Wednesday, 23 May 2012

விகடன்+மதன்+நேர்மை=சுயநலம்
ஆனந்த விகடனில் இருந்து மதனுக்கு "கல்தா" கொடுக்கப்பட்டது பற்றி பத்திரிகை உலகில் இரு வேறு வகையில் வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விகடன் செய்தது சரி. விகடன் தனது நடுநிலையைக்(!) காப்பாற்றி விட்டது என்று ஒரு பிரிவினரும்

மதன் நல்ல மனுஷர்(!)விகடனுக்கு நடுநிலை பற்றி பேச யோக்கியதை கிடையாது என்று மற்றொரு பிரிவினரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் எது சரி..?


மதன் எழுத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

மதனின் எழுத்துக்களின் மீது சராசரி வாசகனுக்கு இருந்த ஆர்வம் முடிந்து விட்டது.  ஆரம்ப கால கட்டத்தில் ஆங்கில நூல்களிலிருந்து உருவி, மொழியாக்கம் செய்யப்பட்டவைதான்  மதனின் எழுத்துக்கள்.

அப்பொழுது பத்திரிகையாளர்கள் மட்டத்தில்,”புக் பாயிண்ட் மூடியாச்சுன்னா மதன் அம்பேல்” என்று கேலியாகப் பேசப்படும்.

அதன்பின், இணையத்தில் இருந்து சுடப்பட்டு மதனின் பதில்களாகப் பிரசுரிக்கப் பட்டன.
இணைய வசதி பரவலாகிவிட்ட தற்காலத்தில், மதனின் எழுத்துகளுக்கான மதிப்பு மங்கி விட்டது.ஆனாலும் தனது பழைய பாணியிலான எழுத்து முறையையே மதன் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ள மதன் தயார் இல்லை.நிர்வாகம் அவரை வெளியே தள்ளக் காத்திருந்தது.

தனிப்பட்ட முறையில் மதன் எப்படிப்பட்டவர் என்பதை விகடன் வளாகத்தில் சில பத்தாண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்டால் கதை கதையாய்ச் சொல்வார்கள்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி அவர் நேர்மையானவர் தானே என்று கேள்வி எழலாம்.

ஜெயா டிவியில் நடத்தும் நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கில் தான் வாங்கும் பணத்திற்குப் பிரதிபலனாய் விசுவாசமாய் இருப்பதை, அறிவித்திருப்பதுதான் அந்தக் கடிதம்.இதற்கு மேல் என்ன நேர்மை இருக்க முடியும்.?

இந்த நிலையில் காக்கா உட்கார பனம்பழம் விழுந்தகதையாய் மதனைக் காலி செய்யக் காத்திருந்த நிர்வாகம் அந்தக் கடிதத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.ஆகவே மதன் வெளியேற்றப் பட்டதற்கு வருத்தப் பட ஒன்றுமில்லை.

இனி விகடன் நிறுவனத்தின் யோக்கியதையைப் பார்ப்போம்.
மதனுக்கு கல்தா கொடுத்து, தன்னை நடுநிலையானவனாய்க் காட்டிக் கொள்ளும் விகடன் நிறுவனம் அதற்குத் தகுதியானது தானா..?

விகடன் நிறுவனத்தின் ”நடுநிலை” குறித்து நாம் அவ்வப்பொழுது சில பதிவுகள் வெளியிட்டிருக்கிறோம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவைக் கடித்துக் குதறி, அவருக்கு எதிராய் விரட்டி விரட்டிச் செய்தி வெளியிட்ட நிறுவனம்(சென்ற வார கழுகார் பதில்களில் கூட ஆ.ராசாவுக்கு எதிராய் இரண்டு கேள்வி பதில்கள் வெளியிடடுள்ளது.)தயாநிதி மாறனுக்கும் கலாநிதி மாறனுக்கும் எதிராய் செய்தி வெளியிடாமல் பம்மிக் கொண்டிருக்கிறது.தயாநிதி மீதான விமர்சனத்தை செய்த ஒரு செய்தியில் கூட கோழி தனது குஞ்சை மிதிப்பது போல செய்து விட்டு ஓடி விட்டது.இதெற்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும்?


சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று தொலைக்காட்சித் தொடர்களைத் தவிர..?அதிலிருந்து கொட்டிக் கொண்டேயிருக்கும் சில கோடிகளைத் தவிர..?


ரூ.200 கவர் வாங்கிக்கொண்டு காசு கொடுத்தவனுக்காக 4 வரிச் செய்தி எழுதும் நிருபரின் நடத்தை அயோக்கியத்தனம் என்றால் சில ஆயிரம் வாங்கிக் கொண்டு செய்தியை இருட்டடிப்பு செய்யும் நிருபரின் நடத்தை அஒக்கியத்தனம் என்றால் விகடனின் இந்த ”யோக்கியதை”க்குப் பெயர் என்ன..?


அப்படிப்பட்ட நிறுவனம் நடுநிலை பற்றியும் நியாயம் பற்றியும் பேசுவதற்குத் தகுதியானது தானா..? துளியும் தகுதி இல்லை.

ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த்தால்

மதன் மற்றும் விகடன் இரு தரப்பும் பயன்படுத்தும் ”நடுநிலை” என்ற வார்த்தைக்கு

நேர்மையான அர்த்தம் சுயநலம்.
10 comments:

ram said...

//தனிப்பட்ட முறையில் மதன் எப்படிப்பட்டவர் என்பதை விகடன் வளாகத்தில் சில பத்தாண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்டால் கதை கதையாய்ச் சொல்வார்கள்.//

athenna kathai? sollalame...

Anand said...

நல்ல பதிவு

விச்சு said...

அருமையா உண்மையைப் போட்டு உடைச்சிட்டீங்க.

சத்தியவான் said...

நல்ல அலசல். மதன் அப்படி கடிதம் எழுதியதும் தவறு; கடிதம் எழுதிய காரணத்துக்காகவெ விகடன் அவரை இப்படி அவமானப்படுத்தியதும் தவறு.
கலகக்குரல் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். பாராட்டுக்கள்!

Mokkaiyan said...

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாய் இருக்கிறது மதனின் கடிதம் !. கிடைத்த அவகாசத்தை விட தயாரில்லை என்பதாக இருக்கிறது விகடனின் பதில் !

Anonymous said...

ஒரு கார்ட்டூன், ஒரு கேள்விபதில் இதற்காக விகடனில் மதன் வாங்கிகொண்டிருந்த சன்மானம் மட்டுமே அறுபதாயிரமாம். ஒரு பத்திரிகையின் பொறுப்பாசிரியருக்கு கூட தமிழில் இவ்வளவு சம்பளம் கிடைக்காது. இந்த அறுபதாயிரத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் என்று காத்து கொண்டிருந்த சீனிவாசனுக்கு மதனின் கடிதம் நல்ல சாக்காய் போய்விட்டது. இதுதான் விகடன் - மதன் மோதலின் பின்னணி

இப்படிக்கு
விகடன் ஊழியர்

வலைஞன் said...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி

வலையகம்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

பத்திரிக்கை தர்மம் , நடுநிலைமை இது எல்லாம் வழகொழிந்த வார்த்தைகள் .. இன்று பணம் மட்டுமே மீடியாக்களின் பிரதான தேவை

Anonymous said...

வைகோ ஜூனியர் விகடனை பொதுக் கழிப்பிடம் மாதிரி பயன்படுத்தி வாரம் ஒரு மேட்டர் வர வச்சுடறார்.பெருங்கொடுமையா இருக்கு.இந்த பின்னணி பத்தி எழுதுங்க கொஞ்சம்.

கடலூர் டாவின்சி said...

மதன்=மசாலா. அவர் கூறியிருப்பது போல ஹாய் மதன் பொது அறிவுப்பகுதியும் இல்லை, விகடன் claim செய்திருப்பது போல அது ஒன்றும் நடுநிலை பத்திரிக்கையும் இல்லை. இருவரும் காசுக்கும் popularity-க்கும் முயற்சிப்பவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பயன்படுதிக்கொண்டு வளர்ச்சி அடைந்தவர்கள். இந்த நிகழ்வில் இருவரது ego மட்டுமே அப்பட்டமாக தெரிகிறது. ego kills என்ற பழமொழிக்கேற்ப இந்த தகராறு இருவருக்கும் நஷ்டமே. என்ன நான் சொல்றது?!