Sunday, 20 May 2012

சசிரேகா சம்பளம் தினமணியில் திருட்டு..?



நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை:நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று சொல்லிக் கொண்டு வெளிவரும் தினமணி நாளிதழ் அலுவலகத்திலேயே திருட்டு நடைபெற்று உள்ளது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா..?

பறிகொடுத்த பத்திரிகையாளரின் பெயர். சசிரேகா.சம்பவத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அந்தப்பெண்ணின் பின்னணி கொஞ்சம் உங்களுக்கு.

சசிரேகா தஞ்சை மண்ணைப் பூர்வீகமாய்க் கொண்டவர்.பத்திரிகைத் துறையின் மீது உள்ள ஆர்வத்தால் துறைக்குள் வந்தார்.முதலில் தஞ்சையில் நக்கீரன் செய்தியாளராய்ப் பணியைத் தொடங்கினார்.அதன்பின் சென்னையில் தினமலர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.அங்கிருந்து தினகரன் நாளிதழில் பணியில் சேருகிறார்.

அவர் பணியில் இருந்த பொழுது தான்  தினகரன் ஊழியர்கள் மதுரையில் 3 பேர் பட்டப்பகலில் எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.மதுரையில் உள்ள கட்டப்பஞ்சாயத்து,ரவுடிக்கும்பல் தலைவர் இதன் பின்னணியில் இருப்பதாக பத்திரிகையாளர்கள் எண்ணினர்.அந்த சம்பவத்தைக் கண்டித்தும் கும்பல் தலைவனைக் கைது செய்யக்கோரியும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதில் சசிரேகா முதல் ஆளாகக் கலந்து கொண்டு நடுரோட்டில் அமர்ந்து துணிச்சலாக கொலை செய்த ரவுடிக்கும்பலுக்கு எதிராய் முழக்கங்களை எழுப்பினார். .(அந்த புகைப்படம் தான் மேலே நீங்கள் கண்டது)அதனைக் கண்ட பிற பத்திரிகையாளர்களே ஆச்சரியப்பட்டனர்.

அவர் பணியில் இருக்கும் பொழுது தீனதயாள் இஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெற்ற முறைகேட்டினை எதிர்த்து ஒரு செய்தியை எழுதினார்.அதனைக் கண்ட அக்கல்லூரி உரிமையாளர் டி.டி.நாயுடு தொலைபேசியில் சசிரேகாவை அழைத்துப் பேசினார்.(இந்த டி.டி.நாயுடு தான் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் சங்கத் தலைவர்.நாடு உருப்படுமா..?)அப்பொழுதும் துணிச்சலாக தனது நிலையை விவரித்தார்.தவறு என்றால் ஆதாரத்துடன் சொல்லுங்கள்.மறுப்புச் செய்தி வெளியிடுகிறோம் என்று தெரிவித்தார். 500 க்கும் ஆயிரத்துக்கும் பல்லிளிக்கும் ஊடகவியலாளர் மத்தியில் கல்லூரி முதலாளி அழைத்துப் பேசிய பின்பும் சசிரேகா தைரியமாக தான் எழுதிய செய்தியின் பக்கம் நின்றார்.
--
டி.டி.நாயுடு


அந்த சம்பவத்துக்குப் பின் சில நாட்கள் கழித்து தீனதயாள் பொறியியல் கல்லூரி சார்பில் ஒரு பிரஸ் மீட் நடைபெற்றது.அதில் தினகரன் நாளிதழ் சார்பில் சசிரேகா கலந்து கொண்டார்.அங்கு சென்று பல கேள்விகளை எழுப்பினார்.

“உங்கள் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாய் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதே?”

அரசு நிர்ணயித்த அளவை விட  அதிகம்கட்டணம்வசூல் செய்கின்றீர்களாமே..”?

போன்ற கேள்விகளைக் கேட்டார்.இது கல்லூரி முதலாளி டி.டி.நாயுடுவுக்கு எரிச்சலை ஊட்டியது.பிரஸ்மீட் முடிந்த அடுத்த நிமிடம் தினகரன் நாளிதழ் C.E.O.ஆர்.எம்.ஆர்.ரமேஷூக்கு போன் போட்டார்.”உங்க ரிப்போர்ட்டர் கவர் கேட்டாரு.கொடுக்கலைன்ன உடனேயே கண்டமேனிக்கு கேள்வி கேட்குறாரு” என்று புலம்பினார்.(ஆனால் உண்மை ரமேஷூக்குத் தெரியாதா என்ன?)

உடனே ரமேஷ்,”அந்த ரிப்போர்ட்டர் வந்தவுடன் என்னை வந்து மீட் பண்ணச் சொல்லுங்க” என்று .ரிஷப்ஷனில் சொல்லி விட்டார்.

அலுவலகத்தில் நுழைந்தவுடன் சசிரேகா நேரே ஆர்.எம்.ஆர்.ரமேஷைச் சந்திக்கச் சென்றார்.

”என்னங்க கவர் கொடுக்கலைன்னா உடனே எடக்கு மடக்கா கேள்வி கேட்குறீங்களாமே” என்றார்.கடுமையான கோபம் வந்தது சசிரேகாவுக்கு.

யார் சொன்னா உங்ககிட்ட.சொன்னவனை என் முன்னாடி நிறுத்துங்க.அவனை நானே கேள்வி கேட்கிறேன்.என்று கோபப்பட்டார்.ஆனால் ரமேஷ் மிகவும் அமைதியாகி,சரி சரி போங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

கீழே வந்தவுடன் தனது தொலைபேசியில் இருந்து சுயநிதிக் கல்லூரி வியாபாரி நாயுடுவுக்கு போன் அடித்தார், சசிரேகா. ஆனால் எதிர்முனை எடுக்கப்படவில்லை.உடனே அருகில் இருந்த ரிப்போர்ட்டரிடம் இருந்து போனை வாங்கி மறுபடியும் நாயுடுவுக்கு பேசினார். எடுத்தவுடன் ஏக வசனத்தில் அர்ச்சனை. நாயுடுவுக்கு காது முழுவதும் இரண்டு நாளுக்கு வலித்தது.


ஆர்.எம்.ஆர்.ரமேஷ்


அரண்டு போன நாயுடு திரும்பவும் ரமேஷூக்கு போன் செய்து புகார் பத்திரம் வாசித்தார்.திரும்பவும் ரமேஷ் அழைத்து இப்படி தொடர்ந்து பண்ணினால் உன்னை வேலையை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடுவேன் என்று எச்சரித்தார்.(அது சரி எதுக்கு ரமேஷ் கொஞ்சமும் யோசிக்காமல் நாயுடுவுக்கு வக்காலத்து வாங்குறார் என்று நீங்கள் யோசிக்கக்கூடும்?ரெண்டு பேரும் ஒரு ஊர்க்காரர்கள்.அதோடு மட்டுமல்ல மணவாடுக்கு மணவாடு.இதுக்கு மேல என்ன வேணும்.பாதிக்கப்பட்ட பத்திரிகைகாரன் பக்கம் எவன் இருப்பான்?)

உடனே கோபமான சசிரேகா நீங்க என்ன டிஸ்மிஸ் பண்றது,இப்படி பிராடுகளுக்கு வக்காலத்து வாங்குற இந்த நிறுவனத்தில் வேலை பார்க்குறதை விட வீட்ல சும்மா இருக்குறது பெட்டர் என்ற படி ராஜினாமா கடிதத்தை நீட்டினார்.

இவர் தான் சசிரேகா.

அதன்பின் கொஞ்சநாளில் தினமணியில் செய்தியாளர் வேலைக்குச் சேர்ந்தார்.இப்படிப்பட்ட துணிச்சலும் நேர்மையும் கொண்ட சசிரேகாவிடமே ஒரு பேர்வழி தினமணி அலுவலகத்திலேயே கைவரிசை காட்டி திருடி விட்டான் என்றால் அந்த பலே திருடனை என்ன செய்வது..?.


இவ்வளவு நாள் தினமணியில் வேலை பார்த்த பின்பு தனது சொந்தக் காரணங்களுக்காய் கடந்த மாதம் ராஜினாமா செய்துள்ளார்.அதனை முறைப்படி ஒரு மாதம் முன்பே அளித்துள்ளார்.(இவர் செய்த பிழை என்னவென்றால் ராஜினாமா கடிதத்தில் தேதியைக் குறிப்பிட மறந்தது தான்) அது அலுவலகத்தில் சிலருக்கு வசதியாகிப் போனது.அவரது ராஜினாமா கடிதத்தை உடனே வாங்கிக் கொண்ட நிர்வாகம் மாதக் கடைசி நாள் வரைக்கும் அவரது உழைப்பை வாங்கிக்கொண்டது. ஆனால் அவருக்குத் தரப்படவேண்டிய அந்த மாதச் சம்பளத்தை இன்றுவரை கொடுக்கவில்லை.பலமுறை கேட்டும் அவரது கணக்கில் வந்து சேரவில்லை.

சம்பளத்தை யார் திருடியது என்று இன்றுவரை தெரியவில்லை.தினமணி நிர்வாகத்திற்கு இது தெரியுமா இல்லை.நிர்வாகமே அதற்கு உடந்தையா என்றும் தெரியவில்லை.


சசிரேகா
வைத்தியநாதன்


ஸ்பெக்டரம்,போபர்ஸ் ஊழலை எல்லாம் அக்குவேறு ஆணிவேறாய் அலசி ஆராய்ந்த அலுவலகத்திலேயே இப்படி ஒரு திருட்டா? என்று அங்கு பணியாற்றுவோர் அதிர்ச்சி ஆகி உள்ளனர்.


சமயமும் அறமும் தேசியமும் தழைத்தோங்கும் இடத்தில் நடைபெற்ற திருட்டு  தினமணி பக்தர்களையும் சினத்துக்குள்ளாக்கியுள்ளது.

திருட்டு விரைவில் அம்பலத்திற்கு வருமா..?ஆசிரியர் வைத்தியநாதன் தான் தக்க பரிகாரம் காண வேண்டும்.செய்வாரா..?




2 comments:

europrabu said...

பணம், புகழ், சிபாரிசு மற்றும் ஏதேதோ காரணங்களுக்காக reporter வேலைக்கு வரும் மனிதர்கள் மத்தியில் உண்மையான, நேர்மையான, சேவை மனப்பான்மையில் ஒரு பெண்ணை பார்க்கும்போது மனம் நெகிழ்ந்து பாராட்ட தோன்றுகிறது... நாம் செய்ய நினைப்பதை இவர் செய்து காட்டுகிறார்.. இவரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்....

ராம்ஜி_யாஹூ said...

one month salary payment should not be a big amount for dinamani/express. we (i am writing a mail) can write a mail to dinamani and most of dinamani staff are in soncial media (in blogs, in facebooks).
we will try to get her 1 moonth or that notice period salary