பீட்டர் மாமா காலை நாளிதழை விரித்த படியே கடையில் அமர்ந்தார்.
சேட்டா ஒரு டீ குடிக்கிற மாதிரி போடு.நீ விலையை ஏத்துறியே தவிர வாயில வைக்க முடியல...இன்னைக்காவது நல்லா போடு என்று சொன்ன பீட்டர் மாமா செய்தித்தாளை விரித்தார்.
இன்னைக்கு நாட்டு நடப்பு பேசுறதுக்கு முன்னாடி பத்திரிகை நடப்பு பேசுவோமா..
என்ன விசயம் சொல்லுங்க...
கச்சேரி சாலை தினகரன் நாளிதழில் இருந்து ஆசிரியர் கதிர்வேல் விலகிட்டாராம்.தினகரனில் ஆசிரியர் ஆர்.எம்.ஆர் பேரு தான் வரும்.ஆனா அதனை பொறுப்பெடுத்து செய்தவர் கதிர்வேல் தான்.
ஏனாம்..கடைசி வரைக்கும் அங்கேயே இருந்து ரிடையர் ஆவாருன்னு சொன்னாங்களே....
அவரால அங்க தொடர்ந்து இருக்க முடியலையாம்.
ஏனாம்..?
ஒன்னுமில்ல....அங்க சீப் ரிப்போர்ட்டரா இருக்குற சுரேஷும் எம்.டி.யா இருக்குற ஆர்.எம்.ஆரும் சேர்ந்து அவருக்கு தொடர்ந்து இம்சையைக் கொடுத்தாங்களாம்.இதுக்கு மேல வேணாம்னு தான் விலகிட்டாராம்.
அப்படியா...என்ன பிரச்சனை...
அங்க எம்.டி.யா இருக்குற ஆர்.எம்.ஆர்.பத்தி சொல்லவே வேண்டியது இல்ல.எடிட்டோரியலில் இருப்பவங்க முதற்கொண்டு அங்க இருப்பவங்க எல்லோரையும் ஒருமையில தான் பேசுவாரு.அவனே,இவனே,அந்தப்பயலே,இந்தப்பயலே அப்படின்னு தான் அழைப்பாரு.
தினகரன் நிர்வாகம் கைமாறின பின்னாடி முதல் தடவை அவர் ஆபிசுக்கு வந்தப்ப,ஆபிசுல ஒருத்தர் தன்னோட ஈமெயிலைப் பார்த்தாரு அப்படிங்குறதுக்காக அவரை எல்லோர் முன்னாடியும் கேவலமா திட்டுனப்ப அவரைப் பத்தி எல்லோரும் புரிஞ்சுக்கிட்டாஙக...இன்னைக்கு வரைக்கும் அவர் தன்னுடைய அடாவடியை மாத்திக்கவே இல்லை.அவர்கிட்ட இருக்குற அடாவடிப் புத்தி போகவே இல்லை.யாரும் எதிர்த்துப் பெசினா அடிக்குறது,நிர்வாகத்துக்கு வேண்டிய சில்லறை வேலைகளைப் பார்க்குறதுன்னு அவர் வேலை எப்பவும் தங்கு தடையில்லாம தொடர்ந்துகிட்டிருக்கு.
கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி பாலியல் புகாருல்ல போலீஸ் ஸ்டேஷன்ல காலையில இருந்து சாயந்திரம் வரைக்கும் உட்கார வச்சாங்க.அப்ப நிறையப்பேரு கையைப் பிடிச்சு காலில் விழுந்து தப்பிச்சிட்டாரு அப்படிங்குறது கொஞ்சப் பேருக்கு மட்டுமே தெரிந்த சங்கதி.ஆனா ஆபிசுல இவர் காட்டுற தெனாவட்டு தாங்க முடியாத அளவுக்கு இருக்குமாம்.
இந்த ஆர்.எம்.ஆர்.தான் சுரேஷ் கூடக் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு ஆசிரியருக்கு டார்ச்சராம்..
சுரேஷ் எப்படி....
இவர் சீப் ரிப்போர்ட்டரா இல்ல சீப்பான ரிப்போர்ட்டரான்னு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நேர்த்தியான ஆளு.
இவர் எந்த நிர்வாகத்தில் இருந்தாலும் அந்த நிர்வாகத்துக்கு ஆதரவான செயல்பாட்டில் கை தேர்ந்தவரு...
இந்த ரெண்டு பேர் கூட்டணி வச்சு டார்ச்சர் கொடுத்தாஙக்ளாம்.
எப்படி..?
நிருபர்,போட்டோ கிராபர் வேலைக்கு ஆள் எடுத்தாலும் சரி,நியூஸ் எடிட்டர் வேலைக்கு ஆள் எடுத்தாலும் சரி...ஆசிரியர் பொறுப்பு வகிக்கிற கதிர்வேல் கிட்ட ஒரு வார்த்தையும் சொல்றதுல்லயாம்.ஆசிரியருக்கு உண்டான மதிப்பையோ,அங்கீகாரத்தையோ கொடுக்கலியாம்.
இது ஒரு சாம்பிள் தான்.சொல்ல பக்கம் போதாது.விரைவில் விரிவாச் சொல்றேன்.
ஆகையால் ஆசிரியர் பதவி வேணாமுன்னு போன வாரக் கடைசியில இருந்து விலகிட்டாராம்.
இனி அடுத்த ஆசிரியர் யாருன்னு கொஞ்ச நாளில் தெரியும்.
No comments:
Post a Comment