Friday 3 February 2012

குரங்கு கையில் பூமாலை-விற்பனையில் சரியும் குமுதம்!




குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையைப்போல் பா.வரதராஜன் கையில் குமுதம் மாட்டிவிட்டது.ஆம்.விற்பனையில் குமுதம் குழும இதழ்கள் கடந்த சில மாதங்களில் பெரிய சரிவைக் கண்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் குமுதம் நாற்பதாயிரம் பிரதிகள் குறைந்திருக்கிறதாம். ரிப்போர்ட்டர் அறுபதாயிரம் பிரதிகள் குறைந்திருக்கிறதாம்.

வரதராஜனுக்கு குமுதம் குழுமத்துக்குத் தலைமை ஏற்கும் தகுதி இல்லாததும் இந்த நிலையில் கூட விற்பனையிலும் இதழ் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தாதும் தான் இந்த நிலைக்குக் காரணம் ஆகும்.

குமுதத்தின் பன்னிரெண்டு முக்கிய ஏஜெண்டுகள் எஸ் ஏ பி குடும்பத்தினரை வந்து சந்தித்து தங்கள் கவலையைத் தெரிவித்துவிட்டு போயிருக்கிறார்கள்.இதே நிலை நீடித்தால் குமுதத்தை கல்கண்டு போல் ஆக்கிவிடுவார், உடனடியாக ஏதாவது செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துச் சென்றிருக்கிறார்கள்.

குமுதத்தின் இந்த இக்கட்டான‌ நிலையைப் பயன்படுத்தி விகடன் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் நிலைநிறுத்தவும் முழுவீச்சில் திட்டமிட்டுள்ளது.இதுவரை சென்னையில் வெள்ளியன்று கிடைத்த ஆனந்த விகடன் சமீப காலங்களில் மற்ற பகுதிகளைப் போல் வியாழன் அன்றே கிடைப்பதும் குமுதத்தை பின்னுக்குத் தள்ளும் வர்த்தகத்தின் ஒரு பகுதி தான்.

விகடன் பா.சீனிவாசன் குமுதம் பிரச்சனையில் வரதராஜனுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பது குமுதத்தை வரதராஜன் நடத்தினால் எளிதில் விற்பனையில்  பின்னுக்குத் தள்ளிவிடலாம்,விகடன் முதலிடத்தில் என்றும் கோலோச்ச முடியும் என்னும் வணிக தந்திரத்தில் தான்.மற்ற படி அவருக்கு வரதராஜன் மீது பாசமெல்லாம் கிடையாது என்றும் எல்லாம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

No comments: