Showing posts with label குமுதம் ரிப்போர்ட்டர். Show all posts
Showing posts with label குமுதம் ரிப்போர்ட்டர். Show all posts

Tuesday, 25 November 2014

தினத்தந்தி - மாறிய பாலிசி; மாறாத ஜாதிப்பாசம்....!



சென்னை அண்ணா சாலை- ஸ்மித் சாலை சந்திப்பு.விகடன் அலுவலக சாலை எதிரே,சற்று தள்ளியிருக்கும் ஈராணி தேநீர்க்கடை.மாலை நேரம்.  ஊடகவியலாளர்கள் பார்த்தசாரதி,பெஞ்சமின்,அன்பரசு சந்திப்பு.

ஆளுக்கொரு தேநீர் சொல்லி விட்டுக் காத்திருந்தனர்.

"எல்லா டீக்கடைக்காரனும் விலை ஏத்திட்டாங்க‌.இங்க‌ இன்னும் ஏத்தலையா..?"

"ஏற்கனவே மத்த கடையை விட ஒரு ரூபாய் அதிகம் தான் இங்க. கொஞ்ச நாளில் கூட்டுவாங்க" என்றபடியே தேநீரை வாங்கிக்கொண்டு பேச்சைத் தொடங்கினர்.

" செய்தி என்ன இருக்குது...?" பெஞ்சமின்

"செய்திக்கா பஞ்சம்..? நமக்குத் தான் சந்திக்க நேரம் இருக்குறதில்ல‌ "பார்த்தசாரதி

kavitha muralitharan,


"அண்ணா சாலையில் இருந்து ஆரம்பிங்க ..? 'விகடன்' செய்தி என்ன இருக்குது.? " பெஞ்சமின்.

விகடனை அப்புறம்  பார்ப்போம். 'தி இந்து' ல என்ன நடக்குது..? அங்க சி.ஓ.பியா இருந்த கவிதா முரளிதரன் விலகிட்டாங்க போல இருக்கு..? என்ன காரணம்..? என அன்பரசு ஆர்வமாய் கேள்வியைத் தொடுத்தார்.

அவங்க திற‌மையான செய்தியாளர் தான்.ஆனால் அங்க அவங்க வகித்த பொறுப்பில் அவங்களால தாக்குப்பிடிக்க முடியலைன்னு சொல்றாங்க..!  பார்த்தசாரதி பதிலைத் தொடங்கினார்.

என்ன விஷயம்..? அன்பரசு ஆர்வத்தைத் தொடர்ந்தார்.

பெஞ்சமின்,"அதாவது சென்னை தவிர்த்த வெளியூர் செய்தியாளர்களை ஒருங்கிணைத்து அவர்கள் தரும் செய்திகளை  வெளியிடுவது தான் அவங்க பார்த்த வேலை.  சில  நாளிதழ்களில் அதனை O.C.(Other centre)அப்படின்னும் சொல்வாங்க."

பார்த்தசாரதி அடுத்து தொடர்ந்தார். "இது கொஞ்சம் கடினமான வேலை தான்.ஏனென்றால் மொத்தம் 30 க்கும் மேலான செய்தியாளர்கள் இருக்காங்க. நாள்தோறும் எண்ணற்ற செய்திகள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதும் அவர்கள் தரும் செய்திகள் குறித்து முடிவெடுப்பதும் சற்று சிரமம் தான்.

மிகவும் டென்ஷனையும் நெருக்கடியையும் சந்திக்கும் வேலை இது. கவிதாவால் இதைச் சமாளிக்க முடியலை. இந்தப்பணியில் முன் அனுபவம் கவிதாவுக்கு  இல்லை. இதுல (V.V.)வெங்கடேஸ்வரன் இடைஞ்சல் வேறு. வெங்கடேஸ்வரன் ஒட்டு மொத்த 'தி இந்து'வும் தனக்கு கீழே வரணுமுன்னு திட்டம் போட்டு வேலை பார்த்துக்கிட்டுருக்காறா..ஏற்கனவே கோலாகல ஸ்ரீனிவாசனை இவர் தான் காலி பண்ணாரு.தொடர்ந்து ஒவ்வொரு ஏரியாவா ஸ்கெட்ச் போட்டுக் காலி பண்ணிக்கிட்டிருக்காரு."



"வி.வி.ரொம்பத் திறமையான ஆளா..?" அன்பரசு

"திறமைன்னு சொல்ல முடியாது. யாரை எந்த வேலைக்கு வைத்துக்கலாம்,எந்த வேலையை யார்கிட்ட வாங்கலாம்,எப்படி வாங்கலாம், ஒருத்தரை எப்படி காலி பண்ணலாம், அதுக்கு எப்படி பாலிடிக்ஸ் பண்ணலாமுன்னு ஸ்கெட்ச் போடுவ‌தில் கில்லாடி." பார்த்தசாரதி

"சுருக்கமாச் சொல்லணுமுன்னா மேயத் தெரியாது,மேய்க்கத் தெரியுமுன்னு சொல்லு." பெஞ்சமின்

"ஆமாம்.இப்படி ஆளை நிர்வாகமும் விரும்பும். இவங்களும் அதுக்கு ஏத்த மாதிரி விசுவாசமா இருப்பாங்க.இவரைப்பத்தி ஒரு செய்தி சொல்றேன் கேட்டுக்கோங்க. தினகரனில் இருந்த வரைக்கும் ஆர்.எம்.ஆர்.கிட்ட பம்முவாரு.விசுவாசமா இருந்தாரு.இப்ப அங்கிருந்து விலகி 'தி இந்து' நாளிதழில் இருக்கார்.

அது போதாதுன்னு 'தினகரனில்' இருந்து கொஞ்ச பேரையும் அழைத்திட்டு வந்தார். ஒவ்வொருத்தரா அங்க போறது  ஆர்.எம்.ஆருக்கு கடுப்பு. இதுக்கு காரணமான‌ வி.வி.யை கூப்பிட்டுத் திட்டுவோமுன்னு நினைச்சு,பழைய நினைப்புல போன் பண்ணாரு. இது பத்தி பேசுனாரு.வழக்கமா பம்முற வெங்கடேஸ்வரன் இந்த தடவை அப்படி பேசலை.


(V.V.)வெங்கடேஸ்வரன்

இவர் டோப்பா போட்டு காரியம் சாதிப்பவர் மட்டும் அல்ல. இவர் தலைமுடியும் டோப்பா தான்.


"சார்,கலாநிதி மாறனும் என்.,ராமும் முதலாளிகள் அவங்க இது பத்திப் பேசிக்குவாங்க சார். நம்ம ரெண்டு பேரும் அவங்கட்ட சம்பளம் வாங்குற வேலைக்காரங்க சார். அவங்க சொல்றதைச் செய்றவங்க சார். நாம எதுக்கு இது பத்திப் பேசி சண்டை போடணும் சார்..? வேறு என்ன செய்தி சொல்லுங்க."அப்படின்னு கூலா பேசுனாரு. இதுக்கு மேல ஆர்.எம்.ஆர். பேசுவாரா என்ன..?

தன்னை ரொம்பநாள் ஆட்டிப்படைச்ச ஆர்.எம்.ஆர் மூக்கை   சமயம் பார்த்து உரசி விட்டாரு.

இது தான் வி.வி.சமயம் பார்த்து யாரையும் காலி பண்ணுவார்." நீளமாய்ப் பேசி முடித்தார் பார்த்தசாரதி.

"இன்னொன்னு சொல்லணும்,இலங்கையில் இன அழிப்பு உச்சத்தில் இருந்த பொழுது தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களை அம்சா தன் வலையில் விழ வைத்து பல காரியம் பண்ணார்.ஒரு சிலரை கொழும்புக்கு ஒரு டூர் அழைத்துட்டும் போனார்.அப்ப நிறையப்பேர் போனாங்க. " அன்பரசு பேச்சினை முடிக்கும் முன்பே,குறுக்கிட்டார் பெஞ்சமின்,"நம்ம அந்த விஷயத்தை இன்னொரு நாள் விரிவாப் பேசுவோம். இப்ப சொன்னா சில மனிதர்கள் பத்தி மட்டும் பேச வேண்டியிருக்கும்.முழுமையாப் பேச முடியாது."

சரி,பாதியில் நிப்பாட்டுன‌ பழைய விஷயத்துக்கு வர்றேன். அலுவலக இடைஞ்சல்,பணிச்சுமை,நெருக்கடியில் இருந்து எப்படி தப்பிப்பதுன்னு பார்த்துக்கிட்டிருந்த கவிதா, தனது பழைய 'இந்தியா டுடே'  நட்புகளையும் தொடர்புகளையும்  வலியுறுத்தி அங்கு வேலைக்குப் போய்ட்டாங்க.



"ரொம்ப நாளா 'இந்தியா டுடே' வில் எடிட்டர் இல்லைல..? " அன்பரசு

"ஆமாம்.இப்பொழுதைக்கு எடிட்டர் நியமிக்க வேணாம், இன்னும் கொஞ்சநாள் இப்படியே பத்திரிகையை நடத்திடலாமுன்னு இருந்த 'இந்தியா டுடே'  நிர்வாகம்  இப்ப கவிதாவை நியமிச்சிட்டாஙக. பழைய எடிட்டருக்கு கொடுத்ததை விட கவிதாவுக்கு சம்பளம் சற்றுக்குறைவு தான்.ஆனா 'தி இந்து' வில் இருந்த ஊதியத்தை விட அதிகம்." பார்த்தசாரதி தனது பதிலை முடித்தார்.

பெஞ்சமின்,"அத விடுப்பா..இன்னொன்னு தெரியுமா..? 'தி இந்து' வேலைப்பளுவை ஒப்பிட்டா இந்தியா டுடே வேலை ரொம்பக் ரொம்பக் குறைவு. இது போதாதா..? "

பார்த்தசாரதி,"ஆமா,நீ சொன்னது சரிதான். வார இதழான இந்தியா டுடேவில் தமிழ்நாட்டிலிருந்து மிக குறைந்த பக்கங்கள் தான்.அதையும் பார்க்க திறமையானவர்கள் இருக்காங்க. முதன்மைச் செய்தியாளராய் இருக்கும் ராமசுப்ரமணியம் கவிதாவை விட அதிக அனுபவம் வாய்ந்தவர். அதனால நாளிதழை ஒப்பிட்டால் வேலைப்பளு குறைவு. .(அசோசியேட் காப்பி எடிட்டர் கவின்மலர் என்பவர் பார்க்கும் வேலையை மட்டும் கொஞ்சம் கண்காணித்தால்,செம்மைப்படுத்தினால் போதும்.)  "

"ம். நடக்கட்டும். கவிதாவுக்குப் பதிலா 'தி இந்து' ல இப்ப யாரை அந்த இடத்துக்கு நியமிச்சிருக்காங்க..?" அன்பரசு அடுத்த கேள்வியை கேட்டு விட்டு அமைதியாய் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

சண்முகம் தான். தினமலரில் இருந்து 'தி இந்து' வுக்கு வேலைக்கு வந்து சேர்ந்தார்.டெல்லியில் இருந்தவரை இப்ப இங்க நியமிச்சிருக்காங்க. "பெஞ்சமின்

"ம். அமைதியான மனுஷர்.பார்ப்போம் எப்படி பண்றாருன்னு." அன்பரசு முடித்து வைத்தார்.

"நான் ரொம்ப நாளா கேட்கணுமின்னு நினைச்சேன். 'தி இந்து' இணைப்பு பகுதி யார் பார்க்குறாங்க.சில பகுதிகள் மிகச் சிறப்பா இருக்குதுப்பா.?" இது பெஞ்சமின்.




"ம். நானும் படிக்கிறேன்.அரவிந்தன் பார்க்குறார். இதுக்கு முன்னால கடைசியா  மாபா பாண்டியராஜனுக்கு சொந்தமான 'நம்ம சென்னை'  பத்திரிகையில் வேலை பார்த்தார். தான் வாங்குற சம்பளத்துக்கு ஏற்ற உழைப்பைக் கொடுக்குறவரில் அவரும் ஒருத்த‌ர். தனது பொறுப்பில் வரும் பகுதியை மிகுந்த சிரத்தையுடன் கவனிப்பவர். தஞ்சாவூர்க்காரர். " பார்த்தசாரதி பாராட்டுப் பத்திரத்தை  வாசித்தார்.

"தஞ்சாவூரா..?  மாம்பலம் அப்படின்னு சொன்னாங்க.? " அன்பரசு குறுக்கு கேள்வியை எழுப்பினார்.

 "ஒருத்தருக்கு ரெண்டு பூர்வீகம் இருக்கக் கூடாதா என்ன..? " பார்த்தசாரதி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

அப்படியா..? ஆனா என் பங்குக்கு நான் ஒரு விமர்சனம் சொல்றேன்.நீங்க சொல்றதைப் பார்த்தால் அவர் சரி பண்ணுவாருன்னு நினைக்கிறேன். அன்பரசு  பேசத் தொடங்கினார்.

" 'இயக்கும் கரங்கள்' அப்படின்னு ஒரு பகுதி வாராவாரம் வருகிறது. ஆதி.வள்ளியப்பன்  என பைலைன் வருகிறது. அவர் எழுதுறாருன்னு சொல்வது சரியல்ல..தகவல்களைத் திரட்டி அவர் பெயரைப் போட்டுக் கொள்கிறார் என்பதுதான் சரி.

தீபா மேத்தா,ரேவதி போன்றவர்கள் குறித்து அப்பகுதியில் சொல்லப்ப‌ட்டதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். இணையத்தில் எளிதாய்க் கிடைக்கிறது. யார் குறித்து சொல்கிறோமோ அவர் படைப்புக‌ள் குறித்து, எழுதுபவர் பார்வை என்ன என்று எழுதணும்.அதை விடுத்து தகவல்களைத் திரட்டி எழுதி, ஆதி தன்னுடைய‌ பெயரைப் போடுவது தவறு. ஒன்று இவர் எழுத்தில் அவர்கள் படைப்பு குறித்து எழுதணும்.அல்லது தகவல் திரட்டு ஆதி அப்படின்னு எழுதணும்.அது தானே சரி ? "  அன்பரசு தனது தொடர்ச்சியான கவனத்தை அங்கு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தது.

" ஆதி நிறைய மொழிபெயர்ப்பு பண்ணுவார்.அந்தப் பாதிப்பா இருக்குமோ..? " சிரித்துக் கொண்டே பார்த்தசாரதி சொன்னார்.

"ம்.விடுங்க.அரவிந்தன் சரி பண்ணுவாருன்னு எதிர்பார்ப்போம்.' பெஞ்சமின்

"இன்னொன்னு தெரியுமா..? 'தி இந்து'வில் இருந்து வெளிவருவதா இருந்த குழந்தைகள் பத்திரிகை தற்காலிகமாத் தள்ளிப்போடப் பட்டிருக்காம்." அன்பரசு தனக்குத் தெரிந்த தகவலைச் சொன்னார்.

அப்படியா ? இது புதுத் தகவலா இருக்கே..? பெஞ்சமின்

"ஆமாம்.அதுக்காக வேலைக்கு எடுத்திருந்த முருகேஷை இப்ப செய்தியாளரா நியமிச்சுட்டாங்க‌ளாம்."அன்பரசு.

யாரு..? அகநி பதிப்பகம் அப்படின்னு நடத்திக்கிட்டிருந்தவரா..? பெஞ்சமின்

அவரே தான்.கவிஞர் அ.வெண்ணிலா வீட்டுக்காரர்.புதுக்கோட்டைக் காரர்." அன்பரசு.

புதுசா வர்த்தகப் பகுதி 'தி இந்து' வில் ஒன்னு ஆரம்பிக்கப் போறாங்க தெரியுமா..?

ம்.நானும் கேள்விப்பட்டேன்.

"என்னமோ 'தி இந்து' வில் தான் ஒருத்தரை ஒருத்தர் காலி பண்ணுற பாலிடிக்ஸ் நடக்குற மாதிரி சொல்றீங்க.'புதிய தலைமுறை' தொலைக்காட்சியிலும் அதுக்கு குறைவில்லாமல் நடக்குது." அன்பரசு அலுத்துக் கொண்டார்.

அங்க யாரு..?




வேற யாரு..? குணசேகரன் தான். 'நேர்பட பேசு' நிகழ்ச்சி நடத்துவது தொடர்பா குணசேகரன் பண்ணுன பாலிடிக்ஸ் ல வேங்கட பிரகாஷ் அந்த நிகழ்ச்சியை விட்டு தற்காலிகமாக விலகிட்டாருன்னு சொல்றாங்க. கொஞ்சம் விசாரித்துக் கொள்ளுங்கள்.அன்பரசு.

அது சரி. நிகழ்ச்சியில் பேசுற அரசியலை விட‌ அதுக்குப் பின்னாடி நடக்கும் பாலிடிக்ஸ் சுவராசியமா இருக்குதே..?

தலைப்பு என்னவோ "நேர்பட பேசு".ஆனால் பின்னாடி தான் குழி பறிப்பாங்க போல.

***



அண்ணாச்சி கம்பெனி செய்தி என்ன..?

"தினத்தந்தி நிர்வாகம் நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்து கார்பரேட் முறைக்கு மாறிடுச்சுன்னு சொல்றாங்க..உண்மை தானா..?"

பார்த்த சாரதி தந்தியை குறித்துப் பேச்சைத் தொடங்கினார்.

"ஆமாம்.சிவந்தி ஆதித்தன் இருந்த வரைக்கும் பழைய முறையில் இருந்தது. இப்ப நீ சொல்லுற மாதிரி ஆகிடுச்சுன்னு தான் சொல்றாங்க."

"எடிட்டோரியலில் வேலை செய்யுற யாரையும் முன்பு வேலையை விட்டு எடுக்குறதுக்கு நிறைய‌ யோசிப்பாங்க. தண்டனையாக‌, கடினமான (கேவலமான) வார்த்தைகளும், துறை மாற்றமும் தான் பெரும்பாலும் இருக்கும். வேலை செய்யுற பெரும்பாலானோரை முதலாளி தெரிந்து வைத்திருப்பவர்  என்பதால் இது சாத்தியப்பட்டது. ஆனா இப்ப அப்படி இல்லையாம். ஒருத்தரை சரி இல்லைன்னு நிர்வாகத்துக்கு அடுத்த நிலையில் இருப்பவங்க முடிவு பண்ணிட்டா அவர் யாராயிருந்தாலும்,எத்தனை வருடம் வேலை பார்த்தாலும் உடனடியா  வேலை காலியாகுதுன்னு சொல்லிடுறாங்க.

இப்ப இருக்குற முதலாளியும் தனக்கு அடுத்து இருப்பவர்கள் சொல்வதை அப்படியே ஆமோதித்து உண்மையா என விசாரிக்காமல், வேலையைக் காலி பண்ணிடுறாராம். அதனால மற்ற நிறுவனங்கள் போல இங்கேயும் ஊழியர்கள் வேலை நிரந்தரம் இல்லைன்னு நினைக்கிறாங்களாம். " அன்பரசு

"பழைய மாதிரி ஊர்க்காரன்,ஜாதிக்காரன்னு,தெரிஞ்சவன்னு நெனப்புல தன் சீட்டு நிரந்தரம் அப்படின்னு இப்ப யாரும் தெனாவட்டா இருக்க முடியாதுன்னு சொல்லுங்க." பெஞ்சமின் சிரித்துக் கொண்டே கேட்டார்.

அப்படித்தான் இருக்குது நிலவரம்.

பெஞ்சமின் சிரித்துக் கொண்டே, "நீங்க சொல்றது எல்லாம் சரி தான். ஆனா இது தொழிலாள‌ர்களுக்குத் தான். நிர்வாகம் வழக்கம் போல ஜாதிப்பாசத்தோட தான் இயங்குது. அதாவது வர்க்கமும் ஜாதியும் கைகூடி இருப்பவர்களுக்கு ஆதரவாய் இயங்குதுன்னு சொன்னேன்."

"அது எப்படி மாறும்..? "என சிரித்துக் கொண்டே எதிர்க்கேள்வி எழுப்பினார் பார்த்த சாரதி.

"வைகுண்டராஜன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி,கனிமொழிக்கு எதிரா டெல்லி சிறப்பு நீதிமன்றம் வாரண்ட் ஒன்னு பிறப்பிச்சது.கொஞ்ச நேரத்துல ரத்து பண்னிட்டது. இது எல்லாம் மத்த‌ பத்திரிகைகளில் செய்தியா வந்தது. ஆனால் தினத்தந்தி மட்டும் பதிவு பண்ணலை. ஜாதிப்பாசம் தவிர வேறு என்ன..? தினத்தந்தி நிருபர் செய்தியை மிஸ் பண்ணுறது நடக்காத காரியம்.அதனால் நிர்வாகம் தான் இதைத் திட்டமிட்டுத் தவிர்த்திருக்குதுன்னு தெரிஞ்சுக்கிடலாம். " பெஞ்சமின் கடுப்புடன் பேச ஆரம்பித்தார்

தினமலர்
தினமணி


தினத்தந்தி


"வைகுண்டராஜனுக்கும் சிவந்தி ஆதித்தனுக்கும் நிறைய பஞ்சாயத்து இருந்ததே..? ஒரு கட்டத்துல தினத்தந்திக்கு போட்டியா நாளிதழ் துவங்குற ஐடியா கூட விவி மினரல் கம்பெனி வைத்திருந்ததே..? இப்ப எப்படி சமாதானம்..?" பார்த்தசாரதி பழைய பஞ்சாயத்தைக் கிளறினார்.

"ஆமா..திருநெல்வேலியில் இருக்கும் சாதிச் சங்கத்தையும் அதுக்கு இருக்குற பல கோடிச் சொத்துக்களையும் நிர்வாகம் பண்ணுற பஞ்சாயத்து இருந்தது. அதான் ரெண்டு பேருக்கும் ஆகாது.ஆனால் சிவந்தி மறைவுக்குப் பின்னாடி இரு தரப்பும் சமரசமாயிட்டாங்க‌ன்னு சொல்றங்க.அதான் இப்ப எதிர்த்துச் செய்தி போடுற‌து இல்ல."

"முதலாளி மாறியிருக்கலாம்.அவரோட பாலிசி மாறியிருக்கலாம்.ஆனால் நாடார் ஜாதிப் பாசம் மட்டும் மாறலைன்னு சொல்லு. அது எப்பவும் போலத் தொடருது. எத்தனை யுகங்களானாலும் தொடருமுன்னு சொல்லு." பார்த்தசாரதி.

ம்.அதே தான்.

அதே போல ராமச்சந்திர ஆதித்தன் குடும்பத்துக்கும் சிவந்தி ஆதித்தன் குடும்பத்துக்கும் இருந்த சொத்து பிரச்சனைகளும் தற்காலிகமா சமரசத்துக்கு வந்திருக்குன்னு சொல்றாங்க.  

**
"குமுதம் ரிப்போர்ட்டர் முன்ன மாதிரி இல்லாமல்,கொஞ்சம் மாறி இருக்குதே என்ன காரணம்..? " பெஞ்சமின் ஆர்வமுடன் கேட்டார்.

"அங்க கணபதி சார்ஜ் எடுத்துருக்கார்." பார்த்தசாரதி.

யாரு..? 'தமிழ் முரசு' பார்த்துக்கிட்டிருந்த கணபதி சாரா..?

ஆமாம்.அவரே தான்.

அப்ப குடியாத்தம் குபேந்திரன் ..?

"குபேந்திரன் தான் இப்பவும் இணை ஆசிரியர். அவரை அவ்வளவு எளிதில் காலி பண்ன முடியுமா..? பெரிய இடத்து பரிந்துரையில் வேலைக்குச் சேர்ந்தவரு வேற..? "

"பெரிய இடம்ன்னா யார்..?" பெஞ்சமின்

"மன்னர்கள் மட்டுமல்ல குறுக்கு வழியில் பதவியைப்பிடித்தவர்கள்,பணம் படைத்தவர்கள் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சாமியார் அல்லது ஜோசியர் சொல்றதைக் கேட்பாங்க. இங்க குபேந்திரனுக்கு ஜோசியர் பரிந்துரையில தான் வரதராஜனிடம் வேலை கிடைச்சது. " அன்பரசு தனது பகுத்தறிவை போகிற போக்கில் பரப்பி விட்டுப் போனார்.

குபேந்திரன்


இதைக்கேட்டவுடன் பெஞ்சமின் அதீத ஆர்வம் காட்டினார்.

"ரொம்ப சுவாரசியமா இருக்கே ..? இவ்வளவு நாளா நீ சொல்லவே இல்லையேப்பா..? ஜோசியர் சொல்லியெல்லாம் வேலை கிடைக்குதா என்ன..? நான் திறமைக்குத் தான் வேலை கிடைக்கும் என்று நம்புற ஆள் இல்லை தான்.ஆனால் இந்த அளவுக்குத் துறை போயிடுச்சுன்னு நினைக்க முடியலை. நம்பவும் முடியலை.நம்பாமல் இருக்கவும் முடியலை. முதலில் விஷயம் சொல்லு."



ஷெல்வின்னு ஒரு ஜோசியர். இவரது உண்மையான பெயர் தாமோதரன்.கருணாநிதி மகள் செல்வி,மருமகள் துர்கா,ஸ்டாலின் மருமகன் சபரீசன்,குமுதம் ரிப்போர்ட்டர் வரதராஜன், பிரேமலதா,விஜயகாந்த் மச்சினர் சதீஷ்,இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இது போக அதிகார மட்டத்தில் இருப்பவர்கள் நிறையப்பேருக்கு ஷெல்வி தான் ஜோதிடர்.

 என்னப்பா சொல்ற..? அதிர்ச்சியைத் தொட்டார் பெஞ்சமின்

"இதுல அதிர்ச்சி அடைய என்ன இருக்கு.இன்னும் சொல்றேன் கேட்டுக்கோ. கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக அதிக இடங்களில் ஜெயிக்கும்,இந்தியா முழுவதும் நரேந்திர மோடி அதிக இடங்களில் வெற்றி பெறுவார் என்று நாட்டு நடப்பை தனது கணிப்பாக்கி இவர் ஜோசியம் சொன்னாரு.

ஆனால் விஜயகாந்த்-பா.ஜ.க.கூட்டணி இவரால தான் பைனலாச்சுன்னா உனக்குத் தெரியுமா..? "

"அப்படியா..? இவரு ஜோசியரா இல்லை..." என சிரித்துக் கொண்டே கேட்டார் பார்த்தசாரதி

" அத விடு.இப்ப மேட்டருக்கு வர்றேன். இவர் குபேந்திரனுக்கு நெருக்கம். தமிழக அரசியலில் இருந்து விலகுன குபேந்திரனுக்கு,ஜோசியர் தான் வரதராஜனிடம் சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்தாரு. அதுவும் இல்லாமல் குபேந்திரனுக்கு அதிகார மட்டத்துல செல்வாக்கு இருப்பதால் பலவகையிலும் உபயோகப்படுவாருன்னும் சொல்லி சேர்த்தாரு.ஜோதிடருக்கு வரதராஜனிடம் அதிக செல்வாக்கு. அதனால குபேந்திரன் வேலை இப்பொழுதைக்குத் தப்பாது. இப்பவாச்சும்  நான் சொன்னதை நம்புறியா..? " அன்பரசு முடித்தார்

"நம்புறேன். நம்புறேன்.எனக்கு அவர் ஜோசியம் பார்ப்பாரா? " என சிரித்துக் கொண்டே பெஞ்சமின் கேட்டார்.

"உன்ன மாதிரி அன்னக்காவடி, அதிகப்பிரசங்கிக்கெல்லாம் மரத்தடி கிளி ஜோசியர் தான் சரி. இவங்க லெவல் வேறப்பா. இன்னொன்னு எப்படிப் பார்த்தாலும் உனக்குத் தரித்திரம் தான் நிலைக்கும். ஜோசியம்  பார்த்து எனனவாகப் போகுது." என சிரித்துக் கொண்டே அன்பரசு சொன்னார்.

அனைவரும் சிரித்தனர்.

***
மணா(பழைய படம்) 

"அது என்னவோ தெரியலைப்பா,நம்ம மணா வரதராஜனை விடாமல் பிடிச்சுக்கிட்டிருக்காரு. "

இருவரில் யார் யாரைப் பிடிச்சுக்கிட்டிருக்காங்கன்னு தெரியலை. குமுதம் பிரச்சனையில அமைதியா இருக்காம,வரதராஜனுக்கு சகலவழியிலும் காபந்து பண்ணாரு. ஏற்கனவே உடல் நிலை சரியில்லாத மணா தொடர்ச்சியா வரதராஜ விசுவாசம் காட்டுறதுக்குப் பதிலா அமைதியா இருக்கலாம். ஆனால் அவரோ ஓய்வுக்குப் பதிலா வரதராஜன் அலுவலகத்துல பதிப்பகம் பொறுப்பெடுத்திருக்கார். விகடன் பிரசுரத்துக்குப் போட்டியா இனி வருமாம்.

"விகடன் பிரசுரம் எங்கே..?குமுதம் வெளியீடு எங்கே..ஏணி வைத்தாலும் எட்டாது. அது சரி குமுதத்தில் வேலை பார்ப்பது தப்பா என்ன..?"

" தப்பில்லை.ஆனால் பத்திரிகை வேலையை மட்டும் பார்க்கணும்.முதலாளியைக் காப்பாத்துற புரோக்கர் வேலையைப் பார்ப்பது தப்பு. அவரவர் மனசாட்சிக்குத் தெரியும் யார் என்ன வேலை பார்க்கோமுன்னு. "
**


 நேரம் அதிகமாக ஆளுக்கொரு தேநீரை மீண்டும் வாங்கினர்.

"மாறன் கம்பெனி செய்தி எதுவும் இருக்காங்க..?"

"இன்னும் மஜிதியா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவில்லை,ஊதிய உயர்வு இல்லை,ஆட்குறைப்பு அப்படின்னு தொழிலாளர் விரோதப்போக்கு தொடர்ச்சியா நடந்துக்கிட்டுத் தான் இருக்குது. யாரும் கண்டுக்க மாட்டிக்கிறாங்க." பார்த்தசாரதி சலிப்புடன் சொன்னார்.

"ம். பதவியில் இல்லாதப்பவே இப்படின்னா,இவனுங்க பதவியில் இருந்திருந்தால் ருத்ரதாண்டவம் ஆடியிருப்பாங்கன்னு சொல்லுங்க." பார்த்த சாரதி கடுப்புக் காட்டினார்.

ஆமாம். இன்னொன்னு.அங்க தொழிலாளர் விரோதப்போக்கு மட்டும் இல்ல.சீனியர் ஜூனியர் மரியாதை கூட இல்லை..." அன்பரசு

"பீல்டு முழுவதும் அப்படித்தான் இருக்குது.இதுல 'தினகரன்' மட்டும் விதிவிலக்கா என்ன..?என்ன சங்கதி? "பார்த்தசாரதி

நியூஸ் எடிட்டரா இருக்குற ஆர்.சி.,மனோஜ்,தமிழ் முரசு குணசேகரன் எல்லாம் அங்க சீப் ரிப்போர்ட்டரா இருக்குற சுரேஷைப் பார்த்தா பம்முறாஙக.-பெஞ்சமின்

"என்னங்க சொல்றீங்க‌..? சீப் ரிப்போர்ட்டரைப் பார்த்தால் நியூஸ் எடிட்டர் பயப்படுறாருன்னு சொல்ற.. நீ சொல்றதைப் பார்த்தா டிஜிபி வீட்டுல எடுபிடி வேலை பார்க்குற சாதாரண ஆர்டர்லியைப் பார்த்து டி.எஸ்.பி.பயப்படுற மாதிரி இல்ல இருக்கு."இது அன்பரசு

"அதே..அதே.இருக்குற சுரேஷ் இருக்கும் இடம் அப்படி."

"சரியாச் சொன்னீங்க,ஆர்டர்லி பார்க்குற வேலையும் நம்ம சுரேஷ் பார்க்குறதும் ஒரே தன்மையிலான வேலை தானே. ?

ஆர்.எம்.ஆர். எது சொன்னாலும் அதை தட்ட மாட்டாமலும் முகம் சுளிக்காமலும் செய்வாரு சுரேஷ்.பழைய செய்தி சொல்றேன்.கேட்டுக்கோங்க.

சீப் ரிப்போர்ட்டர் பதவி சார்ஜ் எடுத்துக்கிட்ட கொஞ்ச நேரத்துல ஆர்.எம்.ஆர்.ஒரு வேலை சொல்றாரு.உடனே அதைச் செய்தாரு."அன்பரசு

என்ன வேலை.? எதும் முக்கிய அசைன்மெண்ட்டா..? பெஞ்சமின் ஆர்வமுடன் கேட்டார்.

சிரித்துக்கொண்டே "அசைன்மெண்ட்டா? ஆர்.எம்.ஆர்.தன்னோட பிள்ளைகளை அப்ப சேப்பாக்கம் ஸ்டேடியம் ல நடந்த கிரிக்கெட் மேட்ச் பார்க்க கூப்பிட்டுப் போய்ட்டு வரச் சொன்னாரு.உடனே யாரையோ பிடிச்சு ஓசி பாஸ் வாங்கிட்டுப் போய் சொன்ன வேலையைச் செய்தாரு.இது ஒரு உதாரண‌ம் தான். இது மாதிரி என்ன வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் செய்வாரு. அதையும் சிற‌ப்பாச் செய்வாரு. "

"பிறகு எப்படி நியூஸ் எடிட்டர், சீப் ரிப்போர்ட்டரைப் பார்த்துப் பயப்படாமல் இருப்பாங்க சொல்லுங்க."

***

நியூஸ் செவன் வைகுண்டராஜன் தொலைக்காட்சி எப்படி இருக்குது. ?

இதுவரைக்கும் பெரும்பாலும் குறைந்த வயதில் இருப்பவர்களைத் தான் வேலையில் எடுத்திருக்காங்க. பெரும்பாலோனோர் பெரிய அளவில் அனுபவம் இல்லாமல் இருப்பவர்கள். அது போக உயர் பதவியில் இருப்பவர்கள் யாரும் இங்குள்ள சூழல் முழுக்க பரிச்சயம் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழில் நடக்கும் நியூஸ் செவன் தொலைக்காட்சிக்கு வேற்று மொழியில் சிந்திப்பவர்கள். சுருக்கமாச் சொன்னா எந்த நிகழ்ச்சியும் உருப்படுற மாதிரி இல்ல.தொலைக்காட்சி தொடர்பா வர்ற விளம்பரங்கள் கூட உருப்படியா இல்லைன்னா பாருங்க.

ம்ம்.வழக்கம் போல மல்லுக்கள் இங்கேயும் உயர் இடத்தைக் கைப்பற்றி விட்டார்கள் போல.

ஆமாம். நம்ம வாசகர்களுக்குப் பரிச்சயமான பிரேம்சங்கரும் வந்துட்டாருன்னு சொல்றாங்க.

ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் சேனலே குப்பைன்னு சொல்லு.

***

விகடன் செய்தி எதுவுமே இல்லையா..?

'டாக்டர் விகடனுக்கு' பிரியா நாயர்  பொறுப்பாசிரியரா..இல்ல ஆசிரியரா..?

பொறுப்பாசிரியர் தான். ஏன்..?



தினகரனில் வேலை பார்க்குற  சிவராமன், பிரியாநாயர் ஆசிரியர் ஆகிட்டாங்க‌ன்னு மகிழ்ச்சியில், முகநூலில் ஆனந்தக்கூத்தாடியிருக்காரே ?அதான்  ஒருவேளை ரா.கண்ணனை ஆசிரியர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கன்னு நினைச்சேன்.



 பொறுப்பாசிரியர் பிரியா நாயரை  'ஆசிரியர்' அப்படின்னு எழுதி தகுதிக்கு மீறிப்பொறுப்பு கொடுத்த ரா.கண்ணனை, ஏன சிவராமன் துச்சமா எழுதுனாருன்னு தெரியலை. தினகரனில் ஆர்.எம்.ஆர் பெயருக்குத் தான் எடிட்டரா இருக்காரு.அவருக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லை.அதுக்காக தினகரன் எடிட்டர் ஆர்.எம்.ஆர் இல்லைன்னு சொல்லிட்டு வேறு யாரையும் சிவராமன் பகிரங்கமாக எழுதுவாரா என்ன..?

இல்லைன்னா ஆர்.எம்.ஆர். எம்.டி. இல்லைன்னு சொல்லிட்டு வேறு யாரையும் எழுதுவாரா என்ன..?

அதிலெல்லாம் நாங்க எச்சரிக்கையா இருப்போம்ல. அது சரி கே.என்.சிவராமன் தயாரித்த& பெருமையுடன் விளம்பரப்ப‌டுத்திய‌ தினகரன் இலவச இணைப்பில் இடம் பெற்ற ஒரு பதிவு தொடர்பா வினவு இணைய தளத்தில் ஒரு பதிவு வந்திருந்தது பார்த்தீங்களா..?

சிரித்துக் கொண்டே அன்பரசு பதில் சொன்னார்."ஆமாம்.பார்த்தேன். ஆனால் இதழ் தயாரித்த‌ சிவராமன்  பெயரைக் குறிப்பிட மறந்து  'தினகரனது இலவச இதழ் தயாரிப்பாளர்கள்' அப்படின்னு சொல்லியிருந்தாங்க‌."

"அவங்க சொல்லலைன்னா என்ன,நாம் இப்ப சொல்லிட்டோமே"

ம்ம்ம்ம்.

vikatan awards,


'விகடன் விருதுகள்' தயாராகிட்டிருக்குப்பா..

 இது ஒரு செய்தியா..?

யாருக்கு விருது கொடுப்பாங்கன்னு ஊருக்குத் தெரிந்த விஷயம் தான.? விஜய் டிவிக்கு ரெண்டு,அதுல்ல ஒன்னு கோட்டு கோபிக்கு, இது போக‌ விகடன் சீரியலுக்கு ஒன்னு.இது போக விகடன் ரிப்போர்ட்டர்களுக்குத் தெரிந்த நாலு பிரபலம், ஆசிரியருக்குப் பிடிச்ச சினிமாக்காரர்கள், (பாலா எதும் படம் எடுக்கலைன்னு நினைக்கிறேன்.அந்த வரைக்கும் தப்பித்தோம்.)

இது போக சிற‌ந்த இரு சக்கர வாகனம் அப்படின்னு ஒரு விருது கொடுப்பாங்க பாரு.

சான்சே இல்ல. அவங்க சொல்ற வண்டி எப்படியும் சில லட்சங்கள் இருக்கும். அதை நம்ம நாட்டுல பெரும்பாலானோருக்குச் சுத்தமாத் தெரியாது. இவ்வளவு ஏன் விகடனில் ஒருத்தரும் ஓட்டுறதும் கிடையாது. ஆனா ரொம்பச் சரியா அவ்வளவு காஸ்ட்லி வண்டிக்குத் தான் கொடுப்பாங்க.

இதுக்கு நடுவுல உண்மையிலேயே திறமையான நாலு பேருக்கு கொடுப்பாங்க‌. ஆகமொத்தம் எல்லோரும் திறமையானவங்கன்னு ஒரு இமேஜ் வந்துடும்.

அடப்போங்க‌..?  பில்லை கொடுத்துட்டு வாங்க.இவங்களைப் பத்திப் பேசிக்கொண்டிருந்தால் நம்ம வேலை பார்க்க முடியாது.கிளம்புவோம்.


Thursday, 6 November 2014

குள்ளநரி சிங்கமாச்சி; கோசல்ராம் கதை அசிங்கமாச்சி...!




கோசல்ராம்.

முதலில் 'சுதேசமித்ரன்' பணி . பிறகு 'விகடன் பேப்பர்'.அடுத்து  'தினகரன்' ஏரியா கிரைம் பீட்,அடுத்து 'குமுதம்' நிருபர். அடுத்து 'தினகரன்' கிரைம் பீட் இன்சார்ஜ்...அங்கிருந்து 'குமுதம்' குழம்பு ஆசிரியர்.

இப்படித் தன் பத்திரிகை அனுபவத்தில் தகுதி திறமை தவிர்த்து பிற தொடர்புகளை வைத்து உச்சத்திற்கு வந்தவர். கோசல்ராம். இப்பொழுதோ பணி எதுவும் இல்லாத நிலையில் தனது நண்பர் ரஙகராஜ் பாண்டே உதவியுடன் 'தந்தி டிவி'யில் கருத்துச் சொல்லி வருகிறார்.(அது எப்படி எல்லாப் பய பிள்ளைகளும் கரெக்டா ஒன்னு சேருரீங்க)

'குமுதம்' குழும ஆசிரியராய் இருந்த பொழுது வரதுக்குட்டியுடன் கைகோர்த்துக்கொண்டு இவர் செய்த அட்டூழியங்கள் அதிகம்.

ஆனால் அதே கோசல்ராம் காரியம் முடிந்தவுடன் வரதுவால் தூக்கி எறியப்பட்டார். இப்பொழுது அழுகையும் புலம்பலுமாய் முகநூலில், "நான் உன்னை எப்படி நினைச்சிருந்தேன்,நீ இப்படிப் பண்ணிட்டீயே" என வரதராஜனை நோக்கி இன்னும் பாசம் போகாமல் சோக ராகம் பாடி வருகிறார்.

அதை ஒட்டி அவர் எழுதிய பதிவும்,நமது எதிர் பதிவும் இங்கே;

அவருக்கு எப்பவுமே எழுதத்தெரியாது என்பதால் காசிமுத்து மாணிக்கம் கதையைப் பகிர்ந்துள்ளார்.நல்லது. வரதராஜனை சிங்கமாகவும்,அவரை பூனையாகவும்,அவரால் குமுதம் அலுவலகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஊழியர்களை எலிகளாகவும் அந்தக்கதையில்  உருவகம் செய்யப்பட்டுள்ள‌து.



இதுவே தவறு.வரதராஜன் என்றும் சிங்கம் அல்ல.அவர் என்றும் நரி தான்.ஆக அந்தக் கதையின் அடிப்படையே தவறு. அதுவும் போக  கோசலின் வார்த்தையிலேயே என்றும் உண்மை இல்லாத பொழுது  கதையில் என்ன உண்மை எப்படி இருக்க முடியும்..?

நாம் அவருக்கு பொருந்துவது போல ஒரு கதையை எழுதியுள்ளோம்.

பரந்து விரிந்த அந்த வனாந்திரத்திற்கு ஒரு வயதான சிங்கம் ராஜாவாக இருந்தது.ஒரு நாள் அந்த வயதான சிங்க ராஜா இறந்துபோனார். புதிய ராஜா பதவி ஏற்றுக்கொள்ள வேண்டுமே...!

 அதனால் வெளிக் காட்டில் வசித்துக்கொண்டிருந்த வாரிசு இங்கே ராஜாவாக பொறுப்பேற்றுக்கொண்டது. புதிய சிங்க ராஜாவு வேறொரு காட்டில் எப்பவும் பிசி. அதனால‌ இந்தக் காட்டு ராஜாங்கத்தையும் பார்த்துக்கொள்ள முடியல. காட்டில் வளர்க்கப்படாத அந்த .கான்வெண்ட் சிங்கத்திற்கு வேட்டைக் குணமும் காடு பற்றிய அறிவும் குறைவு. அதனால் காட்டோட நிலையை அறியாம, தனது ராஜா பதவியின் நிலையையும் அறியாம, தனது பதவியை நரியிடம் கொடுத்தது. அது குள்ள நரின்னு தெரியாம:

குள்ள‌நரியும் சிங்கத்தோட குகையிலேயே வந்து தங்கிக்கொண்டது. தனக்கு நாட்டாமை பதவி கிடைத்ததால் தனது நாட்டாமையைக் காட்ட ஆரம்பித்தது குள்ள‌நரி.

சிங்கத்தோட குகையில தங்கிட்டதாலவோ என்னவோ உடம்பு முழுக்க சிங்கச் சாயம் பூசிக்கொண்டு, சிங்கம் போலவே மாறி ‘நான்தான் ராஜா’ என்று தம்பட்டம் அடிக்க தொடங்கியது. காட்டோட கணக்கு வழக்கில் எல்லாம் கைவைத்து சுருட்டியது. ராஜாவுக்கு இருந்த சொத்தை சுருட்ட தொடங்கியது. வெளிக்காட்டில் இருந்த ராஜாவுக்கு குள்ள நரியோட திருவிளையாடல் எல்லாம் போனபடியே இருந்தது. ஆவேசமா புறப்பட்டு வந்த சிங்கம் குள்ள‌நரியோட திருட்டு கணக்கை எல்லாம் எடுத்து போலீஸில் புகார் கொடுத்துடுச்சி.குள்ள‌ நரி கைதாகி தப்பிச்சோம் பிழைச்சோம்னு வெளியில வந்து ‘அவமான பட்டதுக்கு’ காரணம் யார்னு கருவிகிட்டிருந்துச்சு. உடம்பெல்லாம் பூசிக்கொண்டிருந்த சிங்கச் சாயம் வெளுத்துபோச்சேன்னு புலம்பியது.

அப்பதான் சிங்கத்தோட குகையில இருந்த 21 காட்டு எலிகள்தான் நமக்கு எதிரா உள்ளடி வேலைய பார்த்திருக்கும்னு அதுவாக‌வே புரிஞ்சிகிட்டது.
திருடனுக்கு யாரை பார்த்தாலும் போலீஸாதான் தெரியும்.

அந்த மாதிரி எலிகளை எல்லாம் பார்த்து தனக்கு எதிரிகள் என புலம்ப ஆரம்பித்தது. அந்த எலிகளை எல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும். அதை நாம் செய்தபடியும் தெரியகூடாது என்று யோசித்தது குள்ள நரி. சரியான ஒரு கங்காணி பூனை இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல இடங்களிலும் தேடி அலைந்தது. அப்போதுதான் ஏற்கனவே குள்ள நரியால் அடித்து விரட்டப்பட்ட பூனை எதிலே வந்தது. அந்த பூனை எல்லா தப்பு வழியிலும் போகக்கூயது என்று தெரிந்துதான் குகையில் இருந்து ஏற்கனவே அடித்து விரட்டி விட்டிருந்தது குள்ள‌நரி.

 இப்போது அந்த பூனை சரியாக இருக்குமே என்று பேசியது. உனக்கு கங்கானி வேலை. என் குகையில் உள்ள பழைய எலிகளை வேட்டையாடி விரட்டனும் என்று 21 எலிகளோட பட்டியல கொடுத்தது.

காலக்கொடுமை என்னவென்றால், இந்த கள்ள பூனை, பூனையாகவே இருந்திருந்தால் பரவாயில்லை. கங்காணி பதவியை வைத்து அடிக்கடி அதுவும் ‘நரிவேஷம்’ கட்ட ஆரம்பித்தது. எவ்வளவு பெரிய நரியோடு நட்பு எனக்கு கிடைச்சிருக்கு தெரியுமா என்று குகையிலும், வெளியிலும் ஆடத்தொடங்கியது. குகையில் இருந்த 21 எலிகளையும் அவமானப்படுத்தியது. ஒவ்வொன்னா அடிச்சு வெளியே விரட்டினபடியே இருந்தது.

வெளியில போயிருந்த சிங்க சாயம் பூசிய  குள்ள நரி குகைக்கு வந்ததும், இன்னைக்கு ஒன்ன காலிபன்னிட்டேன் என்று பெருமையா பட்டியல் வாசிக்கு. குள்ள நரியும் ஆஹா ஓஹோ என்று சலுகை என்ற எலும்புத்துண்டை எடுத்து வீசும். கள்ள பூனைக்கோ இப்படி வீசிய எலும்புத்துண்டு ருசி தாங்க முடியல. அதனால எலி வேட்டைய வேகமா நடத்தியது.

ஒரு கட்டத்தில் குகையில் இருந்த எலிகள் எல்லாம் காலி. குள்ளநரிக்கு சந்தோஷம்.

ஆனா இப்போ கள்ள பூனை மேல கவனத்தை வைத்தது குள்ள நரி.

எவ்வளவு எலும்புத் துண்டை தின்னு கொழுத்திருக்கு. தவிர நம்ப விஷயத்தை எல்லாம் எவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கு. இனியும் இதை விட்டு வைக்கக்கூடாது என்று கணக்கு போட்டது.

இந்த குள்ள நரி இப்படித்தான் என்று கள்ள பூனைக்கும் தெரியும். அதனால‌ காட்டு போலீஸில் இருந்த நரியோட எதிரிங்ககூட கைகோர்த்து வேவு வேல பார்க்க ஆரம்பிச்சது. ஆஹா..அடிமடியிலேயே கைவைக்க ஆரம்பிச்சிடுச்சுப்பா கள்ளப் பூனை என்று குள்ள நரி ஆவேசமானது. அந்த கள்ளபூனை வந்தா குகைக்கு வெளியவே நிறுத்தி விரட்டி அனுப்பிடுங்க. இது நரி ராஜா உத்தரவுன்னு சொல்லுங்கன்னு ஆர்டர் போட்டிருச்சு.

வழக்கம்போல கங்காணி பந்தாவோட வந்த பூனை வாசல்லலேயே நின்று அவமானப்பட்டு போச்சு. அப்படி துரத்தப்பட்ட பழைய கங்கானி பூனைதான் இப்ப குட்டிகுட்டி  கதையா அடுத்தவங்க கிட்ட கேட்டுக்கிட்டு சொல்லிச் சொல்லி  குள்ள நரியோட நாட்டாமைய  நாறடிச்சுகிட்டிருக்காம்.


****
சூடுபட்ட கள்ளப்பூனையும்,குள்ளநரியும்



பாதிக்கப்பட்ட  21 எலிகளோட பட்டியல்

ரஞ்சன்- குமுதம் எடிட்டர்.
ரவிஷங்கர்- குமுதம் சினிமா சீனியர் நிருபர்
தளவாய் சுந்தரம்- குமுதம் சீனியர் நிருபர்.
கோபால்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
சித்திரிம் மத்தியாஸ்- குமுதம் புகைப்படக் கலைஞர்.
திண்டுக்கல்-மருதநாயகம்
கரூர்-உன்னி கிருஷ்ணன்

கோடீஸ்வர ராவ்- குமுதம் (தெலுங்கு) குமுதம் ஜோதிடம் ஆசிரியர்
மற்றொரு கோபால் ஜோதிடம் (தமிழ்) உதவி ஆசிரியர்.

இளங்கோவன். குமுதம் ரிப்போர்ட்டர் எடிட்டர்.
பா.ஏகலைவன்- ரிப்போர்ட்டர் சீனியர். தலைமையிடம்
ஆந்தை குமார். ரிப்போர்ட்டர் சீனியர் தலைமையிடம்
திருமலை- ரிப்போர்ட்டர் சீனியர்-மதுரை
கா.சு. வேலாயுதம்- ரிப்போர்ட்டர் சீனியர்.
வேட்டை பெருமாள்-ரிப்போர்ட்டர். ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மோகன்- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
பாலஜோதி- ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்
மலைமோகன்  ரிப்போர்ட்டர் உதவி ஆசிரியர்.
விஜயானந்த்- ரிப்போர்ட்டர் நிருபர்.
கலைவாணன்-பாண்டி ரிப்போர்ட்ட‌ர் நிருபர்
மீடியா ராமு- ரிப்போர்ட்டர் புகைப்படக் கலைஞர்.
முருகேசன்-ரிப்போர்ட்டர் நிருபர்.

 மேலே  பட்டியலில் உள்ள அனைவரும் குமுதம் முதலாளி ஜவகர் பழனியப்பனுக்கு வேண்டப்பட்டவர்கள் என்றதாலேயே 21 எலிகளாக பட்டியல் எடுக்கப் பட்டார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் உளவியல் ரீதியாய் சித்ரவதை செய்தும் பல வழிகளில் அவமானபப்டுத்தியும் அவர்களை வெளியேற்ற கோசல்ராம் செய்த அட்டுழியம் எழுத்தில் வடிக்க முடியாதது.

அதே போன்று சேஷையா ரவி, வெங்கிட் ஆகிய இருவரும் கோசலுக்கு நெருங்கிய நண்பர்கள். விகடனில் இருந்து அவரே அழைத்து வந்தார். கடையில் அந்த இருவரும் அவமானப்பட்டு ஓடிப்போனார்கள்.நெருங்கிய நண்பர்களான வெங்கட்,சேஷையா ரவி விஷயத்தில் கோசலின் ஆட்டம் அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வளவு சூடு பட்ட பின்பு தான் கள்ள‌ப்பூனைக்கு புத்தி வந்திருக்கிற‌து.

 குள்ள நரியும் பூனையும் எப்பொழுதும் நண்பராக முடியாது என.

அடுத்து தான், எப்பவும் ராஜா ஆக முடியாது என குள்ள‌நரிக்கு என்று புரியுமோ,எப்பொழுது பாடம் கற்பிக்கப்ப‌டுமோ.?..


பொறுத்திருப்போம்.

Saturday, 23 August 2014

இன்று நக்கீரன் காமராஜ் ; நாளை ரிப்போர்ட்டர் வரதராஜன்..!

அன்று காவல்துறையின் பிடியில் வரதராஜன்;ஆறுதல் கூறும் கோசல் ராம்.
(அன்று வரதராஜனுக்கு ஆறுதல் கூறிய கோசல்ராம், இன்று வரதராஜனால் பிறர் அவருக்கு யாராவது ஆறுதல் கூற வேண்டிய நிலையில் தான் இருக்கிறார்.)

கடந்த 17 நாட்களுக்கு முன் வெளியான ஜூனியர் விகடனில் கவர் ஸ்டோரி ஒன்று வெளியிட்டிருந்தார்கள்.அது இது தான்.

 ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்ப‌ட்டு மரண‌மடைந்த சாதிக் பாட்சா மனைவி எழுதிய கடிதம் தொடர்பானது. சாதிக் பாட்சாவுக்குப் பிறகு அவர் மனைவி கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகப் பொறுப்பு வகிக்கிறார் என்றும், நிறுவனத்திலிருந்து மட்டுமல்ல,தொடர்புடைய அனைத்தில் இருந்தும் விலகுவதற்கு குறிப்பிட்ட தொகையை கேட்டு கோரிக்கை வைத்ததாகவும்,அதனை ஏற்றுக் கொண்ட ஆ.ராசா மற்றும் அவர் தொடர்புடையவர்கள் இப்பொழுது வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாக‌வும் அதனால் கோபமான மனைவி ரேகா பானு இப்பொழுது கம்பெனிகள் சட்ட வாரியம், மற்றும் இதர இயக்குனர்கள் அனைவருக்கும்  கடிதம் எழுதியிருப்பதாகவும் விரைவில் இப்பிரச்சனை பூதாகரமாய் வெடிப்பதோடு மட்டுமல்லாமல் மேலும் பல சிக்கல்கள் வெடிக்கும் எனவும் கழுகார் பகுதியில் எழுதப்பட்டிருந்தது.


 ஜு.வி. வாரமிருமுறை இதழ் வெளியான 17 நாட்களுக்குப் பிறகு நேற்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டரில் அந்தக் கட்டுரையை அப்படியே தழுவி,சுருக்கியும் திருத்தியும் காப்பியடித்து ஒரு செய்திப் பதிவு இன்று வெளியாகியிருக்கிறது.

அது இது தான்.


ஜூனியர் விகடனை காப்பி அடித்து தான் துப்பறிந்து கண்டுபிடித்து எழுதியது போல 'குமுதம் ரிப்போர்ட்டர்' எழுதுவது குறித்து நாம் விமர்சிக்க ஒன்றும் இல்லை.ஆனால் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரமிருமுறை இதழ்  புதிதாய் எழுதிய விஷயங்கள் குறித்து நாம் பேச‌ செய்தி இருக்கிறது.






ஆ.ராசாவும்,நக்கீரன் இணையாசிரியர் ஆர்.காமராஜூம் பஞ்சாயத்து நடத்தியதாகவும் அதில் ஒப்புக் கொண்ட படி பணம் ரூ.50 கோடியைக் கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தான் குமுதம் ரிப்போர்ட்டரின் புதிய குற்றச்சாட்டு.

மேலும் இந்த பஞ்சாயத்தில் அந்த நிறுவனத்தின் இயக்குனரான ஆ.ராசா,.காமராஜ்,இதர அனைத்து இயக்குனர்கள்,மற்றும் சதீஷ்,ரமேஷ்,சுரேஷ்,ராம்கணேஷ் ஆகியோர் ஈடுபட்டதாகவும் எழுதியிருக்கிறது.இதனை முன்னிலைப்படுத்தித் தான் இந்த செய்திப்பதிவே வெளியிடப்பட்டுள்ள‌து.அதனையே தலைப்பாக வைத்து இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

மறைந்த சாதிக் பாட்சா மனைவி இவர்கள் இருவர் மீதும் பகிரங்கமாய் குமுதம் ரிப்போர்ட்டரில் எந்தக் குற்றச்சாட்டும் தெரிவிக்க‌வில்லை.இது தொடர்பாய் எந்த அமைப்பிலும் புகார் தெரிவிக்கவும் இல்லை.முதல் முதலாய் 'குமுதம் ரிப்போர்ட்டர்' தான் இந்தப் பிரச்சனையில் இந்த இருவர் மீதும் பகிரங்கமாய் குற்றம் சாட்டி அவர்களை தலைப்பு வைத்து அவர்களின் படங்களை வெளியிட்டுச் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்திப்பதிவில் நமக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன.

1) ரூ.50 கோடி தருவதாக ஆ.ராசாவும்,காமராஜூம் நடத்திய பஞ்சாயத்து எங்கு,எந்த நாளில்  நடைபெற்றது..? இவர்களுடன் கலந்து கொண்டவர்கள் என்று சிலரை எழுதும் குமுதம் ரிப்போர்ட்டர் இதை ஏன் எழுதவில்லை..?ரூ.50 கோடி என்று எழுதுவ‌தற்கு என்ன ஆதாரம்..?

2)ஆ.ராசாவும் காமராஜும் பஞ்சாயத்து பேசினார்கள் என்பது தான் ரிப்போர்ட்டரின் குற்ற‌ச்சாட்டு,அதனை முன் வைத்துத் தான் இந்த கவர் ஸ்டோரியே வெளியிடபப்ட்டிருக்கிறது. இது தொடர்பாய்,இருவருக்கும் இதில் இருக்கும் பங்கு குறித்து எந்த வலிமையான ஆவணங்களும் ரிப்போர்ட்டாரால் முன் வைக்கப்ப‌டவில்லை.ஆக இது கற்பனை என்றும் இட்டுக்கட்டப்பட்டது என்றும் வாசகன் கருத இடம் இருக்கிறது.

அப்படி இருக்கையில் குறைந்த பட்சம் கீழ்க்கண்ட விஷயங்களையாவது செய்திருக்க வேண்டும்.

குற்ற‌ம் சாட்டப்ப‌ட்டவர்களுக்கு அவர்கள் தரப்பை வெளியிடக் குறைந்த பட்ச வாய்ப்பையாவது அளித்திருக்கலாம்.அது தான் குறைந்த பட்ச தொழில் தர்மம்.அதை இவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு தான்.

இதில் தொடர்புடைய ஆ.ராசா,காமராஜ் மற்றும் ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள்,இதர இயக்குனர்கள்,இதில் தொடர்புடைய இதர 4 பேர்கள் ஆகிய அனைவரும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.அவர்கள்  யாரிடமாவது தொடர்பு கொண்டு அவர்கள் தரப்புக் கருத்தை வாங்கி வெளியிட்டிருக்கலாம்.

3) குறைந்த பட்சம் இதில் முக்கிய தரப்பான சாதிக் பாட்சாவின் மனைவி ரேகா பானுவிடமாவது ஒரு நேர்காணலை வாங்கிப் போட்டிருக்கலாம்.
புகைப்படம் வைப்பதிலும்,தலைப்பு வைப்பதிலும் காட்டிய வன்மத்தை அவர்கள் கருத்தை வாங்கிப் போடுவதில் சிறிய அக்கறையைச் செலுத்தியிருக்கலாமே..?

4) அதிலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆ.ராசா முன்னாள் மத்திய அமைச்சர். வழக்குரைஞர். நாடே திரும்பிப் பார்த்த ஸ்பெக்ட்ரம் வழக்கின் முதன்மைக் குற்றவாளி. தன் தரப்பில் நியாயம் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்.தனது செயல்கள் அனைத்திலும் முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதி அமைச்சர் உட்பட அனைவரின் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி வருபவர்.அவரிடம் கருத்து வாங்கிப் போட்டிருக்க வேண்டுமல்லவா..?

அதைப்போல இதில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு முக்கியப் புள்ளியான  காமராஜ் ,ரிப்போர்ட்டரைப் போல இன்னொரு பத்திரிகையான நக்கீரனின் இணை ஆசிரியர்.அவரிடம் இந்தக் குற்றச்சாட்டுக்களைக் கூறி அவர் தரப்பு விளக்கத்தை வாங்கி வெளியிட்டிருக்க வேண்டுமா இல்லையா..?

அல்லது மேற்கண்ட இருவரையும் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துச் சொல்ல மறுத்திருந்தால் அதனைப் பதிவு செய்திருந்திருக்கலாம். இவர்கள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிரார்கள்.இவர்களைத் தொடர்பு கொள்வதோ,அல்லது தொலைபேசியில் பேசுவதோ பெரிய சிரமம் இல்லை.
அல்லது குறைந்த பட்சம் கிரீன் வேல்யூ புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரிடமாவதோ தொடர்பு கொண்டு அவர்கள் கருத்தை வாங்கி வெளியிட்டிருக்கலாம். சாதிக் பாட்சா மனைவி எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலும் கூட இல்லை.


இவர்களாகவே ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.குற்றச்சாட்டை நிருபிக்க துரும்பளவு ஆவணம் கூட இல்லை, குற்றம் நடந்திருக்கிறது என்பதற்கான முகாந்திரத்தை இவர்கள் எழுத்திலிருந்து நம்மால் நம்ப முடியவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் தரப்பிலான விளக்கமும் பெற முயற்சிக்கவில்லை.

இத்தனைக்கும் இதன் ஆசிரியர் கோசல்ராம் சில காலம் முன் வரை கிரைம் பீட் பார்த்தவர்.ஆனால் அடிப்படை ஆதாரமற்ற செய்தி குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவ‌ந்திருக்கிறது.

அலுவலகத்தில் அமர்ந்து எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் உள்நோக்கத்துடன்,வன்மத்துடன் எழுதி பக்கங்களை நிரப்புகிறார்கள்.பிளாக் மெயில் இதழியலுக்கு இது எந்த விதத்தில் குறைந்தது..?

இந்த செய்திக்கு இதன் வெளியீட்டாளர் வரதராஜனும் குழும ஆசிரியர் கோசல்ராமும்,நிருபர் ச.செல்வராஜூம்  தான் பொறுப்பு.( கோசல் அண்ணாச்சி நீங்க வரது மேல இப்ப ரொம்பக் கோவமா இருப்பீங்கன்னு எங்களுக்குத் தெரியும். கடைசி வரைக்கும் இருந்து போராடுங்க.)

அதிலும் கோசல்ராமோ,செல்வராஜோ மட்டும் நினைத்திருந்தால் இந்த செய்தி வர துளியும் வாய்ப்பு இல்லை.முழுக்க முழுக்க வரதராஜன் மன விருப்பபடி தான் வந்துள்ளது. அதிகார வர்க்கத்தின் துணையுடன் ரியல் எஸ்டேட் பார்ப்பவர்கள் எல்லாம் குறுக்கு வழியில் பத்திரிகை வெளியீட்டாளரானால் இது தான் நடக்கும். 

 பெரும்பாலும் எந்தவொரு ஊடகத்திலும், சக ஊடகம் தொடர்புடையவர்கள் மீது வலுவான,ஆதாரத்துடன் கூடிய குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், இவ்வள‌வு ஏன் குற்றமே நிரூபிக்கப்பட்டாலும் அது வெளிவராது.தவிர்த்து விடுவார்கள்.ஏனென்றால் நாளை நமது களவாணித்தனத்தை அவன் வெளிப்படுத்தி நாறடிப்பான் என்ற அச்சம் தான்.இது கூட்டுக் களவாணித்தனத்துக்கு எடுத்துக்காட்டு .

ஆனால் காமராஜ் தொடர்புடைய இந்தச் செய்தியோ, குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்றாலும்,சக ஊடகம் தொடர்புடையவர் என்றாலும் அவர்கள் மீதான காழ்ப்புணர்வால் வன்மத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே வேறு எதுவும் பகை உண்டா என்று நமக்குத் தெரியவில்லை.இன்றைய நிலையில் நாம் வலிமையாக இருக்கிறோம்,குமுதம் சாம்ராஜ்யம் இருக்கிறது இதுவே காலம் காலமாய் தொடரும் என்ற திமிரில் இதனை  வரதராஜன் செய்துள்ளார்.


வரதராஜனின் வன்மத்துக்கு பலியான காமராஜ் ஒன்றும் நேர்மையான பத்திரிகையாள‌ர் இல்லை தான்.

தான் பணியாற்றும்  ஊடகத்தில் எத்தனை எத்தனை பேருக்கோ எதிராக உள்நோக்கத்துடன்,ஆதாரமில்லாமல் பரபரப்புக்காகவும்,சுயநலனுக்காகவும் செய்தி வெளியிட்டவர் தான்.அவருக்கு இன்று ஏற்பட்ட அசிங்கமும் வலியும் இதற்கு முன் அவரால் நிறைய நபர்களுக்கு ஏற்பட்டுள்ள‌து.


 இத்துடன் இந்த அத்தியாயம் நிறைவு பெறலாம்.இதில் வரதராஜன் காமராஜை அசிங்கப்படுத்தியதாக குதூகலமடையலாம்.ஆனால் தொடர் முற்றுப்பெறாது.
அடுத்த அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கும்.

வரதராஜன் இப்பொழுது விடாப்பிடியாய் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் குமுதம் சாம்ராஜ்யத்தில் ஆயிரம் பஞ்சாயத்து இருக்கிறது. நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். வரதராஜன் பொதுவெளியில் அம்பலப்பட,அசிங்கப்பட‌ அவர் தொடர்புடைய பல விஷயங்கள் இருக்கின்றன.தூணளவு ஆதாரங்கள் அப்பொழுது தேவையில்லை.துரும்பளவு கிட்டினாலே போதும்.காமராஜ் அதனை தூணாக்குவார்.இப்பொழுது ஒரு வாரமிரு பத்திரிகையின் இணையாசிரியர் என்று வரதராஜனால் சொல்லப்படும் காமராஜ் அப்பொழுது பழி தீர்ப்பார்.

நக்கீரன் அட்டை மற்றும் ஊரெங்கும் ஒட்டும் சுவரொட்டிகளை வரதராஜன் குனிந்த தலையுடன் அலங்கரிப்பார்.காமராஜ் அன்று நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்.

இவர்கள் என்றும் திருந்தப்போவதில்லை

ஆனால் இது போன்ற பேர்வழிகளால் பாதிக்கப்ப‌டுவது என்னவோ இத்துறையும்,உண்மையாய் பணியாற்றும் ஊடகவியலாளர்களும் ,இவர்கள் எழுதுவதெல்லாம் உண்மை என்று நம்பி, காசு கொடுத்து வாங்கிப்படிக்கும் அப்பாவி வாசகனும்  தான்.

தொடர்புடைய இணைப்புகள்

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_28.html

http://kalakakkural.blogspot.in/2014/03/blog-post_26.html

http://kalakakkural.blogspot.in/2011/11/blog-post_08.html

http://kalakakkural.blogspot.in/2012_03_01_archive.html

http://kalakakkural.blogspot.in/2012/01/110.html 

http://kalakakkural.blogspot.in/2014/08/blog-post_20.html

Wednesday, 16 April 2014

ஜெயலலிதாவை எதிர்க்கும் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன்..!



ஜூனியர் விகடன் இதழைத் தொடர்ந்து வரதராஜனின் 'குமுதம் ரிப்போர்ட்டர்' வாரமிருமுறை இதழும் தனது கருத்துக் கணிப்பு சர்வேக்களை வெளியிடத் தொடங்கியிருக்கிறது.

நாம் பலமுறை சொல்லியிருந்தாலும்,மீண்டும் மீண்டும் பதிவு செய்யத் தான் வேண்டியிருக்கிறது.குமுதம் செட்டியாரின் வாரிசுக்கு மட்டும் சொந்தமான‌ சொத்துக்களை தன்வசம் ஆக்கிக்கொண்ட வரதராஜன், கருத்துக்கணிப்பை மட்டும் சும்மா விட்டு வைத்திருப்பாரா..?

இதற்கு மேல் எழுத ஒருவரும் இல்லை என்னும் அளவுக்கு ஆட்களை வைத்து எழுதியிருக்கிறார்.நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக எதுவும் இல்லை. ஆனால் அதற்காக நமக்கு வேலை வைக்காமலும் இல்லை.

யாருக்கு ஓட்டுப் போடுவார்கள்? என்று தான் வழக்கமாய் கருத்துக் கணிப்புகள் இருக்கும்.ஆனாலும் இங்கோ நேர் எதிர்.யார் மீது தமிழ் நாட்டு மக்கள் படுகோபமாய் இருக்கிறார்கள், யாருக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் என்று கருத்துக் கணிப்பாம்.

இதன் மூலம் யாருக்கு வெற்றி ? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாம். எதையும் குறுக்காகச் சிந்திப்பது தானே வ.ரா.கும்பலின் இயல்பு!

அதற்காக, தேர்தல் நேரத்தில் அவர்கள் என்ன அருளியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்காமல் இருக்கமுடியுமா? வேறு வழியில்லாமல் படித்துத் தொலைந்தோம்.




கருத்துக் கணிப்பின் அடிநாதம் இது தான்.

தமிழ்நாட்டின் 39 பாராளுமன்ற‌ தொகுதிகளில் 66100 நபர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்களாம்.

கருத்துக்கணிப்பின் அடிப்படையையே ஆட்டம் காணும் சில கேள்விகள் இதில் எழுகின்றன.

இவர்கள் கணக்குப் படி தொகுதிக்கு 1695 நபர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறார்கள்.அதிலும் போகிற போக்கில் வருபவர் போகிறவர் என்று கேட்கப்பட்டவை அல்ல.

ஆண்கள்,பெண்கள்,முதல்முறை வாக்காளர்கள்,
மாண‌வர்கள்,சுயதொழில் செய்பவர்கள்,பள்ளிக்கல்வி படித்தவர்கள்,பள்ளிக் கல்வி முடிக்காதவர்கள்,பட்டதாரிகள்,தனியார் நிறுவன ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,விவசாயிகள்,மாணவர்கள் என பலதரப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவு,எதிர்ப்பு என தனித்தனியாகத் தொகுத்திருக்கிறார்கள்.




ஒரு பாராளுமன்றத் தொகுதிக்குத் தோராயமாக 15 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள்.இவர்களின் வரையறையைப் பார்த்தால் ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு 1695 நபர்களை  மேற்கண்ட பல்வேறு பிரிவுகளில் சல்லடை போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிலும் மேற்சொன்ன ஒவ்வொரு பிரிவு நபர்களிலும் மிகச்சரியாக கண்டுபிடிப்பதும்,தேர்ந்தெடுப்பதும் மிக மிகச் சவாலான பணி.மிக நீண்ட காலம் பிடிக்கும் பணி. அதிலும் அறிவு சார் பணி.இதையெல்லாம் தாண்டி இதற்கு நிறைய மனித‌ உழைப்புத் தேவைப்படும்.

ஆனால் மேற்கண்டவற்றைச் செய்திருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் சொல்லியிருக்கிற‌து.

குமுதம் ரிப்போர்ட்டரில் சீனியர் நிருபர்கள்,நிருபர்கள் உட்பட மொத்தம் 10 பேர் மட்டும் பணியாற்றுகின்றார்கள்.இன்னும் தற்காலிக,நிரந்தரப்படுத்தப்படாத 5 நிருபர்கள் இருப்பதாய் வைத்துக் கொண்டாலும் மொத்தம் 15 பேர் தான்.வெறும் 15 பேர் இவ்வளவு பெரிய பணியை எப்படிச் செய்தார்கள்..? (அதுவும் தஙகளது பிற தேர்தல் ரிப்போர்ட்டிங் பணிகளுக்கு இடையில் )

விகடன் குழுமத்திற்கு இருப்பது போல 'மாணவ நிருபர்' என்னும் பெயரிலான புத்திசாலி அடிமைகளும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு இல்லை.

ஆக குமுதம் ரிப்போர்ட்டர் இப்படி ஒரு கருத்துக் கணிப்பை உண்மையாய் நடத்த வாய்ப்பே இல்லை என்னும் முடிவுக்கு வர வேண்டியிருக்கிற‌து..

நரேந்திர மோடிக்கு ஆதரவுக் கருத்துக் கணிப்பு என்பதால் பாரதிய ஜனதாக் கட்சியின் அலுவலகத்தில் உள்ள‌ சேவகர்களிடம் கொடுத்து எழுதி வாங்கி விட்டார்களா..? இல்லை குமுத‌ம் ரிப்போர்ட்டர்அலுவலகத்தில் அமர்ந்து,பொய் சொல்வது தான் சொல்கிறோம், மொத்தமாய் குத்து மதிப்பாய்,பிரம்மாண்டமாய்  66100 நபர்கள் என்று புளுகித் தள்ளி விட்டார்களா...?

நாம் என்ன முடிவுக்கு வர முடிகிறது என்றால், கடைசிக் காரண‌த்திற்குத் தான் வாய்ப்பு இருக்கிறது. இந்த அபத்தம் நம்மைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்ற மிதப்பில் மட்டும் வருவதல்ல இது.அரைகுறை முட்டாள் தனத்திலும் வருவது தான் இது.

இதே கால கட்டத்தில் கடந்த வாரம் இது போன்ற‌ ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்ட ஜூனியர் விகடன் மொத்தம் தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 11700 பேரிடம் (இன்னொரு சர்வேயில் 5500 நபர்களிடம் எடுத்ததாகச் சொல்லியது ஜூவி.)கருத்துக் கேட்டதாக எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லிவருவது தான். கருத்துக்கணிப்பை இட்டுக்கட்டி எழுதுவதில் மற்றவர்களை விடத் 'தெளிவும்' லாவகமும் 'பாரம்பரியமும்' மிக்க விகடன் ஆட்கள்தான் கை தேர்ந்தவர்கள்.

வரதராஜனைப் போலவே, திடீர் அதிர்ஷ்டத்தால் பத்திரிகையாளர்களாக ஆன வ.ரா. கும்பலுக்கு சுட்டுப் போட்டாலும் அந்த கூறு வராது.
**
கருத்துக் கணிப்பின் அடிப்படையே ஆட்டம் கண்ட நிலையில் அதில் வெளியிட்ட முடிவுகளின் உண்மைத் தன்மையைப் பார்ப்போம்.

இவர்களின் கருத்துக்கணிபின்படி, தமிழ்நாட்டு மக்கள் காங்கிரஸ் மீது அதிக கோபமாக இருக்கிறார்கள்.



நடப்பது இந்திய நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல்.ஆகவே கடந்த 10 ஆண்டுகளாய் மத்தியில் ஆட்சி பொறுப்பை  ஏற்று நிர்வாகம் செய்தவர்கள் மீது தான் மக்களின் கோபம் இருக்கும்.ஆக இது சரிதான்.

அதே போல திமுக மீதும் அதே அளவுக்கு கோபத்தில் இருப்பதாய் கருத்துக் கணிப்பு சொல்கிறது. ஒரு விழுக்காடு கூட மாற்றம் இல்லை.அவ்வளவு துல்லியம்.

தி.மு.க. கடைசி வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அனைத்தையும் ருசித்து அனுபவித்து விட்டு கடைசி சில மாதங்கள் விலகி இருப்பதாய் பாவ்லா காட்டினாலும்,பல நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மிகவும் விழிப்பாய்த் தான் இருக்கிறார்கள்,ஆக்வே அவர்கள் மீதும் மக்களின் கோபம் சரி சமமாய் இருக்கிறது என்று சொல்வதிலும் தர்க்க ரீதியாய் எதுவும் பிழை இல்லை தான்.

அடுத்ததாக மக்கள் நேற்று முளைத்த‌ 'ஆம் ஆத்மி' மீது படு கோபமாய் இருக்கிறார்களாம்.காங்கிரஸ்,தி.மு.க. வை விடக் கொஞ்சம் குறைந்த அளவில் அதாவது 15.5 விழுக்காடு மக்கள் கோபமாய் இருக்கிறார்களாம்.

கேட்பதற்கு படு காமெடியாய் இருந்தாலும் முட்டாள்தனமாகவும், அபத்தமாகவும் இருக்கிறது.

பெரு நகரங்களில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களைத்தவிர, இங்குள்ள பெரும்பான்மையோருக்கு இன்னும் ஆம் ஆத்மி என்னும் கட்சி இருப்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து ஊடகங்களிலும் நாள் முழுவதும் திட்டமிட்டு பரப்பப்படும் வெளிச்சத்திலும் இன்னும் மோடியே நம்மூர்க் கிராமங்களில் போய்ச்சேராத நிலையில், ஆம் ஆத்மியின் பிரபலம் அவ்வளவு சீக்கிரத்தில் நிகழ்ந்துவிடுமா? அதுவும் அதை எதிர் விமர்சனங்களோடு மக்கள் பார்க்கும்நிலை உருவாகிவிட்டதா? என்றெல்லாம் யாரும் யோசிக்கமாட்டார்கள் என இந்த முட்டாள் கும்பல் நினைத்துக் கொள்கிறதா? அல்லது நினைக்கக்கூடாது என பத்திரிகை அதிகாரத்தால் திணிக்கமுயல்கிறதா?

ஆம் ஆத்மி கட்சியின் மீது தமிழ்நாட்டு மக்கள் படுகோபமாய் இருக்கிறார்கள் என்பது எந்த அடிப்படையில்..?

காங்கிர‌சின் நகலாய் இந்திய நாட்டை மூன்று முறை ஆட்சி செய்த பாரதிய ஜனதா மீது, தமிழ்நாட்டை இப்பொழுது ஆட்சி செய்யும் அதிமுகவைவிட மக்கள் அதிக  கோபமாக ஆம் ஆத்மி கட்சியின் மீது இருக்கிறார்கள் எனறு எழுதுகிறார்கள், இந்த 'அதிமேதாவிகள்'!

டெல்லியில்தான் 43 நாட்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது ஆம் ஆத்மி .டெல்லி மக்கள் ஆம் ஆத்மி மீது கோபமாய் இருக்கிறார்கள் என்று சொல்வதிலாவது ஒரு அர்த்தம் இருக்கிறது.கருத்துக் கணிப்பு எடுத்தது டெல்லியிலா..?தமிழ்நாட்டிலா..?

ஒருவேளை டெல்லியைப்போல காங்கிர‌சுக்கு மாற்றாய் ஆம் ஆத்மிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களோ என்னும் அதீதப்பதற்றத்திலும், வரதராஜனின் உள்ளம் கவர் நாயகன் நரேந்திர மோடி மட்டுமே பிரதமராய் வர வேண்டும் என்னும் உள்ளக் கிடக்கையிலும் எழுதப்பட்டது தான் இது.அதனால் தான் பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் இல்லாத ஆம் ஆத்மியை இங்கு மிகப்பெரிய எதிரியாய்ச் சித்தரிக்கிறார்கள்.

கவலைப்பாடாதீர்கள் வ.ரா.!

நீங்கள் அதீதமாகப் பதற்றப்படுவது போல ஒருக்காலும், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்துவிடாது. நம்புங்கள்!

அப்படி ஒருவேளை வந்தாலும்,செட்டியாருக்கு எதிராக உங்களைத் தக்க வைக்க கட்சிக்கு ஒரு அதிகாரத்தரகர் உங்கள் கைவசம் இருப்பது போல,அதிலும் ஒரு ஆளைப்பிடித்து விடலாம்.
**


இனி இறுதிப்பகுதி

//வேலூரில் இஸ்லாமியர் ஒருவர் மோடி மீது எனக்குஅபிப்ராய பேதம் உண்டு. ஆனால் அவர் தான் பிரதமராய் வர வேண்டும் என்று சொன்னாராம்.//

மேலே பல பிரிவுகளில் கருத்துக் கேட்டதாக பல வரைபடங்களை வெளியிட்டுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் அல்லது சிறுபான்மையினரிடம் கருத்துக் கேட்டதாக எங்கும் பதிவு செய்யவில்லை.ஆக இதுவும் பொய்.

இதைத்த‌விர ஒட்டுமொத்த கருத்துக்கணிப்பின் நோக்கம் எது என்பதை இவ்வாறு எழுதப்பட்டுள்ளதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அதே போல அது மோசடி என்பதையும் நமது யதார்த்த வாழ்வில்,நாம் அறிந்துள்ள‌ இஸ்லாமியர்கள் மூலம் புரிந்து கொள்ள‌லாம். அதற்கு எங்கும் செல்ல வேண்டியதில்லை,குமுதம் அலுவலகத்தில் கருத்துக் கேட்டாலே போதுமான‌து.




இதற்கு மேல் இந்தக் கருத்துக்கணிப்பு குறித்து எழுத என்ன இருக்கிற‌து.?

நான்காவது தூண் எப்படி செல்லரித்துப் போய்க்கிடக்கிறது என்பதற்கு 'குமுதம் ரிப்போர்ட்டர்' ஒரு உரைகல்.

கொசுறு: 

இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் ஆளுங்கட்சியின் கோபத்தை வரதராஜன் சம்பாதித்துள்ளார் என்றும் கோட்டை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஜெயலலிதா, பிரதமர் ஆகத்தான் தமிழ்நாட்டில் அதிக செல்வாக்கு இருக்கிறது,அவர்தான் அடுத்த பிரதமர் என்று அக்கட்சியினர் தீவிரப் பிரச்சாரம் செய்து சொல்லும் நிலையில், நரேந்திரமோடிக்கே அதிக செல்வாக்கு,ஜெயலலிதாவுக்கு செல்வாக்கு இல்லை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் சொல்லியிருப்பதும்,அவரது படத்தைக் கூட செய்தியில் பிரசுரிக்காததும் ஆட்சியாளர்களிடம் உச்சகட்டக் கோபத்தை உண்டாக்கியுள்ளதாம். தேர்தல் முடிந்ததும் உக்கிரப்பார்வை  உறுதி என்கிறார்கள்.

இதனால் வெலவெலத்துப் போன வரதுவும் அவரது கோஷ்டியினரும் அதைச் சரிக்கட்டும் விதம் அடுத்து என்ன செய்ய‌லாம்   தீவிரமாய் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறார்களாம்.

Wednesday, 26 March 2014

நன்றி மறந்த 'குமுதம் ரிப்போர்ட்டர்' வரதராஜன்...!





ஒரு காலத்தில் கடவுளாய்த் தெரிந்தவர் இன்று  ஏளனம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சோகச்சித்திரம் இது.

குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குறித்த ஒரு செய்திப்பதிவு மூன்று வாரங்களுக்கு முன்பு எழுதப்ப‌ட்டு வரதராஜன் பார்வைக்குப் போயுள்ளது. அதைப் படித்த வரதராஜன் (குமுதம் குழும இதழ்களைத் தனது கட்டுப்பாட்டில் இப்பொழுது வைத்திருப்பவர். ) இதை யார் எழுதியது ? என்று கேட்கவும் ஆசிரியர் கோசல்ராம், ரிப்போர்ட்டர் முருகேசன் எழுதியது என்று சொல்லியிருக்கிறார்.

உடனே வரதராஜன்,இதுக்குப் பதிலா ஆபிஸ் பையனை வச்சு எழுதியிருந்தா சிறப்பா வந்திருந்திருக்கும் என்று ஏளனம் செய்துள்ளார்.அதனை கோசல்ராம் அப்படியே முருகேசனை அழைத்து,உங்களை வைச்சு எழுதுனதுக்குப் பதிலா ஆபிஸ் பையனை வச்சு எழுதியிருக்கலாம் என்று சொன்ன‌வுடன் இரா.முருகேசன்,அப்படியே செய்யுங்க சார்...நான் எதுக்கு இங்க என்று சொல்லியபடி தனது வேலையை விட்டு விலகி விட்டார்.

வேலையை விட்டுச் செல்லும் பொழுது, "அன்று கடவுளாகத் தெரிந்த நான் இன்று மதிப்பில்லாமல் போய் விட்டேன்.நன்றி கெட்ட உலகம்" என்று அலுவலகத்தில் அனைவரிடமும் சொல்லிச் சென்றுள்ளார்..

இரா.முருகேசன் அன்று யாருக்கு கடவுளாய்த் தெரிந்தார் என்று தெரிவதற்கு முன் அவரைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

இரா.முருகேசன் இதற்கு முன் தினமலர்,சென்னை எழும்பூர் நிர்வாக அலுவலகத்தில் ரிப்போர்ட்டராய்ப் பணிபுரிந்தவர்.இவருக்கு திமுக மேல்மட்டத் தொடர்புகள் அனைத்தும் உண்டு.கனிமொழியின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்.

தினமலரில் பணியாற்றிய முருகேசன் அதன்பின் குமுதம் ரிப்போர்ட்டரில் பணிக்குச் சேர்கிறார். இங்கு தி.மு.க. பீட் பார்க்கிறார்.

அந்த சமயத்தில் குமுதம் ஒரிஜினல் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கும், பார்த்தசாரதி மகன் வரதராஜனுக்கும் குமுதம் குழுமச் சொத்து தொடர்பிலான பிரச்சனை முக்கிய கட்டத்தில் இருக்கிறது.கருணாநிதி முதல்வராய் இருந்த சமயம் அது. கருணாநிதி ஜவஹர் பழனியப்பனுக்கு ஆதரவாய் இருக்கிறார்.

குமுதம் தொடர்பான பிரச்சனையில் வரதராஜனுடன் பேச்சுவார்த்தையில், ஹிந்து ராம் உள்ளிட்டோர் ஈடுபட்டும் உரிய சமரச தீர்வு எட்டப்ப‌டவில்லை. வரதராஜன் அநியாயமாகப் பிடிவாதம் பிடிக்கிறார். அதனால் ஜவஹர் பழனியப்பன் புகாரின் பேரில் வரதராஜனைக் காவல்துறை கைது செய்கிறது.கைது செய்த பின்பு வரதராஜனை அழைத்துச் சென்ற காவல்துறை அவர் எங்கு வைக்கப்ப‌ட்டிருக்கிறார் என்று சொல்லாமல் அலைக்கழிக்கிறது. அப்பொழுதைய முதல்வர் கருணாநிதி கவனம் செலுத்திய பிரச்சனை என்பதால் யாரும் இதில் தலையிட யோசிக்கின்றனர்.

வரதராஜனுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சி செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் அதிகார மட்டத்துடன் தொடர்பு கொள்ள‌வும், அவர்களிடம் காரியம் சாதிக்க‌வும் என்றே ஒரு சிலருக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும்.

வரதாரஜனின் குமுதம் ரிப்போர்ட்டர் அலுவலகத்தில் அப்படி இரண்டு பேர் இருந்தனர்.அதில் ஒருவர் கோசல்ராம் அவரால் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை.இன்னொருவரான ஜான் வில்கின்ஸ் பிரச்சனை உருவான பொழுது எட்டியே பார்க்க‌வில்லை.ஜானுக்கு, வரதராஜன் வட்டாரத்தில் இருந்து இது குறித்து  யாரும் போன் செய்தால்,அவர் என் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிற‌தா என்று தான் கேட்டாரே தவிர,வரதராஜனைக் காப்பாற்ற முன் வரவில்லை.வெளியே தலைகாட்டினால் நம்மை ஏதாவது வழக்கில் காவல்துறை கைது செய்துவிடுமோ என்று பயந்து கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இவர் தான் பதிவில் நாம் கூறியுள்ள இரா.முருகேசன்


அப்பொழுது தான் செய்தியாளர் இரா.முருகேசன் அவராகவே முன்வந்து தன் 'வேலை'யைத் தொடங்குகிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் என்று சொல்லப்படும் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா அவரது தொடர்பில் இருக்கிறார்.அவரை அணுகி அவர் மூலம் மு.க்.ஸ்டாலினை தொடர்பு கொள்கிறார்கள். முதலில் யோசித்த ஸ்டாலின் ஒருவழியாய் இந்த வழக்கில் தலையிடுகிறார்.இன்னொரு புறம் குமுதம் ஜவஹர் பழனியப்பனும் கைது நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்ள‌லாம் என்று முட்டாள் தனமாய் பின் வாங்குகிறார். அதனால் கருணாநிதி ஒருவழியாய் சமாதானம் ஆகிறார். அதன் பின் வரதராஜன் அலைக்கழிப்பில் இருந்து வெளிக்கொணரப்ப‌டுகிறார்.

வரதராஜனின் கைது படலம் சிறை செல்லாமல் முடிவுக்கு வருகிற‌து.இந்த வழக்கிலிருந்து வரதராஜன் தப்பி விட்டார்.(அன்று ஜவஹர் பழனியப்பன் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் இன்று அவர் தான் குமுதம் முதலாளியாய் இருந்திருப்பார்.பிரச்சனை இழுத்துக் கொண்டு இருந்திருக்காது.)

இதில் பெட்டிச் செய்தி...

குமுதத்தில் அப்பொழுது ஊழியர்கள் முதலாளி ஜவஹர் பழனியப்பனுக்கு ஆதரவாக அதிக அளவிலும், குமுதம் ரிப்போர்ட்டரில் வரதராஜனுக்கு ஆதரவாயும் இருந்தனர்.

வரதராஜன்  கைது செய்யப்ப‌ட்ட பொழுது குமுதம் குழுமத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் வரதராஜனுக்குத் தங்கள் தார்மீக ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு மாநகரக் காவல்துறை அலுவலகம் சென்றனர்.அதே சமயம் டாக்டர் ஜவஹர் பழனியப்பன்,கைது செய்யபப்ட்ட  வரதராஜனைச் சந்திக்க யார் யார் செல்கிறார்கள் என்பதை அறிவதற்காய் புகைப்படக் காரர் திரு.மத்தியாஸ் என்பவரை அனுப்புகிறார்.

வரதராஜனை அங்கு கண்டதும் அவருக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.அதில் உற்சாகமான ஒரு பத்திரிகையாளர் கம் இலக்கியவாதி லைட்டாக ஒரு டான்ஸ் போட்டதோடு மட்டுமல்லாமல்,விசிலடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். (சமுத்திரம் என்று பொருள்படும் புனைப்பெயரை தனக்குச் சூட்டியுள்ள‌வர் தான் அவர்.இலக்கிய உலகிலும் அவர் அறியப்படுபவர் தான்.)

இந்த சமயத்தில் ஜவஹர் பழனியப்பன் அனுப்பிய புகைப்படக்காரர் .மத்தியாஸ் அங்கு வந்து சேர்கிறார்.அவர் வந்தவுடன் வரதராஜனுக்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் இடத்தைக் காலி செய்து ஓட்டம் பிடித்தவ‌ர்கள்,குமுதம் அலுவலகம் சென்று தான் நின்றார்கள். 






அதன்பின் வரதராஜன் காவல்துறை பிடியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.சிறைவாசம் தவிர்க்கப்படுகிறது.வெளியில் வந்தவுடன் தனக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்த இரா.முருகேசனை அழைத்து கடவுள் மாதிரி எனக்காக வந்தீர்கள் என்று கையைப்பிடித்து நன்றி சொல்கிறார். 

அதன்பின் தான் மு.க.ஸ்டாலினின் மனைவி எழுதும் தொடர் குமுதம் குழும இதழ்களில் வெளிவருகிறது.இன்று வரை கருணாநிதியை வன்மத்துடன் அணுகும் வரதராஜன் கட்டுப்பாட்டில் இருக்கும் குமுதம் குழும‌ பத்திரிகைகள்,ஸ்டாலினை மென்மையாக அணுகும் காரணம் இதுதான்.(இது இன்னும் எவ்வளவு காலத்துக்கோ...)

இது தான் முருகேசனின் புலம்பலுக்கு காரணம்.

யாருக்கு உதவி செய்கிறோம்,என்ன நோக்கத்திற்கு உதவி செய்கிறோம் என்பதை வைத்துத் தானே அதன் தராதரம் தீர்மானிக்கப்படும்.வரதராஜன் போன்றவர்களின் நியாயமற்ற காரியங்களுக்கு உதவி செய்துவிட்டு இப்பொழுது புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிற‌து..?

மேலும் வரதராஜனிடம் நன்றியை எதிர்பார்ப்பது மிகவும் மடமை அல்லவா..?

Sunday, 2 March 2014

புலனாய்வு புரோக்கர்கள்...!



தரகு மணியன் சில வாரங்களுக்கு முன்பு மாட்டுத்தரகர் போல நடந்து கொள்கிறார் என்று விஜயகாந்தை குற்றம் சாட்டினார். அவர் தவறாக உருவகம் செய்து விட்டார் என்பது தான் நம் கருத்து. 

ஏனென்றால் மாட்டின் சொந்தக்காரர் விஜயகாந்த்.அவர் தரகராக முடியாது.அந்த மாட்டைத் தனது பா.ஜ.க.முதலாளிக்காய் விலைக்கு வாங்கும் தரகர்கள் நிறைய நபர்கள் தமிழ்நாட்டில் உண்டு.

ஒருவர் தமிழருவி மணியன். இதழ் வடிவில் ஜூனியர் விகடன்,தினமலர், தினமணி,குமுதம் ரிப்போர்ட்டர்,தொலைக்காட்சி வடிவில் தந்தி டிவி,புதிய தலைமுறை,பாலிமர் ஆகியன இதர தரகர்கள்.

இதில் ஜூனியர் விகடனின் வசீகரம் முதன்மையானது,தொழில் நேர்த்தியானது என்பது ந்ம் கருத்து.

தரகு மணியன் கடந்த சில நாட்களாய் ஒதுங்கியிருக்க, த‌னது முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்து விஜயகாந்தை பா.ஜ.க.அணிக்கு கொண்டு வரும் தரகு வேலையில் இதர தரகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் பதிவில் நாம் புலனாய்வு என்று சொல்லிக் கொண்டு தரகு வேலை பார்க்கும் நக்கீரன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர் ஆகியவற்றைப் பற்றிப் பார்ப்போம். 

ஜூனியர் விகடன் சனிக்கிழமையன்று வெளிவந்த இதழில் அது வெளியிட்ட செய்தி தான் இது.



ஒரு முறை படித்து விடுங்கள்.




பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கான பேச்சுவார்த்தை இறுதிக்​கட்​டத்​தை எட்டுவதற்கான சூழ்நிலை ஏற்​பட்​டுள்ளது''- என்ற பீடிகையுடன் உள்ளே வந்தார் கழுகார்.

 ''அப்படி முடிந்தால் பி.ஜே.பி-க்கு அது பெரிய சாதனைதான்!'' என்றோம். தலையாட்டியபடியே ஆரம்பித்தார் கழுகார்.

''டிசம்பர் 2-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை பி.ஜே.பி. தொடங்கியது. இப்போதுதான் அது லேசாக கனிய ஆரம்பித்​துள்ளது என்கிறார்கள். சிங்கப்பூர் செல்லும் முன், பி.ஜே.பி. பிரமுகர்கள் விஜயகாந்த்தைச் சந்திக்க முயற்சித்துள்ளார்கள். அப்போது, 'அனைத்தையும் சுதீஷிடம் சொல்லியிருக்கிறேன். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிச் சென்றாராம் விஜயகாந்த். 'அகில இந்தியத் தலைமை விரைவில் வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தில் போட்டியிடும் பி.ஜே.பி. வேட்பாளர்களில் ஒரு சிலர் பெயராவது அதில் இடம்பெற வேண்டும். நீங்கள் உறுதியாகச் சொன்னால்தான், அதன் அடிப்படையில் எங்களால் முடிவு செய்ய முடியும்’ என்று பி.ஜே.பி. பிரமுகர் சொல்லியிருக்கிறார். 'நிச்சயமாக இரண்டு, மூன்று நாட்களில் உங்களுக்கு நல்ல முடிவு சொல்வோம்’ என்று சொல்லிச் சென்றுள்ளார் விஜயகாந்த். இதைத் தொடர்ந்து பி.ஜே.பி. பிரமுகர்கள் சுதீஷைச் சந்தித்தார்கள்!''

''என்ன பேசப்பட்டதாம்?''

நேரடியாக விஷயத்துக்கு வந்தாராம் சுதீஷ். 'எத்தனை சீட் தருவீர்கள்?’ என்பதுதான் அவரது கேள்வி. 'எங்களால் 12 சீட் கொடுக்க முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்கள் இவர்கள். 'இந்த எண்ணிக்கை மிகக் குறைவு’ என்றாராம் சுதீஷ். 'ம.தி.மு.க., பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டும். பி.ஜே.பி-யும் கூடுதலான இடங்களில் போட்டியிட வேண்டும். இவை போக கொங்கு கட்சி, பச்சமுத்து ஆகியோருக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே 12-க்கு மேல் ஒதுக்க இயலாது’ என்று சொல்லியிருக்கிறார்கள் இவர்கள். 'இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும்போது நாங்கள் 19 சீட் கேட்டோம். ஆனால், இத்தனை கட்சி இந்தக் கூட்டணிக்கு வருவதால் நாங்கள் இறங்கி வந்து 16 இடங்கள் கேட்கிறோம். 16 இடங்கள் தருவதாக இப்போது சொன்னால் உடனே, கூட்டணி உறுதியானது என்று டி.வி-யில் ஸ்குரோல் விடுவதற்கு நாங்கள் தயார்’ என்றாராம். 'சிறு கட்சிகள் சில நம் கூட்டணிக்கு வர இருக்கின்றன. 



அவர்களுக்கு ஐந்து இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதம் இருப்பது 35 இடங்கள்தான். அதனைத்தான் பி.ஜே.பி., தே.மு.தி.க., ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய நான்கு கட்சிகளும் பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'யார் யார் இந்தக் கூட்டணிக்கு வருகிறார்கள் என்பதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு 16 இடங்கள் வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் சுதீஷ். 'எங்களால் 12 இடங்கள்தான் தர முடியும், ஒருவேளை பா.ம.க. வராவிட்டால் 14 இடங்களைத் தரலாம்’ என்று சொல்லியிருக்கிறது பி.ஜே.பி. தரப்பு!''

''ஏன்... பா.ம.க-வுக்கு என்ன?''

தே.மு.தி.க-வும் பா.ம.க-வும் ஒரே கூட்டணியில் இருப்பது குறித்து சிக்கல் இருப்பதை நான் ஏற்கெனவே உமக்குச் சொல்லி​யிருக்கிறேன். 'விஜயகாந்த் வேண்டாம்’ என்று ராமதாஸ் சொல்லிவருவதாக நீரே அட்டையில் போட்டு இருந்தீர் அல்லவா? அதில் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார். ஆனால், அன்புமணிதான், 'பரவாயில்லை, பி.ஜே.பி. கூட்டணியில் சேருவோம்’ என்று சொல்லிவந்தார். உடன்பாடு இல்லாவிட்டாலும் அன்புமணி சொல்கிறாரே என்பதற்காக சம்மதித்தார். 'ஆனால் நம்முடைய மரியாதை குறையக் கூடாது, ஏற்கெனவே நாம் அறிவித்த தொகுதிகளை அப்படியே கொடுத்துவிட வேண்டும். மேலும் நம்முடைய சமூக ஜனநாயகக் கூட்டணியையும் இந்தக் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் கட்சிகளுக்கு நான்கு இடங்கள் தர வேண்டும்’ என்று சொல்லிவந்தார். சமூக ஜனநாயக் கூட்டணியில் உள்ள கட்சிகளை பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ப்பது குறித்து இப்போது பேச வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே கழற்றிவிட்டுவிட்டது பி.ஜே.பி. 

அந்தக் கட்சிகளுக்கு உண்மையிலேயே செல்வாக்கு இருந்தால்கூட அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு இடங்கள் இல்லை என்று பி.ஜே.பி. சொன்னது. இந்த அடிப்படையில் பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. 'நாங்கள் அறிவித்த 10 தொகுதிகளை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். கூடுதலாக அன்புமணிக்கு தருமபுரியைத் தாருங்கள். மொத்தம் 11 தொகுதிகள் வேண்டும்’ என்று பா.ம.க. சொன்னது. 'அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட 10 தொகுதிகள்தான் வேண்டும் என்று சொல்வது சரியானது அல்ல. நீங்கள் அறிவித்ததில் சேலம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகள் எங்களுக்கே வேண்டும்’ என்று பி.ஜே.பி. சொன்னது. தே.மு.தி.க. கொடுத்த பட்டியலில் பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள ஆரணி, கடலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஐந்து தொகுதிகள் இடம் பெற்றுள்ளனவாம். புதுச்சேரியில் பா.ம.க. வேட்பாளரை நியமித்துள்ளது. ஆனால், அங்கு என்.ஆர். காங்கிரஸுடன் பி.ஜே.பி-யினர் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்திவிட்டார்கள். அந்தத் தொகுதியை என்.ஆர். காங்கிரஸுக்குத் தர வேண்டும் என்று பி.ஜே.பி. நினைக்கிறது. 

இந்த அடிப்படையில் பார்த்தால், பா.ம.க-வுக்கு தருமபுரி ஒரு தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதியுமே சிக்கலாக இருந்தது. இதற்கு மத்தியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராமதாஸ், 'ஒரு வேட்பாளரைக்கூட வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை’ என்று சொன்னார். அது பி.ஜே.பி-யை பின்வாங்க வைத்தது. அவரிடம் பேச்சுவார்த்தையை அப்படியே நிறுத்திவைத்திருந்தார்கள். விஜயகாந்த் தன்னுடைய முடிவைச் சொன்ன பிறகு அடுத்த ஸ்டெப்பை பா.ம.க-வை நோக்கி வைக்கலாம் என்று அமைதியாக இருந்தார்கள் பி.ஜே.பி-யினர்!''



''அடுத்து என்ன நடந்தது?''

''இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் அன்புமணியை பி.ஜே.பி. தரப்பில் தொடர்பு கொண்டு பேசினார்கள். 'நீங்கள் எவ்வளவு தருவதாக இருக்கிறீர்கள்?’ என்று அன்புமணி கேட்டுள்ளார். 'எட்டு தொகுதிகளை பா.ம.க-வுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்று சொல்லியிருக்கிறது இந்தத் தரப்பு. 'சிங்கிள் டிஜிட்தான் தருவீர்கள் என்றால் பேசிப் பயனில்லை. டபுள் டிஜிட் தருவதாகச் சொன்னால்தான், பேச்சுவார்த்தையைத் தொடரலாம்’ என்று அன்புமணி சொல்லியிருக்கிறார். 'எங்களுக்கு எட்டு சீட் என்றால் மற்றவர்களுக்கு எத்தனை தரப்போகிறீர்கள்?’ என்று அன்புமணி கேட்க, 'இதை நீங்கள் ஒப்புக் கொண்டால்தான் மற்றவர்களிடம் பேச முடியும்’ என்று சொல்லியது பி.ஜே.பி. தரப்பு. 'கறாராக ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன், பா.ம.க-வுக்கு 10 தொகுதிகள், எங்கள் கூட்டணியில் இப்போது இருக்கும் பி.டி.அரசகுமாருக்கு ஒரு தொகுதி, கொங்கு  நாகராஜனுக்கு ஒரு தொகுதி. ஆக மொத்தம் 12 தொகுதிகளைக் கொடுத்துவிடுங்கள்’ என்று அன்புமணி தனது பக்கத்தைத் தெளிவு படுத்தினாராம். 'அரசகுமார், நாகராஜனுக்கு தொகுதிகள் ஒதுக்க இயலாது’ என்று பி.ஜே.பி. சொல்லிவிட்டது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னார்களாம். 'அரச​குமார் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது, நாகராஜனை சேர்ப்பதற்கு எங்களது கூட்டணியில் இருக்கும் கொங்கு ஈஸ்வரன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எங்களுக்கு ஈஸ்வரன் முக்கியம்’ என்று இவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 'அரசகுமார் மீது வழக்கு இருக்கிறது என்றால், யார் மீதுதான் வழக்கு இல்லை? அத்வானி மீதும்தான் வழக்கு இருக்கிறது’ என்று பா.ம.க. தரப்பு கேட்டதாகவும், அதுவே பி.ஜே.பி-யை வருத்தப்பட வைத்ததாகவும் சொல்கிறார்கள். 'அத்வானி மீது இருப்பது அரசியல் வழக்கு, அரசகுமார் மீது இருப்பது சீட்டிங் வழக்கு, இரண்டும் ஒன்றா?’ என்று கேட்கிறது பி.ஜே.பி. தொகுதி பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இப்படி ஹீட் விவாதங்களாக மாறியது!''

''அப்புறம்?''

''அப்புறம் என்ன? முறிவுதான்! பொன்.ராதாகிருஷ்ணனும் அன்புமணியும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது என்று முடிவானது. ஆனால், அதற்கு அன்புமணி உடன்படவில்லை. 'பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம் என்று காடுவெட்டி குரு சொல்கிறார். குரு சொல்வதை மீறி ராமதாஸ் செய்ய மாட்டார். ஆனால் அன்புமணியோ, பி.ஜே.பி. கூட்டணி வேண்டும் என்கிறார். அன்புமணியின் ஆசைக்காக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கிறதே தவிர, மற்றபடி உங்களோடு அணி சேர மாட்டார்கள்’ என்ற தகவல் பி.ஜே.பி. தரப்புக்குப் போனது. 'அவர்கள் எதற்காக வேண்டுமானாலும் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தட்டும்,. எங்களைப் பொறுத்தவரையில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளும் எங்கள் அணியில் இருக்க வேண்டும், இருந்தால், அது பலமான அணியாக அமையும் என்று நினைக்கிறோம். அதற்காகத்தான் இந்த ஃபார்முலாவைப் போட்டு டெல்லித் தலைமையிடம் ஒப்புதல் வாங்கினோம். பா.ம.க.-வுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அங்குள்ள அனைத்துத் தொகுதிகளையும் கேட்கிறார்கள். அதனால், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு என்ன பயன்? ஏதாவது ஒன்றிரண்டு தொகுதிகளையாவது மற்ற கட்சிகளுக்கு தர அவர்கள் தயாராக இருந்தால்தானே நல்லது’ என்று பி.ஜே.பி. சொல்லி வந்தது. இறுதியாக கடந்த செவ்வாய்கிழமை இரவு மீண்டும் அன்புமணியை பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர் சந்தித்தார். 'எங்களது இறுதி முடிவு’ என்று சில விஷயங்களைச் சொல்லிவிட்டார்!''

''அது என்ன?''

''எட்டு தொகுதிகள்தான் பா.ம.க-வுக்கு. சேலத்தையும் கிருஷ்ணகிரியையும் பி.ஜே.பி-க்குத் தர வேண்டும். இந்த இரண்டு தொகுதிகளைத் தராவிட்டால், இதில் ஏதாவது ஒன்றைத் தாருங்கள். நீங்கள் அறிவித்துள்ள தொகுதிகளில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றை தே.மு.தி.க-வுக்குத் தாருங்கள். புதுச்சேரியை என்.ஆர். காங்கிரஸுக்குத் தாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். 'ஒரு தொகுதிகூட வாபஸ் வாங்க முடியாது. நாங்கள் சுவற்றில் எழுதிவிட்டோம். பிரசாரம் தொடங்கிவிட்டோம் அதனால் சாத்தியம் இல்லை’ என்று அன்புமணி சொன்னார். 'தொகுதியையும் வேட்பாளரையும் அறிவித்துவிட்டு, கூட்டணி பேசும் முறையே சரியில்லையே’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள் பி.ஜே.பி. ஆட்கள்.''

''முறிந்ததா... தொடர்கிறதா?''

''இந்தப் பேச்சுவார்த்தைக் காட்சிகளை காங்கிரஸ் உன்னிப்பாக கவனித்துவந்தது. குலாம்நபி ஆசாத்தும் அகமது படேலும் அன்புமணிக்கு எப்போதும் நண்பர்கள். அதனால், ஆசாத் அந்த நேரத்துக்காகத்தான் காத்திருந்தார். அன்புமணியிடம் பேசலாமா என்று கேட்டுள்ளார். அன்புமணி, தனது மாமனாரும் ஆரணி தொகுதி எம்.பி-யும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமியுடன் டெல்லி பறந்துவிட்டார். அநேகமாக அகமது படேலைப் பார்த்து பேசுவதற்காகப் போனதாகச் சொல்லப்படுகிறது. 'நண்பர் ஒருவரது வீட்டுத் திருமணத்துக்குத்தான் போய் வந்தோம்’ என்று அன்புமணி சொல்லி வருகிறாராம்!''

''இறுதியாக தே.மு.தி.க-வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?''



''13, 14, 15 ஆகிய மூன்றுக்கு இடையில் தான் இழுபறி இருக்கிறது. ஆனால், பி.ஜே.பி. ஒரு கணக்கைப் போட்டு வைத்துள்ளது. தே.மு.தி.க-வுக்கு 12 இடங்கள், பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள், இதனைக் கூட்டினால் 36 தொகுதிகள் ஓவர். மீதமுள்ள நான்கு தொகுதிகளை ஈஸ்வரன், பச்சமுத்து, புதுவை என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு ஒதுக்கத் திட்டம். ஒரு தொகுதி தலித் கட்சி ஒன்றுக்கு வழங்கத் திட்டம். இந்தக் கணக்கை எடுத்துக் கொண்டு டெல்லிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர் சென்றுவிட்டனர். டெல்லியில் நடக்கும் பி.ஜே.பி-யின் பார்லிமென்ட் போர்டு மீட்டிங்கில் எடுக்கப்படும் முடிவின்படி வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம். தமிழக மூவர் குழு ராஜ்நாத் சிங்கை சந்தித்து இந்தப் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.

 இரண்டு மூன்று நாட்களுக்குள் தே.மு.தி.க., பா.ம.க. ஆகியவை முடிவைச் சொல்லாவிட்டால் பி.ஜே.பி-யும் ம.தி.மு.க-வும் மற்ற கூட்டணிக் கட்சிகளும் தங்களுக்கான தொகுதிகளை மட்டும் அறிவித்துவிட்டு, தேர்தல் பணிகளில்  இறங்கத் திட்டமிட்டுள்ளார்களாம். இப்படி இவர்கள் கிளம்புகிறார்கள் என்று தெரிந்ததும் பதற்றமான சுதீஷ§ம் அன்புமணியும் பி.ஜே.பி. குழுவிடம் வலியப் பேசியிருக்கிறார்களாம்!''

''ஆனால், 'எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கவில்லை’ என்று தே.மு.தி.க-வின் கொள்கை​பரப்புச் செயலாளர் சந்திரகுமார் அறிவித்துள்ளாரே?''

''ஓஹோ! அப்படியா? அது உண்மையானால், பி.ஜே.பி-யினரின் ஃபேஸ்புக்கில், '272 இடங்களில் நாங்கள் ஜெயிப்போம்’ என்ற செய்திக்கு அவர் எதற்காக லைக் கொடுத்தாராம். இன்னொன்றையும் சந்திரகுமார் சொல்லியிருக்கிறார். 'தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான், கூட்டணியை முடிவு செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் ஒரு லாஜிக் வைத்துள்ளார்கள். 'நாம் இப்போதே கூட்டணியை அறிவித்துவிட்டால், நம்மை அவமானப்படுத்த நினைக்கும் ஜெயலலிதா இதனைப் பயன்படுத்திக்கொள்வார். உடனடியாக தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ-க்களை உடைக்கப் பார்ப்பார். எனவே, தேர்தல் தேதியை அறிவித்த பிறகு கூட்டணியை அறிவித்துக்கொள்ளலாம்’ என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். அதனால்தான், அவர் முடிவுகளை அறிவிக்காமல் இழுக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவர் சொல்வது சரி என்று நினைப்பது மாதிரியே தே.மு.தி.க. வேட்பாளர் அருண் சுப்பிரமணியன் 27-ம் தேதி அன்று மதியம் முதல்வரைச் சென்று சந்தித்துள்ளார். அருண் சுப்பிரமணியன் மீது வழக்குப் போட்டு ஓட ஓட விரட்டினதும் தமிழக போலீஸ்தான். ஆனால், அரசியல்!''//
***

( //''டிசம்பர் 2-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான முஸ்தீபுகளை பி.ஜே.பி. தொடங்கியது. இப்போதுதான் அது லேசாக கனிய ஆரம்பித்துள்ளது என்கிறார்கள். //
இது ஆரம்ப பத்தியில் வந்துள்ள‌து..இப்பொழுது தான் லேசாக கனிய ஆரம்பித்துள்ள‌து என்றால் கடந்த மூன்று மாதமாய் எழுதிய‌தெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதுன்னு நீங்களே ஒப்புக் கொள்கின்றீர்களா..? லேசாக கனிவதற்காய் இதுவரை மலைபோல் எழுதிய செய்திகள் எங்கள் காசிலா..?) 


இந்த இதழில் இடம்பெற்ற பா.ஜ.க.,தே.மு.தி.க.,பா.ம.க.,என அனைத்துத் தகவலையும் பார்த்தீர்களானால் பா.ஜ.க.அலுவலக வட்டாரத்துத் தகவலாகத் தான் இருக்கும்.பொன்னாரின் செய்தி தொடர்பாளரோ இல்லை ஒரு அல்லக்கையோ ஜூ.வி.நிருபரிடம் வாந்தி எடுத்ததை அப்படியே ஜூவி இதழில் நமக்குப் பரிமாறி இருக்கிறார்கள்.அங்கங்கே மானே,தேனே கூடப் போடவில்லை.தே.மு.தி.க.,கொறடா சந்திரகுமார் முகநூலில் லைக் போட்டது( ! ) மட்டும் தான் ஜூவி புலனாய்வு செய்ததில் புதிய செய்தி.

இந்த வாந்தி செய்திகள் தினந்தோறும் தினமலர்,தினத்தந்தி,மாலைமலர்  தேர்தல் களத்திலும் அப்படியே வெளிவருகிறது.கூட்டணி விரைவில் இறுதியாகும்.அறிவிப்பு வெளியாகும் என தினசரி இதழ்களில் வெளியிட்டு வருகிறார்கள்..

இதைத்தான் ஜூனியர் விகடனும் வெளியிட்டு வருகிற‌து.

இதற்கு எதற்கு ஜூனியர் விகடனைப் படிக்க வேண்டும்.? 

ஆனால் பா.ம.க.வுக்கு 8,தே.மு.தி.க.வுக்கு 12 என கறார் காட்டிய கமலாலய வட்டாரம் சொன்னதை நமக்குச் சொன்ன ஆசிரியர்,  வைகோவுக்கு 6 தொகுதிகள் தான் எனச் சொல்லியதை நம் ஜூனியர் விகடன் ஆசிரியர் மறைத்து விட்டார்.

சரி கிடக்கட்டும்.

இப்படியாக ஜூனியர் விகடனின் தரகு வேலை கொஞ்சம் சிரமத்துடன் தொடர்கிறது.




ஜூனியர் விகடன் பா.ஜ.க.கூட்டணியில் தே.மு.தி.க.,கட்சியைச் சேர்க்க தரகு வேலை பார்க்கிறது என்றால் நக்கீரனோ தனது  தி.மு.க.கூட்டணியில் காங்கிரசைச் சேர்க்கத் தொட‌ர்ந்து தரகுப் பணியைச் செய்கிறது.

அது நடப்பு இதழில் வெளியிட்ட செய்தி தான் இது.

// தி.மு.க.தரப்பில் என்ன நடக்குதுன்னு சொல்லுப்பா..?

கூட்டணிக்குள் மறுபடியும் நுழைஞ்சிடணும்னு கனிமொழி, தயாநிதி இவங்க மூலமா தி.மு.க கதவைத் தட்டிய காங்கிரசுக்கு கலைஞர்கிட்டேயிருந்து சரியான ரிப்ளை வராததால, சாட்சிக்காரங்க காலிலே விழுறதைவிட சண்டைக்காரர் காலிலேயே விழுந்திடலாம்னு நினைச்சி, கூட்டணிக்குத் தடை போடும் மு.க.ஸ்டாலின்கிட்டேயே பேச காங்கிரஸ் மேலிடம் முயற்சி செய்வதா போன முறை பேசிக்கிட்டோமே.. யார் மூலமா பேசினாங்களாம்?''

""டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரிச்சேங்க தலைவரே.. சோனியா, அகமது பட்டேல் இவங்களெல்லாம் ஆலோசிச்சி, நீலகிரி தொகுதி முன்னாள் எம்.பி. பிரபுவை பேச வச்சிருக்காங்க. ராஜீவ்காந்தியோட நண்பரான பிரபு, சோனியாகாந்திக்கு நம்பகமானவரு. அவர்கிட்டே போனில் பேசக்கூடிய ஒரு சில காங்கிரஸ் பிரமுகர்களில் பிரபுவும் ஒருத்தர். அவர்கிட்டே காங்கிரஸ் மேலிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைச்சப்ப, ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர்தான். அவங்க கட்சிக்காரங்களுக்கு எங்க காலேஜில் சீட் கொடுக்கச் சொல்லி சிபாரிசு செய்தாருன்னா உடனே ஓ.கே. பண்ணிடுவேன். அதையும் தாண்டி எங்களுக்குள் நல்ல நட்புறவு உண்டு. நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிப் பேசிடுறேன்னு பிரபு சொல்லியிருக்காரு. சொன்ன மாதிரியே, ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு ஸ்டாலினை வீட்டில் சந்திச்சி பிரபு பேசியிருக்காரு. ஸ்டாலின் மருமகன் சபரீசனும் இருந்திருக்காரு.''

""கூட்டணி முடிவாயிடிச்சா?''

""காங்கிரஸ் மேலிடத்தோட ஆசையையெல்லாம் ஸ்டாலின்கிட்டே சொன்ன பிரபு, தமிழ்நாட்டில் தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைஞ்சா அதுதான் வெற்றிக்கூட்டணியா இருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் ஜெ.வின் அரசியல் பிடிக்காது. அ.தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இருந்தப்பவே தேர்தல் பிரச்சாரத்தில் அவரோடு எனக்கு மோதல்தான். நானும், எங்க தலைமையும் தி.மு.க கூட்டணியைத்தான் விரும்புறோம்னும் சொல்லியிருக்காரு. எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ஸ்டாலின், 2ஜி விவகாரத்துல தி.மு.கவை காங்கிரஸ் களங்கப்படுத்திடிச்சி. 

இலங்கைப்பிரச்சினையில் நீங்க செஞ்ச தவறுகளெல்லாம் தி.மு.க மேலே பழியா விழுந்து எங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்குது. இப்படிப்பட்ட நிலையில, மறுபடியும் கூட்டணி அமைஞ்சா அதை மக்கள்கிட்டே எடுபடும்னு எனக்குத் தோணலைன்னு சொல்லியிருக்காரு.''

""சரியான பாயிண்ட்டுதான்… அதுக்கு பிரபுகிட்டே ஏதாவது பதில் இருந்துச்சா?''

""இதெல்லாம் மேலிடத்துப் பிரச்சினையாச்சே.. அதனால, சோனியாவுக்கே போன் போட்டு, ஸ்டாலினோட கேள்விகளைப் பற்றி சொல்லிட்டு, ஸ்டாலின்கிட்டேயே போனைக் கொடுத்துட்டாரு பிரபு. கலைஞரோட உடல்நலத்தையும் ஸ்டாலினோட உடல்நலத்தையும் விசாரிச்ச சோனியா, கட்சிக்காக ஸ்டாலின் ஒவ்வொரு ஊரா சளைக்காம டூர் போறது பற்றிக் கேள்விப்பட்டதா சொல்லி பாராட்டியிருக்காரு. 

பிரபுகிட்டே ஸ்டாலின் வச்ச கேள்விகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில், சில விஷயங்கள் எனக்கே தெரியாம நடந்திருக்கலாம். அதுக்காக வருத்தம் தெரிவிச்சிக்கிறேன். நேரில் விளக்குறதுக்கு ராகுலை அனுப்பி வைக்கிறேன். சரி பண்ணிடலாம். நம்ம கூட்டணிக்குள்ளே மற்ற கட்சிகளும் வரும். ஸ்ட்ராங்கான கூட்டணி யை அமைச்சிடலாம்னு சோனியா சொல்லியிருக்கிறார். எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட ஸ்டாலின், நான் அப்பாகிட்டே பேசிட்டு சொல்றேன்னு மட்டும் சொல்லியிருக்காரு. சோனியா பேசியதில் ஸ்டாலினுக்கு ரொம்ப சந்தோஷமாம்.''

""எமர்ஜென்சி காலத்துக்குப்பிறகு தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி அமைச்சப்ப, கடற்கரைப் பொதுக்கூட்டத்திலேயே இந்திராகாந்தி ஓப்பனா வருத்தம் தெரிவிச்சாரு. அதுபோல, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மறுபடி அமைஞ்சா சோனியாவும் ஓப்பனா வருத்தம் தெரிவிப்பாரா?''

""அதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்ங்க தலைவரே.. .. .. காங்கிரஸ், தி.மு.க. பக்கம் தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சி டெல்லி வரைக்கும் சீரியஸா நடந்தாலும் இன்னும் ரிசல்ட் கிடைச்சபாடில்லை. அதே நேரத்தில், தே.மு.தி.க- பா.ஜ.க கூட்டணி உறுதியாகிட்டதா, பா.ஜ.க தரப்பிலிருந்து மீடியாக்களுக்கு செய்தி வருது. ஆனா, தே.மு.தி.கவோட கொ.ப.செ. சந்திரகுமா ரோ இதுக்குப் பதில் சொல்லும்போது, இதுவரை அதிகாரப்பூர்வமா யார்கிட்டேயும் தே.மு.தி.க சார்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தலைன் னும், சிங்கப்பூரிலிருந்து 3-ந் தேதி விஜயகாந்த் வந்தபிறகுதான் கூட்டணி பற்றி தெரியவரும்னும் சொல்றாரு. 

என்னதான் நடக்குதுன்னு விசாரிச் சேன். தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கூட்டணியை அமைச்சிடணும்னு முதல்முறையா தீவிரமா களமிறங்குன பா.ஜ.க தரப்புக்கு மூச்சு முட்டுது. கூட்டணி முயற்சியில் ஈடுபட்ட சில பேர், ஒரு நாலு நாள் லீவு எடுத்துக்குறோம்னு கேட்கக்கூடிய அளவுக்கு நிலைமை இருந்திருக்குது. ம.தி.மு.க., ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள்தவிர மற்ற கட்சிகளை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க நினைச்ச அளவுக்கு எதுவும் நடக்கலை.''

""பா.ம.கவுடனான கூட்டணி என்ன நிலையில் இருக்குது?''

""ராமதாஸ் ஆரம்பத்திலிருந்தே சரியா பிடி கொடுக்கலை. அன்புமணிதான் பா.ஜ.க கூட்டணி யில் ஆர்வமா இருந்தாரு. ராமதாஸ் குடும்பத் தாரும், மத்தியில் அடுத்தது பா.ஜ.க ஆட்சிதான். அன்புமணி மினிஸ்டராகுற சான்ஸை ஏன் தடுக்கணும்னு கொக்கிப்போட, அதற்கப்புறம்தான் ராமதாசும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சரி சொன்னாரு. ஆனா, பா.ஜ.க தரப்பிலோ பா.ம.க தன்னோட வேட்பாளரை அறிவிச்ச சேலம் தொகுதியைக் கேட்டாங்க. ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதால சேலத்துல அனுதாப அலை வீசும்ங்கிறது பா.ஜ.க கணக்கு. அடுத்ததா, மயிலாடுதுறை தொகுதியையும் பா.ஜ.க கேட்டது. அங்கே தி.மு.க கூட்டணியில ம.ம.க போட்டியிடும்ங் கிறதால அதை எதிர்த்து பா.ஜ.க நிற்பதுதான் சரியா இருக்கும்னும், 2001 சட்டமன்றத் தேர்தலிலேயே மயிலாடுதுறையில் பா.ஜ.க ஜெயிச்சிருக்குன்னும் காரணங்கள் சொல்லப்பட்டிருக்குது. அதுபோல கிருஷ்ணகிரியையும் பா.ஜ.க கேட்டிருக்குது. பக்கத்திலே கர்நாடகா இருப்பதால, அங்கேயிருந்து பா.ஜ.கவுக்கு ஆதரவான காற்று கிருஷ்ண கிரி வரைக்கும் வீசும்ங்கிறது அவங்க எதிர்பார்ப்பு.''

""பா.ம.க தரப்பில் புயல்காற்றே வீசியிருக்குமே!''

""இருக்கிற தொகுதி களில் 3 தொகுதிகளை பா.ஜ.கவுக்குக் கொடுக்க பா.ம.க தயாரா இல்லை. அதுமட்டுமில்லீங்க தலை வரே.. பா.ஜ.க தரப்பு தே.மு.தி.ககிட்ட பேசுனப்ப அவங்க கொடுத்த லிஸ்ட்டில் பா.ம.க போட்டியிடுற 10 தொகுதிகளில் சிதம்பரம், புதுச்சேரி, திருவண்ணாமலை இந்த மூன்றைத் தவிர மற்ற 7 தொகுதிகளும் இருந்திருக்குது. இது ராமதாசுக்குத் தெரிஞ்சதும் செம டென்ஷனாயிட்டாரு. அன்புமணி யும் டென்ஷனானதோடு டெல்லிக்குப் போயிட்டாரு. அவர் காங்கிரஸ் கூட்டணிக்காக அகமது பட்டேலை சந்திக்கப் போறாருன்னு தகவல்பரவ ஆரம்பிச்சிடிச்சி. அன்புமணியோ ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் உறுப்பினர் வீட்டு விசேஷத்துக்குப் போனதா சொன்னாரு. பா.ம.க. உருவாக்கிய அணியில் இருக்கும் கொங்கு மண்டல நாகராஜுக்காக கோவை தொகுதியை பா.ஜ.க.கிட்டே கேட்கிறாராம் ராமதாஸ். கோவையை பா.ஜ.க. தன்னோட நம்பிக்கைக்குரிய தொகுதியா நினைக்குது. அதைத் தரத் தயாரா இல்லை. இப்படி பா.ம.க.வோடு ஏகப் பட்ட உரசல்கள் இருப்பதால அதைக் கழட்டிவிட்டுட லாம்ங்கிற யோசனையும் பா.ஜ.க.விடம் இருக்குதாம். அதாவது கூட்டணியில் தே.மு.தி.க. உள்ளே... பா.ம.க. வெளியே... அப்படின்னு ப்ளான் பண்ணப்பட்டி ருக்காம்.''

""தே.மு.தி.க.வை வச்சி ஏகப்பட்ட நியூஸ் வந்துக் கிட்டிருக்குது. உண்மையில் என்னதான் நடக்குதாம்?''

""அவங்க ஏரியாவில் பேசிப் பார்த்தேன். எடுத்த எடுப்பிலேயே, பேசுவதற்கும் பேச்சுவார்த்தைக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு சொன்னாங்க. என்ன வித்தியாசம்னு கேட்டேன். கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்போறது நாங்க யாரும் கிடையாது. சுதீஷ் சாரும் எடுக்க முடியாது. பிரேமலதா அண்ணியும் எடுக்க மாட்டாங்க. கேப்டன் மட்டும்தான் முடிவு எடுப்பாரு. அவரோடு பேசினாத்தான் அது கூட்டணிப் பேச்சுவார்த்தை. மற்றவங்ககிட்டே பேசுறதெல்லாம் வெறும் பேச்சுதான்னு விளக்கம் சொன்னாங்க. அதோடு, இதுவரைக்கும் பா.ஜ.க தரப்பிலிருந்து விஜயகாந்த்கிட்டே பேசுனது பொன்.ராதாகிருஷ்ணனும் இல.கணேசனும்தான்னு சொன்னவங்க, அதெல்லாம் நடந்து இரண்டு மாசத்துக்கு மேலே ஆயிடிச்சி. அப்பவே அவங்க கிட்டே எந்த உறுதிமொழியும் கொடுக்காம, தே.மு.தி.க பொதுக்குழுவுக்குப் பிறகு முடிவைச் சொல்றேன்னு எங்க கேப்டன் அனுப்பி வச்சிட்டாரு. அதற்கப்புறம் இன்னைக்கு வரைக்கும் பா.ஜ.ககிட்டே எந்தப் பேச்சு வார்த்தையும் கேப்டன் நடத்தலைன்னு க்ளியரா சொல்றாங்க.''

""சரி, சாதா பேச்சு யார் யார்கூட நடந்துக்கிட்டிருக்குதாம்.. கேட்டியா?''

""சுதீஷ்கிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு இவங்களெல்லாம் சில முறை நேரிலும், பல முறை போனிலும் பேசியிருக்காங் களாம். அவங்க சொல்றதைக் கேட்டுக்கொள்ளும் சுதீஷும், இதையெல்லாம் நான் கேப்டன்கிட்டே சொல்லிடு றேன்னு மட்டும்தான் சொல்றாராம். இதில்கூட, பா.ஜ.க தரப்பு தே.மு.தி.க அலுவலகத்துக்கு வந்து பேசி யிருக்குதே தவிர, தே.மு.தி.கவிலிருந்து யாரும் பா.ஜ.க அலுவலகத்துக்குப் போகலைங்கிறதையும் சுட்டிக் காட்டுறாங்க. பா.ஜ.க போலவே தி.மு.க தரப்பிலிருந்தும் சாதா பேச்சுகள் நடந்துக்கிட்டுத்தான் இருக்குதாம். எஸ்றா சற்குணத்தில் ஆரம்பிச்சி, ஆற்காடு வீராசாமி ஆட்கள், ம.ம.க நிர்வாகிகள், திருமாவளவன், ஃபார்வர்டு ப்ளாக் சந்தானம் இவங்களெல்லாம் விஜயகாந்த்தை நேரிலேயே சந்திச்சி, கூட்டணி பற்றி வலியுறுத்தியிருக்காங்கன்னு சொல்லும் தே.மு.தி.க. உயர்மட்டம், தி.மு.க தரப்பிலிருந்து வந்து பேசுறவங்க வெளியே போய் பேட்டி கொடுக் குறப்ப, கூட்டணிக்கு அழைச் சிருக்கோம்னுதான் சொல்றாங்க. ஆனா, பா.ஜ.க தரப்பிலிருந்து, கூட்டணி இறுதிக்கட்டத்தை எட்டிடிச்சின்னு பரப்பி விட்டுடு றாங்கன்னு சொல்லுது.''

""விஜயகாந்த் ஒரு முடிவை எடுத்து அறிவிச்சிட்டா, எதையும் பரப்ப முடியாதே?''

""இரண்டு நாளைக்கு முன்னாடி சுதீஷ்கிட்டே பொன்.ராதா பேசுறப்ப, நீங்க எதிர்பார்க்கிற எல்லாத்தையும் நிறைவேத்துறோம். கூட்டணியை அறிவிச்சிடுங்கன்னு சொல்லியிருக்காரு. அதோடு, நீங்க வருவது உறுதின்னா பா.ம.க நமக்கு வேணாம்னும் சொன்னாராம். அப்பவும் சுதீஷ், எல்லாத்தையும் கேப்டன் கிட்டே சொல்றேன்னுதான் சொல்லியிருக்காரு. விஜய காந்த்தோ, ம.தி.மு.கவை தவிர வேறெந்த அரசியல் கட்சியும் பா.ஜ.கவோடு கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமா அறி விக்கலைங்கிறதையும், மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.கவோடு கூட்டணி சேர கட்சிகள் தயங்குறதையும் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்காராம். இதுபற்றி சிங்கப்பூரிலிருந்து அடிக்கடி சுதீஷ்கிட்டே பேசுறாராம்.''//

 ***
நக்கீரன் தான் சார்ந்திருக்கும் கட்சியில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டாலும் சில நேரம் அந்த முடிவில் கொஞ்சம் அலைபாயும்.கனிமொழி ஆதரவுச் செய்தி என்று அப்பொழுதுக்கு அப்பொழுது கொஞ்சம் அந்தக் கோஷ்டியிலும் துண்டு போட்டு வைக்கும்.   ஸ்டாலின் தனது உட்கட்சி தலைமைப் போட்டியாளர்களை ஒழிக்க காங்கிரஸ் கூட்டணி வேண்டாம் என்று மறுத்தால் கனிமொழி,தயாநிதி மாறன்,பாலு ஆகியோர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கூட்டணியை நாடுவது போல நக்கீரனும் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிற‌து.

நக்கீரனுக்கு அல்லது அதன் நெருக்கமான வட்டாரங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் என்ன பங்கோ,என்ன பிரச்சனையோ..?எதற்கு காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறதோ ? யாருக்குத் தெரியும்? 

அதனால் தான் கடந்த சில இதழ்களாக ஒவ்வொரு இதழிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை காங்கிரஸ் காரனை விட அதிகம் எதிர்நோக்குகிறது.செய்தியை உருவாக்குகிறது.அதன் உச்சகட்டமாக ஸ்டாலினிடம் சோனியா வருத்தம் என்று யாரும் சொல்லாத கற்பனையை எழுதுகிறது. ஆனால் ஸ்டாலினோ ரெண்டு நாளைக்கு ஒருமுறை இதனை மறுக்கிறார்.இந்த இதழ் வெளிவந்த பின்பும் மறுத்துள்ளார்.



அதே நேரம் ஜூனியர் விகடன் நக்கீரன் இரண்டு இதழ்களும் வெளியிடும் கற்பனைச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாய் இருக்கும். தே.மு.தி.க.-பா.ம.க.குறித்து வெளியிடும் ஜூனியர் விகடன் செய்திக்கு மாற்றுச்செய்தியையும் நக்கீரன் வெளியிடும்.






சுதீஷ் இடம் எல்லாம் சொல்லி விட்டேன்,அவரிடம் பேசி விடுங்கள்  என்று விஜயகாந்த் சொன்னதாக ஜூனியர் விகடன் எழுதினால், எனக்கு அதிகாரம் இல்லை என சுதீஷ் சொன்னதாக நக்கீரன் செய்தி வெளியிடும்.


எதிர்க் கூட்டணி உருப்பட்டு விடக்கூடாது என்பதில் இரண்டு இதழ்களுக்கும் 'நல்ல' எண்ணம்.



இந்த இரண்டு இதழ்களைப் போல அல்லாமல் இன்னொரு புலனாய்வுவு இதழான குமுதம் ரிப்போர்ட்டரின் பிரச்சனையோ வேறு மாதிரியானது.

நரேந்திர மோடி,ஜெயலலிதா இருவரும் பிரதமராக வேண்டும் என்று ஒரே நேரத்தில் எழுதிக் காட்ட  வேண்டிய விசுவாசத்திலும் நிர்ப்பந்தத்திலும் அது இருக்கிறது. சோவுக்கு ஏற்பட்ட நிலை தான் குமுதம் ரிப்போர்ட்டருக்கும்.

அதனால் அந்த இக்கட்டில்,இரண்டு கட்சிகளையும் விமர்சிக்காமல் மீதமுள்ள அனைத்துக் கட்சிகளையும் விமர்சித்து  எதையாவது பொய்யையும் புரட்டையும் எழுதி  விற்றுப்பிழைக்க வேண்டிய நிலையில் இருக்கிற‌து.ஆகவே விஜயகாந்தும் கருணாநிதியும் தான் அந்த இதழுக்கு இலக்கு.

எப்படியாவது செட்டியார் சொத்தை நிரந்தரமாக அபகரிக்க வேண்டியதனால் இந்த நிலை.


நாம் இந்த இதழ்களின் நிலையைப் புரிந்து கொள்கிறோம்.

தரகு வேலை என்பது அவ்வளவு சுலபமல்ல.ஒரு வீட்டை வாடகைதாரருக்கும் உரிமையாளருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படுத்தி வாடகைக்கு விடுவதிலேயே எவ்வளவு சிரமப்பட வேண்டி இருக்கிற‌து. அதிலேயே அந்த நிலை என்றால் நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்த முக்கியப் பங்காற்றும் இந்தக் கூட்டணி விவகாரத்தில் ஊடகங்களின் தரகு நிலை கஷ்டமானது தான் .


கடந்த 4 மாதங்களாய் கஷ்டப்பட்டுத் தஙக்ளின் விருப்பமான கூட்டணியை புகழ்ந்து, அலை வீசுது,புழுதி பறக்குது என வானவில் வாக்கியங்களை உருவாக்கி, மேலும் அதில் சரிப்பட்டு வராத‌ கட்சியை ஒருவாரம் மிரட்டி, அடுத்த வாரம் விமர்சித்த கட்சியை மீண்டும் புகழ்ந்து,சில நேரம்  இட்டுக்கட்டிய செய்திகளை வெளியிட்டு எதிர்க் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்கி,அடுத்த வாரம் அதனைத் திசை திருப்ப இன்னொரு ஆதரவுச் செய்தியை வெளியிட்டு என சகல வித்தைகளையும் காட்டி எழுதி தாங்கள் உருவாக்க நினைத்துள்ள கூட்டணியை வெற்றிகரமாய் உருவாக்க வேண்டும்.அதன்பின் விருப்பமான அளவில் அவர்களுக்குள் தொகுதிகளைப் பிரிக்க வேண்டும்.

அதன் பின் அவர்களை வெற்றிபெறச் செய்ய நிறைய உழைக்க வேண்டும்.இது எல்லாம் கைகூடினால் அப்பொழுது மகிழ்ச்சியும் ஆதாயமும் கிட்டும்.தாஙக்ள் வரிந்து கட்டி எழுதும் கட்சிகளுக்கிடையே 
கூட்டணி உருவாகவில்லையென்றாலோ அல்லது உருவாக்கிய கூட்டணி வெற்றி பெறவில்லையென்றாலோ  அப்பொழுது தோல்வி மட்டுமல்ல ஆதாயமும் நிறுவனங்களுக்கு கிட்டாது.

வாடகைக்கு வீடு பிடிக்கும் தரகனுக்காவது ஒரு வீடு இல்லாவிட்டால் இன்னொரு வீடு.ஆனால் இவர்களைப் போன்ர ஊடக முதலாளிகளுக்கோ அடுத்த தேர்தலுக்கு ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஆகவே பதட்டத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள். இவர்களை நம்பி 
காசு கொடுத்து வாங்கும் வாசகன் நிலை தான் பரிதாபமாய் இருக்கிற‌து.