Monday 16 September 2013

தினமலர்,தினமணி வரிசையில் 'தி இந்து'...! வுண்ட் ரோடு மகா விஷ்ணு ஹிந்து ஆங்கில பத்திரிகை குழுமத்தில் இருந்து இன்று முதல் (16-09-2013) 'தி இந்து' வெளிவந்திருக்கிறது.44 பக்கங்கள் 4 ரூபாய்.

அதன் ஆங்கிலப் பெயரில் இருந்து,ஜூனியர் விகடன்,ஆனந்த விகடனின் நகலாக இருப்பது வரை விமர்சிக்க எண்ணற்ற செய்திகள் இருக்கிற‌து.

சிறு விமர்சனம் மட்டும் இன்று செய்கிறோம்.

முதல் பக்கத்தில் அதி முக்கியத்துவத்துடன் வெளிவந்த செய்தி இது தான்.
தமிழக சிறைகளில் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தப்படுவதோ கைதிகளிடமிருந்து செல்போன்,சிம்கார்டுகள் முதலானவை பறிமுதல் செய்யப்படுவதோ புதிதல்ல.எத்தனையோ முறை நடந்திருக்கிற‌து.நாளிதழ்களிலும் அது உரிய முறையில் அதற்கான செய்தி முக்கியத்துவத்துடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று 'தி இந்து' நாளிதழிலும் அப்படியான ஒரு செய்தி புகைப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஆனால் செய்தி என்பதைத் தாண்டி அதி முக்கியத்துவத்துடன் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு அருகில் இரண்டாவது தலைப்புச் செய்தி என்று கருதும் வண்ணம் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிறைத்துறை குறித்த ஒரு செய்தியை,44 பக்கங்களில் ஏதோ ஒரு பக்கத்தில் வெளியிட வேண்டிய அளவுக்கு செய்திக்கான த்குதி உள்ள ஒன்றை முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திக்கு நிகராக வெளியிட வேண்டிய அவசியம் என்ன..?

 ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய குற்றவாளி முருகன் தொடர்புடைய செய்தி என்பதாலும்,கோவை சிறையில் இருக்கும் இஸ்லாமியர் தொடர்புடைய செய்தி என்பதாலும் 'தி இந்து' நாளிதழின் ஆசிரியர் இலாகா  இச்செய்தியை வெளியிட்டுத் தன் வன்மத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்தி இருக்கிறது.

'தி இந்து' நிருபர் வ.செந்தில்குமார் இதனை ரிப்போர்ட் செய்திருக்கிறார்.

இன்னும் ஆராய்ந்தால் கீழ்க்கண்ட விஷயம் கூட நிருபருக்குக் கிடைத்திருக்கலாம்.

காஞ்சி சங்கரராமனை வரதராஜப்பெருமாள் கோவிலின் உள்ளேயே கொலை செய்த குற்றத்திற்காக அப்புவும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது,சிறையில் இருந்த படியே,அந்தக் கொலையில் நெம்பர் 1 அக்யூஸ்டான சுப்பிரமணி (ஜெயேந்திரன்) உடன் அதிக நேரம் செல்போனில் பேசினார்களா ?
அல்லது ரெண்டாவது அக்யூஸ்டான விஜயேந்திரனிடம் அதிக நேரம் பேசினார்களா என்பதுவும் அல்லது நெம்பர் ஒன் அக்யூஸ்ட்டை சகல மரியாதைகளுடன காரில் அழைத்து வந்த ஊடக முதலாளியுடன் அதிக நேரம் பேசினார்களா..?போன்ற விபரங்கள் கிடைத்திருக்கும்.

அல்லது தெரிந்திருந்தும் நிருபர் தன் வேலையைக் காப்பாற்றும் பொருட்டு எழுதாமல் விட்டு விட்டார் என்று கருத வேண்டியிருக்கிற‌து.அல்லது 'ரத்த' பாசத்தால் தி இந்து அதனை வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம்.

தினமலர்,தினமணி,தி இந்து போன்றவைகள்  ஒவ்வொன்றும் இனிமேல் போட்டி போட்டுக் கொண்டு விற்பனையைப் பெருக்குவதற்காக எந்தக் கேவலமான எல்லைக்கும் செல்லத் தயங்காது என்பதும் தெரிகிறது. 

Sunday 8 September 2013

கத்துக்குட்டி கவின்மலரின் பிழைப்பு வாதம்...!


கத்துக்குட்டியின் புகைப்படம் வெளியிட்டு அவருக்கு பப்ளிசிட்டி கொடுக்க விரும்ப வில்லை.

ம் அலுவலகத்திற்கு திடீரென்று வருகை தந்த கழுகார், ஒரு செய்தி சொல்கிறேன்,செய்தி பழையது என்று நினைக்காதீரும்.ஆனா இப்ப வரைக்கும் அப்டேட் இருக்கு என்றார்.

சொல்லும் என்றோம்.

"ஆனால் ஒரு நிபந்தனை.கடைசி வரைக்கும் குறுக்கே பேசக் கூடாது.யார் என்று பெயரையும் கேட்கக் கூடாது" என்றார்.

சரி என்று ஒப்புக் கொண்டு காதைக் கொடுத்தோம்.

இனி கழுகார் வார்த்தைகளில்...

'நாட்டில் நிறைய பேர் ஸ்டாலின்,மார்க்ஸ்,பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.நாம் இப்பொழுது பேசுவ‌து புரட்சியாளர் பெயரை வைத்துள்ள‌ ஒரு பத்திரிகையாளர் பற்றி.

இதில் சம்பந்தப் பட்ட பத்திரிகையாளர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு இவரது தந்தையார் ரஷ்யப் புரட்சியாளர் பெயரைப் பெருமையுடன் சூட்டினார்.(ஆனால் யார் நினைவாய்ப் பெயர் சூட்டப் பட்டதோ,அவர் புரட்சியாளர் கிடையாது,தீவிரவாதி என்று பத்திரிகையாளர் இப்பொழுது உளற ஆரம்பித்துள்ள‌து தனி செய்தி)

அவர் அண்ணா சாலை 'மலர்' நாளிதழிலும் அதன் பின் அம்பத்தூரில் இருந்து வெளிவரும் தினமும் ஒலிக்கும் 'மணி'யான நாளிதழிலும் வேலை பார்த்தார்.
அதற்குப் பின் அண்ணா சாலையில் இருந்து வார இதழ்,வாரமிருமுறை இதழ்,மாதமிருமுறை என பல இதழ்களை வெளியிட்டு வரும் பாரம்பரியமிக்க குழுமம் என்று சொல்லிக் கொள்ளும் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மகிழ்ச்சி கோமாளி வார இதழில் மூத்த நிருபராய் வேலைக்குச் சேர்ந்தார்.அவரை விருப்பப் பட்டு வேலைக்குச் சேர்த்தது அதன் ஆசிரியர் தான்.அப்பொழுது ஆசிரியராய் இருந்தவர் தான் இப்பொழுது அந்தப் பத்திரிகையின் வெளியீட்டாளரும் கூட.

இனி விஷயத்தைக் கேளும்.

இவர் அங்கு வேலையில் சேர்க்கப்பட்ட‌ பொழுது அந்த‌ இதழில் பணியாற்றிய மற்ற‌வர்களை ஒப்பிடும் பொழுது இவருக்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம் தான் கொடுக்கப்பட்டது.

அதைப் போல ஆசிரியரும் இவருக்கு அதிக முக்கியத்துவ‌ம் அளித்து வந்தார்.இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பேட்டியை இவர் நேரே சென்று எடுத்தது போல பில்ட் அப் கொடுத்த‌ பொழுதும் கண்டு கொள்ள‌வில்லை.

இந்த நிலையில்,கல்வி வியாபாரி,புதிய தலைமுறை தொலைக்காட்சியை அடுத்து இரண்டாவ‌தாக ஆரம்பித்த சேனலில் வேலைக்குச் சேர்ந்த அனைவருக்கும் நல்ல சம்பளம் கிடைக்கவே இவருக்கும் ஆசை துளிர் விட்டது.தானும் வேலைக்குச் சேர்ந்தால் என்னவென்று !

ஆகவே இவரும் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினார்.

விஜய் டிவியின் நீயா நானா? நிகழ்ச்சியைப் போல ஒரு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராய் பணியாற்ற அவர்களுக்கும் ஆள் தேவைப்பட்டது.

அதற்காய் கணிசமான‌ சம்பளத்தைக் கொடுக்கவும் ஒப்புக் கொண்டனர்.அது இவருக்குக் குறைவாகப் பட்டது.நாம் எவ்வளவு திறமைசாலி? நமக்கு இவ்வளவு சம்பளம் தானா ?என்று யோசித்தவர் அங்கு பேரம் பேசிக் கொண்டிருந்தார்.ஆனால் அவர்களோ இதுக்கு மேல சரி வராது என்று நினைத்து பதில் எதுவும் சொல்லவில்லை.

இப்படி வைத்துக் கொள்வோமே.//

கல்வி வியாபாரியின் நிர்வாகம் கொடுக்க ஒப்புக் கொண்ட சம்பளம் தோராயமாய் 60000 என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் இவர் இன்னும் கூடுதலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.ஆனால் கிடைக்கும் வாய்ப்பு குறைவாய் இருந்தது.

இந்த நிலையில் இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த இதழ் ஆசிரியருக்கு இவர் வேறு நிறுவனத்திற்கு வேலைக்குச் சேர முயற்சித்தது தெரிய வந்தது.அவர் பத்திரிகையாளரை அழைத்துப் பேசினார்.சம்பளம் உயர்த்தித் தருவதாக சொன்னார்.பத்திரிகையாளர் யோசித்தார்.

ஆசிரியர் உடனே அடுத்த ஒரு உத்தரவாதம் அளித்தார்.குழுமத்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வி..ன் இதழுக்கு பொறுப்பாசிரியர் பதவி மற்றும் சம்பள உயர்வு என்று இரண்டு உறுதிமொழிகள் அளித்தார்.
இது பத்திரிகையாள‌ருக்கு பிடித்திருந்தது,அல்லது பிடித்த மாதிரி நடித்தார்.

"சார் இப்ப சொல்வீங்க,அப்புறம் மேனேஜ்மெண்ட்ல லேட் பண்றாங்க அப்படின்னு என்னை காக்க வச்சுடுவீங்க சார்" என்று அடுத்த முள்ளை வீசினார்.

ஆசிரியர்,"நீங்க சரின்னு சொல்லுங்க,மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்,அதுக்குப் பிறகு நீங்க டெஸிஷன் எடுங்க" என்று சொன்னார்.

சமஸ்தானத்தின் பெயரில் பாதியைக் கொண்ட பத்திரிகையாளரும் சரி என்று சம்மதித்தார்.

ஆசிரியரும் சொன்னபடி ரெண்டு நாளில் மருத்துவ வி..ன் பொறுப்பாசிரியர் நியமன உத்தரவையும்,அதனுடன் கூடுதல் சம்பளத்தையும் நிர்ணயித்து முதலாளியின் ஒப்புதலுடன்  உத்தரவை வாங்கிக் கொடுத்தார்.

"அதுக்குப் பொறுப்பாசிரியர் ஆகிட்டாலும் இதுலயும் முன்பு போல எழுதிக்கிட்டேயிருங்க" என்றார்.

சரி என்று தலையாட்டினார்.இனி தான் அரசியல் ஆரம்பம்.....

கடிதத்தை வாங்கிய கையோடு ஏற்கனவே கல்வி வியாபாரியின் 'புது யுகம்' சேனலுடன் சம்பளம் பேசிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்,அங்கு சென்றார்,அவர்களிடம் விட்ட இடத்தில் இருந்து சம்பளத்தைப் பேரம் பேசத் தொடங்கினார். தான் ம.விகடன் பொறுப்பாசிரியராய் நியமிக்கப் பட்டிருப்பதாகவும்,சம்பளமும் முன்பை விட அதிகம் என்றும்,ஆகவே தான் கோரிய படி அதிக சம்பளம் கொடுத்தால் தான் தன்னால் வர முடியும் என்றும் பேரத்தை மீண்டும் ஆரம்பித்தார்.

கல்வி வியாபாரி அலுவலகத்தில் இருந்தவர்களும்,இவர் முன்பைப் போல தலைமை நிருபர் கிடையாது,ஒரு பத்திரிகையின் பொறுப்பாசிரியர்.பொறுப்பாசிரியரையே வேலைக்கு எடுக்கப் போகிறோம்.அதனால் இவருக்கு முன்பு அளித்த சம்பளத்தை விட அதிகச் சம்பளத்தைக் கொடுக்க நிர்வாகத்துடன் பேசிய பின் (ரூ.75000 என்று வைத்துக் கொள்வோம்) ஒப்புக் கொண்டது.

உடனே அவர்கள் கொடுத்த வேலை நியமன உத்தரவை வாங்கிக் கொண்டு அண்ணாசாலை கோமாளி அலுவலகத்திற்கு வந்தார்.தனது ராஜினாமா கடிதத்தை தாமதமின்றி சமர்ப்பித்தார்.

ஆசிரியருக்கு மிகுந்த அவமானமாகப் போய் விட்டது.

இவரைப் பணியில் தக்க வைக்க,ஒரே நாளில் புதிய பணி மற்றும் உயர்வு,சம்பள உயர்வை வாங்கித் தந்த ஆசிரியர் கடுப்பானார்.ஒரு நாளிதழில் பணியாற்றியவரை இங்கு அழைத்து வந்து அதன் பின் அவர் வெளியேற நினைக்கிறார் என்ற‌வுடன் தனது சக பத்திரிகையில் பொறுப்பாசிரியர் பதவியையும் ஒரே நாளில் வாங்கிக் கொடுத்த தனக்கு துரோகம் இழைத்து விட்டதாய் உணர்ந்தார். புதிய நிறுவனத்தில் தான் வேலைக்குச் சேரப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டால் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம்,ஆனால் தன்னைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி அவர் விரும்பிய சம்பளத்தை வாங்க உபயோகப் படுத்தியதாய் நினைத்தார்.

ஆசிரியர் விரும்பிய படி பொறுப்பாசிரியராய் நியமித்த நிர்வாகமும் ஆசிரியர் மீது வருத்தம் கொண்டது.தவறான நபருக்கு பரிந்துரை செய்து விட்டதாய் எண்ணியது.பத்திரிகையாளர் தனக்கு நல்ல பாடம் கற்பித்து விட்டதாய் ஆசிரியர் புலம்பினார்.

 ஆனால் நம்ம பத்திரிகையாளரோ எது குறித்தும் கவலைப் படவில்லை.வேலையை விட்டு விலகும் பொழுது தனது பிளாக்கில்  ஒரு பதிவு எழுதி அதில் ஆசிரியருக்கு சிறப்பாய் 'நன்றியும்' தெரிவித்திருந்தார்.ஆசிரியரை உபயோகப்படுத்திக் கொண்டு வேலையை விட்டு விலகினாலும்,அவ்வளவு பெரிய 'பரந்த'மனதின் ஒரு ஓரத்தில் தான் செய்தது தவறு என்று சின்னதாய்த் தோன்றியது.அதனால் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க முயற்சித்தார்.

இதில் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஊடகத்தில் இருப்பவர்களைப் பகைக்க கூடாது என்பதும் ஒரு பாலிசி.இன்றில்லா விட்டாலும் நாளை ஆசிரியர் இன்னொருமுறை தனக்கு உதவுவார்(!) என்ற ஒரு பிசினஸ் கணக்குத் தான்.

ஆசிரியருக்குத் தொடர்ச்சியாய் குறுஞ்செய்தி அனுப்பினார்.பதில் இல்லை.போனில் அழைத்தார் அதற்கும் பதில் இல்லை.மின்னஞ்சல் அனுப்பினார்,பதில் இல்லைஆசிரியர் இவரை மன்னிக்கவும் மறக்கவும் தயார் இல்லை.
இவரது நம்பரை தொலைபேசியில் பார்த்தாலே கடுப்பானார்.

அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்

கல்வி வியாபாரியின் சேனலில் கொஞ்ச நாள் வேலை பார்த்த பத்திரிகையாளரை அடுத்து ஒரு நிர்வாகம் அழைத்தது.

மவுண்ட் ரோடு ஆங்கில பத்திரிகை நிர்வாகம்,புதியதாய் தொடங்கிய தமிழ் பத்திரிகைக்கு ஆள் எடுத்தது.அங்கிருந்து பத்திரிகையாளருக்கு அழைப்பு வந்தது.

பழைய இடத்தை விட சம்பளம் மிக உயர்வு என்று சொல்லப்பட்டது.

உடனே யோசிக்காமல்,நம்ம பத்திரிகையாளர் அங்கு வேலைக்குச் சேர்ந்தார்.

இந்த நேரத்தில் அவருக்குத் தனது பழைய அண்ணா சாலை பத்திரிகை ஆசிரியரை காயப்படுத்தியது நினைவுக்கு வந்தது.அவரைச் சமாதானப் படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்ததாய் நினைத்து ஒரு செய்தியை அனுப்பினார்.

"சார்,உங்களின் ஆசிர்வாதத்தால் நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன்.நான் சமீபத்தில் காமதேனு நாளிதழில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன்.

இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால்,இந்த பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பு ஏற்கத் தகுதியான 3 பெயர்களை என்னுடைய கருத்தாக‌ நிர்வாகத்தில் கேட்டார்கள்.நான் சொன்ன ஒரே பெயர் உங்களின் பெயர் தான்.உங்களைத் தவிர தலைமை தாங்கும் தகுதி யாருக்கும் இல்லை என்று சொன்னேன்"என்ற ரீதியில் ஒரு செய்தியை அனுப்பி விட்டார்.

பத்திரிகையாளர் என்ன நினைத்தார் என்றால்,இதைப் பார்த்தவுடன் நம் பழைய ஆசிரியர் கூல் ஆகி விடுவார்,நாம் செய்தவற்றை மறந்து விடுவார்,நம்முடன் உறவைப் புதுப்பிப்பார் என்று நினைத்துச் செய்தார்.

ஆனால் இதைப் பார்த்த ஆசிரியர் முன்பை விட இன்னும் அதிகக் கடுப்பாகி விட்டார்.சுள்ளான்,'நான் இவனை வேலைக்குச் சேர்த்தேன்.ஆனா என்னை, இவன் எடிட்டருக்கு ரெகமண்ட் பண்றானா"? என்று உச்சபட்ச எரிச்சலில்,இனி எனக்கு எந்தச் செய்தியும் அனுப்பாதே என்று செய்தி அனுப்பித் துண்டித்து விட்டார் ஒரேயடியாக.

என்னடா இவ்வளவு நாள் பதில் எதுவும் போடாமல் இருந்தவரை இப்படி இன்னும் கடுப்பேத்தி விட்டோமே என்று நினைத்த பத்திரிகையாளர் அடுத்த சந்தர்ப்பத்திற்காய் காத்துக் கிடக்கிறார்.

இனி ஆண்டி கிளைமாக்ஸ்...

காமதேனுவின் தமிழ் நாளிதழுக்கு பழைய ஆசிரியரை நியமிப்பது தான் சரி என்று குறுஞ்செய்தியில் சொன்னாரல்லவா..//

பத்திரிகையாளரின் கெட்ட நேரம் மவுண்ட் ரோடு புதிய தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் பதவிக்கு அவர் முன்பு வேலை பார்த்த வேலை பார்த்த வாராந்திர பத்திரிகையின் பதிப்பாளரும்,அதன் பழைய ஆசிரியரைப் பிடிக்காதவருமான கலிங்க மன்னரின் பெயர் கொண்டவர் வந்து விட்டார்.

இவ்வளவு நேரம் கழுகார் சொன்ன செய்தியை எதுவுமே சொல்லாமல் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்த நாம் அதிர்ச்சி ஆகி விட்டோம்.

அய்யய்யோ,அப்புறம் என்னாச்சு,நம்ம கில்லாடி ரிப்போர்ட்டருக்கு வேலை போயிடுச்சா ? என்று அதிர்ச்சியில் கேட்டோம்.

கழுகார் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.போய்யா உன்னை மாதிரி பிழைக்கத் தெரியாத ஆளா அவரு ?ஜெகஜ்ஜாலக் கில்லாடிய்யா...சொந்த ஊரு  மன்னார்குடி வேற ! சொல்லியா கொடுக்கணும்...

அப்படியா எப்படித் தப்பிச்சார்..?

புதியதாய் வந்த மன்னர் பெயர் கொண்டவரிடம்,"சார் நீங்க தான் இந்தப் பத்திரிகைக்குத் தலைமை ஏற்கத் தகுதியான ஆளுன்னு எல்லோர் கிட்டயும் சொல்லிக் கிட்டிருந்தேன்.நான் சொன்ன மாதிரியே நீங்களும் வந்துட்டீங்க சார்,உங்களுக்கு உதவியா நான் எப்பவும் இருப்பேன் சார்" என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டு வாழ்த்துச் சொல்லித் தன் இடத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.அது மட்டுமல்லாது இன்று அங்கு வேலையில் சேர்பவர்கள் அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

நாம் ஆச்சரியத்தில் இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தோம்.

முதலாளிகளை விட 'ராஜதந்திரம்' மிக்கவர்கள் எல்லாம் இத்துறையில் இருப்பதையும் அவர்கள் நன்கு பிழைப்பதையும் நினைத்துக் கொண்டோம்.

இதைச் சொல்லிக் கிளம்பத் தயாரான கழுகாரை,நிறுத்தினோம்.

இந்தச் செய்தி சுவராசியமாய் இருக்கு.ஆனால் பதிவோட‌ தலைப்புக்குத் தோதா மேட்டர் இல்லையே   ! என்று இடை மறித்தோம்.

கத்துக்குட்டி மேட்டர் சொல்ற அளவுக்கு நம்ம லெவல் குறைந்து போகலை.வேணுமின்னா ஆபிஸ் பையனைக் கூப்பிட்டுக் கேளு.அவன் தான் இதைச் சொல்லத் தகுதியான ஆளு என்று சொல்லிக் கிளம்பினார்.

நாம் ஆபிஸ் பையனைப் பார்த்தோம்.இனி ஆபிஸ் பையன் எழுத்தில் இந்தப் பதிவின் இரண்டாம் பகுதி.
* * *

ழுகார் மேலே சொன்ன செய்தியானது, பத்திரிகை அலுவலகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை.ஒரு கில்லாடி பத்திரிகையாளர் நடந்து கொண்ட விதம் குறித்த தகவல்.இது செய்தியை வழங்குவதில் ஒரு வடிவம்.

சுருக்கமாகச் சொன்னால் அந்தச் செய்தியானது ஊடக அலுவலகத்தில் நடந்த ஒரு internal politics.

மேலும் இந்த செய்தி வடிவமும் ஒன்றும் புதிதல்ல.அனைத்துப் பத்திரிகைகளும் இது போன்ற செய்திகளை இப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குமுதம் ரிப்போர்ட்டரில் வம்பானந்தா ,நக்கீரனில் சங்கர்லால் ,தமிழக அரசியலில் அலெக்ஸ் பாண்டியன் ,ஜூனியர் விகடனில் கழுகார்,இந்தியா டுடேஇதழில் பூதக்கண்ணாடி,தினமலரில் டீக்கடை பெஞ்சு,தினமணியில் மெய்யாலுமா,தினகரனில் பீட்டர் மாமா,தின இதழில் சூப்பர் மேன் என்ற பெயரிலும் எழுதித் தள்ளி வருகிறார்கள்.
அதில் பாதிக்கும் மேல் அரசியல் உள்ளரங்கச் செய்திகள் தான்.அந்த மந்திரிக்கு பதவி போகப் போகுது,இவரைப் பார்த்து தலைவர் திட்டினாராம்,இவர் இந்த தொகுதி கேட்கிறார்,அவரை இவர் போட்டுக் கொடுத்துட்டார்,இந்த அலுவலகத்தில் இவருக்கும் அவருக்கும் சண்டை என்பன போன்றவை தான்.(இதில் குறிப்பிடத்தக்க அளவில் பொய்ச் செய்திகளும்,ஊகங்களின் அடிப்படையில் எழுதப்படுபவை தான். சமூகத்தைப் பாதிக்கும் ஊழல் போன்ற செய்திகளை மட்டுமே எழுதுவதில்லை.

இது உண்மையான ஊடகவியலாளர்களுக்குத் தெரியும்.ஆகவே உண்மையான‌ மாற்று ஊடகங்கள் ஊடகங்களில் நடக்கும் உள்ளரசியலை எழுதும் பொழுது அவர்களும் தவறாக நினைப்பதில்லை.செய்தி சரியா தவறா என்று தான் பார்ப்பார்கள்.

எழுதுவதற்கு மாற்று ஊடகங்களுக்கு உரிமை இருப்பது போல விமர்சனம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது.ஆனால் எதற்கு எழுத வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.?

என்னை எழுத நீ யார்..? அலுவலகத்தில் நடக்கும் உள்ளரசியலை எதற்கு எழுதுகின்றீர்கள் என்று 'வானாளவிய அதிகார'த்துடன் யாரும் வெளிப்படையாய் சலம்புவதில்லை.

ஆனால் ஐடி நிறுவனத்தில் தகுதிக்குறைவு என்ற‌ காரணத்தால் வெளியேற்றப்பட்டதால் வேறு வழியில்லாமல் பத்திரிகைத்துறைக்கு வந்தவர்களும்,இத்துறை குறித்து அடிப்படை கூடத் தெரியாதவர்களும், தான் இப்படி எழுதலாமா,அப்படி எழுதலாமா என்று சலம்புகிறார்கள்.

சமீபத்தில் அப்படி நடந்திருக்கிறது.

பத்திரிகை அலுவலகத்தில் நடக்கும் உள்ளரசியலை எப்படி எழுதலாம் என்று கவின்மலர் என்பவர் முகநூலில் எழுதியிருப்பதாக நண்பர் ஒருவர் செய்தி அனுப்பியுள்ளார்.

அதில் சவுக்கு இணையத்தில் எழுதிய ஒரு பதிவில் இடம்பெற்ற செய்தி குறித்தும்,கலகக்குரல் இணையத்தின் ஒரு தலைப்பட்சமான பார்வை குறித்தும் எழுதியிருக்கிறார்.கவின்மலர் என்பவரை அம்பலப்படுத்த வேண்டி இருப்பதால் இரண்டுக்கும் சேர்த்து இங்கு பதில் அளிக்கிறோம்.
ஊடகத்தில் நடக்கும் அரசியலை எழுத நீ யார்..? என்று கேட்கும் இவருக்கு நாம் மேலே சொன்ன பதிலே பொருந்தும். ஆனால் கத்துக்குட்டிகளுக்கு எப்படிச் சொன்னாலும் புரியாது என்பதால் புரிய வைக்க முயற்சிக்கிறோம்.அதே நேரம் எப்பொழுதும் கிசுகிசு எழுதுவதையே மாற்று ஊடகம் என்று நாம் ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும் அவரது கத்துக்குட்டித் தனமான கேள்விக்கு அவரே பதிலும் எழுதியிருக்கிறார்.

இதில் யாருக்கு ஆர்வம் ஊடகத்தில் பணியாற்றுபவர்களைத் தவிர யாருக்கு ஆர்வம்? //

என்றும் எழுதியிருக்கிறார்.(கடைசிக்கு முந்தைய வரி)

ஊடகத்தில் பணியாற்றுபவர்களின் ஆர்வம் இந்த லட்சணத்தில் இருக்க இவர் எதற்கு நிரம்பவும் கவலைப் படுகிறார்?

அவரது பதிவு கத்துக்குட்டித்தனமானது என்பது எளிதில் புரியும்.

தைத் தாண்டி இதில் இன்னொரு கோணமும் உள்ளது.கவின்மலர் என்பவர் இந்தியா டுடே தமிழ் இதழில் எழுதும் ஹோல்சேல் 'முற்போக்கு' பத்திரிகையாளர் என்று மட்டும் கருதக்கூடாது.

கவின்மலர் என்பவர் இந்தியா டுடேவில் அசோசியேட் காப்பி எடிட்டர் வேலை பார்க்கிறார்.-(இவர் இதற்குத் தகுதியானவரா என்பது வேறு விஷயம்.) காப்பி எடிட்டர் என்னும் வேலையின் தன்மை (இணைப்பு )என்னவென்றால் நிருபர்களின் பிரதிகளைச் செழுமைப்படுத்துவது.

இந்தியா டுடே தமிழ் வார இதழில் வெளிவருபனவற்றில் பெரும்பாலானவை அதன் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்ப‌டும்.அவை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்ற‌ம் செய்யப்படும்.அவ்வாறு மொழி மாற்றம் செய்த படைப்புகளைச் செழுமைப்படுத்துவது,மற்றும் தமிழில் எழுதும் நிருபர்களின் பதிவுகள் ஆகியவற்றை அதன் உள்ளடக்கம் மாறாமல் செழுமைப்படுத்துவது ஆகியவை தான் இதில் அடக்கம்.இது தான் இந்தியா டுடேயில் இவரது பணியின் தன்மை.அதற்குத்தான் மாதம் 40000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்.
நிருபர் பணிக்கும் அசோசியேட் காப்பி எடிட்டர் பணிக்கும் என்ன வித்தியாசம் என்னவென்றால்,நிருபர்,தலைமை நிருபர்,சிறப்பு நிருபர்,மூத்த நிருபர் போன்றவர்கள் அவர்கள் எழுதும் பதிவுகளுக்குத் தான் பொறுப்பாவார்கள்.அதைத் தாண்டி இத‌ழின் உள்ளடக்கத்திற்கு அவர்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள்.ஏனென்றால் பிற படைப்புகளை அவர்கள் முடிவு செய்வதில்லை.அதில் அவர்களின் பங்கும் எந்த அளவிலும் இல்லை.அதற்கு வாய்ப்பும் இல்லை.ஆகவே அவர்களைக் குற்றம் சுமத்த முடியாது.ஆசிரியர் இலாகா தான் அதனை முடிவு செய்யும்.

ஆனால் அசோசியே காப்பி எடிட்டர் பணி அப்படி இல்லை.
வினவு (இணைப்பு) தளத்தில் கவின்மலரைச் சரியாக விமர்சித்தபொழுதும் அதைத் திசைமாற்றி,நிருபரை எப்படி உள்ளடக்கத்திற்குப் பொறுப்பாகலாம் என்று ஒரு பதிலைக் கவின்மலர் சொல்லியிருந்தார் என்பதை நினைவு படுத்தலாம்.

ஆனால் 'அசோசியேட் காப்பி எடிட்டர்' பணியில் இருப்பவர் என்பவர் அதன் உள்ள‌டக்கத்தை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவர்.அவ்வாறு வெளியிடப்படும் பதிவுகள் அனைத்தையும் செழுமைப்படுத்தும் பணியில் இருப்பவர்.

வின்மலர் 'இந்தியாடுடே'வில் பார்க்கும் வேலையின் தன்மையைப் பார்த்த நாம்,அவர் முகநூலில் எழுதும் எழுத்துக்கு நேர்மையாய் உண்மையாய் இருக்கிறாரா என்று பார்ப்போம்.

எந்த அலுவலகத்தில் தான் பாலிடிக்ஸ் இல்லை.அதை ஏன் எழுத வேண்டும்../இவ்வாறு எழுதுவது மாற்று ஊடகம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு நேரும் அவமானம்.//

 மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா டுடே இதழ் ஆபாச,வக்கிரமான சர்வேக்கள் வெளியிடுவது வழக்கம்.தனிநபர் பாலியல் சார்ந்த தேர்வுகள்,விருப்பங்கள்,எதிர்பார்ப்புகள் என்று பரந்து விரியும் இந்த சர்வேயில் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்டவை என்பதைத் தாண்டி தனிநபர் அந்தரங்கத்தை அத்துமீறி நுழைந்து பார்த்து விற்பனைப் பொருளாக்கும் தரங்கெட்ட வணிக நோக்கம் என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை.

அதுவும் ஆபாச சர்வேக்கள் போன்ற விற்பனையை அதிகரிக்கும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த பக்கங்களைத் திருத்தும் மிகப்பெரிய பொறுப்பு கவின்மலர் போன்ற‌ அசோசியேட் காப்பி எடிட்டர்களிடம் தான் வழங்கப்படும்.

ஒவ்வொருவரின் படுக்கை அறைக்குள் நடக்கும் தனி நபர் சார்ந்த விஷயங்களை இப்படி இட்டுக்கட்டி எழுதுவதில்,அதனைத் திருத்துவதில் செழுமைப்படுத்துவதில் என்ன 'தொழில்'நேர்மை கவின்மலர்../இது சரியா கவின்மலர்..?

நீங்கள் வேலைக்குச் சேர்ந்த பின்பு இது போன்ற மூன்று வக்கிர சர்வேக்கள் இந்தியா டுடேயில் வெளிவந்திருக்கின்றன. 'அசோசியேட் காப்பி எடிட்டர்' என்ற முறையில்,அதனைச் செழுமைப்படுத்தியதில்,வாசகனை ஈர்க்கும் படி (!)எழுதியதில் உங்கள் பங்கும் கணிசமான அளவில் இருக்கிறது கவின்மலர்.

'இந்திய சிறு நகரங்களின் செக்ஸ் ரகசியங்கள்','ஸ்தன புராணம்' என்று ஒவ்வொருவரின் படுக்கை அறைக்குள் நுழைந்து துப்பறிந்தது போல இட்டுக் கட்டி வெளியிடப்படும் ஆபாச,அருவருக்கத்தக்க‌ கட்டுரைகளை அலுவலகத்தில் செழுமைப்படுத்தும்,வார்த்தைகளால் அழகுபடுத்தும் 'முற்போக்காள‌ர்' கவின்மலர்  கவின்மலர்,வெளியில் வந்து 'ஊடக உள்ளரசியலை' எப்படி எழுதலாம் என நீட்டி முழக்குகிறார்.

இந்த ஆபாச,அருவருக்கத்தக்க‌ சர்வேக்கள் குறித்து உங்கள் கருத்து என்ன../உங்களுக்கு உடன்பாடு உண்டா../உடன்பாடு இல்லை என்றால் உங்கள் எதிர்ப்பை அலுவலகத்தில் பதிவு செய்தீர்களா../அல்லது உங்களின் பிரியத்துக்குரிய போராளி உ.வாசுகியின் ஜனநாயக மாதர் சங்கத்தை வரவழைத்து அலுவலக வாசலில் அடையாள ஆர்ப்பாட்டம் செய்தீர்களா..?அல்லது இதுவரை நான் அந்த மாதிரி திருத்தியதோ,செழுமைப்படுத்தியதோ இல்லை என்று உங்களால் பகிரங்கமாய் அறிவிக்க முடியுமா..?அதுவும் வேண்டாம்.நான் பேசுகிற முற்போக்கை என் பணி இடத்தில் எதிர்பார்க்கத் தேவை இல்லை என்றாவது ஒரு நிலைச் செய்தி போட முடியுமா..?

அவ்வளவு ஏன்..?குறைந்தபட்சம் வேறு வழியில்லாமல் நிர்வாகத்துக்கு உங்களின் எதிர்ப்பை மறைமுகமாய்த் தெரிவிக்கும் பொருட்டு முகநூலில் சோகப்பாடல்களையாவது மொக்கையாகப் பகிர்ந்து கோண்டீர்களா..?

இது குறித்து நீங்கள் நேர்மை இருப்பின் பதில் சொல்ல வேண்டும்.ஏற்கன‌வே நாங்கள் உங்களை விமர்சித்த பொழுது ஓடி ஒளிந்து விட்டீர்களே அதைப்போல இப்பொழுதும் செய்யக் கூடாது.

சொல்லுங்கள் கவின்மலர்  .?.

கவின்மலர் தான் எழுதிய எழுத்துக்கு நேர்மையாய் இருந்தால் இப்படிப்பட்ட சர்வேக்களை 'இந்தியா டுடே' வெளியிடுவதைக் கண்டித்து அவர் இருக்கும் இடத்தில் இருந்தே பணியைத் தொடங்க வேண்டும்.அதை விடுத்து அலுவலகத்தில் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டு கொடுத்த வேலையைச் 'சிற‌ப்பாகச்' செய்து விட்டு அதற்கு நேர்மாறாய் இங்கு 'புரட்சி' பேசக் கூடாது.

அலுவலகத்தில் இட்டுக் கட்டப்பட்ட தனி நபர் அந்தரங்கம் தொடர்புடைய ஆபாச சர்வேக்களைத் திருத்துவது, முகநூலில் வந்து முற்போக்கு வியாபாரத்தை நிலை நிறுத்தும் வண்ணம்,ஊடக உள்ள‌ரசியலை எப்படி எழுதலாம்..?அது தவறல்லவா என்று வானத்துக்கும் பூமிக்கும் கொதிப்பது.

இது தான் நேர்மையா..?

அரிதாரம் எவ்வளவு தான் கலைந்து போனாலும் வலிய வலிய முற்போக்கு வண்ண‌த்தைப் பூசிக் கொண்டு உலாவரும் கவின்மலரே பதில் சொல்லுங்கள்.

நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள் என்பதும் கள்ள மவுன‌த்துடன் துடைத்துக் கொண்டு கடந்து செல்வீர்கள் என்பதும் இன்னும் ஒரு சில நாளில் வேறு ஒரு முகாந்திரமற்ற குற்ற‌ச்சாட்டை முற்போக்கு என்று நினைத்துக் கொண்டு போகிற போக்கில் எழுப்புவீர்கள் என்பதும் அதற்கு முகநூலில் 40 லைக்குகள் விழும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

ஏனென்றால் பத்திரிகைத்துறையில் கத்துக்குட்டியாக இருந்தாலும்,முற்போக்கு மார்க்கெட்டை நிலைநிறுத்துவதிலும் போராளி வேஷம் கட்டுவதிலும் நீங்கள் ஜெகஜ்ஜாலக் கில்லாடி என்பதும் ஊருக்குத் தெரியும்.


இனி கவின்மலர் கலகக்குரல் தளம் குறித்துக் கூறிய குற்றச் சாட்டுகள் குறித்துப் பார்ப்போம்.

நேர்மையின்மை,ஊருக்கு உபதேசம்,தகுதியின்மை,திறமையின்மை,லாபி,குறுக்கு வழிவிகடனை எழுதுகிறாயே குமுதத்தை ஏன் எழுதுவதில்லை என்பது அவரது கேள்வி.

இப்படி ஒரு கேள்வியை பொதுவெளியில் முற்போக்கு முலாம் பூசி கொண்ட கத்துக்குட்டியைத் தாண்டி வேறு ஒருவரால் கூட கேட்க முடியாது.

அதற்கும் பதில் அளிக்கிறோம்.

குமுதம் வார இதழ் 'தரம்' குறித்து ஊருக்கே தெரியும்.ஊர் உலகத்திற்கே தெரிந்த ஒரு விஷயத்தை எழுதுவதில்,விமர்சிப்பதில் என்ன பிரயோஜனம்..?அதில் மாற்று ஊடகங்களுக்கு என்ன வேலை..?

ஆனால் ஆனந்த விகடன் அப்படி அல்ல.அது தன்னை ஒரு முற்போக்கு பத்திரிகையாக ஒரு முகமூடியைக் கட்டமைத்துக் கொண்டுள்ளது.ஒவ்வொரு வாரமும் அப்படியான செய்திகளைத் தேடித் தேடி வெளியிடுகிறது.

அதனால் தான் தர்மபுரி இளவரசன்-திவ்யா காதல் பிரச்னை நடைபெற்ற காலத்தில் பெண்ணைப் போகப்பொருளாய் பார்ப்பது குறித்து உங்களைக் கொண்டு ஆறு பக்கத்துக்கு அனைவருக்கும் அறிவுரை சொல்லியது.

ஆனால் அறிவுரை சொல்லிய அடுத்த பக்கம் நயன்தாரா யாருக்கு ? என்று நடிகர்ஆர்யாவையும் அவரது தம்பியையும் பொது வெளியில் ஏலம் போட வைத்தது.

அறிவுரை சொல்லிய இன்னொரு புறம் டைம்பாஸில் வக்கிரத்தை கடை விரித்தது.அதைத் தான் நாங்கள் கேள்வி கேட்டோம்.

இது போன்று முற்போக்கை கடைச் சரக்காக்கி விலைக்கு விற்கும் பத்திரிகையிடம் தான் நாங்கள் கேள்வி கேட்க முடியும்.குமுதம் போன்ற எந்த முகமூடியும் இன்றி ஆபாசத்தைக் கடை விரிக்கும் இதழ்களிடம் நாங்கள் கேள்வி கேட்க முடியாது.இதுவும் தவிர குமுதம் நிர்வாகத்தை எதிர்த்து இதுவரை எத்தனையோ பதிவுகளை எழுதியிருக்கிறோம்.

விகடன் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கும் கவின்மலரின் பதிவைப் படிப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றும்.

பத்திரிகையாளர் ஒவ்வொருவரும் வேலை செய்யும் நிறுவனத்தை ஏதாவதொரு காரணத்துக்காய் விமர்சிக்கையில்,கவின்மலர், விகடன் வேலையை விட்டு ஒரு வருடம் ஆகப் போகிறது.ஆனால்,எதற்கு இன்னும் விகடன் மீது ரொம்பப்ப்ப்ப்ப் பாசமாய் இருக்கிறார் என்று../அந்தப் பின்னணியைச் சொல்கிறோம்.அந்தப் பாசத்தில் கத்துக்குட்டி கவின்மலரின் பிழைப்புவாதம் அடங்கியிருக்கிறது.

பத்திரிகைத்துறையில் குறைந்த அனுபவம் உள்ள‌வர்கள்,அல்லது துறைக்குப் புதியவர்கள்,விகடன் நிறுவனத்தின் தலைமை நிருபர் பதவியை அடைய வேண்டும் என்றால் கீழ்க்கண்ட‌ படிநிலைகளைக் கடந்து தான் வர‌ வேண்டும்.

வேலைக்கான நியமன உத்தரவு கிடைத்தவுடன் முதலில் தற்காலிக நிருபராக-6 மாதம் பணியாற்ற‌ வேண்டும்(இதழில் பெயர்(இன் பிரிண்ட்) வராது.

இந்தக் கால கட்டத்திற்குப் பின் நிர்வாகம் தற்காலிக நிருபரின் பணியில் திருப்தி அடைந்தால் அவருக்கு நிருபர் பதவியை அளிக்கலாம்.திருப்தி அடைய வில்லை என்றால் அவரை இன்னும் சில காலம் தற்காலிக நிருபராக நீட்டிக்கவும் செய்யலாம்.அல்லது தற்காலிக நிருபர் பதவியை விட்டும் நீக்கலாம்.அல்லது திறமை இல்லா விட்டாலும் நிர்வாகம் விருப்பப் பட்டால் நிருபர் பதவியை  தரலாம்.

தற்காலிக நிருபர் பணி,நிருபர் எனப் படிநிலை உயர்த்தப்பட்டால் அதன்பின்  (இதழில் நிருபர் என்று பெயர் வரும்.(இன் பிரிண்ட்)

நிருபராக 4 வருடமோ அல்லது 3 வருடமோ பணியாற்றிய பின் நிர்வாகம் அவரது திறமையை,இதழில் அவரது பங்களிப்பைப் பரிசீலித்து,திற‌மை இருப்பின் அவருக்குத் 'தலைமை நிருபர்' பதவி தரலாம்.அல்லது திறமை இல்லா விட்டாலும் நிர்வாகம் விருப்பப் பட்டால் தலைமை நிருபர் பதவியைத் தரலாம்.

நமக்குத் தெரிந்து உண்மையில் திற‌மையுள்ள சிலர் தற்காலிக நிருபரில் இருந்து தலைமை நிருபர் என படிநிலையை அடைய இந்தப் படிநிலையை அடைய 6 முதல் 7 வருடங்கள் ஆகியிருக்கிற‌து..

மன்னாதி மன்னர்கள் யார் என்றாலும் இது தான் நிலை.

அசோகன்,(விகடன் குழும 8 இதழ்களின் முன்னாள் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் )ரா,கண்ணன்,விகடன் மற்றும் விகடன் குழும 6 இதழ்களின்தற்பொழுதைய ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் ,ரீ.சிவக்குமார்.(சுகுணா திவாகர்-டைம்பாஸ் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர்) என இன்றைய,முன்னாள் ஆசிரியர்கள் அனைவரும் இந்தப் படிநிலையைக் கடந்து வந்தவர்கள் தான்.இவர்கள் இத்துறையில் திறமையானவர்களும் கூட.

ஆனால் பத்திரிகைத் துறைக்குப் புதியவரான கவின்மலர் என்பவர் ஆனந்த விகடனில் தற்காலிக நிருபராய் வேலைக்குச் சேர்ந்த 5 மாதத்திலேயே தலைமை நிருபராக நேரடியாக நியமிக்கப் பட்டார்.

நிர்வாகத்தின் அனுசரனை இல்லாமல் இது எப்படி சாத்தியம்..?

தற்காலிக நிருபராய் பணியாற்றிய காலத்தில் குறிப்பிடத்தக்க,அனைவரும் வியக்கும் எந்த ஒரு பங்களிப்பையும் கவின்மலர் செய்ததில்லை.அனைவரும் செய்யும் நேர்காணலையும்,சினிமாக் காரர்கள் குறித்த பதிவையும் தனக்குத் தெரிந்த சிபிஎம் தோழர்களின் பங்களிப்பையுமே வாங்கி வெளியிட்டார்.குறித்துச் சொல்வது என்றால், அவர் எழுதியது அனைத்தும் எந்த ஒரு சாதாரண நிருபரும் செய்வது தான்.

இது தான் கவின்மலரின் திறமை.ஆனால் தற்காலிக நிருபர் பணியில் இருந்து ,ஒரே தாவலில் நிருபர் பதவியைத் தாண்டி குறைந்தபட்சம் 6 வருட கால கட்டத்தைத் தாண்டி இவருக்கு தலைமை நிருபர் பதவி கிடைத்தது.நிர்வாகத்தின் விருப்பப் படியே இது நடந்தது.தகுதிக்கு மீறி இவருக்கு மகுடம் சூட்டப்பட்டது ஒருபுறம் இருந்தாலும் இதனால் இரண்டு நிருபர்கள் பாதிக்கப்பட்டனர்.

இவர் தற்காலிக நிருபர் பணியில் இருக்கும் பொழுதே,அங்கு நிருபராய் பணிபுரிந்த ந‌..... .வினோத்குமார் என்பவரும் இர.பிரீத்தி என்ற பெண் நிருபரும் பாதிக்கப்பட்டனர்.இருவரும் திறமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களின் பதவி உயர்வு தான் இதனால் தடுக்கப்பட்டது.அதிலும் ந.வினோத்குமார் அனைத்திலும் கவின்மலரை விட பல மடங்கு திற‌மையானவர் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியும்.
சுற்றுச்சூழல்,ஆங்கில மொழிபெயர்ப்பு,பயணக்கட்டுரை,விஞ்ஞானம் உட்பட‌அனைத்துத் துறைகளிலும் பரிணமிக்க கூடியவர்.

கவின்மலருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு விகடனில் சேர்ந்து நிருபராய் பணியாற்றிக் கொண்டிருந்தார்.விகடன் பிரசுரத்திற்காய் 2 நூல்கள் மொழி பெயர்த்திருக்கிறார்.
கூடங்குளம் பிரச்னை சமீப கால கட்டங்களில்அனைவராலும் பேசப்படும் முன்னரே அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமார் ஜூனியர் விகடனில் எழுதிய 'அணு ஆட்டம்' தொடரை நெறிப்படுத்தியவர்.

ஆனால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இவருக்கு கீழ் நிலையில் உள்ள கவின்மலருக்கு உயர் பதவி அளிக்கப்பட்டது.(வினோத்குமார் செய்த தவறு என்னவென்றால் கூடங்குளம் செல்ல சென்னையில் ரயில் ஏறியதிலிருந்து,தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் குடித்தது வரை திரும்பி வரும் வரை 200 புகைப்படங்களை எடுத்து அதை முகநூலில் வெளியிட்டு முற்போக்கு வேடம் கட்டத் தெரியாததும்,தனக்காக லாபியும் செய்ய்த் தெரியாததும்)

ஆனால் சிறிதும் கூச்சம் இல்லாமல் கவின்மலர் 'தலைமை நிருபர்' பதவியைப் பெற்றுக் கொண்டார்.வெளியில் ஆயிரம் முற்போக்கு பேசும் கவின்மலர் அலுவலகத்தில் தனக்கு மேலே உள்ள தகுதியானவரை ஓவர்டேக் செய்து லாபி செய்து பதவியைப் பறித்துக் கொண்டார்.

சுருக்கமாய் இப்படிப் பாருங்கள்.

18 வருடமாய் கூடங்குளம்,மீனவர் பிரச்சனை,சுற்றுச் சூழல்,ஈழம் என ஒரு பத்திரிகையாளனாய்த் தொடர்ந்து எழுதி வரும் அருள் எழிலனும் இன்று தலைமை நிருபர் தான். துறைக்குள் நுழைந்த 2 வருடத்திற்குள் அரைகுறையாய் குறுக்கு வெட்டாய் சிந்திக்கும், எழுதும் ,கவின்மலருக்கும் அந்தப் பதவி கிடைத்திருக்கிற‌து.இந்தத் துறை திறமையற்று லாபி செய்வதன் மூலம் பதவியை அடைபவர்களால் எவ்வளவு சீரழிந்திருக்கிறது இதை விட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்..?

பெஞ்சு தேய்க்கும் பதவிக்கே எத்தனை நேர்முகத்தேர்வுகள்,நேர்காணல்கள்,திறமையை நிருபிக்க தேர்வுகள்.ஆனால் எதுவும் இல்லாமல் ஊடகத்துறையில் தான் இது போன்றவை சாத்தியம் ஆகும்.

மேற்கண்டவாறு தலைமை நிருபர் பதவியை அடைந்த‌ கவின்மலரின் திறமையின்மையைத் தாமதமாய் உணர்ந்த விகடன் நிர்வாகம் அவரை வெளியேறச் சொல்கிறது.ராஜினாமைவைக் கோருகிறது.
அதன்பின் தனது 'தலைமை நிருபர்' பதவியைக் காட்டி இந்தியா டுடேவில் அசோசியேட் எடிட்டருக்கு விண்ணப்பிக்கிறார்.இவரது கடந்த காலத்தைப் பரீசிலிக்காமல் விகடன் பத்திரிகையிலேயே இவர் தலைமை நிருபர்.அப்படி என்றால் இவர் மிகுந்த திற‌மையானவராய்த் தான் இருப்பார் என்று முடிவு செய்த 'இந்தியா டுடே' நிர்வாகம் இவரை அசோசியேட் காப்பி எடிட்டர் பதவிக்குத் தேர்வு செய்கிறது.

இந்தியா டுடேயிலும் ஒரு அநீதி இருக்கிறது.15 வருடங்களாய் இந்தியா டுடேவில் வேலை பார்த்த அதன் அசோசியேட் காப்பி எடிட்டர்க‌ள் பானுமதியும்,எஸ்.செந்தில் குமாரும் இத்துறையில் 3 வருட அனுபவம் உள்ள கவின்மலரும் இப்பொழுது ஒரே கேடர்.இன்னொரு முக்கிய அம்சம்,நிருபர் பதவியை விட காப்பி எடிட்டர் பதவியின் தன்மை வேறு விதமானது.அனைத்துத் துறைகளிலும் ஓரளவுக்கு நிபுணத்துவமும்,அனுபவமும் இருக்க வேண்டும்.ஆனால் நிருபர் பணியில் அப்படி இல்லா விட்டாலும் பணியைச் செய்து விடலாம்.
ஆனால் டெஸ்க்கில் முன் அனுபவம் இல்லாத கவின்மலர் காப்பி எடிட்டர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதைக் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும்.
15 வருடத்திற்கு மேல் இந்தியா டுடேவில் பணியாற்றிய பானும‌தி,எஸ்.செந்தில்குமார் போன்றவர்களை விட‌ கவின்மலருக்கு சம்பளம் அதிகம்.

 'ந்தியா டுடே'வில் கவின்மலர் பணியில் சேர்ந்த பொழுது அவருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் துறை அனுபவம். அடைந்த பதவியோ அசோசியேட் காப்பி எடிட்டர்,கிட்டிய சம்பளம் 40 ஆயிரம்.

ஆனால் 24 வருடங்களுக்கும் மேல்  துறை அனுபவமிக்கதிறமையான ராமசுப்ரமணியமோ அப்பொழுது நிருபர் மட்டுமே.கிடைத்த‌ சம்பளம் 30 ஆயிரம். இதில் 10 ஆண்டுகள் இந்தியா டுடேவில் வேலை பார்த்துள்ளார் அவர் கவின்மலருக்கு கீழே அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும்.என்ன கொடுமை.

கவின்மலர் ஒழுங்காய் எழுதுகிறாரோ இல்லையோ நன்கு லாபி செய்பவர் என்பது இதன் மூலம் உங்களுக்குப் புரியும்.

இவருடன் தீக்கதிரில் ஊடகப் பணிக்கு வந்த கவாஸ்கர் செல்வம் என்னும் அப்பாவி சிபிஎம் தொண்டன் இன்று வரை தீக்கதிரில் பணியாற்றிக் கொண்டு மாதம் 8500 சம்பளத்தில் வாழ்கிறார் என்பது வேறு விஷயம்.

'தலைமை நிருபர்' பதவி விகடன் நிர்வாகத்தால் அன்று கொடுக்கப்படவில்லை என்றால் கவின்மலர் இன்றும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நிருபராக குப்பை கொட்டிக் கொண்டிருப்பார்.பத்திரிகைத் துறையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல இன்னும் பல ஆண்டுகள் ஆகியிருக்கும்.

தகுதி இல்லையென்றாலும் 2 வருட பத்திரிகைத் துறை பங்களிப்பில் பலரது நியாயமான பதவி உயர்வைத் தட்டிப் பறித்து, 10 வருட முன்னேற்றத்தை அளித்த விகடன் நிர்வாகத்தின் மீது கவின்மலர் கொண்டிருக்கும் இந்த கண்மூடித்தனமான பாசத்தின் பின்னணிஇது தான்.

தொழிற்சங்கத் தலைவர்களாய் இருக்கும் போலிகள்,தங்கள் சுயநலனுக்காய் நிறுவனத்தை ஆதரிப்பார்களே,அது தான் இங்கும் நடந்திருக்கிறது.அதனால் தான் கலகக்குரலை நேர்மைய‌ற்று விமர்சிக்கிறார்.

கவின்மலர் அவர்களே இந்தப் பதில் உங்களுக்குப் போதும் என்று நினைக்கிறோம்.போதாது என்றால் இன்னும் பல தகவல்களுடன் இன்னொரு பதிவு வெளியிடுகிறோம்.

(இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால்,இவருக்கு தலைமை நிருபர் பதவி ஆர்டரை அளிக்கும் பொழுது,ஆசிரியர் ரா.கண்ணன்,வாழ்த்துக்கள்,இனி நீங்க கடுமையாய் உழைக்க வேண்டும்.டீக்கடையில் எப்பவும் நின்று கொண்டு இருக்கக் கூடாது என்று தோழமையாய் சொல்லியிருக்கிறார்.

அதை வெளியில் வந்து ராமச்சந்திரன் கடையில் டீக்குடித்துக் கொண்டே அனைவரிடமும் சொல்லி ஆசிரியரை நக்கல் செய்தவர் தான் கவின்மலர்.)

(பிரீத்தி, வினோத்,எஸ்.செந்திகுமார்,பானுமதி,அருள் எழிலன் ஆகியோருக்கு ஆதரவாய் எழுதப்பட்ட பதிவு என்று நினைத்துக் கொண்டு யாரும் பின்னூட்டம் இட வேண்டாம்.அவர்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை)

இவ்வாறு தன் துறையில் குறிப்பிடத்தக்க எந்தப் பங்கினையும் செய்யாத கவின்மலர்,தான் பணியாற்றும் இடத்தில் திறமையானவனை மிதித்து,லாபி செய்து உயர் பதவியைப் பிடித்த கவின்மலர்,நாம் இதுவரை அவரை விமர்சித்து எழுதிய பதிவுகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற கவின்மலர்,முற்போக்கு முகமூடியைப் போட்டுக் கொண்டு ஊரில் உள்ள‌வர்களை எல்லாம் கத்துக்குட்டித்தனமாய் முகநூலில் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையான சமூக அக்கறையுடன் திறமையுடன் எழுதும் எத்தனையோ ஊடகவியலாளர்கள் எந்த வெளிச்சமும் போராளி வேடமும் கட்டாமல் அமைதியாய் தங்கள் செயலைச் செய்து கொண்டிருக்க, கத்துக்குட்டிகளும்,திற‌மையில்லாவிட்டாலும் லாபியின் மூலம் பதவியை அடைபவர்களும் தான் இங்கு இணையத்திலும் பொதுவெளியிலும் ஊடகக் காரர்களாகவும்,கருத்தாளர்களாகவும் இத்துறையின் பிம்பங்களாய்  வலம் வருகிறார்கள் என்பது இத்துறை சீரழிந்த தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

-- வின்மலர் என்பவர் குறித்து ஆபிஸ் பையன் எழுதிய பத்தி.இதைப் படித்த கலகக்குரல் மூத்த நிருபர் அவரிடம் சொல்லியது இது தான்.


தம்பி,நீங்க இதுக்கு முன்னாடி கவின்மலர் என்பவரைப் பத்தி ரெண்டு பதிவு எழுதுனீங்க.நான் கண்டுக்கலை.அதுக்குப் பிறகு தான் விசாரிச்சேன்.இந்த பீல்டுல யார் கிட்டக் கேட்டாலும் அவங்களைத் தெரியலை.ஒரே ஒருத்தர் மட்டும் அந்தம்மா பீல்டுக்கு புதுசு,எல்லாத் துறையையும் கரைத்துக் குடித்த மாதிரி பேஸ்புக்கில எப்பொழுதும் ஆக்டிவ்வா இருப்பாங்கன்னு சொன்னார்.ஒரு கட்டத்துல அவங்க அட்ராசிட்டி தாங்காம பிளாக் பண்ணிட்டேன்னு சொன்னார்.ஆனா நீங்க அவங்களையும் ஒரு ஆளா மதிச்சு எழுதுறீங்க.

 'கவின்மலர்' போன்றவங்க தன்னை அருந்ததிராய்னு நினைச்சுக்கிட்டு ஒவ்வொன்னுக்கும் ஒரு கருத்து சொல்றாங்க.ஆனா அவங்க கத்துக்குட்டி என்பதும் பிழைப்பு வாதின்னும் நீங்க எழுதியிருக்கீங்க.அந்திமழை அசோகன் மாதிரி ஆட்கள் எதையும் ஆராயாமல் மேம்போக்கா இவங்களுக்கு நம்பிக்கைக்குரிய இளம் ஊடகவியலாளர் அப்படின்னு அங்கீகாரம் அளிக்கலாம்.அதுக்காக இவர் குறித்து நம் தளத்தில் இவ்வள‌வு விரிவா விமர்சனம் எழுத‌ தகுதியானவர் அப்படின்னு எப்படி முடிவு செய்தீர்கள்.?

இதுக்குமுன்னாடி நீங்க கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லலை.இவங்க குறைகுடம்.அப்படித்தான் இருப்பாங்க.இந்த விமர்சனம் குறித்தும் அவங்க கூச்சப்பட மாட்டாஙக்.இதையும் தனக்கு பப்ளிசிட்டின்னு நெனச்சு மனதுக்குள் மகிழ்ச்சி அடைவாங்க.அதனால இனி மேல் வேலை வெட்டி இல்லாம,வெட்டியா உட்கார்ந்து இவ்வளவு நீளமா அவங்களுக்குப் பதில் எழுதி நம்ம தரத்தைக் குறைக்காதீங்க.

இது தான் நான் முதலாவதும் கடைசியாகவும் நான் உங்களுக்கு சொல்றது.இந்தக் கட்டுரையை மட்டும் பப்ளிஷ் பண்ணிடலாம் சரியா..என்றார்.

ஆபிஸ் பையன் அவர் சொன்ன அறிவுரையை எற்று அமைதியானான்.Sunday 25 August 2013

ஏ.டி.எம்.மில் திருடிய தினகரன் நியூஸ் எடிட்டர்.....!தினகரன் நாளிதழின் வேலூர் பதிப்பின் நியூஸ் எடிட்டராக சில வாரங்களுக்கு முன்பு பெருமாள் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.(பெருமாள் புகைப்படம் நம்மிடம் இல்லை.யாரிடமும் இருந்தால் அனுப்பவும்.)இதற்கு முன்பு பொறுப்பில் இருந்த கோவிந்தராஜ் திரும்பவும் சென்னைப் பதிப்பிற்கு அழைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

இந்த பெருமாள் திடீரென்று நியூஸ் எடிட்டராக நியமிக்கப்பட்டிருப்பது அங்குள்ள மேனேஜர் மற்றும் நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி நடந்துள்ளது என்பதுவும்,அது அவர்களை மிகுந்த மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

இனி இவர் குறித்த சிறு பதிவு.

இவர் யாரென்றால் அதிகமாய் கவர் வாங்குகிறார் என்று தினத்தந்தியில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டவர்.(அங்கு இருப்பவ‌ர்களே இவரின் வேகத்தைக் கண்டு மிரண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்)

இப்பொழுது தினகரனின் வேலூர் பதிப்பு எடிட்டர்.

என்ன நோக்கத்திற்காய் இவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதனைக் கச்சிதமாய் நிறைவேற்ற வேண்டாமா?

அலுவலகத்தில் நிறைவேற்றினாரா என்று நமக்குத் தெரியவில்லை.ஆனால் பொதுவெளியில் கச்சிதமாய் நிறைவேற்றித் தன் 'திறமை'யை நிரூபித்து விட்டார்.

ஆனால் அதில் அவரின் கீழ் பணியாற்றும் பத்திரிகையாளர் சிக்கிக் கொண்டது தான் சோகம்.

இனி செய்திக்கு வருவோம்.

வேலூர் தினகரன் அலுவலகத்தின் அருகே ஒரு தனியார் ஏ.டி.எம்.மையம்.

ஒரு மதிய வேளையில் தினகரன் ரிப்போர்ட்டர் ஒருவர் பணம் எடுக்க உள்ளே நுழைகிறார்.அவர் பெயர் தாஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.இவர் பழைய தினகரனில் இருந்து தொடர்ந்து பணியாற்றி வருபவர்.

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளிவரும் சமயம் வெளியே நியூஸ் எடிட்டர் பெருமாள் பணம் எடுக்கக் காத்திருப்பதைத் தற்செயலாய்ப்  பார்த்து விடுகிறார்.அவரைக் கண்டதும் ரிப்போர்ட்டர் தாசிடம் இருக்கும் அடிமை மனோபாவம்  தானாய் விழிக்கிறது.பதைபதைத்து விடுகிறார்.

எடிட்டர் வெளியே காத்திருக்கிறார்.நாம் அவரைக் காக்க வைத்திருக்கிறோம்,இது ரொம்ப தவறல்லவா..? (!)என்ற பயத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பணத்தைக் கூட எடுக்காமல் அரக்கப் பரக்க வெளியே வருகிறார்.பணம் அப்படியே இயந்திரத்தில் இருக்கிறது.

'சார் நீங்க போங்க சார் உள்ளே" என்று வழி விடுகிறார்.

இவரின் பதைபதைப்பைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டு அதனை வெளிக்காட்டாத பெருமாள் ஏ.டி.எம். மையம் சென்று அவர் வந்த வேலையை முடித்து விட்டுச் செல்கிறார்.பெருமாள் செல்லும் வரை ஏ.டி.எம்.மையத்திற்கு வெளியே கொஞ்சம்  தள்ளி நின்று காத்திருந்த தாஸ்,  அவர் சென்ற அடுத்த நொடி,தான் எடுக்காமல் விட்டு வந்த பணத்தை எடுக்க உள்ளே நுழைகிறார்.

ஆனால் அங்கு பணம் இல்லை.

அதிர்ச்சியாகிறார்.சிலையாய் நிற்கிறார்.என்னடா இது சோதனை?

மாசக் கடைசி வேற...எவனிடமும் கடனும் வாங்கவும் முடியாது.என்ன செய்வது என்று யோசிக்கிறார்.

நம்ம எடிட்டர் தான் இதற்கு முன் வந்தார்.அவர் ஏதாவது.?

ஆனாலும் அதிகம் யோசிக்க முடியவில்லை.

பெருமாள்எடிட்டர் முதலாளியைப் போல கேடி தான்.ஆனால் 5000 ரூபாய் என்பது அவரைப் பொறுத்து அல்பக் காசு,அதைத் திருடுவாரா என்று யோசித்து உடனே அவராகவே அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்று ஒருவாறாய் முடிவு செய்து கொள்கிறார்.

ஒருவேளை பணம் நாம் எடுக்காததனால் அது திரும்ப,இயந்திரத்தின்  உள்ளே(!) சென்றிருக்குமோ,அல்ல‌து எடிட்டர் உள்ளே இருக்கும் பொழுதே, நம் கவனத்திற்கு வராமல் பணம் எடுக்க வந்த இன்னொருவன் ந‌ம் பணத்தையும் சுட்டிருப்பானோ என்று யோசித்து இறுதியில் வேறு வழியில்லை என்று முடிவு செய்து வங்கியில் புகார் செய்கிறார்.

இவர் ரிப்போர்ட்டர் என்பதால் வங்கி உடனே நடவடிக்கை எடுக்கிற‌து.சில மணி நேரத்திலேயே,ஏடி எம் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள காமெரா பதிவுகளை எடுத்துப் பார்க்கிற‌து.அதில் அனைத்தும் பதிவாகி இருந்தது.தாஸூம் உடன் இருக்கிறார்.

அதில்....

தாஸ் எடிட்டரைப் பார்த்தவுடன் வெளியே வருகிறார்.
உள்ளே செல்லும் எடிட்டர் பெருமாள்,முதல் வேலையாய் அங்கு எடுக்கப் படாமல் இருக்கும் தாஸின் பணத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் எடுத்து பாக்கெட்டில் திணிக்கிறார்.அதன் பின் தான் தனது கார்டை உள்ளே நுழைக்கிறார்.

இந்தப் பதிவைப் பார்த்தவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி. ஆனால் அதிக அதிர்ச்சி அடைந்தது ரிப்போர்ட்டர் தாஸூ.

"ச்சே இவ்வளவு கேவலமா இருக்கானே",எச்சக்காரப் பய,தனக்குக் கீழ வேலை செய்யுறவன் பண‌ம் என்று தெரிந்தும் இப்படிச் செய்துட்டானே..?பகலிலேயே திருடுறானே,மொள்ளமாரிப்பய என்பது போன்ற இன்னும் பல 'நாகரீக‌' வார்த்தைகளைச் சேர்த்துத் திட்டுகிறார்.வங்கி நிர்வாகத்திற்கு இந்தக் கதை எதும் புரியவில்லை.நகரக் காவல்துரைக்கு புகார் அளிக்க முடிவு செய்கிறது.
ஆனால் தாஸ் தடுத்து விடுகிறார்.

"இவன் எங்க எடிட்டர் சார்."என்று அவமானத்துடன் சொல்கிறார்.

அவர்களுக்கும் அதிர்ச்சி.

இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் போன்ற ஊழல் பேர்வழிகளைக் கண்ட அவர்கள்,மேலதிகாரின்னா இப்படித்தான் இருப்பானுஙகளோ என்று சிரித்துக் கொள்கின்றனர்.

அதன் பின் பஞ்சாயத்து கூட்டப்படுகிற‌து.பல கெடுபிடிகளுக்குப் பின் வங்கிக்கு வருகிறார்.நம்ம பெருமாள்.

முதலில் தான் எடுக்கவில்லை என்றும்,தான் யார் தெரியுமா என்னைச் சந்தேகப்ப‌டலாமா?என்றும் சவடால் விட்டவர் வீடியோ பதிவுகளைக் காட்டியதும்,அமைதியானார்.பிறகு,என் பணம் என்று தான் தவறாய் எடுத்து விட்டேன் என்றும் அபத்தமாய் காரணம் சொன்னார்.

அதன்பின்,"சார் அவர் பணத்தை உடனே கொடுத்துடுங்க,புகாரை முடித்து விடலாம்" என்று வங்கி நிர்வாகம் சொல்கிறது.

அதற்கு எடிட்டரோ,கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்,பணம் இப்பொழுது என்கிட்ட இல்லை.இரண்டு தவணையாகத் தந்துடுறேன் என்று சொன்னார்.வங்கி நிர்வாகம் தாஸ் முகத்தைப் பார்க்க,தாஸ் இந்தப் பாவி,அலுவலகத்தில் நம்மை எதும் காலி பண்ணிடுவானோ என்று பிழைப்பை யோசித்து பெருமாள் சார் சொன்ன மாதிரி,நான் வாங்கிக்கிறேன் சார்.புகாரை முடிச்சுடுங்க என்று சொல்லித் 'தலைவிதி'யை நொந்தபடி  விடை கொடுத்தார்.

'கிரேட்' பெருமாளோ எதுவும் நடைபெறாதது போல எல்லாவற்றையும் துடைத்துப் போட்டு தினகரன் அலுவலக்ம் சென்று சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய‌ தனது பணிகளைத் தொடர்ந்தார்.

த்திரிகையாளர்களின் அடிமை மனோபாவம் குறித்து ஆராய்வதா,இல்லை எடிட்டரின் திருட்டுத்தனம் குறித்து பேசுவதா,இல்லை இவர்களைப் போன்றவர்களை மட்டும் ஏன் நிர்வாகம் விரும்புகிறது என்பது குறித்தோ,இங்கு பேசுவதை விட ஒட்டுமொத்த துறையும் எவ்வாறு செல்லரித்துக் கிடக்கிறது என்பது குறித்து தான் கவலைப்பட வேண்டிய தருணம் இது.


Friday 9 August 2013

'தி இந்து' நாளிதழில் கருட புராணத்தின் படி தண்டனை...!தேனி கண்ணன்தேனி கண்ணன்.

இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

இவர் வரதராஜன் அபகரித்த‌ குமுதத்தில் சினிமா நிருபராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.இளையராஜா கேள்வி பதில்கள் பகுதியை இவர் தான் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தார்.இவர் கடந்த மாதம் தொடங்க உள்ள  'தி இந்து' நாளிதழில் சினிமா நிருபர் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இது வரை குமுதத்தில் தான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு 'தி இந்து' நாளிதழில் சேர்ந்து விட்டார்.

ஆனால் வேலைக்குச் செர்ந்த இரண்டொரு நாளில் காமதேனு நிர்வாகம் இவரை வேலையை விட்டு நீக்கி விட்டது.
இவர் அதிகமாக கவர் வாங்குபவ‌ர் என்று தனியார் துப்பறியும் நிறுவனம் இவரைப்பற்றி அறிக்கை கொடுத்ததன் அடிப்படையில் இவர் தமது நிறுவனத்தில் பணி புரியத் தகுதியற்ற‌வர் என்று வேலையை விட்டு நீக்கியதாம்.

இப்பொழுது தேனி கண்ண‌ன் எந்த வழியும் தெரியாது நடுத்தெருவில் நிற்கிறார்.

நிருபர் தேனி கண்ணன் லஞ்சம் வாங்குவது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் காமதேனு நிர்வாகம்,அவரை வேலைக்குச் சேர்க்கும் முன்பே தீர விசாரித்து அவரைச் சேர்க்காமல் இருந்திருக்கலாமே...ஒருவரை வேலைக்குச் சேர்த்து இரண்டு நாள் கழித்து அவர் கை சுத்தம் இல்லாதவர் என்று கண்டுபிடித்து பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, அதை இரண்டு நாட்களுக்கு முன் கண்டுபிடித்து அவரைப் பணியில் சேர்க்காமலேயே இருந்திருக்கலாமே..!அவர் குமுதத்திலேயே கவர் வாங்கிக் கொண்டு (உங்கள் எண்ணப்படி) வேலையில் நீடித்திருப்பாரே..!

கையில் இருந்த‌ வேலையையும் விட்டுவிட்டு இன்று அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காதே..!

தேனி கண்னன் கவர் வாங்குகிறார் என்பதைத் தாமதமாகவேணும் நிர்வாகம் கன்டுபிடிததுள்ளது,தாமதமாக தவறைக் கண்டுபிடித்த ஒரே காரணத்திற்காய் லஞ்சம் வாங்குபவர் பணியில் தொடர்வதை அனுமதிக்க முடியுமா..?அதனை நீங்கள் நியாயப்படுத்துகிறார்களா என்று கேள்வி எழலாம்.

சரி தேனி கண்ண‌ன் லஞ்சம் வாங்குகிறார்,இவரைப் போன்றவர்களால் தான் இத்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது அதனால் அவரை நீக்கியது சரி என்று ஒப்புக் கொள்ளுவோம்.'தி இந்து' வில் இப்பொழுது ப‌ணியில் சேர்க்கப்ப‌ட்டவர்கள் எல்லாம் உத்தமபுத்திரர்களா...?

தவறே செய்யாத யோக்கிய சிகாமணிகளா..?

கவர் அளவுக்கு வாங்க மாட்டார்களா...சரி கவர் வாங்காமல் பண்டல் பண்டலாக வாங்குவார்களா..?இவர்களில் யாராவது ஒருவரின் நேர்மை பற்றிப் பேசினால் உண்மை தெரிந்து விடப் போகிறது.

சாதாரண ரிப்போர்ட்டரின் தகுதியையும் நேர்மையையும் எதற்கு உரசிப் பார்க்க வேண்டும்..? அதன் தலைமைப் பீடத்தையே உரசிப் பார்ப்போம்.

இப்பொழுது காமதேனு நாளிதழில் வேலைக்கு ஆள் எடுக்கும் பணியைச் செய்யும் இருவரில் ஒருவர் மட்டுமல்ல அதன் எடிட்டர் என்றும் அனைவராலும் அறியப்படுபவர் என்.அசோகன்.

அவர் நேர்மையானவரா..? யாரிடமும் கை நீட்டி ஒற்றைக்காசு முறையற்ற வழியில் வாங்காதவரா..?

இதற்குப் பதில் சொல்வதற்கு முன் பழைய கதை அல்ல,உண்மை ஒன்றைப் பார்ப்போம்.

அப்பொழுது திமுக ஆட்சிக் காலம்.

ஹன்ஸ்ராஜ் சக்சேனா திரைப்படங்களை சன் பிக்சர்ஸுக்காக அடிமாட்டு விலைக்கு உருட்டியும் மிரட்டியும் சமாதானமாகவும் வாங்கிக் கொண்டிருந்தார்.

ஒரு குறிப்பிட்ட நாளன்று இரண்டு பேர் தங்கள் திரைப்படத்தின் விற்பனை உரிமை குறித்துப் பேசுவதற்காய் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவைப் பார்க்க வந்திருந்தார்கள்.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி நடித்த காதல் சொல்ல வந்தேன் என்னும் திரைப்படம் தான் அது.படம்.படம் குறித்து சக்சேனாவுக்கும் படத்தயாரிப்பாளர்களுக்கும் நடந்த பேச்சு இருதரப்புக்கும் முடிவாகாமல் நீண்டு கொண்டே சென்றது.ஒரு கட்டத்தில் சலிப்படைந்த தயாரிப்பாளர்கள் இருவரும்,நாங்க வேணுமின்னா மாறன் சார்ட்ட பேசிக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

இவர்கள் இப்படிச் சொன்னதும் சக்சேனாவின் புருவம் உயர்கிறது.இத்துறையின் மன்னாதி மன்னர்கள் எல்லாம் நம்மைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்துக்கிட்டிருக்காங்க.ஆனா ஒரு சுமாரான‌ படத்தை தயாரித்த இந்த இரண்டு புதிய தயாரிப்பாளர்கள் கலா நிதி மாறனைச் சந்திக்கப் போகிறோம் என்று சாதாரணமாக நம்மிடமே சொல்கின்றனரே என்னும் சந்தேகத்தையும் ஆச்சரியத்தையும் மனதில் வைத்துக் கொண்டு உங்களுக்கு சேர்மனைத் தெரியுமா ..? என்று கேட்கிறார்.

அசோகன் 


எதிரில் இருந்தவர்களில் ஒருவர்,  நான் அசோகன் விகடன் எடிட்டர்.இவர் சரவணக்குமார் ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் என்று சொல்கிறார்.

(நாம‌ மாறன் ட்ட ஆட்டையப் போட்டுத் தனியாப் படம் எடுக்கிறோம்,இவனுங்க சீனிவாசன் ட்ட ஆட்டையைப் போட்டு படம் எடுக்குறாங்க,சேம் பிளட் என்று சக்சேனாவின் மைண்ட் வாய்ஸ் சொல்லியதா என்று நமக்குத் தெரியாது.)

அதன் பின் சம்பிரதாயமாய் ஒரு சில வார்த்தைகள் பேசிய சக்சேனா,நீங்க சேர்மன்ட்ட பேசிக்கோங்க..என்று சொல்லி விடை கொடுக்கிறார்.உடனே கலாநிதி மாறனுக்கும் இவர்களைப் பற்றிச் சொல்லி இவர்கள் சந்திக்க வரும் விஷயத்தையும் சொல்லி விடுகிறார்.

இதைக் கேட்ட மாறன் உடனே சீனிவாசனுக்குப் போன் செய்கிறார்.

"என்ன நீங்க தான் சினிமா எடுக்குறீங்கன்னு நினைச்சேன்.உங்க கிட்ட வேலை செய்யுறவங்க எல்லாம் படம் எடுக்குறாங்க போல..தனியாப் படம் எடுக்குற அளவுக்கு நிறையச் சம்பளம் கொடுக்குறீங்க போல....ரொம்பப் பெரிய ஆளுதான் நீங்க" என்று நக்கல் செய்கிறார்.

சீனிவாசனுக்கு கோபம் உச்சத்தில் ஏறுகிறது.அவரிடம் ஆட்டையைப் போட்டதை விட‌,நாமும் இந்த பீல்டுல ஒரு படம் எடுக்குறோம்.நம்ம லெவலுக்குப் படம் எடுக்குற அளவுக்கு வந்துட்டார்களே என்பது தான் அதிக‌ ஆத்திரம்.

உடனே சீட்டுக் கிழிக்கப்படுகிறது.

ஜூனியர் விகடன் செய்தி ஆசிரியர் எஸ்.சரவணக்குமார் நீக்கப்படுகிறார்.(இப்பொழுது மீடியா வாய்ஸில் குப்பை கொட்டுகிறார்) அசோகன் விகடன் ஆசிரியர் பதவியில் இருந்து டம்மி ஆக்கப்பட்டு பதிப்பாளர் ஆக்கப்படுகிறார்.

சரவணக்குமார் 

(சரவண‌க்குமார் கரூருக்கு பந்தாடப்பட்டதாகவும்,இனிமேல் இங்கு நாம் முன்பு போல் கோலோச்சுவது சிரமம்,ஆகவே ராஜினாமா செய்து விடுங்கள் என அசோகனின் அறிவுரைப்படி அவர் ராஜினாமா செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.)

விகடனில் ஆசிரியர் பதவியில் வேலை செய்த ஒருவர்,தனக்குக்கீழ் பணியாற்றும் செய்தி ஆசிரியர் ஒருவரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு இருந்தார் என்றால் அவரது நேர்மையைத் தெரிந்து கொள்ளலாம்.காமதேனு நாளிதழின் தலைமைப்பீடத்தின் நேர்மையை உரசினால் இப்படி பல்லிளிக்கிற‌து.

சுரண்டிய பணத்தில் படம் எடுத்த இவர்கள்,தங்களிடம் லஞ்சம் கேட்டார் என்று தணிக்கைத் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பில் சிக்க வைத்தது தனிக்கதை.

இது ஒரு சின்ன சம்பவம் தான்.இப்படி நிறையக் கறைகளைத் தனது பக்கத்தில் கொண்டவர் தான் அசோகன்.அதே சமயம் அசோகன் ஒரு திறமையான எடிட்டர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

விகடன் ஆசிரியர் என்னும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி,அதனைத் துஷ்பிரயோகம் செய்து அவர் செய்த செயல்களை எழுதப் பக்க‌ங்கள் நீளும்.எழுத எமக்கும் படிக்க உங்களுக்கும் நேரம் கிடையாது.

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அசோகன் தான் இன்று காமதேனுவின் எடிட்டர்.இவர் தான் இன்று அனைவரையும் வேலைக்கு எடுக்கும்,எடுத்தவர்களை இனி வழி நடத்தும் உச்ச பட்ச பொறுப்பிலும் இருக்கிறார்.காமதேனு பத்திரிகையையும் இவர் தான் நடத்திச் சொல்லப் போகிறார்.

இவரை காமதேனுவில் தலைமைப்பீடத்தில் அமர்த்திய நிர்வாகம் சில நூறுகள் கவர் வாங்குபவர் என்று ஒரு ரிப்போர்ட்டரை வேலைக்குச் சேர்ந்த இரண்டு நாட்களில் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

அது சரி இப்படிக் கூடப் பார்ப்போம்.

''தி இந்து 'வில் யாருமே கவர் வாங்குவது இல்லையா..?தமிழ்ப் பத்திரிகையாளர்கள் நூறுகளில் வாங்கினால்,ஹிந்து பத்திரிகையாளர்கள் எத்தனை பேர் அரசு உயர் மட்ட அதிகாரிகளிடம்,'சார் ஒரு சின்ன obligation ' என்று ஆரம்பித்து காரியம் சாதிக்கிறார்கள் என்பதனை அரசு மட்டங்களில் கேட்டால் தெரியும்.

இதே  'தி ஹிந்து' வில் குப்பை கொட்டும் ராதாகிருஷ்ணன் கடந்த திமுக ஆட்சியில் இவரை விடத் திறமையானவர்கள் பலர் இருக்க,சலுகை விலையில் கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள வீட்டு வசதி வாரிய வீடு ஒன்றைப் பெறவில்லையா...?இவருடன் விண்ணப்பம் செய்தவர்கள் பலர் இருக்க அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இவருக்கு மட்டும் வீட்டு மனை கிட்டிய காரனம் என்ன..?கனிமொழிக்கு சொம்பு அடித்த காரணமும் அவரது நட்பும் தவிரவும் வேறு என்னவாக இருக்க முடியும்..?

(இவர் குறித்து சுவராஸ்யமான செய்தி ஒன்று உண்டு.

நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு பஞ்சாயத்து தொடர்பாக கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் அது குறித்துப் பேசுவதற்காய் சி.ஐ.டி. காலனி வீட்டில் குழுமிக் கொண்டிருந்தனர்.செய்தி சேகரிப்பதற்காக விரல் விட்டு எண்ணக் கூடிய பத்திரிகையாளர்கள் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

பஞ்சாயத்தில் கலந்து கொள்ள மு.க.அழகிரி இறுதியாக வீட்டுக்குள் வந்தார்.வீட்டின் முன் அறையைத் தாண்டி உள்ளறைக்குச் செல்லும் முன் ஹாலுக்குள் நுழைந்தவர் அங்கு அன்னிய முகம் ஒன்று இருப்பதைப் பார்த்து திடுக்க்ட்டவர்,

இங்க வாப்பா நீ யாருய்யா..? என்று கேட்கிறார்,

ஐம் ராதாகிருஷ்ணன்,ஹிந்து ரிப்போர்ட்டர் என்று கொஞ்சம் தெனாவட்டுடன் பதில் சொல்லியிருக்கிறார்.ஹிந்துரிப்போர்ட்டர்ன்னா என் பெட்ரூம் வரைக்கும் வந்துடுவியா..முதல்ல வெளியே போய்யா என்று கழுத்தைப் பிடித்து
வெளியே தள்ளாத குறையாய் வாசல் வ‌ரைக்கும் அனுப்புகிறார்.

மூன்று அப்பாவி பத்திரிகையாளர்களைக் கொலை செய்தவர் என்பதால் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அழகிரி மீது வெறுப்பு உண்டு.

ஆனால் ராதாகிருஷ்ணனை வெளியே அனுப்பிய அழகிரியை அன்று வெளியே நின்ற பத்திரிகையாளர்கள் புன் சிரிப்புடன் பார்த்தனர்.தமிழ் பத்திரிகையாளர்கள் என்றால் இளக்காரமாகப் பார்க்கும் ராதாகிருஷ்ணன் அன்று குனிந்த் தலையுடன் வெளியேறினார்.)


the hindu,


தேனி கண்ணனை நீக்கிய சம்பவத்திற்குத் திரும்பவும் வருவோம்.

லஞ்சம்,முறைகேடு போன்றவற்றில் தொடர்புள்ளவர்களை நீக்கம் செய்வதில் இது என்ன மாதிரியான அளவுகோல் என்றும் எந்த விதத்தில் சரியான நடவடிக்கை என்றும் தெரியவில்லை.

தேனி கண்ணன் கவர் வாங்குவது குறித்து கொஞ்சம் தாமதமாகவாவது அறிக்கை கொடுத்த தனியார் துப்பறியும் நிறுவனம் அசோகனின் 'நேர்மை' குறித்து நீண்ட தாமதமாகவேணும் எந்த அறிக்கையும் கொடுக்கவில்லையா..?இல்லை இவருக்கு மட்டும் விதிவிலக்கா..?

சில நூறு கவர் வாங்கியது குற்றம் என்றால்,சில கோடிகளில் படம் எடுக்கும் அளவுக்கு சுரண்டியது குற்றம் இல்லையா..?அது என்ன விகடன் கொடுக்கும் சம்பளப்பணத்தில் எடுத்ததா....?

சாதிச் சான்றிதழில் கையெழுத்திடுவதற்காக நூறு ரூபாய் லஞ்சம் வாங்கினார் என்று கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாய்ப் பிடிக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை,கோடிகளில் புரளும் மந்திரிக்கு சலாம் போடுவதைப் போலத்தானே இதுவும்...!

இல்லை இது எதுவும் சாதிப் பாசமா என்றும் தெரியவில்லை.விகடனிலும் இப்படித்தான் நடந்தது.

விகேஷ்,சரவண‌க்குமார் போன்ற ஊழல் பேர்வழிகளை டிஸ்மிஸ் செய்த நிர்வாகம் அசோகன் மாதிரி ஆட்களுக்கு மட்டும் விலக்கு கொடுத்து தன்னுடனே வைத்துக் கொண்டது..ஒருவேளை அய்யர் சொத்தை அய்யர் மட்டும் திருடலாம்,கொள்ளையடிக்கலாம்.அடிஷனலா அய்யங்காரை வேண்டுமானால் சேர்த்துக்கலாம்.மத்தவா அடிச்சா தப்புன்னு சொல்றாங்களோ என்னவோ..

பத்திரிகைத்துறை லஞ்சம்,கவர்,முறைகேடு என அதன் பெரும்பகுதி செல்லரித்துப் போனதற்கு சில நூறுகளில் கவர் வாங்கும் சாதாரண ரிப்போர்ட்டர்கள் மட்டும் காரணம் இல்லை.அதன் தலைமைப்பீடத்தில் இருந்து கொண்டு எல்லா அயோக்கியத்த‌னங்களையும் மறைமுகமாகவும் சில சமயம் வெளிப்படையாகவும் செய்பவர்கள் தான் முழு முதற்காரணம்.அதை விடுத்து இது போன்ற சிறு ரிப்போர்ட்டர்களை பலி கொடுத்து உங்களின் நேர்மையையும் தனித்தன்மையையும்,பரிசுத்தத்தையும் நிருபிக்க முயற்சிக்காதீர்கள்.

டிராபிக்கில் தவறு செய்தவன்,ரயிலில் தரமற்ற உணவு வாங்கிய குற்றங்களுக்கு எல்லாம் கருட புராண‌த்தின் படி கடுமையான தண்டனை அளித்து விட்டு,பல ஆயிரம் கோடிகள் சுரண்டியவனையும்,பல்லாயிரம் மக்களைக் கொலை செய்தவனையும் கண்டு கொள்ளாமல் திரைப்படம் எடுத்த ஷங்கர்-சுஜாதா கூட்டணியின் 'அந்நியன்' போதித்த 'நீதி'யை கஸ்தூரி அய்யங்கார் வழி வந்த 'தி ஹிந்து' நிர்வாகம் கடைப்பிடிப்பது எந்த விதத்திலும் நியாயமல்ல‌.


http://www.youtube.com/watch?v=vRVv_QALf7s


Thursday 1 August 2013

யோக்கியர் பிரகாஷ் வர்றாரு...சொம்பெடுத்து உள்ள வை...!


நக்கீரன் தலைமை நிருபர் பிரகாஷ் (படம் உதவி-சவுக்கு)இந்த 'செய்திப்பதிவை' எழுதியவர் நக்கீரன் வாரமிருமுறை இதழின் தலைமை நிருபர் பிரகாஷ்.

இந்தக் 'கருமாந்திரத்துக்கு' இரண்டு பக்க முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்த நக்கீரனின் 'தரம்' குறித்தோ,இதனை எதற்காக பிரகாஷ் எழுதினார் என்பதன் 'பின்னணி' குறித்தோ,இச் செய்தியின் உண்மை,பொய்த் தன்மை குறித்தோ நாம் ஆராயவோ விவாதிக்கவோ விரும்பவில்லை.

ஆனால் சிந்தாதிரிப்பேட்டை,பல்லாவரம் என ஏரியாவுக்கு ஒரு குடும்பம் நடத்தும்,இது தொடர்பில் இன்னும் பல குற்றச்சாட்டுகள்,பஞ்சாயத்துகளை,தகராறுகளைத் தன் வாழ்வில் சந்தித்த நக்கீரனின் தலைமை நிருபர் பிரகாஷூக்கு இதை எழுதக் குறைந்த பட்ச யோக்கியதை இருக்கிறதா என்பது தான் நமது கேள்வி.

நீங்கள் முதலில் சரியாக இருங்கள்.அதன் பின் ஊர் உலகத்தை விமர்சியுங்கள்.

சிரிப்பாச் சிரிக்கிறாங்க பாஸ்.....முடியல....!

தொடர்புடைய இணைப்பு.

http://www.youtube.com/watch?v=M55ScJ9hQsA

Tuesday 30 July 2013

தின இதழ்-மோசடிப் பணம் உண்மை உரைக்காது...!


மீனாட்சி அம்மன் அறக்கட்டளை குழுமம் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு மருத்துவம்,பொறியியல்,கலை,பிசியோதெரபி தொழிற்கல்வி உள்ளிட்டு பல்வேறு சுயநிதிக் கல்லூரிகளை நடத்துகிறது.

இது போன்ற சுயநிதிக் கல்லுரிகள் என்றால் கணக்கு வழக்கற்ற வசூலுக்கும்,கருப்புப் பணத்துக்கும் முறைகேட்டுக்கும் பஞ்சமா என்ன..?

இந்நிலையில் மீனாட்சி அம்மன் குழுமம் நடத்தும் கல்லூரிகள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஏ.என்.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் இந்தக் குழுமம் தொடர்புடைய 30 க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ள‌து தொடர்பில் நேற்று (30-07-2013) வருமான வரிச் சோதனை நடைபெற்றது.


தினமலர்-ஜூலை 31,2013 சென்னைப் பதிப்பு


இந்த நிறுவனம் ஊடகத்துறையில் சமீபத்தில் நுழைந்து உள்ளது.பத்திரிகைத் துறையில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்று சொல்லிக் கொண்டு தின இதழ் என்னும் பெயரில் ஒரு நாளிதழைத் தொடங்கி நடத்தி வருகிறது.விகேஷ் தான் இதன் ஆசிரியர்.இப்பொழுதைக்கு சென்னை பதிப்பு மட்டும்.விரைவில் பல ஊர்களில் இருந்து வெளியிடத் திட்டம்.
எஸ்.ஆர்.எம்.,பச்சமுத்து இத்துறையில் நுழைந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,அவரது வழியில் பல்வேறு பண முதலைகள் அடியெடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இதில் நுழைந்த‌வர் தான் இதன் அதிபர் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.இவரது கல்விச் சேவையைப் பார்ப்போம்.

1983-Meenakshi ammal polytechnic college.
1985-Arulmigu meenakshi amman college of engineering.
1990-Meenakshi amman dental college.
1993-M.G.R.institute of Hotel management &techmology.
1995-Sri muthukumaran institute of technology.
1998-Meenakshi ammal matriculation Hr.sec.school,meenakshi college of Nursing,Meenakshi college of    
        -physiotheraphy.
2001-Meenakshi college of engineering,Meenakshi ammal Arts and science college,Sri muthukumaran Arts and science college.
2002-Vani Vidhyalaya sr.secondary&junior college.
2003-Meenakshi Medical college hospital&Research institute.
2005-Meenakshi ammal Teacher Training Institute.
2006-Arulmigu Meenakshi college of Education,sri muthukumaran college of education.
2010-Sri muthukumaran Medical college Hospital&Research Institute.
2011-Mangadu Public school.
2012-Arulmigu Meenakshi amman public school,Meenakshi ammal Global school.

இது தான் இவரது வளர்ச்சி விகிதம்.

1983 ஆம் ஆண்டில் சில ஆயிரத்தில் வாடகை கட்டிடத்தில் ஆரம்பித்த கல்வி வியாபாரம் ஒவ்வொரு வருடமும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து இன்று பல ஆயிரம் கோடிகளை அக்குழுமத்தின் சந்தை மதிப்பாய்த் தொட்டிருக்கிறது.இந்த பணம் முழுவதும் அவரது கல்லூரிகளில் படித்த ஏழை,நடுத்தட்டு,உயர்தட்டு மாணவர்களிடம் இருந்து சுரண்ட‌ப்பட்டது.

இவ்வளவு காலம் கல்வி ஏகபோக வணிகத்தில் சம்பாதித்த பணத்திற்கு உரிய பாதுகாப்புத் தேடியும்,இவரது கல்வி நிறுவனங்களுக்கு அரசு அதிகாரிகள் முதல் அதிகார மையங்கள் வரை அனைவரிடமும் இருந்து சிக்கல்கள் வராமல் தடுக்கவும்,'பார்மாலிட்டிஸ்' இல்லாமல் இனிமேல் காரியம் முடிக்கவும் தொடங்கப்பட்டது தான் இந்த தின இதழ்.

அப்படி நினைக்காமல் இவ்வளவு காலம் கல்வியை கடைச்சரக்காக்கி விற்பனை செய்தவர் திடீர் 'ஞானோதயம்' பெற்று சமூகத் தொண்டாற்ற பத்திரிகை ஆரம்பித்திருக்கிறார் என்றா நினைக்க முடியும்.

இவருக்கு இதில் எஸ்.ஆர்.எம்.அதிபர் பச்சமுத்து முன்னோடி என்றால் மிகையாகாது.


ந்தப் பின்னணியில் ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் காப்பி கூட விற்பனை ஆகாத தின இதழ் நாளிதழுக்கு அதை விட அதிக அளவில் போஸ்டர்கள் அச்சிடப்பட்டு சென்னை நகர வீதிகள்,அடுத்தவன் வீட்டுச் சுவர்களும் அசிங்கப்படுத்தப்படுகின்றன.இதைத் தவிர நாளிதழைக் கலை நயத்துடன் அச்சிட சில‌ கோடிகளுக்கு அச்சு இயந்திரமும் வாங்கப் பட்டுள்ளன என்றால் இத்துறையில் எவ்வளவு முதலீட்டினை முதலைகள் செய்துள்ளார்கள் என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம்.

இவரது கல்லூரி லோகோவில் 'வாய்மையே வெல்லும்' என்று இருக்கிறது.சுயநிதிக் கல்லூரிக்கும் வாய்மைக்கும் என்ன தொடர்பு என்பது ஊரறிந்த வெளிச்சம்.அதனால் தான் வரி ஏய்ப்பு தொடர்பாக 30 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை நடந்துள்ளது.


இந்நிலையில் பத்திரிகை உலகில் புதிய சகாப்தம் தொடங்கி விட்டது என்றும் உரைக்கும் உண்மைகள் என முகப்பில் லோகோவில் அச்சிட்டும் விளம்பப்படுத்தி நாளிதழ் நடத்துவதாகச் சொல்லிக் கொள்கின்றனர்.

மோசடிப் பணம் உண்மையை உரைக்காது என்பதை உங்களைப் போல் நாமும் நன்கு அறிவோம்....!

தொடர்புடைய இணைப்புக்கள்

http://www.deccanchronicle.com/130731/news-current-affairs/article/income-tax-raids-meenakshi-colleges

http://www.dinamalar.com/news_detail.asp?id=769974&Print=1
http://www.maalaisudar.com/newsindex.php?id=43066%20&%20section=1

http://en.wikipedia.org/wiki/Arulmigu_Meenakshi_Amman_College_of_Engineering


Sunday 21 July 2013

ஆனந்த‌ விகடன் உதவி ஆசிரியருக்கு காமதேனு நாளிதழில் வேலை...!
னந்த விகடனில் இருந்து வலுக்கட்டாயமாய் ராஜினாமா பெறப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட அதன் உதவி ஆசிரியர் ச.சிவசுப்ரமணியன் குறித்து நாம் முந்தைய பதிவில் எழுதியிருந்தோம்.

இந்த நிலையில் ச.சிவசுப்ரமணியனுக்குகு 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் குழுமம் துவங்க உத்தேசித்துள்ள 'காமதேனு' நாளிதழில் கடந்த வார இறுதியில் வேலைக்கான உத்தரவு கிடைத்துள்ள‌து.

ஆ.வி.17 ஆண்டுகள் வேலை பார்த்த அவருக்கு சம்பளமாக சுமார் 25 ஆயிரம் இதுவரை கிடைத்தது.இப்பொழுது காமதேனுவில் (நாளிதழின் பெயர் மாற்றம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.)இவரது சம்பளம் இப்பொழுதைய ஊதியத்தை விட 80 சதவீதம் அதிகம்.அதே சமயம் தொழிலாளர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய உரிமைகளும் ஆ.விகடனுடன் ஒப்பிடும் பொழுது இங்கு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

இனிமேலாவது விகடன் நிறுவனம் தனது தொழிலாள‌ர்களுக்கு உரிய ஊதியத்தையும் அவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் கொடுக்க முன் வர வேண்டும்.

ச‌.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

Wednesday 17 July 2013

ஆனந்த விகடன் உதவி ஆசிரியரின் கண்ணீர்க் கதை....!
னந்த விகடன் இதழ் மூலமாக‌, முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் வலியைக்,கண்ணீரை, வேதனையை நாம் படித்திருப்போம். அவர்களுக்காகப் பேசியிருப்போம்.குறைந்த பட்சம் ஒரு நொடி வருத்தமாவது பட்டிருப்போம்.

ஆனால் ஆனந்த விகடனில் பணியாற்றிய‌ ஒருவரின் கண்ணீர்க்கதை இது.ஆனால் அவருக்காக எழுதவோ அவரின் துயரத்தைப் பகிரவோ தான் யாரும் இல்லை.

ஆனந்த விகடன் இதழுக்கு பல காலம் தன் உழைப்பை அளித்து அதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய ஒருவர் எந்தவிதக் காரணமும் இல்லாமல் வெளியே தூக்கி எறியப்பட்ட நிஜ சம்பவம் இது.

எந்த ஒரு பத்திரிகையின் உருவாக்கத்திலும் வெளியே தெரியாத பலரது உழைப்பு இணைந்திருக்கிறது.ஒரு பிரம்மாண்டமான பளிங்கு மாளிகையின் உருவாக்கத்துக்குப் பின்பு எண்ணற்ற‌ உழைப்பாளிகளின் பங்கு இருப்பது நமக்கு எப்படித் தெரிவதில்லையோ,அது பொதுச் சமூகத்தின் கண்களில் படுவதில்லையோஅது போல டெஸ்க்கில் இருக்கும் உதவி ஆசிரியர் தொடங்கி,பிழை திருத்துநரிலிருந்து லே அவுட் ஆர்ட்டிஸ்ட் வரை பலரது பங்களிப்பில் பத்திரிகைகள் வெளிவருகிறது.ஆனால் அது பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை.இதழில் எழுதும் எழுத்தாளர்கள்,அல்லது ரிப்போர்ட்டர்கள்,இதழின் ஆசிரியர் தான் வெளியில் தெரிகின்றார்கள்.
***

ரு இதழில் பிழை திருத்துநர் பணி என்பது மிகப்பெரிய பொறுப்பு.இத்துறை குறித்து அறியாதவர்கள் வேண்டுமானால் அவர்களது பணியை  புரூப் ரீடர் என்ற அளவில் சுருக்கி விடலாம்.ஆனால் உண்மையில் அப்படி அல்ல.

இந்த வேலையைச் செய்யும் அனுபவமிக்கவர்கள் எல்லோரையும் வெறுமனே 'புரூப் ரீடர்' என்று வெறுமனே சுருக்கி விட முடியாது.

ஒரு இதழின் அனைத்து பக்கங்களையும் படித்து அதன் உள்ள‌டக்கத்தில் எதும் தர்க்க ரீதியான தவறுகள் இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி எழுத்துப்பிழை,வாக்கிய அமைப்பு,கோர்வை உள்ளிட்ட தவறுகள் எதும் இருக்கிறதா என்பது வரை இதில் மிகப்பெரிய பணி அடங்கி உள்ளது.இதழின் வெற்றியில் குறிப்பிடத்தக்க ப‌ங்கு இவர்களுக்கு இருக்கிறது.

ஆனால் பொதுவாக இதழ்கள்,நாளிதழ்கள் வாசிக்கும் யாரும் இவர்களைப் பற்றிப் பேசுவதில்லை.தினத்தந்தியில ரிப்போர்ட்டிங் நல்லா இருக்கு, செங்கொடி காதல் தோல்வியால் இறந்தார் என்று தினமலரில் நாரசாரமாய் எழுதியது பீகார் ரங்கராஜ் பாண்டே ,குங்குமத்தில் நீலகண்டன் நல்லாப் பண்றாரு.ஆனந்த விகடனில் ராஜீவ் காந்தி நல்லாப் பண்ணியிருக்கார்.அருள் எழிலன் கட்டுரை,பாரதி தம்பி கட்டுரை நல்லா இருக்கு,லூசுப்பையன் முந்தி மாதிரி இல்ல,குமுதம் ரிப்போர்ட்டர்ல பாலா கார்ட்டூன் நல்லா இருக்கு,ஜூனியர் விகடன் விகேஷ் கையில இருந்து திருமாவேலன் பொறுப்புக்கு வந்ததுக்கு அப்புறம் பரவால்லை.கவின்மலர் என்பவர் எப்பவும் அபத்தமாத் தான் எழுதிக்கிட்டிருக்கார் என்பது போன்ற பாராட்டுக்களுடனோ,விமர்சனங்களுடனோ பத்திரிகையில் எழுதுபவர்களை நாம் கடந்து விடுகிறோம்.

இதில் தொடர்புடைய எழுத்தாளர்கள்,பத்திரிகையாளர்கள் ஏதோ ஒரு வகையில் பொது வெளியில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுகின்றனர்.

(சிலர் திறமை இருந்தும் இருபது வருடங்கள் ஆனாலும் நிருபர்,மூத்த நிருபர்,தலைமை நிருபர் ஸ்பெஷல் கரஸ்பாண்டண்ட் என்ற இடத்தைத் தாண்டாமலும் சம்பளம் முப்பது ஆயிரத்தைத் தாண்டாமலும் இருக்க,'பிழைக்கத்' தெரிந்த சிலரோ,திறமை இல்லா விட்டாலும் துறைக்கு வந்த மூன்றாண்டுகளில் லாபி செய்து 4 பத்திரிகைக‌ள் மாறி 40 ஆயிரம் சம்பளத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் எல்லாம் தெரிந்த அப்பாடக்கராகத் தங்களைப் பொது வெளியில் கட்டமைத்து ஒரு ஆளுமையாக மாற்றும் முயற்சியிலும் திட்டமிட்டு ஈடுபடுவது வேறு விஷயம்.  )

ஆனால் இதழின் வெற்றியில் பின்னணியில் இருந்து செயல்படும் லே அவுட் ஆர்ட்டிஸ்ட்,புரூப் ரீடர் போன்றோரின் முக்கியத்துவமும் அவர்களின் பெயரும் பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.இது அனைத்து இதழ்களுக்கும் நடப்பது தான்.

ஆனந்த விகடன் கட்டுரை நல்லா இருக்கு என்று கட்டுரையாளரைத் தொடர்பு கொண்டு பாராட்டுபவர்கள் எத்தனை பேருக்கு அதனை அழகுற வடிவமைத்து வெளிக்கொணரும் வடிவமைப்பாளர் பாண்டியனைத் தெரியும்..?

ஒவ்வொரு கட்டுரையையும் எழுத்தாளருக்கு இருக்கும் அதே அக்கறையுடனும் ஆர்வத்துடனும் பிழை திருத்தி,சரி செய்து வாசகனுக்குத் தரும் மானா பாஸ்கரையும்,சிவசுப்ரமணியத்தையும் எத்தனை பேருக்குத்  தெரியும்..?

கட்டுரையாளரைப் போட்டி போட்டுப் பாராட்டிய நாம் என்றாவது ஒருநாள் இதழின் பின்னணியில் இருந்து அதனை வெளிக்கொணர்ந்த இத்தகையோரைப் பாராட்டியிருக்கிறோமா..?

இதழில் ஏற்படும் பிழைகளுக்கு இவர்கள் மீது அலுவலகத்தில் ஏற்படும் விமர்சனங்களில்,இன்னும் சொல்லப் போனால் வசவுகளில் ஒரு சதவீதம் அளவு கூட,இதழின் வெற்றியில் பொது வெளியிலும் சரி,அலுவலகத்திலும் சரி இவர்களுக்கு பங்கு அளிக்கப்ப‌டுவதில்லை என்பது கசப்பான நிஜம்.பிறரது ஊதியம் உயரும் விகிதாச்சாரத்தில் இவர்களுக்கான ஊதியமும் உயர்வதில்லை என்பது இன்னொரு நிஜம்.

கச்சேரி சாலை தினகரன் நாளிதழ் கேடி பிரதர்சின் கைக்கு மாறிய சமயம்.

பம்பாயில் குண்டு வெடித்து 4 பேர் பலி என்ற செய்தியை சரியாக புரூப் பார்க்காததால் பம்பாயில் குண்டி வெடித்து 4 பேர் பலி என்று மறுநாள் போஸ்டரில் இடம் பெற்றுவிட்டது.ஊரே சிரிப்பாய்ச் சிரித்தது.இப்பொழுது தெரிந்து கொள்ளலாம் புரூப் ரீடர் பணியின் முக்கியத்துவத்தை.

இனி செய்திக்கு வருவோம்.
னந்த விகடனில் 17 வருடங்களாக பணியாற்றியவர் ச‌.சிவசுப்ரமணியன் என்பவர்.இவர் தற்பொழுது ஆ.வி.உதவி ஆசிரியராக இருக்கிறார்.இவரது இப்பொழுதைய வயது 47.ஏற‌த்தாழ 30 ஆவது வயதில் விகடனில் பணிக்குச் சேர்ந்தார்.அதிகம் பேச மாட்டார்.எப்பொழுதும் முகத்தில் மெல்லிய சிரிப்பைத் தாண்டி வேறு எதையும் பார்க்க முடியாது.இவருக்குப் பின் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த எத்தனையோ பேர் உயர்ந்த இடத்திற்குச் செல்ல இவரது நிலையில் பெரிய மாற்றம் இல்லை.உதவி ஆசிரியர் தான்.

 இவருக்கு அளிக்கப்பட்ட பணி என்னவென்றால்  பிழை திருத்துவது மட்டும் தான்.17 வருடங்களாக‌ இந்தப்பணியைத் தான் திறம்பட செய்து வருகிறார்.

ஆனந்த விகடனின் 100 பக்கத்தையும் இவரும் இன்னொருவரும் சேர்ந்து தான் அதன் தலைப்பில் இருந்து வார்த்தை அமைப்புக்கள்,எழுத்துப்பிழை உட்பட அனைத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து இறுதி செய்வார்கள்.
இதில் ஏதாவது எப்பொழுதாவது அவர்களை அறியாமல் தவறு நேர்ந்தால் அவர்கள் காலி தான்.ஆனால் அப்படி தவறுகள் ஏற்படுவதற்கான சூழல் இதுவரை அதிகம் வந்ததில்லை.

விகடன் குழுமத்தின் வேலை நேரம் குறித்துச் சொல்லியாக வேண்டும்.

விகடன் குழுமத்தில் இப்பொழுது தான் எல்லோரும் கொஞ்சம் சீக்கிரமாக அதாவது இரவு 7 மணிக்குள் அல்லது 8 மணிக்குள் வீட்டிற்குத் திரும்ப முடிகிறது.மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை சாமக் கோடாங்கி தான்.எப்பொழுது வீடு திரும்புவோம் என்பது வேலை செய்கிற யாருக்கும் தெரியாது.கொடுக்கிற சம்பளத்திற்கு பல மடங்கு உழைப்பை உறிஞ்சி விட்டுத் தான் விடுவார்கள்.நேரங்காலம் தெரியாமல் தான் உழைக்க வேண்டும்.

ஆனால் அப்பொழுது மட்டுமல்ல,இப்பொழுதும் எப்பொழுதும் கடுமையாக உழைத்தவர் தான் சிவசுப்ரமணியம்.
அதுவும் இதழ் முடிக்கும் நாள் என்றால் நள்ளிரவு வரை தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைக் கண் உறங்காமல் பார்த்து விட்டு,அலுவலகத்தில் தரையில் செய்தித்தாளை விரித்து படுத்து எத்தனையோ கணக்கற்ற இரவுகளைக் கழித்திருக்கிறார்.

இப்படி ஆனந்த விகடனின் வளர்ச்சியில் கடந்த 17 ஆண்டுகளாகப் பிரிக்க முடியாத பங்கினை வகித்தவர் தான் சிவசுப்ரமணியம்.

ஆனால் இந்த சிவசுப்ரமணியம் தான் கடந்த வாரம் ,வேலையை விட்டு சொடக்குப் போடும் நேரத்தில் நீக்கப்பட்டிருக்கிறார்.அவர் என்ன தவறு செய்தார் என்கின்றீர்களா..?

அலுவலகப் பணத்தைத் திருடினாரா,,?இல்லை அலுவலக ரகசியத்தை (!)வெளியே கசிய விட்டாரா..? இல்லை இலங்கைத் தூதருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுக்கு மறைமுகமாக வேலை செய்தாரா..?இல்லை தனக்குப் பிடித்த காவல்துறை அதிகாரிகளை புகழச்செய்து கட்டுரை வெளியிட்டாரா..?இல்லை டேபிள் ஒர்க் செய்து பெண் புலிகள் இன்று விபச்சாரம் செய்கிறார்கள் என்று இலங்கை அரசின் கைக்கூலியாய் நேர்காணல் வெளியிட்டாரா..?இல்லை சில நூறுகள் கவர் வாங்கினாரா,,?இல்லை செய்யும் வேலையில் திருத்திக் கொள்ள‌ முடியாத‌ மிகப்பெரிய தவறு செய்தாரா..?

எதுவும் இல்லை.

அப்படியென்றால் என்ன செய்தார் என்கின்றீர்களா..?

'தி ஹிந்து' ஆங்கில நாளிதழ் தொடங்க உத்தேசித்து இருக்கும் 'காமதேனு' நாளிதழுக்கு வேலைக்காக இன்டர்வியூ சென்று விட்டு வந்தார்.அவ்வளவு தான்.இத்தனைக்கும் அவர் இன்னும் அங்கு வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூட இல்லை.

இந்த ஒற்றைக்காரணத்திற்காக தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது.?

இனி நடந்தவற்றைத் தருகிறோம்.

காமதேனு நாளிதழுக்கு வேலைக்காக இண்டர்வியூ செல்லும் பொருட்டு இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறார்.

இரண்டாம் நாள் மாலை ஆனந்த விகடன் ஆசிரியரும் பதிப்பாளருமான ரா.கண்ணனிடம் இருந்து தொலைபேசி வருகிறது.

"என்ன சார் ஆபிஸ் வரலையா"..?

"கொஞ்சம் தலைவலி சார்.அதான் வரலை" என்று பதில் சொல்லியிருக்கிறார்.

"ஹிந்து வுக்கு இண்டர்வியூவுக்குப் போனதுன்னால வந்த தலைவலியா சார்..?" என்று மறுமுனை கேட்டிருக்கிறது.

உடனே பதில் சொல்லி மழுப்பி விட்டு மறுநாள் வேலைக்குச் சென்றிருக்கிறார்.

அலுவலகம் உள்ளே சென்றவுடன் ஆசிரியரிடமிருந்து அழைப்பு.

"என்ன சார் நேற்று ஹிந்து தமிழ் டெய்லிக்கு இண்டர்வியூவுக்கு போனீங்க போல"?.

இதில் பொய் சொல்ல என்ன இருக்கிறது என்று,'ஆமாம் சார் போனேன்' என்று சிவசுப்ரமணியம் பதில் சொல்லியிருக்கிறார்.

உடனே ஆசிரியர்,நீங்க ஒரு ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்திட்டு இங்கிருந்து கிள‌ம்புங்க என்று ஒற்றை வரியில் சொல்லி அவருக்கு விடை கொடுத்து விட்டார்.

கண்ணில் துளிர்த்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து விட்டு,கொஞ்ச நேரத்தில் ராஜினாமா கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு 17 வருடங்கள் எந்த ஆனந்த விகடனுக்காக  நேரத்துக்கு உறங்காமல்,உண்ணாமல் இரவும் பகலும் வேலை பார்த்தாரோ அந்த வளாகத்தை விட்டு உதவி ஆசிரியர் சிவசுப்ரமணியன் அமைதியாகக் கிளம்பி விட்டார்.நாம் கேட்பது இது தான்.

ஒரு தொழிலாளி ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கையில் இன்னொரு பத்திரிகை அலுவலகத்திற்கு வேலைக்கு இண்டர்வியூவுக்கு செல்வது கிரிமினல் குற்றமா என்ன..?

இது அவன் உரிமை இல்லையா.?எங்கு வேலை பார்க்க வேண்டும்..?என்ன சம்பளத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அவனுக்குத் தீர்மானிக்கும் உரிமை கூடவா இல்லை..?

தற்பொழுது பணியாற்றும் நிறுவனத்தின் வேலையை விட்டுச் செல்வதற்கு முன்,உரிய காலக்கெடுவில் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்தால் போதாதா..?

இங்கு தொழில் துவங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கூட‌ ஆனந்த விகடனைப் போல் தொழிலாளியை நடத்துவது இல்லையே...!

சிவசுப்ரமணியன் செய்தது கிரிமினல் குற்றம் என்றே ஆனந்த விகடனின் அகராதிப்படி (ஒரு வாதத்திற்கு) வைத்துக் கொள்வோம்.

உங்கள் அலுவலகத்தில் இருந்து எத்தனை செய்தியாளர்கள் 'தி ஹிந்து' தொடங்க இருக்கும் தமிழ் நாளிதழுக்கு வேலைக்காக இண்டர்வியூவுக்கு சென்று வந்துள்ளார்கள் என்ற பட்டியல் எங்களை விட உங்களுக்கு நன்கு தெரியும்.அவர்கள் மீது உங்களால் நடவடிக்கை எடுக்க முடியுமா..?முடியாது.

இவ்வளவு ஏன்..உங்கள் ஜூனியர் விகடன் முதன்மைப் பொறுப்பாசிரியர் காமதேனுவில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் கூட வாங்கி வந்து விட்டார்.

ஆனாலும் இன்னும் உங்கள் அலுவலகத்தில் தானே நீடிக்கிறார்..?அவரை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களைப் போல எங்களுக்கும் தெரியும்.

உங்களின் முன்னாள் மூத்த நிருபர் டி.எல்.சஞ்சீவி குமார் உங்கள் அலுவலகத்தை விட்டு ராஜினாமா கடிதம் கொடுத்து அதன் பின் ஜே.கே.பில்டர்ஸ் என்னும் ரியல் எஸ்டேட்காரர் நடத்தும் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பின் ஒன்றரை மாதம் கழித்துத் தானே நீங்கள் ரிலீவ் லெட்டரே கொடுத்தீர்கள்.இப்பொழுது இவரும் காமதேனுவில் வேலைக்குச் சேர்ந்து விட்டார்.

வேலையை விட்டுப் போகிறேன் என்று சொல்லி விட்டுச் சென்ற சஞ்சீவி குமாரை 45 நாட்கள் இழுத்துப் பிடித்த‌ நீங்கள்,இண்டர்வியூ சென்று வந்த ஒரே காரணத்திற்காய் பேப்பரைக் கசக்கி எறிவது போல சிவசுப்ரமணியனை வேலையை விட்டுத் தூக்கி எறிந்தது ஏன்..?

சிவசுப்ரமணியன் போன்ற‌ உதவி ஆசிரியர்கள் எதுவும் எதிர்த்துப் பேச மாட்டார்கள்,அவரை எப்படியும் தூக்கி எறியலாம் என்னும் எதேச்சதிகாரமான முடிவு தானே..?

உங்களின் இந்த முடிவு அவருக்கு வேறு பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியாதா..?
ஒருவேளை காமதேனு இவரை வேலைக்குச் சேர்க்கவில்லை என்றால் இவரும் இவரது குடும்பமும் நடுத்தெருவில் தானே நிற்க வேண்டும்.

இன்னொரு பக்கம்,இவர் ஆ.வி.யில் வேலையில் இல்லை என்று தெரிந்தால் காமதேனு நாளிதழ் இவருக்கு கொடுக்க எண்ணியுள்ள சம்பளத்தில் கையை வைக்கும்,இப்பொழுது வாங்கும் சம்பளத்தை விட‌ அடி மாட்டு ரேட்டுக்கு வேலைக்கு அழைக்கும் என்பது தெரியாதா..?

இல்லை இதெல்லாம் நடக்கட்டும் என்று தெரிந்து தான் வேலையை விட்டு நீக்கினார்களா..?

வேறொரு கோணத்தில் பார்த்தோமானால்,நீங்கள்  பொறாமைப்பட்டு,ஆத்திரப்பட்டு வேலையை விட்டு நீக்கும் அள‌வுக்கு அவர் மிக உயர்ந்த இடத்திற்கும் செல்லப் போவதில்லையே..?

இதுவரை உங்களிடம் சொற்ப சம்பளத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்த தொழிலாளி,இன்னும் சில ஆயிரங்கள் அதிகச் சம்பள‌த்தில் ஹிந்து முதலாளிக்கு சேவகம் செய்யப் போகிறார்.தனது உழைப்பைச் சுரண்ட தெரிந்தே அனுமதிக்கப் போகிறார்.

யாருக்கு 'அடிமை'யாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க‌ கூட‌ அவருக்கு உரிமை இல்லையா..?

உங்களின் முடிவுக்கு எதிராக,வலுக்கட்டாயமாக என்னிடம் கடிதம் பெற்றார்கள் என்று ஒரு பத்திரிகையாளர் தொழிற்சங்கத்தை நாடியுள்ள சிவசுப்ரமணியம் நாளை தொழிலாளர் நல நீதிமன்றத்தை நாடினால் என்னவாகும் என்று எதிர்பார்த்தீர்களா..?

அவருக்கு எவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன..?

இவ்வளவு ஏன்..?

பணக் கணக்கை,விடுங்கள்.

நீங்கள் தொழிலாளர் உரிமைக்காய்,அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்காய் எத்தனை,எத்தனை கட்டுரை வெளியிட்டிருப்பீர்கள்...?

இது தொடர்பான எத்தனை நூல்களின் விமர்சனங்களை வெளியிட்டிருப்பீர்கள்..?

முதல் பக்கத்தில் தலையங்கம் தீட்டியிருப்பீர்கள்..?

ஏன் நடப்பு  (17-ஜூலை-2013)இதழில் கூட சவூதி அரேபியாவில் இருந்து துரத்தப்படும் தொழிலாளிக்காக விகடனில்,'உழைப்பைச் சுரண்டச் சொல்லிக் கெஞ்சாதீர்கள்'
என்ற தலைப்பில் கட்டுரை நெஞ்சுருக வடித்தீர்களே..! நாங்கள் கூட நினைத்தோமே விகடனுக்கு தொழிலாளர் வர்க்கத்தின் மீது என்னே அக்கறை என்று..!

இப்பொழுது தானே தெரிகிறது..

நாங்கள் 'உழைப்பைச் சுரண்டச் சொல்லிக் கெஞ்சாதீர்கள்' கட்டுரையைப் படிப்பதற்காக‌ அச்சுக்கு அனுப்பும் முன்பு அதற்கு புரூப் பார்த்த தொழிலாளியின் சீட்டைக் கிழித்து வீட்டுக்கு அனுப்பி விட்டீர்கள் என்று.

குறைந்த பட்சமாவது நேர்மையாய் இருங்களேன்...!

சிவசுப்ரமணியத்தைத் திரும்ப‌ அழைத்து வலுக்கட்டாயமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட‌ அவரது ராஜினாமாவைத் திரும்பக் கொடுத்து அவரை மீண்டும் பணியில் சேர்ப்பதும்,அவர் விரும்பும் வரையில் பணியில் தொடரச் செய்வதும் தான் தீர்வு.

இல்லை நாங்கள் கட்டுரையாள‌ர்களை வைத்து முற்போக்காய் எழுதுவோம்.அதனை விற்பனைச் சரக்காக்கி விற்பனை செய்வோம்.ஆனால் அதில் குறைந்த பட்ச நேர்மையுடன் கூட நடக்க மாட்டோம் என்று சொன்னால்,நீங்கள் பாம்பு தன் சட்டையை உரிப்பது போல உங்கள் நேர்மையின்மையை,நிருபித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று ஊருக்கும் உலகுக்கும் இன்னொரு முறை தெரியப் போகிறது.

தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_13.html