Monday, 10 March 2014

மவுண்ட் ரோடு மூடர் கூடம்...!


the hindu,சீக்கியர்,புல்லர்,சதாசிவம்

குத்தூசி குருசாமி ஹிந்து பத்திரிகையை "மவுண்ட் ரோடு மகா விஷ்ணு" என்று அழைத்தார். நாம் தி இந்து பத்திரிகையை "மவுண்ட் ரோடு மூடர் கூடம்"என்று நாமகரணம் சூட்டுகிறோம்.

ஆரம்பித்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும், புகைப்படத்துக்கு குறிப்பு எழுதுவதில் இருந்து தலைப்பு வைப்பது வரை நிறையப்பிழைகளாக இன்னும் நாளிதழின் வரையறைக்குள் இடம்பிடிக்க முடியாத நிலையில் இருக்கிறது.

எடுத்துக்காட்டாய் து.ரவிக்குமார் இந்த நாளிதழின் ஆலோசகர் மற்றும் தொட‌ர்ச்சியான பங்களிப்பாளர்.ஆனால் அவரது பெயருக்கு கீழேயே சட்டமன்ற‌ உறுப்பினர் என்று எழுதினார்கள்.இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

இந்த வரிசையில் சமீபத்திய எடுத்துக்காட்டு சமஸின் கட்டுரை.

 நடுப்பக்க கட்டுரை எவ்வளவு முக்கியத்துவமான இடத்தைப் பெற்ற‌து என்பது இதழியல் தொடர்புடைய அனைவருக்கும் தெரியும். ஆனால் சமஸின் கட்டுரை தகவல் பிழைகளும்,இட்டுக்கட்டப் பட்ட தகவல்களுமாய் நிரம்பிக்கிடக்கிற‌து. சமஸ் தனது கட்டுரையில் எந்த நிலைப்பாடும் எடுக்கலாம்.அது அவரது உரிமை. ஆனால் அதனை தர்க்க ரீதியாகவும் கருத்து வழியாகவும் நிலைப்ப‌டுத்த வேண்டும். நினைத்ததை எல்லாம் எழுத முடியாது. ஆனால் இந்தக் கட்டுரை எவ்விதப் பொறுப்புமற்று வாசகனை மூடனாகக் கருதி எழுதப்பட்டுள்ளது.
மிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் என்னும் பெயரில் சமஸ் என்பவர் மார்ச் 4,2004 அன்று எழுதிய நடுப்பக்க கட்டுரையும் அதற்கு ஒரு காரணம்.சமஸ் என்பவர் இதற்கு முன் தினமலர்,தினமணி உள்ளிட்ட செய்தித்தாள்களில் பணியாற்றியவர்.இப்பொழுது தி இந்து நாளிதழின் நடுப்பக்க கட்டுரைப் பொறுப்பாளரும் இவரே.
அந்தக் கட்டுரையை முதலில் படித்து விடுங்கள். சமஸ் ராஜா அண்ணாமலைபுரத்தில் ' தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் ' என்னும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தாராம்.அதன் விளைவாய் ஒரு நடுப்பக்க கட்டுரையை எழுதி விட்டார். யார் அந்த சுவரொட்டியை ஒட்டியது,எந்தக்கட்சி அல்லது அமைப்பு என்னும் எந்தக் குறிப்பும் இல்லை.சமஸின் வார்த்தைகளில் இதை மட்டும் நம்புவோம்.

ஆனால் தோராயமாய் 10 நபர்கள் இணைந்து அடித்த ஒரு சுவரொட்டியை ஒட்டுமொத்த தமிழினத்தின் அறிவுத்திறன் மற்றும் மனசாட்சியாய் உருமாற்றி அதனைக் கழுவிலேற்றத் துடிக்கும் சமஸின் நேர்மையைச் சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.
இனி சமஸின் கட்டுரையை வரிக்கு வரி போஸ்ட்மார்ட்டம் செய்ய‌ விரும்புகிறோம். //ஏனென்றால், மண்டேலா மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்ற பெயரில், ‘இன்விக்டஸ்’ படத்தில், மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் படத்தைப் போட்டு அஞ்சலி செலுத்திய வரலாறு நம்முடையது. //
வீரபாண்டிய கட்டபொம்மனை நடிகர் சிவாஜி படமாகவும்,திருவள்ளுவரை யாரோ ஒருவர் வரைந்த ஓவியத்தின் மூலமும் தான் இதுவரை தமிழ்ச்சமூகம் அறிந்திருந்தது என்று நினைத்திருந்தோம்.இப்பொழுது தான் தெரிகிறது,‘இன்விக்டஸ்’ படத்தில் மண்டேலாவாக நடித்த மார்கன் ஃப்ரீமேன் என்பவரின் படத்தைப் போட்டு, சமசும் அவருடைய ஆட்களும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள் என்று.



இவ்வளவு ஏன்..? லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக்கொண்டு எடிட்டோரியலில் வேலை பார்க்கும்  தி இந்து பத்திரிகையிலேயே தினமும் எத்தனையோ பிழைகள்.இன்று கூட ஒரு மருத்துவரின் புகைப்படத்திற்குப் பதிலாக இன்னொருவரின் புகைப்ப‌டத்தை மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள்.ஆக 'நம்' இந்து பத்திரிகையின் லட்சண‌மும் இது தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் சமஸ்.
எந்த ஒன்றும் அது அதன் தளத்தில் எந்த அளவு பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்பதை வைத்துதானே, அதைக் கருதக்கூடியதாக ஏற்கமுடியும். ஆனாலும் மண்டேலா என யாரோ எவரோ சுவரொட்டி அடித்துவிட்டாராம், சமசுக்குப் பொத்துக்கொண்டு வருகிறது, 'அறச் சீற்றம்'! இந்து பத்திரிகையில் யார் யாருக்கு எப்படி நியமனம் நடந்தது என்பதை சமசின் கதையை வைத்து, ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என சொல்லிவிடலாமா என்ன ? ’தேசியத் தொலைக்காட்சிகளில், அர்னப் கோஸ்வாமிகளும் ராஜ்தீப் சர்தேசாய்களும் தமிழர்களை இன வெறியர்களாகச் சித்தரித்துக் கத்தும்போது, வேகமும் கோபமும் வரத்தான் செய்கிறது. ஆனால், நம் ஆட்கள் சிலர் அடிக்கும் கூத்துகளை வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு வேறு எப்படித் தோன்றும் ?’- இப்படிச் சொல்லிச் செல்லும் சமஸ் ஐயா, ‘நம்’ எனும் சொல்லை இந்தக் கட்டுரை நெடுக அதிகமாகவே பயன்படுத்துகிறார். அதற்கான பொருளை வாசகர் தெளிவாகப் புரியும்படி சொல்லாதது, என்னென்ன நோக்கங்களுக்காக என்பது அவருக்குதான் ’பஸ்டமாக’ப் புரிபடும். அதனால் வாசிக்கிறவர்களுக்கு ’தர்க்கநியாயப்படியும் அவர்களுக்குண்டான அறிவுப்படியுமே ‘நம்’ எனும் சொல்லுக்குப் பொருள்கொள்ள முடியும்; இது தவிர்க்கமுடியாதது. 
’தேசியத் தொலைக்காட்சி’ என்கிறார் சமஸ். அதற்கு என்ன வரையறை? தி ஹிண்டு இன்றும் மதராஸி ஐய்யங்கார் பத்திரிகைதான், இந்தியாவின் பல திசைகளிலும். உலக நியாயம் பேசத் தெரிகிறது, இது தெரியாதா? அந்த ’தேசிய’ தொலைக்காட்சிகளில் இந்த தேசத்தின் எத்தனை தேசிய மொழிகளில் (ஆங்கில எழுத்து விளக்கம் இல்லாமல்) அப்படியே பேசுவதை ஒளிபரப்புகிறார்கள். இந்தி மட்டும்தான் இந்தியாவில் தேசிய மொழியா? இது ஒரு பக்கம். 
கோஸ்வாமிகளும் சர்தேசாய்களும் சித்தரித்துக் கத்துகிறார்கள் என்பதை சமசுக்குள் இருக்கும் ஒரு நியாயவான், ஒத்துக்கொள்கிறான். செய்தியாளர்களாக இருக்கவேண்டியவர்கள் சித்தரிக்கிறார்கள், அதை வலுவூட்டக் கத்துகிறார்கள் எனும்போது, அதை எதிர்க்கும் சமசின் சில ஆட்கள் கூத்து அடிக்கிறார்கள்; ஆம் அவரே சொல்கிறார், நம் ஆட்கள் என்று. அடுத்த வாக்கியத்திலேயே, அவற்றை ’வெளியிலிருந்து பார்க்கும் ஒருவருக்கு வேறு எப்படித் தோன்றும் ?’ என்று அதாவது இப்படித்தானே தமிழர்களை இனவெறியர்களாகச் சித்தரிக்க முடியும்; கத்த முடியும் என்பது சானா மானா ஸ்-ன் கருத்து. //மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டியது சரி. ஆனால், மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவதாலேயே ரோஜனாவும் புல்லரும் குற்ற மற்றவர்கள் ஆகிவிடுவார்களா?// - இந்த குரலில்தான், தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அந்தந்த இன உணர்வாளர்களும் வேறுவகையில் கேட்கிறார்கள், “ மரண தண்டனை விதிக்கப்பட்டதாலேயே ரோஜனாவும் புல்லரும் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? 
ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என இந்த தேசத்தின் தந்தை (சமஸ் ஒரு காந்தியவாதி என்பதை நாம் நன்கு அறிவோம். )கூறிச்சென்ற முத்திரை வாசகத்தைப் பற்றி சமஸ் போன்ற ‘பரந்துபட்ட சிந்தனையாளர்களும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களும்’ என்ன நினைக்கிறார்கள்? / தனி சீக்கிய மாநிலம் கோரும் குழுக்கள், “சீக்கிய தேசத்தை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்று ரோஜனா, புல்லர் விவகாரங்களைக் கொண்டாடுகின்றன. இதற்கும் “எழுவர் விடுதலை, தமீழீழ விடுதலை நோக்கிய பயணத்தின் முதல் வெற்றி” என்ற கொண்டாட்டத்துக்கும் என்ன வேறுபாடு ? / சானா மானா ஸ்-ன் இந்த வரிகளே, அடிப்படையில்லாத சக்கையானவைதான். இந்த ஒப்பிடே இட்டுக்கட்டப்ப‌ட்டதாக கருதுகிறோம்.பஞ்சாபிலோ தமிழ்நாட்டிலோ இந்த குறிப்பிட்ட தண்டனைக் கைதிகளின் மரண தண்டனைக் குறைப்பை/ விடுதலையைக் கோருபவர்களில் எத்தனை விழுக்காட்டினர், சீக்கிய தேசத்துக்கும் தமிழீழத்துக்குமான பயணத்தின் முதல் வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள்? என்பதை நெஞ்சில் துணிவும் நேர்மையும் .. இருந்தால், சானா மானா ஸ். (இந்து நாளேட்டில் சமஸ் எனும் நபரை கட்டுரைப் பக்கத்துக்குப் பொறுப்பாளராக நியமித்த பத்திரிகையுலக கிரகஸ்தர் யாரோ, அவரும்) இதை ஒரு வரியிலேனும் தகவலாக நிறுவவேண்டும். சும்மா சொக்குப்பொடி போட்டானே மச்சான் மச்சான் என்கிறபடி, தலையங்கப் பக்கத்துக்கு எதிராக, கட்டுரை எனும் பெயரில் எதையாவது எழுதக்கூடாது. /இந்தியாவின் மோசமான அரசியல் படுகொலைகளில் ஒன்று ராஜீவ் படுகொலை./ இந்த வரிகளுக்காக, நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறமும் இருந்தால், இந்த நீதித்துறை அமைப்பின் முன்னால், சமசும் தி இந்து நாளிதழும் மன்னிப்பு கேட்கவேண்டும். ராஜீவ் கொலைவழக்கில் இது பற்றி உச்ச நீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது என்பதே தெரியாமல், பாரம்பரியம் மிக்க பத்திரிகை என்ற வாசகத்தைத் தாங்கிக்கொண்டு, மிகமிக மட்டமாக இப்படி எழுதுவதற்கு உண்மையில் நிறைய துணிவு வேண்டும்? ராஜீவ் காந்தி படுகொலை,அரசியல் படுகொலையாக கருத இடமில்லை.தனி நபர் கொலையாகத் தான் கருத வேண்டும் என்று உச்சநீதிமன்மே தெளிவாகச் சொல்லியிருக்கிற‌து.
இந்த வழக்கின் தன்மை என்ன? அது எந்த சட்டத்தின்கீழ் நடத்தப்பட்டது? உச்சநீதிமன்றத்தில் அதன் தீர்ப்பின் சாராம்சம் என்ன? இந்த சம்பவம் குறித்த ஜெயின் கமிசன் அறிக்கை என்ன சொன்னது? அதன் கருத்துகள், பரிந்துரைகள் கணக்கில் எடுக்கப்பட்டதா? வழக்கின் விசாரணையோடு சேர்த்து, ஆராயப்பட்டடதா? - இவை போன்ற எத்துணை கேள்விகள் ?

இந்திய அரசியலமைப்பின் குடிமக்கள் உரிமைகள் வழங்கப்பட்டனவா? பறிக்கப்பட்டனவா? இதற்கெல்லாம் சானாமானாஸ்-ஆல் பதில்தேட முடியவில்லையா? எதைப் பற்றியும் ஒரு கட்டுரையை எழுத உட்காரும் முன்பு, அதைப் பற்றிய தரவுகளை குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஆவணங்களுடன் சரிபார்த்திருக்க வேண்டுமல்லவா? அது முடியாவிட்டால் தொடர்புடைய குறிப்புகளை வாசிக்கவாவது செய்திருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செய்திருந்தால், தூக்கை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களின் குரலை, எம கழுத்தறுத்துக்கொண்டு இந்தக் கட்டுரை ஏன் எழுதப்பட்டு இருக்கிறது? THE HINDU கம்பெனி, சமுதாயத்தில் இன்னின்ன.. இப்படி இப்படி இருக்கவேண்டும் என்று கொள்கையை வகுத்துச் சொல்வதற்காக, ஒரு நியாயஸ்தாபனத்தை நடத்திவருகிறார்கள். அரசியல் மற்றும் பொதுவிவகாரங்களுக்கான தி ஹிண்டு மையம் எனும் நிறுவனம் மூலம் ஜனநாயகம் பற்றிப் பேசுவதால், அவாள் கம்பெனியிலேயே, அபாண்டம் நடக்கலாமோ? அப்படி நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாமோ? தமிழ்ப் பத்திரிகையுலகின் முன்னணி ஆசிரியராக உட்கார்ந்திருந்த வைகுந்தம் கதிர்வேல், இதற்கு பட்டுக்குஞ்சம் வேறு கட்டுகிறார். ’அவர்களுக்கு வாய்க்காத மேடை உங்களுக்கு வசமாகி இருக்கிறது’- எவ்வளவு ’நிதர்சனமான’ சொற்கள், இவை. ஆம், யாருக்கும் வாய்த்திராத மேடை சானாமானாஸ்.க்கு வாய்த்திருக்கிறது என்பது பெரும் உண்மை! /நீதிமன்றம் இதில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்கலாம் என்று பரிந்துரைத்திருப்பதும் தமிழக அரசு விடுவிக்க முடிவெடுத்திருப்பதும் மனிதாபிமான அடிப்படையில்தானே தவிர, அவர்கள் நடந்த குற்றத்தோடு துளியும் தொடர்பற்றவர்கள் என்கிற அடிப்படையில் அல்ல./ - இந்தத் தகவல், சைதாபேட்டை டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றும் சீனாபேனாவுக்குகூடத் தெரியும். /இத்தனை நாட்களும் அப்பாவிகள் என்று கூறியே அவர்கள் விடுதலையைக் கோரினோம். இப்போது தியாகிகள் என்கிறோம். எனில், அவர்களை யாரென்று அடையாளப்படுத்துகிறோம்?/ இத்தனை நாட்களும் அப்பாவி என சம‌ஸ். எப்போது சொன்னார்? அவர் சார்ந்த இந்து நிறுவனம் எப்பொழுது சொன்னது.?அப்படிச் சொல்லியிருந்தால் எந்த அடிப்படையில்? அதே அடிப்படையில்தான் இன்றும் ஏழு பேரின் விடுதலை கோருகிறவர்களும் சொல்கிறார்கள். ஏழு பேரும் தியாகிகளா இல்லையா என்பதை, நீதியான அரசியல் அமைப்புச் சட்டத்தின்படியான சட்டவிசாரணையைத் தொடங்கி முடித்தபிறகு, வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள், அவர்களின் விடுதலையைக் கோருகிறவர்கள். ஏழு பேரையும் அப்பாவிகள் எனக் கூறியதாகச் சொல்லும் சமஸ் போன்றவர்கள், இன்று வேறெப்படி அடையாளப்படுத்துவது என ஏன் 'மவுண்ட் ரோடு மூடர் கூட' வாசகர்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும்? அப்படியென்றால், யாரைப் பற்றியும் எதுவும் ஆய்வுசெய்யாமல் அப்பாவிகள் எனச் சொல்லிவிட்டு, பிறகு சமசுகளின் சௌகர்யத்துக்காக இந்து பத்திரிகை வாசகர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார்களாம்! /பேரறிவாளன் தூக்குக் கயிற்றின் முன் நின்றபோது, கூக்குரலிட்டோம். அப்சல் குருவின் குரல்வளை நெரிபடும்போதோ, வாய் மூடி. முகம் திருப்பி நின்றோம்./ THE HINDU , இப்போது இருக்கும் தி இந்து இரண்டு நாளேடுகளின் அலுவலகங்கள் வழியாகவும், 20ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், 1999ஆம் ஆண்டில் மரணதண்டனையை எதிர்த்து மிகப்பெரிய பேரணியாக மகக்ள் சென்றது, வரலாறு. அப்போது முதல் இப்போதுவரை, மரண தண்டனை ஒழிப்பை விரும்புவோர் கோருவது, எந்த மனிதனுக்கும் நாகரிக சமுதாயம் அந்த தண்டனையைத் தரக்கூடாது என்பதுதான்!
இப்பொழுது தமிழ்நாட்டில் தூக்குத் தண்டனை ஒழிப்புக்காய் குரல் கொடுக்கும் அனைவரும் அப்சல் குரு தூக்கில் போடப்படும் பொழுதும் எதிர்த்தவர்கள் தான் என்பது செய்தித்தாள்களைப் படித்தால் தெரியும். இந்து நிர்வாகம் போல நாட்டுக்கு,போராட்டத்துக்கு ஒரு கொள்கை வைத்திருப்பது தூக்குத் தண்டனை ஒழிப்புக்காய் குரல் கொடுப்பவர்கள் அல்ல.
சாதாரண வளர்நிலையில் உள்ள செய்தியாளரே சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவேண்டும் எனும்போது, அறம்பேசுவதாய்ச் சொல்லும் நாளேட்டின் கட்டுரைப் பக்கத்துக்குப் பொறுப்பான ஒருவர், கொட்டும் சொற்களில் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும்? என்ற அடிப்படை நியாய உணர்வுகூட இல்லையே, சமசிடம்? /“என் தாய் - தந்தை கையால் சாப்பிடக் காத்திருக்கிறேன்” என்கிற அரித்ரா குரல் நமக்கு வலிக்கிறது. “என் தந்தையை இழந்தேன். இனி, அவர் திரும்பிவரப்போவதில்லை. ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” என்கிற ராகுல் குரலின் வலி கேலிக்குரியதாகிறது என்றால், நாம் யார்?/ ராகுலின் குரலை தமிழ்நாட்டில் அறுதிப் பெரும்பான்மையினர் கேலி செய்தார்கள் என்று சொல்லும் சமஸ் அதனை பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவை அறிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினி,முருகனின் குழந்தை அரித்ரா,சமஸ் குறிப்பிட்ட மேற்குறிப்பிட்ட தனது பேட்டியிலேயே ராகுலின் துயரத்தைப் புரிந்து கொண்டதாய் எழுதியிருக்கிறார்.அது சமஸின் கண்ணுக்குள் தட்டுப்படவில்லையா..? குற்றம் சாட்டப்பட்ட இன்னொருவரான பேரறிவாளனின் தாயார்அற்புதம் அம்மாள் ராஜீவ் காந்தி மரணத்தை சமஸூக்கு அளித்த பேட்டியில் கண்டித்திருக்கிறார்.இன்னொருவரான சாந்தனின் தாயார் வருத்தம் தெரிவித்து இன்னொரு இதழில் பேட்டி அளித்திருக்கிறார்.இக்குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என நிறுத்தப்ப‌ட்டவர்களின் ரத்த உறவுகளே வருத்தம் தெரிவிக்கின்றனர்.இவர்களின் குரலை செவிமடுக்காத சமஸ் யார் குர‌லை இங்கு எதிரொலிக்கிறார்..?
//ஒரு முன்னாள் பிரதமரான என் தந்தைக்கே நீதி கிடைக்கவில்லை என்றால், இந்நாட்டின் சாமானியனுக்கு எப்படி நீதி கிடைக்கும்?” // இந்த நாடு மன்னராட்சியால் நடத்தப்படுவது அல்ல என்பது ராகுலுக்கும் தெரியவில்லை; சமசுகளுக்கும் தெரியவில்லை. அல்லது அவர்களுக்கு அது இன்னும் உரைக்கவில்லை! இந்திய அரசியலமைப்பின் எந்த இடத்திலும் முன்னாள் பிரதமருக்கு ஒரு நீதியும் சாமானியனுக்கு ஒரு நீதியும் என குறிப்பிடப்படவில்லை. இப்படி இருக்கும்போது, தமிழர்களின் சார்பில் கேட்கிறார்கள், ’சமஸ் நீ யார்?’ /நேற்றுவரை யாரும் மரண தண்டனையின் பெயரால் கொல்லப்பட்டுவிடக் கூடாது என்று இங்கு கூட்டங்கள் நடந்தன./ (இன்றும் நடக்கின்றன, அது தெரியாவிட்டால் மன்னார்குடிக்குப் போய் வேறு வேலை பார்க்கலாம்) /அதுவே அஹிம்சை என்றோம். இன்றைக்கு, ராஜீவ் கொல்லப்பட்டிருக்கக் கூடாது என்று அவருடைய கட்சியினர் கூட்டங்கள் நடத்தும்போது, அவர்களை நோக்கிக் கல் வீசப்படுகிறது;/ எவ்வளவு பெரிய பொய்மூட்டை இது? திருச்சியில் பொது இடத்தில் பிரச்சாரம் செய்த மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தினார்களே, காங்கிரஸ்காரர்கள்? அதைப் போலவா? தமிழக அரசின் அனுமதியுடன் சத்யமூர்த்திபவன் முன்பு அறப்போராட்டம் செய்தவர்களை தலைக்கவசம் அணிந்து, தாக்குதல் நடத்தினார்களே? அதைப் போலவா? ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது, திமுகவினரின் வீடுகளைத் தேடித்தேடி போய்த் தாக்கிய, சூறையாடிய காங்கிரஸ் கோமான்களைப் போலவா? இந்த வரிசையை இன்னும் நீட்டிக்கொண்டே போகலாமே? 

சென்னையில் காயிதே மில்லத் கல்லுரி பின்புறம் காங்கிரசார் நடத்திய கூட்டம் எப்ப‌டி நடந்தது என்பதை கலந்து கொண்ட காங்கிர‌ஸ்காரனிடம் கேட்டாலே சொல்லுவானே..!  /ராஜீவ் சிலைகளின் முகம் சிதைக்கப்பட்டு, தலை தகர்க்கப்படுகிறது. எனில், நாம் சொல்ல விழைவதுதான் என்ன?/
இது பற்றி தமிழக காவல்துறை விசாரணை இன்னும் முடியவில்லை எனும்நிலையில், அந்த விசாரணையில் நம்பிக்கை இல்லாத- நாளேட்டின் கட்டுரைப் பகுதிப் பொறுப்பாளர் நிலையில் இல்லாத போக்கு இல்லாதவர்கள்-  மற்றும் போக்கு இலிகள்- வாய்க்கு வந்ததைப் பேசவும் எழுதவும் செய்யலாமா..?

ந்தக் கட்டுரை, தகவல் பிழைகளும் கட்டுரை எழுதும் தகுதிக்குரிய குறைந்தபட்சத் தகவல் இல்லாமலும் தமிழீழத்துக்கு எதிரானது ஹிண்டு என்று அதன் முதலாளி சொன்னதால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த தங்கள் இடத்தை தக்க வைக்க, பணியிடத்தில் உயர்வை நோக்கிப் பயணிக்க திட்டமிட்டு இந்தக்கட்டுரையை தி இந்து எடிட்டோரியல் வெளியிட்டுள்ளது. அதற்கு ஏழு பேர் உயிர்தான் கிடைத்ததா..? இந்தப் பிரச்னையில் கட்டுரை எழுதிய சமஸ் முழுக்க முழுக்க நடுநிலையின் படியும் நியாயத்தின் படியும்,அனைவருக்குமான ஊடகத்தில் எழுதுகிறோம் என்ற பொறுப்புணர்வு சிறிதும் இல்லாமல் நிறுவனத்தின் பாலிசிக்கு ஏற்றபடி எழுதியுள்ளார்.


முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யருடன் சமஸ் (புகைப்பட உதவி சமஸ் வலைப்பூ)
சமஸ் நிறுவனத்தின் கொள்கையைத் தனது கொள்கையாக மாற்றிக்கொண்டு இப்படிச் செய்வது இதுமுதல் முறை அல்ல. இதற்கு முன் அவர் இந்து முதலாளி என்.ராம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். அதன் இணைப்பு இது தான். நல்ல திரைக்கதையாக வடிவமைக்கப்ட்ட இந்த 'நேர்காணலை' நாம் விரிவாக ஆராய விரும்பவில்லை.அதற்குத் தேவையும் இல்லை.
அதில் குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் குறித்து மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். செய்தியில் கோணம் கலக்கக் கூடாது என்ற கொள்கையை வலியுறுத்துபவர் நீங்கள். //என்று இந்து ராமிற்கு சமஸ் 'ந‌ற்சான்றிதழைக்' கொடுக்கிறார்.


இந்து ராம் செய்தியில் விமர்சனம் கலக்காத நடுநிலையானவரா..?


உலகத் தமிழர் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாத படுபாதகப் படுகொலை, ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகமான செஞ்சோலை மீது, சிங்கள ராணுவம் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில், 51 குழந்தைகளும் நான்கு பள்ளிப் பணியாளர்களும் உலக மானுடத்தைக் குலுக்கியெடுக்கும்படி கொல்லப்பட்டனர். அது குறித்த செய்திக்கு கீழ்க்கண்ட தமிழ்நெட் இணைப்பைப் பாருங்கள்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19229

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19243

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19281
ஆனால் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளிதழ் எப்படித் தலைப்பு கொடுத்திருக்கிற‌து பாருங்கள். அப்பொழுது என்.ராம் தான் ஆசிரியர்.செய்தியில் விமர்சனம் கூடாது என்னும் அளவுக்கு சிற‌ப்பான ஆசிரியர் தலைப்பையே உள்நோக்கத்துடன் திருத்தி வைத்திருக்கிறார்.

http://www.thehindu.com/todays-paper/colombo-rejects-ltte-claim/article3091110.ece
51 குழந்தைகள் உள்பட 55 பேர் வான்குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தியை, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பைத்தானே நேர்மையான,நடுநிலையான‌ பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக்குவார்கள்.ஆனால், ஹிண்டுவோ அப்போதைய சிங்கள அரசின் பாதுகாப்பு செய்தித்தொடர்பாளரின் பேட்டியை செய்தித் தலைப்பாக்கியது. 

இந்த நியாயம்கூட வேண்டாம்; இவர்கள்தான் நடுநிலைவாதிகள் அல்லவா? அந்தச் செய்திக்கு உள்ளேயே, ஐநா குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃபின் இலங்கை பொறுப்பாளர் குழந்தைகள் கொல்லப்பட்டதைக் குறிப்பிடுகிறார். அதையும் மீறி  ஹிந்து ஆங்கில நாளிதழ் சிங்களப்படையைப் பாதுகாக்கும் வேலையைச் செய்கிறது. எனில் இங்கு சிங்களனின் கைக்கூலியாகச் செயல்பட்டதால், அவரையும் அறியாமலேயே தன்னை வெளிக்காட்டியுள்ளார்.

ஐநா உறுப்பு நாடு ஒன்றின் போர்ப் பிரதேசத்தில் நடத்தப்படும் தாக்குதல் தொடர்பான செய்தியில் நடுநிலைமை என வைத்துக்கொண்டாலும் யுனிசெஃப் அதிகாரியின் கருத்தைத்தானே முதலில் பதிவு செய்திருக்கவேண்டும். இது தான் அவரது 'நேர்மை'. இவருக்குத் தான் சமஸ் 'ந‌ற்சான்றிதழ்' அளிக்கிறார்.
அதே நேர்காண‌லில் இருந்து இன்னொரு எடுத்துக்காட்டு. 

உங்கள் நண்பர் ராஜபக்‌ஷ முன்னெடுத்த இறுதிப்போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும் போர்க் குற்றங்கள் நடந்ததும் இப்போது அம்பலமாகிவிட்டது. என்ன சொல்கிறீர்கள்?
என்.ராம்: இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். // போர்க்குற்றங்கள் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று என்.ராம் ஒப்புக் கொள்கிறார்.ராஜபக்ச தனது நண்பர் என்பதையும் மறுக்கவில்லை. 

ஆனால் இதுவரை ராஜபக்சவின் போர்க்குற்றங்களை இந்து ராம் பிற நாடுகளின் போர்க்குற்றங்களைக் கண்டிக்கும் அளவுக்கு கண்டிக்கவில்லை. அது ஏன்?
இதை சமஸ் கேள்வியாக்கி இருக்க வேண்டுமா இல்லையா? உன் நண்பன் போர்க்குற்றவாளி என்பதனால் அவரைப் பாதுகாக்கிறீர்களா என்று கேள்வி கேட்டுப் பதில் வாங்கி இருக்க வேண்டும். இது சமசுக்குத் தெரியாதா..? யாரிடம் கேள்வி கேட்பது? 

பதில் சொல்வது, முதலாளியல்லவா? அமைதியாய்க் கடந்துபோகிறார்..!

முதலாளியிடம் எதிர்க் கேள்வி கேட்பது தர்மசங்கடம், தன்னால் இயலாது என்று அவர் கருதியிருந்தால் இந்த நேர்காணலை செய்யாமல் ஆரம்பத்திலேயே தவிர்த்திருந்திருக்கலாம். 

இதற்கு எதற்கு நேர்காணல் என்று பெயர் போட வேண்டும்.இந்துவில் வேலை பார்க்கும் குமாஸ்தா போதுமே..?

இது தான் சமஸ். நிறுவனம் என்ன சொல்கிறதோ, அதைச் செய்வதும் எழுதுவதும்தான் அவரது பணி. சுயமாய்ச் சிந்திக்கவும் செயல்படவும் திராணி உள்ள‌ சுயேட்சையான பத்திரிகையாளர் அல்லவே? 

இந்த பத்திரிகையாளர்கள் தான் கருணாநிதி,ஜெயலலிதா,சோனியா,நரேந்திர மோடி என அனைவரையும் விமர்சிக்கும் வல்லமை படைத்தவர்களாக கருதிக் கொள்கின்றனர்.
ஒன்று மட்டும் உறுதியாகிவருகிறது. தி இந்து நாளேடு தொடங்கப்பட்டதன் வணிக நோக்கம் தவிர்த்து, அதன் இலக்கை நோக்கி, முழுவீச்சில், 

அவாள் பாணியில் சொல்லவேண்டுமானால்,

‘அவதார லக்சியம்’ மூன்றாவது கியரில் எகிறிக்கொண்டு போகிறது.

தி இந்துவின் அவதார லட்சியத்தை நிறைவேற்ற சமஸ் அதிகமாகவே துடிக்கிறார்.

ஒரே ஒரு வேண்டுகோள்.

சானா மானா எனும் முன்னெழுத்துகளுடன், பெற்றார் இட்ட ஸ்டாலின் எனும் பெயரைச் சகிக்கமுடியாமல், சமஸ் எனப் பெயரை மாற்றிக்கொண்டது, உங்களின் தனி உரிமை.

ஒரே ஒரு வேண்டுகோள், உங்கள் பெயர் பாதியாகத் தொங்கிக்கொண்டு இருக்கிறது. பின்பாதியான, கிருத‌ம் என்பதையும் சேர்த்துக் கொண்டால்தான் உங்களின் 'தி இந்து' அவதாரம் பூரணத்துவம் பெறும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம், பத்திரிகைக் கோமானே!

2 comments:

Anonymous said...

நல்லவேளை ஐயா விஜயபாரதத்துல வேலைக்குச் சேரலை.அப்பாலக்கா மோடிக்கு சிறுபான்மையின் காவலர் பட்டம் கொடுத்ஹ்டிருப்பார்...தப்பிச்சதுடா சாமி...

Unknown said...

http://vansunsen.blogspot.in/2014/03/society-missshakeela.html

appadiya