Monday, 8 July 2013

வேந்தர் டிவி ஜூலை 15 இல் ஒளிபரப்பு தொடக்கம்...?

பச்சமுத்து 



ங்களுக்கு ஏற்றவாறு உண்மைச் செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பி வரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து வேந்தர் தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி வெளிவருவது தெரிந்த செய்தி தான்.

பலமுறை திட்டமிட்டுத் தள்ளிப் போன அதன் ஒளிபரப்பு வரும் ஜூலை 15 முதல் ஒளிபரப்பைத் துவங்குவதாகத் தெரிகிறது.இதுவும் உறுதியா என்று தெரியவில்லை.

இதனை நாம் சொல்லவில்லை.

புதிய தலைமுறை அதிபரும்,பல்லாயிரம் கோடிரூபாயைப் பதுக்கி வைத்துக் கொண்டு ஊழலையும் வறுமையையும் அறவே ஒழிக்கப் புறப்பட்டிருக்கும் பச்சமுத்துவின் தொண்டர்கள் தான் சொல்கின்றனர்.

கருப்புப் பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஒப்பிக்கிறாங்க..ஆனா எங்களுக்கும் டிவிக்கும் சம்பந்தம் இல்லைன்னோ, காலேஜூக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை,ஆகவே அரசே ஏற்று நடத்தலாம் என்றோ சொல்ல மாட்டிக்கிறாங்க...

எப்படி இருந்தாலும் வேந்தரின் ஆரம்பமே 'அமர்க்களமாக' இருக்குது.

உங்களிடம் இருந்து கலகக்குரலுக்கு நிறைய எதிர்பாக்கிறோம்.

புதிய வரவுக்கு 'வாழ்த்துக்கள்'.....

No comments: