Wednesday, 29 May 2013

நொண்டியடிக்கும் தந்தி டிவி...!



தந்தி டிவி யைப் பார்ப்பவர்களுக்கு, யாரோ அதை உருப்படவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதைப் போலத் தோன்றாமல் இருந்தால், அது ஆச்சர்யம்! 

இந்தப் பெருமைக்கு(!) முக்கிய காரணம், அதில் சி.இ.ஓ.வாக இருக்கும் சந்திரசேகரன்தான் என்கிறார்கள், பரவலாக!

தொலைக்காட்சித் துறையில் நீண்டகால அனுபவம் இருந்தாலும், இவருக்கு செய்தித் தொலைக்காட்சியைப் பற்றி கிஞ்சிற்றும் தெரியாது என்பது அவரே ஒப்புக்கொள்ளக்கூடிய நிஜம். 

இப்படிப்பட்ட 'திறமைசாலிகள்', திறம்பட்ட செய்தித்துறை ஆட்களை எடுத்துவந்து, செய்திப் பிரிவுக்கு தலைமைக்கு நியமிப்பார்கள். தங்கள் திறமையின்மை வெளியே தெரியாத அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

ஆனால், இவரோ, சன் டிவி யில் ஒழுங்காக ஒரு செய்தியை எழுதத் தெரியாதவர்களையெல்லாம் கூட்டிவந்து, பதவி கொடுத்து நியமித்து இருக்கிறாராம். என்.டி.டிவி. ஹிண்டு என்ற பெயரில் இருந்தபோதில் இருந்து, இப்போதுவரை, சந்துருவின் அட்டகாசத்தைத் தாங்கமுடியாமல், நேர்காணலுக்கு வரும் செய்தித்துறை மூத்தவர்கள் எல்லாரும் அப்படியே திரும்பிவிடுகிறார்கள்.

(இவர் பாலிசி என்னவென்றால் திறமையானவர்கள் யாரும் வந்து நம்ம இடத்தைப் பிடிச்சிடக் கூடாது என்னும் அதீத முன்னெச்சரிக்கை..)

இதற்கு ஆதாரமாக பல வாக்குமூலங்கள் உண்டு. குறைசம்பளம் கொடுக்கும் மெகா டிவி யில்கூட, எதையும் கறாராகப் பேசி வேலைக்கு வைக்கிறார்கள். ஆனால், மாதமானால் சரியான தேதிக்கு சம்பளம் தரும் தந்தி டிவி யில், ஆளெடுப்பதில் எந்த அடிப்படையும் இல்லாமல் இவர் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலைமைதான் என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள். இவருக்குத் தோதாக இவரது உறவினர் குமார் என்ப‌வர் எச்.ஆர். பதவியில் இருக்கிறார். இவர் விருப்பத்தை உள்ளூரப் புரிந்துகொண்டு அவர் நிறைவேற்றி வருகிறாராம்.

சந்துரு


ந்த கூட்டணி, திறமையானவர்கள் யாரையும் சேனல் பக்கம் அண்ட விடுவதில்லை. இவரை ஒரு வரம்புக்குள் கட்டுத்தப்படுத்துவதற்காக, செய்தித்துறையைக் கவனிப்பதற்காக, பாலசுப்ரமணிய ஆதித்தனால் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் மதிவாணன் நேரடியாகப் பேசி நல்ல சம்பளம் கொடுத்து அழைத்து வரப்பட்டார் .

இவருக்கு எக்சிக்யூட்டிவ் எடிட்டர் பதவி அளிக்கப்பட்டது. 

இவருக்கு மேலே ஜெயசீலனும் மெய்யப்பனும் இருந்தாலும் அவர்களை மீறித் தனக்கு அதிகாரம் இருப்ப‌தாகக் காட்டிக்கொண்டார்.பாலசுப்ரமணிய ஆதித்தனின் நேரடிச் சேர்க்கை என்பதால் அனைவரும் வேறு வழியில்லாமல் அமைதி காத்தனர்.

ஆனால், நடந்தது என்ன? என்ன நடந்துவிட முடியும்

(இதற்கான விடை கடைசி வரிகளில் இருக்கிறது.)

வந்த புதிதில் அப்படி இப்படி என புறங்கையைக் கட்டிக்கிட்டு (ஆக்ட் குடுத்தார்னு நினைச்சீங்கன்னா, அதுக்கு நாம பொறுப்பு இல்லை.) இருந்த இவர்,எடிட்டருக்கான பணிகளில் அக்கறை செலுத்தாமல் பிற பணிகளில் அதிக ஆர்வம் காட்டியபடி இருந்திருக்கிறார்.

மதிவாணன் சார், எடிட்டர்னா செய்தி எழுதத் தெரியணும்.

பல பேருக்கு இது தெரியறதே இல்லை. 

உங்களுக்கு நீண்டகாலத்துக்கு முன்னால சொல்லப்போனா உங்கப்பா காலத்து ஆட்கள்ல இருந்து உதவி ஆசிரியர்கள் வரைக்கும் ஏதோ அவங்க திறமைக்கு ஏத்தாப்போல எழுதுற செய்தியைத் திருத்தம் போடவாவது குறைந்த பட்சம் தெரியணும் சார்.


மதிவாணன்


இதுக்கு முன்னால் அது தெரியாம இருந்தா அதுல ஒரு பிரச்னையும் இல்லை. இப்ப தெரிஞ்சிருக்க வேண்டியது கட்டாயம் இல்லையா..?

(ஆதித்தன் கிட்ட வாங்குற காசு, செரிக்க வேணாமா..?) 

இப்படி லந்து செய்துக்கிட்டிருந்த மதிவாணன், தாம்தூம் தையத்தக்க என பல வண்ணக் கனவுகள் கண்டவர், நடு ஆபிசில் நின்றுகொண்டு அனைவரையும் திட்டுபவர் கொஞ்ச நாளில் ,என்ன மாயமோஉள்ளுக்குள்ளே என்ன நடந்ததோ இப்பொழுது சர்வம் சாந்தி மயம்போல நடந்துகொள்கிறாராம்.

இவர் அமைதியாக இருந்தாலும்,மொத்தத்தில் தந்தி டிவி யை நொண்டி அடிக்க வைப்பதில் சந்துருவும் மதிவாணனும்,காலைப் பிடித்து பின்னுக்கு இழுப்பதில் அவர்களை அறியாமலேயே கூட்டணி வைத்துச் செயல்படுகிறார்கள்.

உங்களைச் சொல்லிக் குத்தமில்லை.

சட்டியில இருந்தாதானே அகப்பையில் வரும்,இந்த மாதிரி பழமொழிகளை, காரணம் இல்லாமலா பெரியவங்க சொல்லிவச்சுட்டுப் போனாங்க...!

6 comments:

Anonymous said...

தினத்தந்தி குழுமத்திலிருந்து ஒரு டிவி வருகிறது என்றவுடன் மக்களிடம் எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது தெரியுமா? எல்லாவற்றையும் காலி செய்த பெருமை முழுவதும் சந்திரசேகரனையே சேரும். அது சரி இவரையெல்லாம் முதலாளிகள் எப்படி வேலைக்கு எடுக்கிறார்கள்? விசாரிக்கவே மாட்டார்களா என்ன கொடுமை போங்க

Anonymous said...

நீங்கள் சொல்வது சரிதான். சந்துருவுக்குத் தெரிந்தால் தானே செய்வதற்கு .... 2 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றுமே செய்யாமல் வெட்டிக்கதையிலேயே காலம் ஓடி விட்டது. இனியும் அவரையும் மதிவாணன் போன்றவர்களையும் வைத்துக்கொண்டிருந்தால் தந்தி டிவியை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம்.விழித்துக்கொள்ள வேண்டியது பாலசுப்ரமணிய ஆதித்தன் தான் !

Anonymous said...

எல்லா தொலைக்காட்சிகளிலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது....விஷயம் தெரிந்தவன் இடுப்பில் துண்டு, தெரியாதவன் தோளில் துண்டு....தப்பான தீர்ப்பு சொல்லும் நாட்டமை முதலாளிகள் தான் இங்கு அதிகம்.....PLAY OUT உதவியாளராக இருந்தவன் இன்று மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தலைமை பொறுப்பில் இருக்கும் போது இது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை

Anonymous said...

தந்தி டிவி யைப் பார்ப்பவர்களுக்கு, யாரோ அதை உருப்படவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதைப் போலத் தோன்றாமல் இருந்தால், அது ஆச்சர்யம்!

இந்தப் பெருமைக்கு(!) முக்கிய காரணம், அதில் சி.இ.ஓ.வாக இருக்கும் சந்திரசேகரன்தான் என்கிறார்கள், பரவலாக!''

100 சதவீதம் உண்மைதான்...

Anonymous said...

இப்போதுதான் தந்தியில் liveல் செய்தியை குடும்பத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தோம். என் பெரிய பையன்தான் அதை கவனித்தான்.... நேரலையில் News reader கள் முழிக்கின்றார்கள் என்று சொன்னான்...இறந்து போன தர்மபுரி இளவரசன் தந்திடிவியில் சில நாட்களுக்கு முன் கதறியதை இப்போது பார்ப்போம் என்றார் News reader . இளவரசன் கதறியது தொலைகாட்சியில் வரவில்லை...தொல் திருமாவளவன் அவர்கள் இந்த மரணம் குறித்து பேசினார் என்றார் News reader., அப்போதும் திருமாவளன் பேட்டி வரவில்லை. பக்கத்தில் ஒரு பெண் எந்த reactionம் இல்லாமல் உட்கார்ந்து இருந்தார் (she is so called co news reader  ). அவர் nervous ஆகவே இருந்தார். Sudden ஆக சிறிய இடைவேளைக்கு பிறகு என்றார் அந்த Male செய்தியாளர். அதன் பிறகு fifteen minutes வெறும் advertisement போட்டு விட்டு cinema பாடல்களை ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் வெறுத்து போனோம்...தந்திடிவியின் சில நிகழ்ச்சிகளுக்காக அதனை விரும்பி பார்ப்பதுண்டு...ஆனால் கேவலமாக நிகழ்ச்சியை நடத்துகின்றார்கள்... சம்பந்த பட்டவர்கள் தங்கள் பொறுப்பை உணர்வார்களா?

Anonymous said...

Interviewக்கு செல்லும் செய்தியாளர்களிடம் ceo சந்துரு அடித்து விடும் Historical wordings உலக பிரசித்தம். உங்க வயசு என் மீடியா அனுபவம் என்று இளைஞர்களிடமும், வயது முதிர்ந்தவர்கள் என்றால் thirty five years of experience என்று பேசுவது இந்த பீலா மன்னன் சந்ருவின் வாடிக்கை . இப்படி பேசி பேசிதான் எல்லோருடைய சம்பளத்தையும் குறைப்பான். நீங்கள் சொன்னது போல் தந்தி டிவி ஆரம்பித்து இரண்டு வருஷம் ஆகின்றது...ஒரு முக்கிய விஷயத்துக்கு லைவ் பண்ண துப்பில்லை என்றால் சந்ரு உனக்கு எதுக்கு வெட்டியா நாலு லட்ச ரூபா தண்ட சம்பளம்.? அனுபவஸ்தர் பேர்வையில் மணி ஆட்டிக்கொண்டு இருக்கும் மதிவாணன் உனக்கு எதுக்குய்யா ஒன்றரை லட்சம் சம்பளம்.