Tuesday, 13 December 2011

சந்தேகத்தின் பேரில் பழிவாங்கும் நடவடிக்கை-ரிப்போர்ட்டர் விஜயானந்த் ராமநாதபுரத்துக்கு தூக்கியடிப்பு





குமுதம் ரிப்போர்ட்டரில் சென்னையில் நிருபராகப் பணிபுரிந்து வரும் ஆ.விஜயானந்த் திடீரென்று ராமநாதபுரம் நிருபராகத் தூக்கி அடித்துள்ளது ரிப்போர்ட்டர் நிர்வாகம்.

இவர் நக்கீரனின் கோவைப்பகுதி நிருபராகப் பத்திரிக்கைப் பணியைத் தொடங்கியவர்.அதன் பின் காலைக் கதிர்,தமிழ்முரசு பத்திரிகைகளில் சேலம் நிருபராகப் பணிபுரிந்தார்.அதற்குப்பின் குமுதம் ரிப்போர்ட்டரில் நிருபராக சென்னையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வந்தார்.

அலுவலக உள் குத்துக்களையும் உள்ளடிகளையும் வெளியில் கசிய விடுகிராறோ என்ற சந்தேகத்தின் பேரில் தற்பொழுது இந்த நடவடிக்கையை நிர்வாகம் எடுத்துள்ளதாக பத்திரிக்கையாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இவர் சேலம் தமிழ் முரசு நிருபராகப் பணிபுரிந்த பொழுது போலி எப்.ஐ.ஆர்.விவகாரங்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

வயதான் மூதாட்டிக்கு உதவினாலும் கல்தா.சந்தேகம் வந்தால் பந்தாடுறாங்க.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்..
அண்டா காகசம்..அபு காகசம்...
திறந்திடு சீசே..
குமுதம் கேட் முன்னாடி நின்னு இப்படி சொன்னாத் தான் கதவு திறக்குதாம்...
கொடுமைடா சாமியோவ்..இந்த மாதிரி கம்பெனியில் வேலை பார்க்குறதுக்கு ரயில்வே ஸ்டேஷனில் போய் பெட்டி தூங்கலாம்,இல்ல பீச்சுக்குப் போயி சுண்டல் விக்கலாம் சாமியோவ்.
பத்திரிக்கைத் தொழிலுக்கு வந்து படாத பாடு படுறோம் சாமியோவ்.. 

No comments: