சன் டிவி நியூஸ் எடிட்டர் ராஜா குறித்து 2012 மார்ச் 18 ஆம் தேதியிட்ட பதிவில் நாம், 20 வருடத்திற்கு முந்தைய ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டி இருந்தோம்.
20 வருடங்களுக்கு முன் தினகரன் ஆசிரியர் கேசவன் ராஜாவைச் சரியாக கணித்து திட்டியது தான் அது.
அந்தப் பதிவில் இருந்து சில பகுதிகள்.
இப்பொழுது சூரியத் தொலைக்காட்சியில் கோலோச்சும் வெறுங்குடம் ராசா அப்பொழுது முரசொலியில் பிழை திருத்துநராக வேலையில் இருந்தார்.இவரது ஆரம்ப கட்டத்திற்கு அடுத்த கட்டம் தான் இந்த வேலை.அடுத்த கட்டம் இப்படியென்றால் முதல் கட்டத்தில் என்ன வேலை செய்தார் என்று அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்கப்பிடாது.
அப்பொழுது முரசொலிமாறன் தமிழன் என்றொரு வாரப் பத்திரிகையை ஆரம்பிக்க முடிவு செய்து அதற்கான வேலையை முழுமூச்சாகச் செய்ய ஒரு குழுவை இறக்கி விட்டிருந்தார்.முரசொலி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் இந்தப் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருந்தன.அதற்குப் பொறுப்பாசிரியர் கேசவன் என்பவர்.இவர் யாரென்றால் பழைய தினகரனின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.கொஞ்சம் நல்ல மனுஷரும் கூட.
ஆனால் இவருக்கு கொஞ்சூண்டு வெளியே தெரியாத பந்தா குணமும் உண்டு.தமிழன் இதழ் அலுவலகத்தில் இவருக்குத் தனி அறை ஒதுக்கப்பட்டுக் கொஞ்சம் செல்வாக்குடன் இருந்தார்.பத்திரிகை விரைவில் வெளிவர இருந்த சமயம் அது.
கேசவன் தன்னுடன் பணியாற்றிய நிறையப்பேரைத் தொலைபேசியில் அழைத்து முரசொலி அலுவலகத்திற்கு வாங்க!.பாத்து ரொம்ப நாளாச்சு.பேசுவோம் என்று அழைப்பு அனுப்பினார்.நிறையப்பேர் அவர் அழைப்பிற்கு இணங்க சந்திக்க வந்தாலும் சிலர் மட்டும் என்னத்த...இதுக்கு இவர் தினகரனில் வேலை பார்த்திருக்கலாம்.இந்த வளாகத்தில் இருந்து வர்ற தமிழன் எப்படி உருப்பட முடியும் என்று புலம்பியது தனிக்கதை.(கடைசி வரை தமிழன் உருப்படவில்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை)
அந்த சமயத்தில் ஒருநாள் வந்தவர் தான் சண்முகசுந்தரம் என்பவர்.இவர் தினகரனில் வேலை செய்து கொண்டிருந்தவர்.அவருடன் கேசவன் நாட்டு நடப்பு,தினகரன் நடப்பு என்று பேசிக் கொண்டிருந்தார்.அப்பொழுது திடீரென்று தூரத்தில் இருந்த ஒருவரை நோக்கிக் கடுமையாகச் சத்தம் போட ஆரம்பித்தார்.
ஏய்..இங்க வா..நான் உன்னைய என்ன சொன்னேன்?ஆனா நீ அங்க என்ன பண்ணிக்கிட்ருக்க.. இந்த மேட்டர் முழுவதும் தப்புத்தப்பா இருக்கு.அத ஒழுங்காப் பாருன்னா,நீ என்னடான்னா வண்ணத்திரையில நடுப்பக்கத்தை விரிச்சு நடிகையைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்ருக்க.இதுக்கா உனக்கு இங்க சம்பளம் தர்றாங்க...இது சரிப்படாது.இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்ப கொட்ட முடியாது பாத்துக்க..போய் ஒழுங்கா வேலையப் பாரு.இல்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்று எச்சரித்து அனுப்பினார்.
வண்ணத்திரையின் நடுப்பக்கம் பார்த்த மவராசனும் தலையைக் குனிந்து கொண்டு இடத்தைக் காலி செய்தார்.
--இது தான் ஒரு வருடத்திற்கு முந்தைய நமது 2012 மார்ச் 18 ஆம் தேதியிட்ட நமது பதிவு.
”இப்படி இருந்தா இந்த பீல்டுல குப்பை கொட்ட முடியாது.வீட்டுக்கு அனுப்பிடுவாங்க ” என்று அன்று எச்சரிக்கப் பட்ட மவராஜா இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆம்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா,தன் கீழ் பணியாற்றிய பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கு முன் ராஜாவின் லீலைகள் அனைவருக்கும் தெரிந்தாலும் முதன்முறையாய் ஒரு பெண் துணிச்சலாக புகார் அளித்து அவரைக் கைது செய்ய வைத்துள்ளார்.
துணிச்சல் மிக்க அகிலாவுக்குப் பாராட்டுக்கள்.
அன்று வேலை கற்றுக் கொள்ள வந்த இடத்தில் தினகரன் ஆசிரியர் கேசவன் சொன்னதை ஒழுங்காக கடைப்பிடித்திருந்தால் ராஜா இன்று உருப்பட்டிருக்கலாம்.
வீட்டுக்கு மட்டுமல்ல.ஜெயிலுக்கும் போக வேண்டியந்திருக்காது.
தொடர்புடைய இணைப்புக்கள்.
இச்செய்தியை மேற்கண்ட இதழ்களைத் தவிர பிற அனைத்து ஊடகங்களும் சொல்லி வைத்தாற் போல் கூட்டுக் களவாணித்தனமாய் பதிவு செய்யவில்லை.
வழக்கமாய் சன் நிறுவனத்திற்கு எதிரான செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் தினமல்ர் இந்த முறை அமைதி காத்துள்ளது.
மேற்கண்ட இதழ்கள் இதனைப் பதிவு செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது.தமிழக அரசியல் உரிமையாளர் சிறைச்சாலைக்குச் சென்ற பொழுது சன் நியூஸ் தொலைக்காட்சி பதிவு செய்தது.குமுதம் நிறுவனத்தை அபகரித்த எபிசோடில் வரதராஜனுக்கு எதிராய் சன் நியூஸ் செய்தி வெளியிட்டது.
அது தான் இவர்கள் செய்தி வெளியிட்டதற்கு காரணம்.
3 comments:
செய்தி இல்லாததை செய்தியாக்கிவிடுவதாக மிரட்டி பலரையும் ப்ளாக் மெயில் செய்து பணம் பறிப்பதையே தொழிலாக வைத்திருந்த ராஜா இன்று செய்தியாகிவிட்டார். பெண் செய்தி வாசிப்பவர்களிடம் அப்பட்டமான அத்துமீறல், முதுபெரும் துணை ஆசிரியர்களிடம், 'நீயெல்லாம் செத்து தொலையாமல் எதுக்கு இங்கே வந்து என் உயிரை எடுக்கிற..' என்று கெட்ட வார்த்தை அர்ச்சனை, கப்பம் கட்டும் செய்தியாளர்களுக்கு மட்டும் ப்ரோமோசன் கொடுத்தல் என்கிற பொறுக்கி சாம்ராஜ்யத்தையே நடத்தி வந்த ராஜாவுக்கு லாடம் காட்டத் துணிந்த அந்த சகோதரிக்கு வாழ்த்துகள். ஊடகத் துறை கான்சர் என்று அங்கு பணியாற்றும் ஊழியர்களால் வர்ணிக்கப்படும் ராஜாவை மீண்டும் அரியணையில் அமர்த்த முயற்சிக்கும் சன் டி.வி தலைவரை எந்த வரிசையில் சேர்ப்பது?
ராஜராஜன்
இவனை வெளியே விடக் கூடாது...
R.S.Mani.
பதிவின் வண்ணத்தினை மாற்றவும்..படிக்க முடிவதில்லை..
Post a Comment