Sunday, 14 April 2013

"விகடன் தாத்தாவுக்கு எதுக்கு இந்த மானங் கெட்ட பொழப்பு "..? - நடிகை அஞ்சலி
விகடன் குழுமம் தனது இணையப் பக்கத்தில் அஞ்சலியின் மறுபக்கம் என்ற ஒரு கேவலமான வீடியோவை வெளியிட்டிருக்கிறது.


திரைப்பட நடிகை அஞ்சலி தன் மீது கூறிய கடுமையான குற்ற‌ச்சாட்டுக்களுக்கு மறுப்புச்சொல்லும் விதமாக  இயக்குனர் களஞ்சியம் என்பவரின் நேர்காணல் அது.

ஆணாதிக்க வெறியோடும் திரைப்பட நடிகை தானே நம்மை என்ன செய்து விடுவாள் என்ற கொழுப்போடும் ஆணவத்தோடும் திமிருடன் பேசியிருக்கிறார் களஞ்சியம்.


எனக்குத் தெரிஞ்சு அஞ்சலி பல தடவை ஓடிப் போயிருக்கா..

அவங்கம்மாவை வீட்ல பூட்டி வச்சுட்டு பரத்ஷா கூட ஓடியிருக்கா..

அவள் கண்டவர்களை எல்லாம் காதலித்து அவர்களோடு வாழணும் என்று கற்பனை செய்து கொண்டு அவர்களோடு ஓடணும் என்று நினைத்தது தான் அஞ்சலி என்ற மாபெரும் நடிகையின் குறைபாடு.

வாய்க்கு வந்ததையெல்லாம் வாந்தி எடுத்துள்ள களஞ்சியத்தின் நேர்காணலை அப்படியே தின்று மறுபடியும் பொதுவெளியில் வாந்தி எடுத்திருக்கிற‌து விகடன்.இடை இடையே அஞ்சலியின் கவர்ச்சி நடனத்தை இணைத்து அஞ்சலி பற்றிய களஞ்சியத்தின் கொழுப்பான பேச்சுக்கு வலு சேர்த்துள்ள‌து.

நடிகை என்பதால் கிளுகிளுப்புக்கு கிளுகிளுப்பும் ஆச்சு,நடுநிலைமைக்கு நட்ட நடுநிலைமையும் ஆச்சு,மொத்தத்தில் சதை வியாபாரம் ஆச்சு என்று கல்லாக் கட்டியுள்ள‌து.(களஞ்சியம் நீங்க  தலை மயிரை  வெட்டுறீங்களோ இல்லையோ,
முதலில்அறையில் ருக்கும் பிரபாகரனின் படத்தை எடுத்துடுங்க.பெண்களை உயர்வாய் மதித்த,கண்ணியமாய் நடத்திய அவரை, உங்களை விட வேறு யாரும் இழிவு செய்து விட முடியாது.)


குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் களஞ்சியத்தின் தனிப்பட்ட வாழ்க்கை,அதில் உள்ள பிரச்சனைகள்,அவர் மீதான பழைய மோசடிக் குற்றச்சாட்டுகளின் நிலை,களஞ்சியம் எடுத்த எந்தப் படமும் ஓடாத நிலையிலும் ராஜ வாழ்க்கை வாழும் அவருக்குப் பணம் எங்கிருந்து வந்தது..?அதில் அஞ்சலியின் உழைப்பைச் சுரண்டிய பணம் இருக்கிற‌தா?அஞ்சலியை மிரட்டினாரா? என்று துப்புத் துலக்க வக்கற்ற விகடன்,

ஊழல் பேர்வழிகளுக்கும்,கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும் தொடை நடுங்கி ஒரு தலைவர்,ஒரு மந்திரி,ஒரு எம்.எல்.ஏ.ஒரு வட்டச் செயலாளர் எனவார்த்தைகளில் ஒளிந்து கிசுகிசு எழுதும் பயந்தாங்கொள்ளி விகடன்,

பெண் என்பதாலும் நடிகை என்பதாலும் கேட்பதற்கு நாதியில்லை என்று முடிவு கட்டி அஞ்சலி குறித்த இழிவான தரக்குறைவான,கண்ணியமற்ற‌ பேச்சைப் பகிரங்கமாய் பொதுவெளியில் அனுமதிக்கிற‌து.
சென்ற வாரம் ஹோம்லி மல்லி என்ற தலைப்பில் அஞ்சலியின் பேட்டியை ஆனந்த விகடனில் வெளியிட்டு இதழை விற்றுத் தள்ளி விட்டு இந்த வாரம் எல்லோருடனும் ஓடிப் போனவள் அஞ்சலி என்று துளியும் கூச்ச நாச்சம் இல்லாமல் அருவருக்கத் தக்க‌ வகையில் வெளியிடுகிறது.

ஏற்கனவே டைம்பாஸில் பார்க்கும் சதை வியாபாரத்தில் தான் நல்ல வருமானம் தான் வருகிறதே..?

அது போதாதா...?

எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு விகடன் தாத்தாவுக்கு.....?


தொடர்புடைய இணைப்பு

http://tamil.oneindia.in/movies/news/2013/04/anjali-meets-the-press-173411.html


3 comments:

AAR said...

Who is this person to comment about Anjali? Anjali is a major - she is free to do whatever she wants.
This person is a waste fellow. He is a scavenger living on Anjali's earnings.

Useless Vikatan - idiotically asking whats Anjali's response? Why should she give response to this fellow? Tomorrow anyone can make allegations against Vikatan's group female family member. Will they respond to it?

There lot of useless people in tamil movie industry who are using Prabhakaran for their own benefit. Just like Anna, Karunanidhi and Maran used tamil language cause to promote themselves, nowadays people use tamil ellam cause to promote themselves.

Vikatan magazines are silent on the sexual harassment case against Suntv News editor. So much about right news. Cheap Vikatan.

Anonymous said...

Hi, the whole thing is going nicely here and ofcourse every one is sharing information,
that's really excellent, keep up writing.

My web page: custom squeeze page design

Anonymous said...

இதையும் கவனிங்க http://thinathee.blogspot.in/2013/04/1.html