Friday, 21 March 2014

அடியாள் @ எடிட்டரின் தொழிலாள‌ர் விரோதப் போக்கு...!





தொழிலாளர் விரோதப்போக்கில்,அவர்களின் உரிமைகளை நசுக்குவதில்,சுரண்டுவதில் அனைத்து நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.ஊருக்கும் உலகுக்கும் அறம் போதிக்கும் ஊடக நிறுவனங்கள் இதில் 'முன்மாதிரியாய்த்' திகழ்பவை.

சமீபத்தில் 'சன்' குழுமத்தின் தினகரன் நாளிதழ் நிர்வாகம் , தனது ஊழியர் ஒருவரிடம் நடந்து கொண்ட அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்கை இங்கு பதிவு செய்கிறோம்.

திரு.கோவிந்தராஜ்.இவர் சென்னை தினகரன் தலைமை அலுவலகத்தில் செய்திப்பிரிவில் மூத்த உதவி ஆசிரியராய் பணிபுரிபவர். (புரிந்தவர்). இதற்கு முன் வேலூர் தினகரன் நாளிதழின் செய்தி ஆசிரியராய் பணிபுரிந்தவர்.அங்கு உள்ள மேனேஜர் தனது கொள்ளைச்செயலுக்கு துணை புரியும் வண்ணம்  இணக்கமான ஒரு செய்தி ஆசிரியர் வேண்டும் என்று, சென்னை நிர்வாகத்தில் வற்புறுத்தியதால் ஏ.டி எம்.  களவாணிப்பயல் ஒருவரை செய்தி ஆசிரியராய் நியமித்து விட்டு நிர்வாகம், இவரைச் சென்னை அலுவலக செய்திப்பிரிவுக்கு மாற்றியது .

செய்யும் பணியில் நேர்மையும், திறமையும் மிக்கவர் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஒரு செய்திப்பதிவை ஒழுங்காய் எழுதத் தெரியாதவனும்,கை நீட்டிக் காசு வாங்குபவனும் யாருக்கும் கூழைக்கும்பிடு போடுவார்கள்.ஆனால் பணியில் நேர்மையாகவும் திறமையாகவும் இருப்பவர்கள் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் தானே இருப்பார்கள். அதே நேரத்தில்  நிர்வாகத்தின் அடியாள்  என்பது மட்டும் தகுதியாய் இருப்பதனால் ஆசிரியராய் நியமிக்கப்பட்ட‌வ‌ர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்.

முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம்வரைக்கும் மாங்குமாங்குனு மண்டையைக் குடைஞ்சுகிட்டு, எந்த செய்தி முதல்ல வரணும் எது பின்னால வரணும், எந்தெந்த செய்தியெல்லாம் வரக்கூடாது, எந்தெந்த செய்தியெல்லாம் வரணும், எந்த செய்தியையாவது யாராவது அன்னைக்குப் பொழுது சரியா கொடுக்கலைனா சம்பந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டு அதைச் சரிசெய்யுறது-   வினாடி நேரம்கூட யோசிக்க அவகாசம் இல்லாமல் சில மணி நேரங்களில் படபடன்னு மண்டையைக் குடைஞ்சுகிட்டு, நாளேட்டின் ஆசிரியர் பணியைச் செய்வது, அதை தகுதியும் திறனும்கொண்ட பத்திரிகையாளர்களுக்குதான் தெரியும். அதன் அவஸ்தையும் அந்த உழைப்பினால் வரும் மகிழ்ச்சியும் புரியும். 

உலகம் முழுவதும் இருக்கும் இந்த நடைமுறையில்.. தமிழகத்தில் மட்டும், கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு பத்திரிகை தொடங்கும் வல்லமை கொண்ட எவனும் அல்லது அவன் நியமிக்கும் போக்கிரி, குண்டன், சமூகவிரோதிகூட பத்திரிகை ஆசிரியராக உலா வரமுடியும்; அதுவும் அரசாங்கம் வழங்கும் செய்தித்துறை அங்கீகாரத்தை இறக்குமதி வகைக் கார்களில் ஜம்பமாக ஒட்டிக்கொண்டு எனும் கேவலம் இன்னும் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

இதில் ஒன்று தான் தினகரன் நாளிதழ்.

து என்னவோ தெரியவில்லை, ஆர்.எம்.ஆர்.ரமேஷ், கோவிந்தராஜின் பக்கத்து மாவட்டம் என்றாலும், இவரை ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் பிடிக்கவில்லை.தனக்கான சந்தர்ப்பம் எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

திரு.கோவிந்தராஜ்,கடந்த ஒரு மாதம் முன்பு  தனது கண்ணில் ஏற்பட்ட பாதிப்புக்காக சிகிச்சைக்காய் மூன்று வார மருத்துவ விடுமுறை எடுத்திருந்தார். அதன்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி கூடுதலாய் ஒரு வாரம் மருத்துவ விடுமுறை எடுத்திருந்தார்.அனைத்தும் முறைப்படி நடந்திருக்கிறது.ஒவ்வொரு ஊழியரும் பணியாற்றிய ஐந்து ஆண்டுகளில் 60 நாட்கள் மருத்துவ விடுமுறை தொகுப்பு எடுக்கலாம். அதற்கு மேல் மருத்துவ விடுமுறை எடுத்தால் ஊதியம் கிடைக்காது. இது தான் சட்டம்.

சிகிச்சையும் ஓய்வும் முடிந்து மீண்டும் பணிக்குச் சேர வந்த பொழுது அங்குள்ள ஹெச்.ஆர்.சாந்தி நீங்கள் பணியில் சேர்வ‌தற்கு முன் எடிட்டர் ஆர்.எம்.ஆர்.அவர்களை ஒருமுறை பார்த்து விடுங்கள் என்றிருக்கிறார். இவரும் அதனை ஏற்றுக்கொண்டு ஆர்.எம்.ஆரைச் சந்திக்க பல நாள் பலமுறை முயன்றிருக்கிறார்.அதற்காய் காத்திருந்திருக்கிறார்.ஆனாலும் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் திட்டமிட்டுத் தவிர்த்திருக்கிறார்.

சரி இனி எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்கத் தேவை இல்லை என்று முடிவு செய்து கொண்டு பாரிமுனை சென்று வழக்குரைஞரைச் சந்தித்து தினகரன் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுபியுள்ளார்.விரைவில் வழக்கு நடைபெறும் எனத் தெரிகிற‌து.ஒரு தொழிலாளி கண் சிகிச்சைக்கு விடுமுறை எடுப்பதற்குக் கூட உரிமை இல்லையா..? அப்படி விடுமுறை எடுத்தவரை  அலைக்கழித்து எந்தப்பதிலும் சொல்லாமல்,பணியில் சேரும் வாய்ப்பைத் தடுத்து திட்டமிட்டு வெளியேற்றியிருக்கிறார்கள்.

நிர்வாகத்தின் அடாவடியை எதிர்த்துக் குரல் எழுப்பிய திரு.கோவிந்தராஜ் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.


ஆர்.எம்.ஆர்.ரமேஷ்.



இதில் இன்னொரு செய்தி என்னவென்றால், ஊழியர் யாராவது பணியில் இருந்து விலகினாலோ,நீக்கம் செய்யப்பட்டாலோ தினகரன் அலுவலகத்தில் கையொப்பம் இடும் வருகைப் பதிவேட்டில் அந்த ஊழியரின் பெயருக்கு முன்பு பேனாவால் நீக்கம்,விலகல் என்று எழுதி விடுவார்கள்.

ஆனால் கோவிந்தராஜ் பெயருக்கு முன்னால் எதுவும் எழுதாமல் பென்சிலால் ஒரு கோடு மட்டும் போட்டிருக்கிறார்கள்.நாளை வழக்காடு மன்றத்தில் வழக்கு வரும் பொழுது பதில் சொல்ல ஏதுவாக இருக்கும் என்று 'முன் எச்சரிக்கையாய்' விட்டு வைத்திருக்கிறார்களாம்.

நாட்டைச் சுரண்டியது மட்டுமல்லாமல், தனது தொழில் கூட்டாளியான தாத்தாவையே சன் குழுமப் பங்குப் பரிவர்த்தனையில் சுரண்டிப் பத்திரிகை நடத்தும் கும்பலுக்கு, அடியாள் வேலை பார்க்கும் ஆர்.எம்.ஆர் போன்றவர்கள் இத்துறையில் எடிட்டராய்க் கோலோச்சும் பொழுது,உண்மையான‌ செய்தியாளனின் மீது அக்கறை எப்படி வரும்..?


1 comment:

Anonymous said...

There is always hurdles for a man who works sincerely, but he will always win at the end.. If not appreciating his talents, higher officials must stop being jealous and trying putting him down..