Sunday, 6 May 2012

குட்டிச்சுவரு-வைத்தி சேதி தெரியுமா நோக்கு..!

வைத்தி&திருவண்ணாமலை சரவணன்


ஊடக நடப்புக்களைப் பேசும் குட்டிச்சுவரு பகுதி இந்த வாரம் இரு பத்திரிகையாளர்கள் பேசுவது போல் வந்துள்ளது.

சென்னை அண்ணா சாலை புகாரி ஓட்டல்..

சூப் அருந்தியபடி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் சுகந்தியும் சுதாகரும்..

“உனக்கு ஒரு காமெடி தெரியுமா,ஜூனியர் விகடன்ல உதவி ஆசிரியர்-ங்குற பேர்ல மொத்த பத்திரிகையோட பிழைகளைச் சரி செஞ்சுக்கிட்டிருந்தவரு சிவன்.இவரோட கலக குணத்தால இவரு மேல காண்டா(மிருகமல்ல)இருந்த நிர்வாகிகள் அவங்க விட்ட தவறுக்கு இவர் மேலயும் பழி போட்டு சம்பளத்துல 5000 கட் பண்ணாங்க..

கோமாளிப் பத்திரிகையோன்னா அப்படித்தானே இருக்கும்”?இது சுகந்தி.

“ஒரு வருஷம் பல்லக் கடிச்சுக்கிட்டிருந்த சிவனை திருப்பூர் ரிப்போர்ட்டரா கடாசிட்டாங்க”

சப் எடிட்டரை ரிப்போர்ட்டரா மாத்துன கூத்து இங்க மட்டும் தான் நடக்கும்.இப்ப அவருக்கு என்ன ஆச்சு”..?

“ஆப்படிச்சவங்களுக்கே ஆப்படிச்சிட்டாரு சிவன்.ஒரு வருஷமா மாசம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கட் பண்ணவங்க மூஞ்சியில அடிக்கிற மாதிரி 50 ஆயிரம் சம்பளத்துல விஜய் டிவியில வேலைக்குச் சேர்ந்துட்டாராம்”.

சம்பளம் கம்மி பண்னவங்கள்லாம் இனி மூஞ்சிய எங்க போய் வச்சுக்குவாங்க...

அவா வெக்ஸ் ஆயிருப்பா..இப்ப நான் ஒரு இன்பர்மேஷன் சொல்றேன்.

“தினமணி வைத்தி அங்கிள் மேல இப்ப எல்லாம் கடுப்புல இருக்காங்க.ஏன்னா எல்லாரையும் இஷ்டத்துக்கு பந்தாடிண்டு வராராம்”

ஆமாம் யாரோ கூட சொன்னாங்க..பட் எனக்கு டீடெயிலா தெரியல..மெய்யாலுமா.?சுகு.

“இசக்கின்னு திருநெல்வெலிக்கார்ர் ஒருத்தர கோட்டைக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்களாம்...கோட்டையில இருந்த பாலசுப்ரமணியத்தை அதிமுக பீட்டுக்கு போட்டுட்டாங்களாம்,அதே போல சென்னை பீரோ சீப்பா இருந்தா சந்திரசேகர் சார் இப்ப திருநெல்வேலிக்கு டிரான்ஸ்பர்.பட் அவர் லீவுல போயிட்டாராம்”.

அது மட்டுமல்லாம ஒரே நியூஸ் எடிட்டர் இருந்த சென்னையில வைத்தி அங்கிள் புண்ணியத்துல இரண்டு நியூஸ் எடிட்டர்ஸ். புதுசா மதுரையில் இருந்து ஒருத்தர கொண்டு வந்துட்டாங்களாம்.

எல்லாத்துக்கும் திருவண்ணாமலையிலிருந்து வந்த சரவணன் தான் காரணமாம்.புதுசா வேலைக்கு யார் சேர்ந்தாலும் இவா மூலமா தான் சேர முடியுமாம்.எல்லோரும் புலம்புறா..

வைத்தி அங்கிளுக்கும் இவருக்கும் என்ன கொடுக்கல் வாங்கலோ..

என்னமோ போ..இவங்க ரெண்டு பேருக்கும் கணக்கு வழக்கு முட்டிக்காம இருந்தாச் சரிதான்.குமுதம் நியூஸ் எதும் இருக்கா” ..?சுதாகர் ஆர்வமாகக் கேட்டார்.

குமுதம் மட்டுமல்ல.விகடனும் சேர்ந்த நியூஸ் இது.

சொல்லு...

போன வாரம் ஆ.விகடன் மீட்டிங் நடந்துச்சாம்.அதுல குமுதத்தில் புதுசா வந்த பகுதிகளைப் பத்தி ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாளாம். கோமாளி பத்திரிகை சர்க்குலேஷன் இப்ப டவுனாயிடுச்சாம்.அத எப்படி சரி பண்றதுன்னு ஆளுக்கொரு ஐடியா சொன்னாளாம்.

புதுசு புதுசா நிறைய பகுதி வரும்னு பேசிக்குறா.ஊர் உலகத்து சர்வே எல்லாம் எடுக்குறாங்க.அவங்க விற்பனையைப் பத்தி சர்வே எடுக்காமலா இருப்பாங்க..

என்னமோ போ.காசு கொடுத்து வாங்குறவன் திட்டாம இருந்தாச் சரி”.



இதோட விகடன்ல அவா எல்லோருக்கும் இன்கிரிமெண்ட் போட்ருக்காங்க தெரியுமா”..?

அப்படியா..?யாராருக்கு போட்ருக்காங்க..?

ஆளுக்குத் தகுந்த”மாதிரியாம்.போட்டோகிராபர் விவேக்,அப்புறம் ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் ஒன்னுமே இல்லையாம்”.

இதில் என்ன பாலிடிக்சோ..கொடுமைடா..

புதிய தலைமுறையிலயும் இன்கிரிமெண்ட் போட்டுட்டாளாமே..?உன் பிரண்டு சொன்னாரா..”?
”ஆமாம்.சொன்னாங்க..ஒரளவுக்கு பரவால்லமா போட்ருக்காங்களாம்.ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்குது.அங்க குறைவான சம்பளத்துக்கு முதல்ல சேர்ந்தவங்களுக்கு அதிக பர்சண்டேஜ்,புதுசா நல்ல சம்பளத்துல சேர்ந்தவங்களுக்கு நார்மலான உயர்வாம்.இதை மற்ற மீடியாக்களும் பாலோ பண்ணுனா நல்லா இருக்கும்”.

”அப்புறம் ஒன்னு கவனிச்சியா சுகந்தி”?இந்த புதிய தலைமுறை வந்ததுக்கு அப்புறம் சன் நியூஸ் காரன் செய்தியில் கொஞ்சம் மாறுன மாதிரி தெரியுதுல்ல.உனக்கு எப்படி தோணுது..?

பாத்தா அப்படி தெரியுது சுதாகர் .பட் இன்னும் இம்ப்ரூவ்மெண்ட் வேணும்.அப்புறம் இன்னொன்னு தெரியுமா உனக்கு..?

சன்ல வெளியில இருந்து நிறய ஆள் எடுக்குறாங்களாம்.நல்ல சம்பளம் கொடுக்குறாங்களாம்.ஆனா உள்ள இருக்குற பழைய ஸ்டாப்களுக்கு சொல்லிக்குற மாதிரி சம்பளம் கொடுக்கலியாம்.

ம்.வேற என்ன..?

ந்த நித்தியானந்தா ஆதினமா வந்தாலும் வந்தான்.மேட்டர் பஞ்சத்துல இருந்தவாள்லாம் மஞ்சக் குளிக்கிறா”...

”ஆமாம் ஆமாம் நானும் பார்த்தேன்.புதுசா வைஷ்ணவின்னு ஒரு பொண்ணையும் இதுல கனெக்ட் பண்றாங்க..இனி எழுதுறதுக்கு பஞ்சமா இருக்காது”...

”ஆமா.ஆமா.அவா பத்தி முதல்ல தமிழக அரசியல்லயும்,நக்கீரன்லயும் போட்டிருந்தானுங்க.இதுல ஜூவி கோட்டை விட்டிருச்சு.லாஸ்ட் இஷ்யூல மட்டும் லைட்டா டச் பண்ணியிருந்தாங்க”..

தமிழக அரசியல் படிக்கிறியா..?பரவாயில்லையே”...!

ம்ம்.முந்திக்கு இப்ப பரவாயில்ல...அவனுங்களும் மத்தவா மாதிரி புதன்கிழமையும்,சனிக்கிழமையும் கொண்டு வந்தா மார்க்கெட்ல கொஞ்சம் பிக் அப் ஆகும்...

ம்ம்.”அப்புறம் விகடன்ல பொறுப்பாசிரியர் கார்த்திகேயன் எப்பவும் இங்கிலீஷ் புகல ருந்து டிரான்ஸ்லேட் பண்ணியே மேட்டர் பண்றாரே..”?எதுக்குன்னு புரியல சுகந்தி...

”எழுதத் தெரியாதுன்னு நெனைக்காத. என்னைக்காச்சும் ஒருநாள் நாமள்லாம அசர்ற மாதிரி எழுதப் போறாரு”.
பார்ப்போம்.பார்ப்போம்..

விகடன்ல வருங்காலத் தொழில் நுட்பம் ன்னு நமக்கு ஈஸியா எல்லா விஷயமும் தெரிஞ்சுக்குற மாதிரி ஒரு தொடர் எழுதறார்ல..!அண்டன் பிரகாஷ் அவர் யாரு?சென்னையிலயா இருக்காரு..?

இல்ல.அவர் திருநெல்வேலி பக்கம்.மணப்பாட்டுக்காரர்.இப்ப அமெரிக்காவில் இருக்கார்.

நல்லா இருக்கு தொடர். தேங்க்ஸ் சொல்லணும்..

ம்ம்.

கிருஷ்ணா டாவின்சி இறந்ததுக்கு குமுதத்துல் ஒரு அஞ்சலி கூடப் போடல பார்த்தியா”?அவா எவ்வளவு மட்டமானவான்னு இதுலேயே தெரியுது..

கிருஷ்ணா இறந்தவுடன் அவர் வீட்டுக்கு வரது வந்தாரே..?
வந்தாரு.வந்தாரு.இறந்த அன்னிக்கு நைட்லயே ஜவஹர் டாக்டரோட தங்கச்சி ஆஸ்பத்திரிக்கு போயிட்டாங்களாம்.அதுக்கு பிறகு மறுநாள் தான் ஆள் பிடிக்குற மணாவைக் கூப்பிட்டு வரது போனாராம்.அது மட்டுமல்லாம இரங்கல் கூட்டத்தில இவங்க எல்லோரும் கலந்துண்டது வரதுக்கு கோபமாம்.அதான் அஞ்சலி கூடப் போடலியாம்.

எழவுல கூட ஆதாயம் பார்க்குறது என்னிக்குத் தான் நிக்குமோ தெரியல.

தானே புயல் நிவாரண நிதி இன்னும் வசூல் பண்றாளே..எப்பத்தான் நிப்பாட்டுவா..?
சி.எம்.அப்பாயிண்ட்மெண்ட்டுக்கு டிரை பண்றாங்க.கிடைச்ச பாடில்லை.

அவா பேச்சைப் பேசினாலே.தாங்க முடியல.சரி கிளம்புவோமா..


கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு நியூஸ் சொல்றேன்.கேட்டுக்க.இந்த சன் சேனல் காரா ரொம்ப நாளா இங்கிலீஷ் நியூஸ் சேனல் தொடங்குறதாச் சொல்லிக்கிட்டே இருந்தாங்கள்ல..

”ஆமா.என்ன தொடங்கப் போறாளா..”?சுகந்தி ஆர்வமாகக் கேட்டார்.

அவங்க எப்பவும் சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க.ஆனா புதிய தலைமுறை சேனல் காரங்க அதிவிரைவில் இங்கிலீஷ் நியூஸ் சேனல் உண்மையாவே தொடங்கப்போறாங்க.

அப்படியா..?

ஆமா.டைம்ஸ் நவ்,சி.என்.என். மாதிரி பிரம்மாண்டமா தொடங்குற ஐடியாவாம்.இது சம்பந்தமாத் தான் நம்ம அம்பி சீனி அடிக்கடி டெல்லிக்கு பறக்குறாராம்.இந்த வருஷத்துக்குள்ள ஸ்டார்ட் பண்ணிடுவாளாம்.

காசு கொட்டிக் கெடக்கு.பண்ணிடுவா கண்டிப்பா.சரி பில் பே பண்ணு நாம கிளம்புவோம்.


1 comment:

Anonymous said...

வைத்தி படம் போட்டியளே. பக்கத்துல நிக்குற கருவாயன் திருவண்ணாமலை சரவணன் போட்டோவையும் போட்டிருக்கலாம்...

சன் நியூஸில் புதுசா செய்தி வாசிக்கிறவா நிறைய... சன் நியூஸில் மன்மத குஞ்சு அவுட்புட் எடிட்டராக இருக்கு.. அதை அவா என்னாசை.......யே.. பிக்கப் செய்த கன்றாவியை நடுரோட்டுல வெச்சு அவா ஆபிஸ்ல அல்லாரும் பார்த்துக்குருக்காங்களாம்..