வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாக் கூட்டணிக்குத் தரகு வேலை பார்ப்பதில் முக்கியப் பங்காற்றிய தரகு மணியனே,கட்சிகளின் சித்து விளையாட்டாலும் அவர் எதிர்பார்த்த வகையிலான அங்கீகாரம் கிடைக்காததாலும் கொஞ்சம் மன உளைச்சல் அடைந்து,தன்னை மறந்து சில உண்மைகளை இப்பொழுது பேசத் தொடங்கியிருக்கிறார்.
ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றிய ஊடகத் தரகரான ஜூனியர் விகடன் முன்னிலும் வீரியமாக களத்தில் இறங்கித் தனது கோயபல்ஸ் தனத்தை தொடர்ந்து காட்டி வருகிறது.இன்று வெளியான ( 26 மார்ச் 2014 இதழில் ) கழுகார் சொல்லியதில் இருந்து சில பகுதிகள்.
//பி.ஜே.பி. கூட்டணித் தலைவர்கள் கூட்டம் 20-ம் தேதி மதியம் சென்னையில் நடந்தது. கடைசி வரைக்கும் டென்ஷன் இருந்தது. அந்தக் காட்சிகளைத்தான் கழுகார் விவரிக்க ஆரம்பித்தார்.
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது. அதற்கான சூழ்நிலையை அடுத்துச் சொல்கிறேன்.'''//
''நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியில் விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஆகிய மூவரும் இடம்பெறுவார்கள் என்பதை 18.12.13 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லியிருந்தேன். அதுதான் அச்சரம் பிசகாமல் நடந்துள்ளது. விஜயகாந்த்துக்கு 14, பி.ஜே.பி., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்று சொல்லியிருந்தேன். இதில் ம.தி.மு.க-வுக்கு மட்டும் ஒரு தொகுதி குறைந்துள்ளது. அதற்கான சூழ்நிலையை அடுத்துச் சொல்கிறேன்.'''//
தே.மு.தி.க.வுக்கு ஒருவாரம் 12 தொகுதிகள் என்பது மறுவாரம் 11 தொகுதிகள் என்பது,இன்னொரு வாரம் 14 தொகுதிகள் என்பது,இன்னொரு வாரம் கூட்டணி இல்லை என்பது.கடைசியில் ஏதாவது ஒன்று வழக்கம் போல் நடந்து விட்டால் நாங்கள் அன்றே சொன்னது நடந்து விட்டது பாருங்கள் என்று கூச்ச நாச்சமில்லாமல் குதிப்பது.
ஜூ.வி.கோயபல்ஸ் டீமே மறந்தும் உண்மை பேசக் கூடாது என்று சபதமா..!
//ஏழு சீட்டுக்கு எப்படி காம்ப்ரமைஸ் ஆனது ம.தி.மு.க.?''//
''பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா எட்டு தொகுதிகள் என்றுதான் ஆரம்பத்தில் முடிவானது. ஈஸ்வரன், பச்சமுத்து, புதுவை ரங்கசாமி ஆகிய மூன்று பேர் கூட்டணிக்குள் வருவதால், ம.தி.மு.க-விடம் இருக்கும் ஒரு சீட்டை எடுத்தாக வேண்டிய நெருக்கடி பி.ஜே.பி-க்கு வந்தது. அவரிடம் நேரடியாகச் சொன்னால் என்ன ஆகுமோ என்று திணறினார்கள். ராம் ஜெத்மலானி சொன்னால் வைகோ கேட்பார் என்று நினைத்தார்கள். ராம் ஜெத்மலானிக்கு யார் சொல்வது? நரேந்திர மோடி சொன்னால்தான் ராம் ஜெத்மலானி கேட்பார் என்று முடிவெடுத்தார்கள். மோடி, ராம் ஜெத்மலானியிடம் சொல்ல, அவர் வைகோவிடம் சொல்ல, அவர் ஒப்புக்கொண்டார். '//
கழுகார் சொன்னது இது.
*
உங்களுக்கு ஏழு சீட்டு கிடையாது,ஐந்து தான் என்று பொன்னார் சொன்னாலே,நெளிந்து வளைந்து சிரித்து,உருகிச் சம்மதிக்கும் நிலையில் வைகோ இருக்க, தனது ஆதர்ச நாயகனுக்கு ராம் ஜெத்மாலனி,நரேந்திர மோடி என்று ஜாக்கி வைத்து பில்ட் அப் செய்கிறது ஜூ.வி.
ஆனால் இன்னொரு தரகர் ஜூ.வி.யின் ஜாக்கியை எட்டி உதைத்து விட்டார்.
கேள்வி: தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் அப்படி என்னதான் சிக்கல் ஏற்பட்டது?
கூட்டணியின் நோக்கம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக, வைகோவிடம் போராடி 7 சீட்டுக்கு சம்மதிக்க வைத்தேன்.
தரகு மணியன் (நக்கீரன் 25-03-2014 தேதியிட்ட இதழ்) இந்த இதழ் பேட்டியில்.
எது உண்மை..?
இதைப்படித்த பின் தரகர்கள் என்றாலே பொய்யும் புரட்டும் தானே என்று நீங்கள் முடிவுக்கு வருவது தரகர்கள் அனைவரையும் இழிவு படுத்துவது ஆகும்.
தான் உண்மையைத் தவிர எது சொன்னாலும்,நம்புவதற்கு வாசகர்கள் என்னும் மடையர்கள் இருக்கிறார்கள் என்று கட்டுக்கதையை நல்ல திரைக்கதையாக வடிவமைத்து வெளியிடுகிறது.கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள்.இங்கு அதற்கும் வாய்ப்பு இல்லை.
தான் உண்மையைத் தவிர எது சொன்னாலும்,நம்புவதற்கு வாசகர்கள் என்னும் மடையர்கள் இருக்கிறார்கள் என்று கட்டுக்கதையை நல்ல திரைக்கதையாக வடிவமைத்து வெளியிடுகிறது.கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள்.இங்கு அதற்கும் வாய்ப்பு இல்லை.
பொய்களை உற்பத்தி செய்யும் கூடத்தின் ஒரு பகுதி.... |
இந்தப்பொய்யை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஜூ.வி.வெளியிட்ட மிகப்பெரிய இட்டுக்கட்டிய மோசடிச் செய்தியைப் பார்ப்போம்.
இது செப்டம்பர் 18,2013 தேதியிட்ட ஜூனியர் விகடனில் வெளியான கவர் ஸ்டோரி. |
அதாவது நாடாளுமன்றத் தேர்தல் குறித்த பேச்சுக்கள் தமிழ்நாட்டில் ஏற்படுவதற்கு முன்பேயே நரேந்திர மோடி தமிழ்நாட்டில் நிற்கப்போகிறார் என்றும், இதன் மூலம் தமிழ்நாட்டுத் தேர்தலில் பா.ஜ.க.முக்கியப் பங்காற்றப் போகிறது என்பது போலவும் தமிழ்நாட்டில் 'நடுநிலை' வேடமிட்ட இதழில் எழுதப்பட்ட முதல் கட்டுரை.
நரேந்திர மோடி போட்டியிடுவதாக ஜூ.வி.சொல்லிய மூன்று தொகுதிகளில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. வுக்கு கோவை மட்டும் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.மீதம் இரண்டும் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி போட்டியிட மேற்கண்ட தொகுதிகள் வேண்டும் என்று தே.மு.தி.க.விடம் கோடிட்டுக் காட்டியிருந்தால் கூட மண்டியிட்டுக் கண்டிப்பாய்க் கொடுத்திருக்கும்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அப்படி பா.ஜ.க. கேட்டதாகவோ,தே.மு.தி.க.,மறுத்ததாகவோவும் விஜயபாரதம் இதழிலோ,ஜூனியர் விகடன் இதழிலோ இந்த 6 மாதத்தில் துணுக்குச் செய்தி கூட இல்லை.சரி .அது தான் போகட்டும்.பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட கோவை நாடாளுமன்றத் தொகுதியிலாவது மோடி போட்டியிடுகிறாரா என்றால் அங்கு தமிழ்நாடு பா.ஜ.க.முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தான் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
கோவை தொண்டர்களோ,செல்வகுமார் என்பவரைத் தான் வேட்பாளராய் நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றார்களே தவிர,மோடி போட்டியிட வேண்டும் என்று ஒரு காக்கா கூட அங்கு கரையவில்லை.
ஆக தமிழ்நாட்டு பா.ஜ.க.தலைமையும்,கட்சித் தொண்டர்களும் மோடி போட்டியிடுவது குறித்து எந்த எண்ணமும் விருப்பமும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஜூ.வி.தான் தனது ஊடக வலிமையைப் பயன்படுத்தி திட்டமிட்டு இட்டுக்கட்டி பொய்ச் செய்தி வெளியிட்டிருக்கிறது.
தேர்தலுக்கு 7 மாதத்திற்கு முன்பேயே தமிழ்நாட்டில் மோடிக்கு காவடி எடுப்பது என்றும் பாரதிய ஜ்னதாவின் தாமரையை இங்கு மலரச்செய்ய எழுத்து விபச்சாரம் செய்வது என்றும் ஜூனியர் விகடன் நிர்வாகம் முடிவு செய்து விட்டது.அதன் விளைவு தான் இந்தச் செய்தி.இந்தச் செய்தியின் மூலம் தமிழ்நாட்டு வாசகர்களிடையே மோடி போட்டியிடப் போகிறார் என்பது போன்ற ஒரு பேசுபொருளையும் உருவாக்கி நாடாளுமன்ரத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஒரு தளத்தை உருவாக்கும் கரசேவையைத் தான் விகடன் செய்துள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் சீண்டப்படாத நிலையில் இருக்கும் பாரதிய ஜனதாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட முதல் முயற்சி. பாரதிய ஜனதா அமைக்க இருக்கும் கூட்டணியில்,பிற கட்சிகள் சேரும் எண்ணத்தை உருவாக்க ஊன்றப்பட்ட முதல் வித்து.இந்தச் செய்தி விஜயபாரதம் இதழில் கூட இதுவரை வரவில்லை.
ஜூனியர் விகடன் வெளியிட்ட இது போன்ற செய்தியானது, கட்சிகளை பா.ஜ.க.கூட்டணிக்கு கொண்டு வர களத்தில் இறங்கிப் பணியாற்றும் தரகு மணியன் உள்ளிட்டவர்களுக்குப் பேருதவியாய் இருந்திருக்கும்.
ஜூ.வி.ஊன்றிய அந்த வித்து ஒரு மோசடி என்பது இன்று நிருபிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு இதழ்கள் என்று தமிழ்நாட்டில் பார்த்தோமானால் நக்கீரன்,ஜூனியர் விகடன்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை இருக்கின்றன.இதில் நக்கீரனுக்கு திமுக முத்திரை,குமுதம் ரிப்போர்ட்டருக்கு அதிமுக-பாரதிய ஜனதா முத்திரை உள்ளது.அதனால் இவை வெளியிட்ட செய்திகள் எப்பொழுதும் நம்பகத் தன்மையுடன் பொதுத்தளத்தில் உள்ள வாசகர்களால் அணுகப்படுவதில்லை.மேற்கண்ட இதழ்களும் தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காய் இதுகுறித்து கவலைப்படுவதுமில்லை.
இவர்களிடமிருந்து சற்றே மாறுபட்டு நடுநிலை என்ற பிம்பத்துடன் இதுவரை வெளிவந்த ஜூனியர் விகடன் தான் இப்பொழுது மிகவும் மோசடியாய்க் காட்சி அளிக்கிறது.
நடுநிலை என்று அது கட்டி எழுப்பிய பிம்பத்தை வைத்து விற்பனையிலும் முதல் இடம் பிடித்திருந்தது. இப்பொழுது நடுநிலைமை பிம்பம் மற்றும் விற்பனை பலம் ஆகியவற்றை மூலதனமாய் வைத்து தனக்கு வேண்டிய பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு எழுத்து விபச்சாரம் செய்கிறது.
இதற்கு எதற்கு தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று வைத்து வாசகனை ஏமாற்றிப் பிழைக்க வேண்டும்..?
*
தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவது குறித்த செய்தியே அப்பட்டமானது இட்டுக்கட்டப்பட்டது என்ற நிலையில்,குஜராத்திற்கு சென்று ஜூ.விகடன் விசாரித்து எழுதுவதாகச் சொல்லும் செய்தியில் என்ன அடிப்படை நேர்மை இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்....
ஜூனியர் விகடன்-மோடியின் இதயத் துடிப்பு
2 comments:
Junior vikatan is too much biased ....
அன்பு நண்பரே செங்கதிரோன்!
உங்களுக்கு சாதகமாக செய்தி போட்டால் மட்டும் நடுநிலைமை என்று சொல்கிறீர்களே.
Post a Comment