தனது கட்டுப்பாட்டில் தான் குமுதம் இருக்கிறது என்பதை அடிக்கடி உலகுக்கும் தனக்குக் கீழ் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கும் பறை சாற்றுவதற்காகவும் தனது அதிகார இருப்பை நிலை நிறுத்துவதற்காகவும் ஏதாவது தான்தோன்றித்தனமான,அதிகார நடவடிக்கைகளை பி.வரதராஜன் எடுப்பது பத்திரிக்கையாளர்கள் அனைவரும் அறிந்த செய்தி.
இப்படிப்பட்ட நடவடிக்கையில் சமீபத்தில் இடம் பெற்றிருப்பது குமுதம் ஸ்நேகிதியில் நிருபராக வேலை பார்த்த எழில் செல்விக்கு அளிக்கப் பட்ட கல்தா.இவரைக் கடந்த வாரம் கல்தா கொடுத்து அனுப்பியுள்ளது பி.வரதராஜன் தரப்பு.இவரது கல்தாவுக்கு என்ன காரணம் தெரியுமா?
குமுதம் நிர்வாகத்தில் பல கோடி மோசடி செய்தாரா?அல்லது குமுதம் சொத்தை ஆட்டையைப் போட்டாரா?எதுவும் கிடையாது.சில வாரங்களுக்கு முன் குமுதம் நிறுவனரும் முதலாளியின் மகனுமான டாக்டர் ஜவஹர் பழனியப்பன் மற்றும் கோதை ஆச்சி இருவரும் குமுதம் அலுவலகம் வந்தனர்.(வயதான கோதை ஆச்சிக்கு படியேற உதவி செய்த குமுதம் எப்.எம்.ரோகிணி என்பவருக்கு ஏற்கனவே கல்தா கொடுக்கப் பட்டது நினைவிருக்கலாம்)
அப்பொழுது டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அலுவலகம் உள்ளே வந்த பொழுது மரியாதை நிமித்தம் குமுதம் ஸ்நேகிதியில் நிருபராக வேலை பார்த்த எழில் செல்வி எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்.இதனை வீடியோவில் கண்டு கொதித்த பி.வரதராஜன் கடந்த வாரம் எழில் செல்விக்கு கல்தா கொடுத்து அனுப்பி விட்டார்.
இதனால் டாக்டர் ஜவகர் பழனியப்பன் அவர்களை அலுவலகத்தில் பார்த்து எழுந்து நின்றவர்கள்,வணக்கம் சொன்னவர்கள்,பேசியவர்கள்,கண்ணால் கண்டவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கே நமக்கும் கல்தா ஓலை வந்து விடுமோ என்று பயந்து போய்க் கிடக்கிறார்கள் என்று இப்பொழுது பத்திரிக்கை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
2 comments:
முதலாலிகள் சண்டையில் இப்படி வேலை செய்பவர்கள் வெளியேற்றபடுவதை ஜவகர் பழனியப்பன் அவர்களுக்கு தெரிந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அங்கு இருக்கும் அனைவருக்கும் அவர் மீது நம்பிக்கையின்மையும் , வேதனையாகவும் இருக்கும், அவரோட தந்தை கட்டிகாத்த குமுதத்தின் நல்ல பெயரை காப்பற்ற முடியாத இந்த நிலையில் பிரச்சனைகளுக்கு பிறகு எந்த வேலையாட்கள் திரு ஜவகர் பழனியப்பன் அவர்களை நம்பி வேலை பார்க்க முடியும் ? தொழிலாளிகளை எல்லாம் அழைத்து பேசி ஒரு நம்பிக்கை கொடுத்தால் மட்டுமே அவர் தந்தை விட்டு சென்ற குமுதத்தை தொடர்ந்து நடத்த முடியும்
இலையென்றால் ஒரு மலையால பழமொழியின் நிலை தான் பெட்டி போனால் என்ன தாக்கோல்( சாவி ) இருக்கிறதே என்ற சொல்லுக்கேற்ப வெறும் குமுதம் இருந்த இடத்தில் கட்டிடம் மட்டுமே மிச்சமாகும்..........
எப்படி இருந்த “ குமுதம் “ இப்படி ஆகிபோச்சே......... குடும்ப சண்டையில் ஒரு கலைஞர் டி.வி உருவானது, அது போல முதலாலிகள் சண்டையில் ஒரு பத்திரிகை உருவாகுமா ?
Post a Comment