Showing posts with label சந்துரு. Show all posts
Showing posts with label சந்துரு. Show all posts

Saturday, 13 July 2013

தந்தி டிவியில் நித்தியானந்தா அருள்வாக்கு...?





சமீப‌காலமாய் அடங்கியிருந்த‌ நித்தியானந்தா ஏதாவது ஒரு சேனலில் தனது நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாக வேண்டும்,அதன் ,மூலம் திரும்பவும் பாப்புலாரிட்டியில் திளைக்க வேண்டும் என்று கையில் கரன்சியை வைத்து அலைந்துகொண்டிருந்தான்.காசினைக் கொட்டிக் கொடுக்கத் தயாராய் இருந்தாலும் இந்துத்துவ பின்னணி கொண்ட லோட்டஸ் டிவி மட்டும் தான் அவன் கையில் கிடைத்தது.

ஆனாலும் அதிகப் பார்வையாளர்களை சென்றடையும் தொலைக்காட்சி கிடைத்தால் நல்லது என்ற எண்ண‌த்தில் வலையை வீசிக் காத்திருந்தான்.
சன்,ஜெயா,கலைஞர் போன்ற சேனல்களில் வாய்ப்பில்லை என பலவாறாக கனக்குப் போட்டு இறுதியாக பு.த.தொலைக்காட்சியை அணுக முடிவு செய்தார். புதிய தலைமுறை பச்சமுத்துவை வெளிநாட்டு ‘கருப்பு முதலைகள்’ வழியாக பிடித்து பேசினார். கேவலமா நாடு சிரிச்ச ஒருத்தனை நமது சேனலில் காட்டுவதா என அந்தக் கருப்பு உள்ளமும் நல்லபடியாகச் சிந்தித்ததோ என்னவோ, ‘சேனலுக்கும் எனக்கும் பொறுப்பில்லை. பையன்தான் எல்லாமும் பார்த்துக்கொள்கிறார்’ என தூர நின்றார்.(தப்பிக்க நினைக்கும்,தவிர்க்க நினைக்கும் நேர‌ங்களில் எல்லா முதலாளிகளும் சொல்வது தான்)
உடனே மகன் சத்திய நாராயணனுக்கு அடுத்துள்ள சீனிவாசனை வேறு ஒரு தொடர்பில்
பிடித்து பேசியிருக்கிறார்.‘அந்த வேலை இங்க வேண்டாம். நான் இருக்கும் வரை உங்க நிகழ்ச்சி இங்க ஆகாது’ என கறாராகப் பேசியிருக்கிறார். இதற்காக டெல்லியில் உள்ள ஒரு இந்துத்துவா
கோஷ்டிதான் பேசியிருக்கிறது. இது எல்லாம் கருப்பு பண தொடர்பில் இருக்கும்
கும்பல் என்பது வேறு விஷயம். நாம் நித்தியின் விடா முயற்சிக்கு வருவோம்.
கடைசியாக பெருங்குடியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் தந்தி டி.வி.யிலாவது ஒளிபரப்பலாம். அது குறைவான பார்வையாளர்களை வைத்திருந்தாலும் பரவாயில்லை. அதிகப்படியான விளம்பர பொறுப்பை நாமே ஏற்கலாம் என பலவாறாக யோசித்துப் பதம் பார்க்கஅந்த சேன‌லில் உள்ள ‘இணைந்த கைகளான’ இருவர் குறித்து விசாரித்திருக்கிறார்கள்.

அருள்வாக்கு கூறும் நித்தியானந்தா

ஒருவர் அந்த தொலைக்காட்சியின் ஆல் இன் ஆல் சந்துரு.இன்னொருவர் நிகழ்ச்சித்
தயாரிப்பாளர் ராம்ஜி.ஏற்கனவே நிறையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்துக்
கொண்டிருப்பவர்.
உடனே இருவரையும் பிடித்தார். வாரம் தோறும் ஒரு நிகழ்ச்சி. அல்லது தினமும் என்றாலும்
பரவாயில்லை என்றதும்....அடுத்து சில நாட்களில் இரண்டு பேரும் பெங்களுரு நித்தி
பீடத்திற்கே போய் சரண்டர் ஆனார்கள். (ஆ)சாமியிடம் பேசினார்கள்...பேசினார்கள்....பேசி முடித்தார்கள். நித்தியை கெட்டியாக பிடித்துக்கொண்டால் தனி சேனலையே தொடங்க சொல்லாம் என்ற தனி கணக்கு போட்டார்கள்.இப்போதைக்கு தந்தி தொலைக்காட்சியில் நித்தியின் நிகழ்ச்சியை ஒளிபரப்புவதென்று முடிவெடுத்தார்கள். உறுதி அளித்து முடித்தார்கள்.
எல்லாமும் கணக்கு பார்த்து வாய்நிறைய சிரிப்போடு திரும்பினார்கள். அதன் பிறகு இரண்டு முறை அங்கே சென்றார்கள். இவ்வளவு ஆகும் என்று பட்ஜெட் பட்டியலை நீட்டினார்கள்.
அதெல்லாம் பார்க்ககூடிய ஆளா நித்தி...அது இருக்கட்டும்..நீங்கள் எப்படி செய்கிறீர்களோ
அப்படியே செட்டு போட்டு எடுங்கள் என கூறிவிட்டார். இப்படி எல்லாமும் இறுதியாகி
படப்பிடிப்பு நடக்கும் நாளும் உறுதியாகியிருக்கிறது.
இறுதியில் நித்தியோடு ‘பக்தகேடிகள்‘ கலந்துகொண்டு கேள்விக்கு பதில்
என்னபடியோ, அல்லது சொற்பொழிவில் ஆன்மீகவாதிகளின் கேள்வி என்ற மாதிரியோ
எடுப்பதென‌ உள்ளார்க்ள்.

நித்தியானந்தா,ரஞ்சிதா,பித்த‌லாட்டம்,தந்தி டிவி,லோட்டஸ் டிவி
நித்தியானந்தா

அடுத்த வாரத் தொடக்கத்தில் எடுக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும். கடந்த
வாரத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. செட்டு போடுபவர்கள், கேமரா யூனிட், லைட்
செட்டிங் உள்ளிட்ட அனைவரையும் அழைத்து பேசிவிட்டார்கள். அனேகமாக ஆகஸ்டு மாதம்
இறுதியில் ஒளிபரப்பும் முடிவில் உள்ளார்கள். படப்பிடிப்பு பெங்களுரு பிடதி
பீடத்திலேயே..
தொலைக்காட்சி அலுவலகத்தில் 'நித்ய தர்மம்' விவாதம் என்று அறிவிப்பு பலகையில் எழுதிப் போட்டு அது குறித்த விவாதமும் நடக்கிறது.(இந்தப் பதிவு எழுதும் இந்தக்கணம்  பெங்களூரில் நித்தியானந்தா ஆசிரமத்தில் குளுமையான  தட்ப வெப்ப சூழ்நிலையில், தீவிர விவாதத்தில் ராம்ஜி ஈடுபட்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்)
(அலுவலகத்தில் நித்தியானந்தா நிகழ்ச்சி குறித்து முணுமுணுப்பு வந்ததும் நம்ம எம்.டி.அவரோட டிவோட்டி அவர் தான் பண்ணச் சொன்னார்,எங்களுக்கு ஒன்றும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வாயை மூட வைத்திருக்கிறார்கள்.நிகழ்ச்சி ஒளிபரப்பானால் அது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதும் தந்தி டிவிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச பார்வையாளர்களையும் ஓட வைத்து விடும் என்பதும் உறுதி. )

சாமியாரோ,போலிச் சாமியாரோ(சாமியார் என்றாலே போலி.இதில் போலிச்சாமியார் என்று
வேறு எழுதணுமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிற‌து
.)
பக்தர்களிடம் காசு பிடுங்கிக் கொண்டு 'அருள் வாக்கு' கொடுப்பார்கள்.

ஆனால் இங்கோ நித்தியானந்தா சிலருக்கு 'தட்சணை' கொடுத்து, தொலைக்காட்சி பார்க்கும் அப்பாவி பக்தனுக்கு அருள்வாக்கு கொடுக்கிறார்.நித்தியானந்தாவை மடக்கிய இவர்கள் நிச்சயம் அவரை விட விவரமானவர்கள் தான்.பகிரங்கமாய் அம்பலப்பட்ட ஒரு பேர்வழியை வைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்த துணியும் இவர்களின் தில்லு வேறு யாருக்கும் வராது என்பது உறுதி.
இப்படியே போனால் தொலைக்காட்சி ரேட்டிங் ஏறாது.சிலர் வங்கிக் கணக்கு இருப்பு ஏறும் என்பது மட்டும் நிஜம்.

Wednesday, 29 May 2013

நொண்டியடிக்கும் தந்தி டிவி...!



தந்தி டிவி யைப் பார்ப்பவர்களுக்கு, யாரோ அதை உருப்படவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதைப் போலத் தோன்றாமல் இருந்தால், அது ஆச்சர்யம்! 

இந்தப் பெருமைக்கு(!) முக்கிய காரணம், அதில் சி.இ.ஓ.வாக இருக்கும் சந்திரசேகரன்தான் என்கிறார்கள், பரவலாக!

தொலைக்காட்சித் துறையில் நீண்டகால அனுபவம் இருந்தாலும், இவருக்கு செய்தித் தொலைக்காட்சியைப் பற்றி கிஞ்சிற்றும் தெரியாது என்பது அவரே ஒப்புக்கொள்ளக்கூடிய நிஜம். 

இப்படிப்பட்ட 'திறமைசாலிகள்', திறம்பட்ட செய்தித்துறை ஆட்களை எடுத்துவந்து, செய்திப் பிரிவுக்கு தலைமைக்கு நியமிப்பார்கள். தங்கள் திறமையின்மை வெளியே தெரியாத அளவுக்கு நடந்து கொள்வார்கள்.

ஆனால், இவரோ, சன் டிவி யில் ஒழுங்காக ஒரு செய்தியை எழுதத் தெரியாதவர்களையெல்லாம் கூட்டிவந்து, பதவி கொடுத்து நியமித்து இருக்கிறாராம். என்.டி.டிவி. ஹிண்டு என்ற பெயரில் இருந்தபோதில் இருந்து, இப்போதுவரை, சந்துருவின் அட்டகாசத்தைத் தாங்கமுடியாமல், நேர்காணலுக்கு வரும் செய்தித்துறை மூத்தவர்கள் எல்லாரும் அப்படியே திரும்பிவிடுகிறார்கள்.

(இவர் பாலிசி என்னவென்றால் திறமையானவர்கள் யாரும் வந்து நம்ம இடத்தைப் பிடிச்சிடக் கூடாது என்னும் அதீத முன்னெச்சரிக்கை..)

இதற்கு ஆதாரமாக பல வாக்குமூலங்கள் உண்டு. குறைசம்பளம் கொடுக்கும் மெகா டிவி யில்கூட, எதையும் கறாராகப் பேசி வேலைக்கு வைக்கிறார்கள். ஆனால், மாதமானால் சரியான தேதிக்கு சம்பளம் தரும் தந்தி டிவி யில், ஆளெடுப்பதில் எந்த அடிப்படையும் இல்லாமல் இவர் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலைமைதான் என்கிறார்கள், பாதிக்கப்பட்டவர்கள். இவருக்குத் தோதாக இவரது உறவினர் குமார் என்ப‌வர் எச்.ஆர். பதவியில் இருக்கிறார். இவர் விருப்பத்தை உள்ளூரப் புரிந்துகொண்டு அவர் நிறைவேற்றி வருகிறாராம்.

சந்துரு


இந்த கூட்டணி, திறமையானவர்கள் யாரையும் சேனல் பக்கம் அண்ட விடுவதில்லை. இவரை ஒரு வரம்புக்குள் கட்டுத்தப்படுத்துவதற்காக, செய்தித்துறையைக் கவனிப்பதற்காக, பாலசுப்ரமணிய ஆதித்தனால் புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் மதிவாணன் நேரடியாகப் பேசி நல்ல சம்பளம் கொடுத்து அழைத்து வரப்பட்டார் .

இவருக்கு எக்சிக்யூட்டிவ் எடிட்டர் பதவி அளிக்கப்பட்டது. 

இவருக்கு மேலே ஜெயசீலனும் மெய்யப்பனும் இருந்தாலும் அவர்களை மீறித் தனக்கு அதிகாரம் இருப்ப‌தாகக் காட்டிக்கொண்டார்.பாலசுப்ரமணிய ஆதித்தனின் நேரடிச் சேர்க்கை என்பதால் அனைவரும் வேறு வழியில்லாமல் அமைதி காத்தனர்.

ஆனால், நடந்தது என்ன? என்ன நடந்துவிட முடியும்? 

(இதற்கான விடை கடைசி வரிகளில் இருக்கிறது.)

வந்த புதிதில் அப்படி இப்படி என புறங்கையைக் கட்டிக்கிட்டு (ஆக்ட் குடுத்தார்னு நினைச்சீங்கன்னா, அதுக்கு நாம பொறுப்பு இல்லை.) இருந்த இவர்,எடிட்டருக்கான பணிகளில் அக்கறை செலுத்தாமல் பிற பணிகளில் அதிக ஆர்வம் காட்டியபடி இருந்திருக்கிறார்.

மதிவாணன் சார், எடிட்டர்னா செய்தி எழுதத் தெரியணும்.

பல பேருக்கு இது தெரியறதே இல்லை. 

உங்களுக்கு நீண்டகாலத்துக்கு முன்னால சொல்லப்போனா உங்கப்பா காலத்து ஆட்கள்ல இருந்து உதவி ஆசிரியர்கள் வரைக்கும் ஏதோ அவங்க திறமைக்கு ஏத்தாப்போல எழுதுற செய்தியைத் திருத்தம் போடவாவது குறைந்த பட்சம் தெரியணும் சார்.


மதிவாணன்


இதுக்கு முன்னால் அது தெரியாம இருந்தா அதுல ஒரு பிரச்னையும் இல்லை. இப்ப தெரிஞ்சிருக்க வேண்டியது கட்டாயம் இல்லையா..?

(ஆதித்தன் கிட்ட வாங்குற காசு, செரிக்க வேணாமா..?) 

இப்படி லந்து செய்துக்கிட்டிருந்த மதிவாணன், தாம்தூம் தையத்தக்க என பல வண்ணக் கனவுகள் கண்டவர், நடு ஆபிசில் நின்றுகொண்டு அனைவரையும் திட்டுபவர் கொஞ்ச நாளில் ,என்ன மாயமோ, உள்ளுக்குள்ளே என்ன நடந்ததோ இப்பொழுது சர்வம் சாந்தி மயம்போல நடந்துகொள்கிறாராம்.

இவர் அமைதியாக இருந்தாலும்,மொத்தத்தில் தந்தி டிவி யை நொண்டி அடிக்க வைப்பதில் சந்துருவும் மதிவாணனும்,காலைப் பிடித்து பின்னுக்கு இழுப்பதில் அவர்களை அறியாமலேயே கூட்டணி வைத்துச் செயல்படுகிறார்கள்.

உங்களைச் சொல்லிக் குத்தமில்லை.

சட்டியில இருந்தாதானே அகப்பையில் வரும்,இந்த மாதிரி பழமொழிகளை, காரணம் இல்லாமலா பெரியவங்க சொல்லிவச்சுட்டுப் போனாங்க...!