Tuesday 24 February 2015

நாளிதழ் முதலாளிக்கு எதிராய் ஈரத்துணி கட்டி போராட்டம்...!


வேலை பார்த்தவன் கஞ்சிக்கு வழியில்லாமல் திண்டாட கேக் வெட்டிக் கொண்டாட்டம் ஒரு கேடா ராதா கிருஷ்ணா..?

குறுக்கு வழியில் பல நூறு கோடிகளைக் குவித்த பேர்வழிகள் தங்க‌ளின் மீதான குற்றங்களை மறைக்கும்  வண்ணமும்,சுருட்டிய பணத்தைப் பாதுகாக்கும் வண்ணமும்,அரசியல் அதிகாரத்தை அடையும் பொருட்டும் என பல்வேறு காரணஙக்ளுக்காய் பத்திரிகை ஆரம்பிப்பது கடந்த சில வருடங்களில் தமிழ் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சன் குழுமம்,புதிய தலைமுறை,நியூஸ் 7, மடிப்பாக்கம் வேலாயுதத்தின் G  தொலைக்காட்சி,புதிய வாழ்வியல் இதழ்,வின் தொலைக்காட்சி,ஜன்னல் என இந்த வரிசை முடிவற்றது.

இந்த வரிசையில் இடம்பெற்ற நாளிதழ் தான் 'தின இதழ்.' பல்வேறு சுயநிதிக்கல்லூரிகளை ஆரம்பித்துச் சுரண்டியதற்குப் பாதுகாப்புத் தேடும் பொருட்டு கல்வி வியாபாரியால் ஆரம்பிக்கப்பட்டது தான் 'தின இதழ்'.

தனது நாளிதழில் தமிழ்நாட்டை ஆளும் அரசுக்கு எதிராகவும்,மத்தியில் ஆளும் அரசுக்கு எதிராகவும் ஒரு வரி கூட எழுத மாட்டார். 'தமிழரசு' பத்திரிகையின் தினசரிப் பதிப்பாக வருகிறது என்றால் மிகையில்லை. இவரது பத்திரிகையின் நோக்கம் எதுவென்று எளிதில் புரியும்.

Sri muthukumaran institute of technology.Meenakshi amman dental college.


ற்ற பேர்வழிகள் தாஙகள் ஆரம்பித்த நிறுவனங்களில் சம்பளத்தை ஓரளவிற்கு கணிசமாகவும் சரியான நேரத்திலும் கொடுத்தாலும் தின இதழ் முதலாளி ராதாகிருஷ்ணனோ அதிலும் ஏமாற்றுப் பேர்வழி. வேலை செய்யும் தொழிலாளிக்கு அடிமாட்டு தொகையில் தான் சம்பளம் கொடுப்பார்.அதையும் ஒழுங்காய் கொடுக்க மாட்டார். ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எந்த மாதமும், பத்தாம் தேதிக்குள் சம்பளம் கொடுத்த வரலாறு இல்லை.அதிலும் கடந்த சில மாதங்களாய் 20 ஆம் தேதி வரைக்கும் கூட இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இந்த மாதமோ மிக கொடுமை.

இந்தப் பதிவு எழுதும் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகி விட்டது. ஆனால் கடந்த 2015 ஜனவரி மாதச் சம்பளம் வேலை பார்த்த சுமார் 80 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. சுயநிதிக்கல்லூரிகளின் மூலம் பல நூற்றுக்கணக்கில் கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் இந்த பேர்வழிகளுக்கு மாதம் முழுவதும் வேலை பார்த்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மனம் வருகிறதா பாருங்கள்.அனைத்து ஊழியர்களின் ச்மபளமும் மொத்தமாக அதிக பட்சம் 30 லட்சத்துக்கு குறைவாகத்தான் வரும்.

தங்களது பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் கட்டாய நன்கொடைகளை செர்க்கையின் பொழுதும்,வருடம் முழுமைக்குமான கல்விக் கட்டணங்களை முதல் நாளிலேயே வாங்கும் இந்த சுயநிதிக் கொள்ளையர்கள் தாங்கள் நடத்தும் பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலை பார்த்த சம்பளத்தை அடுத்த மாதம் முடிவடைய இருக்கும் தருவாயிலும் கொடுக்காமல் ஏமாற்றுவது எப்படிப்பட்ட பித்தலாட்டக்காரர்கள் என்பது விளங்கும்.

வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சொற்ப சம்பளத்துக்காய் மாதம் முழுதும் வேலை பார்த்த ஊழியர்கள் எப்பொழுது சம்பளம் வரும் என கடந்த 20 நாட்களாய் வயிற்றெரிச்சலில் இருக்கின்றனர்.ஆனால் அலுவலகத்தில் பதில் சொல்லத்தான் ஆள் இல்லை. எடிட்டர் குமாரோ வேலை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறாரே தவிர பத்திரிகையை நடத்தும் பேர்வழி கவனத்துக்கு சம்பளப் பிரச்சனையைக் கொண்டு போகவே இல்லை. அவரைத் தவிர 'தின இதழ்' முதலாளி தொடர்பில் அலுவலகத்தில் யாரும் இல்லை.

இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று மாலை கூடி ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலோனோரின் ஒப்புதல் இதற்கு பெறப்பட்டிருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் (27 ஆம் தேதி) சம்பளம் கொடுக்கவில்லை என்றால் ஈரத்துணியை வயிற்றில் கட்டி  தொடர்ச்சியாகப் போராடி அரசின் கவனத்திற்கு தங்கள் பிரச்சனைகளுக்குத் கொண்டு செல்வது என முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதிலாவது தீர்வு கிடைக்குமா..? அல்லது ஏமாற்றுப் பேர்வழிகள் ஈரத்துணியுடன் இவர்களை  பட்டினியில் சாக விடுவார்களா..?

பொறுத்திருந்து பார்ப்போம்.


குறிப்பு

தின இதழ் எடிட்டர் குமார் நேற்று மட்டும் லே அவுட் ஆர்டிஸ்டுகளுக்கு சில ஆயிரம் ஊதியம் தன் கையில் இருந்து அவசர உதவியாய்க் கொடுத்திருக்கிறார். அது என்ன லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள் மீது மட்டும் தனிப்பாசம் என அனைவருக்கும்  ஆச்சரியம்.
அது வேறொன்றுமில்லை. ஜெயலலிதா பிறந்த நாள் விளம்பரம் பக்கம் பக்கமாய் இரண்டு நாட்களாய் வருகிறது.அதில் பெரும்பாலானவற்றை எடுத்தவர் எடிட்டர் குமார். அதற்காய் இவருக்கு கமிஷன் 20% இது மட்டும் லட்சத்தை தொடுமாம். விளம்பரம் வெளிவராவிட்டால்  கமிஷன் போய் விடும்.  வடிவமைக்கும் லே அவுட் ஆர்டிஸ்டுகள் சம்பளம் வராத‌ கடுப்பில் இருக்கும் பொழுது அவர்களை  கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தவே அவர் கையில் இருந்து உதவி. அதனால் தான் இந்த திடீர் பாசம்.

எலி அம்மணமாய் ஓடுகிறது என்றால் சும்மாவா....?

No comments: