Sunday, 8 July 2012

வரதாபாய்க்கு யோகம்..! குமுதம் காசில் யாகம்..!




கடந்த ஜூன் மாதம் 29,ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அலுவலக ஊழியர்களுக்கு ஒரு தகவல்.நாளை 30 ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை,யாரும் வர வேண்டாம் என்றார்கள்.ஏன் என்று கேட்டதற்கு பவர் கட் என்று பதில் வந்தது.ஆனால் குமுதம் அலுவலகத்தில் மறுநாள் ஏதோ நடக்கப் போகிறது என்பது  ஊழியர்களுக்குத் தெரிந்து விட்டது.(இன்னும் என்ன கொடுமை நடக்க வேண்டியிருக்கு என்கிறீர்களா..?அதுவும் சரிதான்)

அவர்கள் நினைத்ததைப் போல அன்று மாலையே ஊழியர்கள் பணிமுடிந்து கிளம்பியதும்,கீழே இருந்த வராண்டாவைப் பெருக்கித் தண்ணிர் விட்டுக் கழுவி,மணல்,செங்கல் எல்லாவற்றையும் கொண்டு வந்து அடுத்த நாள் வேலைக்கான”அனைத்து ஏற்பாடுகளையும் முழுமூச்சில் செய்து விட்டே கிளம்பினார்கள் வரதாபாயின் அல்லக்கைகள்.

மறுநாள் அதிகாலை மன்னாரங்கம்பெனி வரதாபாய்,ஜெனரல் மேனேஜர் அனுராதா,சி.. ஸ்ரீகாந்த்,உமாசங்கர்,ஜோதிடம் ஆசிரியர் .எம்.ஆர்.ஆகியோர் ஆஜர்.அங்கே யாக குண்டம் அமைக்கப்பட்டிருந்தது.அனைவரும் அமர்ந்த பிறகு சிறப்பு பூஜைகள் தொடங்கியது.அதன்பின் கேரளாவில் இருந்து வந்திருந்த ஒன்பது நம்பூதிரிகள் யாகத்தை தொடங்கினர்.யாகம் மதியம் 2 மணி வரை நீடித்தது.நடந்தது சத்ரு சங்கார யாகம் என்று அலுவலகத்தில் பேசிக் கொண்டார்கள். 

தாங்கள்  நினைத்த காரியம் கை கூட வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.(சுருக்கமாகச் சொல்லப்போனால் செட்டியார் சொத்தை முழுவதுமாக ஆட்டையைப் போடுவது தான்).மதியம் யாகம் முடிந்தவுடன் யாகம் நடந்த சுவடு தெரியாமல் அதை அழிக்கும் பணி தொடங்கியது.

ஆனாலும் யாகத்திற்குப் பின்பும் வரதாபாய்க்கு நிம்மதி இல்லையாம்.அன்றிலிருந்து இரண்டு நாள் ஊர் ஊராய் கோயில்களுக்குச் சென்று வழிபட்டு புதன்கிழமை தான் அலுவலகம் வந்தாராம்.இந்த யாகத்துக்குச் செலவிட்ட தொகை மட்டும் சில லட்சங்களாம்.இந்த காசு எங்கிருந்து எடுக்கப்பட்டது,சுரண்டப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

அத்தனை வழியிலும் ஆள் அனுப்பிப் பார்த்தாயிற்று.நெருக்கமானவர்கள் என்று யார் யாரை நினைத்தார்களோ அவர்கள் எல்லோருக்கும் ஆதரவாய்ச் செய்தி போட்டாயிற்று.ஆனாலும் அதிகாரத்தின் கதவு இன்னும் திறந்தபாடில்லை.ஆட்டையைப் போட வேண்டும் என்று தான் நினைத்த காரியம் கைகூடவில்லை என்பதால் இறுதியாக யாகத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறார் நம்ம வரதாபாய்.

உலகத்திலேயே ஒருவர் சொத்தினை அபகரிக்க அவரது காசினை வைத்து மற்றொருவர் யாகம் நடத்தியிருப்பது இதுவே முதன்முறை.இது அடுத்தவர்  காசில் அவருக்கே சூனியம் வைக்கும் வேலை.இது வரதாபாய்க்கு கைவந்த கலை...


யாகத்திலேயே அடுத்தவர் சொத்தை ஆட்டையைப் போடலாம் என்றால் அப்புறம் நாட்டில் நீதிமன்றம் எதற்கு..…!வக்கீல் எதற்கு?

போகாத ஊருக்கு வழி தேடாதீங்க வரதாபாய்...




1 comment:

Barari said...

மந்திரத்தால் மாங்காய் வர வலைக்கலாம் என்று வாயை பிளந்து காத்திருக்கும் வரது தலையில் இடி தான் விழும்