குமுதம் நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் |
குமுதம் தொடர்பான செய்திகள் எழுதி ரொம்ப நாளாச்சு.ஆகவே சில செய்திகள் இந்தப்பதிவில்.
வெளியேற்றப்படும் நிருபர்கள்
வெளியேற்றப்படும் நிருபர்கள்
குமுதம் குழுமத்தில் இப்பொழுது ஒவ்வொரு நிருபர்களாக கட்டம் கட்டி வருகிறார்கள்.ஜீன் 16ம் தேதி அன்று திடீரென்று மதுரை சீனியர் நிருபர் ப.திருமலையை ‘உடனே புறப்பட்டு தலைமையகத்திற்கு வாங்க. இனிமேல் இங்குதான் வேலை‘ என்று அழைத்திருக்கிறார் கோசல்ராம். அந்த உத்தரவை ஏற்று 18ம் தேதி திங்கள் காலை அலுவலகம் வந்திருக்கிறார். இருப்பதிலேயே சீனியர் அவர்தான். வயதிலும்கூட.கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக உழைத்து வந்தவர்.
‘வயதான பெற்றோர் மற்றும் பெரிய குடும்பத்தை திடீரென்று விட்டுவிட்டு சென்னையில் தங்கி வேலை செய்ய முடியாது என்பதை விளக்கியிருக்கிறார். உடனே கோசல்ராமோ ‘ நிர்வாகம் முடிவெடுத்திருக்கு. முடியலைன்னா லெட்டர் கொடுத்துட்டு போங்க‘ என்று தெனாவட்டாகக் கூறியிருக்கிறார். அவரும் வருகிற ஒன்றாம் தேதிவரை காலக்கெடு வைத்து லெட்டர் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அவரிடமிருந்து செல்போன் சிம்கார்டு உட்பட அனைத்தையும் வாங்கிவிட்டு அனுப்பியிருக்கிறார்கள்.திருமலையைப் போன்று ஏழெட்டு பெயர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் வெளியே துரத்தியாக வேண்டும் என்னும் முடிவில் இருக்கிறார்களாம்.
‘வயதான பெற்றோர் மற்றும் பெரிய குடும்பத்தை திடீரென்று விட்டுவிட்டு சென்னையில் தங்கி வேலை செய்ய முடியாது என்பதை விளக்கியிருக்கிறார். உடனே கோசல்ராமோ ‘ நிர்வாகம் முடிவெடுத்திருக்கு. முடியலைன்னா லெட்டர் கொடுத்துட்டு போங்க‘ என்று தெனாவட்டாகக் கூறியிருக்கிறார். அவரும் வருகிற ஒன்றாம் தேதிவரை காலக்கெடு வைத்து லெட்டர் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார். அவரிடமிருந்து செல்போன் சிம்கார்டு உட்பட அனைத்தையும் வாங்கிவிட்டு அனுப்பியிருக்கிறார்கள்.திருமலையைப் போன்று ஏழெட்டு பெயர்கள் இருக்கிறார்கள். அனைவரையும் வெளியே துரத்தியாக வேண்டும் என்னும் முடிவில் இருக்கிறார்களாம்.
இது போக குமுதத்தின் புகைப்பட கலைஞர்களான சித்திரம் மத்தியாஸ், கோபால் ஆகியோரைச் சம்பந்தமே இல்லாமல் சேலத்திற்கு ஒருவரும், ராமநாதபுரத்திற்கு ஒருவருமாக மாற்றினார்கள். குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம் என்று இந்த ஒரு மாதம் டைம் கேட்டு கடிதம் கொடுத்தும் ‘அதெல்லாம் முடியாது பத்து நாள்தான் டைம். உத்தவை ஏத்துக்கிடுங்க. இல்லாட்டி லெட்டர் கொடுத்துட்டு போங்க. எம்.டி. முடிவு பண்ணிட்டாருன்னு கோசல் சொல்லியிருக்கார்.இப்போ அந்த ரெண்டு பேரும் வெளியில போயிட்டேயிருக்காங்க.
குமுதத்தின் அசோசியட் எடிட்டராக பத்து வருடங்களாக இருந்தவர் ரஞ்சன். திறமைசாலி. அவரைச். சம்பந்தமேயில்லாமல் டம்மியான பப்ளிகேசனுக்கு மாற்றினார். பிறகு வெளியூர் சென்று சர்வே எடுத்து வா என்றார் வரதராசன். அதன்பின் முதுகுவலி காரணமாய் வீட்டில் ஓய்வில் இருந்துவிட்டு மருத்துவ சான்றிதழோடு வந்தவரை கேவலப்படுத்தும் விதமாக ‘சான்றிதழ் மீது நம்பிக்கை இல்லை. நீங்கள் பர்சனல் வேலையாக வெளியில் நடமாடினீர்கள். அதனால் ஒரு கமிட்டியை போட்டு விசாரித்த பிறகுதான் ஒப்புகொள்ள முடியும்‘ என கடிதம் கொடுத்து டார்ச்சர் கொடுத்தார்கள். அலுவலகத்தின் உள்ளே நுழையும் போதும், வெளியே போகும் போதும் செக்யூரிட்டிகளை விட்டு சட்டை பேண்ட் பாக்கெட்டெல்லாம் தடவி பார்த்து ‘செக்கப் செய்து‘ அசிங்கப் படுத்தினார். (தான் திருடி பிறரை நம்பமாட்டான்) கடைசியில் அவர் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு போனார்.
அடுத்து யாரோ..?
தொடரும் பனிப்போர்
ஜான் வில்கின்ஸூக்கும் கோசலுக்கும் இப்பொழுது பனிப்போர் உச்சத்தில் இருக்கிறதாம்.கோசலுக்கு ஆதரவாய் வரது இருப்பதால் ஜான் வில்கின்ஸ் ஏறத்தாழ ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருக்கிறாராம்.
எவ்வளவு அடியாளு வேலை பார்த்தேன். அன்னைக்கு நான் மட்டும் இல்லைன்னா ஓனர் செட்டியாரு ஆபீசுக்குள்ள வந்திருப்பாரு. எம்.டி. வெளிய இருந்திருப்பாரு. நன்றிகெட்ட பசங்க என்று கோர்ட்டு வட்டாரத்து நண்பர்களிடம் புலம்புகிறாராம். ‘தலைவர்’ வரது இவரை எந்த மீட்டிங்கிற்கும் கூப்டறதில்லை.இது இவரை விரக்தியின் விளிம்பில் நிறுத்தி விட்டதாம். சமீபகாலமாக ஜான் மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களாக இருக்கும் லேஅவுட் ஆர்ட்டிஸ்ட்டுகள்,புகைப்படக்காரர்கள் உட்பட அனைவரையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கிவிட வேண்டும் என்ற திட்டமும் நடைமுறைக்கு வந்திருந்தது. அவர்களுக்கு மாற்று நபர்களை கோசலும், கங்காணி மணாவும் கொஞ்சம் கொஞ்சம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்தக் கோபத்தில் தான் இளையராஜா எழுதிய நூல் வெளியீட்டு விழாவைப் புறக்கணித்தாராம்.மேலும் அலுவலகத்தில் அவருக்கு மேலே விகடனில் இருந்து வந்த வெங்கட்டைப் போட்டிருக்கிறார்களாம்.
இதுவும் வில்கின்ஸுக்கு கடுப்பாம்.அவர் வெளியேறுவாரா இல்லை வெளியேற்றப்படுவாரா என்று தெரியாத நிலையில்கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்புதான் ‘வரதா’வுக்கு ஏதோ திடீர் சிக்கல். கோர்ட் வட்டாரத்திலும், வெளியிலும் சில வேலைகளை செய்ய வில்கின்ஸை மீண்டும் கூப்பிட்டிருக்கிறார்கள்.அதனால் டப்பாச்சோறு ஜான் வில்கின்ஸ் மீண்டும் சிலிர்த்துகிட்டு நிற்கிறார்.(காரியம் முடிந்ததும் கழட்டிவிடப்படுவார் என்றும் சொல்கிறார்கள்)
இதுவும் வில்கின்ஸுக்கு கடுப்பாம்.அவர் வெளியேறுவாரா இல்லை வெளியேற்றப்படுவாரா என்று தெரியாத நிலையில்கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்புதான் ‘வரதா’வுக்கு ஏதோ திடீர் சிக்கல். கோர்ட் வட்டாரத்திலும், வெளியிலும் சில வேலைகளை செய்ய வில்கின்ஸை மீண்டும் கூப்பிட்டிருக்கிறார்கள்.அதனால் டப்பாச்சோறு ஜான் வில்கின்ஸ் மீண்டும் சிலிர்த்துகிட்டு நிற்கிறார்.(காரியம் முடிந்ததும் கழட்டிவிடப்படுவார் என்றும் சொல்கிறார்கள்)
இது எத்தனை நாளைக்கோ..?
ஊர் உலகம் நம்புவதற்கு ஒரு நிகழ்ச்சி
நிர்வாக இயக்குனர் தான் தான் என்று சொன்னால் ஊர் உலகத்தில் யாரும் நம்ப மறுக்கிறார்களே என்பதனால் அதை நிலை நிறுத்த என்ன செய்வது என்னும் நினைப்பில் உதித்தது தான் இளையராஜாவையும்,கமல்ஹாசனையும் வைத்து நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்ச்சி.வரதுவைப் பற்றித் தெரிந்ததாலோ என்னவோ அரங்கில் மின்சாரம் பலமுறை போய்ப் போய் வந்ததாம்.
இதில் பேசிய கோசல்ராம்,பாவலர் வரதராஜனையும் குமுதம் வரதராஜனையும் ஒப்பிட்டுப் பேசியதைக் கேட்ட அரங்கில் இருந்தவர்களே சிரிப்பாய்ச் சிரித்தார்களாம்.
ஏண்டா...புரட்சியே வாழ்க்கை. பொதுநலனே பாதை என்று கடைசிவரை சொத்து சேர்க்காமலேயே மக்களுக்காக ஊர்தோறும் பாட்டுப் பாடித் திரிந்த பாவலர் வரதராஜன் எங்கே...!
பிழைக்கிறதுக்கு இடமும் கொடுத்து, போனால்போகிறதென்று கொஞ்சம் பங்குகளையும் இனாமாகக் கொடுத்து அழகு பார்த்த செட்டியார் குடும்பத்துக்கே துரோகம் செய்து, சொத்துக்களையே அடித்து சுருட்டும் இந்தவரதராஜன் எங்கே என அனைவரும் காறித்துப்பினர்.
கேட்கும் நிலையில் வரது இருந்தால் தானே..!
*
நடராஜன்,சோ வரிசையில் இப்பொழுது நட்ராஜ்
குமுதம் பஞ்சாயத்தில் இப்பொழுது பழனியப்பன் சிதம்பரம் ஏதோ வகையில் இடைஞ்சலாக இருக்கிறாராம்.ஆகையால் தொடர்ந்து இப்பொழுது அவரைக் குறிவைத்து எழுதித் தள்ளிவருகிறார்களாம்.
20.5.2012 தேதியிட்ட ரிப்போர்ட்டர் இதழில் ”ஒரே துறை...ஓஹோ ஊழல். சிக்கும் முன்றாவது அமைச்சர்” என்ற தலைப்பிட்டு அட்டைப்படக் கட்டுரையாக ப.சிதம்பரத்தை காய்ச்சியிருந்தார்கள். அடுத்து 27.5.2012 தேதியிட்ட ரிப்போர்ட்டரின் வம்பானந்தா பகுதியில் போட்டு தாளித்திருந்தார்கள். கடந்த ரிப்போர்ட்டர் இதழில், ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி பேட்டியை வைத்து ‘சிதம்பரம் தப்பவே முடியாது’ என வெளீயிட்டுச் சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து எதிராக எழுதி வருகிறார்களாம்.
இதே பழனியப்பன் சிதம்பரத்தின் மகன் கார்த்தியை இரண்டு வருடங்களுக்கு முன்பு காத்திருந்து காத்திருந்து கெஞ்சியதையும் அவருக்கு ஆதரவாய் எழுதித் தள்ளியதையும் இப்பொழுது சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்களாம்.மாறன்களை ஏனோ இப்பொழுது கண்டுகொள்வது இல்லையாம்.திரைமறைவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
*
எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையில் இருக்கும் வரதராஜன் இப்பொழுது தமிழ்நாடு பப்ளீக் சர்வீஸ் கமிஷன் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நட்ராஜ் பற்றிய செய்தி அனைத்தையும் வரிந்து கட்டி வெளியிட்டு வருகிறாராம்.எதற்குத் தெரியுமா..?ஆளுங்கட்சியின் அனுசரணைக்குத் தான்.இது நட்ராஜூக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.
கன்னித் தீவு கதை போல் குமுதம் பிரச்சனை நடைபெற்றுவருகிறது,என்று தான் விடிவுகாலமோ என்று அனைவரும் அலுத்துக் கொள்கிறார்கள்.
3 comments:
பத்திரிகைப் பணிக்காகவே முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மிகச் சிறந்த பத்திரிகையாளர்களுள் மதுரை ப.திருமலைக்கு தனித்துவமிக்க இடமுண்டு. செய்திகளை நேர்மையாகவும், துணிச்சலாகவும் வெளிக் கொணர்பவர். வழக்கறிஞர் பணியில் பெரும் பொருளீட்ட முடியும் என்ற நிலையில் கூட கடந்த 25 ஆண்டுகளுக்கும் முன்னால் அப்பணியை உதறிவிட்டு, தனது அப்பா வழியிலான சொத்துக்களையும் கூட பொருட்படுத்தாது, எழுத்துப்பணிக்கு வந்தவர். தொடக்கத்தில் பிளவு படாத தினமலரின் வளர்ச்சிக்காக தன்னை மெழுகாய் உருக்கிக் கொண்டவர். பின்னர் தினமணியில் பணியாற்ற நேர்ந்து, அதற்குப் பின்னர் அங்கும் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
தனக்கென்று வாழாமல் சமூகத்திற்காகவே வாழ்ந்து பழகி விட்ட ப.திருமலையைப் போன்ற பத்திரிகையாளர்களை குமுதம் நிர்வாகம் உதாசீனம் செய்யுமானால், விரைவில் அதற்கான விலையை அவர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள். கோசல்ராம், ஜான் போன்ற கடைக்குட்டிகளுக்கெல்லாம் இது போன்ற தலைமைப் பொறுப்பைக் கொடுத்தால், எப்படி நடந்து கொள்வார்களோ அப்படித்தான் அவர்களும் நடந்து கொள்கிறார்கள். வரதராஜன் தனது எடுபிடிகளால் சீக்கிரமே அம்பலத்தில் ஏறப்போகிறார் என்பது மட்டும் உண்மை.
- தென்னாடன்
Excuse me, how to remove this varadhu!
mr.ranjan is a very good journalist. he who wrote the book "business maha maha rajakkal".
Post a Comment