Friday 7 June 2013

இந்தியா டுடே ஆசிரியர் ரேஸில் 3 பேர்...!



'இந்தியா டுடே'வின் தமிழ்ப் பதிப்புக்கு ஆனந்த் நடராஜன் என்பவர்தான், பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து வந்தார். அண்மையில் அவர் வேலையில் இருந்து விலகியதால், அந்த இடத்திற்கு ஆள் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பே நடராஜன் விலகல் கடிதம் அளித்ததாகவும் அடுத்தவர் வரும்வரை பணியில் நீடிக்குமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்.

இதையொட்டி, தமிழின் முக்கிய செய்தி இதழுக்கு ஆசிரியர் பணிக்காக, பல தரப்பிலும் ஆள்தேடல் நடந்திருக்கிறது. ஆனால், தமிழ் ஊடகத்துறையின் சோகமா(!), ஊடக முதலாளிகள் செய்யும் அக்கிரமமா தெரியவில்லை, இந்த செய்தி இதழுக்கு ஏற்ற ஆசிரியர் கிடைக்கவில்லையாம். ஆனந்த் நடராஜன் விலகியபின்பு யாரையாவது அந்த இடத்துக்கு வேறு வழியின்றிஅமர்த்தித்தானே ஆகவேண்டும். 

இதற்கிடையில், புதிய தலைமுறையில் பிரேம் சங்கருடன் இணைந்து வழங்கிய கருப்பு கட்சியைச் சேர்ந்த வெள்ளை குணாவுக்கு, அங்கு நிலவரம் கலவரமாக மாறிவிட்டது.

இந்தக் கடை போனால் சந்தைக் கடை.

காட்சி ஊடகம் போனால் என்ன, இதோ இந்தியா டுடே வாய்ப்பு... நல்லதுதான், இதுபோன்ற (அது என்னவோ சொல்றாகளே, அப்கண்ட்ரி, வடக்கத்தியான் கம்பெனி) இடங்களில் உங்களின் அரசியல் கூர்மையைக் காட்டினால், இந்த தமிழ்ச் சமூகம் பயன்பெறட்டுமே! குணசேகரனுக்கும் முன்னதாக, திராவிட‌ அன்பர்கள் இப்படி நினைக்கலாம்.

குணா மீது சில‌ விமர்சனங்கள் இருந்தாலும் , இவர் இந்தியா டுடேவுக்குப் போய்விட்டால், புதிய தலைமுறைக்கு ஒரு இழப்புதான்!

குணா மட்டும் இல்லை,இந்தியாடுடே ஆசிரியர் பணிக்கு, இன்னும் இருவரும் களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஒருவர், டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளிதழில் கடைசியாக வேலைபார்த்த கவிதா முரளிதரன். அதன் பிறகு, தந்தி டிவி, புதிய தலைமுறை, விஜய் டிவி ஆகியவற்றில் அடிக்கடி தோன்றி பல்வேறு பிரச்னைகளுக்கும் கருத்துத் தெரிவித்து வருவதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

இவரைத் தவிர, தமிழ் நாளிதழ் ஒன்றில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவரும் முயற்சி செய்கிறார்.

சபாஷ், சரியான போட்டி! 

சகலரும் சகல திறமைகளையும் கொண்டவர்கள்தான்! 

யாருக்கு வெற்றி கிடைக்கும் பார்ப்போம்.

ஆனால் யார் வந்தாலும் வியாபாரத்துக்காக அந்த நிறுவனம் 2 மாதத்திற்கு ஒருமுறை வெளியிடும் வக்கிர சர்வே மட்டும் நிற்காது என்பது மட்டும் நிச்சயம்...! 

7 comments:

Anonymous said...

ஆனால் யார் வந்தாலும் வியாபாரத்துக்காக அந்த நிறுவனம் 2 மாதத்திற்கு ஒருமுறை வெளியிடும் வக்கிர சர்வே மட்டும் நிற்காது என்பது மட்டும் நிச்சயம்...! // புரட்சியாளர் கவின்மலர் அங்கு பணியில் சேர்ந்த பின்னும் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாத அந்த நிறுவனம் மற்ற‌வர்களுக்குப் பயப்படுமா என்ன..? சான்ஸே இல்ல பாஸூ. hi hi on இந்தியா டுடே ஆசிரியர்

Anonymous said...

புரட்சியாளர் ந்னு கவின்மலர் மேடத்தைச் சொல்றீங்க...ஆனா அவங்களுக்கு ஒரு சின்ன விஷயம் கூடத் தெரியலைங்க...உலக பத்திரிகையாளர் சுதந்திர தினத்தை உலக பத்திரிகையாளர் தினம் அப்படின்னு எழுதுறாங்க...
அப்புறம் அதிஷா தான் தவறைத் திருத்தினார்.ஆனாலும் அவங்களுக்கு உண்மையை ஒப்புக்கொண்டு தவறைத் திருத்துற பக்குவம் வரலை...அப்புறம் எப்படி இவங்க எப்படி புரட்சியாளர்.நீங்களே சொல்லுங்க....

Anonymous said...

யோவ் அது நக்கலுக்கு போட்ட கமெண்டுய்யா....அந்தம்மாவை புரட்சியாளர்ன்னு யாருய்யா சொன்னா...! சொல்ல வந்ததை புரிஞ்சுக்கோங்கய்யா...

Anonymous said...

பத்திரிகையில் நீண்ட காலம் வேலை பார்த்த அந்த நபர் பெயரையும் போட்டிருக்கலாமே.......

Anonymous said...

இந்து பத்திரிகை தமிழில் தொடங்கவுள்ள தினசரிக்கு ஆரம்பமே சரியில்லையே.... ஊழல் மன்னன் விகடன் அசோகன்தான் எடிட்டராமே... பின் கதை என்ன கலகக்குரல்? அசோகனின் வண்டவாளத்தைக் கொஞ்சம் எடுத்துவிடு கலகக்குரல்.

Anonymous said...

இந்து பத்திரிகை தமிழில் தொடங்கவுள்ள தினசரிக்கு ஆரம்பமே சரியில்லையே.... ஊழல் மன்னன் விகடன் அசோகன்தான் எடிட்டராமே... பின் கதை என்ன கலகக்குரல்? அசோகனின் வண்டவாளத்தைக் கொஞ்சம் எடுத்துவிடு கலகக்குரல்.

Anonymous said...

india today editor ananda natarajan was not resigned. he is sent out. telugu editor too sent out.