Showing posts with label முறைகேடு. Show all posts
Showing posts with label முறைகேடு. Show all posts

Tuesday, 14 August 2012

தினமணி-மெய்யாலுமா சார்..?



தினமணியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மெய்யாலுமா என்னும் பகுதி வருகிறது.அரசியல்கட்சிகள் மற்றும் அதிகாரிகள் தொடர்புடைய திரைமறைவு செய்திகள் கிசுகிசுக்களாக இதில் பரிமாறப்படுகிறது.

மற்ற கிசுகிசுக்களைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதாக இது இருக்காது.



எழுதுபவர் இலக்கியப் புலமை,பழந்தமிழ் மன்னர்கள் பற்றிய ஞானம், மற்றும் ஆன்மீகத்தில்  ஈடுபாடு உடையவர் என்பதால் ஒவ்வொரு தகவலும்,மேற்கண்டவை தொடர்புடைய குறிப்புகளின் ஊடாகப் பரிமாறப்படும்.

இந்தப் பகுதிக்குச் செய்திகளை நாடு முழுவதுமிலிருந்து அளிப்பவர்கள் அதன் நிருபர்கள்.

அதனை கிசுகிசுவாக மாற்றி எழுதுபவர் அதன் ஆசிரியர் என்று சொல்கிறார்கள்.




அந்தப் பகுதியின் இணைப்பு இது.



நிறைய வாசகர்கள் கொண்ட பகுதி இது.நிற்க..

இனி மேலே சொன்னவற்றிற்கு தொடர்பற்ற நம் செய்திப் பதிவுக்கு வருவோம்.

நிமிர்ந்த நடையுடன் யார்க்கும் அஞ்சாத பார்வையுடன் தினசரி ஒலிக்கும் இதழைப் பற்றிய செய்தி இது.அதன் ஆசிரியராய்  சீர்காழி அருகே எழுந்தருளியிருக்கும் வைத்தீஸ்வரர் ஆலயத்தின் மூலவர் பெயர் கொண்டவர் இருக்கிறாராம்.இவர் நடுநிலை பிறழாதவரைப் போல் காட்டிக் கொள்வதில் வல்லவராம்.ஆனால் நிஜத்திலோ..?

எடுத்துக் காட்டாய் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறார்கள்.

அந்த நாளிதழில் வாரம்வாரம் அரசியல் புரணி பகுதி ஒன்று வெளிவருகிறதாம்.அதற்கு அதன் நிருபர்கள் கஷ்டப்பட்டு அனுப்பும் செய்தியை இவர் கொஞ்சம் உருமாற்றி எழுதுகிறாராம்.

இந்தப் பகுதிக்கு அலுவலகத்தில் வாரம் 10 ஆயிரம் ரூபாய் கணக்கெழுதி வாங்கப்படுகிறதாம்.ஆனால் அது செய்தி கொடுத்த சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு கொடுக்காமல் இடையில் வேறொருவருக்கு மடை மாற்றப்படுகிறதாம்.

சம்பந்தப்பட்ட நிருபர்களுக்கு ”புளியோதரை” மட்டும் தான் கொடுக்கப்படுகிறதாம்.

ஊரெல்லாம் துப்பு துலக்கி அம்பலப்படுத்தும் பகுதியிலேயே ஊழலா என்று அங்குள்ளவர்கள் முனங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.

மெய்யாலுமா..? 

எல்லாம் அந்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதனுக்கே வெளிச்சம்...!

Wednesday, 4 January 2012

முதலாளியைப் பார்த்து எழுந்து நின்ற குமுதம் நிருபர் எழில் செல்விக்கு கல்தா!




தனது கட்டுப்பாட்டில் தான் குமுதம் இருக்கிற‌து என்பதை அடிக்கடி உலகுக்கும் தனக்குக் கீழ் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கும் பறை சாற்றுவதற்காகவும் தனது அதிகார இருப்பை நிலை நிறுத்துவதற்காகவும் ஏதாவது தான்தோன்றித்தனமான,அதிகார நடவடிக்கைகளை பி.வரதராஜன் எடுப்பது பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அறிந்த செய்தி.

இப்படிப்பட்ட நடவடிக்கையில் சமீபத்தில் இடம் பெற்றிருப்பது குமுதம் ஸ்நேகிதியில் நிருபராக வேலை பார்த்த எழில் செல்விக்கு அளிக்கப் பட்ட கல்தா.இவரைக் கடந்த வாரம் கல்தா கொடுத்து அனுப்பியுள்ள‌து பி.வரதராஜன் தரப்பு.இவரது கல்தாவுக்கு என்ன காரணம் தெரியுமா?
குமுதம் நிர்வாகத்தில் பல கோடி மோசடி செய்தாரா?அல்லது குமுதம் சொத்தை ஆட்டையைப் போட்டாரா?எதுவும் கிடையாது.சில வாரங்களுக்கு முன் குமுதம் நிறுவனரும் முதலாளியின் மகனுமான டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மற்றும் கோதை ஆச்சி இருவரும் குமுதம் அலுவலகம் வந்தன‌ர்.(வயதான கோதை ஆச்சிக்கு படியேற உதவி செய்த குமுதம் எப்.எம்.ரோகிணி என்பவருக்கு ஏற்கனவே கல்தா கொடுக்கப் பட்டது நினைவிருக்கலாம்) 

அப்பொழுது  டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அலுவலகம் உள்ளே வந்த பொழுது மரியாதை நிமித்தம் குமுதம் ஸ்நேகிதியில் நிருபராக வேலை பார்த்த எழில் செல்வி எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்.இதனை வீடியோவில் கண்டு கொதித்த பி.வரதராஜன் கடந்த வாரம் எழில் செல்விக்கு கல்தா கொடுத்து அனுப்பி விட்டார்.

இதனால் டாக்டர் ஜவகர் பழனியப்பன் அவர்களை அலுவலகத்தில் பார்த்து எழுந்து நின்றவர்கள்,வணக்கம் சொன்னவர்கள்,பேசியவர்கள்,கண்ணால் கண்டவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே நமக்கும் கல்தா ஓலை வந்து விடுமோ என்று பயந்து போய்க் கிடக்கிறார்கள் என்று இப்பொழுது பத்திரிக்கை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.