Tuesday 21 February 2012

பத்தாயிரம் நிதியும் பல்லாயிரம் புலம்பல்களும்




சென்னை பிரஸ் கிளப் சார்பில் தமிழக முதலமைச்சரிடம் தானே புயல் நிவாரண நிதி ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்து விட்டு வந்துள்ளதற்குப் பின்னால் பல விஷயங்கள் வருத்தமும் சோகமும் ஆத்திரமும் கழுத்தறுப்புகளுமாக பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதனைத் தொகுத்து தந்துள்ளோம்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ளது சென்னை பிரஸ் கிளப் என்னும் பத்திரிகையாளர் அமைப்பு.இந்த அமைப்புக்கான புதிய கட்டிடம் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நன்கொடையால் கட்டப்பட்டுள்ளது.கட்டிடம் அமைந்துள்ள இடம் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமானது.


இந்தக்கட்டிடம் கட்டுவதற்கு முறைப்படி சென்னை மாநகராட்சியின் அனுமதியோ அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் அனுமதியோ முறைப்படி பெறப்படவில்லை.இதனால் இந்தக்கட்டிடத்தை திறந்து வைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி வர மறுத்து விட்டார்.இந்தக்கட்டிடத்திற்கு எத்தனையோ பத்திரிகையாளர்கள் பெயர்களை வைப்பதற்குப் பதிலாக மக்களைச் சுரண்டிய சுயநிதிக்கல்லூரி முதலாளியின் பெயர் வைத்தது அப்பொழுதே பரபரப்பாகப் பேசப்பட்டது.

எழவு வீட்டிற்குப் போனால் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் இருப்பதைப்போல பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்வோர் காசு வாங்கி விட்டு கட்டிடத்திற்கு சுயநிதிக் கல்லூரி நிர்வாகத்தின் பெயரைச் சூட்டி விட்டார்கள் எனவும் பேசப்பட்டது.ஆனால் இது குறித்து எந்தக் கூச்சமும் நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு இருக்கவில்லை.

ஆட்சி மாறியதும் இன்றைய முதல்வரை எப்படியேனும் பிரஸ் கிளப் வளாகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தங்களைத் தாங்களே நிர்வாகிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பெரு முயற்சி எடுத்துள்ளார்கள்.ஆனால் அவர்கள் முயற்சி இதுவரை வெற்றிபெறவில்லை.

னால் சில நாட்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் பெண் உறுப்பினர்களுக்கான உடற்பயிற்சிக்கூடத்தை திறந்து வைக்க முதல்வர் ஜெயலலிதா வருகை தந்தார்.

அப்பொழுது பிரஸ் கிளப் வாசல் வழியாகச் சென்ற முதல்வரின் காரை இடையில் வழி மறித்து கார் முன் கையில் பொக்கேயுடன் நின்று கொண்டு 'அம்மா தானே புயல் நிவாரணத்திற்கு நன்கொடை கொடுக்க வேண்டும் அம்மா' என்று நிர்வாகிகள் கூக்குரல் எழுப்ப முதல்வர் கார் மெல்ல பிரஸ் கிளப் வாசலில் இருந்து சற்று தூர தள்ளி நின்றவுடன் கையில் பொக்கேயுடன் சென்று முதல்வரைச் சந்தித்து நிதி கொடுக்க வேண்டும் அம்மா என்று சொல்லி உள்ளார்கள்.

உடனே முதல்வர் தானே புயல் நிவாரண நிதியை தலைமைச் செயலகத்தில் வந்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.உடனே சென்னை பிரஸ் கிளப் சார்பில் 5 பேர் தலைமைச் செயலகம் சென்று காசோலை அளித்து விட்டு வந்து உள்ளனர்.

இது தான் நாம் மேலே பார்க்கும் புகைப்படம்.ஆனால் இதற்குப் பின் நடைபெற்ற கழுத்தறுப்பு விஷயங்கள் அரசியலில் கூட நடக்காதது என்று உண்மையான பத்திரிகையாளர்கள் புலம்புகின்றனர்.

புலம்பல் 1

பாரதி தமிழன்  

தேர்ந்தெடுக்கப் படா விட்டாலும் இப்பொழுதைக்கு நான் தான்  இணைச் செயலாளர். முதல்வரைச் சந்திக்கப் போகிறோம் என்று சொல்லி விட்டு நான் கிளம்பி வருவதற்குள் நான் இல்லாமல் என்னை வேண்டும் என்று கழட்டி விட்டு சீட்டிங் பெல்லோஸ் இவர்களாகவே சென்று சந்தித்து விட்டார்கள்.அன்பு அசதுல்லாவால எப்பவும் ஒரே பஞ்சாயத்து,இவனுங்களால பிரஸ் கிளப்புக்கு கெட்ட பேரு.நான் இனிமேல் இவனுங்க சகவாசம் வேண்டாமுன்னு நினைச்சா இவனுங்க என்னைக் கழட்டி விட்டுட்டானுங்க.

இவனுங்க பண்ற பிராடுத்தனத்தை நான் தான் வெளியில் சொல்றேன்னு தெரிஞ்சி போச்சு.அதான் இப்ப கழுத்தறுத்துட்டானுங்க.என்னைப் பார்க்குறவங்க எல்லாம் பிரஸ் கிளப் ஆக்டிங் செக்ரட்டரி,தலைவர் ஆல் இன் ஆல் எல்லாம் நீங்க தான்.நீங்களே இல்லாம போயிட்டு வந்துட்டாங்க...என்ன சார் இதுன்னு எல்லாம் என்னை எழவுக்கு விசாரிக்கிற மாதிரி விசாரிக்கிறாங்க.

ஒரே அசிங்கமா இருக்கு.அதனாலேயே இப்ப கிளப்புக்கு போறதைக் குறைச்சுக்கிட்டேன்இப்படி சக நண்பர்களிடம் புலம்புகிறாராம்.

புலம்பல் 2

கோசல்ராம்

நான் இவனுங்க மாதிரி வெட்டிப் பசங்க கிடையாது.நாட்டில பெரிய பத்திரிகையான குமுதத்திற்கே நான் குழும ஆசிரியர்.நான் சொல்றது தான் நாட்டுக்கே இப்ப வேத வாக்கு.ஆனாலும் இவனுங்க கூப்பிட்டாங்கன்னு நான் எல்லா வேலை வெட்டியையும் விட்டுட்டு கார் எடுத்துட்டு அவசரமா கிளம்பி வந்தேன்.நாம் கே வாஸ் பத்திரிகையில் இருப்பவன் எல்லாம் பிரஸ் கிளப் நிர்வாகின்னு முதல்வர் முன்னாடி நின்னு நிதி கொடுக்குறானுங்க.

நிர்வாகிகளைத் தவிர்த்து எவனெவனோ முதல்வரைச் சந்தித்து நிதி கொடுக்கலாமா?இவனுங்களை ஏத்திட்டு வர்ற டிரைவரா நான்?கார் பார்க்கிங் பண்ணிட்டு வர்றதுக்குள் போய் சந்திச்சுட்டு வந்துட்டானுங்க.அவசரமா முதல்வர் அழைத்துட்டார் அதனால நீங்க வர்றதுக்குள் போய்ட்டு வந்துட்டோம்ன்னு சொல்றானுங்க,இவனுங்க கூட சகவாசம் வச்சா இப்படித் தான் அவமானம் கிடைக்கும் போல.

இனி மேல் இவனுங்க பக்கம் எட்டிக்கூடப் பார்க்கக்கூடாது.தரித்திரம் புடிச்சவனுங்க.

தன்னிலை விளக்கம் 3

விகேஷ்

பாரதியும் மத்தவங்களும் வரட்டும்னு நான் சொன்னேன்.ஆனால் அன்புவும் அசதுல்லாவும் நீ வாய்யா,போவோம்.இல்லைன்னா நீயும் வேண்டாம் நாங்க மட்டும் போறோம் ன்னு சொன்னாங்க.விட்டா இவனுங்க நம்மளக் கழட்டி விட்ருவாங்க ன்னு பயந்து நான் போயிட்டேன்.போனப்புறம் தான் எல்லாம் நம்ம கூட்டாளிகன்னு தெரியுது.நமக்கு என்ன?சந்தர்ப்பத்தைச் சரியாப் பயன்படுத்துறது நம்ம பாலிசி பாஸ்..

நமக்கு எப்பவுமே பாசிட்டிவ் ஆஸ்பெக்ட் தான் பாஸ்..ஏறிப்போய்க்கிட்டே இருப்போம்....

அடாவடி-4

அண்டப்புளுகு அன்பு

நமது எம்ஜிஆர் ல எனது பெயர் போட்டு நிறையக் கட்டுரை வந்துருக்கு. இந்தக்கட்டுரை எழுதுற அன்பு யார்ன்னு நமது எம்ஜி ஆர் எடிட்டர் மருது சார்ட்ட சிஎம் கேட்ருக்காங்க.அப்ப அவர் சொல்லியிருக்கார் இவர் தான் பிரஸ் கிளப் டிரஷரரு.சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்டோட பிரசிடெண்ட்.பத்திரிகைத்துறையில் ரொம்ப செல்வாக்கான ஆளு.இப்பவும் இவரு பேரக்கேட்டா கருணாநிதி பயப்படுறாராம்.நக்கீரன் கோபாலுக்கும் காமராஜூக்கும் சிம்ம சொப்பனமாம்.மாறன் பிரதர்ஸ் பத்தி எல்லா தகவலும் இவருக்கு அத்துப்படியாம் அப்படின்னு.

இப்படி சொன்னதோடு மட்டுமல்லாம சிஎம் கிட்ட என் போட்டோவையும் காட்னதுன்னால அன்னிக்கு பிரஸ் கிளப் வாசல்ல முதல்வர் நீங்க தான அன்பு?உடனே கோட்டைக்கு வந்துடுங்க ன்னு சொன்னாங்க.என்னால தான் அப்பாயிண்ட்மெண்ட்டே கிடைச்சது.அதனால தான் நான் இந்தப்பயலுகளப் பத்தி பெருசா கண்டுக்கலை.

நான் சொன்னதச் செய்யுற 4 பசங்களக் கூப்பிட்டுப் போயிட்டேன்.


இதே மாதிரி தான் போன கவர்ன்மெண்ட்ல கூட ஜூவி பொட்டு சுரேஷ் பிரச்சனையில கருணாநிதி கிட்ட எனக்கு இருந்த செல்வாக்குன்னால தான் அவர் எங்களைச் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்.அப்ப நான் நீங்க பிரஸ் கிளப் பங்ஷனுக்கு வரணும்னு கேட்டேன்.அப்ப அவர் தான் வரல்லை.

இப்ப இவங்க கிட்ட நிதி கொடுக்க கேட்டேன்.உடனே அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாங்க.நிதியும் கொடுத்துட்டு வந்துட்டேன்.

ஆனா இவனுங்க இன்னும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க அலையுறானுங்க.போட்டோல ஆள் வரல்லைன்னு அடிச்சுட்டு சாகுறானுங்க.என்னைப் பத்தி அவதூறு பரப்பிட்டுத் திரியுறானுங்க.என் கிட்ட நேர்ல சொல்லப் பயந்துக்கிட்டு யார் யார்கிட்டயோ எதைஎதையோ சொல்லிட்டுத் திரியுறானுங்க.

இவனுங்களால என்ன ஒண்ணும் பண்ண முடியாது.அப்படின்னு எல்லோரிடமும் தெனாவட்டாகப் பேசித் திரிகின்றாராம்.

அசதுல்லா ரீல்

அதிமுக திமுக  எந்த கவர்ன்மெண்ட் வந்தாலும் கோட்டையில கோலோச்சுறது நான் தான்.மந்திரிகளை எப்படி மடக்கணும் எப்படி மிரட்டணும் ன்னு தெரிஞ்ச ஆளு நானு.அதிமுக ஆட்சின்னா அரைக்கை சட்டை போடுவேன்.திமுக ஆட்சின்னா முழுக்கை சட்டை போடுவேன்.அதிமுக கொடி பச்சை குத்தின எம்ஜி ஆர் விசுவாசி நான்.

நான் சொன்னா எதும் செய்வான் அன்பு.பாரதி தமிழன், கோசல் வேற எவனும் என்னை ஒன்னும் பண்ண முடியாது.கிளப் பில் எப்பவும் இருக்கும் நிரந்தர நிர்வாகி நான் தான்.மத்தவன் எல்லாம் வெளியில போய் நிர்வாகின்னு சொல்லிக் கிட்டுருப்பான்.நிர்வாகம் நட்த்துறவன் நான் தான்.எவனைப் பத்தியும் எனக்கு கவலை இல்லை.

அதனால் தான் எனக்கு எடுபிடி வேலை செய்யுற நிலாவேந்தன் ராஜேந்திரனைக் கூடக் கூப்பிட்டுப் போனேன்.அந்தக்காலத்துலயே நான் சொல்றத ஆந்தையார் சொல்வார்.அதனால தான் விகேஷ் கூட வரட்டும்ன்னு நான் தான் அனுமதிச்சேன்.இல்லைன்னா அவனையும் விட்டுட்டுப் போயிடுப்பேன். நான் ஒத்துக்கிட்டதுன்னால தான் விகேஷ் உடன் வர அன்பு சம்மதிச்சான். அன்பு என் பேச்சை மீறிடுவானா?இப்பவும் நானும் அன்பும் சொல்றது தான் கழுகார் பேரில வருதுன்னு எவ்வளவு பேருக்குத் தெரியும் இதுன்னு புல் மப்பில் பிரஸ் கிளப்பில் சவுண்டு விட்டாராம்.

ஒரு சந்திப்பு நிறைய களேபரங்களையும் புகைச்சலையும் பிரஸ் கிளப்பில் ஏற்படுத்தி விட்டதாம்.ஆனால் உண்மையான பத்திரிகையாளர்களோ இவனுங்க எலெக்‌ஷன் நடத்தாமலே பல வருடம் நாங்க தான் செக்ரட்டரி ன்னு சொல்லிக்கிட்டுத் திரியுறானுங்க.

இப்ப தங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டு இருக்கானுங்க இது எங்கே போய் முடியுமோ என்று தலையில் அடித்துக் கொள்கிறார்களாம்.
                                         

No comments: