ஊடகங்கள் என்பவை மக்களுக்காய் இருக்க வேண்டும்,மக்களின் பிரச்சனைகளுக்காய் மக்களோடு மக்களாய் இயங்க வேண்டும்.ஊடகங்களின் செயல்பாட்டில் சமூக அக்கறை இருக்க வேண்டும்.ஆனால் நம் நாட்டில் இயங்கும் ஊடகங்கள் எவற்றுக்கும் இத்தகைய அறம் எப்பொழுதும் இருந்ததில்லை.லாபவெறி மட்டுமே இருந்திருக்கிறது. லாபவெறிக்கு முன் அவை மொழி இனம்,மக்கள் நலம்,சமூக அக்கறை எதைப்பற்றியும் எப்பொழுதும் கவலைப் பட்டதில்லை.
அரசின் விளம்பரங்களுக்காய் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் செய்திகளையும் இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்,இப்பொழுது விளம்பர வருவாய்க்காக எதற்கும் துணிந்து விட்டன.அது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.
அரசின் விளம்பரங்களுக்காய் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களையும் செய்திகளையும் இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள்,இப்பொழுது விளம்பர வருவாய்க்காக எதற்கும் துணிந்து விட்டன.அது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.
ஆம்.முல்லைப்பெரியாறு பிரச்சனை நாடு முழுவதும் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்க,தமிழர்கள் இடுக்கியிலும் குமுளியிலும் திருவனந்தபுரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்க நம் பத்திரிகைகள் அதனைச் செய்தியாக்கும் பொழுது,நாம் நம் பத்திரிக்கைகள் நம் மக்கள் மீதான ”அக்கறை”யில் செய்தி வெளியிடுகின்றன என்று ”நம்பினோம்”.
ஆனால் அவர்களோ நம் ஓலத்தையும் துயரத்தையும் வெளியிட்டுக் காசு பார்த்த அதே வேளையில் மலையாளியின் காசில் அவர்களின் திமிரையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றன.ஆம்.நம் குரலை அவர்கள் ஒலித்த பொழுது நாம் நம் பத்திரிக்கைகள் நம்முடன் இருக்கின்றன.நமக்காய் குரல் கொடுக்கின்றன என்று நம்பினோம்.ஆனால் மலையாளி காசு கொடுத்தவுடன் அவர்களின் குரலையும் விளம்பரங்களாக்கி வெளியிட்டு தங்களை நிருபித்துள்ளன.
முல்லைபெரியாறு பிரச்சனையில் தமிழக அரசு தனது நிலையை விளக்கியும்,அணையில் தனது நிலைப்பாடு சரி என்பதை விளக்கியும் அதனை விளம்பரமாகத் தயார் செய்து அதனை நம் நாளிதழ்களுக்கு சில லட்சங்களைக் கட்டணமாக அளித்து வெளியிட்டது.அதுதான் இது.
இதனை அனைத்து தமிழ் நாளிதழ்களும் வெளியிட்டன.இதனையே தமிழக அரசு மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து கேரளப் பத்திரிகைகளுக்கு அளித்தது. கேரளப் பத்திரிக்கைகளுக்கு கட்டணமாய் லட்சக்கணக்கில் கொடுக்கத் தயாராய் இருந்தது.ஆனால் தன் மக்கள் நலனில் அக்கறை உள்ள கேரளப் பத்திரிக்கைகள் மானத்துடனும் மரியாதையுடனும் சொரணையுடனும் விளம்பரத்தை வெளியிட மறுத்து விட்டன.
லாபத்திற்காய் பத்திரிகைகள் நடத்தினாலும் தன் மக்கள் நலனில் இருக்கும் துளியூண்டு அக்கறையும் மலையாள பத்திரிகைகளின் மறுப்பிற்குக் காரணம் ஆகும்.தங்கள் அரசின் செயல்பாடு நீதிக்கும் நியாயத்துக்கும் எதிராய் இருந்தாலும் சொரணையுடனும் மலையாளி என்ற வெறிடனும் நடந்து கொண்டு விளம்பரத்தை வெளியிட மறுத்த கீழ்க்கண்ட மலையாள நாளிதழ்களுக்கு நம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மலையாள மனோரமா
மாத்ருபூமி
மத்யமம்
கேரள கவ்முடி
தீபிகா
தேசாபிமானி-சிபிஎம் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை
(கேரள சிபிஎம் காரர்கள் இனநலன் உள்ளவர்கள்.நம்மூர் சி.பி.எம்.காரர்கள் மாதிரி அல்ல)
தமிழக அரசின் விளம்பரத்தைப் போலவே கேரள அரசும் தனது நிலையை விளக்கி ஒரு விளம்பரத்தை அங்குள்ள நாளிதழ்களில் வெளியிட்டது.அந்த விளம்பரத்தை தமிழில் மொழிபெயர்த்து இங்குள்ள நாளிதழ்களுக்கு கொடுத்தது.அந்த விளம்பரம் இதுதான்.
மலையாள நாளிதழ்கள் தமிழக அரசின் விளம்பரத்தை வெளியிட மறுத்ததைப் போல,இங்குள்ள நாளிதழ்கள் கேரள அரசின் விளம்பரத்தை வெளியிட மறுப்பார்கள் என்று தயக்கத்துடன் கேரள அரசின் அதிகாரிகள் தமிழ் பத்திரிகைகளை அணுகி உள்ளார்கள்.
ஆனால் கீழ்க்கண்ட தமிழ் நாளிதழ்கள் எவ்விதத் தயக்கமோ,இன உணர்வோ இன்றிக் காசை வாங்கிக் கல்லாவை நிரப்பி விட்டு கடந்த 19 ஆம் தேதி விளம்பரத்தை வெளியிட்டு விட்டன.தினமலர் வெளியிடவில்லை.
(சி.பி.எம்.கட்சியின் தமிழ்நாட்டு அதிகாரபூர்வ பத்திரிக்கை)
இதன் மூலம் கேரள பத்திரிகைகளுக்கு இருக்கும் இன உணர்வும் மக்கள் மீதான நலனும் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு இல்லை.லாபவெறி தான் இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப் பட்டிருக்கிறது.
இது தான் நம் தமிழ்ப் பத்திரிகைகளின் லட்சணம்.
மீண்டும் ஒரு முறை தலைப்பைப் படியுங்கள்.
9 comments:
மக்களுக்கு சொரணை இல்லை பத்திரிகைகளுக்கு தர்மமில்லை
அருள்செழியன்
இவைகள் எல்லாம் கேடு கெட்ட தினசரிகள். அடுத்தவனுக்கு சொம்பு தூக்கிகள்.
தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை வேண்டும்.... தினசரிகளும் மாற வேண்டும்...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...www.rishvan.com
இவனுகளுக்கு நியூஸ் வேண்டும் பணம் வேண்டும் ... மக்கள் செத்தா என்ன ?
padhivu nandru indhdha padhivai anaiththu valaippadhivugalukkum anuppumaaru kettukolgireyn
surendran
தமிழ்நாட்டு பத்திரிகை மட்டும் அல்ல!....... நாம் எல்லோரோமே இந்திய மாயை யில் சிக்கி கொண்டுலூம்........ அதை பற்றிய புரிதல்ளும் அதை எவ்வாறு கையாள்வது என்பதை கற்று கொள்ள வேண்டும் .
வணக்கம்.வணக்கம்.அருள் செழியன்.தங்களின் செய்தி பார்த்தோம்.நன்றி.உங்களின் தொலைபேசி எண் எங்களிடம் உள்ளது.தேவைப்படின் நாங்களே உங்களை அழைக்கிறோம்.
ஊடகங்களின் செயல்பாடு குறித்த தங்களின் தகவல்கள் பதிவுகளை நமது கலகக்குரல் இணையத்திற்கு அனுப்புங்கள்.
உங்களது பங்களிப்பு ஊடகத் துறையை சீர்திருத்த உதவும்.
தமிழ்நாட்டு பத்திரிகை தர்மம்........DEAD
Did you confirm the issue, Dinamalar didn't publishired or kerala government didnot given advertisement?
Post a Comment