இரா.சரவணன் |
வெளியில் கடுமையான வெயில்.இதழ் முடிக்கும் நேரம்.'கழுகார்' வருவாரா மாட்டாரா என்று பதற்றத்துடன் காத்திருந்தோம்.
திடீரென்று ஒரு குறுஞ்செய்தி.
செய்திகள் அனைத்தையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விட்டேன்.எடுத்துக் கொள்ளுங்கள்.முக்கிய செய்தி மட்டும் நேரில் சொல்கிறேன் என்று.
நேரத்தைச் சரியாகப் பின்பற்றுவதில் கழுகாரை மிஞ்ச ஆள் இல்லை என்று பெருமைப்பட்டுக் கொண்டோம்.
சொன்னபடி சிறிது நேரத்தில் ஆஜர் ஆனார்.கழுகார்.அவருக்கு வெயிலுக்கு குளுமையாக மோர் கொடுத்தோம்.நம்மை நன்றியுடன் பார்த்தவர்,அனுப்பிய செய்திகளை எடுத்துக் கொண்டீரா ? என்றார்.
ஆம்.ஏதோ துணுக்குச் செய்தி தருவதாகச் சொன்னீரே...அதுக்காகத் தான் வெய்ட்டிங் என்றோம்.
அதானே..! காரியத்தில் எப்பவும் கண்ணாய் இருப்பீரே என்றார்.
நமது புன் சிரிப்பைப் பார்த்தவர் சொல்லத் தொடங்கினார்.
ஒரு முக்கிய செய்தி விகடன் வட்டாரத்தில் இருந்து சொல்றாங்களே உமக்கு தெரியுமா என்றார்.?
என்ன என்றோம் ஆர்வத்தை வெளியே காட்டாமல்.
இரா.சரவணன் விகடன் பப்ளிகேஷன்சில் இருந்து ஆசிரியர் பதவியை ராஜினாமா பண்ணிட்டாராமே..!என்றார்.
உண்மையா ? என்றோம்.
ஆமாம்.
எதுக்கு..?அங்கே ராஜமரியாதையா நல்லாத் தானே இருந்தார் என்றோம்.
முழு விபரமும் சொல்றேன்.ஆனா எதும் குறுக்கே பேசி என்னை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது என்றார்.
சரி என்று உறுதிமொழி அளித்தோம்.
ஏற்கனவே நாம் சரவணனுக்கு செக் வைப்பதற்காக கலைச் செல்வன் என்பவரை விகடன் பப்ளிகேஷனில் நியமித்திருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தோம்.
அப்பொழுதே இரா.சரவணனுக்கு கொஞ்சம் எரிச்சலாம்.ஆனால்அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில் விகடனில் இருந்து அசோகன் வெளியேறியதால் அவர் வகித்த பதிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு மாற்று நபரை அலுவலகத்தில் நியமித்திருக்கிறார்கள்.அதன்படி ஆனந்த விகடன்,டாக்டர் விகடன், உள்ளிட்ட 6 விகடன் குழும இதழ்களுக்கு இரா.கண்ணன் பதிப்பாளராய் பொறுப்பேற்றிருக்கிறார்.
அப்படின்னா ஜூனியர் விகடனுக்கு என்று குறுக்கிட்டோம்.?
குறுக்கே பேசக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார் கோபத்துடன்.
மன்னிக்கணும் என்றோம்.
ஜூனியர் விகடன் மற்றும் விகடன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பாளரா திருமாவேலனை நியமித்திருக்கிறது நிர்வாகம்.
அப்படின்னா சரவணன்..?
முறைத்தார் கழுகார்.
அமைதி காத்தோம்.
திருமாவேலனின் கீழ் பணியாற்றுவது தனக்கு இயலாத காரியம் என்று நினைத்தாரோ என்னவோ,கடந்த வாரம் இரா.சரவணன் அலுவலகத்தில் ஆ.வி.ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் ரா.கண்ணன் அவர்களைச் சந்தித்து ஒரு கடிதத்தை நீட்டியிருக்கிறார்.
என்ன என்று ரா.கண்ணன் கேட்க,எனது ராஜினாமா கடிதம் என்று சொல்லியிருக்கிறார்.
ரா.கண்ணன் அதிகமாக எதுவும் பேசாமல்,நீங்கள் திருமாவேலனிடம் கொடுத்திடுங்க.அவர் தான் இப்ப பப்ளிகேஷனுக்கு பதிப்பாளர் என்று சொல்லியிருக்கிறார்.தன்னிடம் இது குறித்து ரா.கண்ணன் விரிவாகப் பேசுவார் என்று எதிர்பார்த்தவருக்கு இது பேரதிர்ச்சி.
இதை எதிர்பார்க்காத சரவணன் அடுத்து திருமாவேலன் அவர்களைச் சந்திக்கச் சென்றார்.
சொல்லிய கழுகார் ஒரு இடைவெளிவிட்டு நம்மை ஏறிட்டுப் பார்த்தார்.
முக்கியமான நேரத்தில் சஸ்பென்ஸ் வைப்பதே உமது வேலையாப் போச்சு என்று கோபித்துக் கொண்டோம்.
அதனை மெல்லிய சிரிப்புடன் ரசித்தவர் தொடர்ந்தார்.
உம் ஆர்வம் புரிகிறது.
திருமாவேலனுக்கும் இரா.சரவணனுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம்.அவரை இவர் சந்தித்தாரா என்று தானே ஆர்வம் காட்டுகின்றீர் என்றார்.
பதில் சொல்லாமல் நாமும் சிரித்தோம்.
தன்னை சரவணன் சந்திக்க வந்துள்ளார் என்றவுடன்,என்ன விஷயம் என்று பதிப்பாளர் திருமாவேலன் கேட்டுள்ளார்.
சரவணன் நீட்டிய கடிதத்தைப் படித்த திருமாவேலன் மரியாதைக்காய் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிய பின்,ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு,உடனே இவரைப் பணியில் இருந்து விடுவித்து விடுங்கள் என்ற குறிப்பை அதில் எழுதி அனுப்பி விட்டார்.
இப்பொழுது நீர் பேசலாம் என்று நமக்கு அனுமதி கொடுத்தார்.
அப்பாடா என்று பெருமூச்சு விட்ட நாம்,திடீரென்று ராஜினாமாவுக்கு என்ன அவசியம் என்றோம்.
இது குறித்து ஊகமாகத் தான் அலுவலகத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
திருமாவேலனுக்கு கீழ் தன்னால்,முன்பு போல் சுதந்திரமாக தன் விருப்பப் படி பணியாற்ற முடியாது என்று நினைத்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் என்றும்,இல்லை திரைப்பட இயக்குனர் சசிக்குமாரின் அடுத்த படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சிலரும் இல்லை ஹிந்து தமிழ் நாளிதழுக்கு வேலைக்குச் செல்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இன்னொரு தரப்பு வேறொரு காரணமும் சொல்கிறது.
என்ன என்றோம்.?
ராஜினாமா செய்ய சரவணனுக்கு உண்மையில் விருப்பம் இல்லையாம்.ராஜினாமா கடிதம் கொண்டு சென்ற தன்னை ரா.கண்ணன் சமாதானப் படுத்துவார்,நாம் திரும்பப் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்த்தாராம்.ஆனால் கண்ணனோ என்ன காரணத்தாலோ இவர் ராஜினாமாவை திரும்பப்பெற வலியுறுத்த வில்லையாம்.
இதனை எதிர்பார்க்காத சரவணன் வேறு வழியின்றி ராஜினாமா செய்தார் என்றும் சொல்கிறார்கள்.
எது உண்மையோ யாருக்குத் தெரியும் அவராகச் சொன்னால் தான் தெரியும்.என்றார்.
கடும் வெயிலில் சூடான செய்தியுடன் உள்ளே வந்த கழுகார் கிளம்பும் நேரத்தில் வெளியே மழை தூறியது.நாம் மழைக்கு இதமாக ஒரு சூடான தேநீர் கொடுத்தோம்.
நம்மை நன்றியுடன் பார்த்தவர்,இந்த தேநீருக்காக உமக்கு இன்னொரு விகடன் செய்தி விரைவில் சொல்றேன் என்றார்.
நாம் சிரித்தபடி அவரை வழியனுப்பினோம்.
No comments:
Post a Comment