Sunday, 8 January 2012

நக்கீரன் மீது தாக்குதல்-அடாது செய்தவன் படாது படுவான்!




                                                   அ.தி.மு.க.எதிர்வினை







பத்திரிகைகள் அறம் இழந்து,அரசியல் தரம் தாழ்ந்து காலம் பல ஓடி விட்டது.

இப்பொழுது நடுநிலை பத்திரிகைகள்,மக்களுக்கான அரசியல் என்பதெல்லாம் நாட்டில் துளியும் இல்லை.இப்பொழுது எல்லாம் வணிகமயமாகிவிட்டது.


தனது கையில் பத்திரிகை இருக்கிறது என்பதற்காக நக்கீரன்,கருணாநிதியின் கைப்பாவையாக மாறி முத்துவேலர் கருணாநிதியை அடிமட்ட திமுக தொண்டனைப் போல கலைஞர் என்று துதிபாடி விட்டு ஜெயலலிதாவை மாமி என்று விமர்சிக்கும் பொழுது அந்த விமர்சனத்தில் ஒரு பக்க சார்பும் பிழைப்புவாதமும் தான் இருக்கிறது.நேர்மை துளியும் இல்லை.

மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான், என்று எழுதுவதில் இருந்த "திராவிடத்'துடிப்பு, பட்டுவேட்டி கட்டிக்கொண்டு பெரியகோவிலுக்கு பின்வாசல் வழியே வந்த கருணாநிதியைப் பற்றி எழுதுவதில் எங்கே போனது?
முரசொலியின் வாரப் பதிப்புதான் நக்கீரன் என்பதை நிரூபிப்பதில் இத்தனை பட்டும் மாறவில்லை.


பிரபாகரனைப் பற்றிய ஜெகத் கஸ்பாரின் கட்டுக்கதைகளை நம்பி லாபம்பார்த்த நக்கீரன், இப்போது மற்றொரு வழியைத் தேடியிருக்கிறது என்பதற்கு மேலாக இதில் சொல்ல ஒன்றுமில்லை. 


அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு மனதில் தோன்றுவதையெல்லாம், போயஸ்கார்டனில் இருந்து பார்த்ததுபோல் எழுதி மக்களின் பணத்தை பிடுங்கும் நக்கீரனுக்கும், பேச்சுகொடுத்துக்கொண்டே பிளேடு போடும் திருடனுக்கும் என்ன வேறுபாடு என்பது தெரியவில்லை.

தனது பத்திரிகை விற்பனையைப் பெருக்குவதற்காகவும்,கருணாநிதியைத் துதிபாடுவதற்காகவும் எழுதுவது பத்திரிக்கை சுதந்திரம் இல்லை.


அரசியல்வாதிகளிடம் நடுநிலையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது.


அதுபோல் பத்திரிகைகளிடமும் நடுநிலையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனமாக்கப்படுவதற்கு சமீபத்திய ஆதாரம்தான் நக்கீரன்.

1 comment:

Barari said...

இது நக்கீரனுக்கு மட்டுமல்ல அனைத்து புலனாய்வு ப்புடுங்கிகலுக்கும் பொருந்தும்.