Sunday 27 July 2014

நியூஸ் சைரன்-தொழிலாளர்கள் வயிற்றில் அடித்தது யார்..?



த்திரிக்கை ஆரம்பிப்பதே நாதியற்ற பத்திரிகையாளர்களை ஏமாற்றுவதற்குத்தானா என்ற கேள்வி 'நியூஸ் சைரன்' வார  இதழுக்கு பொருந்தும். தொடங்கப்பட்ட போது ஏகப்பட்ட புரளியை கிளப்பிக்கொண்டு தொடங்கப்பட்ட இதழ் இது.

 அதாவது  இதன் முதலாளிகள் வெளிநாட்டு வாழ் தமிழர்கள். பெரிய அளவில் டி.வி. சேனலையும் சேர்த்து தொடங்க இருக்கிறார்கள். முன்னோட்டமாக அச்சு ஊடகத்தில் கால் பதிக்கிறார்கள் என்ற பில்டப். ஆனால் கடைசி கட்டம் வரையிலும் உண்மையான முதலாளி யார் என்பதை ரகசியமாகவே வைத்திருந்ததுதான் வேடிக்கை.

சரி விஷயத்திற்கு வருவோம்.




இந்த வார இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்ட எஸ் சரவணக்குமார் இதழில் ஒரு இயக்குனர். அதாவது இவர் பத்திரிக்கையாளர் நிலையைத் தாண்டி முதலாளி ஆகி விட்டார்.பண பரிவர்த்தனையில் கையொப்பமிடும் அதிகாரமும் பெற்றவராக இருந்தார். இந்த இதழின் வெளியீட்டாளரும் சரவணகுமார் தான். 

எஸ் சரவணகுமார் யாரென்றால் இதற்கு முன் ஜூனியர் விகடனில் கோலோச்சியவர்.அதன் பின் அங்கிருந்து விரட்டப்பட்டு சரத்குமார் நடத்திய மீடியா வாய்ஸில் தஞ்சம் புகுந்தவர்.இவரைப்பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். (இணைப்பு) 


அதே போன்று ‘வெளிநாட்டு தமிழர்கள்’ சார்பில் சுந்தர் என்பவரும் இயக்குனராய் இருந்தார்.இவருக்குப் பல்வேறு தொழில்கள்.ராவ் முக்கிய பதவியில் இருந்தார். குமுதத்தில் இருந்த பா..ஏகலைவன், ரவிஷங்கர் இருவரும் பொறுப்பாசிரியர்கள். பத்திரிகை ஒழுங்காய் வெளிவந்தது.

 ஆனால் ஊழியர்களுக்கான சம்பளமே என்றுமே ஒழுங்காய் வரவில்லை. முதல் மாதமே பத்தாம் தேதி தான் சம்பளம் . அடுத்த மாதம் 15-ம் தேதியை தாண்டியது. ராவ் மட்டும் இதுகுறித்து நிர்வாகத்திடம் எதிர்ப்புத் தெரிவித்தார். அவர் எதிர்ப்போ என்னவோ 3-வது மாத சம்பளம் வரவே இல்லை  அதன் பிறகு ராவ் எதுபேசினாலும் நிர்வாகம் கேட்கவில்லை. சரவணகுமார் தான் நமக்கு சரியான சாய்ஸ் என அவரை முன்னிலைப்படுத்தி பேசியது. சரவணகுமாரும் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையுமாக நடந்து கொண்டார் .

 கொஞ்ச நாளில் ஒருவர் பின் ஒருவராக எடிட்டோரியலில் இருந்த அனைவரையும் வெளி அனுப்பி விட்டார்கள். பிரிலான்ஸ் நிருபர்களை வைத்து இதழை நடத்தி விடலாம் என்று சரவணகுமார் திட்டம். அதன் பிறகும்  சம்பளத்தை கொடுத்தார்களா என்றால் கிடையாது தொடர்ந்து வேலை பார்த்தவர்கள்,வெளியேற்றப்பட்டவர்கள் என கேட்டவருக்கு எல்லாம் காசோலை கொடுத்தார்கள்.ஆனால் அனைத்தும் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. அனைவருக்கும் இரண்டு, மூன்று மாத சம்பளப்பணம் பாக்கி.  சரவணக்குமார் தினமும் ஒரு காரணம் சொன்னார்.
சரவணக்குமார் 


இது சரிப்படாது என முடிவு செய்து முதலில் அங்கிருந்து ராவ் விலகினார். ஒழுங்க்காய்ச் சம்பளம் தராததால் முதலில் பொறுப்பாசிரியர்  ரவிஷங்கர் விலகினார்.அதன் பின் சிறிது காலத்தில் இன்னொரு பொறுப்பாசிரியர்   பா.ஏகலைவனும் விலகிக்கொண்டார்.

இந்த கட்டத்தில்தான் சைரனின் மர்ம முதலாளி செட்டி நாட்டு சின்னப்பையனின் பெரிய பையன் என்று தெரியவருகிறது. அந்த ஆளுக்கு பணத்திற்கு என்ன பஞ்சம்..? ஊரை அடித்து உலக வங்கியில் போட்டு வைத்திருப்பவராயிற்றே என்று பலரும் புலம்ப ஆரம்பித்தார்கள். ஆனால் அவரோ பத்திரிக்கை விற்ற காசை வசூல் செய்து சம்பளம் கொடுங்கள் என்று சொல்லி விட்டு புட்பால் பார்க்க பிரேசில் போய் விட்டதாக சரவணகுமார் சொன்னார் . பத்திரிகை விற்ற காசில் சம்பளம் என்பது நடக்கும் கதையா..?

அனைவரும் போலிசுக்கு போவதாய் சத்தம் போட்டவுடன், சரவணகுமார் முதலாளி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் செட்டில் செய்யப்படும் எனப் புதுத் தகவல் சொன்னார்.

 ஆனால் எங்கிருந்து தான் பணம் வந்ததோ தெரியாது.நான்கு நாட்கள் கழித்து வந்து கொடுத்தார்கள். அனைவருக்கும் ஒருமாத சம்பளத்தை  செட்டில் செய்தார். ராஜவிபீஷிகாவுக் சுத்தமாக தரவேயில்லை. ஜெரோமிற்கு ஒரு மாத சம்பளம் பாக்கி. ராவ் அவர்களுக்கு 3 மாதம் இல்லை.ஏகலைவன், ஷாலினி,மகேஷ், ஸ்ரீதர், லே அவுட் டிசைனர் சுரேஷ், ஆகியோருக்கு இரண்டு மாத சம்பளம் தரவேயில்லை. கேட்டால் முதலாளி  இவ்வளவு தொகையைதான் கொடுத்தார். இதற்கு மேல் கிடையாது என்ற பதிலை சரவணகுமார் கூறினார்.
 மூத்த பத்திரிகையாளர் ’ஆந்தை குமார் அவரும் நீயுஸ் சைரன் வார இதழில் ஒரு மாதம் வேலை பார்த்தார். அவருக்கு டிமிக்கி கொடுக்க அதுவும் பெரும் பஞ்சாயத்தாகி முடிந்தது.மதன் எழுதிய தொடருக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரும் நிறுத்தி விட்டார்.சாரு நிவேதிதா தொடருக்கு  பணம் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.

 உண்மையில் 'செட்டி நாட்டு சின்னப்பையனின் பெரிய பையன்'  எவ்வளவு கொடுத்தார். சரவணகுமார் எவ்வளவு எடுத்தார் ?என்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது. ஒரு வேலை பினாமியாக நியமிக்கப்பட்டிருந்த சுந்தர் தரப்பில் ஏதாவது கைவரிசை காட்டப்பட்டதா ? என்பதும் தெரியவில்லை. ஆனால் அனைத்துக்கும் ஆதார மைய மர்மமாக இருப்பது சரவணகுமார்தான் என்கிறது ஒரு தரப்பு.

அதற்கு ஒரு சம்பவத்தையும் சொல்கிறார்கள்.

 சீமோன் என்பவரை தொடக்கத்திலேயே எச்.ஆர் ராக நியமித்தார் சரவணகுமார். இவர் சரத்குமார் கட்சியில் இளைஞர் அணியில் இருப்பவராம். சீமோன். நிர்வாகத்தை நம்பி கணினி உட்பட பலதையும் அவர் வாங்கி போட்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த எச்.ஆர் சீமோனை வேலையை விட்டு நீக்கி விட்டார் சரவணகுமார். அவருக்கு இரண்டு மாத சம்பளம் மேலும் அவரது உதவி நிர்வாகியாக இருந்த இரண்டு நபர்களுக்கும் பாக்கி. கேட்டு கேட்டு அலைந்து பார்த்துவிட்டு நடிகர் சரத்குமாரிடம் போய் நின்றார் சீமோன். அவர் காவல்துறை  உயர்மட்டத்தில்  பேசினார். வழக்கு பதிவு போடாமலேயே சரவணகுமாராய்  வீடு தேடிபோய் இழுத்துவர முனைந்தார்கள். அவர் தப்பித்து  முன்ஜாமின் போட்டார். அது கிடைக்காமல் போனது. கடைசியல் சமரச பேச்சு உடன் பட்டார்.

நியூஸ் சைரன் இதழை வெளியிட்ட மதன்.இவருக்கே பணம் தராமல் நாமம் சாத்தியவர்கள் எம்மாம் பெரிய கில்லாடிகள்..?



அப்பொழுது சீமோன், நடந்தது இதுதான் என பக்கம் பக்கமாக ஆதாரத்தை முன்வைத்து ‘சரவணகுமார் நம்பகமான ஆள் இல்லை. பலவற்றிலும் கை வைக்கிறார். சுருட்டுகிறார். ஒரு நாளைக்கு உண்மையான முதலாளி கவலைப்படுவார் என்று கூறினார். பதிலுக்கு எதுவுமே பேசாத சரவணகுமார் எச்.ஆர் சீமோனுக்கு கொடுக்க வேண்டிய முழு தொகையையும் கொடுத்துதான் மீண்டார்.  இந்த விஷயத்தில் நிர்வாகம் சரவணகுமாருக்காக முன்வந்து எந்த உதவியும் செய்யவில்லை. அவராகவே தான் இதிலிருந்து எனில் ஊழியர்கள் சம்பள பிரச்சனையில் என்ன நடந்திருக்கும் என்பதும் அனைவராலும் ஓரளவு ஊகிக்க முடிகிறது.

கோட் அணிந்து இருப்பவர் தான் சீமோன் இடது ஓரம் திருவாளர் சரவணகுமார் 


செட்டி நாட்டு முதலாளி பணம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ?

அல்லது சரவணகுமார் வாங்கிய பணத்தில் சரியாக கணக்கு காட்டாமல் முதலாளியையும் தொழிலாளியையும் ஒருங்கே  ஏமாற்றினாரா என்பதுதான் வியப்பான கேள்வியாகி நிற்கிறது.எது உண்மையோ தெரியவில்லை.நட்டாற்றில் நிற்பது உயர்பதவி வகித்த ராவ் முதல் அடிமட்ட தொழிலாளர்கள் தான்.சென்னை மட்டுமல்ல வெளியூர் நிருபர்கள் யாருக்கும் கூட சம்பளமோ இதர சலுகைகளோ தரவில்லை. சம்பளப்பாக்கியே சில லட்சங்கள் இருக்கிறது.
இப்பொழுது இதழும் வரவில்லை.நிறுத்தி விட்டார்கள்.

நாட்டைச் சுருட்டும் ஊழல் பேர்வழிகள் ,அவர்களுக்கு புரோக்கர் வேலை பார்ப்பவர்கள்  எல்லாம் பத்திரிகை தொழிலுக்கு வந்தால் இப்படித்தான் முடியும் போல் இருக்கிறது.


தொழிலாளர்களுக்கு என்று விடியும்..?




No comments: