திரிசக்தி சுந்தர்ராமன்
(சிரிப்பைப் பார்த்தாலே பயமா இருக்கே சார்)
(சிரிப்பைப் பார்த்தாலே பயமா இருக்கே சார்)
தமிழக அரசியல் பத்திரிக்கை வெளியீட்டாளர் திரிசக்தி சுந்தர்ராமன் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொடுத்து பல்வேறு வகையில் சுமார் 9.73 கோடிகளை வாங்கியதோடு மட்டுமல்லாமல் அதனை ஒரு தவணை கூட முறையாகச் செலுத்தாததால் வங்கியின் மண்டல மேலாளர் ரவீந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரைக் காவல்துறை தேடி வருகிறது.
திரிசக்தி சுந்தர்ராமன் வங்கியில் வாங்கிய கடனைச் செலுத்தாவிட்டாலும், பத்திரிக்கையில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் ஒழுங்காக கொடுக்கவில்லை என்றாலும்,ஊர் உலகில் உள்ள அனைவருக்கும் நன்கொடையை அள்ளிக் கொடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினைச் சேர்ந்த வயதானவர்களுக்கு பென்ஷன் வழங்கியும் உள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தினைச் சேர்ந்த வயதானவர்களுக்கு பென்ஷன் வழங்கியும் உள்ளார்.
அவரது குழுமத்தின் பெயரில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துடன் இணைந்து மதிப்புமிகு பத்திரிக்கையாளர் விருதினை சிலருக்கு வழங்கியும் உள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு மிகுந்த பொருட்செலவில் ஒரு அரங்கினையும் கட்டிக் கொடுத்துள்ளார்.
மேலும் தனது தமிழக அரசியல் பத்திரிக்கையில் ஊருக்கும் உலகுக்கும் நன்னெறியையும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் போதிக்கிறார்.
ஸ்பெக்டரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தி.மு.க.மத்திய அமைச்சர் ராஜா குறித்தும் அவரது 3 தலைமுறையையும் தோண்டி எடுத்தும் ஆதி முதல் அந்தம் வரை வாழ்க்கை வரலாறு வெளியிடுகிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு இமாச்சலப்பிரதேச உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் முறையற்றது என்று தீர்ப்பெழுதும் கட்டுரையைத் தனது இதழில் வெளியிடுகிறார்.
தி.மு.க அமைச்சர்களின் நில ஆக்கிரமிப்பு குறித்து இண்டு இடுக்குகளிலும் தோண்டி செய்தியாக்கி வெளியிடுகிறார்.
இவ்வாறு ஊருக்கும் உலகுக்கும் உத்தமர் வேஷம் போட்டவர் தான் போலியான ஆவணங்களைக் கொடுத்து வங்கியில் வாங்கிய கடனையும் செலுத்த வில்லை,தன்னிடம் வேலை செய்யும் பத்திரிக்கையாளனுக்கும் கடந்த 3 மாதமாகச் சம்பளமும் கொடுக்க வில்லை.
தனது பத்திரிக்கைக்கு இடம் வாங்க 1.8 கோடி ரூபாய்,கட்டிடம் கட்டுவதற்கு என 82.8 லட்சம் தொகையை மோசடியாக கடன் வாங்கி ஆனால் கட்டிடமும் கட்டாமல்,வாங்கிய கடனையும் கட்டாமல் மோசடி செய்த சுந்தர்ராமன் சென்னை பிரஸ் கிளப்புக்கு நன்கொடையாகக் கட்டிக் கொடுத்த கட்டிடம்.
கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சியில்
(இதில் வலதுபுறம் கடைசியாக நிற்பவர் தான் குமுதம் ”குழும ஆசிரியர்”.கோசல்ராம்.இவர் தான் திரிசக்தி சுந்தர்ராமனைக் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றவுடன் த்மிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பத்திரிக்கை அதிபருக்கு போன் போட்டு,சார் அவர் கடனை உடனே செலுத்திடுவாரு சார்,அரெஸ்ட் பண்ணாம தடுங்க சார்,பிளீஸ் எனக் கெஞ்சியவர்.ஆனால் கைதினைத் தடுக்க முடியலை.
அது எப்படி சார் வரதராஜன்,சுந்தர்ராமன்ன்னு நீங்க அக்யூஸ்டுகள் பக்கம் எல்லாம் கரெக்டா இணையுறீங்க !)
சென்னை பிரஸ் கிளப்பின் இணைச் செயலாளராகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட பாரதி தமிழன் உடன் திரிசக்தி அரங்கம் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் சுந்தர்ராமன். ஆளைக் கரெக்டாப் பிடிச்சுடுறீங்களே!என்னமோ போங்க!
மோசடிக்காரரின் திரிசக்தி குழுமத்துடன் இணைந்து சென்னை பிரஸ் கிளப் வழங்கும் ”மதிப்புமிகு” பத்திரிக்கையாளர் விருது.
”புரட்சியாளர்களே”,ரொம்பப்”பெருமையா” இருக்குப்பா!
”புரட்சியாளர்களே”,ரொம்பப்”பெருமையா” இருக்குப்பா!
வயது முதிர்ந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்களுக்கு பென்ஷன் வழங்கும் திரிசக்தி சுந்தர்ராமன்.சார் உங்க ஆபிஸ்ல முணு மாசமா சம்பளம் போடலையாம் சார்.
இன்று......
இன்று......
சாராயம் காய்ச்சியவன் எல்லாம் கல்வி வள்ளல் ஆனது போல்,கட்டப் பஞ்சாயத்து செய்தவன் எல்லாம் அரசியல்வாதி ஆனது போல்,மோசடி செய்த முதலைகள் எல்லாம் பத்திரிக்கை அதிபர்.நாடு விளங்கிடும்..
வா”ள்”க பத்திரிக்கை சனநாயகம்...
வா”ள்”க பத்திரிக்கை சனநாயகம்...
No comments:
Post a Comment