அது நடந்தது 98 ல் தான் என்று மீண்டும் நினைக்கிறேன். இனி சென்னை நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து என்னிடமிருந்த‘ திலகாஷ்ட மகிஷ பந்தனங்களை ’பேக் அப் பண்ணி ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். ஊரில் போய் ஒரு அஞ்சு வருஷத்துக்கு பலசரக்கு கடைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல், நன்றாகச் சம்பாதித்துவிட்டு சென்னைக்குத் திரும்பி வந்து பட வாய்ப்புகள் தேடி பழையபடி சீரழிவது என்பது அப்போதைய உத்தேசம்.
இதை எப்படியோ கேள்விப்பட்டு மனஉணர்ச்சிக் கொந்தளிப்பு நிலையை அடைந்த மணா என்னை அழைத்தார். பிரித்திஷ் நந்தியோ,குஷ்வந்த் சிங்கோ,பத்திரிகை துறையை விட்டுவிட்டு, பலசரக்குக் கடைக்கு போவது போல கொஞ்சம் ஓவராகவே இருந்தது அவரது ஃபீலிங்ஸ். பட் ஐ லைக் தேட்.
அவரே எனக்காக ஒரு ‘என்குறிப்பு’ தயாரித்தார். வேற எதுவும் பேசக்கூடாது. நாளைக்குக் காலைல என்னை ‘குமுதம் ‘ ஆபிஸ்ல வந்து பாருங்க’ என்றபடி
கிளம்பினார்.
நான்கொஞ்சம் குழம்பினேன்.மறுநாள், குமுதம் அலுவலகம். கேட்டில் காத்திருந்து என்னை அழைத்துப்போனார் மணா. கொஞ்ச காலமாக எழுதுகிற வேலையை விட்டுவிட்டு இப்படி குமுதத்துக்கு இந்த ‘புள்ள புடிக்கிற’ வேலையை மட்டும்தான் பார்க்கிறார் என்பது அப்போதுதான் தெரிந்தது.
ரிஷப்சனில் உட்கார வைத்து, எனக்கு ,குமுதத்தில் என்ன மாதிரி பாலிட்ரிக்ஸ் நடக்கும் அதை சமாளிப்பது எப்படி என்று பாடம் நடத்தினார் மணா.
ஒரு வழியாக ஆசிரியரை சந்திக்க அழைப்பு வந்தது.ஒரு கேபினைக்காட்டி உள்ளே போகச்சொன்னார்கள்.உள்ளே போனால் ஆசிரியர் மாலன் அயர்ந்து
தூங்கிகொண்டிருந்தார்.
இதற்கு முன்பு மும்பையில்’ போல்டு இந்தியா’ என்றொரு தமிழ் தினசரி,நக்கீரன்’உட்பட ஏழெட்டு பத்திரிகைகளில் குப்பை கொட்டியிருந்த நான் ஒரு ஆசிரியர், அதுவும் ஒருகாலை வேலை நேரத்தில், இவ்வளவு
கம்பீரமாக தூங்கியதை அதுவரை பார்த்ததில்லை என்பதால் சற்று அதிர்ச்சிதான் அடைந்தேன்.
இவரை எப்படி எழுப்புவது? நமக்கு ‘குமுதம் ‘ஓபனிங்கே ரொம்பக்கேவலமா இருக்கே என்னசெய்வது என்று விழித்துக் கொண்டிருந்தேன். என் கையிலிருந்த என்குறிப்பு ஃபைலை அவரது டேபிளில் வைத்தேன். அவரது சங்கீத குறட்டைக்கு முன்னால் நான் ஃபைல் வைத்த சத்தம் கொசு குறட்டை விடுவது போல் பிசுபிசுத்தது.லேசாக கனைத்துப்பார்த்தேன். கச்சேரி மேலும் களை கட்டியதே தவிர மாலன் எழுந்திருக்கிறபாடாயில்லை.
சரி, ஊருக்கு கட்டின பொட்டிபடுக்கைய பிரிக்காமதான வந்திருக்கோம்.ஆனது ஆகட்டும் என்று சற்று சத்தமாகவே எழுப்பினேன். ரெண்டு கண்களும் விஜயகாந்தாய் சிவந்திருக்க எழுந்தார் மாலன்.எதிரில் ஒருஜந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறது என்பது அவருக்குதெரிவிக்கப்படவில்லை என்பதை உடனே புரிந்து கொண்டேன்.
‘’ரிப்போர்ட்டர் வேலைல ஜாயின் பண்றதுக்காக இன்னைக்கு வரச்சொல்லியிருந்தாங்க.’’
இதற்குள் எனது தன்குறிப்பு அவர் கைக்கு போயிருந்தது.சற்று நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவரின்முகம் இறுக்கமாகியது
.
’நக்கீரன்ல குமுதத்தையும்,பிராமிண்ஸையும் அடிக்கடி திட்டி எழுதுறது நீங்களும்’ துரையும்தான்னு சொல்லுவாங்க பிறகு எந்த முகத்த வச்சிக்கிட்டு இங்க வேலைக்கு வர்றீங்க?’’இது மாலன்.
’நக்கீரன்ல குமுதத்தையும்,பிராமிண்ஸையும் அடிக்கடி திட்டி எழுதுறது நீங்களும்’ துரையும்தான்னு சொல்லுவாங்க பிறகு எந்த முகத்த வச்சிக்கிட்டு இங்க வேலைக்கு வர்றீங்க?’’இது மாலன்.
கேள்வி நியாயமானதுதான் என்றும், இது எல்லாம் தெரிந்தேதான், மணா என்னை அழைத்து வந்தார் என்றும் .நான்அவரிடம் வேலை கேட்டுப்போகவில்லை. குமுதத்துக்கு புள்ள புடிக்கும் வேலையின் ஒரு பகுதியாகவே மணா என்னை அழைத்து வந்ததையும் நான் சொல்லமுயல, அதை அரைகுறையாகக் கேட்டுவிட்டு,இங்க ஒரு ப்ரூப் திருத்துறவர் வேலைதான் பாக்கி இருக்கு.அதுக்கு ஒகேன்னா சொல்லி அனுப்புறேன்’என்றபடி என்னை வெளியே அனுப்பினார்.
.
அதற்கு முன், பத்திரிகை நிருபராக.இணை ஆசிரியராக, ஆசிரியராக நான் எதுவும் சாதிக்கவில்லை எனினும் மாலன்அளவுக்கு நான் மங்குனி இல்லை.
இன்று எங்கு பார்த்தாலும் தமிழ் உணர்வாளர்கள் பொங்கி வழிகிறார்கள்.ஆனால் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சமயம்.புலிகளுக்கு ஆதராவாக செய்தி வெளியிட்டால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று அரசு அறிவித்திருந்த போது, நான் ஆசிரியராக இருந்த’சத்திரியன்’பத்திரிகையில் நெடுமாறன் அவர்களை’ வைத்து ‘மாவீரன் பிரபாகரன்’ என்றதொடரை வெளியிட்டவன் நான். அதனால்தான் சொன்னேன் நான் மாலன் அளவுக்கு மங்குனி இல்லை.ப்ரூப்’ திருத்தும் பணி சாதாரண பணி இல்லை .ஆனால் அதை மாலன் சொன்ன பாணி,எனக்குள் கொந்தளிப்பைஉண்டாக்கியது.
கேபினை விட்டு வேகமாக வெளியே வந்து மணாவைத்தேடினேன்.
ஒரு சிவத்த நண்பர் தன்னை நோக்கி என்னை அழைத்தார்.[ அவர் பெயர் எஸ்.எஸ்.என்பதும் அந்த ஆபீஸிலேயேகள்ளம்கபடம் இல்லாத ஒரே ஜீவன் அவர்தான் என்பதும் பின்னர் தெரிந்துகொண்டேன்]
எடிட்டோரியல் உதவியாளராகப்பணியாற்றி வந்த எஸ்.எஸ்.ஸிடம்’ தான் [புள்ள புடிக்கிற வேலையாக] வெளியே போய்விட்டு மதிய உணவுக்குத்தான் திரும்புவேன் என்றும் அதுவரை ‘நால்வர் அணியை’ ஒவ்வொருவராக நான் சந்திக்க வேண்டும் என்றும் மணா தகவல் சொல்லிவிட்டுப்போயிருப்பது தெரிந்தது.
நான் ஏற்கனவே சொன்னதுபோல், ரொம்ப லேட்டாக வந்திருக்கவேண்டிய குமுதம்’ ஆபிஸுக்கு சீக்கிரமே வந்துவிட்டதால், மாலன் மேட்டரோடு குமுதம் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டு பின்னர் வருகிறேன்.
அப்படி வரும்போது, george orwellன்’ animal farm’ நாவல் ஸ்டைலில் குமுதம் அனுபவத்தை எழுத ஆசை. பார்க்கலாம்.
நால்வர் அணியை சந்தித்து விட்டு லஞ்ச் க்கு தயாராகும்போது சரியாக மணா வந்து சேர்ந்தார்.எந்த புண்ணியவான் ஆரம்பித்தது என்று தெரியவில்லை.குமுதம் எடிட்டோரியலுக்கு எப்போதும் லஞ்ச் இலவசமாக போட்டார்கள்.
அதை சாப்பிடும் மூடெல்லாம் எனக்கு இல்லை.ஊருக்கு கிளம்பிக்கொண்டிருந்தவனை மாலன் முன்னால் நிறுத்தி அவமானப்படுத்திவிட்டாரே இந்த மணா என்பது மட்டும்தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

’’ மணா உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்’’ என்று அழைத்தேன்.
இப்போது அபிராமி தியேட்டர் வளாகம் அடியோடு மாறிவிட்டது என்று சொன்னார்கள். நான் சொல்கிற சமயத்தில் எங்கள் ரகசிய மீட்டிங் எல்லாமே அபிராமி தியேட்டர் கேண்டீனில் வைத்தே நடக்கும்.
இன்று யாரை குமுதத்தை விட்டு அனுப்பப்போகிறார்கள் என்ற தகவல் சம்பந்தப்பட்டவருக்கு முன்பே அபிராமி கேண்டீனில் வேலை செய்கிறவருக்கு தெரிந்துவிடும்.
மணா என்னை அங்கே அழைத்துப்போய் அப்படி ஒரு தகவலைத்தான் சொன்னார்.உங்க அப்பாயின்மெண்ட் ஆர்டர் ஏற்கனவே ரெடி ஆயிடுச்சி.மாலன் பேசுனதை மனசுல வச்சிக்காதீங்க. அவரு இன்னைக்கு லஞ்சோட வீட்டுக்கு அனுப்புறாங்க.எதையும் தெரிஞ்சமாதிரி காட்டிக்காம வந்து சாப்பிடுங்க’ என்றபடி என் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுபோய் சக எடிட்டோரியல் நண்பர்களுடன் உட்காரவைத்தார் மணா.
‘இவன கிளம்பச்சொல்லி ஒரு மணி நேரம் ஆச்சி.இப்படி தெனாவட்டா லஞ்ச்சுக்கு வந்து உட்கார்ந்திருக்கான்’

என்பது போல இருந்தது என் எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலனின் பார்வை.
நானோ மவனே நீ கிளம்ப ஒரு மணி நேரம் தான் இருக்கு.கடைசி லஞ்ச நல்லபடியா முடிச்சிக்கோ’
நானோ மவனே நீ கிளம்ப ஒரு மணி நேரம் தான் இருக்கு.கடைசி லஞ்ச நல்லபடியா முடிச்சிக்கோ’
என்று மனதில் நினைத்தபடி சாப்பிட ஆரம்பித்தேன்.
மதியம் 2மணிக்கு வேலையை விட்டுப்போகப்போகிறவருக்கு,அதுவும் பத்திரிகையின் எடிட்டருக்கு,அவர் வேலையை விட்டுப்போகப்போகிற தகவலை 1.59 வரை ரகசியமாய் வைத்திருந்து எப்படி ரெண்டு மணிக்கு திடீரென்று அனுப்பிவிடமுடியும் என்றெல்லாம் எனக்கு அப்போது யோசிக்கத்தோணவில்லை.
சிங்கங்களும், புலிகளும் சிறுத்தைகளும், குரங்குகளும் வாழும் குமுதம் அலுவலகத்தில் நானும் முத்துராமலிங்கன் என்ற குரங்காய் முதல் நாள் அடியெடுத்துவைத்தேன்.
சிங்கங்களும், புலிகளும் சிறுத்தைகளும், குரங்குகளும் வாழும் குமுதம் அலுவலகத்தில் நானும் முத்துராமலிங்கன் என்ற குரங்காய் முதல் நாள் அடியெடுத்துவைத்தேன்.
நன்றி-முத்துராமலிங்கம்-ஓஹோ புரடக்ஷன் இணையம்-
http://ohoproduction.blogspot.com/
தொடர்பற்ற ஆனால் தொடர்பான செய்தி.
குமுதத்துக்கு புள்ள புடிக்குற வேலை பார்த்த மணா என்கிற லட்சுமணன் இப்பொழுது வரதராஜனுக்காக ஆள் பிடித்துக் கொண்டிருக்கிறார்.குமுதம் முழுவதும் பி.வரதராஜனுக்கு சொந்தமானால் நல்லது என நினைப்பவர்.பி.வரதராஜனுக்கு ஆதரவாய்ச் செல்லும் இடம் எங்கும் பேசிக் கொண்டிருப்பவர்.
இவரை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்
3 comments:
Mr.Muthu Ramalingam sir,
I didn't know what happened then.but i can unedr stand your honest in the words.
In fact i came tio say you have humor sense,I like this type of narration.Thank you, keep publishing the truth. please mind that you have my best wishes and support always.
Mr.Muthu Ramalingam sir,
can i talk to you sir? or have you mail id?
Fantastic muthuramalingam
Post a Comment