குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்ப்பாட்டத்துடன் வெளிவந்த ஒரு ’புலனாய்வு’செய்தியையும்அதற்கு வெளிவந்த மறுப்பினையும் இப்பொழுது பார்ப்போம்.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் நிர்வாகம் பத்திரிக்கை நெறியுடன் ஒருபொழுதும் நடந்ததில்லை,தனக்குப் பிடிக்காத நபர்களுக்கு எதிராய்த் திட்டமிட்டு செய்தி வெளியிடும் இதழ் என்பது பலமுறை நிருபிக்கப்பட்ட ஒன்று.
அவ்வாறு சமீபத்தில் செய்தி வெளியாகி மூக்குடைபட்ட ஒன்றைப் பார்ப்போம்.
கடந்த 12-01-2012 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டரில் ஸ்டாலின்-ஜின்னா முறிந்ததா நட்பு?என்னும் தலைப்பில் அதி முக்கியத்துவத்துடன் ஒரு செய்தி வெளியானது. அவ்வாறு வெளியான செய்தி இது தான்.
இவ்வாறு வெளியான செய்தியில் உள்ள அபத்தத்தைப் பார்ப்போம்.
1) இதற்கு வைக்கப் பட்ட தலைப்பு என்ன தெரியுமா?
EXPOSED
நாம் தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ மஸ்டர் ரோல் ஊழலைப் போல்,ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போல்,போபர்ஸ் ஊழலைப் போல் நாட்டையே சீரழித்த ஒன்றைத் துப்பறிந்து புலனாய்ந்து அசைக்க முடியாத ஆதாரங்களுடன் ரிப்போர்ட்டர் வெளியே கொண்டு வந்திருக்கிறார் என்று ஆர்வத்துடன் படித்தோம்.வழக்கம் போல் வெற்றுத்தாளில் இட்டு நிரப்பப்பட்ட மை என்பதைத் தவிர அதில் ஒன்றும் இல்லை.
2) திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது உதவியாளராகப் பணியாற்றியதாகச் சொல்லப்படும் அசன் முகம்மது ஜின்னாவுக்கும் உறவு முறிந்து விட்டது (நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாருங்க!) என்று அதனை புலன் ஆஆஆஆஆய்ந்து விரிவாக சொல்லி நாட்டின் வளங்களான மரங்களை அழித்து அதில் செய்யப்பட்ட தாள்களில் 3 பக்கங்களை நம் காசில் வீணடித்து எழுதப்பட்ட செய்தி தான் அது.இதைத் தவிர ஒரு மண்ணும் அதில் இல்லை.
3)சரி இப்படிப்பட்ட மிகச் சிறப்பான,உலகம் திரும்பிப் பார்க்கும் வண்ணம் ஒரு ”புலனாய்வு’ செய்தியை எழுதிய ரிப்போர்ட்டர் நிருபருக்கு தனது பெயரைக்கூட எழுதத் துப்பில்லை.நமது நிருபர் என்று தொடை நடுங்கி செய்தி வெளிவந்துள்ளது.
4)இந்தச் செய்தியில் உள்ள விஷயங்கள் அனைத்தும் அனைவரும் அன்றாடம் செய்தித்தாள் படிக்கும் ஒரு சாதாரணன் கூட அறிந்த செய்தி,அல்லது உட்கார்ந்த இடத்தில் இருந்து எளிதில் எழுதக் கூடிய மிகச் சாதாரணமான செய்தி தான். இதைத் தவிர வேறு ஒன்றும் புலனாய்ந்து எழுத வில்லை.
5) இந்தச் செய்தியில் புதிதாகச் சொல்லப் பட்ட ஒரே பத்தி இதுதான்.
இந்தச் செய்தியைப் பார்த்தால் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் சம்பவம் நடந்து விட்டதாகவும்,அதன் பின் சம்பவத்தைத் தெரிந்த பின் மு.க.ஸ்டாலின் கோபப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
சரி இந்தச் செய்திக்கு ஆதாரம் என்று எதுவும் வெளியிட்டிருக்கின்றார்களா?எதுவும் இல்லை.ஒரு எப்.ஐ.ஆர்.அல்லது ஒரு C.S.R.எதுவும் இல்லை.இவ்வளவு ஏன் புகாரின் நகல் கூட இல்லை.புகார் அளித்தவரின் புகைப்படம்,சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் பெயர் அல்லது அவரது புகைப்படம்,அவரது கருத்து,பில்டர்ஸ் அலுவலகம் என எதுவும் இல்லை.
குடித்துவிட்டு பாரில் நிதானமின்றி இரண்டு ஊதாரி பத்திரிகை நிருபர்கள் பேசும் கிசுகிசுவின் தரத்திற்கு மேல் இதில் ஒன்றுமில்லை. ஆனாலும் அதி முக்கியத்துவத்துடன் வெளியான செய்திக்கு அளிக்கப் பட்டுள்ள தலைப்பு EXPOSED.அதற்கு நம் காசில் 3 பக்கங்கள் காலி.நாட்டின் சமூக வளமும் சூறை.வாழ்க நான்காவது தூண்.
இதை எழுதிய தொடை நடுங்கி நிருபரோ அல்லது குழும ஆசிரியரோ மிகவும் பயந்து கொண்டு தனது பெயரைக்கூட வெளியிடவில்லை.இந்த லட்சணத்தில் அபத்தமாக செய்தி வெளியாகி உள்ளது.
ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் குமுதம் ரிப்போர்ட்டரின் பதிப்பாளரின் ஆசைக்கிணங்க,வன்மத்துக்கு ஏற்ப இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.இதைத் தவிர இதில் ஒன்றும் இல்லை.
இது என்ன காரணத்துக்காக ரிப்போர்ட்டரில் வெளியானது என்பதை கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.
இவ்வாறு ”புலன்” ஆஆஆஆய்ந்து எழுதப்பட்ட செய்திக்கு 29-01-2012 அன்று கட்டம் கட்டி எழுதப்பட்ட மறுப்பு தொடை நடுங்கி வந்துள்ளது.அது இது தான்.
அப்புறம் EXPOSED?அது கிடக்குது.எந்த குமுதம் ரிப்போர்ட்டர் வாசகன் இதனை ஞாபகம் வைத்துக் கொண்டு சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கப் போகிறான்?
நம்முன் எழும் கேள்விகள் இது தான்.
1)இவர்கள் விளக்கம் சொல்வது ’உண்மை” என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும் போலீஸ் தரப்பில் சொன்ன செய்தியை அப்படியே வாந்தி எடுப்பது தான் ஒரு புலனாய்வு நிருபரின் வேலையா?அப்புறம் இவர் என்ன புலன் ஆஆஆஆய்ந்தார்?இவருக்கு என்ன வேலை?இதற்கு எதற்கு நிருபர் பணி?தெருவில் பேப்பர் பொறுக்கும் பையனுக்கு இருக்கும் சமூக அக்கறையில் கால்தூசி கூட இல்லையே!
2)நமது நிருபர் என்று செய்திக்கு அடியில் எழுதி விட்டு இப்பொழுது போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளோம் என்று மறுப்பு வந்துள்ளதே?அப்படியானால் நமது நிருபர் என்பவர் எப்பொழுதும் போலீஸ் துறையைச் சேர்ந்தவரா?அங்கு சம்பளம் வாங்குபவரா?
3)சரி ஒரு நிருபர் நிதானமில்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் ஊதாரித்தனமாக எழுதிக் கொடுத்து விட்டாலும் அதைச் சரிபார்க்கும் பொறுப்பு அண்ணாமலை செட்டியார் சொத்தில் தண்டமாக சம்பளம் வாங்கும் சீனியர் நிருபர்கள்,செய்தி ஆசிரியர்,குழும ஆசிரியர்,அச்சிட்டு வெளியிடும் இவர்களுக்கு இல்லையா?
குமுதம் ரிப்போர்ட்டரில் துணிவு தெளிவு நேர்மை என்று வெளியிடுகின்றார்களே அதற்கும் இவர்கள் வெளியிடும் செய்திக்கும் துளியும் தொடர்பில்லை என்பது இதிலும் அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.பொய்களையே துணிவுடன் தெளிவாக வெளியிடுபவர்கள் என்பது இதன் அர்த்தமா?
துணிவு இருந்தால் போலீஸ் தரப்பில் தரப்பட்ட செய்தி அதனால் வெளியிட்டோம் என்று பழியை அடுத்தவர் மீது சொல்லி விட்டுத் தப்பிக்கப் பார்ப்பார்களா?
தெளிவு இருந்தால் இவ்வாறு பின் விளைவுகள் கருதாது நினைத்ததையும்,தனக்குப் பிடிக்காதவர்கள் குறித்தும் அடிப்படை ஆதாரம்,முகாந்திரமற்ற செய்தி வெளியிடுமா ஆசிரியர் இலாகா?
நேர்மை இருந்தால் அடுத்தவர் சொத்தினை துளியும் மனசாட்சியின்றி ஆட்டையைப் போடுவார்களா?
இது தான் ரிப்போர்ட்டரின் மலிவான இதழியல் தர்மம்.
சரி இதழின் முதல் பத்தியில் சொல்லப்பட்டதுக்கு வருவோம்.இவ்வாறு வன்மத்துடன் செய்தி வெளியிடுவதற்கு என்ன காரணம் என்கின்றீர்களா?
மிகச் சாதாரணமான ஒன்று.
திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது தன் மீது உள்ள வழக்குகளை நீர்த்துப் போகச்செய்யவும் தன்னை உள்ளே தள்ளாமல் இருக்கவும் வரதாபாய் திமுக அதிகார வட்டத்தில் கனிமொழி,கஸ்பர்,ஜின்னா மூலமாக ஸ்டாலின் என பலரையும் நம்பியிருந்தார்.(ஆனால் மூலவரை மீறி இவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது வேறு விஷயம்.)
ஸ்டாலினின் கடைக்கண் பார்வை பெறும் பொருட்டு இவர் ஜின்னாவை காக்கா பிடித்துக் கொண்டார்.ஜின்னாவுக்கு ஆதரவாய் இவர்களின் இதழில் அப்பொழுது நிறையச் செய்திகள் வந்துள்ளன.
ஜின்னா இவருக்கு எந்த அளவுக்கு நெருக்கமாய் இருந்துள்ளார் என்பதற்கு இரண்டு செய்தியைப் பார்ப்போம்..
கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வரதராஜனுக்கு நெருக்கடி முற்றியது.தன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயந்து கொண்டிருந்தார்.அப்பொழுது தனக்கு ஆதரவாய் மு.க.ஸ்டாலினை வளைக்கும் திட்டம் வரதபாய்க்கு இருந்தது.தான் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் என்று அனைவருக்கும் பறைசாற்றவும் அதற்காக சோலை எழுதிய மூத்த பத்திரிக்கையாளர் பார்வையில் மு.க.ஸ்டாலின் என்னும் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியைப் பயன்படுத்த திட்டமிட்டார்.ஆனால் இவரைப் பேச வைக்கவும் அழைப்பிதழில் இவரது பெயரைப் போடவும் சோலை முதலில் மறுத்து விட்டார்.அதன்பின் ஜின்னா மூலம் பரிந்துரைத்து இவரது ஆசை நிறைவேறியது.
அடுத்ததாக மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா அவர்களின் தொடரை குமுதம் ஸ்நேகிதியில் வலிய வெளியிட்டு அதன்மூலம் ஸ்டாலின் கருணைப் பார்வை தன் மீது படாதா என்றும் ஏங்கினார்.இந்தத் தொடரை வாங்கவும் ஜின்னாவின் தயவினை நாடினார்.
தனக்கு காரியம் நடப்பதற்காக இவ்வளவு நெருக்கமாக ஜின்னாவுடன் இருந்தார்.தனக்கு காரியம் நடப்பதற்காக மன்னார்குடி நடராஜன்,ஸ்டாலின்,கஸ்பர்,கார்த்தி என யாரிடமும் கூழைக்கும்பிடும் பணிவும் காட்டுபவர் தான் வரதாபாய்.
காரியம் முடியும் வரைக்கும் பணிவைக்காட்டுவது அதன்பின் அவர்களை வன்மத்துடன் அணுகுவது வரதாபாயின் குணம் என்பதை நாம் பல முறை கண்டுள்ளோம்.
அதுதான் இப்பொழுதும் நடந்தது.திமுக ஆட்சி மாறிய பின் இனி ஜின்னா எதற்கு என வரதாபாய் நினைத்தார்.
மேலும் இப்பொழுது தான் பக்கா அதிமுக அனுதாபி,பரம்பரை திமுக எதிர்ப்பாளன் என்று காட்டிக்கொண்டால் தான் வண்டியை ஓட்ட முடியும் என்று அவரே நினைப்பதால் வலிய ஸ்டாலினையும் ஜின்னாவையும் விமர்சித்து செய்தி வெளியிடத் திட்டமிட்டார்.அதற்காக எந்த முகாந்திரமும் இல்லை என்றாலும் பரவாயில்லை ஏதாவது எழுதி வெளியிடுவோம்.இதன் மூலம் ஆளும் தரப்பு சந்தோஷப்படும்,அதே நேரத்தில் மு.க.ஸ்டாலினை கடுப்பேற்றிய மாதிரியும் ஆச்சு என்று நினைத்தார்.
ஆனால் ஆளும் தரப்புக்கு இவர் வண்டவாளம் நன்கு தெரியும்.அதே நேரத்தில் இது எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தி விட்டது.
மு.க.ஸ்டாலின், ஜின்னா தரப்பில் இந்தக் கட்டுரையைப் பார்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உங்க வண்டவாளங்கள் நிறைய இருக்கு.அதனை எடுத்து விடவா?என்றும் மிரட்டவே என்னடா இது வம்பாப் போச்சு,இந்தப் பொழப்புக்கு என்று நொந்தபடியே இப்பொழுது வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் மு.க.ஸ்டாலினைச் சந்தோஷப்படுத்தும் விதத்தில் திமுக வின் அடுத்த தலைவராக முழுத் தகுதியும் வாய்ந்தவர் என 5-02-2012 அன்று மு.க.ஸ்டாலினை புகழ்ந்து உட்கார்ந்த இடத்தில் இருந்து ஒரு கருத்துக்கணிப்பினையும் எழுதி வெளியிட்டுள்ளனர்.
இது தான் பொய்யும் புரட்டும் உள்ளடங்கிய EXPOSED "புலனாய்வு"க் கட்டுரை வந்த கதையும் சுவற்றில் அடித்த பந்தாக உடனே மறுப்பு வந்த கதையும்.
வழியில் கிடக்கிற சாணியை வாயில் அள்ளிப் போட்டுக்கிட்டு அய்யய்யே... கசக்குதுன்னு சொல்லி வாயைக் கழுவுன கதையாப் போச்சு...!
No comments:
Post a Comment