Thursday, 5 April 2012

கலாநிதியின் சாக்ஸுக்குள் குமுதம்? குடியேறப் பார்க்கும் குள்ளநரி..!



                                  ஹன்ஸ் ராஜ் சக்சேனா

மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி.குமுதம் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேறிய நேரம். அப்பொழுது ஜீன்ஸ், கட்டம் போட்ட சட்டையில் ஒரு வெள்ளை உருவம் உள்ளே நுழைந்தது. தமிழக மக்கள் அனைவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு வரை நன்கு பரிச்சயமான உருவம் அது.

. ‘ ஐயோ என்னை ஜெயில்ல கொல்ல பாக்குறாங்க’ என்று தொலைக்காட்சிகளில் கதறிய உருவம். இப்பொழுது நினைவுக்கு வருகிறதா?

அவர் தான் ஹன்ஸ் ராஜ் சக்சேனா.



கலாநிதி மாறனின் வலது, இடது கரம். சன் பிக்சர்ஸின் தலைமை அதிகாரி. ஐந்து வருடங்கள் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தவர். அ.தி.மு.க. அரசால கைது செய்யப்பட்டு சிறையில் சில காலம் களி தின்றவர். வெளியில் வந்ததும் யார் கண்ணிலும் படாமல் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவருக்கும் ஆட்டையப் போட்ட வரதராஜனுக்கும் தான் ஆகாதே..!, குமுதம் ரிப்போர்ட்டரில் சக்சேனாவை கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டார்களே. ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடரில் சக்சேனாவின் அந்தரங்க லீலைகளையெல்லாம் சொல்லி நாறடித்தார்களே, அவர் எப்படி குமுதம் அலுவலகத்தில் என்று அதிசயிக்காதீர்கள். இது அதிசயம் ஆனால் உண்மை.

இவரை அழைத்து வந்தவர் யார் தெரியுமா?

இந்த சக்சேனாவைப் பற்றி சொல்வதெல்லாம் உண்மை தொடரில் அசிங்கமாய் எழுதிய ‘ கட்ட பஞ்சாயத்து’ செய்தி ஆசிரியர் ஜான் வில்கின்ஸன்.

இரவு ஏழு மணிக்கு உள்ளே வந்த சக்சேனா வெளியே போகும்போது மணி ஒன்பது. வரதராஜன் அறையில் இரண்டு மணி நேரம் இருவரும் ’சதி” ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

ந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்பு நடந்த இன்னொரு சம்பவத்தைப் பார்த்துவிடுவோம்.  

குமுதம் குழுமம் போதை, வாந்தி டூர் கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன் ஜான் வில்கின்சன் சார் ஒரு அதிரடி செய்தி கொண்டு வந்தார். 

அது சக்சேனா பேட்டி. அந்தப் பேட்டியில் சன் டி.வியையும் கலாநிதிமாறனையும் படு கேவலமாகத் திட்டியிருந்தார்

பரபரப்பான பேட்டி என்ற உற்சாகத்தில் வந்த ஜான் சாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பேட்டியை கோசல் ச்சார் நிறுத்த்தி விட்டார். ஆ.போ.வரதராஜனுக்கு தெரிந்துதான் பேட்டியெடுத்தேன் என்று மற்றவர்களிடம் புலம்பி பார்த்தார் ஜான் சார்.( செய்தி ஆசிரியர் ஜான் சாரும் குருமா ஆசிரியர் கோசல் ச்சாரும் நேரடியாக பேசிக் கொள்ளமாட்டார்கள். அத்தனை நட்பு). 

கோசல் ச்ச்ர்ர் ஓரே வரியில் சொல்லிவிட்டார். ‘எம்டி சொல்லித்தான் நிறுத்துறேன்’ என்று. 

இவர்கள் சண்டை இப்படியிருக்க வரதாபாயின் திட்டமோ வேறு மாதிரி இருந்தது. அதனால் சாக்சை அலுவலகத்துக்கு அழைத்து வரச் சொல்லி இரண்டு மணி நேர மந்திராலோசனை நடத்தியிருக்கிறார்.

                                         

                                           ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் சக்சேனா


அந்த மீட்டிங்கில் என்ன பேசினார்கள்? விஷயமறிந்தவர்கள் சொல்லும் தகவ்ல் இதுதான்.

இனியும் அதிக நாள் தனது ஆக்கிரமிப்பு நீடிக்க முடியாது எனவும் அதனால் குமுதத்தில் தற்போதுள்ள குழப்பமான சூழலில் கிட்டியது வரைக்கும் போதும் என்றும் நினைக்கிறார் வரதாபாய்.அது முடியாத பட்சத்தில் அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்.அதற்கு உரிய ஆலோசனைகளையும் மீள்வதற்கான வழிகளையும் புதிய “நண்பர்” கம் ஆலோசகர் சக்சேனாவுடன் பேசியிருக்கிறார்.

வேறு வழி தட்டுப்படவில்லையென்றால் குமுதத்தில் தனக்கிருக்கும் பங்குகளையும் அவர் விற்க முயற்சித்துள்ளதாகத் தெரிகிறது. (இவர் இப்படிச் செய்வாரா என்று நீங்கள் யோசிக்க வேண்டாம்.ஏற்கனவே ஒரு கட்டத்தில் கனிமொழிக்கு விற்க முயற்சித்தவர் தான் இவர்.)
அதற்குத்தான் சக்சேனாவுடன் வரதாபாயின் சந்திப்பு. சக்சேனாவோ அவரது ”நண்பர்களோ” குமுதம் பங்குகளை வாங்குவதாகத் திட்டமும் இருக்கிறது..

இந்த சக்சேனா பற்றி ஒரு பழைய சம்பவம்.



ல வருடங்களுக்கு முன்பு. சன் டிவி வளர்ந்து கொண்டிருந்த சமயம். வடக்கின் பிரம்மாண்ட சேனலான ஜீ தமிழில் கால் ஊன்ற விரும்பியது. அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை செய்யத் துவங்கியது. இது தெரிந்ததும் கலாநிதிமாறனுக்கு கலக்கம். அந்த சேனலுடன் போட்டி போடும் அளவுக்கு பண பலமோ தொழில் நுட்ப பலமோ அப்போது சன் டிவியியிடம் கிடையாது.

அப்போதும் கலாநிதி மாறனின் மிக நெருங்கிய நண்பனாய் சக்சேனா இருந்தார். இருவரும் கல்லூரி காலத்திலிருந்தே நண்பர்கள். ஜீ டிவி தமிழ்நாட்டில் நுழைய முடிவு செய்த அந்த சமயத்தில் ஒரு நாள் இருவரும் சன் டிவி வளாகத்தில் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்கள். இனிமேல் சன் டிவிக்குள்ளேயே நுழையாதே என்று கலாநிதி கத்தி சக்சேனாவை வெளியில் துரத்தியது கூட நடந்தது.

மனமுடைந்து போன சக்சேனாவை ஜீ இழுத்துக் கொண்டது. அவரது சன் டிவி அனுபவங்களை(கில்லாடித்தனமான..) உபயோகித்துக் கொள்ள பெரும் சம்பளம் கொடுத்து அவரைத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தது.

சன் டிவியை வீழ்த்திக் காட்டுகிறேன்’ என்ற சவடாலுடன் பணியில் சேர்ந்தார் சக்சேனா. பாவம் சோத்துச் சட்டிக்குள் பெருச்சாளியை வைத்து விட்டோம் என்பது அப்பொழுது ஜீ.டிவிக்குத் தெரியாது.அது தெரியும் பொழுது எல்லாம் கை மீறிப்போயிருந்தது.

கடைசியில் ஜீ டிவி பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு கையைச் சுட்டுக் கொண்டது. அதன் பிறகு ஜீ டிவி பல வருடங்கள் தமிழகத்துக்குள்ளேயே வர இயலாதபடி எல்லாவற்றையும் கன கச்சிதமாகச் செய்து விட்டு சன் டிவி ஜோதியில் மீண்டும் ஐக்கியமாகிக் கொண்டார் சக்சேனா.

கலாநிதியும் அவரும் ஜோடியாக போஸ் தந்து ஜீ டிவி நிர்வாகத்தை வெறுப்பேற்றினார்கள்.

ஆமை புகுந்த வீடும் சக்சேனா புகுந்த ஜீடிவியும் உருப்படலை என்று அப்பொழுதே ஊடக வட்டாரத்தில் கிசுகிசுத்தார்கள்.

இப்போதும் அதே நாடகம் மீண்டும் அரங்கேறுகிறது. கலாநிதிக்கு எதிராக சக்சேனாவைப் பேட்டி கொடுக்க வைத்து குமுதம் வளாகத்துக்குள் சக்சேனா என்னும் குள்ள நரியின் மூலம் உள்ளே நுழையத் திட்டமிடுகிறார்கள்.

இது வரதாபாய்க்குத் தெரியுமா தெரியாதா? என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் ஜாமீனில் இருக்கும் தன்னுடைய நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகும் சூழலை மட்டும் அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.அதனால் குமுதத்தில் உள்ள தனது பிடியை முடிந்தமட்டிலும் காப்பாற்றுவது அல்லது யார் தலையிலாவது நல்லவிலைக்கு கட்டிவிட்டு கிட்டியது வரைக்கும் போதும் என்று கழன்று கொள்வதுதான் வரதாபாயின் தற்போதைய முடிவு. ( நம்பிக் கூட இருப்பவர்கள்,அவருக்கு ஜால்ரா தட்டுபவர்கள் தான் பாவம்) அதற்கு அவருக்கு உதவ இப்பொழுது ”புதிய ஆலோசகர் மற்றும் நண்பர்” சக்சேனா உள்ளே நுழைந்திருக்கிறார்.

இனி இந்த விஷயத்தில் நடப்பது அவ்வளவு நன்றாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

ன்னும் சில வாரங்களில் பல பகீர் உண்மைகள் வெளிவரப் போகிறது.  அதுவரை இந்த நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

அதுவரை அந்தப்பழமொழியை ஆராய்ந்து கொண்டிருங்கள்...

ஆமை புகுந்த வீடும்.....




3 comments:

Anonymous said...

கலாநிதி பற்றிய பேட்டியை ச்சல்ராம்சார் வெறுங்குடத்திடம் போட்டுக் கொடுத்திருப்பார்.. வெறுங்குடத்தின் அட்வைஸ் பேரில் ச்சல்ராம் சார் நிறுத்தியிருப்பார்... கலாநிதி மாறன், தயாநிதி மாறன், சன்.டிவி பற்றிய பல தகவல்களை ச்சல்ராம் சாருக்கு காட்டிக்கொடுப்பதே வெறுங்குடம்தான்.. கலாநிதிகிட்ட என்னக்கி மாட்டுதோ

'பசி'பரமசிவம் said...

ஆ.போ வ. ஜாமீனில் இருந்து கொண்டா இந்த ஆட்டம் போடுகிறார்!!!
சீக்கிரம் நல்ல தகவல்கள் சொல்வீங்கன்னு ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
மிக மிக மிக மிக்க நன்றி.

ஞானமுத்து said...

நல்ல ஸ்டோரி