Saturday 5 January 2013

டைம்பாஸில் அருவருப்பு வியாபாரம்...! விகடனில் அறிவுரை வியாபாரம்.....!!

டெல்லியில்  மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டது குறித்து கடந்த வாரம் ஞாநி குமுதம் வார இதழில்ஒரு பதிவு எழுதியிருக்கும் நிலையில் 

http://www.gnani.net/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/

இந்த வாரம் ஆனந்த விகடனில் அது குறித்த பதிவு வெளிவந்துள்ளது.










இந்த செய்திப் பதிவை எழுதியிருப்பவர் தலைமை நிருபர் கவின்மலர். 

இந்த கட்டுரை குறித்து விமர்சிப்பது இந்தப் பதிவின் நோக்கம் இல்லை என்பதால் சுருக்கமாக ஒரு சில வரிகளில் பார்ப்போம்.

தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்ல வேண்டும் என்ற 'அதீத ஆர்வத்தில்'' கட்டுரை சில இடங்களில் இலக்கற்றுப் பயணிக்கிறது.அது தவிர்த்து கட்டுரையில் உபதேசங்களும்தாராளமாய் கிடைக்கின்றன.

ஆண்-பெண் உறவு குறித்தும்,பெண்ணைப் போகப் பொருளாய்ப் பார்ப்பது  குறித்தும் கவலை கொள்கிற‌து.

மேலும்  பத்திரிகையாளனுக்கானஒரு எளிய வசீகர நடை இந்தக் கட்டுரையில் மிஸ்ஸிங்.என்.ஜி.ஓ.க்களின்துண்டுப்பிரசுரவெளியீடு போலகட்டுரை கொஞ்சம் மொக்கைத்தனமாய் இருக்கிறது.

ஆனாலும்ஆ.விகடன் போன்ற மிகப்பெரிய வணிக இதழில் இக்கட்டுரை வெளிவந்துள்ளதன் மூலம் அதிகப் பரப்பு வாசகர்களை சென்றடைவதனால்பாராட்டலாம் தான்.

(இந்த வாரம் விகடன் குழுமத்தில் இருந்துவிடைபெறவிருக்கும் தலைமை நிருபர் கவின்மலர் இந்தியா டுடே இதழில் அடுத்த வாரம் பணியில் சேருகிறார் என்றும்,அதே சமயம் புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும் ஒரு சீட் பிடித்து வைத்திருக்கிறார்,இரண்டில் எதிலாவது ஒன்றில் சேருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வாழ்த்துக்கள்.

இனி நம் பதிவுக்கு வருவோம்.

இதன் கடைசிப் பத்தியை மட்டும் கவனியுங்கள்.



இனி இதைச் சொல்வதற்கு வாசன் பப்ளிகேஷன்ஸ் (பி)லிமிடெட் நிறுவனத்திற்கு யோக்கியதை இருக்கிறதா..?




தனது நிறுவனத்தில் இருந்து வெளியாகும் டைம்பாஸ் என்னும் வார இதழில்  வக்கிரம்,ஆபாசம்,போன்றவற்றைப் பக்கத்திற்கு பக்கம் கடை விரித்து பெண்களின் உடலை போகப்பொருளாக எண்ணி அதனை எழுத்தாகவும் புகைப்படங்களாகவும் மலிவாக வெளியிட்டு அதைக் காசாக்குவது ஒரு புறம்.

தனது நிறுவனத்தில் இருந்து வெளியாகும்ஆனந்த விகடன் இதழிலோ மேற்கண்டவற்றிற்கு எதிராக  போர்க்குரல் எழுப்பி  காசாக்குவது மறுபுறம்.

டைம்பாஸ் ஒவ்வொரு இதழும் தரங்கெட்டவையாகவும் விமர்சிக்கக் கூட அருகதைக்கு அற்ற‌வையாகவும் இருக்கிறது.
டைம்பாஸ் இதழில் விமர்சிக்க மலைபோல் விஷயங்கள் கொட்டிக் கிடந்தாலும்,தற்பொழுதைய இதழில் வெளிவந்த ஒரு செய்தி போதும்.

அதன் தரத்தையும் அதனை வெளியிடும் நிறுவனத்தின் தரத்தையும் சமுகப் பொறுப்பையும்பறைசாற்ற..!




இதனை வெளியிட்ட நிறுவனம் தான் பெண்ணின் உடலை போகப்பொருளாய் மாறுவதையும் ஆரோக்கியமான ஆண் பெண் உறவு குறித்தும் கவலை கொள்கிறது.நாட்டில் அனைவருக்கும் வகைதொகையின்றி அறிவுரை சொல்கிறது.கவலை கொள்கிறது.

வாசன் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் முதலில் ஊருக்கு உபதேசம் செய்யும் முன் அதனைத் தனது நிறுவனத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

6 comments:

Avargal Unmaigal said...

இதைப் போலதான் பதிவுலகில் உலா வரும் சில பெரிசுகள் நாம் கவர்ச்சியாக பதிவு தலைப்பை இட்டு உள்ளே நல்ல விஷயங்கள் எழுதி இருப்போம் உடனே அதை கண்டித்து எழுதுவார்கள். இப்படி எல்லாம் எழுதாதீர்கள் பல பெண்கள் பதிவுகளை படிக்கிறார்கள் என அட்வைஸ் பண்ணுவார்கள். அதே பெரிசுகளும் அவரைஸ் சுற்றி வரும் பெண்மணிகளும் தாங்கள் எழுதும் கதை மற்றும் கவிதையை இந்த மாதிரி ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வரும் இதழ்களுக்கு எழுதி அது வந்தால் உடனே அதைப் பற்றி பெருமை அடித்து தனது வலைபக்கத்தில் போடுவார்கள். அப்போதுதெல்லாம் அவர்கள் விகடனில் வரும் கவர்ச்சி படங்களையும் பெண்னை தரக் குறைவாக வெளியிடும் செய்திகளை பற்றி கண்டிக்க மாட்டார்கள் அதே குருப்புக்கள் இந்த இதழ்களை வீடுகளில் வாங்கி போட்டு தாங்கள் மிக படித்தவர்கள் எங்கள் வீடுகளில் நாங்கள் விகடனைத்தான் படிப்போம் என்று பெருமை அடிப்பார்கள் அந்த கால பெரிசுகள். இந்த பெரிசுகள் வலைதளங்களில் அட்வைஸும் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இதில் ஆணும் பெண்ணும் அடக்கமே

Anonymous said...

இன்னொரு தலைமை நிருபர் சமஸ்சும் கூட புதிய தலைமுறையில் சீட் போட்டுவைத்திருக்கிறாராம்.

Anonymous said...

விகடன் குழுமத்தில் இருந்துவிடைபெறவிருக்கும் தலைமை நிருபர் கவின்மலர்//ரொம்ப நாசூக்கா சொல்லியிருக்கீங்க.//ஆனா அவங்க இங்க இடம் கிடையாது உங்களுக்குன்னு கறாரா சொல்லிப் புட்டாங்களாமே சார்.?

Anonymous said...

தலைமை நிருபர் கவின்மலர் புது யுகம் ல துண்டு போட்டுருக்காங்கன்னு நீங்க சொல்றீங்க.சமஸ் ஸூம் போட்டு வைத்திருக்காங்கன்னு ஒரு வாசகர் கமெண்ட் போட்ருக்கார்.
இப்ப நான் இன்னொரு தகவல் சொல்றேன்.

ஜூனியர் விகடன் பொறுப்பாசிரியர் எஸ்.கே.முருகன் ஏற்கனவே புது யுகம் தொலைக்காட்சியில் போன வாரம் இணைந்தே விட்டார்.இது தெரியுமா நேக்கு..?

Anonymous said...

//கவின்மலரோ தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை தான் செய்யும் பணி ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றிலும் புகுத்தினார். அவரது எழுத்தும் எழுத்திலும் வசீகரம் இருக்காது.டிரையாக இருக்கும்.இது நிர்வாகத்தில் மட்டுமல்ல,ஆசிரியர் குழுவிலும் எதிரொலித்தது.
இதன் உச்சமாக ஒரு நாள் ஆனந்த விகடனில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில் அதன் ஆசிரியர்,இங்கு சிலர் தங்களை அருந்ததிராய் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.ஆனால் திறமை என்னவோ பூஜ்யம் என்று நக்கலாய்க் குறிப்பிட்டார்.இதைக் கேட்ட அனைவரும் சிரித்து விட்டனர்.ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை.அவர் வேறு யாரு?

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரே பெண் நிருபர் கவின்மலர் மட்டும் தான்.
இது ஒருபுறம்.

தகுதியின்மை மட்டுமல்ல.அவரால் ஏற்பட்ட வீண் சர்ச்சைகளும் அவரைப் பழி வாங்கியதாகவும் சொல்கிறார்கள். தகுதியின்மை ஒரு பக்கம் ஆசிரியர் குழுவை எரிச்சல்படுத்தியது என்றால் இவரால் ஏற்பட்ட வெற்ருச் சர்ச்சைகளும் அக்கப்போர்களும் இன்னும் சூடாக்கியது.அவர்கள் அதை ரசிக்கவில்லை.//

//அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே முகநூலில் தினமும் ஏற்படுத்திய அக்கப்போர்கள்,தன்னை தலித் என்று அவர் கட்டமைத்த பிம்பம் சிலரால் உடைக்கப்பட்ட பொழுது அவர் எதிர்கொண்ட விதம்,பொதுவெளியில் இருக்கும் தலைவர்களைத் தரக்குறைவாய் விமர்சித்தது இவை அனைத்தும் அவருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால் ஆனந்த விகடன் நிர்வாகம் இது எதனையும் ரசிக்கவில்லை.
சரி இவரை என்ன செய்வது என்று யோசித்த ஆசிரியர் குழு இவருக்கு எந்தப்பொறுப்பையும் கொடுக்காமல் டெஸ்க்கில் உட்கார வைக்க முடிவு செய்தது.அவரது கட்டுரை,பதிவு என அனைத்தும் நிறுத்தப்ப‌ட்டது.அவர் வெளியில் செல்ல அசைன்மெண்ட் கொடுக்கப்படாமல் அலுவலகத்திலேயே அமர வைக்கப்ப‌ட்டார்.புதிய‌வர்களின் படைப்புகளை,பதிவுகளை சரிபார்ப்பது கவிதையை வாங்கிப் பிரசுரிப்பது,எனும் பணி கொடுக்கப்ப‌ட்டது. ஆனால் அதையும் ஒழுங்காய்ச் செய்யாமல் முகநூல் அரட்டையில் நேரம் கழித்தார்.இதையும் கண்டு எரிச்சலுற்ற‌னர்.
இப்படி ஒரு மாதம் கழிந்தது.அப்பொழுது தான் ம.அருளினியன் நேற்று போராளி இன்று பாலியல் தொழிலாளி என்னும் சர்ச்சைக்குரிய நேர்காணல் டேபிளுக்கு வந்தது.
.அதனைச் சரிபார்க்கும் பொறுப்பும்,அதனை தேவைப்படும் இடத்தில் ஒழுங்குபடுத்துவதும்,மாற்றி அமைப்பதும் நேர்கானலின்உறுதித்தன்மையைச் சோதிக்கும் பணியும் டெஸ்க்கில் இருந்த‌ கவின்மலருடையது.ஆனால் ஏற்கனவே அருளினியனும் இவரும் நல்ல‌ நண்பர்கள் என்பதாலும்,ஈழப்பிரச்சனையில் அருளினியனின் நிலைப்பாடும் கவின்மலருடையதும் ஒன்று என்பதாலும்,அதிக ஆர்வத்தில் எதையும் சரிபார்க்காமலும், உண்மையான நேர்காணல் தானா என்று பெயரளவுக்கு கூட விசாரிக்காமல் மேம்போக்காக ஒப்புதல் அளித்து பொறுப்பாசிரியர் கார்த்திகேயனிடம் அனுப்பி விட்டார்.அவரும் ஓகே என்று சொல்லி மேட்டரை இறுதி செய்து விட்டார்.
அதற்கு பின் இது போலியானது கட்டமைக்கப்பட்டது என்று அம்பலப்பட்டதும் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கெட்ட பெயரையும் ஊரறியும் உலகறியுமே.

Anonymous said...

இந்தப்பிரச்சனையில் அருளினியனின் துரோகத்திற்கு அறிந்தும் அறியாமலும் அருளினியன் கவின்மலர் இருவரும் காரணம் என அறிந்த நிர்வாகம் அவர்களை கட்டம் கட்டத் தீர்மானித்தது.அருளினியன் மீது இப்பொழுது நடவடிக்கை எடுத்தால் நடைபெற்ற‌ தவறை தானே ஒப்புக் கொண்டது போல் ஆகிவிடும் என்பதால் அவரை கொஞ்ச நாள் கழித்து துரத்தலாம் என்று முடிவு செய்தது.(விகேஷ் மீதான விஷயத்திலும் இப்படி ஆறப்போட்டுத் தான் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது)

ஆனால் ஏற்கனவே கவின்மலரின் மீது கடுப்பில் இருந்த நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் இந்தப் பிர‌ச்சனையில் அவரின் பங்கு அறிந்து மேலும் கடுப்பாகி ராஜினாமா செய்யச் சொல்லி விட்டன‌ர். இரண்டாம் உலகப்போருக்கு எப்படி பல காரணம் இருந்தாலும் ஆஸ்திரிய இளவரசரின் மரணம் இறுதியான பெயரளவுக் காரணமாய் அமைந்ததோ அது போல் கவின்மலர் விஷயத்தில் ஏற்கனவே பல பஞ்சாயத்துகள் இருந்தாலும் அருளினியன் நேர்காணல் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்தி இறுதிக் காரணமயாய் அமைந்தது. இவர் ராஜினாமா செய்யவில்லையென்றால் நிர்வாகம் பணி நீக்கம் செய்திருக்கும்.அது பெரிய கெட்ட பெயரைத் தனது கேரியரில் ஏற்படுத்தி விடும் என்பதால் கவின்மலர் அமைதியாய் கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

இது தான் குறைந்த காலத்தில் உயரத்தில் சென்று கடைசியில் தனது உண்மையான இடத்திற்கு வீழ்ந்த கவின்மலர் அக்காவின் கதை.

பாவம் கவின்மலர் என்ற (duplicate ) அருந்ததிராய்..!

http://www.facebook.com/notes/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-duplicate-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/10151275011264334