Thursday, 5 January 2012

தினமும் 110 படிகள் ஏறி இறங்க வைத்துச் சித்திரவதை-குமுதத்தில் இருந்து ஆந்தை குமார் ராஜினாமா!



                                                     
                             கருணாநிதியை நேர்காணல் செய்யும் ஆந்தைகுமார்

குமுதம் ஹெல்த்தில் நிருபராகவும் அதன் பெரும்பாலான பணிகளையும் செய்து வந்த ஆந்தை குமார் வரதராஜனின் தொடர் தொந்தரவுகளால் கடந்த வாரம் ராஜினாமா செய்துள்ளார்.

ஆந்தை குமார் விகடன் மாணவ நிருபராக பத்திரிகைத் துறைக்கு வந்தவர்.ஆரம்பத்தில் விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடனில் பணிக்குச் சேர்ந்தார்.ஆந்தையாரின் ராத்திரி ரவுண்ட் அப் என்னும் இவரது பகுதி அப்பொழுது மிகப் பிரபல்யம்.இவர் சொல்லும் தகவல்கள் மிகச் சரியாக இருக்கும்.

அதன் பின் சிறிது காலம் கழித்து இதயம் பேசுகிறது பத்திரிக்கையில் நிருபராகச் சேர்ந்து அங்கு சிறிது காலம் பணியாற்றினார். அதன்பின் குமுதம் குழுமத்தில் ரிப்போர்ட்டரில் பணிக்குச் சேர்ந்தார்.ஆரம்ப காலத்தில் வரதராஜன் இவருடன் நல்ல நட்பில் இருந்தார்.குமுதம் எப்.எம்.ஆரம்பிக்கும் பொழுது பெரும்பாலான் பணிகளை இவரே செய்து முடித்தார்.ஆனால் வரதராஜனுடன் நீண்ட காலம் யாரும் நட்பில் இருக்க முடியாது என்ற இலக்கணத்தின் படி சிறிது காலம் கழித்து இவரை வரதராஜன் பழி வாங்கத் தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக இவரை குமுதம் ஹெல்த்துக்கு வரதராஜன் மாற்றினார்.ஒரு ஆசிரியர் ஒரு நிருபர் மட்டுமே உள்ள ஹெல்த் இதழில் பல வேலைகளை இவர் தலையில் கட்டினார்.மேலும் இவரைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரை அசைன்மெண்ட் என்ற பெயரில் வரதராஜன் மாமல்லபுரம்,காஞ்சிபுரம்,திருச்சி என்று தினமும் பந்தாடினார்.உடல் நலம் குன்றிய நிலையிலும் இவர் தொந்திரவுகளைச் சமாளித்து வந்தார்.


                                                         ஆந்தைகுமார்

இந்த நிலையில் கோதை ஆச்சி அலுவலகத்துக்கு வருவதைத் தடுக்கும் நோக்குடன் அலுவலக லிப்ட் இயங்குவது திட்டமிட்டு நிறுத்தப் பட்டது.இது இவரையும் பாதித்தது.குமுதம் அலுவலகம் செல்ல தரைத்தளத்திலிருந்து 55 படிகள் ஏற வேண்டும்.திரும்ப கீழே இறங்க 55 படிகள் கடக்க வேண்டும்.

காலை மேலே செல்லும் இவர் தேனீர் அருந்தக்கூட இன்னொரு 110 படிகள் ஏறி இறங்க வேண்டும்.இதனால் இவரால் வெளியே செல்ல முடியவில்லை.லிப்ட்டை இயக்க பலமுறை வேண்டுகோள் வைத்தும் வேண்டுமென்றே வரதராஜன் அதனைச் செயல்படுத்த வில்லை.பல வழிகளில் வரதாராஜனும் இவரைத் தினமும் தொந்தரவு செய்து வந்தார்.

ஆகவே வேறு வழியில்லாமல் கடந்த வாரம் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.இந்தக் கடிதத்தை குழுமஆசிரியரிடம்(ஸ்...ஸ்..தாங்க முடியலையப்பா!) கொடுக்கும் பொழுது என்னாச்சு சார்?என்று கரிசனையுடன் கேட்டுள்ளார்.இவரது விலகல் வரதராஜனுக்குத் தான் நினைத்ததைச் சாதித்து விட்டோம் என்னும் குரூர மன்ப்பான்மையுடன் குதூகலம் செய்ய வைத்ததாம்.


No comments: