தமிழ்நாட்டில் எப்படியாவது தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்று 'இன' உணர்வுடன் தினமலர் களத்தில் இருக்கிறது. பா.ஜ.க.தலைமையிலான கூட்டணிக்கு தரகு மணியனை விட முன் வரிசையில் நின்று பாடுபடுவது தினமலர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.
அதில் சின்ன எடுத்துக்காட்டு தான் இன்றைய (15-04-2014 ) தலைப்புச் செய்தி.
பா.ஜ.க. கூட்டணியை உருவாக்க, இதுவரை விஜயகாந்த் ஆதரவு, எதிர்ப்பு,மிரட்டல்,இட்டுக்கட்டுதல் என செய்திகளை வெளியிட்ட தினமலர், காரியம் கை கூடி வரும் இந்த நேரத்தில் விஜயகாந்த் எங்கே கூட்டணியை விட்டுப் போய்விடுவாரோ என்ற பயத்தில் அதனை வெளிக்காட்டாமல் கழற்றி விடப்படுமா ? என்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.இதற்கு அருகிலேயே பச்சமுத்துவின் இன்னொரு மிரட்டல் பேட்டி வேறு..
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை இதுவரை யாரும் அண்டிப் பிழைத்ததில்லை.தேசிய கட்சிகள் தான் மாநிலக் கட்சிகளை நம்பிப் பிழைத்து வருகின்றனர் என்பது உண்மை.
திமுக காங்கிரசை கூட்டணியில் சேர்க்க மறுப்பதும்,அதிமுக கம்யூனிஸ்டுகளை கழட்டி விட்டதும் அதற்கு எடுத்துக்காட்டு. ஆனால் என்னமோ தேசியக் கட்சிகள் அண்டிப்பிழைக்க வேண்டுமா என்று பா.ஜ.க.தொண்டர்கள் கொதிப்பதாக அண்ணா சாலை அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வழக்கம் போல் பொய்யை எழுதுகிறது.தினமலர் அலுவலகத்தில் யாராவது கொதித்ததை தான் இப்படி எழுதுகிறது என்று நினைக்கிறோம்.
தே.மு.தி.க.வை கழட்டி விடத் திட்டமிட்டுள்ளதாகவும் எழுதுகிறது.விஜயகாந்தைக் கூட்டணிக்கு அழைத்து வர அந்தக் கட்சிக்கு தூது மேல் தூது அனுப்பியதும்,தரகர் மேல் தரகர் அனுப்பியதும், அலுவலக வாசலில் காத்திருந்ததும் தினமலருக்கு மறந்திருக்காது.
அது தெரிந்தும் இப்படி எழுதுவது வேறொன்றுமில்லை.நம்மை விட்டுத் தே.மு.தி.க.எங்கும் போய் விடக் கூடாது என்னும் பயம் தான்.மிரட்டுவது போல் செய்தி வெளியிடுகிறது. (எல்லாக் கட்சிகளையும் மூன்று மாதம் நட்டாற்றில் விட்ட விஜயகாந்த் இதற்கெல்லாம் பயப்படுபவரா என்ன..? )
அது தான் இந்த மிரட்டல் தலைப்புச் செய்தி.நாளை கூட்டணி உறுதியாகி விட்டால் சுபம் என்று தலைப்பு வைக்கும்.
--
இது தேர்தல் களம் என்னும் இணைப்பில் இன்று வெளியான தலைப்புச் செய்தி.
தொகுதிக்கு நான்கு பேர் வைத்திருக்கும் அழகிரியின் மூலம் தி.மு.க.வை வீழ்த்த காங்கிரஸ் திட்டமிடுகிறதாம்.இதன் பலன் பாரதிய ஜனதாக் கட்சிக்கு கிடைக்குமாம்.ஆகவே தான் மோடியும் ராஜ்நாத் சிங்கும் அழகிரியைச் சந்தித்தனராம்.இந்த திட்டத்தில் காங்கிரஸ்,பாரதிய ஜனதாக் கட்சி இரண்டும் மறைமுக கூட்டணியாம்.இதற்கு ஆதரவு கோரித்தான் அழகிரி ரஜினியைச் சந்தித்தாராம்.இதன் மூலம் தி.மு.க. தோல்வி அடையுமாம்,பாரதிய ஜனதா வெற்றி பெறுமாம்.
படிக்கும் நமக்கு சிரிப்புத் தான் வருகிறது.
கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் தினமல்ர் எழுதுகிறது. பேனாவில் 'மை'க்குப் பதில் பொய்யை நிரப்புவார்களோ..?
இந்தப் பொழப்புக்கு...
2 comments:
''பேனாவில் 'மை'க்குப் பதில் பொய்யை நிரப்புவார்களோ..?'' நான் ரசித்த வரி.
தின "மலம்"
Post a Comment