கோயபல்ஸ் |
கோயபல்ஸ் செத்துப் போனான் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இன்றும் நவீன வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது மறுக்கவோ மறைக்கவோ இயலாத நிரூபிக்கப்பட்ட உண்மை.
ஹிட்லரின் வடிவில் ராஜபக்சேவும் மோடியும் இருக்கும் பொழுது, ஹிட்லரின் கொள்கைப்பரப்புச் செயலாளராய் இருந்த கோயபல்சின் வடிவில் ஒரு ஜந்து இருக்காதா என்ன..?
இருக்கிறது.அது தான் ஜூனியர் விகடன்.
புலனாய்வு இதழ்கள் என்று சொல்லிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவும், நிறுவனத்தின் அல்லது தங்கள் சுயலாபத்திற்காகவும் எழுதுவது தான் இங்கு வாராந்திர புலனாய்வு பத்திரிகை உலகில் எப்பொழுதும் நடக்கிறது.
ஆட்சியர்கள் செய்யும் தவறுகளையோ ஊழல்களையோ,அரசியல் தரகுகளையோ இவர்கள் ஒருபொழுதும் அம்பலப்படுத்தியது கிடையாது. அதை விடுத்து இவர்கள் எழுதுவதெல்லாம் பெரும்பாலும் கிசுகிசுக்கள்.அதுவும் பெரும்பாலும் பலித்ததும் கிடையாது.
இவர்கள் சொல்லாத சம்பவங்கள் நடந்தது என்றால் அதற்காக இவர்கள் வருத்தப்படுவதும் கிடையாது, சொன்னதற்கு எதிர்மாறாய் நடந்து விட்டால் அது குறித்து அசிங்கப்படுவதும் கிடையாது. அதே சமயம் அத்தி பூத்தாற் போல், காக்கா உட்காரப் பனம்பழம் விழுவது போல ஏதாவது நடந்து விட்டால் அதனை ஊரறிய வெளிச்சம் போட்டுக் காட்டித் தங்கள் திறமையைத் தாங்களே பாராட்டிக் கொள்ளக் கூச்சப்படுவதும் கிடையாது.
ஜூனியர் விகடனின் புரட்டு கொஞ்சம் வார்த்தை ஜாலங்களோடு வரும்.மற்றவர்கள் எளிதில் அம்பலப்படும்படி வருவார்கள்.மற்றபடி ஜூனியர் விகடன்,நக்கீரன்,குமுதம் ரிப்போர்ட்டர்,தமிழக அரசியல் அனைவரும் ஒன்று தான்.
ஆனால் சமீப காலமாய் ஜூனியர் விகடனின் பொய்யும் புரட்டும் எல்லைமீறி கோயபல்சோடு போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் ஒவ்வொரு கட்சிகளையும் அணி சேர்ப்பதற்கும்,அவர்களுக்குள் சீட்டைப் பிரிப்பதற்கும்,அவர்களுடன் அணி சேருபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று பிம்பத்தைக் கட்டி எழுப்புவதற்கும்,அதற்கு ஒத்துப் போகாதவர்களை இழிப்பதற்கும் பழிப்பதற்கும்,ஆதரிப்பவர்களை பக்கம் பக்கமாய் உயர்த்தி எழுதுவதற்கும் இவர்கள் செய்யும் வேலையானது , இதே வேலையைச் செய்யும் புரோக்கர் மணியனின் வேலையை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல.பா.ஜ.க.கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டும் தான் இன்னும் விகடன் அலுவலகத்தில் நடக்க வில்லை.மற்ற படி எல்லா வேலைகளையும் ஜூனியர் விகடன் செய்தாகி விட்டது.
ஒவ்வொரு இதழையும் படித்தால் இவர்கள் சீனிவாசனிடம் சம்பளம் வாங்குகிறார்களா இல்லை மோடியிடம் சம்பளம் வாங்குகிறார்களா என்ற அளவுக்கு ஆத்திரம் வருகிறது.
கடந்த 2 மாதத்தில் விஜயகாந்தின் தே.மு.தி.கழகத்தை பா.ஜ.க.கூட்டணியில் இணைப்பது தொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்திகளை மட்டும் கீழே தந்துள்ளோம்.இதில் சில விடுபட்டுப் போயிருக்கலாம்.மேலும் அதற்கு முந்தைய இதழ்களில் வெளியானவற்றை எழுதிப் பிரசுரிக்க எமக்கும், படிக்க உங்களுக்கும் நேரம் இல்லை.
இந்த இரண்டு மாத இதழ்களிலேயே விஜயகாந்தை கூட்டணிக்குத் தள்ளிக் கொண்டு வருவதற்காக எத்தனை எத்தனை உருவாக்கப்பட்ட செய்திகள். எத்தனை இட்டுக்கட்டல்கள், எத்தனை பிளாக்மெயில்கள், எத்தனை கெஞ்சல்கள். உருவாக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் என பல பக்கங்களுக்கு கழுகார் குரல்களாக,மணியன் பேட்டியாக,பெட்டிச் செய்திகளாக வெளிவந்துள்ளன.
பொய்யையும் புரட்டையும் உள் நோக்கத்துடன் எழுதினால் காசு கொடுத்து வாங்கிப் படிக்க முட்டாள் வாசகன் இருக்கிறான்,அவன் காசில் மஞ்சள் பிழைப்பை நடத்தலாம் என்ற நம்பிக்கையிலும், தவறான செய்தி வெளியிட்டதனால் இதுவரை எந்த கேடுகெட்ட பத்திரிகை அலுவலகத்திற்கும் வந்து வாசகன் கேள்வி கேட்டதில்லை என்ற அசட்டுத் தைரியத்திலும் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு எழுதப்பட்டவை தான் இவை.
வேறு வழியில்லை.கொஞ்சம் கனத்த மனத்துடன் திரும்ப ஒரு முறை பார்த்து விடுங்கள்.
//'பி.ஜே.பி.
என்ன நினைக்கிறதாம்?''
''மற்ற
கட்சிகளைவிட ஒன்றிரண்டு சீட்கள் தே.மு.தி.க-வுக்கு கொடுக்கலாம் என்பதே பி.ஜே.பி-யின்
திட்டமாம். அவர்கள் இந்தக் கட்சிகளை தங்கள் அணிக்கு முதலில் கொண்டுவந்துவிட்டு, அப்புறமாக
மற்றதைப் பேசலாம் என்று பார்க்கிறார்கள். விஜயகாந்த் காலதாமதம் செய்வதாக அவர்களுக்கு
வருத்தம் இருக்கிறது.''
''தன்னை
வந்து பி.ஜே.பி. பிரதிநிதிகள் சந்திக்கவில்லை என்று விஜயகாந்த் சொல்வதாக சொல்கிறீரே?''
''பி.ஜே.பி.,
விஜயகாந்த்தை கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்றே பார்க்கிறது. ஒருவிதத்தில் பார்த்தால்
இது கண்ணாமூச்சி ஆட்டம்தான். 'விஜயகாந்த் டெல்லி வந்து ராஜ்நாத் சிங்கைப் பார்க்க வேண்டும்’
என்று அந்தக் கட்சி நினைக்கிறது. ஆனால், தன்னை வந்து பி.ஜே.பி-யினர் பார்க்கட்டும்
என்று விஜயகாந்த் நினைக்கிறார். இப்படித்தான் ம.தி.மு.க. விஷயத்திலும் நடந்தது. வைகோவை
டெல்லி வந்து ராஜ்நாத் சிங்கை சந்திக்கச் சொன்னார்கள் பி.ஜே.பி-யினர். 'உங்கள் கட்சியின்
முக்கியப் பிரமுகர் என்னை வந்து சந்தியுங்கள். அவரிடம் சில விஷயங்களைப் பேசி தெளிவுபடுத்திவிட்டு
அப்புறமாக டெல்லி வருவேன்’ என்றாராம் வைகோ. பி.ஜே.பி-யின் தமிழகப் பொறுப்பாளர் முரளிதர்ராவ்,
மோகன்ராஜலு ஆகிய இருவரும் வைகோவை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்தார்கள். அதன் பிறகுதான்
வைகோ டெல்லி போனார். ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அந்த அடிப்படையில் விரைவில், விஜயகாந்த்தை
முரளிதர்ராவ் சந்திப்பார். ஜனவரி, பிப்ரவரி என்று விஜயகாந்த் இழுப்பதுதான் அவர்களுக்கு
பிடிக்கவில்லையாம்!''//
ஜனவரி
1-1-2014 தேதியிட்ட இதழ்
//பி.ஜே.பி.
கூட்டணி இப்போதுதான் ஓரளவு வடிவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது!'' என்று காகிதங்களைப்
பிரித்தபடி பேச ஆரம்பித்தார் கழுகார்.
''பி.ஜே.பி.
கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் இணையும் என்று ஆரம்பத்தில்
இருந்து நான் சொல்லி வந்தேன். இதற்காக ஆரம்ப கட்ட வேலைகளை தமிழருவி மணியன் பார்த்தார்.
மூன்று கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்து தனித்தனியாக ஒப்புதல் வாங்கினார். வைகோவை பலமுறை பார்த்தார். விஜயகாந்தை இரண்டு முறையும்
ராமதாஸை இரண்டு முறையும் சந்தித்தார். இதன் அடுத்த கட்டமாக தமிழக பி.ஜே.பி. பொறுப்பாளர்
முரளிதர்ராவ், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜலு ஆகியோர் வைகோவையும் ராமதாஸையும்
சந்தித்தனர். மூன்றாவது கட்டமாக டெல்லி சென்று ராஜ்நாத் சிங்கை வைகோவும் அன்புமணி ராமதாஸும்
தனித்தனியாக சந்தித்தார்கள்...''
''தங்களை
பி.ஜே.பி. பிரதிநிதிகள் யாரும் வந்து இதுவரை சந்திக்கவில்லை என்று கடந்த வாரத்தில்
சொல்லியிருந்தீரே?''
''அதைத்தான்
சொல்ல வருகிறேன். அவசரம் வேண்டாம்!
இப்படி
ம.தி.மு.க-வும் பா.ம.க-வும், கூட்டணிக்குள் வருவதற்கு மனதளவில் தயார் ஆன நிலையில் விஜயகாந்த்
பக்கமாக தனது பார்வையை பி.ஜே.பி. திருப்பியது. விஜயகாந்தை சந்திக்க முரளிதர்ராவ் குரூப்
முயற்சிகளை மேற்கொண்டது. 'இதற்குத்தானே காத்திருந்தோம்’ என்பது மாதிரி விஜயகாந்த் வீட்டில்
இருந்து பச்சைக்கொடி காட்ட... கடந்த வெள்ளிக்கிழமை மாலையில், அந்த சந்திப்பும் நடந்துவிட்டது!''
''அப்படியா?''
''ஆமாம்!
விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் அந்த தரப்பில் இருந்துள்ளனர். முரளிதர்ராவ் தன்னுடைய
குழுவுடன் சென்றுள்ளார். 'இரண்டு தரப்பும் மனப்பூர்வமாகப் பேசினார்கள். இந்த அணியில்
இணைவது சம்பந்தமாக விஜயகாந்துக்கு எந்த மனமாறுபாடும் இல்லை. அவர் சகஜமாகத்தான் பேசினார்.
தான் கேட்கும் தொகுதிகள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனை வெவ்வேறு
வார்த்தைகளில் சொல்லிவிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து தே.மு.தி.க-வுக்கு
இருப்பதால், கூட்டணியிலும் கூடுதலான இடங்களை எங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்கிறார்.
இன்னும் பல கட்சிகள் வர இருப்பதால் அதனையும் அனுசரித்து உங்களுக்கான இடங்கள் தரப்படும்
என்று பி.ஜே.பி-யினர் சொன்னார்கள். இது மோடியை பிரதமர் ஆக்கும் கூட்டணி; அதனால் நமக்குள்
எந்த பேதமும் ஏற்படக் கூடாது என்று பி.ஜே.பி. தரப்பு கூறியது. டெல்லிக்கு வந்து ராஜ்நாத்
சிங்கை விஜயகாந்த் சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. தொகுதிகளின் எண்ணிக்கை,
என்னென்ன தொகுதிகள் என்று ஓரளவு முடிவான பிறகு சந்திப்பதே சரியானது என்று விஜயகாந்த்
சொல்லிவிட்டார். எனவே தொகுதிகளைப் பிரிக்கும் காரியங்கள் மும்முரமாகத் தொடங்கிவிட்டன’
என்று சொல்கிறார்கள் இரண்டு தரப்பையும் அறிந்தவர்கள்!''
''அந்தளவுக்கு
முன்னேறிவிட்டதா பேச்சுவார்த்தை?''
''ஆமாம்!
இதே சந்தேகத்தை முதல் தடவை தன்னைச் சந்திக்க வந்தபோதே தமிழருவி மணியனிடம் விஜயகாந்த்
கேட்டுவிட்டார். 'நாங்கள் கூட்டணிக்குள் வருவதை வைகோ விரும்புகிறாரா?’ என்று கேட்டார்.
'அவரிடமும் சம்மதம் வாங்கிவிட்டுத்தான் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருகிறேன்’ என்று
மணியன் சொன்னார். 'வைகோ என்னை விமர்சித்து இதுவரை பேசியதே இல்லை’ என்று அப்போது சொன்ன
விஜயகாந்த், 'ஆனாலும், அனைவரையும்விட எங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் தேவை’ என்றார்.
'நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பதால், அனைத்துக் கட்சிகளையும்விட ஒரு தொகுதியாவது
உங்களுக்குக் கூடுதலாக வாங்கித் தருவது என்னுடைய பொறுப்பு’ என்று மணியன் சொன்னார்.
அந்த அடிப்படையில் மணியன் ஒரு ஃபார்முலாவை பி.ஜே.பி. தரப்புக்குச் சொன்னார். தே.மு.தி.க-வுக்கு
11 இடங்கள், பி.ஜே.பி. ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா ஒன்பது
இடங்கள் என்று தமிழருவி சொல்லியிருக்கிறார். //
( 8 சதவிகிதம் ஓட்டு வைத்திருக்கும் தே.மு.தி.க.வுக்கு 11 இடமாம்.2 சதவிகித ஓட்டு வைத்திருக்கும் வைகோ கட்சிக்கு 9 இடமாம்.என்ன கொடுமை திருமா இது..? )
( 8 சதவிகிதம் ஓட்டு வைத்திருக்கும் தே.மு.தி.க.வுக்கு 11 இடமாம்.2 சதவிகித ஓட்டு வைத்திருக்கும் வைகோ கட்சிக்கு 9 இடமாம்.என்ன கொடுமை திருமா இது..? )
//தே.மு.தி.க.
விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தயாரித்துவிட்டதாம். மத்திய சென்னை, திருநெல்வேலி,
மதுரை, தேனி, சிவகங்கை, நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், கரூர், திண்டுக்கல், திருப்பூர்,
கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை அவர்கள் குறிவைத்துள்ளார்கள். இந்தப் பட்டியலை
வைத்து பி.ஜே.பி. தலையை உருட்ட ஆரம்பித்துள்ளது. பி.ஜே.பி. தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தியதைத் தொடர்ந்துதான், ஜனவரி 5-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என்று
விஜயகாந்த் அறிவித்தாராம். //
ஜனவரி
5,2014 தேதியிட்ட ஜூவி கழுகாரில்
செட்டப் கருத்துக் கணிப்பு |
//விஜயகாந்த்தை
பி.ஜே.பி. தலைவர்கள் மீண்டும் சந்தித்துள்ளார்களே?''
''கடந்த
முறை நடந்த சந்திப்பு பற்றிச் சொன்னேன் அல்லவா? அப்போது பிரேமலதா மட்டும்தான் இருந்துள்ளார்.
இப்போது, விஜயகாந்த்தை மட்டும் சந்தித்துள்ளனர். அப் போது முரளிதர்ராவ் சென்றிருந்தார்.
இப்போது பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகியோர் சென்றுள்ளார்கள். பி.ஜே.பி.
வட்டாரத்தில் கேட்டால், 'புத்தாண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றோம்’ என்கிறார்கள்!''
ஜெயலலிதாவுக்கும்
கருணாநிதிக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல மாட்டார்களா?''
''சும்மா
பேச்சுக்காக அவர்கள் சொல்வதைச் சொன்னேன்! பி.ஜே.பி. தலைவர்கள் கடந்த 26-ம் தேதிதான்
விஜயகாந்த் தரப்பைச் சந்தித்தார்கள். நான்கு நாட்கள் இடைவெளியில் மறுபடியும் சந்தித்துள்ளதற்கு
ஒருவிதமான பயமும் காரணமாகச் சொல்லப்படுகிறது. 31-ம் தேதி மாலையில் விஜயகாந்த்தை ஜி.கே.வாசன்
சந்தித்தார் அல்லவா? அதுதான் இவர்களது உள்காய்ச்சலுக்குக் காரணம். 'விஜயகாந்த்தை வாசன்
சந்திக்கிறார் என்றால், காங்கிரஸ் கூட்டணிக்கு அவரைக் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பு அதிகம்
இருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்கள். வாசன் சொல்வதை விஜயகாந்த்தால் உடனடியாக தட்ட
முடியாது. எனவே, உடனடியாக விஜயகாந்த்தை சந்தித்தாக வேண்டும்’ என்று பி.ஜே.பி. தலைவர்கள்
முடிவெடுத்துள்ளார்கள். இந்த தகவலை சுதீஷ§க்கு சொல்லியிருக்கிறார்கள். அவர், விஜயகாந்த்திடம்
கேட்டுள்ளார். 'சந்திக்கலாமே’ என்று விஜயகாந்த்தும் ஆர்வம் ஆகி உள்ளார். பி.ஜே.பி.
தலைவர்களைச் சந்திப்பதை விஜயகாந்த் அதிகமாக விரும்பினாராம். அதனால்தான் இவர்கள் நேரம்
கேட்டதுமே வரச் சொல்லிவிட்டார்!''
''என்ன
பேசினார்களாம்?''
''பொன்.ராதாகிருஷ்ணன்,
இல.கணேசன், மோகன்ராஜுலு ஆகிய மூவருக்கும் தே.மு.தி.க. அலுவலகத்தில் வரவேற்பே பலமாக
இருந்துள்ளது. வாசலில் நின்று சுதீஷ் இவர்களை அழைத்துச் சென்றுள்ளார். மேலே விஜயகாந்த்
அறைக்குச் சென்றுள்ளார்கள். இவர்கள் மூவருக்கும் சால்வை அணிவித்து புத்தாண்டு வாழ்த்தைச்
சொல்லியிருக்கிறார். இவர்களும் கையோடு சால்வை எடுத்துச் சென்றுள்ளார்கள். அவர்களும்
விஜயகாந்த்துக்கு சால்வை போட்டுள்ளார்கள். பி.ஜே.பி. வட்டாரம் இதனை 'நிச்சயதார்த்தம்’
என்று மகிழ்ச்சியுடன் சொல்ல ஆரம்பித்துள்ளது. பரஸ்பர வாழ்த்தைப் பரிமாறிக்கொண்ட பிறகு,
'நாடு முழுவதும் பி.ஜே.பி. பலமான தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டோம். வலுவான கூட்டணியை
உருவாக்கி வருகிறோம். இந்தக் கூட்டணியில் தே.மு.தி.க-வும் இடம்பெற வேண்டும் என்பது
எங்களுடைய விருப்பம் மட்டுமல்ல... டெல்லி தலைமையின் ஆசையும் அதுதான்’ என்று பி.ஜே.பி.
தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள்.
அதை சிரித்துக்கொண்டே கேட்ட விஜயகாந்த், 'உடனடியாக நான் எதனையும் அறிவிக்க முடியாது. ஜனவரி 5-ம் தேதி கட்சியின் பொதுக்குழு வைத்துள்ளேன். அதில் அனைவர் கருத்தையும் கேட்கப்போகிறேன். அடுத்து கட்சியின் மாநாடு நடத்தப்போகிறேன். அதன் பிறகுதான் எந்த முடிவையும் அறிவிக்க முடியும்’ என்று சொன்னாராம் விஜயகாந்த்.
'உங்களது நல்ல முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 'தேர்தல் நாள் இன்னும் அறிவிக்கவில்லையே... அதற்குள் என்ன அவசரம்?’ என்று விஜயகாந்த் திருப்பிக் கேட்டுள்ளார். ஜி.கே.வாசன் சந்திப்பு முழுக்க முழுக்க பர்சனல் மேட்டர் என்று விஜயகாந்த் தரப்பில் சொல்லப்பட்டதாம். அதனால் திருப்தி அடைந்த பி.ஜே.பி-யினர் திரும்பிவிட்டார்களாம்!''

''ஜி.கே.வாசன்,
விஜயகாந்த் சந்திப்பு பற்றிச் சொல்லும்!''
மூப்பனார்
மீது அதிகமான அன்பு கொண்டவர் விஜயகாந்த். அதே நட்பை ஜி.கே.வாசன் மீதும் காட்டுவாராம்.
இவரையும் 'ஐயா’ என்றே அழைக்கிறார் என்றால் பாரும்! சண்முக பாண்டியனை வாழ்த்திவிட்டு
அரசியல் பக்கமாகப் பேச்சு திரும்பி உள்ளது. ஜி.கே.வாசனைப் பொறுத்தவரை, 'காங்கிரஸ்,
தே.மு.தி.க. கூட்டணி வந்தால் நல்லது’ என்று நினைக்கிறாராம். 'முன்பு தி.மு.க., காங்கிரஸ்
கூட்டணி இருந்தது. இந்த அணிக்கு விஜயகாந்த்தும் வந்தால் அது பலமான அணியாக அமையும்’
என்று பல மாதங்களுக்கு முன்பு சொல்லி வந்தவர் ஜி.கே.வாசன். 'தி.மு.க-வை காங்கிரஸ் தலைமை
தக்கவைக்க முயற்சிக்கவும் இல்லை. தி.மு.க-வும் அவசரப்பட்டு விலகிவிட்டது’ என்று நினைக்கிறாராம்
வாசன். தன்னுடைய இந்தக் கருத்துக்களை எல்லாம் அவர் விஜயகாந்த்திடம் சொன்னதாகத் தெரிகிறது.
'இனிமேல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படி அமைந்தாலும் அது மரியாதையாக அமையாது. எனவே, தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் நல்லது. ஒத்த கருத்துள்ள இரண்டு கட்சிகளின் கூட்டணியாக இது அமையும். உங்களுக்கு சிறுபான்மையினர் ஆதரவு எப்போதும் உண்டு. அதனையும் இழக்கத் தேவையில்லை’ என்றெல்லாம் வாசன் சொல்லியிருக்கிறார்.
'காங்கிரஸ், தே.மு.தி.க. மட்டும் அமைப்பது வலுவான கூட்டணியாக அமையாது’ என்று விஜயகாந்த் நினைக்கிறாராம். நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசுவதை உணராதவர் அல்ல விஜயகாந்த். நான்கு மாநிலத் தேர்தலுக்கு முன் விஜயகாந்த்துக்கு இருந்த மனநிலை வேறு. அதன் பிறகு இருக்கும் மனநிலை வேறு. நான்கு மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக கேப்டன் டி.வி. நிர்வாகியை அழைத்து, 'காங்கிரஸுக்கு எதிரான செய்திகளைப் போட வேண்டாம்’ என்று சொன்னவர்தான் விஜயகாந்த். ஆனால், அந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வேறு மாதிரி நினைக்கிறாராம். காங்கிரஸுடன் சேரும் மனநிலை அவருக்கு இல்லை என்றே சொல்கிறார்கள். அந்த மனோபாவத்துடன்தான் ஜி.கே.வாசனிடம் பேசினாராம்.''

''காங்கிரஸ்
மேலிடத்தின் அனுமதியுடன்தான் ஜி.கே.வாசன் சந்தித்தாரா?''
''இவரது
சந்திப்புக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வாசன் எடுத்த
தனிப்பட்ட முயற்சி என்கிறார்கள்!''
ஜனவரி
8,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ் கழுகார்
//இப்போது
தே.மு.தி.க-வுக்குத்தான் மவுசு கூடி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. ஆகிய
மூன்று கட்சிகளும் விஜயகாந்த் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பைத்
தனது கட்சி பொதுக்குழுவில் இன்னும் கூட்டினார் விஜயகாந்த்.
அருண்
சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. பேசும்போது, 'என்னுடைய தனிபட்ட விரும்பம் பி.ஜே.பி-யுடன்
கூட்டணி வைப்பது. அந்தக் கட்சிக்கு நல்ல மரியாதை இருக்கிறது. நம்மை அவர்கள் கூட்டணிக்கு
வருமாறு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்று பி.ஜே.பி-யுடன்
கூட்டணி அமைந்தால், நாம் பெருமளவில் வெற்றி பெறுவோம். ஒருவேளை அவர்களுடன் ஒத்துவராத
சூழ்நிலையில் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கலாம். தேர்தலில் வெற்றிதான் முக்கியம்’ என்று சொல்லியிருக்கிறார்.
விழுப்புரம்
எல்.வெங்கடேசன் பேசும்போது, 'அகில இந்திய அளவில் பி.ஜே.பி-க்கு மரியாதை உள்ளது. நாம்
அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் பெரிய வரவேற்பு கிடைக்கும்’ என்று சொல்லியிருக்கிறார்''//
ஜனவரி
12,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்
தி.மு.க.
கூட்டணியில் சேருவாரா... இல்லை, பி.ஜே.பி. அணியில் இணைவாரா?’ என்று விஜயகாந்த்தின்
முடிவுக்காக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு. இப்படிப்பட்ட நிலையில் 'விஜயகாந்த் எந்தக்
கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தோம். 'தனித்துப்
போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. பி.ஜே.பி.
கூட்டணியில் சேர வேண்டும் என 26 சதவிகிதம் பேரும், தி.மு.க. கூட்டணியில்
சேர வேண்டும் என்று 21 சதவிகிதம் பேரும் கருத்து சொல்லியிருந்தனர்.//
ஜனவரி
19,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்
விஜயகாந்த்
எந்தக் கூட்டணியில் இடம்பெற வேண்டும்?’ என்ற கேள்விக்கு நேரடியான சர்வேயில் 'தனித்துப்
போட்டியிட வேண்டும்’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் (33 சதவிகிதம்) கருத்து. ஆனால்,
ஆன்லைன் சர்வேயில் பி.ஜே.பி. கூட்டணி என 57 சதவிகிதம் பேர் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
ஜனவரி
22,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்
அவர்கள்
மனதுக்குள் ஒரு கணக்கைப் போட்டு முடித்துவிட்டார்கள். தே.மு.தி.க-வுக்கு 11 இடங்கள்
தருவது. பி.ஜே.பி. 10 இடங்களில் போட்டியிடுவது. ம.தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும்
தலா 9 இடங்களை ஒதுக்குவது. இதுதான் பி.ஜே.பி-யின் கூட்டணிக் கணக்கு. மொத்தம் உள்ள
39 தொகுதிக்கான பங்கீடு இது. 'அனைத்துக் கட்சிகளையும்விட கூடுதல் தொகுதிகளில் நிற்க
வேண்டும் என்பது விஜயகாந்த் கோரிக்கை. அதைச் செய்துவிட்டார்கள்.//
ஜனவரி
26,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்
//பி.ஜே.பி.
கூட்டணியில் தே.மு.தி.க. சேர்வது பற்றிய பேச்சுவார்த்தை பிரகாசம் அடைந்திருக்கிறது.
'கருணாநிதி - அழகிரி மோதல் நாடகம். இதற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்’ என்று பிரேமலதா
சொல்லியிருப்பது தி.மு.க. கூட்டணியின் கதவை சாத்துவதுபோல அமைந்திருக்கிறது. இதை வைத்துதான்
பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். //
சேலம்,
ஆரணி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளைக் கேட்கிறது
தே.மு.தி.க. இதில் கிருஷ்ணகிரி, சேலம், மயிலாடுதுறை தொகுதிகளில் பி.ஜே.பி. போட்டியிட
விரும்புகிறது. பா.ம.க-வும் தே.மு.தி.க-வும் செல்வாக்கு படைத்த வட மாவட்டங்களில் உள்ள
தொகுதிகளைப் பிரச்னை இல்லாமல் பிரித்துக்கொள்வது பற்றிதான் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை
நடத்தப்படுகிறது.''//
பிப்ரவரி
5,2014 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ்
விஜயகாந்த்
எப்போதுதான் முடிவெடுப்பார்?''
''கடைசிவரைக்கும்
இழுத்து இறுதியில் அறிவிப்பதுதான் விஜயகாந்த்தின் வழக்கம். 8 ஆம் தேதி நடக்கும் மோடியின்
கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை மேடையேற்ற தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் திட்டமிட்டார்கள்.
ஆனால், விஜயகாந்த் பிடிகொடுக்காததால் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேடையேறுவது சந்தேகம்தான்.
மோடி கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக டைட் ஆக இருக்கும். மேடை ஏறுபவர்கள்
பட்டியலை 10 நாட்களுக்கு முன்பே தர வேண்டும் என்று செக்யூரிட்டி ஆட்கள் சொல்லிவிட்டார்கள்.
ஆனால், தமிழக பி.ஜே.பி-யால் அதனைத் தர முடியவில்லை. அதனால் இப்போது நடக்க இருக்கும்
மோடி கூட்டத்தில் விஜயகாந்த், ராமதாஸ் போன்றவர்கள் மேடையேற வாய்ப்பு இல்லை. இது தமிழக
பி.ஜே.பி. தலைவர்களைக் கோபம் கொள்ள வைத்துள்ளது. 'இரண்டு நாட்களுக்குள் கூட்டணிக்கு
வருகிறீர்களா, இல்லையா என்பதைச் சொல்லிவிடுங்கள்’ என்று அவர்கள் விஜயகாந்த்துக்கு சொல்லி
அனுப்பிவிட்டார்கள். விஜயகாந்த் - பிரேமலதா திருமணநாள் வாழ்த்துச் சொன்னது முதல், சுதீஷ்
டெல்லி போனது வரை அனைத்துமே பி.ஜேபி. தலைவர்களுக்கு தெரிந்தே நடந்துள்ளது!''
''அதன்
பிறகும் எதற்காக இழுக்கிறாராம் விஜயகாந்த்?''
''நான்
முன்பே சொல்லியிருந்தேன். '19 சீட் தருபவர்களோடுதான் கூட்டணி’ என்று நிபந்தனை போடுவதாக
நான் சொல்லி 1.1.14 தேதியிட்ட இதழில் நீர் வெளியிட்டு இருந்தீர் அல்லவா? அதில் இருந்து
இன்னும் குறையவில்லையாம் விஜயகாந்த். '19 சீட் கொடுத்தாக வேண்டும்’ என்று சொல்லிவருகிறார்.
பி.ஜே.பி. 11 தொகுதி தரலாம் என்று திட்டமிட்டு இருந்ததாம். கூடுதலாக 1 ராஜ்யசபா சீட்
வேறு மாநிலத்தில் தருகிறோம் என்றார்களாம். ஆனால், 19-ல் இருந்து ஒரு சீட்கூட இதுவரை
குறைக்கவில்லையாம் விஜயகாந்த். 'அவருக்கு 19 கொடுத்தால் ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு
கட்சிகளுக்கும் தொகுதியே ஒதுக்க முடியாது. ஒருவேளை, அவர்கள் வேண்டாம்; தே.மு.தி.க-வும்
பி.ஜே.பி-யும் மட்டும் போதும் என்று விஜயகாந்த் நினைக்கிறாரோ என்னவோ’ என்கிறார்கள்
பி.ஜே.பி-யில்!''
''என்னதான்
முடிவெடுப்பாராம் விஜயகாந்த்?''
''பி.ஜே.பி-யிடம்
முடிந்தவரை பார்ப்பார். இல்லாவிட்டால் தனித்துப் போட்டி என்று போய்விடுவார் என்கிறார்கள்''
என்றபடி எழுந்த கழுகார்.
பிப்ரவரி
12,2014 தேதியிட்ட ஜூவி கழுகார்.
********
(இதிலும் ஒரு சிக்கல் உள்ளது.குமுதம் ரிப்போர்ட்டர் மோடிக்கு மட்டுமல்ல,ஜெயலலிதாவுக்கும் சேர்த்து பி.ஆர்.ஓ.வேலை பார்த்தால்,ஜூனியர் விகடனோ மோடிக்கும் வைகோவுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.)
அன்றாட வரவு செலவு பார்ப்பவன் சாதாரண வியாபாரி.சீனிவாசன் தொழில் அதிபர் அல்லவா..! அதுவும் மூன்று தலைமுறையாய் தொழில் பார்க்கும் நிறுவனம் அல்லவா..? வருங்காலத்தில் கிட்டப் போகும் மிகப்பெரும் ஆதாயத்தை மனதில் இருத்தி தொழில் நடத்துகிறார்.
********
மணியனின் வார்த்தைகளில் சொல்லப்போனால் தரகரின் பணியைச் செய்துள்ளது.மாட்டினை விலை பேசி வாங்க,அதன் உரிமையாளரிடம் சென்று பேசி அவரது மனதைக் கரைப்பது போல ஜூனியர் விகடன் விஜயகாந்தை பா.ஜ.க.கூட்டணிக்கு வரவழைப்பதற்காக சாம,பேத,தான விஷயங்களைத் தனது எழுத்தில் காட்டியது.
இதன் மூலம் விஜயகாந்துக்கு மட்டுமல்ல உதிரியாய் இருந்த பா.ஜ.க.கட்சிக்கும் நல்ல விளம்பரம் தான். இவை அனைத்தையும் காசு வாங்கி விளம்பரமாக மாற்றி வெளியிட்டிருந்தால் விகடன் நிறுவனத்துக்கு கோடிகளைத் தொட்டுக் கிட்டியிருக்கும் விளம்பரக் கட்டணம்.(இதிலும் ஒரு சிக்கல் உள்ளது.குமுதம் ரிப்போர்ட்டர் மோடிக்கு மட்டுமல்ல,ஜெயலலிதாவுக்கும் சேர்த்து பி.ஆர்.ஓ.வேலை பார்த்தால்,ஜூனியர் விகடனோ மோடிக்கும் வைகோவுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.)
அன்றாட வரவு செலவு பார்ப்பவன் சாதாரண வியாபாரி.சீனிவாசன் தொழில் அதிபர் அல்லவா..! அதுவும் மூன்று தலைமுறையாய் தொழில் பார்க்கும் நிறுவனம் அல்லவா..? வருங்காலத்தில் கிட்டப் போகும் மிகப்பெரும் ஆதாயத்தை மனதில் இருத்தி தொழில் நடத்துகிறார்.
ஆனால் அத்தனையையும் விஜயகாந்த் பொய்யாக்கி விட்டார்.நாம் செருப்பால் அடிக்க முடியாததை தன் செய்கையால் நடத்திக் காட்டி விட்டார். விஜயகாந்த் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஆரம்பத்தில் இருந்து ஜூனியர் விகடன் சொல்லி வந்திருக்கிறது .அங்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்று போகிற போக்கில் கூடச் சொல்லவில்லை.முழுக்க முழுக்க வாய்ப்பில்லை என்றே மறுத்து வந்திருக்கிறது.ஆனால் கடந்த ஒருவார காலமாய் நிலைமைகள் முழுவதும் மாறியிருக்கின்றன.
இவர்கள் எழுதியதற்கு மாறாக காங்கிரஸ் கூட்டணியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.இந்த புலனாய்வுப் புலிகள் தங்கள் முகத்தை எங்கு வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தச் செய்திகளை கடந்த திங்கள் 10-02-2014 வெளிவந்த நாளிதழ்களில் இருந்தே அறியலாம்.
இந்தச் செய்திகளை கடந்த திங்கள் 10-02-2014 வெளிவந்த நாளிதழ்களில் இருந்தே அறியலாம்.
அது மட்டுமல்ல திங்கள் இரவு லே அவுட் முடித்து இதழ் முடித்து புதன் வெளிவந்த (12-02-2014) நக்கீரன் வாரமிருமுறை இதழிலும்,திங்கள் காலை லே அவுட் முடித்து செவ்வாய்க்கிழமை (11-02-2014)வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டரிலும் கூட செய்தி வந்திருக்கிறது.
மேலும் இந்தக் கூட்டணிக்காய் அல்லும் பகலும் தரகு வேலை பார்த்த தரகு மணியன் கூட,சீச்சீ இந்தப் பழம் புளிக்காது என்று விஜயகாந்தை தரகர் என்று திட்ட (10-02-2014) ஆரம்பித்து விட்டார்.
12-12-2014 தேதியிட்ட தினமலர் |
பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்த மாநாட்டில் இல.கணேசன் கூட விஜய்காந்தை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்.விஜயகாந்த் இனி இக்கூட்டணியில் வர வாய்ப்பில்லை என்று பா.ஜ.க.வின் பங்காளிகளான ரிப்போர்ட்டர் மற்றும் தினமலருக்கு மட்டுமல்ல,அரசியல் கத்துக்குட்டிகள், நம்ம ஊர் குப்பன் சுப்பன்களுக்கும் தெரிந்திருக்கிறது.
12-12-2014 புதன் கிழமை தேதியிட்ட தினமலர் கார்ட்டூன் |
ஆனால் சனிக்கிழமை வெளிவந்துள்ள (15-02-2014 )ஜூனியர் விகடன் கூச்சநாச்சமில்லாமல் இன்னும் என்ன எழுதுகிறது பாருங்கள்.( இதழ் 13 -02-2014 இரவு வடிவமைப்பு முடிக்கப்பட்டு அச்சுக்குப் போகும்.)
இவர்கள் நாட்டு நடப்பு எதையும் படிக்காமல் கண்ணையும் காதையும் மூடிக் கொண்டு அமர்ந்து கொண்டு மனநோயாளிகள் போல தங்கள் விருப்பம் போல இன்னும் எழுதிக் கொண்டிருப்பது ஏன்.?
//விஜய்காந்த் மன்மோகனைச் சந்திப்பது முதலில் பாரதிய ஜனதா தலைமைக்குத் தான் தெரியுமாம்.அதைச் சொன்ன சதீஷ்,அரசியல் வேறு இது வேறு, இதைப் பார்த்து குழம்ப வேனாம் என்றும் பா.ஜ.க.கூட்டணியில் தான் விஜயகாந்த் இணைவார் என்றும் சொன்னாராம்.இதை கமலாலயத்தில் நம்பினார்களாம்.நம்மையும் நம்பச் சொல்கிறது....
(அதாவது எவனாவது நம்மை மீட்க வர மாட்டானா என்று நடுத்தெருவில் காத்துக்கிடக்கும் நம்மூர் காங்கிரஸ் காரனுக்கு கூட விஜயகாந்த் சந்திப்பது தெரியாதாம்.பிஜேபி காரனுக்குத் தெரியுமாம்.
14 ஆம் தேதி சந்திப்பு குறித்து 8 ஆம் தேதியே கமலாலயத்துக்குத் தெரிந்தால் அது ஏன் துப்புக்கெட்ட ஜூவி புலனாய்வு சிங்கங்களுக்குத் தெரியவில்லை.ஒரு வாரம் கழித்து எழுதுகிறது..
இந்தப்பொழப்புக்கு...)
கொஞ்சமாவது உண்மையை மட்டும் எழுதும் எண்ணம் இருந்தால் ஜூனியர் விகடன் என்ன எழுதியிருக்க வேண்டும்..?
சென்னை வந்த மோடியைச் சந்திக்காமல் டெல்லி சென்று மன்மோகன் சிங்கைச் சந்திக்க விஜயகாந்த் சென்றது ஏன்?
பா.ஜ.க.வுடன் நின்றால் தான் செல்லாக் காசாகி விடும் என்று தெரிந்து விஜயகாந்த் சென்றாரா அல்லது காங்கிரசுடன் சென்றால் இன்னும் அதிக பொற்காசுகள் கிடைக்கும் என்று தெரிந்து சென்றாரா என்று எழுதியிருக்க வேண்டும்.இன்னும் சொல்லப் போனால் இன்றளவும் பாரதிய ஜனதாவை விட மட்டுமல்ல வைகோ கட்சியை விடத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தான் செல்வாக்கான கட்சி.
விஜயகாந்த் மன்மோகன் சந்திப்பு குறித்த செய்தி வெளிவந்த பின் 2 இதழ்கள் ஜூவி (புதன்,சனிக்கிழமை) வெளிவந்துள்ளது.புதன்கிழமை வெளிவந்த இதழில் இச்செய்தியைத் தவிர்த்த ஜூவி,சனிக்கிழமை வெளிவந்த இதழில் இன்னும் பா.ஜ.க.கூட்டணிக்குத் தான் நடிகர் வருவார் என்று வலிந்து எழுதுகிறது.விஜயகாந்த அடித்த ஆப்பில் புலனாய்வுப் புலிகள் இன்னும் தெளியவில்லை போலும்.
இன்னும் விஜயகாந்த் பா.ஜ.க.கூட்டணிக்கு வர இருப்பதாக ஜூவி எழுதுகிறது.இல.கணேசனும்,தரகு மணியனும் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்று சொன்ன பின்னும் இன்னும் ஜூவி மட்டும் கூச்சமில்லாமல் செய்தி வெளியிடுவது ஏன்..?
*
இப்படிப் பாருங்கள்,விஜயகாந்த் டெல்லி சென்று மோடியைச் சந்திக்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம்.ஜூ.வி. எப்படியெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கும்.
எந்த பிளைட்டில் போகிறார்.அவருக்கு எங்கு அறை புக் செய்யப்பட்டிருக்கிறது..? அவர் மச்சினன் எங்கே தங்குகிறார்.காலை உணவு எங்கே.? யார் யாரைச் சந்திக்கிறார்..? எந்தக் கோயிலில் சாமி கும்பிடுகிறார்?விஜயகாந்துடன் யார் யார் செல்கிறார்கள்..? என்றெல்லாம் எழுதி
மோடி மந்திரம் பலித்தது...டெல்லியில் விஜயகாந்த் ..! பரபர ரிப்போர்ட்
என்றெல்லாம் அட்டைப்படக் கட்டுரை வைத்து நம்மை இம்சித்திருக்குமா இல்லையா..?
குறித்த 4 தொகுதிகள் யாருக்கு என்பதில் தான் சிக்கல் இருக்கிறதே தவிர அனைத்துத் தொகுதிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டு விட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்ற வகையறாச் செய்திகளும் இடம் பெற்றிருக்கும்.
அப்படி நடக்காததால் பா.ஜ.க.கூட்டணியில் விஜயகாந்த் இருக்கிறார் என்ற அதீத கற்பிதத்தோடு இன்னும் ஜூவி ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் நமமையும் நம்பச் சொல்லுகிறார். 'கசப்பான' உண்மைகளை ஏற்றுக்கொள்ள மனம் இன்னும் பக்குவப்படவில்லை போலும்,
ஜூ.வி. இப்படி எழுதுவதில், முதலாளியின் தனிப்பட்ட விருப்பத்தை மீறி ஜூ.வி.ஆசிரியரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இருக்கிறது எனவும் அறியலாம்.ஏனென்றால் இதே குழுமத்தில் இருந்து வரும் ஆனந்த விகடனில் வரும் அரசியல் கட்டுரைகள்,வெளிவரும் பேட்டிகள் இந்துத்துவ வெறியுடனும்,யாருக்கும் சொம்பு தூக்கியும் வருவதில்லை என்பதை அறியலாம்.

ஆனந்த விகடனில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள் பாசிச இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் அதுதான் காரணம் என சிலர் நினைக்கலாம்.அவ்வாறு சொல்லப்படுவது ஒரு காரணமாக இருக்கலாமே தவிர அது மட்டுமே முழுக் காரணம் கிடையாது. ஏனென்றால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் அவசியம் ஆசிரியருக்கு கிடையாது. விகடன் ஆசிரியர் நினைத்தால் அவர்களை மீறித் தன்னுடைய விருப்பத்துடன் செயல்பட்டிருக்கலாம்.
இத்தனைக்கும் தன்னை பெரியாரிஸ்டாகவோ, கம்யூனிஸ்டாகவோ என்றும் விகடன் ஆசிரியர் சொல்லிக் கொண்டது இல்லை. சிலரைப் போல் விளம்பரத்திற்காகவும் அப்படிச் சொன்னது இல்லை. தன்னை சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடுபவராகத் தான் வெளிப்படையாக காட்டி வந்திருக்கிறார்.தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து அவருக்கு இருக்கும் புரிதலும் அக்கறையும் கூட மற்றவர்களிடம் இல்லை.

ஆக இந்துத்துவ பிரச்சாரம் ஆனந்த விகடனில் நடைபெறாமல் இருப்பதற்கு ஆசிரியர் முக்கிய காரணம் என்பதால் பாராட்டுக்குரியவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஜூ.வி. சொல்வது போல விஜயகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்கட்டும்,அல்லது பாரதிய ஜனதாக் கூட்டணியில்(!) நிற்கட்டும்.இப்பொழுதைய அரசியல் அகராதியில் எதுவும் நடக்கலாம்.ஆனால் வெறும் அரசியல் கிசுகிசு எழுதும் பத்திரிகை என்பதைத் தாண்டி உள் நோக்கத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புடனும் பா.ஜ.க.வுக்கு நம்முடைய காசில் தரகு வேலை பார்க்கிறார்கள் என்பது புலனாகிறது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.கோயபல்ஸ் உயிருடன் இருந்தால் இவர்களின் செயலைப் பார்த்து,நமக்கு இந்த அளவுக்குத் திறமை கைகூடவில்லையே என்று கூச்சப்பட்டிருப்பான் என்பது உறுதி.
1 comment:
மார்க்சிஸ்ட் ராமமூர்த்யையும் சுதந்திரா கட்சி ராஜாஜியையும் ஒரே கூட்டணியின் கீழ் கொண்டுவந்த அன்னாதுரையைவிட மணியன் பெரிய ப்ரோக்கரா?
Post a Comment