Saturday, 15 February 2014

தமிழக அரசியல்- தாமரை மலரச் செய்வோம்...!




பொதுவாக இதழ்களில் எழுதும் அரசியல் கட்டுரைகள் பெரும்பாலும் ஏதோ ஒரு சார்பு இருக்கும். நடுநிலைமை என்பது யாரிடமும் கிடைக்காது.

நக்கீரனில்  மனுஷ்யபுத்திரன் எழுதுவது திமுக சார்பு நடுநிலை என்றால் தமிழக அரசியலில்  15-02-2014 தேதியிட்ட நடப்பு இதழில் கார்க்கோடன் என்பவர் எழுதியுள்ளது பாரதிய ஜனதா கட்சி சார்பு நடுநிலைமை.

தற்பொழுதைய‌ ஜூவி யை ஒப்பிடும் பொழுது தமிழக அரசியலில் வெளிவந்த கட்டுரை பரவாயில்லை ரகம் தான்.

இந்த மண்ணில் எப்படியாவது தாமரை மலர்ந்து விடாதா என்ற ஏக்கத்துடனும் ஆதங்கத்துடனும் மனதின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி எழுதியுள்ளது தான் இந்த வாரத் தமிழக அரசியல் கட்டுரை.

அதிக பட்சம் 40 ஆயிரம் பேர் திரட்டி வரப்பட்ட வண்டலூர் மோடி பொதுக்கூட்டத்தை லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்று எழுதியதை வைத்தால் இதன் 'நடுநிலைமை' லட்சணம் தெரியும்.



                                                 




இதை கார்க்கோடன் என்ற புனைப்பெயரில் எழுதியவர் வேறு யாருமல்ல.தமிழக அரசியலின் வெளியீட்டாளர் திரிசக்தி சுந்தர்ராமன் தான்.

காலம் காலமாய் திராவிடம் ஆரியம் என்று அரசியல் செய்தவர்களே இப்பொழுதல்ல பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட்டணி வைத்துக் கொண்ட நிலையில், முதலாளியிடம் வாங்கிய சம்பளத்துக்காய் பத்திரிகை ஆசிரியர்களே எஜமானே வியக்கும் வண்ணம் இந்துத்துவ அடியாளாய் செயல்படும் பொழுது ,  முதல் போட்டு பத்திரிகை நடத்தும் கும்பகோணத்து சுந்தர்ராமன்கள் எழுதுவதைக் குறை சொல்ல முடியாதது தான்.

தமிழக அரசியல் தனது முகப்பில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற முத்திரையுடன் வெளிவருகிறது.தாமரையை மலர‌ச் செய்வது தான் புதியதோர் உலகம் போலும்.

ஆனால் அது புதியதோர் உலகு அல்ல.ஏற்கனவே உதித்த இருண்டதொரு உலகு தான்.அதை நம்பிப் பிரயோஜனம் இல்லை.


தொடர்புடைய இணைப்புக்கள்

http://kalakakkural.blogspot.in/2012/02/7.html

http://kalakakkural.blogspot.in/2011/12/blog-post_14.html

http://kalakakkural.blogspot.in/2012/02/blog-post_27.html

No comments: