலாய்க்கும் பிரியா ஏந்தியிருக்கும் ‘தம்பி‘ ஜாதி பெண்களுக்கு எதிராக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சொல்லொண்ணாக் கொடுமையை இழைத்திருக்கையில் ..... அதைப் பெருமிதமாக, தனது அடையாளமாக கொள்ளும் இந்தப் பெண் போராளியின் பெண்ணியம் தொடர்பான எழுத்தில் துளியளவு நேர்மையாவது இருக்க வாய்ப்பிருக்கிறதா..?

( நாம் பிரியா நாயரின் சாதி பெருமிதத்தை அம்பலப்படுத்தியதனால்,இனி வரும் காலங்களில் தோள் சீலைப்போராட்டம் குறித்தும்,புலையர்,ஈழவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்ச்சிகரமாய் எழுதி தன் சுய சாதி எதிர்ப்பை அவர் பதிவு செய்யவும் வாய்ப்பு இருக்கிற‌து.)


இப்படிப் பாருங்கள்.

நாயர் சாதிக்கு முலை வரி செலுத்திய,செலுத்த மறுத்துப் போராடிய வம்சத்தில் வந்த ஒரு பெண்மணி ஆனந்த விகடன் வாங்குகிறார். அதில் பிரியா தம்பி(நாயர்) யின் பெயர் பார்த்தவுடன் அவரையும் அறியாத ஆச்சரியம் பிளஸ் சந்தேகம் பிளஸ் எச்சரிக்கையுடன் உடனே அந்தக் கட்டுரையைப் படிக்கிறார்.

அதில் பிரியா நாயர் பெண்களின் பாலியல் சமத்துவம் குறித்த ஆவேசமான எழுத்துக்களைப் படித்தார் என்றால்  அவர் விமர்சனம் எப்படி இருக்கும்..? அவரது வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வருமா என்ன..?


 பிரியா தம்பி தொடர் படிக்கும் குமரி மக்களும்,வரலாறு அறிந்தவர்களும் ஆனந்த விகடன் பத்திரிகையின் நேர்மையைப் பற்றி என்ன நினைப்பார்கள் ? அதன் ஆசிரியர் குழுவின் வரலாற்று அறிவு குறித்து எப்ப‌டி மதிப்பிடுவார்கள் ?

 வன்னிய,தேவர்,நாடார்,கவுண்டர் சாதி வெறியை விமர்சிக்கும் ஒரு முற்போக்கு எழுத்தாளர் தன் பெயருக்குப் பின் ஐயர் என்றோ,ஐயங்கார் என்றோ சேர்த்துக் கொண்டால் அந்த எழுத்தில் நம்பகத்தன்மையும் நேர்மையும்  எதும் துளியாவது இருக்குமா என்ன..?

இறுதியாக.... சில கேள்விகள். பிரியாவுக்கு அல்ல....அவருக்கு மாலை மரியாதையுடன் மேடை போட்டு, மைக்செட் கட்டிக் கொடுத்திருக்கும் ஆனந்த விகடன்  இதழுக்கு.

  1) பிரியா தம்பி தனது நாயர் சாதிப்பெயரைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பது போல......   பறையர்,படையாச்சி,பிள்ளை,ஐயர்,நாடார்,தேவர்,கவுண்டர் என‌ மற்றவர்களும் தனது பெயருடன் சாதியைச் சேர்த்துத் தொடர் எழுத  நீங்கள்  அனுமதிப்பீர்களா..?

 2) சாதிப்பெயரை நீக்குவது என்பது சில நேரங்களில் பத்திரிகை நிர்வாகத்தால் முடியாத ஒன்றாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக நம்பூதிரிபாடோ,ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தோ, மூப்பனாரோ  தனது பெயருக்குப் பின் சாதிப்பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதற்காய் அவர்கள் நேர்காணலையோ,கட்டுரையையோ விகடனால் நிராகரிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் நாடறிந்த தலைவர்களாய் இருந்தவர்கள். அந்தப் பெயரில்தான் நாட்டின் அனைத்து ஊடகங்களும் அவர்கள் கருத்தை வெளியிடுகின்றன. இந்த விஷயத்தில் விகடன் தன்னிச்சையாக ஒன்றும் செய்ய முடியாது. 

அப்படிச் செய்ய முடிந்தால் அங்கு பேட்டி கிடைக்காது.ஆனால் பிரியா தம்பி நாடறிந்த( அல்லது ஊரறிந்த) எழுத்தாளரோ, தலைவியோ அல்ல. எனவே ரிட்டன் காப்பி அதிகரித்துவிடும் என்ற கவலை விகடனுக்குத் தேவையில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற அறிவுக்கொழுந்துகளின் படைப்புகள் குறைந்தால்  விற்பனை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.

****

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

விகடன் உதவிப் பொறுப்பாசிரியர் பாரதி தம்பி என்பவர் எழுதிய சிறப்பான கட்டுரை இது.

 இதில் வன்னிய,தேவர்,ரெட்டியார்,நாடார் உட்பட அனைத்து சாதி வெறியையும்  அவர் கடுமையாய் விமர்சித்திருப்பார்.

 //சுபா என்ற 13 வயது அருந்ததியர் சிறுமி ஊர் வழியே சைக்கிள் ஓட்டிக்கொண்டுப் போனார். ‘சக்கிலிச்சி எங்க முன்னாடி சைக்கிள் ஓட்டுறியா?’ என்று சைக்கிளை எட்டி உதைத்தனர். அலங்கோலமாக ஆடை கலைந்து கீழே விழுந்தாள் அந்தச் சிறுமி. அழுது எழுந்து ஓடியவள் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு செத்துப்போனாள். //

 //இரண்டு வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள தெற்கு மணக்கரை கிராமத்தில், கோயில் திருவிழாவில் எழுந்த ஒரு சிறு பிரச்னையைச் சாக்காக வைத்து தலித்துகளின் குடியிருப்பைத் துவம்சம் செய்தது தேவர் தரப்பு. 20-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. //

//மதுராந்தகம் அருகே உள்ளது நுகும்பல் கிராமம். இதற்கு முன்பு பெரிய பிரச்னை எதுவும் இல்லாத ஊர். இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘வன்னியர் மண்ணில் அந்நியருக்கு இடம் இல்லை’ என்று ஒரு ஃப்ளெக்ஸ் போர்டு வைக்க… பிரச்சனை வெடித்தது. இறுதியில் 22 தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.//

 அவர் எழுதியது பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆதிக்க சாதி வன்மத்துக்கு எடுத்துக்காட்டு. மேற்கண்ட சம்பவத்தைப் பொறுத்தவரை கல்வி அறிவு இல்லாத மக்கள் எப்போதும் தங்கள் சாதி வெறியை வெளிப்படையாய் காட்டி விடுகின்றனர்.அவர்களால் அதனை மறைக்க முடியாது.அவர்கள் அறிவின் லட்சணம் அவ்வளவுதான்.

ஆனால் கற்றறிந்த ஒருவனின் அல்லது ஒருத்தியின் சாதி வெறி வேறுமாதிரி வெளிப்படும்...... பிரியா நாயரின் தம்பிப் பெருமிதம் போல்.

வன்னிய, தேவர்,நாடார்,கவுண்டர் சாதிக்கு எதிராய் முரசு கொட்டும் விகடன், தொலைதூரத்தில் இருக்கும் அகர்வால்,சோப்ரா,கபூர் சாதி நடிகைகளை சாதிப்பெயரை நீக்கச் சொல்லி அறைகூவல் விடுக்கும் விகடன் அதை விடப் பல மடங்கு கொடுமையானதும்,நம் மாநிலத்தின் வரலாற்றில் தன் நச்சுக் கரங்களை அழுத்தமாய் பதித்துள்ள நாயர் சாதி வெறிக்கு அறிவுத் தள‌த்தில்
 ரத்தினக் கம்பளம் விதிப்பது எந்த விதத்தில் சரி..?

விகடன் ஆத்மசோதனை செய்துகொள்ளட்டும்.

(தொடரில் எழுதப்படும் விஷயங்கள் குறித்து வாய்ப்பிருப்பின் பிறகொரு முறை விவாதிப்போம்.).

 நாம் ஆனந்த விகடனுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது தான்.

 தமிழ்நாட்டின் சாதி விஷயங்களே இன்னும் நிறையப்பேருக்குத் தெரியாத பொழுது மலையாள நாயர் சாதி குறித்தும் அதன் ஆதிக்கம் குறித்தும் பெரும்பாலோனோரைப்போல் உங்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.

தம்பி என்பது நாயர் சாதி என்பதும், வரலாறு நெடுக அது கேரளத்தின் ஒடுக்கப்ப‌ட்ட மக்களையும்,தமிழ்நாட்டின் பெண்களையும் அள‌வுக்கு இழிவாகவும் கொடுமையுடனும் நடத்தியிருக்கிற‌து என்பது குறித்தும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை தான்.

ஆனால் தெரிந்த பின்பும் அனுமதிப்பது மிகத்தவறான ஒன்று.

ஆகவே,தங்களது இதழில் வெளியாகும் ‘பேசாத பேச்செல்லாம்‘ தொடரை,பிரியா என்ற பெயரில், நாயர் சாதிப்பெயரை நீக்கி  இனி வரும் வாரங்களில் வெளியிடுவதுதான் நேர்மையானது.

உங்கள் வலியுறுத்தலையும் மீறி “சாதிப்பெயர்தான் எனக்கு முக்கியம்“ என்று நாயர் சேச்சி வலியுறுத்தி நின்றால் .....

 “சாதிப்பெருமிதமா ? விகடன் மூலம் பிரபல்யமா ?“ என்று நீங்கள் மீசை முறுக்கினால்... கண்டிப்பாக அந்த நிமிடமே ‘தம்பி‘ காணாமல் போய்விடுவார்.
சந்தேகமிருந்தால்  விகடன் இதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒடுக்குமுறைக்கு எதிராய் நிற்கப்போகிறீர்களா..? ஆதிக்க சாதிவெறிக்கு சாமரம் வீசப் போகின்றீர்களா..?

நல்லவற்றை பாராட்டுவதும், அல்லாதவற்றை விமர்சிப்பதும் தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல கலகக்குரலும் செய்யும் செயல்தான்.

உங்கள் முடிவு என்ன..? காத்திருக்கிறோம்.

தொடர்ச்சி.http://kalakakkural.blogspot.in/2014/10/blog-post.html


தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.thamizhman.in/ayyan-kali/

http://www.nairmatrimony.com/matrimonials/Thampi-Matrimonials/

http://www.religion-online.org/showarticle.asp?title=1119



http://bala-bharathi.blogspot.in/2012/09/blog-post_15.html

http://en.wikipedia.org/wiki/Thampi_and_Thankachi

http://bharathithambi.com/?p=435

பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட 'பண்பாட்டு வேர்களைத் தேடி' நூல்

Sunday, 16 February 2014

ஜூனியர் விகடன்-கோயபல்சின் நவீன வடிவம்...!


கோயபல்ஸ்

கோயபல்ஸ் செத்துப் போனான் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இன்றும் நவீன வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது மறுக்கவோ மறைக்கவோ இயலாத நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஹிட்லரின் வடிவில் ராஜபக்சேவும் மோடியும் இருக்கும் பொழுது, ஹிட்லரின் கொள்கைப்பரப்புச் செயலாளராய் இருந்த கோயபல்சின் வடிவில் ஒரு ஜந்து இருக்காதா என்ன..?

இருக்கிற‌து.அது தான் ஜூனியர் விகடன்.

புலனாய்வு இதழ்கள் என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும், நிறுவனத்தின் அல்லது தங்கள் சுயலாபத்திற்காகவும் எழுதுவது தான் இங்கு வாராந்திர புலனாய்வு பத்திரிகை உலகில் எப்பொழுதும் நடக்கிறது.

ஆட்சியர்கள் செய்யும் தவறுகளையோ ஊழல்களையோ,அரசியல் தரகுகளையோ இவர்கள் ஒருபொழுதும் அம்பலப்படுத்தியது கிடையாது. அதை விடுத்து இவர்கள் எழுதுவதெல்லாம் பெரும்பாலும் கிசுகிசுக்கள்.அதுவும் பெரும்பாலும் பலித்ததும் கிடையாது.

இவர்கள் சொல்லாத சம்பவங்கள்  நடந்தது என்றால் அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் கிடையாது, சொன்ன‌தற்கு எதிர்மாறாய் நடந்து விட்டால் அது குறித்து அசிங்கப்ப‌டுவதும் கிடையாது. அதே சமயம் அத்தி பூத்தாற் போல், காக்கா உட்காரப் பனம்பழம் விழுவது போல ஏதாவது நடந்து விட்டால் அதனை ஊரறிய வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்கள் திறமையைத் தாங்களே பாராட்டிக் கொள்ளக் கூச்சப்படுவதும் கிடையாது.

ஜூனியர் விகடனின் புரட்டு கொஞ்சம் வார்த்தை ஜாலங்களோடு வரும்.மற்றவர்கள் எளிதில் அம்பலப்படும்படி வருவார்கள்.மற்ற‌படி ஜூனியர் விகடன்,நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர்,தமிழக அரசியல் அனைவரும் ஒன்று தான்.

ஆனால் சமீப காலமாய் ஜூனியர் விகடனின் பொய்யும் புரட்டும் எல்லைமீறி கோயபல்சோடு போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது. நடைபெற  இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் ஒவ்வொரு கட்சிகளையும் அணி சேர்ப்பதற்கும்,அவர்களுக்குள் சீட்டைப் பிரிப்பதற்கும்,அவர்களுடன் அணி சேருபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று பிம்பத்தைக் கட்டி எழுப்புவதற்கும்,அதற்கு ஒத்துப் போகாதவர்களை இழிப்பதற்கும் பழிப்பதற்கும்,ஆதரிப்பவர்களை பக்கம் பக்கமாய் உயர்த்தி எழுதுவதற்கும் இவர்கள் செய்யும் வேலையானது , இதே வேலையைச் செய்யும் புரோக்கர் மணியனின் வேலையை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல.பா.ஜ.க.கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டும் தான் இன்னும் விகடன் அலுவலகத்தில் நடக்க வில்லை.மற்ற‌ படி எல்லா வேலைகளையும் ஜூனியர் விகடன் செய்தாகி விட்டது.

ஒவ்வொரு இதழையும் படித்தால் இவர்கள் சீனிவாசனிடம் சம்பளம் வாங்குகிறார்களா இல்லை மோடியிடம் சம்பளம் வாங்குகிறார்களா என்ற அளவுக்கு ஆத்திரம் வருகிறது.

கடந்த 2 மாதத்தில் விஜயகாந்தின் தே.மு.தி.கழகத்தை பா.ஜ.க.கூட்டணியில் இணைப்பது தொடர்பாக‌ ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்திகளை மட்டும் கீழே தந்துள்ளோம்.இதில் சில விடுப‌ட்டுப் போயிருக்கலாம்.மேலும் அதற்கு முந்தைய இதழ்களில் வெளியானவற்றை எழுதிப் பிரசுரிக்க‌ எமக்கும், படிக்க உங்களுக்கும் நேரம் இல்லை.

இந்த இரண்டு மாத இதழ்களிலேயே விஜயகாந்தை கூட்டணிக்குத் தள்ளிக் கொண்டு வருவதற்காக எத்தனை எத்தனை உருவாக்கப்பட்ட செய்திகள். எத்தனை இட்டுக்கட்டல்கள், எத்தனை பிளாக்மெயில்கள், எத்தனை கெஞ்சல்கள். உருவாக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் என பல பக்கங்களுக்கு கழுகார் குரல்களாக,மணியன் பேட்டியாக,பெட்டிச் செய்திகளாக வெளிவந்துள்ளன.

பொய்யையும் புரட்டையும் உள் நோக்கத்துடன் எழுதினால் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முட்டாள் வாசகன் இருக்கிறான்,அவன் காசில் மஞ்சள் பிழைப்பை நடத்தலாம் என்ற நம்பிக்கையிலும், தவறான செய்தி வெளியிட்டதனால் இதுவரை எந்த கேடுகெட்ட பத்திரிகை அலுவலகத்திற்கும் வந்து வாசகன் கேள்வி கேட்ட‌தில்லை என்ற அசட்டுத் தைரியத்திலும்  உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எழுதப்பட்டவை தான் இவை.

வேறு வழியில்லை.கொஞ்சம் கனத்த மனத்துடன் திரும்ப ஒரு முறை பார்த்து விடுங்கள்.





//'பி.ஜே.பி. என்ன நினைக்கிறதாம்?''

''மற்ற கட்சிகளைவிட ஒன்றிரண்டு சீட்கள் தே.மு.தி.க-வுக்கு கொடுக்கலாம் என்பதே பி.ஜே.பி-யின் திட்டமாம். அவர்கள் இந்தக் கட்சிகளை தங்கள் அணிக்கு முதலில் கொண்டுவந்துவிட்டு, அப்புறமாக மற்றதைப் பேசலாம் என்று பார்க்கிறார்கள். விஜயகாந்த் காலதாமதம் செய்வதாக அவர்களுக்கு வருத்தம் இருக்கிறது.''

''தன்னை வந்து பி.ஜே.பி. பிரதிநிதிகள் சந்திக்கவில்லை என்று விஜயகாந்த் சொல்வதாக சொல்கிறீரே?''

''பி.ஜே.பி., விஜயகாந்த்தை கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்றே பார்க்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால் இது கண்ணாமூச்சி ஆட்டம்தான். 'விஜயகாந்த் டெல்லி வந்து ராஜ்நாத் சிங்கைப் பார்க்க வேண்டும்’ என்று அந்தக் கட்சி நினைக்கிறது. ஆனால், தன்னை வந்து பி.ஜே.பி-யினர் பார்க்கட்டும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். இப்படித்தான் ம.தி.மு.க. விஷயத்திலும் நடந்தது. வைகோவை டெல்லி வந்து ராஜ்நாத் சிங்கை சந்திக்கச் சொன்னார்கள் பி.ஜே.பி-யினர். 'உங்கள் கட்சியின் முக்கியப் பிரமுகர் என்னை வந்து சந்தியுங்கள். அவரிடம் சில விஷயங்களைப் பேசி தெளிவுபடுத்திவிட்டு அப்புறமாக டெல்லி வருவேன்’ என்றாராம் வைகோ. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ், மோகன்ராஜலு ஆகிய இருவரும் வைகோவை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார்கள். அதன் பிறகுதான் வைகோ டெல்லி போனார். ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அந்த அடிப்படையில் விரைவில், விஜயகாந்த்தை முரளிதர்ராவ் சந்திப்பார். ஜனவரி, பிப்ரவரி என்று விஜயகாந்த் இழுப்பதுதான் அவர்களுக்கு பிடிக்கவில்லையாம்!''//

ஜனவரி 1-1-2014 தேதியிட்ட இதழ்

 
//பி.ஜே.பி. கூட்டணி இப்போது​தான் ஓரளவு வடிவம் கொடுக்க ஆரம்பித்​துள்ளது!'' என்று காகிதங்களைப் பிரித்தபடி பேச ஆரம்பித்தார் கழுகார்.

''பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இணையும் என்று ஆரம்பத்தில் இருந்து நான் சொல்லி வந்தேன். இதற்காக ஆரம்ப கட்ட வேலைகளை தமிழருவி மணியன் பார்த்தார். மூன்று கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்து தனித்தனியாக ஒப்புதல் வாங்கினார். வைகோவை  பலமுறை பார்த்தார். விஜயகாந்தை இரண்டு முறையும் ராமதாஸை இரண்டு முறையும் சந்தித்தார். இதன் அடுத்த கட்டமாக தமிழக பி.ஜே.பி. பொறுப்பாளர் முரளிதர்ராவ், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜலு ஆகியோர் வைகோவையும் ராமதாஸையும் சந்தித்தனர். மூன்றாவது கட்டமாக டெல்லி சென்று ராஜ்நாத் சிங்கை வைகோவும் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக சந்தித்தார்கள்...''

''தங்களை பி.ஜே.பி. பிரதிநிதிகள் யாரும் வந்து இதுவரை சந்திக்கவில்லை என்று கடந்த வாரத்தில் சொல்லியிருந்தீரே?''

''அதைத்தான் சொல்ல வருகிறேன். அவசரம் வேண்டாம்!

இப்படி ம.தி.மு.க-வும் பா.ம.க-வும், கூட்டணிக்குள் வருவதற்கு மனதளவில் தயார் ஆன நிலையில் விஜயகாந்த் பக்கமாக தனது பார்வையை பி.ஜே.பி. திருப்பியது. விஜயகாந்தை சந்திக்க முரளிதர்ராவ் குரூப் முயற்சிகளை மேற்கொண்டது. 'இதற்குத்தானே காத்திருந்தோம்’ என்பது மாதிரி விஜயகாந்த் வீட்டில் இருந்து பச்சைக்கொடி காட்ட... கடந்த வெள்ளிக்கிழமை மாலையில், அந்த சந்திப்பும் நடந்துவிட்டது!''

''அப்படியா?''

''ஆமாம்! ​விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் அந்த தரப்பில் இருந்துள்ளனர். முரளிதர்ராவ் தன்னுடைய குழுவுடன் சென்றுள்ளார். 'இரண்டு தரப்பும் மனப்பூர்வமாகப் பேசினார்கள். இந்த அணியில் இணைவது சம்பந்தமாக விஜயகாந்துக்கு எந்த மனமாறுபாடும் இல்லை. அவர் சகஜமாகத்தான் பேசினார். தான் கேட்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்​தஸ்து தே.மு.தி.க-வுக்கு இருப்பதால், கூட்டணியிலும் கூடுதலான இடங்களை எங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார். இன்னும் பல கட்சிகள் வர இருப்பதால் அதனையும் அனுசரித்து உங்களுக்கான இடங்கள் தரப்படும் என்று பி.ஜே.பி-யினர் சொன்னார்கள். இது மோடியை பிரதமர் ஆக்கும் கூட்டணி; அதனால் நமக்குள் எந்த பேதமும் ஏற்படக் கூடாது என்று பி.ஜே.பி. தரப்பு கூறியது. டெல்லிக்கு வந்து ராஜ்நாத் சிங்கை விஜயகாந்த் சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. தொகுதிகளின் எண்ணிக்கை, என்னென்ன தொகுதிகள் என்று ஓரளவு முடிவான பிறகு சந்திப்பதே சரியானது என்று விஜயகாந்த் சொல்லிவிட்டார். எனவே தொகுதிகளைப் பிரிக்கும் காரியங்கள் மும்முரமாகத் தொடங்கிவிட்டன’ என்று சொல்கிறார்கள் இரண்டு தரப்பையும் அறிந்தவர்கள்!''

''அந்தளவுக்கு முன்னேறிவிட்டதா பேச்சுவார்த்தை?''

''ஆமாம்! இதே சந்தேகத்தை முதல் தடவை தன்னைச் சந்திக்க வந்தபோதே தமிழருவி மணியனிடம் விஜயகாந்த் கேட்டுவிட்டார். 'நாங்கள் கூட்டணிக்குள் வருவதை வைகோ விரும்புகிறாரா?’ என்று கேட்டார். 'அவரிடமும் சம்மதம் வாங்கிவிட்டுத்தான் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருகிறேன்’ என்று மணியன் சொன்னார். 'வைகோ என்னை விமர்சித்து இதுவரை பேசியதே இல்லை’ என்று அப்போது சொன்ன விஜயகாந்த், 'ஆனாலும், அனைவரையும்விட எங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் தேவை’ என்றார். 'நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பதால், அனைத்துக் கட்சிகளையும்விட ஒரு தொகுதியாவது உங்களுக்குக் கூடுதலாக வாங்கித் தருவது என்னுடைய பொறுப்பு’ என்று மணியன் சொன்னார். அந்த அடிப்படையில் மணியன் ஒரு ஃபார்முலாவை பி.ஜே.பி. தரப்புக்குச் சொன்னார். தே.மு.தி.க-வுக்கு 11 இடங்கள், பி.ஜே.பி. ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா ஒன்பது இடங்கள் என்று தமிழருவி சொல்லியிருக்கிறார். //

( 8 சதவிகிதம் ஓட்டு வைத்திருக்கும் தே.மு.தி.க.வுக்கு 11 இடமாம்.2 சதவிகித ஓட்டு வைத்திருக்கும் வைகோ கட்சிக்கு 9 இடமாம்.என்ன கொடுமை திருமா இது..? )

//தே.மு.தி.க. விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தயாரித்துவிட்டதாம். மத்திய சென்னை, திருநெல்வேலி, மதுரை, தேனி, சிவகங்கை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை அவர்கள் குறிவைத்துள்ளார்கள். இந்தப் பட்டியலை வைத்து பி.ஜே.பி. தலையை உருட்ட ஆரம்பித்துள்ளது. பி.ஜே.பி. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்துதான், ஜனவரி 5-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என்று விஜயகாந்த் அறிவித்தாராம். //

ஜனவரி 5,2014 தேதியிட்ட ஜூவி கழுகாரில்

செட்டப் கருத்துக் கணிப்பு


//விஜயகாந்த்தை பி.ஜே.பி. தலைவர்கள் மீண்டும் சந்தித்துள்ளார்களே?''

''கடந்த முறை நடந்த சந்திப்பு பற்றிச் சொன்னேன் அல்லவா? அப்போது பிரேமலதா மட்டும்தான் இருந்துள்ளார். இப்போது, விஜயகாந்த்தை மட்டும் சந்தித்துள்ளனர். அப் போது முரளிதர்ராவ் சென்றிருந்தார். இப்போது பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர் சென்றுள்ளார்கள். பி.ஜே.பி. வட்டாரத்தில் கேட்டால், 'புத்தாண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றோம்’ என்கிறார்கள்!''

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல மாட்டார்களா?''

''சும்மா பேச்சுக்காக அவர்கள் சொல்வதைச் சொன்னேன்! பி.ஜே.பி. தலைவர்கள் கடந்த 26-ம் தேதிதான் விஜயகாந்த் தரப்பைச் சந்தித்தார்கள். நான்கு நாட்கள் இடைவெளியில் மறுபடியும் சந்தித்துள்ளதற்கு ஒருவிதமான பயமும் காரணமாகச் சொல்லப்படுகிறது. 31-ம் தேதி மாலையில் விஜயகாந்த்தை ஜி.கே.வாசன் சந்தித்தார் அல்லவா? அதுதான் இவர்களது உள்காய்ச்சலுக்குக் காரணம். 'விஜயகாந்த்தை வாசன் சந்திக்கிறார் என்றால், காங்கிரஸ் கூட்டணிக்கு அவரைக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்கள். வாசன் சொல்வதை விஜயகாந்த்தால் உடனடியாக தட்ட முடியாது. எனவே, உடனடியாக விஜயகாந்த்தை சந்தித்தாக வேண்டும்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இந்த தகவலை சுதீஷ§க்கு சொல்லியிருக்கிறார்கள். அவர், விஜயகாந்த்திடம் கேட்டுள்ளார். 'சந்திக்கலாமே’ என்று விஜயகாந்த்தும் ஆர்வம் ஆகி உள்ளார். பி.ஜே.பி. தலைவர்களைச் சந்திப்பதை விஜயகாந்த் அதிகமாக விரும்பினாராம். அதனால்தான் இவர்கள் நேரம் கேட்டதுமே வரச் சொல்லிவிட்டார்!''

''என்ன பேசினார்களாம்?''

''பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகிய மூவருக்கும் தே.மு.தி.க. அலுவலகத்தில் வரவேற்பே பலமாக இருந்துள்ளது. வாசலில் நின்று சுதீஷ் இவர்களை அழைத்துச் சென்றுள்ளார். மேலே விஜயகாந்த் அறைக்குச் சென்றுள்ளார்கள். இவர்கள் மூவருக்கும் சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்தைச் சொல்லியிருக்கிறார். இவர்களும் கையோடு சால்வை எடுத்துச் சென்றுள்ளார்கள். அவர்களும் விஜயகாந்த்துக்கு சால்வை போட்டுள்ளார்கள். பி.ஜே.பி. வட்டாரம் இதனை 'நிச்சயதார்த்தம்’ என்று மகிழ்ச்சியுடன் சொல்ல ஆரம்பித்துள்ளது. பரஸ்பர வாழ்த்தைப் பரிமாறிக்கொண்ட பிறகு, 'நாடு முழுவதும் பி.ஜே.பி. பலமான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டோம். வலுவான கூட்டணியை உருவாக்கி வருகிறோம். இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க-வும் இடம்பெற வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம் மட்டுமல்ல... டெல்லி தலைமையின் ஆசையும் அதுதான்’ என்று பி.ஜே.பி. தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். 

அதை சிரித்துக்கொண்டே கேட்ட விஜயகாந்த், 'உடனடியாக நான் எதனையும் அறிவிக்க முடியாது. ஜனவரி 5-ம் தேதி கட்சியின் பொதுக்குழு வைத்துள்ளேன். அதில் அனைவர் கருத்தையும் கேட்கப்போகிறேன். அடுத்து கட்சியின் மாநாடு நடத்தப்போகிறேன். அதன் பிறகுதான் எந்த முடிவையும் அறிவிக்க முடியும்’ என்று சொன்னாராம் விஜயகாந்த். 

'உங்களது நல்ல முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 'தேர்தல் நாள் இன்னும் அறிவிக்கவில்லையே... அதற்குள் என்ன அவசரம்?’ என்று விஜயகாந்த் திருப்பிக் கேட்டுள்ளார். ஜி.கே.வாசன் சந்திப்பு முழுக்க முழுக்க பர்சனல் மேட்டர் என்று விஜயகாந்த் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால் திருப்தி அடைந்த பி.ஜே.பி-யினர் திரும்பிவிட்டார்களாம்!''

''ஜி.கே.வாசன், விஜயகாந்த் சந்திப்பு பற்றிச் சொல்லும்!''

மூப்பனார் மீது அதிகமான அன்பு கொண்டவர் விஜயகாந்த். அதே நட்பை ஜி.கே.வாசன் மீதும் காட்டுவாராம். இவரையும் 'ஐயா’ என்றே அழைக்கிறார் என்றால் பாரும்! சண்முக பாண்டியனை வாழ்த்திவிட்டு அரசியல் பக்கமாகப் பேச்சு திரும்பி உள்ளது. ஜி.கே.வாசனைப் பொறுத்தவரை, 'காங்கிரஸ், தே.மு.தி.க. கூட்டணி வந்தால் நல்லது’ என்று நினைக்கிறாராம். 'முன்பு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இருந்தது. இந்த அணிக்கு விஜயகாந்த்தும் வந்தால் அது பலமான அணியாக அமையும்’ என்று பல மாதங்களுக்கு முன்பு சொல்லி வந்தவர் ஜி.கே.வாசன். 'தி.மு.க-வை காங்கிரஸ் தலைமை தக்கவைக்க முயற்சிக்கவும் இல்லை. தி.மு.க-வும் அவசரப்பட்டு விலகிவிட்டது’ என்று நினைக்கிறாராம் வாசன். தன்னுடைய இந்தக் கருத்துக்களை எல்லாம் அவர் விஜயகாந்த்திடம் சொன்னதாகத் தெரிகிறது. 

'இனிமேல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி அமைந்தாலும் அது மரியாதையாக அமையாது. எனவே, தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் நல்லது. ஒத்த கருத்துள்ள இரண்டு கட்சிகளின் கூட்டணியாக இது அமையும். உங்களுக்கு சிறுபான்மையினர் ஆதரவு எப்போதும் உண்டு. அதனையும் இழக்கத் தேவையில்லை’ என்றெல்லாம் வாசன் சொல்லியிருக்கிறார். 

'காங்கிரஸ், தே.மு.தி.க. மட்டும் அமைப்பது வலுவான கூட்டணியாக அமையாது’ என்று விஜயகாந்த் நினைக்கிறாராம். நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுவதை உணராதவர் அல்ல விஜயகாந்த். நான்கு மாநிலத் தேர்தலுக்கு முன் விஜயகாந்த்துக்கு இருந்த மனநிலை வேறு. அதன் பிறகு இருக்கும் மனநிலை வேறு. நான்கு மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக கேப்டன் டி.வி. நிர்வாகியை அழைத்து, 'காங்கிரஸுக்கு எதிரான செய்திகளைப் போட வேண்டாம்’ என்று சொன்னவர்தான் விஜயகாந்த். ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேறு மாதிரி நினைக்கிறாராம். காங்கிரஸுடன் சேரும் மனநிலை அவருக்கு இல்லை என்றே சொல்கிறார்கள். அந்த மனோபாவத்துடன்தான் ஜி.கே.வாசனிடம் பேசினாராம்.''

''காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியுடன்​தான் ஜி.கே.வாசன் சந்தித்தாரா?''
''இவரது சந்திப்புக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வாசன் எடுத்த தனிப்பட்ட முயற்சி என்கிறார்கள்!''


ஜனவரி 8,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ் கழுகார்

//இப்போது தே.மு.தி.க-வுக்குத்தான் மவுசு கூடி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும் விஜயகாந்த் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பைத் தனது கட்சி பொதுக்குழுவில் இன்னும் கூட்டினார் விஜயகாந்த்.

அருண் சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. பேசும்போது, 'என்னுடைய தனிபட்ட விரும்பம் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைப்பது. அந்தக் கட்சிக்கு நல்ல மரியாதை இருக்கிறது. நம்மை அவர்கள் கூட்டணிக்கு வருமாறு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்று பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைந்தால், நாம் பெருமளவில் வெற்றி பெறுவோம். ஒருவேளை அவர்களுடன் ஒத்துவராத சூழ்நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம். தேர்தலில் வெற்றிதான் முக்கியம்’  என்று சொல்லியிருக்கிறார்.
விழுப்புரம் எல்.வெங்கடேசன் பேசும்போது, 'அகில இந்திய அளவில் பி.ஜே.பி-க்கு மரியாதை உள்ளது. நாம் அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் பெரிய வரவேற்பு கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்''//

ஜனவரி 12,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

தி.மு.க. கூட்டணியில் சேருவாரா... இல்லை, பி.ஜே.பி. அணியில் இணைவாரா?’ என்று விஜயகாந்த்தின் முடிவுக்காக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு. இப்படிப்பட்ட நிலையில் 'விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தோம். 'தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. பி.ஜே.பி. கூட்டணியில் சேர வேண்டும் என 26 சதவிகிதம் பேரும்,  தி.மு.க. கூட்டணியில் சேர வேண்டும் என்று 21 சதவிகிதம் பேரும் கருத்து சொல்லியிருந்தனர்.//

ஜனவரி 19,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

விஜயகாந்த் எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்ற கேள்விக்கு நேரடியான சர்வேயில் 'தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. ஆனால், ஆன்லைன் சர்வேயில் பி.ஜே.பி. கூட்டணி என 57 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

ஜனவரி 22,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்


அவர்கள் மனதுக்குள் ஒரு கணக்கைப் போட்டு முடித்துவிட்டார்கள். தே.மு.தி.க-வுக்கு 11 இடங்கள் தருவது. பி.ஜே.பி. 10 இடங்களில் போட்டியிடுவது. ம.தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் தலா 9 இடங்களை ஒதுக்குவது. இதுதான் பி.ஜே.பி-யின் கூட்டணிக் கணக்கு. மொத்தம் உள்ள 39 தொகுதிக்கான பங்கீடு இது. 'அனைத்துக் கட்சிகளையும்விட கூடுதல் தொகுதிகளில் நிற்க வேண்டும் என்பது விஜயகாந்த் கோரிக்கை. அதைச் செய்துவிட்டார்கள்.//

ஜனவரி 26,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

//பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்வது பற்றிய பேச்சுவார்த்தை பிரகாசம் அடைந்திருக்கிறது. 'கருணாநிதி - அழகிரி மோதல் நாடகம். இதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்று பிரேமலதா சொல்லியிருப்பது தி.மு.க. கூட்டணியின் கதவை சாத்துவதுபோல அமைந்திருக்கிறது. இதை வைத்துதான் பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். //

சேலம், ஆரணி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளைக் கேட்கிறது தே.மு.தி.க. இதில் கிருஷ்ணகிரி, சேலம், மயிலாடுதுறை தொகுதிகளில் பி.ஜே.பி. போட்டியிட விரும்புகிறது. பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் செல்வாக்கு படைத்த வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளைப் பிரச்னை இல்லாமல் பிரித்துக்கொள்வது பற்றிதான் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.''//

பிப்ரவரி 5,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்

விஜயகாந்த் எப்போதுதான் முடிவெடுப்பார்?''

''கடைசிவரைக்கும் இழுத்து இறுதியில் அறிவிப்பதுதான் விஜயகாந்த்தின் வழக்கம். 8 ஆம் தேதி நடக்கும் மோடியின் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையேற்ற தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் திட்டமிட்டார்கள். ஆனால், விஜயகாந்த் பிடிகொடுக்காததால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேடையேறுவது சந்தேகம்தான். மோடி கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக டைட் ஆக இருக்கும். மேடை ஏறுபவர்கள் பட்டியலை 10 நாட்களுக்கு முன்பே தர வேண்டும் என்று செக்யூரிட்டி ஆட்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால், தமிழக பி.ஜே.பி-யால் அதனைத் தர முடியவில்லை. அதனால் இப்போது நடக்க இருக்கும் மோடி கூட்டத்தில் விஜயகாந்த், ராமதாஸ் போன்றவர்கள் மேடையேற வாய்ப்பு இல்லை. இது தமிழக பி.ஜே.பி. தலைவர்களைக் கோபம் கொள்ள வைத்துள்ளது. 'இரண்டு நாட்களுக்குள் கூட்டணிக்கு வருகிறீர்களா, இல்லையா என்பதைச் சொல்லிவிடுங்கள்’ என்று அவர்கள் விஜயகாந்த்துக்கு சொல்லி அனுப்பிவிட்டார்கள். விஜயகாந்த் - பிரேமலதா திருமணநாள் வாழ்த்துச் சொன்னது முதல், சுதீஷ் டெல்லி போனது வரை அனைத்துமே பி.ஜேபி. தலைவர்களுக்கு தெரிந்தே நடந்துள்ளது!''

''அதன் பிறகும் எதற்காக இழுக்கிறாராம் விஜயகாந்த்?''



''நான் முன்பே சொல்லியிருந்தேன். '19 சீட் தருபவர்களோடுதான் கூட்டணி’ என்று நிபந்தனை போடுவதாக நான் சொல்லி 1.1.14 தேதியிட்ட இதழில் நீர் வெளியிட்டு இருந்தீர் அல்லவா? அதில் இருந்து இன்னும் குறையவில்லையாம் விஜயகாந்த். '19 சீட் கொடுத்தாக வேண்டும்’ என்று சொல்லிவருகிறார். பி.ஜே.பி. 11 தொகுதி தரலாம் என்று திட்டமிட்டு இருந்ததாம். கூடுதலாக 1 ராஜ்யசபா சீட் வேறு மாநிலத்தில் தருகிறோம் என்றார்களாம். ஆனால், 19-ல் இருந்து ஒரு சீட்கூட இதுவரை குறைக்கவில்லையாம் விஜயகாந்த். 'அவருக்கு 19 கொடுத்தால் ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தொகுதியே ஒதுக்க முடியாது. ஒருவேளை, அவர்கள் வேண்டாம்; தே.மு.தி.க-வும் பி.ஜே.பி-யும் மட்டும் போதும் என்று விஜயகாந்த் நினைக்கிறாரோ என்னவோ’ என்கிறார்கள் பி.ஜே.பி-யில்!''

''என்னதான் முடிவெடுப்பாராம் விஜயகாந்த்?''

''பி.ஜே.பி-யிடம் முடிந்தவரை பார்ப்பார். இல்லாவிட்டால் தனித்துப் போட்டி என்று போய்விடுவார் என்கிறார்கள்'' என்றபடி எழுந்த கழுகார்.

பிப்ரவரி 12,2014 தேதியிட்ட ஜூவி கழுகார்.
********

மணியனின் வார்த்தைகளில் சொல்லப்போனால் தரகரின் பணியைச் செய்துள்ளது.மாட்டினை விலை பேசி வாங்க,அதன் உரிமையாளரிடம் சென்று பேசி அவரது மனதைக் கரைப்பது போல ஜூனியர் விகடன் விஜயகாந்தை பா.ஜ.க.கூட்டணிக்கு வரவழைப்பதற்காக சாம,பேத‌,தான விஷயங்களைத் தனது எழுத்தில் காட்டியது.

இதன் மூலம் விஜயகாந்துக்கு மட்டுமல்ல உதிரியாய் இருந்த பா.ஜ.க.கட்சிக்கும் நல்ல விளம்பரம் தான். இவை அனைத்தையும்  காசு வாங்கி விளம்பரமாக மாற்றி வெளியிட்டிருந்தால் விகடன் நிறுவனத்துக்கு கோடிகளைத் தொட்டுக் கிட்டியிருக்கும் விளம்பரக் கட்டணம்.

(இதிலும் ஒரு சிக்கல் உள்ளது.குமுதம் ரிப்போர்ட்டர் மோடிக்கு மட்டுமல்ல,ஜெயலலிதாவுக்கும் சேர்த்து பி.ஆர்.ஓ.வேலை பார்த்தால்,ஜூனியர் விகடனோ மோடிக்கும் வைகோவுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.)

அன்றாட வரவு செலவு பார்ப்ப‌வன் சாதாரண‌ வியாபாரி.சீனிவாசன் தொழில் அதிபர் அல்லவா..! அதுவும் மூன்று தலைமுறையாய் தொழில் பார்க்கும் நிறுவனம் அல்லவா..? வருங்காலத்தில் கிட்டப் போகும் மிகப்பெரும் ஆதாயத்தை மனதில் இருத்தி தொழில் நடத்துகிறார். 

ஆனால் அத்தனையையும் விஜயகாந்த் பொய்யாக்கி விட்டார்.நாம் செருப்பால் அடிக்க முடியாததை தன் செய்கையால் நடத்திக் காட்டி விட்டார். விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஆரம்பத்தில் இருந்து ஜூனியர் விகடன் சொல்லி வந்திருக்கிறது .அங்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று போகிற போக்கில் கூடச் சொல்லவில்லை.முழுக்க முழுக்க வாய்ப்பில்லை என்றே மறுத்து வந்திருக்கிறது.ஆனால் கடந்த ஒருவார காலமாய் நிலைமைகள் முழுவதும் மாறியிருக்கின்றன.

இவர்கள் எழுதியதற்கு மாறாக காங்கிரஸ் கூட்டணியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.இந்த புலனாய்வுப் புலிகள் தங்கள் முகத்தை எங்கு வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தச் செய்திகளை கடந்த திங்கள் 10-02-2014 வெளிவந்த நாளிதழ்களில் இருந்தே அறியலாம்.

அது மட்டுமல்ல திங்கள் இரவு லே அவுட் முடித்து இதழ் முடித்து புதன் வெளிவந்த‌  (12-02-2014) நக்கீரன் வாரமிருமுறை இதழிலும்,திங்கள் காலை லே அவுட் முடித்து செவ்வாய்க்கிழமை
(11-02-2014)வெளிவந்த‌ குமுதம் ரிப்போர்ட்டரிலும் கூட செய்தி வந்திருக்கிறது.




மேலும் இந்தக் கூட்டணிக்காய் அல்லும் பகலும் தரகு வேலை பார்த்த தரகு மணியன் கூட,சீச்சீ இந்தப் பழம் புளிக்காது என்று விஜயகாந்தை தரகர் என்று திட்ட (10-02-2014) ஆரம்பித்து விட்டார்.




12-12-2014 தேதியிட்ட தினமலர்


பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்த மாநாட்டில் இல.கணேசன் கூட விஜய்காந்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.விஜயகாந்த் இனி இக்கூட்டணியில் வர வாய்ப்பில்லை என்று பா.ஜ.க.வின் பங்காளிகளான ரிப்போர்ட்டர் மற்றும் தினமலருக்கு மட்டுமல்ல,அரசியல் கத்துக்குட்டிகள், நம்ம ஊர் குப்பன் சுப்பன்களுக்கும் தெரிந்திருக்கிறது.


12-12-2014 புதன் கிழமை தேதியிட்ட தினமலர் கார்ட்டூன்


ஆனால்  சனிக்கிழமை வெளிவந்துள்ள (15-02-2014 )ஜூனியர் விகடன் கூச்சநாச்சமில்லாமல் இன்னும் என்ன எழுதுகிறது பாருங்கள்.( 
இதழ் 13 -02-2014 இரவு வடிவமைப்பு முடிக்கப்பட்டு அச்சுக்குப் போகும்.)
இவர்கள் நாட்டு நடப்பு எதையும் படிக்காமல் கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டு மனநோயாளிகள் போல தங்கள் விருப்பம் போல இன்னும் எழுதிக் கொண்டிருப்பது ஏன்.?



//விஜய்காந்த் மன்மோகனைச் சந்திப்பது முதலில் பாரதிய ஜனதா தலைமைக்குத் தான் தெரியுமாம்.அதைச் சொன்ன சதீஷ்,அரசியல் வேறு இது வேறு, இதைப் பார்த்து குழம்ப வேனாம் என்றும் பா.ஜ.க.கூட்டணியில் தான் விஜயகாந்த் இணைவார் என்றும் சொன்னாராம்.இதை கமலாலயத்தில் நம்பினார்களாம்.நம்மையும் நம்பச் சொல்கிறது....


(அதாவது எவனாவது நம்மை மீட்க வர மாட்டானா என்று நடுத்தெருவில் காத்துக்கிடக்கும் நம்மூர் காங்கிரஸ் காரனுக்கு கூட விஜயகாந்த் சந்திப்பது தெரியாதாம்.பிஜேபி காரனுக்குத் தெரியுமாம்.

14 ஆம் தேதி சந்திப்பு குறித்து 8 ஆம் தேதியே கமலாலயத்துக்குத் தெரிந்தால் அது ஏன் துப்புக்கெட்ட ஜூவி புலனாய்வு சிங்கங்களுக்குத் தெரியவில்லை.ஒரு வாரம் கழித்து எழுதுகிறது..

இந்தப்பொழப்புக்கு...)


கொஞ்சமாவது உண்மையை மட்டும் எழுதும் எண்ணம் இருந்தால் ஜூனியர் விகடன் என்ன எழுதியிருக்க வேண்டும்..?

சென்னை வந்த மோடியைச் சந்திக்காமல் டெல்லி சென்று மன்மோகன் சிங்கைச் சந்திக்க விஜயகாந்த் சென்றது ஏன்?

பா.ஜ.க.வுடன் நின்றால் தான் செல்லாக் காசாகி விடும் என்று தெரிந்து விஜயகாந்த் சென்றாரா அல்லது காங்கிரசுடன் சென்றால் இன்னும் அதிக பொற்காசுகள் கிடைக்கும் என்று தெரிந்து சென்றாரா என்று எழுதியிருக்க வேண்டும்.இன்னும் சொல்லப் போனால் இன்றளவும் பாரதிய ஜனதாவை விட மட்டுமல்ல வைகோ கட்சியை விடத் தமிழ்நாட்டில் காங்கிர‌ஸ் தான் செல்வாக்கான கட்சி.

விஜயகாந்த் மன்மோகன் சந்திப்பு குறித்த செய்தி வெளிவந்த பின் 2 இதழ்கள் ஜூவி (புதன்,சனிக்கிழமை) வெளிவந்துள்ளது.புதன்கிழமை வெளிவந்த இதழில் இச்செய்தியைத் தவிர்த்த ஜூவி,சனிக்கிழமை வெளிவந்த இதழில் இன்னும் பா.ஜ.க.கூட்டணிக்குத் தான் நடிகர் வருவார் என்று வலிந்து எழுதுகிறது.விஜயகாந்த அடித்த ஆப்பில் புலனாய்வுப் புலிகள் இன்னும் தெளியவில்லை போலும். 

இன்னும் விஜயகாந்த் பா.ஜ.க.கூட்டணிக்கு வர இருப்பதாக ஜூவி எழுதுகிறது.இல.கணேசனும்,தரகு மணியனும் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று சொன்ன பின்னும் இன்னும் ஜூவி மட்டும் கூச்சமில்லாமல் செய்தி வெளியிடுவது ஏன்..? 


*
இப்படிப் பாருங்கள்,விஜயகாந்த் டெல்லி சென்று மோடியைச் சந்திக்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஜூ.வி. எப்படியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கும்.

எந்த பிளைட்டில் போகிறார்.அவருக்கு எங்கு அறை புக் செய்யப்பட்டிருக்கிறது..? அவர் மச்சினன் எங்கே தங்குகிறார்.காலை உணவு எங்கே.? யார் யாரைச் சந்திக்கிறார்..? எந்தக் கோயிலில் சாமி கும்பிடுகிறார்?விஜயகாந்துடன் யார் யார் செல்கிறார்கள்..? என்றெல்லாம் எழுதி 

மோடி மந்திரம் பலித்தது...டெல்லியில் விஜயகாந்த் ..! பரபர ரிப்போர்ட்

என்றெல்லாம் அட்டைப்படக் கட்டுரை வைத்து நம்மை இம்சித்திருக்குமா இல்லையா..?

குறித்த 4 தொகுதிகள் யாருக்கு என்பதில் தான் சிக்கல் இருக்கிறதே தவிர அனைத்துத் தொகுதிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்ற வகையறாச் செய்திகளும் இடம் பெற்றிருக்கும்.

அப்ப‌டி நட‌க்காததால் பா.ஜ.க.கூட்டணியில் விஜயகாந்த் இருக்கிறார் என்ற அதீத கற்பிதத்தோடு இன்னும் ஜூவி ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் நமமையும் நம்பச் சொல்லுகிறார். 'கசப்பான' உண்மைகளை ஏற்றுக்கொள்ள மனம் இன்னும் பக்குவப்படவில்லை போலும்,


 ஜூ.வி. இப்படி எழுதுவதில், முதலாளியின் தனிப்பட்ட விருப்பத்தை மீறி ஜூ.வி.ஆசிரியரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இருக்கிறது எனவும் அறியலாம்.ஏனென்றால் இதே குழுமத்தில் இருந்து வரும் ஆனந்த விகடனில் வரும் அரசியல் கட்டுரைகள்,வெளிவரும்  பேட்டிகள்  இந்துத்துவ வெறியுடனும்,யாருக்கும் சொம்பு தூக்கியும் வருவதில்லை என்பதை அறியலாம்.

ஆனந்த‌ விகடனில்  முக்கியப் பொறுப்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள்  பாசிச இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் அதுதான் காரணம் என சிலர் நினைக்கலாம்.அவ்வாறு சொல்லப்படுவது ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அது மட்டுமே முழுக் காரணம் கிடையாது. ஏனென்றால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் அவசியம் ஆசிரியருக்கு கிடையாது. விகடன் ஆசிரியர் நினைத்தால் அவர்களை மீறித் தன்னுடைய விருப்பத்துடன் செயல்பட்டிருக்கலாம்.

இத்தனைக்கும் தன்னை பெரியாரிஸ்டாகவோ, கம்யூனிஸ்டாகவோ என்றும் விகடன் ஆசிரியர் சொல்லிக் கொண்டது இல்லை. சிலரைப் போல் விளம்பரத்திற்காகவும் அப்படிச் சொன்னது இல்லை. தன்னை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடுபவராகத் தான் வெளிப்படையாக‌ காட்டி வந்திருக்கிறார்.தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து அவருக்கு இருக்கும் புரிதலும் அக்கறையும் கூட மற்ற‌வர்களிடம் இல்லை. 

ஆக இந்துத்துவ பிரச்சாரம் ஆனந்த விகடனில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர் முக்கிய கார‌ணம் என்பதால் பாராட்டுக்குரியவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஜூ.வி. சொல்வது போல விஜயகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்கட்டும்,அல்லது பாரதிய ஜனதாக் கூட்டணியில்(!) நிற்கட்டும்.இப்பொழுதைய அரசியல் அகராதியில் எதுவும் நடக்கலாம்.ஆனால் வெறும் அரசியல் கிசுகிசு எழுதும் பத்திரிகை என்பதைத் தாண்டி உள் நோக்கத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடனும் பா.ஜ.க.வுக்கு நம்முடைய காசில்  தரகு வேலை பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.கோயபல்ஸ் உயிருடன் இருந்தால் இவர்களின் செயலைப் பார்த்து,நமக்கு இந்த அளவுக்குத் திற‌மை கைகூடவில்லையே என்று  கூச்சப்பட்டிருப்பான் என்பது உறுதி.